Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் 7 | SudhaRaviNovels

அத்தியாயம் 7

kohila

Moderator
Staff member
Mar 26, 2018
103
13
63
ன்று வழக்கம் போல் கோயிலுக்கு சென்ற போது, அரசு அதிகாரிகள் சிலர் பரப்பரப்பாக ஓடுவதும் வருவதுமாக இருக்க, வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசாங்க வாகனத்தை பார்த்த அவள் கண்களோ ஆரிஃபை தேடியது.


சாமி தரிசனம் முடிந்து பிரகாரத்தை சுற்றி வரும் போது, இரும்புக் கம்பிகளால் ஆன கதவைத் தாண்டி, ஒரு கையை பேன்ட் பாக்கெட்டிலும், மறுக்கையின் விரல்களால் செல்ஃபோனில் ஏதோ டைப் பண்ணியபடியும், தூணில் சாய்ந்து நின்றவனை பார்த்ததும், உடலெங்கும் சிலிர்ப்பு ஓடி மறைய, தனக்குள் ஏற்படும் மாற்றத்தை எண்ணி வியந்தவாறு, அவன் கண்களில் இருந்து மறைவதற்காக சட்டென்று ஒரு தூணில் சாய்ந்து நின்றாள்.

‘இவ்வளவு நேரமும் அவனை தேடிய மனது ஏன் இப்படி?’ என்று புரியவில்லை அவளுக்கு. தன்னை மீறி அரும்பிய புன்னகையுடன் சுய சிந்தனையில் இருந்தவளை அவள் கைபேசியின் அதிர்வு நிகழ்வுக்கு கொண்டு வந்தது.

ஆரிஃப் குறுஞ்செய்தி அனுப்பியதாக பேசியின் திரைச் சொல்ல, அதை படிப்பதற்குள், அவளுக்குள் படபடப்பு.

“ஹோய்! இங்கே வா” இவ்வளவு தான். தமிழில் தான் இருந்தது.

இவன் எப்போது என்னைப் பார்த்தான்? ஏனோ அவன் அருகில் செல்ல தயக்கமாக இருந்தது.

பிரம்மன் திருக்கோயிலில் இருபது வருடங்களுக்கு பின், பல தடைகளை மீறி, இன்று கலெக்டர், தாசில்தார், ஊர் பெரியவர்கள், பொதுமக்கள் முன்னிலையில் உண்டியலை திறந்தனர்.

ஹர்ஷிதா அந்த தூணின் மறைவிலிருந்து வெளியே வந்து அவனைப் பார்த்தாள். அவன் இவளைப் பார்க்க வில்லை. கைபேசியை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஹர்ஷி!!!! இது உனக்கு பழக்கமான கோயில். சுற்றி நிற்பவர்களில் பாதிபேர் உனக்கு சொந்தகாரர்களாகக் கூட இருக்கலாம். பயப்படாமல் வா” என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, நிமிர்ந்து அவளைப் பார்த்து சிறு புன்னகையை சிந்திவிட்டு, தன் அருகில் நின்ற அதிகாரியிடம் பேச ஆரம்பித்தான்.

‘சொந்தகாரங்களை பார்த்து தான் பயமே!’ என்று முணுமுணுத்தவள், பயத்தை மீறி அவனோடு பேச வேண்டும் என்ற ஆவல் அதிகமாக, அவனை நோக்கிச் சென்றாள். அவன் அருகில் நின்றிருந்த அதிகாரியே இவளுக்காக வந்து கதவை திறந்து விட்டார்.

சல்லடை வைத்தும், ஒருபுறம் நோட்டுக்களை எண்ணிக் கொண்டும், ஃபாரீன் கரன்ஸிகளை சரிப் பார்த்துக் கொண்டும் இருந்தவர்கள் மேல் இருவர் கண்களும் இருந்தாலும், அருகருகே நின்றிருந்த இருவர் எண்ணங்களும் மற்றவர்களை சுற்றியே வந்தது. முதலில் அந்த மௌனத்தை கலைத்தது ஹர்ஷிதா தான்.
 
  • Love
Reactions: SudhaRavi50

kohila

Moderator
Staff member
Mar 26, 2018
103
13
63
"எப்படி இவ்வளவு கூட்டத்திலும், நான் வந்ததை நோட் பண்ணீங்க?" என்றதும், நிமிர்ந்துப் பார்த்து புன்னகைத்தவன்,

"நம்ம ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்ணது ஞாபகமிருக்கா?” என்றான்.

“போலீஸ் ஸ்டேஷன்க்கு வர வைச்சீங்களே எப்படி மறக்கும்?" என்று ஹர்ஷிதா புன்சிரிப்புடன் சொல்ல, மகாமகம் அன்று பெரிய திரையில் தோன்றி மனதை நிறைத்தவளை நினைவுக்கு கொண்டு வந்தவன்,

“ஹ்ம்ம்ம்ம்… அப்படியா?” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி, கட்டுப்படுத்த முடியாத புன்னகையுடன் அவளைப் பார்க்க, அந்த பார்வையின் விளக்கம் புரியாமல் விழித்தாள்.

"இது என்ன கோயில் ஹர்ஷிதா?" என்றான். ஆனால் பார்வையோ பணம் எண்ணுபவர்களின் மீதே இருந்தது.

"பிரம்மன் கோயில். உலகமே அழியும் பிரளயம் வந்த போது...." என்று அவள் அந்த கோயில் புராணத்தை ஆரம்பிக்க, சட்டென்று நிறுத்த சொல்வது போல, அவன் கையை, அவள் உதடு அருகே கொண்டு சென்றான். சற்று இடைவெளி விட்டுதான் என்றாலும் அவன் விரல்கள் கொஞ்சமாக உரச, முதன்முதலில் அவன் விரல் பட்ட தருணத்தை பொக்கிஷமாக மனதில் சேமித்தபடி, நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

"எனக்கு இந்த டீட்டெய்ல்ஸ் வேண்டாம். நாம் சொல்ற ரெக்வெஸ்ட்டை இந்த காட் கன்சிடர் பண்ணுவாரா?" அவன் கை இன்னும் அப்படியே இருக்க, ஹர்ஷிதாவின் கண்கள் முக்கியமான நிகழ்வுக்கு தயாராகும் ஆர்வத்தை வெளிப்படுத்த. அவள் கண்களை ஆழ்ந்து நோக்கியவன்,

"நீ என்னோட மனைவியாகணும் ஆசைப்படுறேன். என் ஆசையை இந்த காட் நிறைவேற்றுவாரான்னு கேட்டு சொல்லு" என்று தன் விருப்பத்தை இந்து கடவுளின் துணைக் கொண்டு தெரிவித்தான் நம் நாயகன் ஆரிஃப்.

சுற்றி எல்லோரும் இருக்கும் போது, உண்டியல் திறப்பு பிஸியில் மற்றவர்கள் இவர்களை கவனிக்க வில்லை என்றாலும், என்ன பதில் சொல்வதென்று புரியாமல், பேச்சே வராமல் அவனையே பார்க்க, காதல் சொல்வதை கடமை போல் அவளிடம் சொன்னவன், இவள் பதிலுக்காக காத்திருந்தது போல் தெரியவில்லை.

அந்நேரத்தில், அவர்கள் அருகில் வந்த கோயில் நிர்வாகி ஒருவர்,

"சார்!!! ரொம்ப நன்றி சார்" என்று ஆரிஃபை பார்த்துக் கையெடுத்து கும்பிட்டார்.

"எதுக்கு சார்" என்று வேகமாக அவர் கைகளை விலக்கும் போதே, இன்னொருவர் வந்து பழங்கள், வேட்டி சட்டை நிரம்பிய தாம்பூல தட்டை அவரிடம் நீட்டினார்.

"சார், பிரஸ் மக்களை வைத்துக் கொண்டு லஞ்சம் த்ரீங்களா?" என்றான் சிரித்துக் கொண்டே.

"அப்படி இல்ல சார். எத்தனை வருட காத்திருப்பு! உங்களால் தான் பல வருடங்களாக திறக்கபடாத உண்டியலை திறந்திருக்கோம். இனிமேல் கோயில் பராமரிப்பு வேலைகள் தடையில்லாமல் நடக்கும். சீக்கிரம் கும்பாபிஷேகம் பண்ண போறோம். அந்த சந்தோஷத்தில் எங்களால் முடிந்த சின்ன அன்பளிப்பு. வாங்கிக்கோங்க சார்."

"இதை உங்கள் கோவிலில் உள்ள பெரியவர்களுக்கு செய்ங்க” என்று தட்டைக் கையில் தொடாமலே அவரிடம் பணிவாகச் சொன்னான். தன் மதத்தின் கோட்பாடுகளை மீறாமலும், அவர்களை காயப்படுத்தாமலும் சொல்ல வேண்டியக் கட்டாயத்தை சரியாகவே செய்தான்.

மேலும் அங்கிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு, படிக்கட்டுகளில் இறங்கியவன், ஹர்ஷிதாவை திரும்பி பார்த்து சிறு புன்னகையுடன் விடைபெற்றான்.
 
  • Love
Reactions: SudhaRavi50

kohila

Moderator
Staff member
Mar 26, 2018
103
13
63
அவன் சொல்லிவிட்டு போய்விட்டான். இவள் தான் மந்திரித்து விட்டது போல் இறங்கினாள். அங்கிருந்தவர்களின் முழுக் கவனமும் உண்டியலில் எவ்வளவு பணம் இருக்கிறது என்ற ஆர்வத்தில் இருக்க, எதையும் கண்டுக் கொள்ளாமல் கூட்டத்தில் இருந்து வெளியேறினாள்.

வீட்டினுள் நுழைந்தும், ஹாலிலேயே அமர்ந்திருந்த அம்மாவிடம் கூட எதுவும் சொல்லாமல் தன் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

அவனை சந்தித்த நாள் முதலாய் தோன்றிய ஈர்ப்பு, அவன் வீட்டிற்கு சென்றபோது காதலை உணர்ந்த தருணம், இப்போழுது காதலை சொன்ன பின் இனி அவனின்றி என் வாழ்வில் எதுவுமில்லை என்ற நிலைக்கு அவளைக் கொண்டு வந்து விட்டது.

'எப்படி திடீர்ன்னு சொன்னான்? அதான் ஆண்டுவிழா அன்றே அலர்ட் கொடுத்தானே!!! எத்தனை பேர் நாங்கள் பேசியதை பார்த்திருப்பார்களோ?' அப்போது அவன் வார்த்தைகளில் மெய் மறந்து நின்று விட்டு இப்போது யோசிக்க ஆரம்பித்தாலும், ஒரு வித புது உணர்வு தன்னை ஆட்கொண்டதை அவளும் உணர்ந்தே இருந்தாள்.

தனியாக சிரித்தாள்!!!! தன்னை மறந்து அவனின் நினைவுகளை சுமந்து நின்றவள். அவள் அறைக்கதவை தட்டி விட்டு, தட்டில் உணவுடன் அவளருகே வந்த அன்னையைப் பார்த்து, உடனேயே நிகழ்வுக்கு வந்தாள்.

"என்னம்மா இது? நான் டைனிங் ரூம்க்கு வந்திருப்பேன் இல்ல" என்றவளுக்கு பதில் அளிக்காமல், அவளுக்கு ஊட்டி விட ஆரம்பித்தார் வைதேகி.

இவ்வளவு பெரிய வீட்டில் இருவர் மட்டுமே இருப்பதாலும், இருவருமே பள்ளியை கவனித்துக் கொண்டு பிஸியாக இருப்பதாலும், இரவு மட்டுமே சேர்ந்து உண்ண முடிவதாலும் ஒருநாள் கூட இப்படி அறையில் தனியாக சாப்பிடதில்லை. அதனாலேயே திரும்பவும் கேட்டாள். அவளுக்கு ஊட்டிவிடுவது ஒன்றையே கடமையாகச் செய்துக் கொண்டிருந்த வைதேகி

"உன்னை எத்தனை தடவை கூப்பிட்டேன். நீதான் வரல" என்று கையிலிருந்த தட்டைப் பார்த்துக் கொண்டே சொன்னார்.

'அந்த அளவிற்கு தன்னிலை மறந்து அவனையே நினைத்துக் கொண்டிருந்தேனா?' என்று தன்னையே கடிந்துக் கொண்டவள், "நீ சாப்பிட்டியாம்மா?" என்று அவரிடமிருந்து தட்டை வாங்கி அவருக்கே ஊட்டி விட்டாள். திடீரென்று,

"சாரிம்மா" என்றவள், அவருக்கு ஊட்டிவிட்டுக் கொண்டே,

"இன்னைக்கு கோயிலுக்கு போனேனா! அங்கே ..” என்று நிறுத்தி, சில நிமிடங்கள் தயங்கியவள், பின், ”எக்ஸ்பெக்ட் பண்ணது தான்.. இன்னைக்கு அவர் ப்ரப்போஸ் பண்ணிட்டார்"

கல்லூரிக்கு வந்த காலத்தில் இருந்து இது மாதிரி நடப்பதும் உடனேயே அவள் அன்னையிடம் சொல்லிவிடுவதும் எப்பொழுதும் நடப்பதுதான். இதுவரை எதையும் தன் அன்னையிடமிருந்த மறைத்ததில்லை. பின், வைதேகி அந்த பையனுக்கு அறிவுரை சொல்லி இவள் பக்கமே தலைக்காட்டாதது போல் செய்து விடுவார்.

அதுப்போல் தான் இன்றும் என்றெண்ணிய வைதேகி, "அவ்ளோதானா?" என்று இதமாக புன்னகைத்தவர், "என் அம்மாக்கிட்ட கேட்கணும்ன்னு இந்த பையன்கிட்டேயும் சொல்லிட்டியா?" என்று சிரித்துக் கொண்டேக் கேட்டதும், ஒரு நிமிடம் அதிர்ந்த ஹர்ஷிதா,

"சாரி ம்மா. எனக்கு அந்த நேரத்தில் உன் ஞாபகமே வரல" என்றாள் தலை நிமிராமல்.

மகளே உலகம் என்று வாழ்ந்துக் கொண்டிருந்த வைதேகிக்கு, ஹர்ஷிதாவின் வார்த்தைகளை அவ்வளவு இலகுவாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. 'என்னையே மறக்க வைத்து விட்டானா?' என்ற சராசரி அன்னையின் எண்ணம் தலை தூக்க, எதுவும் சொல்லாமல் தன் அறைக்கு சென்று விட்டார். இவள் பின்னாலேயே சென்று அறைக் கதவை தட்டிப் பார்த்தும் திறக்க வில்லை.

வெகுநேரம் "சாரிம்மா. ப்ளீஸ் பேசும்மா" என்று அழுததில் அவள் அழுகையை பொறுத்துக் கொள்ள முடியாமல் கதவை திறந்தவர்,

"போய் தூங்கு. காலையில் பேசிக்கலாம்" என்று அனுப்பி விட்டார். அந்த பேச்சே அவளுக்கு போதுமானதாக இருக்க திரும்பவும் சந்தோஷத்துடன் தன் அறைக்குள் வந்தவளின் நினைவு முழுவதும் ஆரிஃப் தான் நிறைந்திருந்தான்.
 
  • Love
Reactions: SudhaRavi50

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
274
268
63
இவரு என்ன இவ்வளவு வேகமா இருக்கார் கோகி..
 
  • Love
Reactions: kohila

kohila

Moderator
Staff member
Mar 26, 2018
103
13
63
இவரு என்ன இவ்வளவு வேகமா இருக்கார் கோகி..
அப்புறம் கார்த்திக் மாதிரி வில்லன் வந்துட்டா என்ன பண்றது அக்கா:ROFLMAO:. தேங்க் யூ அக்கா