Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் 8: | SudhaRaviNovels

அத்தியாயம் 8:

kohila

Moderator
Staff member
Mar 26, 2018
114
32
63
'எவ்வளவு அழகாக காதலை சொல்லி விட்டான். நான் எப்படி சொல்ல போகிறேன். அதுவும்.... இது நடக்குமா?' என்ற எண்ணத்தில் அவளுக்கு தூக்கமே வரவில்லை. குழப்பம் ஒருபுறம் இருந்தாலும், அவனே மனம் திறந்து விட்டபோது, நிச்சயமாக இணைவோம் என்ற நம்பிக்கையும் வந்தது.

மறுநாள் காலையில் எழுந்தவள், முதலில் தேடியது தன் அம்மாவைதான். கிச்சனில் வேலை செய்துக் கொண்டிருந்த வைதேகியை பின்னாலிருந்து கட்டிக் கொண்டவள்,

"சாரி மை டியர்" என்றாள். அவர் எதுவும் பேசாமல் உணவு தயாரிப்பதிலேயே மும்முரமாக இருக்க,

"பேச மாட்டியா?" என்று அவர் முதுகில் சாய்ந்து கொண்டாள். அவர் அமைதியாகவே இருக்கவும்,

"நீயும் என் வயசை தாண்டிதானே வந்திருக்க. உனக்கும் அப்பாவை பார்த்த போது இப்படி தானே இருந்திருக்கும்" என்றதும் ஹர்ஷிதாவை திரும்பி பார்த்து புன்னகைத்தவர்,

"நீயும் அந்த பையனை லவ் பண்றியா?" என்றார்.

"அப்படி தான் நினைக்கிறேன். ரொம்ப டிஸ்டர்ப் பண்றாரே" என்று அவள் தலைகுனிந்து கொண்டு சொல்லவும்,

"என் பொண்ணுக்கு வெட்கபட தெரியும்கிற விஷயமே எனக்கு இப்போதானே தெரியுது" என்றதும், மேலும் வெட்கப்பட்டு, அவர் தோளிலேயே புதைந்துக் கொண்டு,

"என் மம்மி குட்டிக்கு கோபம் போயிச்சா?" என்றாள்.

"கோபம்ன்னு சொல்ல முடியாது. நான் சொல்ற பையனை கண்ணை மூடிக்கிட்டு கல்யாணம் பண்ணியிருந்தால் எனக்கு கொஞ்சம் பெருமையா இருந்திருக்கும். அதோட நம்ம பொண்ணு நம்ம மேல் வைத்த பாசத்தில் தான் ஒத்துக்கிட்டாங்கிற ஒரு சந்தோஷம் வருமே" என்று நிறுத்தியவர், "ஓகே அதை விடு. என் மருமகனை எப்போ கண்ணுல காட்ட போற?" என்றதும்,

"அம்மா! தேங்க்ஸ்ம்மா! தேங்க்ஸ்!" என்று துள்ளிக் குதித்து, அவர் கன்னத்தில் ஒரு முத்தத்தை வைத்தவள்,

"இதோ!! நேர்லயே போறேன். சனிக்கிழமை லஞ்ச் க்கு வர சொல்றேன். ஒரு ஹாஃப் டே லீவு கொடுங்க கரஸ் மேடம்" என்றாள் பணிவுடன்.

"என்னது ஹாஃப் டே லீவா? அதுவும் லவ் பண்றதுக்கு என்கிட்டேயே கேட்கிற? வீக்-என்ட் பார்த்துக்கலாம். ஒழுங்கா ஸ்கூலுக்கு கிளம்பு"

"அம்மா! அம்மா! ப்ளீஸ் அம்மா. நான் என்ன பதில் சொல்வேனோன்னு நைட் ஃபுல்லா தூங்கியிருக்க மாட்டார். பாவம்ம்மா"

"இருந்தாலும் ஹாஃப் டே அதிகம் ஹர்ஷி"

"உன் மருமகன் ஒண்ணும் வெட்டி ஆபீசர் இல்ல. கொம்பு முளைத்த பெரிய ஆபீசர். ஓவர் டைம் பார்த்து அஜெஸ்ட் பண்ணிக்கிறேன் ம்மா" என்று தாயின் பதிலுக்காக காத்திராமல் கிளம்பினாள்.
 

kohila

Moderator
Staff member
Mar 26, 2018
114
32
63
வழக்கம் போல் அரசு அலுவலகம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. விவசாய சங்கங்கள் ஒரு புறமும், கல்லூரி மாணவர்கள் ஒரு புறமும் என்று மாவட்ட ஆட்சியரைப் பார்க்க வந்திருக்க, அங்கே இருந்த காவலாளிகள் தள்ளுமுள்ளுவில் இருக்கும் போது தான் ஹர்ஷிதாவும் தன் காரை ஓரிடத்தில் நிறுத்தினாள்.

இவர்களை எல்லாம் மீறி உள்ளே செல்ல முடியும் என்று ஹர்ஷிதாவுக்கு தோன்றவில்லை. திரும்பி போய் விடலாமா? என்றெண்ணிய போதுதான், கையில் சில ஃபைல்களுடன் தென்பட்டார் முருகவேல்.

"என்னம்மா இவ்ளோ தூரம் வந்திருக்க?" என்றார். இவள் பதில் சொல்ல வாயெடுக்கும் முன்னே,

"ஓஹ் இன்னும் ஸ்கூல் பிரச்சனை தானா?" என்றுக் கேட்கவும், இவரை வைத்து உள்ளே சென்று விடலாமா என்று இவள் அமைதியாக இருக்க, அவரும் அவள் அமைதியை தவறாக புரிந்துக் கொண்டு, அவளை தன்னுடனே அழைத்து சென்றார்.

முதல் மாடியில் இருந்த அறை வாயிலில் மாவட்ட ஆட்சியாளர் என்று ஆரிஃப் பெயர் பொறிக்கப்பட்டு திறந்தே இருந்ததால், காக்கி சீருடையில் இருந்த காவல்துறை அதிகாரிகளிடம் ஏதோ சீரியஸாக பேசிக் கொண்டிருந்தவனை, வெளியிருந்தே இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

முருகவேல் அனுமதிக் கேட்டு அறைக்குள் நுழைந்த நேரம், வெளியே நின்றுக் கொண்டிருந்தவளைப் பார்த்ததும், நிதானமாக ஒரு புன்னகையை அளித்தவன், மணிக்கட்டை பார்த்து “ஒரு டென் மினிட்ஸ்” என்று கெஞ்சுவது போல் சொல்ல,

"டென் செகண்ட்ஸ் கூட முடியாது. நான் உங்ககிட்ட உடனே பேசணும். திரும்பவும் உள்ளே விடுவாங்களா தெரியாது" என்று வெளியிலிருந்தே சொன்னாள்.

இவள் பிடிவாதத்தில் அங்கு அமர்ந்திருந்த நான்கைந்து காக்கி சீருடையாளர்கள் தாங்களாகவே எழுந்து,

"நீங்க பேசுங்க சார்! நாங்க வெளியே வெயிட் பண்றோம்" என்று சொல்ல, அவர்களை நிமிர்ந்துப் பார்க்கக் கூடச் சங்கடப்பட்டவன் உரிமையோடு இவளை முறைத்தான்.

"வாயாடி பொண்ணு சைலன்டா இருக்கும் போதே யோசிச்சு இருக்கணும்” என்று முருகவேல் முணுமுணுக்க, அவரைப் பார்த்துச் சிரித்தவாறே, அனைவரையும் அமர சொல்லிவிட்டு ஆரிஃப் மட்டும் வெளியே வந்தான்.

காரிடரின் ஓரமாக நின்றனர்.

“உங்க ஆஃபீஸ்க்கு வந்த கெஸ்டை உட்கார வச்சு உபசரிக்கிற பழக்கம் எல்லாம் இல்லையா?” என்று புன்னகையுடன் கேட்டவள், “கவர்மென்ட் ஆஃபீஸ்ல அதெல்லாம் எதிர்பார்க்கலாமா?” என்று தானே பதிலும் சொல்லிக் கொண்டு, அந்த காரிடரின் சுவற்றை தொடும் வாத மரத்தின் கிளையை பிடித்து ஆட்டினாள்.

“வாயிருந்தால் அழுதிடும்” என்றபடியே அந்த மரக் கிளையிலிருந்து, அவள் கையை இயல்பாக பிடித்து எடுத்து விட்டான்.
 

kohila

Moderator
Staff member
Mar 26, 2018
114
32
63
அவனை செல்லக் கோபத்துடன் முறைக்க, அவன் புன்னகையுடன், “என்ன விஷயம்?” என்று கேட்டு கைகளை கட்டிக்கொண்டு அவளை பார்த்தான்.

“உங்க சப் கலக்டரை பார்த்து சாரி சொல்லணும். அந்த ரூம்க்கு வழி கேட்க வந்தேன்”

“எது? அந்த கோர்ட்ல நடக்கிற கேஸ்க்கு சாரி மட்டும் சொல்ல போறீங்க…ஓகே” என்று அவளின் நக்கல் புரிந்து சீரியசாக இடது கையைச் சுட்டி அவளுக்கு முதுகுக் காட்டி வழி சொன்னவனிடம்,

“அப்போ காட் என்ன சொல்றாருன்னு கேட்டு சொல்ல சொன்னீங்களே? வேண்டாமா?” என்று அவளும் தீவிரமான முகபாவனையில் கேட்டாள்.

அரும்பிய அளவான புன்னகையுடன் அவள் புறம் திரும்பியவன், தன் முழங்கையை கைப்பிடிச் சுவற்றில் ஊன்றி, கன்னத்தை தாங்கி அவளை் பார்த்திருந்தான் அதே புன்னகையுடன். அவன் பார்வையை எதிர் கொண்டவள் வழக்கம் போல் வார்த்தைகளுக்கு தடுமாற, அவனே உதவினான்.

“நீயும் லவ் பண்றியா?”

“அச்சோ!!! உங்களுக்கு தெரியவே தெரியாது. நம்பிட்டேன்” என்று நக்கலாக அவள் சொல்லவும் சிரித்தவன், ஏற்கனவே கையில் வைத்திருந்த பேனாவால், அவள் கண்களை சுட்டியவன்,

“உன் வாயால சொல்லலன்னா என்ன? இதில தெரியுற பதில் போதும்” என்க, பெருமிதம், பூரிப்பு, சந்தோஷம் ஒரு சேர அவள் முகத்தில் தெரிந்ததை ரசனை கலந்த புன்னகையுடன் விழி விலக்காமல் பார்த்தவன்,

“லவ் பண்றதுக்கு ஆஃபீஸையா செலக்ட் பண்ணுவ. அவசரத்துக்கு ஒரு கிஸ் கூட பண்ண முடியல” என்று சொல்லவும், அதிர்வுடன் நிமிர்ந்தவள்,

“ஐந்து நிமிஷத்துக்கு முன்னாடி ஏன் வந்தன்னு கேட்ட ஆளை எங்கேயாவது பார்த்தீங்க?” என்றாள்.

“ஹே அப்படியெல்லாம் யாரும் கேட்கல. மீட்டிங்கே போஸ்ட்போன் பண்ணிட்டு வந்திருக்கேன் மேடம் .உங்களுக்காக!!!!”

“சரி நீங்க மீட்டிங் கன்டினியூ பண்ணுங்க. கிளம்புறேன். வைதேகி கொடுத்த டைம் முடியறதுகுள்ள போகணும்” என்று சொல்லிவிட்டு, போகட்டுமா? என்பது போல் அவனைப் பார்த்தாள். அவளை அனுப்ப மனமின்றி அவன் பதில் சொல்லாமல் பார்க்க,

“நல்லப்படியா நடக்குமா ஆரிஃப்” என்று கவலை தோய்ந்த குரலில் கேட்டாள்.


“ஹ்ம்ம்ம்!!! நடக்குமாஆஆ???” என்று இழுத்தவன்,

“நாளைக்கே நாம மேரேஜ் பண்ணிக்கலாமா?” என்றுக் கேட்க, அவனை முறைத்து விட்டு,

“போயா” என்று அலட்சிய புன்னகையுடன் சொல்லி, அவனை கடந்துச் செல்ல போனவள், “வெளியே உங்க ஆளுங்ககிட்ட சொல்லி வைங்க சின்ன பசங்களை எல்லாம் அடிக்கிறாங்க” என்று சொல்லவும், அதிர்ச்சியானவன்,

”என்ன!! அடிக்கிறாங்களா? ஏன் அப்பவே சொல்லல” என்று அவசரமாகக் கேட்டு விட்டு, அவ்விடம் நோக்கி விரைந்தான். அவன் பின்னாலேயே படிக்கட்டுகளில் இறங்கியவள், அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறி அவன் கையைப் பிடிக்க,

“கையை எடு ஹர்ஷி” என்று பல்லைக் கடித்தப்படிச் சொல்லிவிட்டு, அவனே விலக்கியும் விட்டு முன்னால் சென்றான்.

அவனுடைய பதவி எல்லாம் மறந்து விட்டு, அவனை சாதாரண மனிதனாக மட்டுமே பார்த்து காதல் கொண்ட மனதிற்கோ, அவன் செயல் சற்றே ஏமாற்றமாக இருக்க, அவன் முன்னே சென்று அந்த மாணவர்களை உள்ளே அழைத்து சென்று விசாரிக்கும் வரை அமைதியாகவே பார்த்துக் கொண்டிருந்தவள், அவன் அவளை பார்க்கும் போது அவ்விடத்தை விட்டுக் கிளம்ப ஆயத்தமானாள்.

ஒரு மாணவனின் கையை பிடித்து பேசிக் கொண்டிருந்தாலும், இவள் மீதும் பார்வையை வைத்திருந்தான். ஹர்ஷிதா காரில் ஏற போவதை பார்த்ததும், அருகிலிருந்த காவலாளியைப் பார்க்க, அவர் ஓடிச் சென்று ஹர்ஷிதாவின் காரின் அருகில் சென்று,

“சார் வெயிட் பண்ண சொல்றார். கொஞ்ச நேரத்தில் வந்துடுவாராம்” என்க, அந்த சாரை கோபத்துடன் பார்த்தப்படியே வேகத்துடன் காரை செலுத்தினாள்.

அவளின் செய்கையில் இவனுக்கோ சிறு புன்னகை.