Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 6 | SudhaRaviNovels

அத்தியாயம் - 6

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
217
190
43
அத்தியாயம் – 6

அதுவரை எந்த பயமும் இன்றி வந்தவளுக்கு இப்போது இருதயம் வாய் வழியாக வந்து விடுமோ என்கிற அளவில் எகிறி குதிக்க ஆரம்பித்திருந்தது.

உயிர் பயத்தில் அவள் வேகமாக ஓட, அவர்கள் மூவரும் முதலில் ஒன்றாக அவளை துரத்திக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் அவளை தப்பிக்க விட்டுவிடுவோமா என்கிற பயத்தில் ஆளுகொரு திசையில் பிரிந்து சுற்றி வளைத்து விட்டனர்.

நால்வரின் நடுவிலும் சிக்கிக் கொண்டவள் பயத்தில் அழுகையுடன் “ப்ளீஸ்! என்னை விட்டுடுங்க!” என்று கெஞ்ச ஆரம்பித்தாள்.

ராஜேஷோ அவளது முகத்தை பார்த்துக் கொண்டே சற்றே முன்னேறி “ஹேய் ரத்னா! பயப்படாதே! இவங்க என்னோட பிரெண்ட்ஸ் தான். உன்னைப் போலவே அவங்களும் அவரை பார்க்க வந்தவங்க தான்” என்றான் மெல்ல நடந்து கொண்டே.

அவளோ பின்னே நகர்ந்து கொண்டே “இல்ல ராஜேஷ். நீ பொய் சொல்ற. எனக்கு பயமா இருக்கு” என்றாள் கண்ணீருடன்.

பட்டென்று எட்டி அவளது கைகளைப் பற்றி இழுத்தவன் “நம்பு ரத்னா! பயப்படாதே! எல்லோரும் உன்னைப் போல வந்தவங்க தான். வா! போகலாம்” என்று அவளது தோளில் ஒரு அழுத்தம் கொடுத்து அழைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

மற்றவர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக அவனை தொடர்ந்தனர். ரத்னாவோ அவன் சொன்னதை நம்பவும் முடியாமல் அவனுடன் செல்ல மனமில்லாமல் சென்றாள். சுமார் பதினைந்து நிமிட நடைக்குப் பிறகு இருளடைந்த நடுப்பகுதிக்கு வந்திருந்தனர். இருளுக்கு நடுவே தூரத்தில் சிறிய வெளிச்சமொன்று தெரிந்தது.

அதை பார்த்ததும் சற்றே பயம் விலகி அவன் சொல்வது உண்மை என்று நம்பி அவனை தொடர்ந்தாள். மௌனமாக அனைவரும் அந்த பாழடைந்த கட்டிடத்தை நோக்கி சென்றனர். உயரமான படிக்கட்டுகள் கொண்ட அந்த கட்டிடத்தின் உள்ளே ஒவ்வொருவராக சென்றனர். அமானுஷ்யம் சூழ்ந்த அந்தப் பகுதி அவளை இன்னும் மிரட்டியது.

அவளது உடலின் வியர்வை நாளங்கள் மொத்தமாக ஊற்றெடுக்க, எதிரே தெரிந்தவற்றை வெறித்தவண்ணம், உமிழ் நீரை கூட விழுங்காது நின்றாள். அப்போது கட்டிடத்தின் மையப் பகுதியில் இருந்து ஒரு வயதான மனிதர் வந்து தலையசைக்க, அனைவரும் அவரை தொடர்ந்தனர்.

கட்டிடத்தின் உள்பகுதியில் தரையின் ஒரு பகுதியை நகர்த்தி ஒவ்வொருவராக இறங்க ஆரம்பித்தனர். அதை கண்டு நகர மறுத்தவளை வலுகட்டாயமாக தூக்கி அதனுள் இறக்கி விட்டு தானும் தொடர்ந்தான் ராஜேஷ்.

எங்கும் இருள் சூழ, வவ்வால்களின் சப்தமும், அதன் கழிவுகளின் நாற்றமும் குடலைப் பிரட்ட, தன்னை அறியாமல் ராஜேஷின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள். அவனோ நேர்கொண்ட பார்வையுடன் எதிரே தெரிந்தவற்றை உற்று நோக்கியபடி சென்று கொண்டிருந்தான்.

மற்றவர்களை மெல்ல திரும்பி பார்க்க அவர்களும் அவனை போலவே நேரே பார்த்து பொம்மை போல சென்று கொண்டிருந்தனர். இருள் சூழ்ந்த பாதையில் பத்து நிமிடங்களுக்குப் பிறகு திடீர் என்று வெளிச்சம் பரவியது.

திடீர் வெளிச்சம் வந்த இடத்தை உற்று நோக்கியபடி மெல்ல அடியெடுத்து வைத்தால். அதுவொரு மிகப் பெரிய மண்டபம். சுற்றிலும் மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருக்க, அங்கு அத்தனை கூட்டத்தை சற்றும் எதிர்பார்க்கவில்லை. நடுநிசி நேரத்தில் அத்தனை பேர் அங்கு என்ன செய்கிறார்கள் என்று அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த திசையை பார்த்தாள். அங்கு மிகப் பெரிய சிம்மாசனம் ஒன்று இருந்தது. அதன் பின்னே இருந்த சுவற்றில் சிலுவை தலைகீழாக மாட்டி வைக்கப்பட்டிருந்தது.

அதை பார்த்ததும் எச்சில் தொண்டையை தாண்டி இறங்க மறுக்க, விழிகளை மீண்டும் கூட்டத்தின் மீது செலுத்தினாள். அங்கிருந்தவர்கள் முகங்கள் அனைத்திலும் முகமூடிகள் இடப்பட்டிருந்தது. அனைவரும் எதையோ ஒன்றை ஜபித்துக் கொண்டிருக்க, பார்க்கவே படுபயங்கரமாக இருந்தது.
 
  • Like
Reactions: saru

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
217
190
43
அப்போது தன்னருகில் நின்றவர்களை பார்க்க, அவர்களும் தங்களின் முகத்தில் முகமூடியை அணிந்திருந்தனர். அவள் மட்டும் ஏனோ தனியாக நிற்பது போல இருக்க, நெஞ்சுக்குழி ஏறி இறங்க, சுற்றுப்புறத்தை பார்த்தாள். அப்போது சிம்மாசனத்தின் முன்னே சடாரென்று ஒரு திரை விழ, அதிலிருந்த உருவத்தைப் பார்த்து தன்னை மறந்து ஓரடி பின்னே நகர்ந்தாள்.

மற்றவர்களோ ஏதோ ஒன்றை முணுமுணுத்தபடி எதிரே தெரிந்த உருவத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். மீண்டும் அவளது பார்வை அந்த திரையின் மீது படிய, அதிலிருந்த உருவம் ஆட்டுத்தலையும், மனித உடலுமாக அவளை பயமுறுத்தியது.

அப்போது அந்த திரையின் அருகே ஒருவர் வந்து நிற்க, அவரை பார்த்ததும் அனைவரும் “வருக தளபதியே!” என்று ஒரே குரலில் வரவேற்றனர்.

அந்த பழுப்பு நிற கண்கள் கொண்ட மனிதரின் பார்வை ஒவ்வொருவரின் மீதும் படிந்து விலகியது. அவள் மீதும் சற்று அதிகமாகவே படிந்தது. இறுதியாக அவரது கண்களில் ஒரு திருப்தியும் இருந்தது. அவரது பார்வை அவளது முதுகுத்தண்டை சில்லிட வைக்க, தனக்கு ஏதோ நடக்கப் போகிறது என்பதை அந்த நிமிடம் உணர்ந்தாள்.

அப்போது அனைவரையும் பார்த்த அந்த மனிதர் “இன்று நமது காவலனுக்கான பிரசாதம் வந்திருக்கிறது. அவரை குளிர்வித்து இந்த உலகத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்” என்றதும் அனைவரும் “ஆம்! ஒப்படைக்க வேண்டும். சீக்கிரம் பிரசாதத்தை அவருக்கு படையுங்கள்” என்று கோஷமிட ஆரம்பித்தனர்.

தன்னையும் அறியாமல் அவளது கன்னங்களில் கண்ணீர் வழிய ஆரம்பிக்கும் நேரம், அவளது இருபுறமும் இருவர் பாதுகாப்பாக வந்து நிற்க, அவளது கரங்களைப் பற்றி முன்னே அழைத்துச் செல்ல தொடங்கினர். அவள் முரண்டு பிடிக்க முயன்றாலும் முடியாமல் போக, அவர்களின் இழுப்பிற்கு சென்றாள்.

அவளை கூட்டத்தின் நடுவே சென்று நிறுத்த பயத்துடன் அவளின் பார்வை ராஜேஷை பார்த்து “ப்ளீஸ்! என்னை காப்பாற்று ராஜேஷ்!” என்றாள் கதறலுடன்.

அவள் பயத்தில் கதற ஆரம்பித்ததும் அதுவரை மெல்லிய குரலில் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தவர்கள் சப்தமாக பாட ஆரம்பித்தனர். பழுப்பு நிற கண்கள் கொண்ட மனிதர் அவள் அருகே நெருங்கி வந்து உதட்டில் விரலை வைத்து சப்தமிடாதே என்றவர் “உனக்கு இந்த பிறவியில் பெரும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. புதிய உலகத்தின் அரசனுக்கு உனது உதிரத்தை அளித்து அவனை உயிர் பெற வைக்கப் போகிறாய்!” என்றார் அழுத்தமாக.

அவர் அப்படி சொல்லவும் அவள் துள்ளிக் கொண்டு தப்பிக்க முயல ஆனால் அந்த கிங்கரர்களிடம் இருந்து அவளால் தப்பிக்க முடியவில்லை. அப்போது அழுத்தமான காலடி சப்தம் கேட்க, பாடல் ஒலியின் கோஷம் பெரிதாகியது.

நீண்ட கருப்பு அங்கி அணிந்து உடலில் ஒரு திமிருடன் நடந்து வந்து நின்ற ஜாக் வெஸ்லியின் பார்வை முழுவதுமாக அவள் மீதே இருந்தது. அவனது பார்வையின் வீச்சு அவளுக்கு அருவெறுப்பை தர, உடல் வெடவெடவென்று நடுங்க ஆரம்பித்தது. அதை கண்ட பழுப்பு நிற கண்கள் கொண்ட மனிதர் ஒருவித கண்டிப்புடன் “ஜாக்! நீ எதுக்கு வந்த?” என்றார்.

அவரை திரும்பி பார்த்தவன் நக்கலான சிரிப்புடன் “இந்திய பிரசாதத்தை சுவை பார்க்க” என்றான்.

கடுமையாக முறைத்து “நீ கிளம்பு ஜாக்! நாம இங்கே இன்னும் கால் ஊன்றவே இல்லை. இதெல்லாம் இப்போ ஆரம்பிக்காதே” என்றார்.

“நோ! சீக்கிரம் உங்கள் வேலையை முடிங்க. என்னுடைய கட்டளையை நிறைவேற்ற வேண்டிய இடத்தில் இருப்பது நீங்கள் தான். சீக்கிரம்! ஐயம் வெயிடிங்!” என்று கூறி விட்டு தள்ளிச் சென்று நின்று கொண்டான்.

அவர்களின் சம்பாஷனை அவளை மேலும் பயம் கொள்ள செய்ய, முரண்டு பண்ண ஆரம்பித்தாள். ஜாக்கிடமிருந்து பார்வையை திருப்பியவர் தரை அதிராமல் நடந்து வந்து ரத்னாவின் அருகே நின்றார்.

அவரின் அருகாமையை கண்டு பயந்து போனவள் அவரின் பார்வையை சந்திக்க, சற்று நிமிடத்தில் அப்படியே அருகே இருந்தவனின் கைகளில் தொய்ந்து விழுந்தாள். கண்களால் அவளை அந்த சிம்மாசனத்தின் அருகே தூக்கி வர சொல்லிவிட்டு முன்னே நடந்தார்.

அங்கு ஒரு மேடை போடப்பட்டிருக்க, அதிலொரு கருப்பு துணி விரித்து வைக்கப்பட்டிருந்தது. ரத்னா அதில் படுக்க வைக்கப்பட்டாள். உணர்விழுந்து கிடந்த ரத்னாவின் மீது மற்றொரு பொன்னிற துணி போர்த்தப்பட்டது. அவளது வலது கரம் மட்டும் வெளியே தெரியுமாறு வைக்கப்பட்டது.

பழுப்பு நிற கண்களின் சொந்தக்காரர் அந்த சிம்மாசனத்தின் முன் குனிந்து ஏதோ மந்திரங்களை ஜபிக்க, அந்த இடமே அமானுஷ்யத்தின் பிடியில் சிக்க ஆரம்பித்திருந்தது. சிறிது நேரத்திற்கு பிறகு ஒருவன் சிறிய கத்தி ஒன்றை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தான்.


அதை கையில் வாங்கி அங்கிருந்தவர்களிடம் காண்பிக்க, எல்லோரும் இவ்வுலகின் காவலனுக்கு படையல் என்று சப்தமிட ஆரம்பித்தனர். கண் மூடி ஒரு நிமிடம் தியானித்தவர், தன் எதிரே இருந்த ரத்னாவின் கரத்தை எடுத்து அவளது நாடியைப் பற்றி மெல்ல கத்தியால் கோடிழுக்க ஆரம்பித்தார். மெல்ல உதிரம் அவளது உடலில் இருந்து வெளியேற ஆரம்பிக்க, ஒருவன் அதை கண்ணாடி டம்ளரில் பிடிக்க ஆரம்பித்தான்.
 
  • Like
Reactions: saru

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
217
190
43
ஒரு முழு கண்ணாடி டம்ளர் முடிந்து அடுத்து என, அவளது ரத்தம் முழுவதும் வெளியேற்றப்பட்டது. உடல் வெளுத்து உயிர் பிரிந்து கொண்டிருந்தது.

சிம்மாசனத்தின் நடுவே ஒரு டம்ளர் வைக்கப்பட, மற்றதை எடுத்து அங்கிருந்தவர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

அனைவரும் அதை வாங்கி ஒன்றாக மேல் நோக்கி உயர்த்தி “நம் காவலன் இவ்வுலகில் நுழைய அவனுக்கான முதல் பிரசாதம்...ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று கோஷமிட்டு அதை குடிக்க ஆரம்பித்தனர்.

அதை தொடர்ந்து அங்கு ஏதோவொரு வித்தியாசமான இசை ஒலிக்கத் தொடங்க, அனைவரும் வெறி பிடித்தவர்கள் போல ஆட தொடங்கினர். அப்போது ஜாக் மெல்ல ரத்னாவின் அருகே சென்று அவளது மூக்கின் அருகே கையை வைத்து பார்த்தான். இன்னும் சிறிது உயிர் அவள் உடலை ஒட்டிக் கொண்டிருந்தது.

சட்டென்று அவளை தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

அதே நேரம் திரிசூலம் மலையடிவாரத்தின் கீழே, டார்ச் லைட்டுடன் ஐந்து பேர் அந்த அடர்ந்த காட்டுப்பகுதியை சல்லடை போட்டு சலித்துக் கொண்டிருந்தார்கள். அதில் முக்கியமானவன் சிவதாஸ்.

“தாஸ்! நீங்க சொன்ன மாதிரி எதுவும் வித்தியாசமா தெரியலையே?’

கையிலிருந்த டார்ச்சை அவன் மீது அடித்தவன் “இந்த சிவதாஸ் எதையும் விசாரிக்காம சொல்ல மாட்டான் பிரதீப். நான் இங்கே வருவதற்கு முன்னே இதை பற்றி நிறைய விசாரித்தேன். ஒரு ஆறு மாதமாக இங்கே சந்தேகப்படும்படியான நடமாட்டங்கள் இருப்பதாக தெரிந்தது”.
“ஸ்மக்லிங்க்காக இருக்குமோ?”

“நோ ஐடியா” என்றபடி மீண்டும் அந்த இடத்தை ஆராய ஆரம்பித்தான்.

எங்கள் குரல் இயக்கத்தின் இருப்பிடத்தில் சிவதாஸ் பற்றிய செய்தியை தெரிந்து கொண்டு சற்றே குழப்பத்தில் அமர்ந்திருந்தால் சஞ்சலா.

அவனது அன்னைக்கு உடலநல குறைவு ஏற்பட்டதால் மூன்று மாத விடுப்பு எடுத்துக் கொண்டு சென்று இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதுவரை கல்பனா அறிவழகன் அவரது பணிகளை தொடர்வார் என்றும் ஊடங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அங்கிருந்த மூவரின் உள்ளங்களிலும் நிறைய சந்தேகங்கள், கேள்விகள் சுற்றிக் கொண்டிருந்தன.

“இதென்ன சிவதாஸ் லீவில் போயிட்டான்னு சொல்றாங்க?” என்றான் பார்த்தி.

அப்போது குணாளனின் எண்ணிற்கு அழைப்பு வர, அதை எடுத்து வைத்தவன் “சொல்லுங்க ஜி! உண்மை தானா? அப்போ நாங்க அந்த அரசியல்வாதி பையனை தூக்கிடலாமா?”

“அவசரப்படாதே குணா! எனக்கு தெரிஞ்சு இது நம்பகமான தகவல் தான். இருந்தாலும் இரெண்டொரு நாள் வெயிட் பண்ணி பார்த்திட்டு தகவலை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு வேலையை தொடங்கலாம்”.

“சரிங்க ஜி”.

அவன் போனை வைத்ததும் எழுந்து நின்ற சஞ்சலா “என்னால அவனை நம்ப முடியல குணா. அவன் என்னவோ ப்ளே பண்றான். நம்மள வளைத்து பிடிக்க இதுவொரு ட்ராப்ன்னு தோணுது” என்றாள்.

அதை ஒத்துக் கொண்ட பார்த்தியும் “எனக்கும் அது தான் தோணுது குணா” என்றான்.

அதற்கு மறுப்பாக தலையசைத்தவன் “எனக்கென்னவோ இதில் வேற ஏதோ இருக்குன்னு தோணுது. பார்ப்போம்...ரெண்டு நாள் தானே...அதுக்குள்ள உண்மை தெரிஞ்சிடும்” என்றவன் சஞ்சலாவின் பக்கம் திரும்பி “நீ ஒன்னு செய்! அந்த பிரபு இருக்கானே அவனை உன் கண்காணிப்பில் வை. ஆனா எதுவும் செய்யாதே. நான் சொல்லும் வரை” என்றான்.

“ஓகே! நான் பார்த்துக்கிறேன்” என்றவள் அங்கிருந்து வெளியேற, பார்த்தியிடம் ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொண்டு அவனும் அங்கிருந்து சென்றான். அவன் சொல்லி சென்றவற்றை எல்லாம் ஏற்பாடு செய்து விட்டு தக்க நேரத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

சுரங்க அறையில் உடலின் உதிரத்தையும், மானத்தையும் ஒருங்கே இழந்து உயிர் பறவை மெல்ல கூட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தது. ஜாக் வெஸ்லி உயிரை விட்டுக் கொண்டிருக்கும் பெண்ணிடம் தனது இச்சையை தீர்த்துக் கொண்டிருந்தான்.

தனது களியாட்டங்களை எல்லாம் இறந்த உடலிலும் நடத்தி முடித்துவிட்டு அவ்வுடலை எடுத்துச் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த ரசாயன கலவை நிரப்பபட்டிருந்த குடுவைக்குள் போட்டு மூடி விட்டான்.

சற்று முன்னே அவனது இச்சைக்கு உள்ளான அந்த உடலானது ரசாயன கலவையில் கரைந்து போனது.
 
  • Like
Reactions: saru