Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 8 | SudhaRaviNovels

அத்தியாயம் - 8

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,951
2,683
113
Thank you 🙏🏻 all for your likes and comments! Keep reading & share your thoughts!தேன் மழையிலே

ஆர்த்தி ரவி


அத்தியாயம் 08:


“பாட்டீ!”


“அப்பூ எப்ப வந்தப்பூ? இன்னைக்கி நீ வருவேன்னு சொல்லவே இல்லையே?”


“திடீர்ன்னு கிளம்பினேன் பாட்டி. வேற டாக்டர் ஆன் கால் ட்யூட்டிய எடுத்துக்கிட்டாங்க. இன்னைக்கு வேற எந்த வேலையும் இல்லை. கம்ப்ளீட்டா ஃப்ரீ ஆனதாலே அப்படியே இங்க வந்திட்டேன். சரி நேரிலேயே உங்களைப் பார்த்துக்கலாம்ன்னு தான் ஃபோன் பண்ணலை.”


பாட்டிக்குப் பதிலுரைத்த ஹரியிடம், உதடுகளைப் பிரிக்காமல் ஒரு புன்னகை தோன்றியது. பாட்டி ஆராய்ச்சியாக அவனைப் பார்த்தார்.


வீட்டிற்கு வரும் முன்னர் எப்பவும் அழைத்துச் சொல்லி விடுவான். அவர்களுக்குத் தகவலாக மட்டுமின்றி ஒரு ஜாக்கிரதை உணர்வும் அதில் பொதிந்திருக்கும். ஒரு மருத்துவனாக எத்தனை விபத்துகளைப் பார்த்திருப்பான்? அவற்றைப் பற்றிய ஞானத்தில் வந்திருந்த கவனமது!


ஆனால், இம்முறை யாருக்கும் ஃபோன் பண்ணிச் சொல்லவில்லை ஹரி. எதற்கு மெனக்கெட வேண்டும்? வேண்டாம் என்றே அவன் சொல்லவில்லை. ஓர் வீம்பும் அலட்சிய பாவனையும் அவனிடம் புதிதாகத் தலை தூக்கியிருந்தது.


கடந்த சில நாட்களாக அவன் மனமே விட்டுப் போயிருந்தது. அம்மாவிடம் கோபம் என்றால் அப்பாவிடமும் வருத்தம் உதயமாகியிருந்தது.


அம்மாவின் சொற்கள் அவனைக் காயப்படுத்தி இருந்தன. அப்பாவும் கூட ஏன் அமைதி காக்கிறார்? ஏதாவது ஒரு வகையில் முன்னெடுப்புச் செய்யாத அவரது இந்நிலை ஹரியை யோசிக்க வைத்தது.


அவன் எப்பவும் அம்மா அப்பாவை எதிர்த்தது இல்லை. இப்போதும் அவர்களை எதிர்த்துத் தன் விருப்பத்தை நடத்திக்கொள்ள ஹரி நினைக்கவில்லை.


சிறு வயது முதல் அவனுக்கு வேண்டியது கிடைக்கும் தான். ஆனால், அவன் வேண்டும் என்று கேட்டது எல்லாமும் கிடைத்ததில்லை.


பொதுவாகக் குடும்பத்தைச் சார்ந்தச் சின்ன சின்ன விசயங்களைக் கூட மூவரும் கலந்தாலோசித்து முடிவெடுப்பார்கள். மூவருள்ளே ஒரு நல்ல புரிந்துணர்வு உண்டு.


ஆனால், பெரிய விசயமான… ஹரியின் வாழ்க்கையின் முக்கியமான முடிவு அப்படியே அந்தரத்தில் விட்ட காகிதப் பட்டம் போன்று தத்தளித்தது. பெற்றோர் இருவரும் ஹரியிடம் ஆர அமர உட்கார்ந்து பேசவேயில்லை.


ஹரி ஒரே பிள்ளையென்பதால் செல்லமாக வளர்ந்தவன் தான்… இருந்தும் பெற்றோரிடம் அதை உபயோகப்படுத்தி தனக்கான காரியங்களைச் சாதித்துக் கொள்ள முயன்றதில்லை.


இப்போதும் கூடப் பொறுமையைக் கடைபிடித்தான். அப்பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டே!


இன்று மாலையே திரும்புவதாகத்தான் நினைத்து வந்திருக்கிறான். ஆனால், சென்னைக்குத் திரும்பும் முன்னர் இழுத்துக் கொண்டு போகும் இந்தத் திருமண விசயத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வரும் எண்ணத்துடன் இருக்கிறான்.


“நீ வருவேன்னு தெரிஞ்சிருந்தா உன்னையும் அழைச்சிட்டே சாயந்திரமா கோவிலுக்குப் போயிருப்பேனேப்பூ!”


பேரனுக்கு நெற்றியில் விபூதியைப் பூசிவிட்டபடி சிவசங்கரி ஆதுரமாகப் பேசிக்கொண்டிருந்தார். எதிர்பாராமல் இன்று ஹரியைக் கண்டதில் பூரிப்படைந்தார். ஆனால், அந்தப் பூரிப்பு முழுமையடையவில்லை.


பாசமான பேரனின் சோர்வைப் பிரதிபலித்த கண்களைக் கண்டு அப்படியே மனம் வருத்தமடைந்தார். இந்தச் சம்பந்தம் பற்றி எந்தப் பக்கமும் இதுவரைக்கும் அவர் பேசவில்லை.


அவர் அபிப்பிராயத்தை மகனோ மருமகளோ அவரிடம் கேட்கவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அவருமே பொறுமை காக்க வேண்டி அமைதியாக இருந்தார்.


பிரபா, கோபால கிருஷ்ணன், சியாமளா மற்றும் கவிதா என்று நான்கு மக்களைப் பெற்றவர். மகள் வயிற்றுப் பேரன் பேத்திகளை விட, ஹரி மேல் சிவசங்கரிக்குப் பாசம் அதிகம்.


மகனுக்கு ஒற்றைப் பிள்ளை என்பதில் வந்ததா இல்லை ஹரியின் பண்புகள் அவரை அதிகம் கவர்ந்ததில் வந்ததா என்று பிரித்தறிய முடியாத வகையில் அவருக்கு ஹரியிடம் அப்படி ஒரு அன்புப் பிணைப்பு!


என்னவோ ஹரியின் வாழ்க்கை ஆரம்பமே இப்படிக் கோபதாபங்கள் வருத்தங்கள் என்றிருக்க, சிவசங்கரிக்கு வீடே சகிக்கவில்லை. கடந்த சில வாரங்களாக அடிக்கடி கோவில்களைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்.


இன்ன கோவில் என்றில்லை… அவர் கால்கள் இழுக்கும் பக்கம் போய் வந்தார். இன்று ஹரிக்காக ஒரு சிறப்பு வழிபாடும் அர்ச்சனையும் செய்துவிட்டு வந்திருந்தார்.“என்ன பாட்டி விசேஷம்… ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமா காலையிலேயே கோவிலுக்குப் போயிருக்கீங்க? உங்க லவ் காட் (god) பாடலீசுவரர் எப்படி இருக்காரு? என்ன சொல்லுராரு?”


பாட்டியின் சுருங்கிய முகம் ஹரியின் பார்வையில் பட்டிருக்க, அவரை இதமாக்கும் பொருட்டு வரவழைத்தப் புன்னகையுடன் பளிச்செனப் பற்கள் தெரிய புன்னகைத்தான்.


பேரனின் குறும்பையும் புன்னகையையும் இரசித்த பாட்டியும் சட்டெனச் சிரித்துவிட்டார்.


“குறும்புக்காரன் என் அப்பூ!” பேரனருகிலேயே படிக்கட்டுத் திண்டில் உட்கார்ந்தவர் அவனின் கன்னத்தைப் பிடித்து நிமிண்டிவிட்டுச் சிரித்தார்.


சிவசங்கரி சமீபத்தில் தான் புதிதாகப் பற்களைக் கட்டியிருக்க, பளீரெனக் கூடுதல் மினுப்பாகத் தெரிந்தது.


“இன்னைக்கி நான் பார்த்தது நம்ம பாடலீசுவரரை இல்லையப்பூ…”


“நீங்க திருப்பாதிரிப்புலியூருக்குப் போகலியா பாட்டி… அப்புறம் வேற எந்தக் கோவிலுக்குப் போனீங்க?”


“அங்க தானப்பூ போயிருந்தேன்… அவரை லூசுல விட்டுட்டு, அந்தப் பெரியநாயகி அம்மாவைப் பார்த்துப் பேசிட்டு வர்றேன்.”
 
  • Love
Reactions: Shanbagavalli

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,951
2,683
113
“அம்மாகிட்ட என்ன பேசினீங்க? அவங்க உங்கட்ட என்ன சொல்லி அனுப்பினாங்க?”


சிவசங்கரி பேரனின் குறும்பைப் பின்பற்றிப் பதில் சொல்ல, ஹரி அவரின் கையைப் பிடித்து மடியில் வைத்துக் கொண்டான். அந்த முதிய கை விரல்களைப் பிடித்து விளையாடினாலும் அர்த்தத்துடன் அவரிடம் கேள்விகளைக் கேட்க, சிவசங்கரியும் அதைப் புரிந்து கொண்டார்.


“ம்ம்… என் அப்பூக்குப் பிறக்கப் போகும் கொள்ளுப்பேத்தி, கொள்ளுப்பேரனைத் தூக்கிட்டு எப்ப வரப் போறன்னு என்னையே திருப்பிக் கேள்வி கேட்கிறா!”


சிவசங்கரி ஹரியின் எதிர்பார்ப்புக்கு நேரிடையாக விடையளிக்காமல் சுற்றி வளைத்துப் பதில் சொல்ல, ஹரி அவருடைய சாதுரியத்தை எண்ணி மனதில் மெச்சிக் கொண்டான்.


இருவரும் சிறிது நேரம் காற்றாட அமர்ந்து அளவளாவினார்கள்.


“பாட்டி, உங்க பாடலீசுவரர் நம்ம கடலூருக்கு எப்படி வந்தாருன்னு சொல்லுங்க.”


“நீ இரண்டு வயசுல இருந்து இந்தக் கதையைக் கேட்டிட்டு இருக்கப்பூ. இன்னும் எத்தனை தரம் இந்தக் குமரி உனக்குப் புராணத்தைப் பிட்டு வைக்கணும்?”


“ம்ம்… இப்பவும் குமரின்னு சொல்லிட்டுத் திரியுற என் பாட்டி எப்ப கிழவி ஆவாங்களோ அது வரைக்கும் கேட்டிட்டு இருப்பேன்.”


“உனக்கு மகளோ மகனோ வந்திட்டா?”


“வரட்டும். அவங்க வந்தா உங்க மடியிலே சமர்த்தா உட்கார்ந்துக்குவாங்களாம். நானொரு பக்கம் இப்படிச் சாஞ்சிக்குவேன். எங்களுக்கு இந்த சிவசங்கரி கதை சொல்லுவாங்களாம்.”


சொல்லிவிட்டு ஹரி பாட்டியின் இடுப்பைச் சுற்றிக் கை போட்டு அணைவாகப் பற்றி, அப்படியே அவரின் இடது தோளில் சாய்ந்து கொண்டான்.


“இன்னும் எத்தனை நாளைக்கப்பூ இப்படி நீ என்னைய கட்டிப்பிடிச்சிட்டு இருக்கப் போறே? நாளைக்கு உன் பொண்டாட்டி வந்தா என்ன செய்யப் போறேன்னு நானும் பார்க்கத்தானே போறேன்!”


“நீங்க என்ன பார்க்கப் போறேங்கன்னு இப்பவே நான் சொல்றேன் பாட்டி… கண்டிப்பா இந்த ஹரி ஹனியை மட்டும் தான் கட்டிப்பிடிக்கப் போறான். அதிலே உங்களுக்குச் சந்தேகமே வேண்டாம்!”


“ராஸ்கல்! இப்பவே ஹனி புனின்னு என்ன கொஞ்சல்?”


“அவங்க பேரு தேனு பாட்டி. அதை இங்க்லீஷ்ல சொன்னேன்.”


“இந்த செஞ்ஜோஸப் கான்வெண்ட் ஸ்கூல், ஸ்டெல்லா மேரீஸ் காலேஜ் அலும்னை (alumni) எனக்கே தேனு ஹனின்னு பாடம் நடத்துறியா?”


பாட்டி ஹரியின் காதைப் பிடித்துப் பலமாகத் திருகிவிட, “ஹய்யோ வலிக்குது பாட்டி! விடுங்க!” கெஞ்சிக் கொண்டிருந்தான்.


“கல்யாணம் ஆனதும் என்னை ஹக் பண்ண மாட்டேன்னு சொல்லுறவனுக்கு நானும் இனி எந்தப் புராணக்கதையும் சொல்ல மாட்டேன்!”


பிகு பண்ணிக் கொண்டார் சிவசங்கரி. பாட்டியை எப்படித் தாஜா செய்வது என்பதை அறியாதவனா ஹரி? அவரைப் பேசிக் கொஞ்சி, கதையைச் சொல்ல வைத்தான்.


“இந்த உலகத்து உயிர்களையெல்லாம் உய்யும் பொருட்டு, இறைவன் ஒரு திருவிளையாடல் நிகழ்த்த நினைச்சி இறைவியுடன் சொக்கட்டான் ஆடினார் அப்பூ. எத்தனை தரம் ஆடினாங்களோ! அவங்க பலமுறை ஆடியும் பெருமான் தோத்திட்டாரு.”


“அது தானே அவர் ப்ளான் பாட்டி… இல்லைன்னா காட் (god) தோத்துப் போகுமா?”


“த்சோ பேசாம கதையைக் கேளப்பூ. நீ ஊடாலே பேசினா எனக்கு ப்ளோ மறந்திடும்.”


“ப்ளோ மறந்து போகுமா? அதுவும் உங்களுக்கு? க்கூம்… யாரு காதுல பூ சுத்துறீங்க?”


“டேய் இப்ப மீதி கதையைச் சொல்லவா வேண்டாமா?”


“மீதிக் கதையா? சரியா போச்சுப் போ! இப்ப தானே ஆரம்பிச்சீங்க. பாதி கதையைக் கூடச் சொல்லலை?”


“ஹரீ…”


“சும்மாச்சும் பாட்டி. உங்க பேரன் வேற யாருகிட்ட போயி விளையாடுவான்?”


“அந்த ஹனி புனிட்ட போயி விளையாடேன்!”


“பாட்டீ…”


“நீ டாக்டருக்கு தானே படிச்சப்பூ? இப்படிச் சினுங்கிறயே!”


“சிவ… சங்… கரி!”


“ச்சூ எதுக்குக் கத்துற? நீ இப்படிச் சத்தமா எம் பேரு சொல்லிக் கூப்பிட்டா, அக்கடான்னு அவர் சம்பந்தி கூட உட்கார்ந்து சீட்டாடிட்டு இருக்கிற உங்க தாத்தா, என்னவோ ஏதோன்னு பதறியடிச்சு எட்டிப் பார்க்கப் போறாருடா.”


“எங்க வானத்துல இருந்தா?”


“என்னடா நக்கலா சிரிக்கிற! எங்கே இருந்தாலும் அவருக்கு எந்நினைப்பு இருக்கும் அப்பூ!”


“ஆமாம் கண்டிப்பா இருக்கும்!”


“டேய்!”


“அந்த வைகுண்டத்துல இருந்து மிஸ்டர். ராதாகிருஷ்ணன் சிவசங்கரி இப்ப நம்ம முன்னாடி குதிச்சாலும் குதிப்பார். அதுக்குள்ள நீ கதையைச் சொல்லி முடி சிவசங்கரி!”


“குறும்பா! பாட்டிக்கு மரியாதை தரணும்னு இல்லாம எத்தனை தடவை எம் பேரைச் சொல்லுவ?”


“உங்க மருமகளைக் கேளுங்க பாட்டி. அவங்க தான் எனக்குச் சரியாவே மரியாதை சொல்லித் தரலை!”


“ராஸ்கல்! எம்மருமகளைப் பற்றி என்ட்டயே குறை சொல்லுவியா? அவ என் பேரனை நல்லபடியா வளர்த்து ஆளாக்குனதுனால தான், உன் மனசுக்குப் பிடிச்ச வரன் அமைஞ்சும் அவ சம்மதம் சொல்லணும்னு பொறுமையா காத்திட்டிருக்கப்பூ.


இல்லைன்னா இவ்வளவு படிச்சு, நல்ல சம்பாத்தியத்தையும் கையில வச்சிட்டு, இந்த மட்டும் ஒரு வாலிப வயசுப் பையன் காத்திட்டிருப்பானா? நீ இன்னும் அந்தப் பொண்ணு வீட்டுக்கு மெசேஜ் பண்ணலையே ஹரி?”


“அதானே… உங்க மருமகளை விட்டுக் கொடுப்பீங்களா? நல்ல மாமியார்... நல்ல மருமகள்!”


“நான் எதுக்கு அப்பூ எம் மருமகளை விட்டுக் கொடுக்கணும்?”


“நீங்க விட்டுக் கொடுக்கவே வேண்டாம். நல்ல மாமியாராவே கண்டின்யூ பண்ணுங்க. இப்ப எனக்குச் சிவபெருமான் சொக்கட்டான் விளையாண்டு என்ன திருவிளையாட்டைச் செஞ்சாருங்கிறதைச் சொல்லி முடிங்க பாட்டி.”


“பொறு டா முதல்ல இந்த நல்ல மாமியார் மருமக பேச்சை முடிச்சிக்கலாம். கதை எங்க போகப் போகுது? கண்டிப்பா அதையும் சொல்லாம உன்னைப் போக விட மாட்டேன்.”


“சரி சரி சொல்லுங்க பாட்டி. உங்க வியாக்கியானத்தை ஆரம்பிக்கும் முன்னாடி இப்படி நல்லா சாஞ்சி உட்காருங்க பாட்டி. நான் உங்க மடியிலே தலை வச்சி வசதியா படுத்துக்கிறேன்.”


“பாட்டி உனக்குக் கதாக்காலட்சேபமாப்பூ சொல்லப் போறேன்? இப்பவே தூங்குறதுக்கு ரெடி ஆகிட்டே?”


“கதாக்காலட்சேபமோ அந்தக் கீதா உபதேசமோ எதுன்னாலும் சொல்லுங்க. உங்க மடிச் சுகத்தை அனுபவிச்சிட்டே கேட்டுக்கிறேன்.”


“என் பேரன் பெரிய பீடியாட்ரிக் கார்டியாலஜிஸ்ட்னு ஊருல சொல்லிக்கிறாங்கப்பூ!”


“சொல்லட்டும். அதுக்கு? அதே ஊரு தான் ஹரி கிருஷ்ணன் சிவசங்கரி ராதாகிருஷ்ணனோட பேரன்னும் சொல்லுது பாட்டி.”


“நல்லாப் பேசக் கத்துக்கிட்ட ஹரி.”


“இதுக்கேவா? போங்க பாட்டி. இப்பல்லாம் இந்த ஆன்லைன் தமிழ் நாவல் ரைட்டர்ஸ் அவங்க ஹீரோ ஹீரோயின்ஸை எப்படியெல்லாம் மெனக்கெட்டுப் பேச வைக்கிறாங்கன்னு தெரியுமா?”


“ஓஹ்! என் பேரன் டாக்டர் தொழிலை விட்டு எப்ப கதை வாசிக்க ஆரம்பிச்சீங்க?”


“வாசிச்சா தானா பாட்டி?”


“அப்புறம்?”


“ஹாஸ்பிடல் ஸ்டாஃப்ஸ் வழியா தெரிஞ்சிக்கிட்டது தான் பாட்டி. அவங்க ஃபேஸ் புக் ஆக்டிவிடீஸ் ஸ்க்ரோல் பண்ணும் போது கண்ணுல படும். அவங்க பிரேக் டைம்ல பேசிக்கிறது கூட ஏதேர்ச்சையா கேட்க நேர்ந்திருக்கு. அப்போ தெரிஞ்சிகிட்டது தான் பாட்டி.”


“சோஷியல் மீடியாவுக்குப் போய்ப் பார்க்கிற அளவுக்கு டாக்டர்ஸ்க்கு நேரமிருக்குமா அப்பூ?”


“கிடைக்கிற நேரத்துல பார்க்கிறது தான். நம்ம டைமை வைஸா செலவளிக்கிறதும் நம்ம கைல தான் இருக்கு… நம்ம மைண்ட் டைவர்ஷன் கம் ரிலாக்சேஷனும் நம்ம கையடக்கம் தான் பாட்டி. எஸ், மெடிக்கல் ப்ரஃபெஷன்ல ஃப்ரீ டைம் எப்ப கிடைக்குதுன்னு உறுதியில்லை தான்.


பட், எங்களுக்கு மட்டுமில்லை பாட்டி இந்தக் கஷ்டம்… ஒவ்வொரு ஃபீல்ட்லயும் ஜாப் ரோலுக்கு ஏற்றாற் போல் டைம் க்ரஞ்ச், வேலைப்பளுன்னு இருக்கும் தானே?”
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,951
2,683
113
“நீ சொல்றது வாஸ்தவம் தானப்பூ. உங்க தாத்தாவும் உன்னை மாதிரி தான் சொல்லுவாரு. அவர் வேலை, பண்ணை, நம்ம குடும்பம்னு இருந்தாலும் அவருக்குன்னு வாரத்திலே ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வச்சிருந்தாரு.


அவருக்குன்னு மட்டுமில்லை, எனக்கும் அவருக்கும் கூட எங்க நேரம்னு இருந்தது. இப்ப தான் எல்லாம் ஓட்டமா இருக்கு. எல்லோரும் பிஸி பிஸின்னு சொல்லிட்டுத் திரியுறாங்க.”


“ஆமாம் பாட்டி. உலக மாற்றத்திற்கேற்ப மக்களும் மாறத்தானே வேணுங்கிற மாதிரி ஆகிப் போச்சு. நீங்க தாத்தாவை ரொம்ப மிஸ் பண்றீங்களா இன்னும்?”


“மிஸ் பண்றேன்… ஆனாலும் ஏழெட்டு வருசத்துல ஒரு மாதிரி பழகிட்டேன்னு வையி. எத்தனை பேரு இருந்தாலும் நம்ம சரி பாதிங்கிற உயிர் மேலே இருக்கிற அன்பும் நேசமும் தனி உணர்வப்பூ! நீ தான் பார்த்திருக்கியே… உங்க தாத்தாவும் நானும் எப்படி இருந்தோம்னு.”


“ம்ம்… உங்களை மாதிரி ஒரு அன்னியோனியமான வாழ்க்கை எனக்கும் கிடைக்கணும்னு ஆசைப்படுறேன் பாட்டி. அம்மா அப்பாவும் கூட உங்களை மாதிரி தான் இருக்கிறாங்க.


பார்த்தீங்களா அப்பா சும்மா அம்மாவை அதட்டுற மாதிரி இருக்கும்… இப்ப… அம்மா இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லலைன்னு அப்பாவும் த்ரீ மங்கீஸ் ஸ்டைல்ல சுத்தி வர்றாரு.


அவங்களுக்குள்ள என்ன பேச்சு ஓடுதோ தெரியலை. ஆனால், அப்பா என்கிட்ட என்ன ஏதுன்னு விசாரிக்கவே இல்லை.”


“அதெப்படி அவங்களுக்குள்ள பேசி ஆலோசிக்காம இருப்பாங்க? எம் மகன் உங்க தாத்தாவைவிட ஒரு படி மேலே அப்பூ! பெத்த தாய் எங்கிட்ட கூட அவன் மனசைத் திறக்கலை. உன் விசயத்துல கமுக்கமாவே அடைச்சிட்டுத் திறியறான். என்னத்தைச் சொல்ல?


நீ நல்ல அன்னியோனியமான வாழ்க்கை வாழப் போற… வீணான குழப்பத்தையும் கவலையையும் விடு. நல்லதே நடக்கும்.”


“ம்ம்…”


“என்னப்பூ சுரத்தையே காணும்… உங்க அம்மா கோணத்தையும் நினைச்சுப் பாரு. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னியே, நான் நல்ல மாமியாருன்னு. இதே போல ஒரு நல்ல மாமியாருங்கிற பேரு வாங்கணும்னு உன் அம்மாவும் நினைக்கலாமில்லை அப்பூ?”


“கண்டிப்பா நினைக்கலாம் பாட்டி. தப்புக் கிடையாது! ஆனா, தேன்மொழிக்கு ஒரு நல்ல மாமியாரா அவங்களாலே ஏன் இருக்க முடியாதுன்னு நினைக்கணும்?


முன்னாடியே மனசுல ஒரு முடிவெடுத்திட்டுப் பிடிவாதமா இருந்தா எதுவும் தப்புத் தப்பாத்தான் தெரியும். அவங்க ப்ளைண்ட் ஃபோல்ட்ட எடுத்து விட்டுட்டு, கண்ணை விரிச்சு விசாலமான பார்வையில் பார்க்கட்டும். எல்லாம் புரியும். நல்லதா உணரத் தோணும்.


நீங்க உங்க சரி பாதியை இழந்திட்டு எப்படி இருந்திட்டு இருக்கீங்க? அந்த மாதிரி தேன்மொழியும் தவிச்சிருப்பாங்க இல்லையா?


முதல்ல அவங்க இப்படி ஓர் இழப்பை அனுபவிக்கிறது தெரியாது! அப்பவே எனக்கு அவங்களை ரொம்ப பிடிச்சது. தெரிஞ்சதுக்கு அப்புறம் இன்னும் இன்னும் அதிகமா விரும்புறேன் அவங்களை!


இது நிச்சயமா இரக்கம் இல்லை. பாவம் பார்த்தும் வரலை!


நான் ஏர்போர்ட்ல நேர்ல பார்த்த அந்த அழகான பொண்ணு என் கண்ணுக்குள்ளேயே நிக்கிறா!


நானும் அம்மா சொல்றதுக்காக ஒரு முயற்சியா யோசிச்சுப் பார்த்தேன்… முடியலை பாட்டி. என்னாலே அவங்களை மிஸ் பண்ண முடியாது! ஐ நீட் ஹர் இன் மை லைஃப் பாட்டி… அஸ் மை சரி பாதி!


இதனால் என்ன வருதோ நான் சந்திக்கத் தயாரா இருக்கேன். என் வாழ்க்கையை நல்லா அமைச்சிக்கிற சக்தி எனக்கிருக்கு!”


“ரொம்ப சந்தோஷம் அப்பூ! இவ்வளவு உறுதியா நீ பேசும் போது வேற எதுவும் சொல்லத் தோணலை எனக்கு. உன் அம்மாட்ட இப்படி எடுத்துச் சொன்னியா ஹரி? இன்னைக்கி பேசிப் பாரப்பூ. அப்படியும் ஒத்து வரலைன்னா தடாலடியா களத்திலே இறங்கிடு!”


“இனி அவங்கட்ட தனியா பேச ஒன்னுமில்லை பாட்டி!”


“ஏனப்பூ?”


“உங்க மருமகளுக்கு நாம பேசுனது எல்லாம் கேட்டிடுச்சி.”


“என்ன அப்பூ சொல்ற?”


அதே நேரம் டொக்கெனச் சத்தம் கேட்டது. மாமியாருக்கும் மகனுக்குமென ஒரு மரத் தாம்பாளத்தில் இரு பானங்களைக் கொண்டு வந்த பானுமதி, மும்முரமாகப் பேசிக் கொண்டிருந்தவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் தயங்கி நிற்க, நல்ல மாமியார் நல்ல மருமகளில் தொடங்கி அனைத்தையும் கேட்டிருந்தார்.


அம்மா எவ்வளவு கேட்டிருப்பார் என்று ஹரிக்குத் தெரியாது. முக்கியமான பின் பகுதி உரையாடல்களைக்‌ கண்டிப்பாக் கேட்டிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டான்.


தங்களிடம் பேசாமல் அப்படியே பானங்களை தங்களருகே வைத்துவிட்டு, முகத்தைத் திருப்பிக் கொண்டு போகும் மருமகளை சிவசங்கரி யோசனையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.


ஹரியோ அலட்டிக் கொள்ளவில்லை. மாதுளம் பழச்சாறு அடங்கிய லோட்டாவை எடுத்துப் பாட்டியிடம் தந்துவிட்டு, நுரை ததும்பிய மாதுளை மில்க் ஷேக்கை நாக்கு நுனி கொண்டு உரசி, அதன் ருசியைச் சொட்டுச் சொட்டாக உள்வாங்கி, பின் உறிஞ்சி உறிஞ்சி இரசித்துக் குடித்தான்.


பானத்தைப் பருகி முடித்த சில நிமிடங்களில் ஹரிக்குக் கண்ணயர்ந்து வர, பாட்டியின் மடியில் தலை வைத்துத் திண்டில் வாகாகக் கால்களை நீட்டிப் படுத்துக் கொண்டான்.


சிவசங்கரி பேரனின் தலையைக் கோதி விட்டபடி, திருப்பாதிரிப்புலியூர் ஸ்தல வரலாற்றைப் பற்றிய கதையைத் தொடர்ந்தார்…


“சொக்கட்டான் விளையாட்டில் தோத்துப் போயிருந்தாலும், அதை வைஃப் கிட்ட சிவ பெருமான் ஒப்புக் கொள்ளலை. வெற்றி பெற்றது தான் தான்னு பெருமான் சொல்ல, அவர் கண் இரண்டையும் அந்த அம்மா கை வச்சிப் பொத்திட்டாள்.


பிராட்டி செய்த செயலாலே இந்த உலகமே இருண்டு, எந்த அசைவுமில்லாமல் அனைத்து செயல்களும் அப்படி அப்படியே நின்னு போச்சு. அதைப் பார்த்த பிராட்டிக்கு மனசு வருத்தமா போச்சு.


பெருமான்ட்ட தன்னை மன்னிக்கச் சொல்லி வேண்டினாள். அவரோ, இறைவியை பூலோகத்துக்குப் போயி, அங்கிருக்கும் சிவ ஸ்தலங்களை பூசிக்கும்படியும், அப்படிப் பூசிக்கும் போது எந்த ஸ்தலத்தில் இடது கண்ணும் இடது தோளும் துடிக்கின்றதோ, அந்த ஸ்தலத்தில் ஆட்கொள்வதாகச் சொல்லி அனுப்பி வைத்தார்.


அதுபோல் இறைவியும் பல ஸ்தலங்களைத் தரிசித்துவிட்டு இத்தலத்திற்கு வந்து சேர்ந்தாள். இங்க வந்ததும் அவளுக்கு இடது கண்ணும், இடது தோளும் துடித்தது.


அப்படியே இறைவி இத்தலத்திலேயே தங்கிவிட்டாள். அவள் அரூபமாக (உருவமில்லாமல்) இறைவனைப் பூசித்துப் பேறு பெற்ற ஸ்தலம். இறைவன் சித்தர் வடிவம் பூண்டு, மக்களின் துன்பங்களை நீக்கியதாக ஸ்தல புராணம் சொல்லுது அப்பூ!”.


காற்றில் விராலின் பொறியும் வாசனையும், இரசத்தின் மணமும் போட்டிப் போட்டுக் கொண்டு வந்து நாசியைத் தீண்டும் வரை இருவரின் மோன நிலையும் கலையவில்லை.


நொடிகள் நிமிடத்துக்குள் பொதிந்து பொதிந்து, பெருக்கி வைத்துப் பொழுதை விரைய வைத்திருந்தன!
 
  • Love
Reactions: Shanbagavalli

Shanbagavalli

New member
Mar 26, 2018
20
5
3
சென்ற பதிவு கடக்க கஷ்டமா இருந்ததுபா. ஹரி என்ன செய்து சம்மதம் வாங்க போறாங்கனு பார்க்க காத்திருக்கேன். சிரமம் தான் பார்க்கலாம் டாக்டரின் வாய் சாமர்த்தியம் எப்படின்னு.