Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 9 | SudhaRaviNovels

அத்தியாயம் - 9

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
144
81
28
அத்தியாயம் – 9

அன்றைய தினத்திற்கு பிறகு அவன் தனது பார்வையை அவளிடம் காட்டவில்லை என்றாலும் அவ்வப்போது பார்ப்பான். நாட்கள் நகர்ந்தது. அவனது காயங்கள் ஆறி கிளம்பும் நாளும் வந்தது.

மறுநாள் காலை டிஸ்சார்ஜ் ஆகலாம் என்று டாக்டர் சொல்லிவிட்டு செல்ல, செண்பகம் மிகுந்த உற்சாகத்தோடு இருந்தார். அஜய்யும் தேனுவும் வந்திருக்க மறுநாள் செல்வதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

ரம்யா அப்போது உள்ளே நுழைந்து அவனது மருத்துவ குறிப்பை ஆராய்ந்தது என்னென்ன தேவை என்பதை எழுதிக் கொண்டிருந்தாள். அவள் இருப்பதை மறந்தது போல செண்பகம் பேச ஆரம்பித்தார்.

“நான் கும்பிட்ட அங்காள பரமேஸ்வரி என்னை காப்பாத்திடுச்சு தேனு. இந்தப் பயல் வாலை சுருட்டிகிட்டு இருந்துட்டான்” என்றார்.

குறிப்பெடுத்துக் கொண்டிருந்தவள் ‘இதென்ன இவங்க இப்படி பேசுறாங்க ‘ என்று எண்ணிக் கொண்டே எழுதிக் கொண்டிருந்தாள்.

விக்ரமும், அஜய்யும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு “மா! இப்போ என்ன?” என்றான் அழுத்தமாக.

அவரோ ரம்யா இருப்பதையே மறந்து போனவராக “என்னடா என்ன? விட்டா படுத்துகிட்டே டுயட் பாடி கல்யாணத்தை இங்கேயே முடிச்சு கூட்டிட்டு வந்திருப்ப. ஏதோ என் நல்ல நேரம்” என்று மேலும் பேசவும் இடையிட்ட அஜய் “ஆண்ட்டி!” என்று அழைத்து அவரை நிறுத்தினான்.

பேச்சு போகும் பாதையை கவனித்த ரம்யா தான் அங்கிருக்க வேண்டாம் என்று எண்ணி மெல்ல அறை கதவை நோக்கி செல்ல ஆரம்பித்தாள்.

அப்போது தான் ரம்யா அங்கிருந்ததை கவனித்தவர் “ஒ...இந்த பொண்ணு இருக்கிறதை மறந்தே போயிட்டேன். நான் பாட்டுக்கு பேசிட்டேனே” என்று சத்தமாக கூறி மகனை பார்த்தார்.

விக்ரம் கண்களை அழுந்த மூடிக் கொண்டவன் “இந்த அம்மா அடங்க மாட்டாங்க போல இருக்குடா. இதுக்கு ஒரு முடிவு கண்டாகணும் போல இருக்கு” என்றான்.

“விடுடா! அந்த பொண்ணு வெளியே போகுது. நல்லவேளை இதுக்கு மேல எதுவும் பேசி வைக்கல” என்றான் நிம்மதி பெருமூச்சுடன்.

அவன் சொன்ன வார்த்தைகளை கேட்டு பட்டென்று கண்களை திறந்தவனின் பார்வையில் அவள் கதவை திறந்து கொண்டு வெளியேற செல்வதை பார்த்து “ரம்யா! நில்லுங்க!” என்று விட்டான்.

அவன் அப்படி அழைத்ததுமே அங்கிருந்த மூவருக்கும் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. ரம்யாவிற்கோ அவன் தன்னை பேர் சொல்லி அழைத்தது அதிர்ச்சியை கொடுத்தது.

தன்னை சுதாரித்துக் கொண்டவள் “என்ன வேணும் மிஸ்டர் விக்ரம்? கணேசனை வர சொல்லனுமா?”

“இல்ல ரம்யா...” என்றதுமே “சிஸ்டர் சொல்லுங்க. பெயரை சொல்லாதீங்க” என்றாள் கோபத்தோடு.

நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மூவருக்கும் இதயம் வாய் வழியே வந்து விடும் போல இருந்தது.

அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே உங்களை என்னால “சிஸ்டர்னு கூப்பிட முடியாது. பெயரை சொல்லித்தான் கூப்பிடுவேன்”.

கடுமையான முகபாவத்தோடு “என்ன வேணும்? எதுக்காக என்னை கூப்பிட்டீங்க?” என்றாள்.

அங்கிருந்த அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு “நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆக போறேன். அதுக்கு முன்னே உங்க கிட்ட இதை பேசிவிட வேண்டும் என்று தான் நிறுத்தினேன். எனக்கு உங்களை பிடிச்சிருக்கு. உங்களை கல்யாண செய்துக்க ஆசைப்படுறேன்” என்று படாரென்று சொல்லி விட்டான்.

செண்பகத்தின் நெஞ்சு தடகள போட்டியாளரின் நெஞ்சு போன்று படபடவென்று அடித்துக் கொண்டது. ‘அடப்பாவி’ சொல்லிட்டானே. இந்த பொண்ணு என்ன பண்ணுமோ தெரியலையே என்று உள்ளுக்குள் புலம்பியபடி பயந்த விழிகளுடன் அவளை பார்த்திருந்தார்.

அஜயோ ‘டேய்! டிஸ்சார்ஜ் ஆக போறேன்னு நம்பித்தானே வந்தேன். இப்படி சாய்ச்சுபுட்டியே-டா. இங்கேயே கட்டி வச்சு உதைக்க போறானுங்க. இது தேவையாடி? நாளைக்கு வரேன்னு சொன்னவனை இன்னைக்கு இழுத்திட்டு வந்து சந்தில விட்டுட்டியே’ என்று தேனுவை முறைத்தான்.

ரம்யாவோ முற்றிலுமாக இதை எதிர்பார்க்கவில்லை. உச்சபட்ச அதிர்ச்சியில் தான் இருந்தாள். அவன் இப்படி கேட்டது அதிர்வை கொடுத்தாலும் , அதை தாண்டி கோபம் எழுந்தது. கண்களை இறுக மூடி கோபத்தை அடக்கிக் கொண்டவள் மூச்சை நன்கு இழுத்து விட்டு கண்களை திறந்து “நீங்க ஒன்னும் விடலை பையன் இல்ல மிஸ்டர். பார்த்ததும் காதலிக்க. ஒரு மெச்சூர்ட் ஆளாக யோசிங்க. அதோட நான் இங்கே உங்களுக்கு உதவி செய்யும் நர்ஸ். நீங்க பேஷன்ட். அதை தாண்டி இது போல உளறல் எல்லாம் சகிக்கல. சோ இங்கிருந்து போகும் போது என்னை மறந்திட்டு உங்க வாழ்க்கையை பாருங்க” என்று சொல்லிவிட்டு வெளியேற போனாள்.

அவள் பேசியதில் அவன் இதழில் மெல்லிய புன்னகை மலர்ந்திருக்க “ஒரு நிமிஷம்! மெச்சூர்ட்டாக யோசித்ததினால் தான் கல்யாணம் செய்துக்க கேட்டேன் மிஸ். ரம்யா” என்றான் அழுத்தமாக.
 
SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
144
81
28
அவனது மிஸ் என்கிற வார்த்தை அவள் உடலில் ஒரு நடுக்கத்தை கொடுக்க, கண்கள் கலங்கிப் போக, முகமோ சிவந்து போனது. கதவின் பிடியை பிடித்திருந்தவளின் கரங்கள் நடுங்கிக் கொண்டிருக்க தன்னை நிதானித்துக் கொண்டவள் மெல்ல திரும்பி அவனை நேராக பார்த்து “நான் மிஸ்ஸஸ் ரத்தன் ஷர்மா! இன்னொருவர் மனைவி” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினாள்.

அவளின் வார்த்தையை கேட்ட செண்பகமோ “ஆத்தாடி! இன்னொருத்தன் பொண்டாட்டி கிட்டேயா லவ் சொல்லி இருக்கான். ஏண்டா இத்தனை நாள் இதுக்கு தான் கல்யாணம் பண்ணிக்காம இருந்தியா?” என்றார் அழு குரலில்.

அங்கிருந்த அனைவருக்குமே அவள் சொல்லி சென்ற செய்தியில் பெரிய அதிர்ச்சி தெரிந்தது. விக்ரம் இதை எதிர்பார்க்கவே இல்லை. நிச்சயமாக தன்னுடைய காதலை எதிர்ப்பாள். தான் ஒரு அனாதை என்று ஏதேனும் காரணம் சொல்லுவாள் என்று தான் நினைத்தான். ஆனால் அவள் திருமணமானவள் என்கிற செய்தி எதிர்பாராதது.

அஜயோ திருட்டு முழியுடன் நண்பனை பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்னடா இப்படி ஆகி போச்சு? அந்த பொண்ணு கல்யாணம் ஆன பொண்ணுன்னு நினைக்கவே இல்லடா” என்றான் மெல்லிய குரலில்.

ஏமாற்றத்தை விழுங்கிக் கொள்ள கண் மூடி சாய்ந்து கொண்டவன் மனது நிச்சயமாக வேறு ஏதோ ஒன்று இருக்கிறது என்று சொன்னது.

அதுவரை நடந்தவற்றை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தேனு “அந்த பொண்ணு கழுத்துல தாலியோ, கையில் மோதிரமோ எதுவுமே இல்ல. ஒரு கல்யாணம் ஆன பெண்ணிற்கான எந்த அடையாளமும் இல்லை. அதனால உங்க மேல எந்த தப்பும் இல்லேண்ணா. பரவாயில்ல விடுங்க” என்று அவனை தேற்றினாள்.

மெல்ல விழிகளை திறந்தவன் “இல்லம்மா! அவளுக்கு பின்னாடி நிச்சயமா பெரிய கதை இருக்கு. என்னவோ என் மனசு அடிச்சு சொல்லுது அவ தான் உனக்குன்னு” என்று சொன்னதும் நாற்காலியை விட்டு வேகமாக எழுந்து கொண்ட அஜய் “டேய்! ரொம்ப தப்புடா. அந்த பொண்ணு தெளிவா சொல்லிடுச்சு. நான் அடுத்தவன் பொண்டாட்டின்னு. அதுக்கு பின்னாடி, முன்னாடி என்ன கதை வேணா இருக்கட்டும். இதோட விட்டுடு” என்றான் கோபமாக.

செண்பகமும் மகன் அருகே சென்று கரங்களை பிடித்துக் கொண்டவர் “வேணாம் ராசா! இது தப்பு. அஜய் சொன்ன மாதிரி விட்டுடு. நாங்களே உனக்கு வேற பெண்ணை தேடி கட்டி வைக்கிறோம். இன்னொருத்தன் பொண்டாட்டியை லவ் பண்றேன்னு சொல்றது தப்புப்பா” என்றார் கெஞ்சலாக.

விழிகளை திறந்து அன்னையை பார்த்தவன் “உங்க பையன் என்னைக்கும் தப்பு பண்ண மாட்டேன்-மா. இப்போ இந்த பிரச்னையை விடுங்க. நான் பார்த்துக்கிறேன்” என்றான்.

“டேய்! சொல்றதை கேளுடா. நீ வேற எந்த பெண்ணை காட்டி சம்மதம் கேட்டாலும் நான் ஒத்துக்கிறேன். இது வேண்டாம்-டா” என்றார்.

தேனுவும் “விக்ரம்! அம்மா சொல்றதை புரிஞ்சுகோங்க. இதை விட்டுடுங்க” என்றாள்.

மெல்ல கட்டிலில் எழுந்து அமர்ந்து கொண்டவன் “எல்லோருக்கும் சொல்றேன். இதை மறந்திட்டு மற்ற வேலையை பாருங்க. எனக்கு எது சரி தவறுன்னு நல்லா தெரியும். நான் பார்த்துக்கிறேன்” என்றான்.

அவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, இதற்கு மேல் அவனிடம் பேச முடியாது என்று தெரியும். மூவரின் மனதிலும் நிச்சயமாக இத்தோடு இந்த விஷயத்தை விட மாட்டான் என்று தெரிந்து போனது. உள்ளுக்குள் பய்ம் எழ, என்னென்ன பிரச்சனைகள் வர போகிறதோ என்கிற பயத்தோடு அமர்ந்து கொண்டனர்.

அறை முழுவதும் பேரமைதி சூழ்ந்து கொண்டது. அவரவர் சிந்தனையில் உழல ஆரம்பித்திருந்தனர். ரம்யாவும் வாஷ் ரூமிற்குள் நுழைந்து கொண்டு கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். அவள் இதை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. அவளது மனம் ரத்தனை நோக்கி ஓடியது.

‘இன்னும் எத்தனை துன்பங்கள் என்னை நோக்கி வரப் போகிறது? இப்படி ஒருவன் தன்னிடம் காதல் சொல்வான் என்று எதிர்பார்க்கவே இல்லை. ஏன்? எதற்க்காக இந்த சோதனை? சோதனைகளை கண்டு ஓடிக் கொண்டே இருக்கின்றேன். எதுவரை நான் ஓடுவது? ஒவ்வொரு நாளும் ஓடி ஓடி களைத்து போய் விட்டேன். இன்னும் எத்தனை தூரம் ஓட வேண்டும்? வாழ்க்கை இன்னும் எனக்கு எத்தனை சோதனைகளை வைத்திருக்கிறது? கண்ணீர் கன்னங்களை தொட சற்று நேரம் அப்படியே அழுது கரைந்தவள் சமாளித்துக் கொண்டு கண்களை துடைத்து விட்டு வெளியேறினாள்.

மற்ற நோயாளிகளை பார்த்துவிட்டு மீண்டும் தன் அறைக்கு வந்தவளின் பார்வை அறை வாயிலில் நின்றவர்களை பார்த்ததும் முகம் இறுகி போனது.

அவள் அறைக்குள் நுழைந்ததும் தேனுவும், செண்பகமும் அவளின் பின்னே நுழைந்தனர்.

கைகளை பிசைந்தபடி “என் பையனை மன்னிச்சிடும்மா” என்றார் செண்பகம்.

அவளது அழுத விழிகளை பார்த்தபடி நின்ற தேனுவும் “சாரிங்க! விக்ரமிர்காக நானும் சாரி கேட்கிறேன்” என்றாள்.

இரு கைகளையும் அழுந்த கட்டிக் கொண்டு இருவரையும் அழுத்தமாக பார்த்தவள் “நான் எதுவும் நினைக்கல. ஆனால் அவர் மீண்டும் என் கிட்ட இதை பற்றி பேசாம பார்த்துக்கோங்க” என்றாள்.

“இல்லம்மா. அதெல்லாம் பண்ண மாட்டான். நாளைக்கு நாங்க கிளம்பிடுவோமே. மனசில எதுவும் வச்சுக்காம மன்னிச்சிடும்மா”.

அவரை நிமிர்ந்து பார்த்தவள் “மன்னிப்பு என்பது பெரிய வார்த்தைம்மா. விட்டுடுங்க. அவருக்கு நல்ல பெண்ணா பார்த்து கல்யாணம் செய்து வைங்க எல்லாம் சரியாகிடும்”.
 
Need a gift idea? How about a tea mug?
Buy it!