Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 8 | SudhaRaviNovels

அத்தியாயம் - 8

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் – 8

மறுநாள் மதிய வேளையில் குஜராத்தை அடைந்திருந்தனர். பக்கவாக ஒரு கொடோவுனை தயார் செய்து சித்தார்த்தை அதில் தங்க வைத்தனர். அவனுக்கு இன்னமும் விழிப்பு வந்திருக்கவில்லை. நீரஜ் அவன் வந்த செய்தியை கேட்டதும், நேராக கிளம்பி வந்து அவன் கண் விழிப்பதற்காக காத்திருந்தார்.

அவர் வந்து ஒரு பதினைந்து நிமிடத்தில் கண்களைத் திறந்தான். தலை மிகவும் பாரமாக இருக்க, இரு கைகளால் அழுத்திப் பிடித்துக் கொண்டு எழுந்தமர்ந்தவனுக்கு சற்று நேரம் எதுவும் புரியவில்லை. தான் எங்கிருக்கிறோம் என்ன நடந்தது என்று தெரியாமல் அமர்ந்திருந்தான்.

அப்படியே அமர்ந்திருந்தவனுக்கு முதல்நாள் நடந்தவைகள் எல்லாம் நினைவிற்கு வர, பதறி எழுந்தவனின் பார்வையில் நீரஜ் தெரிந்தார்.

கோபமாக அவரிடம் சென்றவன் “என்ன பண்ணி வச்சிருக்கீங்க? எதுக்கு என்னை இங்கே கொண்டு வந்தீங்க?’ என்றான் எரிச்சலுடன்.

அவனது கைகளைப் பற்றி அமர வைத்தவர் “கோபப்படாதே பேட்டா. உன்னுடைய நல்லதுக்கு தான் இதை செய்தேன்” என்றார்.

அவரது கரங்களைத் தட்டிவிட்டு எழுந்து நின்றவன் “எது? என்னையும் என் மனைவியையும் பிரிப்பதா?” என்று கேட்டவன் “ஐயோ! நேத்து அவ மட்டும் அங்கே தனியா பயந்து போயிருப்பாளே” என்று நெற்றியில் அடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியே செல்ல முயன்றான்.

அடுத்த நிமிடம் அவனை மறைத்தபடி இருவர் வந்து நின்றனர். அதைக் கண்டதும் திரும்பி தகப்பனைப் பார்க்க அவரோ மௌனமாக இரு கைகளையும் கட்டியபடி அமர்ந்திருந்தார்.

“என்ன மனுஷன் நீங்க? இத்தனை கோடிகளை சம்பாதிச்சு நமக்கு பிடித்தமில்லாத ஒரு வாழ்க்கையை வாழ எதுக்கு இந்த பணம்?”

“சித்தார்த்! இங்கே வந்து உட்கார்”.

“முடியாது! என் மனைவியை என்ன பண்ணுனீங்க? அவளுக்கு ஏதாவது ஆச்சு உங்களை சும்மா விட மாட்டேன்”.

அவன் வர மாட்டான் என்பதால் எழுந்து அவனருகே சென்றவர் “சும்மா-சும்மா மனைவின்னு சொல்லாதே சித்தார்த். அந்தப் பெண்ணை விட்டுடு. இது நடக்காத ஒன்று”.

அவரை கூர்ந்து பார்த்தவன் “இத்தனை நாள் உங்க பாசத்துக்கு கட்டுப்பட்டு நீங்க செய்ததுக்கு எல்லாம் அமைதியாக இருந்தேன். இனி அப்படி இருக்க மாட்டேன். எனக்கு உங்க சொத்து, இந்த தொழில் இதெல்லாம் வேண்டாம். என் சோட்டி இருந்தா போதும். உங்களால என்னை கட்டுப்படுத்த முடியாது” என்றான் பிடிவாதமாக.

அந்நேரம் நீரஜின் முகம் இறுக “தப்பு பண்ற சித்தார்த்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் சமயம் படபடவென்று கதவு உடைபடும் சப்தம் கேட்க, வெளியிலிருந்து ஆட்கள் வேகமாக ஓடி வருவது போல தெரிந்தது.

அதைக் கண்டு உடனே காவலுக்கு இருந்த ஆட்கள் அவர்கள் இருவரையும் சூழ்ந்து கொள்ள, வந்தவர்களோ அவர்களை அடித்து தள்ளிவிட்டு இருவரையும் தாக்க முயன்றனர். சித்தார்த் தந்தையை தன் பின்னே வைத்துக் கொண்டு அவர்களை தடுத்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் எதிர்பாராத சமயம் நீரஜின் பின்பக்கம் சென்ற ஒருவன் அவரது தலையில் இரும்பு கம்பியால் அடித்திருந்தான். அதில் தலை உடைந்து ரத்தம் குபுக்குபுவென்று ஊற்றத் தொடங்கியது.

அதைக் கண்டதும் பதறி போனவன் தந்தையைப் பார்க்க, வந்தவர்களோ அடித்து பிடித்துக் கொண்டு வெளியேறி இருந்தனர். வலியுடன் கீழே விழுந்த நீரஜின் கண்கள் எதையோ சொல்லத் துடித்தது. தந்தையை கைகளில் தூக்கிக் கொண்டவன் காரை நோக்கி ஓடினான். காப்பாளர்களில் ஒருவன் வண்டியை எடுக்க, சித்தார்த் அவரை தன் மடியில் வைத்துக் கொண்டான்.

அவரது விழிகள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, வாயை அசைத்து எதையோ சொல்ல முயன்றார். கண்களில் கண்ணீர் பெருகி ஓடியது. தந்தை சொல்ல வருவதை கேட்க, குனிந்தான். அவர் கஷ்டப்பட்டு ஓரிரு வார்த்தைகளை அவனிடத்தில் கூறினார். அதில் அவனது முகம் அதிர்ச்சியடைய, தந்தையை அதிர்வுடன் பார்த்தான். மேலும் அவர் விடாது பேச முயற்ச்சித்தார்.

கார் மருத்துவமனை செல்வதற்குள் சில பல விஷயங்களை அவர் சொல்லி இருந்தார். தான் கேட்டவைகளை எண்ணி அதிர்ச்சி அடைந்து அமர்ந்திருந்தான். அந்நேரம் அவர் மயக்கத்திற்கு சென்று விட்டார். மருத்துவமனை சென்றதும் அவரை அனுமதித்து விட்டு தலையை கையில் தாங்கியபடி அமர்ந்து விட்டான். அவனால் வேறு எதையுமே யோசிக்க முடியவில்லை. நீரஜை அடித்தது அவர்களது தொழில் எதிரி லாலாஜி என்பதும் தெரிந்து போனது.

அதற்குள் வீட்டிற்கு விஷயம் தெரிந்து பிம்லா தேவியும், தாதியும் வந்து விட்டிருந்தார்கள். பிம்லா தேவி முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாகவே இருந்தார். அவருக்கு ஏகப்பட்ட அழைப்புகள் வர ஆரம்பித்திருந்தது. மருத்துவர் வந்து நீரஜை பார்த்து விட்டு இருபத்தி நான்கு மணி நேரம் தாண்ட வேண்டும் என்று விட்டார்.

தாதியோ பேரனின் கைகளைப் பிடித்துக் கொண்டு மகனை எண்ணி கண்ணீர் விட்டபடி அமர்ந்திருந்தார். அப்போது அங்கே வந்த பிம்லா “சித்து! கிளம்பு! கம்பனி போர்ட் மீட்டிங் அரேஞ் பண்ணியாகணும்” என்றார்.

அதில் அதிர்ந்து அன்னையைப் பார்த்தவன் “மா! பப்பாவுக்கு நினைவு திரும்பியதும் அதெல்லாம் பார்த்துக்கலாம்” என்றான் கோபமாக.

அவரோ அவனை முறைத்து “லுக் சித்து! அவருக்கு நினைவு திரும்புமா என்பது சந்தேகம். முதல்ல உயிர் இருக்குமா என்பதே சந்தேகம் என்பது போல சொல்றாங்க டாக்டர்ஸ். சோ நாம இப்போ கம்பனியில் முக்கிய முடிவு எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்”.
 
  • Love
Reactions: Chitra Balaji

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அன்னை கூறியதில் எரிச்சலும் கோபமும் அடைந்தவன் “என்ன பேசுறீங்க? அப்பாவோட உயிர் முக்கியமா கம்பனி முக்கியமா?”

மகனை கூர்ந்து பார்த்தவர் “எனக்கு கம்பனி தான் முக்கியம் சித்து” என்று விட்டார்.

“என்னால வர முடியாது”.

“சித்து! நீ வந்தே ஆகணும். அப்பாவுக்கு அடுத்து நீ தான் பார்க்கணும். உனக்கு சாய்ஸ் இல்ல கிளம்பு” என்றார் அதிகாரமாக.

தாதி அவனது கைகளைப் பற்றி அழுத்தி “நீ போயிட்டு வாப்பா” என்றார்.

வெறுப்பும் வேதனையும் சேர “உயிருக்கு முக்கியத்துவமே இல்லையா இங்கே” என்றான் எரிச்சலுடன்.

மகனை முறைத்தவர் “சித்து! இனி, அனாவசியமான வார்த்தைகளை பேசாம ரொம்ப கவனமா இருக்கணும். நீ தான் நம்ம தொழிலோட வாரிசு. சோ உன்னை எல்லோரும் கவனிப்பாங்க. எல்லாவற்றிலும் கவனமாக இருக்கணும்” என்று அழுத்தமாக கூறிவிட்டு காரை நோக்கி நடந்தார்.

அடுத்து அவனை யோசிக்கவே விடாமல் காரியங்கள் நடந்தது. போர்ட் மீட்டிங் வைத்து சித்தார்த் தான் நீரஜின் இடத்தில் இருப்பான் என்பதை தெரிவித்து அனைவரின் சம்மதத்தோடு முடிவு எடுக்கப்பட்டது. நீரஜோ கண் விழிக்கவே இல்லை. மறுநாளும் கடந்து அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மருத்துவர்கள் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக அறிவித்தனர். பிம்லா தேவி அதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவரை மருத்துவமனையிலேயே வைத்து ட்ரீட்மென்ட் கொடுங்கள் என்பதோடு முடித்துக் கொண்டு விட்டார்.

ஆனால் சித்தார்த்திற்கு தான் எதையும் நினைக்க நேரமில்லாமல் ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டான். ஒரு பக்கம் தொழில் எதிரிகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை, மற்றொரு பக்கம் தொழிலை கவனிக்க வேண்டிய கட்டாயம். அத்தனை நாள் தந்தைக்கு சிறிதளவில் மட்டுமே உதவி வந்தவனுக்கு இப்போது முழுவதுமாக பார்ப்பது என்பது சிரமத்தை கொடுத்தது.

உறங்க கூட நேரமில்லாமல் சுற்றினான். வர்ஷூவைப் பற்றி நினைக்கும் நேரம் வேறு ஏதாவது ஒரு பிரச்சனை வர, அவனால் எங்கேயும் நகர முடியாமல் ஒரு வளையத்திற்குள் சிக்கிக் கொண்டான்.

அதே நேரம் அங்கே அவனுமின்றி, பெற்றவர்களும் இன்றி மருத்துவமனையில் உடல் வலியிலும், மன வலியிலும் உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தாள் வர்ஷினி. அதிலும் தான்யாவின் நிலையைக் கண்டு துடித்துப் போனாள். அவளது முதுகில் குத்திய கண்ணாடிகளால் அவளால் திரும்பிப் படுக்க முடியாமல் குப்புறபடுத்து அழுவதை கண்டு மனம் அவளைத் தான் குற்றம் சாட்டியது. எல்லாவற்றிற்கும் அவள் மட்டுமே காரணம். அமைதியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் இந்த காதல் நுழைந்து மொத்தமாக அனைத்தையும் சிதைத்துப் போட்டு விட்டது.

அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தவர்களே அவளது மொபைல் எண்ணிலிருந்து மாலினியை தொடர்பு கொண்டு பேசிவிட, கல்லூரி தோழர்கள் முழுவதும் வந்து விட்டிருந்தார்கள். பெற்றவர்கள் இறந்து போனதை அறிந்து சகோதரிகள் இருவரும் நீண்ட நேரம் மயக்கத்திலேயே இருந்தார்கள். அவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவமனை ஆட்களை வைத்தே அவர்களின் காரியத்தை முடித்தனர்.

பெற்றவர்களின் கடைசி சடங்கை கூட முடிக்க முடியாமல் சகோதரிகள் இருவரும் உடல் நலிந்து கிடந்தனர். சரவணன் மற்றும் மற்ற நண்பர்களுக்கு நடந்ததை எண்ணி பெரும் அதிர்ச்சி. அவர்கள் அனைவரும் சேர்ந்து வர்ஷினிக்கும், சித்தார்த்திற்கும் திருமணம் ஆனதை எங்கும் குறிப்பிட வேண்டாம் என்று முடிவெடுத்தனர். அவர்களால் சித்தார்த் அவளை தவிக்க விட்டு போயிருப்பான் என்பதை நம்ப முடியாமல் இருந்தது. மாலினியும் எதையும் பேசாமல் ஒருவித குற்ற உணர்வோடு இருந்து கொண்டாள்.

அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தவர்களே அவர்களுக்கான மருத்துவ செலவை கட்டிவிட்டே சென்றிருந்தார்கள். அவர்கள் யாரென்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவும் இல்லை. வர்ஷினி சற்று தேறியதும் அவளிடம் கேட்டு அவளது மாமாவிற்கு தகவல் தெரிவித்தனர். நடந்த விபத்தில் அவளது ஒரு கால் முறிந்திருந்தது. காரின் சீட்டு அதன்மேல் விழுந்ததில் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு விட்டது. அதை அறிந்த போது அவள் கதறிய கதறலில் மருத்துவமனையில் இருந்தவர்களே தவித்து போயினர்.

அவளது மாமா குடும்பத்தினர் வந்த போதும் அவர்களிடம் சொல்லி அழக் கூட முடியாமல் இறுகிப் போய் இருந்தாள். அவர்களுக்குமே பேரதிர்ச்சி. அவர் நிலைமையை கையில் எடுத்துக் கொண்டு சகோதரிகள் இருவருக்கும் பாதுகாப்பாக தங்கி கொண்டனர்.

சிகிச்சை ஓரளவு முடிந்து வீடு திரும்பலாம் என்றதும் அடுத்த கேள்வி எழுந்தது. தாய், தந்தை இல்லாமல் எப்படி அவர்களை தனியே விடுவது என்று. அதற்கு வர்ஷினியே ஒரு முடிவை கூறினாள். தாய் வழிப் பாட்டியை துணைக்கு வைத்துக் கொண்டு தாங்கள் அந்த வீட்டிலேயே இருந்து கொள்கிறோம் என்று கூறி விட்டாள். தந்தையின் சேமிப்பும், இறப்பில் கிடைத்த பணமும், சொந்த வீடும் அவர்களின் வாழ்க்கையை ஓட்டுவதற்கு போதும் என தீர்மானித்து பாட்டியை தங்களுடன் வைத்துக் கொண்டனர்.

ஆனால் வர்ஷினிக்கு செய்வதற்கு என்று ஒரு ஆள் எந்நேரமும் தேவைப்பட்டது. அவளது மனமோ மிகவும் இறுகிக் கிடந்தது. எப்போதாதவது வந்துவிடுவான் என்று எதிர்பார்த்திருக்க, விபத்து நடந்து ஒரு மாதம் ஆன போதும் சித்தார்த் எங்கேயும் தலை காட்டி இருக்கவில்லை. அவனது நட்புக்களே நொந்து போய் இருந்தனர். கல்லூரிக்கு கூட போக இயலாமல் தனது அறையிலேயே முடங்கிக் கிடந்தாள். ஆனால் அவளது எண்ணங்கள் எந்நேரமும் விழித்தே இருந்தது.

அவளது மாமா அவளுக்கு செயற்கை கால் பொருத்துவதைப் பற்றி பேசினார். ஆனால் அதற்கு ஆகும் செலவை எண்ணி பயந்து அமைதியாக இருந்தாள். தான்யா பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்திருந்தாள். அவள் தான் பொறுப்பாக அக்காவிற்கு வேண்டியவற்றை செய்து கொண்டிருந்தாள். தாய் வழிப் பாட்டி வசந்தா இருவரையும் கவனமாக பார்த்துக் கொண்டார்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
ஒன்றரை மாதங்கள் கடந்த நிலையில் திடீரென்று ஒருநாள் வந்த மாமா செயற்கை கால் பொருத்துவதற்கான ஏற்பாடுகளை முடித்து விட்டதாக தெரிவித்து அவளை அழைத்துக் கொண்டு சென்றார். அவ்வளவு பணத்திற்கு எங்கே போவது என்கிற கேள்விக்கு ஒரு சேவை அமைப்பு அந்த செலவுகளை ஏற்றுக் கொள்வதாக கூறினார்.

பதினைந்து நாட்கள் மருத்துவமனையில் இருந்து செயற்கை காலைப் பொருத்தி அதில் நடக்கவும் பழகிய பிறகு வீடு வந்து சேர்ந்தாள் வர்ஷினி. அவளது முகத்தில் அத்தனை நிம்மதி. மாமாவுக்கும், மாமிக்கும் தனது நன்றியைத் தெரிவித்தவள் மனதில் சிறு நம்பிக்கை துளிர்த்தது. இனி, வாழ்க்கையை எதிர்கொள்ள பயமில்லை என்று மனது அடித்துச் சொன்னது.

இரு மாதங்களுக்குப் பிறகு பழையபடி கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்தாள் வர்ஷினி. அங்கே சென்ற முதல்நாளே அவனது நினைவுகள் அவளை ஆக்கிரமிக்க, அதே சமயம் அன்று ஊட்டியில் அனைத்தையும் இழந்து தனித்து நின்றது நினைவிற்கு வர, மனமும் முகமும் இறுகி போனது.

எதையும் இனி நினைக்க கூடாது என்கிற எண்ணத்துடன் வகுப்பில் நுழைந்தாள். அவளது வகுப்பு தோழிகள் அனைவரும் நடந்தவற்றிற்கு வருத்தம் தெரிவித்து அவளிடம் பேசிவிட்டு சென்றனர். பேராசிரியர்களும் அவளிடம் நடந்தவற்றை கேட்டுவிட்டு அவளுக்கு தைரியம் அளித்துவிட்டு பாடத்தை எடுக்க ஆரம்பித்தனர்.

மதியம் அனைத்து வகுப்புகளையும் முடித்துக் கொண்டு தோழிகளுடன் மைதானத்தில் சென்றமர்ந்தாள். அப்போது சித்தார்த்தின் நண்பர்கள் அவளைப் பார்த்துவிட்டு வந்தனர். அவர்களை நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தில் வெறுமை மட்டுமே நிறைந்திருந்தது.

“எப்படி இருக்க வர்ஷினி?”

“இருக்கேன்”.

அவளிடம் எப்படி கேட்பது என்கிற தயக்கத்துடன் “அவன் கிட்ட இருந்து போன் எதாச்சும் வந்ததுதா வர்ஷினி?”

அவனை நிமிர்ந்து பார்த்தவள் “இன்னுமா எதிர்பார்க்குறீங்க? உங்களுக்கு நம்பிக்கை இருக்கா? இரண்டு மாசம் ஆச்சு. என்னை அம்போன்னு ரோட்டில் விட்டுட்டுப் போனவன் திரும்பி வருவான்னு எனக்கு நம்பிக்கை இல்லை. உங்களை எல்லாம் கையெடுத்து கும்பிடுறேன். இனிமே என்கிட்டே அவனைப் பற்றி பேச வேண்டாம்” என்றாள் வெற்றுக் குரலில்.

சரவணனுக்கு சித்தார்த்தை தவறாக எண்ண முடியவில்லை. ஆனால் அவனிடமிருந்து இதுவரை ஒரு போன் கூட வராதது உறுத்தலாக தான் இருந்தது. பாதிக்கப்பட்டவளிடம் சமாதானம் செய்ய அவனிடமிருந்து ஏதாவது ஒன்று வந்திருக்க வேண்டும். அது இல்லாமல் எதை வைத்து பேச முடியும் என்றெண்ணியவன் “சரி வர்ஷினி. உனக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் யோசிக்காம கேளு” என்றான்.

கலங்கிய விழிகளுடன் “நட்பு துணைக்கு நின்ற அளவிற்கு காதல் நிற்கல இல்ல?”.
 

Chitra Balaji

Active member
Feb 5, 2020
125
68
28
Very very emotional episode maa.... அவன் அப்பா என்ன sonnaaru ஏன் avvallavu athirichi..... Avaluku kaale poidicha... யாரு avaluku avvallavu செலவு panninathu.....