அத்தியாயம் – 6
விடிந்ததுமே அவசரமாக கோவிலுக்கு கிளம்பிச் சென்றாள். பேத்தி சோர்ந்த முகத்தோடு கோவிலுக்குச் செல்வதை பார்த்துக் கொண்டிருந்த பாட்டிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இந்த வரனாவது அவளுக்கு தடையில்லாமல் கூடி வர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டார்.
சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு அங்கிருந்த பெட்டிக்கடையில் சென்று போன் பேச வேண்டும் என்று அனுமதி கேட்டு அவனுக்கு முயற்சி செய்தாள். அந்தக் கடையின் முதலாளிக்கு அவள் யார் என்று தெரியுமாதலால், போன் பேசி முடிக்கட்டும் என்று கடையின் பின் பக்கத்திற்கு சென்று விட்டார். அதே சமயம் அவர் மனதில் கேள்வி எழாமல் இல்லை. வேலன் ஐயா பொண்ணு இங்கே வந்து எதுக்கு போன் பண்ணுது? பெரிய இடத்து விவகாரம் நமக்கு எதுக்கு என்று தன்னை தானே திட்டிக் கொண்டு அமர்ந்து விட்டார்.
முதல்முறை அடித்தபோது ரிங் போகவே இல்லை. விடாது அடுத்த முறை அடித்த போது தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார் என்று செய்தி வந்தது. அதைக் கேட்டதுமே அவளது மேனி லேசாக நடுங்கத் தொடங்க, மீண்டும் இரு முறை முயற்சிக்கவும் அதே செய்தி தான் சொல்லப்பட்டது. கண்கள் கலங்கி உதடுகள் துடிக்க, வந்த அழுகையை அடக்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பியவளின் மனம் முற்றிலுமாக உடைந்து போய் விட்டது.
பெண் பார்க்க இன்னும் இரு நாட்களே இருக்கும் நிலையில் அவனை தொடர்பு கொள்ளும் வழியறியாது நொந்து போய் வீடு திரும்பினாள். வீட்டிலோ மாப்பிள்ளை வீட்டிலிருந்து வெள்ளிக்கிழமை வருவதற்கு ஒத்துக் கொண்டதாக போன் வந்திருந்தது. அதனால் அனைவரும் மகிழ்ச்சியோடு அவளது வரவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.
பேத்தி உள்ளே நுழைந்ததும் “இப்படி வாடா!” என்றழைத்து தன்னருகே அமர்த்திக் கொண்டவர் “சீக்கிரமே கல்யாண கோலத்தில் பார்க்கணும் பாப்பா. சந்தோஷமா இரு!” என்று சொல்லி தலையை வருடிக் கொடுத்தார்.
அவனிடம் பேச முடியாமல் தன் மனதில் உள்ள பயத்தை பகிர்ந்து கொள்ள முடியாமல் தவித்துப் போனதில் அவளின் கண்கள் கலங்கி கண்ணீர் கன்னங்களை தொட்டுவிட்டது. அதைக் கண்டு பதறிப் போனவர்கள் இந்த திருமணப் பேச்சும் தடைப்பட்டு விடுமோ என்று கலங்குவதாக எண்ணி சமாதானப்படுத்தினார்கள்.
அன்று முழுவதும் அவளை தன்னுடனே வைத்துக் கொண்டார் அங்கயர்கன்னி. அடுத்து வந்த இரு நாட்களும் படுவேகமாகச் சென்றது. தாட்சாயிணியின் மனம் அவனிடமே தஞ்சம் புகுந்திருந்தது. அவன் ஏன் போனை எடுக்கவில்லை? இப்போது வரப்போகின்ற மாப்பிள்ளைக்கு தன்னை பிடித்து விட்டால் என்ன செய்வது என்று எண்ணங்கள் தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்தது.
வீட்டிலிருந்தவர்களோ இந்த முறை எந்த தவறும் நடந்து விடக் கூடாது எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என்று எண்ணி மாப்பிள்ளையை வரவேற்க தயாராகிக் கொண்டிருந்தார்கள். ஆனந்த் தான் அனைத்தையும் கவனித்துக் கொண்டான்.
அவனிடம் தன் மனதிலிருப்பதை சொல்லலாமா என்றும் யோசித்தாள். லேசாக கோடிட்டு காண்பித்தால் புரிந்து கொள்வான். அண்ணனே தனக்கு உதவவும் செய்வான் என்று இறுதியாக முடிவிற்கு வந்தாள். அதனால் வெள்ளிக்கிழமைக்குள் அவனிடம் பேசிவிட முடிவு செய்து காத்திருக்க ஆரம்பித்தாள். ஆனால் அவனோ வீட்டிற்கு வரும் நேரமே குறைவாக இருந்தது. எந்நேரமும் ஓடிக் கொண்டே இருந்தான்.
வீட்டிலிருக்கும் நேரம் அவனுடன் யாராவது இருந்தார்கள். அதனால் அவள் எதிர்பார்த்த நேரம் கிட்டவே இல்லை.
வெள்ளிக்கிழமையும் பிறந்தது. காலையிலிருந்து வீடு அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தது. வேலையாட்கள் கூட சின்ன எஜமானி அம்மாவின் மாப்பிளையைப் பார்க்க ஆவலுடன் தயாராகினர். அங்கயற்கன்னி அவளை தன் கூடவே வைத்து தயார் படுத்த கூறினார்.
அனைத்தையும் ஒரு பொம்மை போல கேட்டு மரத்துப் போன உணர்வுகளுடன் அமர்ந்திருந்தாள். மகளின் முகத்தில் சந்தோஷமோ, சிறு புன்னகையோ இல்லாததை கண்டு “என்னடா? ஏன் என்னவோ போல இருக்க?”
எதுவும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்து அவரின் திருப்திக்காக புன்னகைத்தாள். தாயும், மகளும் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்த பாட்டி “சின்ன குழந்தை மீனா. கல்யாணம் என்றதும் பயம் இருக்கும். மாப்பிள்ளை வந்து பார்த்திட்டு போகட்டும் எல்லாம் சரி ஆகிடும்”.
மகளின் கன்னங்களைப் பற்றி நெற்றியில் முத்தமிட்டு “என் ராஜாத்தி எதுக்கும் பயப்படக் கூடாது. உனக்கு எல்லாமே நல்லதா நடக்கும்”.
அன்னையின் அன்பில் நெகிழ்ந்து போனவள் எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனநிலைக்கு வந்திருந்தாள்.
மாப்பிள்ளை வீட்டினர் வரவை எதிர்பார்த்து வேலன் வாசலுக்கும் கூடத்திற்கும் நடை பழகிக் கொண்டிருந்தார். ஆனந்தோ டிரைவரிடம் பேசியபடி வாசலிலேயே நின்றிருந்தான். நேரம் கடந்து கொண்டே இருந்தது. தகவலும் இல்லை அவர்கள் வரவும் இல்லை.