Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 8 | SudhaRaviNovels

அத்தியாயம் - 8

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
நெருப்பு ரதங்கள் - 8

என்னடி வந்தவளை வான்னு கூட சொல்லமாட்டியே அப்படியே திகைச்சுப்போய் நிக்குறே ? ஆமா இதென்ன போலிஸ் குவார்ட்டர்ஸ்லே தங்கியிருக்கே கல்யாணத்துக்கு வந்தப்போ கூட உங்க அத்தையோட அப்பார்ட்மெண்ட் சென்னையில் திருவான்மையூரில் இருக்கு அங்கேதான் தங்கப்போறோம் குவார்ட்டர்ஸ் எல்லாம் பாதுகாப்பு இருக்காதுன்னு சொன்னீயே இப்போ என்னாச்சு. சுனிதா எங்கே தூங்குறாளா என்று அடுக்கடுக்காய் கேள்விகளைக் கேட்டுவிட்டு குளிர்ந்த நீரைப் பருகியபடியே இன்னைக்கு உன்னை நான் இங்கே பார்ப்பேன்னு நினைக்கவே இல்லை சக்தி. ரொம்பநாளாகவே என் மனதை நிறைய பாரங்கள் அழுத்திக்கொண்டே இருந்தது அதற்கு வடிகால்களே கிடைப்பதில்லை.

பலநேரங்களில் வாழ்வில் காதுகள் மட்டும்தான் தன் திறனை இழப்பதேயில்லை. பிடிக்குதோ பிடிக்கலையோ அநேக நேரங்கள் மெளனப் பூட்டைச் சுமந்தபடியே வாழ்ந்துவிடுகிறோம். கண்ணாடி எப்படி பிம்பத்தை வெளிக்காட்டுகிறதோ அதேபோல் மனதையும் வெளிக்காட்ட கண்ணாடியாய் ஒரு உறவு வேண்டும் அதுதான் நட்பு அதைத்தேடி தேடி அலுத்துட்டேன் சக்தி. உன்னைப் பார்த்தபிறகுதான் எனக்கு சந்தோஷமே. கல்யாணங்கிற உறவு வந்ததுமே குழந்தை எப்போன்னு ஒரு எதிர்பார்ப்பு கொசுறுமாதிரி ஒட்டிக்கிச்சு என்ன செய்ய ? நாலு வருஷம் அந்த பசிக்கு தீனி போட முடியலை. இப்போதான் இந்த வயிறு குளிர்ந்து போச்சு, தேள் மாதிரி கொட்டிகிட்டே இருந்த மாமியார் கூட இப்போ தாங்கு தாங்குன்னு தாங்கிறாங்க. இருந்தாலும் மனசிலே ஒரு நெருடல் சக்தி இதை உன்கிட்டே சொல்லக்கூட ஒரு காரணம் இருக்கு. அந்த ராத்திரி நேர சம்பவத்தை சொல்லி முடித்திருந்தாள். நீ டிப்பார்ட்மெண்ட்லே இருக்கிறவ உனக்குத் தெரியும். பாவம்டி அந்தாளு எத்தனை நல்ல மனுஷன் பாரு. சின்னசின்ன ஸ்கூல் பசங்க அதுங்களை போறவர்றப்ப எல்லாம் ஒரு கும்பல் தொந்தரவு பண்ணிகிட்டே இருந்திருக்காங்க. இவர்தட்டிக் கேட்டு இருக்கார். அதிலே ஒரு பொண்ணு காயத்திரின்னு பேரு அவளுக்கு போதைமருந்தை கொடுத்து பைத்தியமாக்கி அப்பப்பா அவன்பேரில் இந்தாளு கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கார் முதல்நாள். கம்ப்ளைண்டை வாபஸ் வாங்கச்சொல்லி மிரட்டியிருக்காங்க. மனசாட்சியுள்ள மனுஷன் ஒப்புக்கொள்ளவில்லை. அதுக்குப்போய்...அதுக்குப்போய் அந்தாளை துண்டுதுண்டா வெட்டினவங்களுக்கு எல்லாம் பதினைந்து பதினாறு வயசுக்குள்ளத்தான் இருக்கும் சக்தி. ஆனா பாரு அதுக்கு போதை, பொம்பிளை சுகம், கொலைன்னு எத்தனை துவேஷம். என்னால தாங்கலை. கொலைக்கு ஆதாரம் இல்லை இப்போ வரைக்கும் கேஸ் முடியலை, ஆனா எனக்குத்தான் மனசு அடிச்சிக்குது சக்தி.

சில நாட்கள் என்னை அந்த பஸ்ஸாண்டில் பார்த்திருப்பார். அதில் தனியா இருக்கிறேன்னு தெரிந்ததும் என்னை அக்கறையாய் அழைத்துப்போய் விடறேன்னு சொன்ன மனுஷன் இருட்டா இருந்தா கடைப்பக்கம் வெளிச்சமா நின்னுக்கோம்மா என்று சொன்ன மனுஷன் அடுத்த ஷணம் உயிரற்ற உடலாய் சரிந்திருந்ததைப் பார்த்தபோது எப்படியிருந்திருக்கும் யோசிச்சுப்பாரு என்னால எதுவும் செய்ய முடியவில்லை. நேற்று அந்த போதை மருந்து கேஸை பிடிக்கப்போன ஒரு போலிஸ்காரரை வெட்டி கொன்னு இருக்காங்க. இந்த வயித்திலே சுமக்கிறேனே இது பொண்ணோ பையனோ தெரியாது. ஆனா இதை பிறந்து நல்லபடியா வளருமா என்று யோசித்துக் கொண்டே மனதில் ஒரு பயபந்து உருளுது. நாளைக்கு எங்கேயோ தெருமுனையில் போதை மருந்தை கையில் உருட்டி இன்னொரு வயிற்றுப்பிள்ளையை இம்சிக்குமா ? இல்லை யாரோ ஒரு துரோகியின் இம்சைக்கு ஆளாகி பித்துபிடிச்சிப்போகுமோன்னு பயமா இருக்கு. ஏதாவது பண்ணனும் சக்தி. ஆனா என்னாலே என்ன செய்ய முடியும் சொல்லு. என்பிள்ளைக்கு ஏதும் ஆகிவிடக்கூடாதுன்னு மருகுவதைத் தவிர என்று கண்களில் நீர் வகுத்தாள்.

நீ இன்னைக்கு எப்படி தவிக்கிறீயோ அதே நிலைமையில்தான் நானும் இருக்கிறேன் அழகி. சுனிதா இப்போ ....

என்னாச்சு...?

சுனிதாவுக்கும் எப்படியோ போதைமருந்து பழக்கம் ஒட்டிக்கிட்டது. அது அவளோட வாழ்க்கையையே சீரழிச்சி அந்த
அப்பார்ட்மெண்ட்லே கீழ்வீட்டுப் பையனும் அவனின் நண்பர்களும் கண்ணால பார்த்தேன்டி அவளுக்கு எதுவும் தெரியலை. எப்படி பழகினான்னு தெரியலை. அம்மாகிட்டே அவளை பத்திரமா பாத்துக்கறேன்னு சொன்னதை காப்பாத்த தவறிட்டேன். அதிகமான போதை வஸ்து அவளை இந்த நிலைமைக்கு ஆளாக்கிட்டது. காயத்திரி, சுனிதா இன்னும் எத்தனையோ தங்கைகள் இப்படி படுகுழியில விழ காரணமான அந்த பாவிகளை நான் சும்மாவிட மாட்டேன். ஆனா டிப்பார்ட்மெண்ட்லே நான் .... நான்... சாதாரண பிசி என்னால என்ன பண்ண முடியும். வெளியே தெரிந்தா அசிங்கன்னு நைட்டோட நைட்டா அங்கிருந்து குவாட்டர்ஸக்குன்னு வந்திட்டேன். நரகம் அழகி இந்த இரண்டு மாதமும். நீ உன் வேதனைகளை இறக்கணுமின்னு வந்தே ஆனா நான் இப்போதான் என் மனசிலும் ஒரு பாரம் இறங்கியிருக்கு

தோழியின் முதுகைத் தட்டி ஆசுவாசப்படுத்தினாள் கவலைப்படாதே சக்தி இப்போ முதல்ல நாம சுனிதாவை நல்ல நிலைமைக்கு கொண்டு வா, மற்றதை அப்பறம் பார்த்துக்கலாம். அழகி தோழிக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே சக்தியின் அலைபேசி அடித்தது. எடுத்தாள்... எதிர்புறம் என்ன பேசினார்களோ சக்தி போனை அணைத்துவிட்டு அந்தக் கூட்டத்தை கண்டுபிடிக்க ஒரு வழி கிடைச்சிருக்கு அழகி தெளிவா தெரியலை நான் நாளைக்கே டூட்டியில் ஜாயின் பண்ணனும்.

அப்போ சுனிதா....?

சுனிதாவைப் பார்த்துக்க ஒரு வயசான அம்மாவை ஏற்பாடு செய்திருக்கிறேன். நீ உடம்பை பார்த்துக்கோ என்று தோழிக்கு அக்கறையாய் சொல்லவும் அழகியின் கணவன் வரவும் சரியாக இருந்தது. மீண்டும் சுனிதாவின் நனைந்த துணியை மாற்றிவிட்டு, அம்மாவின் படத்தின் முன் நின்று அணைந்திருந்த விளக்கை ஏற்றினாள். கண்களில் நீர் வழிந்தது நிச்சயம் அந்த நீர் தங்கள் கவலைகளை நீக்கும் என்று நம்பிக்கையுடன் காய்நத மலர்ச்சரம் ஒன்று அம்மாவின்படத்தில் இருந்து உதிர்ந்தது.

சபீரின் வயதான உடலில் ஒரு நடுக்கம் புகுந்து கொண்டது. அந்த போலீஸ்வாலா காருக்கு அருகில் குழைவாய் குனிந்து ஏதோ பேசினான். ரஜீவ்வின் கார் நகர முயன்ற சமயம் சட்டென்று அந்த பெட்டிக்கடையில் இருந்து ஒரு பெண் முக்காட்டை நீக்கிவிட்டு ஓடிவந்தாள்.

அஜய்பையா நான்தான் சபீரோட பொண்ணு. எங்கப்பா வாங்கின கடனுக்கு அதிகப்படியா வட்டியும் கட்டிட்டார். ஆனா இப்போ சேட்டு இந்த இடத்தையே எழுதிக்கேட்கிறார். நாங்க பிறந்த மண்ணு திடீர்னு போகச்சொன்னா நாங்க என்ன பண்றது ? நீங்கதான் எப்படியாவது சேட்டுகிட்டே சொல்லி பிரச்சனையை தீர்த்து வைக்கணும். ப்ளீஸ் பையா அவள் கண்களில் கண்ணீர் பெருகியது.

அஜய் ரஜீவ்வைப் பார்த்தான். அவன் கண்கள் பெட்டிக்கடைக்குள் நடுங்கிக்கொண்டு நின்றிருந்த சபீரை நோக்கியது குடூரமாய். அவசரஅவசரமாய் வந்து மகளை உள்ளே இழுத்துசென்று அடித்து நொறுக்கினான். நிறுத்து என்று அஜயின் குரல் ஆக்ரோஷமாய் வந்தது.