அத்தியாயம் - 6

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,546
1,114
113
அத்தியாயம் –6விஸ்வா தான் பாட வேண்டிய பாடலை அந்த திமிர் பிடித்தப் பெண்ணை பார்த்து உணர்வு பூர்வமாக பாடியதை எண்ணி பல்வேறு சிந்தனையில் உழன்றது சிவாவின் மனம்.நிச்சயம் அந்த பெண் விஸ்வாவிற்கு ஏற்றவள் அல்ல என்று மனம் அடித்து சொன்னது. ஆனால், நண்பனின் கண்களில் தோன்றிய ஆர்வமும், அவனது பார்வை அவளையே சுற்றி வந்ததை எண்ணி உள்ளுக்குள் வேதனை எழுந்தது.தன்னருகில் அமர்ந்திருந்தவனை திரும்பி பார்த்தான். அவனோ கண்களில் கனவுடன் அமர்ந்திருந்தான். அந்தநிமிடம் அவனது மனம் உறுதி பூண்டது. எப்படியாவது இதிலிருந்து விஸ்வாவை விடுவிக்க வேண்டும். அந்த பெண்ணுடன் வாழ்க்கை அமைந்தால் நிச்சயமாக அது நரகமாக தான் இருக்கும். நண்பனை இதிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான்.“விசு! நான் அடுத்த சிக்னலில் இறங்கிக்குறேன். நாளை காலையில் பார்ப்போம்” என்றான்.கனவு நிறைந்த விழிகளுடன் அவன் புறம் திரும்பியவன் “சிவா! இன்னைக்கு நாம சுந்தர் கூடவே தங்கிடலாம். எனக்கு உன் கிட்ட பேசனும்டா. அம்மாவுக்கு போன் பண்ணி சொல்லிடு” என்றான்.அவன் தன்னிடம் என்ன பேசப் போகிறான் என்பதை உணர்ந்து கொண்டவனால் மறுக்க முடியவில்லை. அதே சமயம் அவனது மனமும் ‘உன் மனதில் இருப்பதை அவனிடம் எடுத்துக் கூற இது தான் நல்ல சான்ஸ். விட்டு விடாதே!’ என அறிவுறுத்த, அம்மாவிற்கு போன் செய்து சுந்தருடன் தங்க போவதாக கூறி வைத்து விட்டான்.அதன் பின் போய் இறங்கும் வரை அவரவர் எண்ணங்களில் உழன்றபடியே இருந்தனர். இசைக் கருவிகளை இறக்கி வைத்துவிட்டு யாரையும் எதிர்பாராமல் கனவில் நடப்பவன் போல் மொட்டை மாடிக்கு சென்று கட்டாந்தரையில் கால் நீட்டிப் படுத்துவிட்டான் விஸ்வா.அவனது நிலையைக் கண்டு சுந்தரும், வாசிமும் கள்ளச் சிரிப்பு சிரித்துக் கொண்டு கீழே சென்றனர். அவனைப் பார்த்தபடியே மாடி சுவரில் சாய்ந்து நின்று கொண்டான் சிவா.சிறிது நேரம் விண்மீன்களையும், நிலாவையும் ரசித்தவன் “ஒரு பெண் பார்த்த அந்தநிமிடத்தில் இருந்து நமக்குள் இத்தனை மாற்றத்தை கொண்டு வர முடியுமா சிவா?” என்றான் கரகரப்பான குரலில்.அவனையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தவன் அவனது பேச்சில் எரிச்சலாகி “அப்படி என்ன செஞ்சிட்டா விசு? கொஞ்சம் கூட மரியாதை இல்லாம சொடக்கு போட்டு கூப்பிட்டா. அதுல மயங்கிட்டியா நீ?”சிவாவின் எரிச்சல் மிகுந்த குரலைக் கண்டதும் ஒரு பக்கமாக திரும்பி ஒரு கையால் தலையைத் தாங்கியபடி படுத்தவன் “அவள் அப்படி பண்ணினது அதிகம் தான் சிவா. ஆனால், அதையும் தாண்டி என் மனசில் ஏதோ சொல்ல முடியாத ஒரு உணர்வு. கல்யாண வீட்டில் அவளை பார்த்த நிமிடமே என் மனசு அவ பின்னாடியே போக ஆரம்பிச்சிடுச்சு” என்றான் சின்ன சிரிப்புடன்.“விசு! இந்த உறவு நம்ம வாழ்நாள் முழுவதும் வரப் போகிற உறவு. இப்படி அந்த பெண்ணை பற்றி எதுவுமே தெரியாம உன் வாழ்க்கையை அவளிடம் கொடுக்கிறது நல்லாயில்லை” என்றான் கடுப்புடன்.“ஹாஹா..நீ ஏண்டா இவ்வளவு டென்ஷன் ஆகுற? நான் என்ன இப்போவே அவளை கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி குதிக்கிற?”“எனக்குப் பிடிக்கல விசு. உன்னோட குணத்துக்கு தேவதை மாதிரி பெண் மனைவியா வரணும். இப்படி அடங்காப்பிடாரி மாதிரி உள்ள பொண்ணு உனக்கு வேண்டாம்-டா” என்றான் கெஞ்சலாக.படுத்திருந்த நிலையில் இருந்து எழுந்து உட்கார்ந்து “சக்திக்கு நீ ஒரு நல்ல அண்ணன்னு நிருபிச்சிட்டட. ஆனால், அவ எனக்கும் தங்கை தான்-டா”.விஸ்வா சொன்னதைக் கேட்டு ஒரு நிமிடம் அதிர்ந்து நின்றவன், வேகமாக அவனருகில் சென்று அவன் சட்டையை கொத்தாகப் பற்றி “என்ன சொன்ன? நான் என் தங்கைக்காக உன் காதலை வேண்டாம்-னு சொல்றேனா? எப்படி விசு என்னைப் பார்த்து இந்த வார்த்தையை சொன்ன? சத்தியமா எதிர்பார்க்கலடா உன் கிட்ட இருந்து இப்படியொரு வார்த்தையை” என்றவனிடமிருந்து தனது சட்டையின் காலரை விடுவித்த விஸ்வா..சிவாவின் தோள்களைப் பற்றி “உன்னை நான் தவறா எதுவும் சொல்லல-டா. இன்னைக்கு ஏன் இவ்வளவு உணர்ச்சிவசப்படுற” என்றான்.அவன் கைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட சிவா “வேண்டாம் விஸ்வா! எப்போ உன் வாயில் இருந்து இப்படியொரு வார்த்தை வந்துடுச்சோ..இனி, நான் உன்னோட இருக்கிறது நல்லதில்லை. நான் எது சொன்னாலும் என் தங்கையை மனசில் வச்சு சொல்கிற மாதிரி தான் தோணும் உனக்கு” என்றான்.சாதரணமாக போய் கொண்டிருந்த பேச்சு வார்த்தை வேறு கட்டத்தை நோக்கி செல்வதை கண்டு அதிர்ந்து நின்றனர் அங்கு வந்த வாசிமும், சுந்தரும்.முதலில் சுதாரித்துக் கொண்ட சுந்தர்,சிவாவின் அருகில் சென்று “என்ன பேசுற சிவா? அவன் ஏதோ சாதரணமா சொன்னதை போய் நீ ஏன் சீரியஸா எடுத்துக்கிற” என்றான்.சுந்தரின் கைகளை தட்டி விட்டவன் “எது-டா சாதாரணம்? ஒரு நண்பனா நான் இவனுக்கு சொன்ன அறிவுரையை என் தங்கையின் வாழ்க்கைக்காக நான் இவனோட காதலை கெடுக்கிற மாதிரி சொல்றானே?” என்றான் கோபமாக.விஸ்வா தான் விட்ட வார்த்தைகள் அவன் மனதை காயப்படுத்தி இருப்பதை உணர்ந்து அவனை சமாதானப்படுத்த முயன்றான்.அவனோ இரு கைகளையும் உயரே தூக்கி “போதும்-டா! இனி, ஒரு போதும் என் எல்லையை தாண்ட மாட்டேன். இந்த குழுவை பொறுத்தவரை நீ எனக்கு முதலாளி. நமக்குள்ள அந்த உறவு மட்டும் தான்” என்றவன் மடமடவென்று அங்கிருந்து சென்றான்.அவனது கோபத்தைக் கண்டு விக்கித்து நின்றனர் மூவரும்.மெல்ல விஸ்வாவின் அருகில் சென்ற வாசிம் “நீ சொன்னது தப்பு விஸ்வா. அவன் ஒரு நாளும் சக்தி உன்னை விரும்புறதுக்கு ஆதரவு தரல. உன்னோட நல்லதுக்கு தான் சொன்னானே தவிர. சக்தியை உனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க இல்லை” என்றான்.“எங்களுக்குமே அந்த பெண்ணை பிடிக்கல. தெருவில் அத்தனை பேர் முன்னாடி ஒருவரை சொடக்கு போட்டு திமிரா பேசும் பெண் நல்லவளா இருக்க மாட்டா” என்றான் அழுத்தமாக சுந்தர்.தன்னுடைய வார்த்தைகள் நண்பனின் மனதை எந்த அளவிற்கு பாதித்திருக்கும் என்பதை விஸ்வா உணர்ந்து மனம் வருந்தினான். அதையும் தாண்டி தன்னவளாக எண்ணியவளை நண்பர்கள் அனைவரும் வெறுப்பதை எண்ணியும் வருந்தினான்.“யாருமே கெட்டவர்களாக பிறப்பதில்லை சுந்தர். அவளை பார்த்தால் பிடிவாதம் பிடிக்கும் குழந்தை மாதிரி தான் தெரிகிறாளே தவிர கெட்டவளா தெரியல” என்றான் சோர்வுடன்.இத்தனை சொல்லியும் தன் நிலையிலிருந்து இறங்காத விஸ்வாவை கண்டு கடுப்பான சுந்தர் “இருக்கட்டும்..அவ எப்படி வேணா இருக்கட்டும். ஆனா, உனக்கு வேண்டாம்-னு தான் சொல்றோம். இதை நான் சொல்லலாம்-னு நினைக்கிறேன். ஏன்னா சிவா மாதிரி எனக்கு தங்கச்சி கிடையாது” என்று குத்தலாக கூறிவிட்டு கீழே சென்றான்.நண்பர்களின் கோபமும், குத்தலான பேச்சையும் கேட்டு மனம் நொந்து போய், அதுவரை இருந்த சுகமான மனநிலை மாறி வேதனையுடன் ஆகாயத்தை பார்த்தபடி இருகைகளால் தலையை தாங்கியபடி மல்லாக்க படுத்துக் கொண்டான்.மனதிலிருந்த பாரம் தாங்காமல் பாட ஆரம்பித்தான்...நல்லதோர் வீணை செய்தே – அதை

நலெங்கெடப் புழுதியில் எரிவதுண்டோநல்லதோர் வீணை செய்தே – அதை

நலெங்கெடப் புழுதியில் எரிவதுண்டோசொல்லடி சிவசக்தி – எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்அவனது பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த சுந்தர் வாசிமிடம் “இதைத் தானே-டா இத்தனை நேரம் நாம அவனுக்கு சொன்னோம். அதையே இவன் பாட்டா பாடுறான்” என்று அலுத்துக் கொண்டான்.

அந்த இரவு வேளையில் வீட்டின் கதவு தட்டப்பட்ட வேகத்தில் பயத்துடன் “யாருங்க” என்றார் சரஸ்வதி சிவாவின் அன்னை.வெளியில் நின்ற சிவாவோ அன்னையின் குரலில் தெரிந்த பயத்தில் தான் செய்த தவறை உணர்ந்து “நான் தான்-மா” என்றான்.சிவாவின் குரல் தான் என்றாலும் சற்று பயத்துடனே அரை கதவை திறந்து மெல்ல தலையை மட்டும் நீட்டி அவன் தான் என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு நன்றாக திறந்தார்.சுந்தருடன் தங்கப் போகிறேன் என்று சொன்னவன், அர்த்த ராத்திரியில் வந்து நின்றதைக் கண்டதுமே அன்னையின் மனதில் சிறு சஞ்சலம் எழுந்தது.சிவாவின் முகத்தில் தெரிந்த சோர்வும், களைப்பும் அதை மீறி தெரிந்த கோபமும் பிரச்சனையின் வீரியத்தை உணர்த்தியது.மெல்ல அவன் தோளை தொட்டு “என்னப்பா என்றார்?”அண்ணன் வந்து கதவை தட்டியதிலிருந்து அன்னையின் கூடவே நின்றிருந்த சக்திக்கும் சிவாவின் முகத்தில் தெரிந்த கோபமும், கசப்பும் மனதை உறுத்தியது.அன்னை கேட்டதும் அதுவரை அடக்கி வைக்கப்பட்டிருந்த உணர்வுகள் வெடிக்க “விஸ்வாவை என் நண்பனை தாண்டி என்னைக்காவது வேற மாதிரி பார்த்திருக்கேன்னா-மா? எப்படி-மா? அவன் என்னை பார்த்து அந்த வார்த்தையை சொல்லலாம்?” என்றான்.அவனது கோபத்தைக் கண்டு அதிர்ந்து போன சரஸ்வதி “என்னப்பா சொன்னான்? நீ எதுக்கு இவ்வளவு கோபப்படுற?” என்றார்.அன்று திருமண கச்சேரிக்கு செல்லும் போது நடந்தவைகளையும், விஸ்வாவின் மனம் நித்யாவின் பின்னே செல்வதையும் அதற்கு தான் அறிவுரை கூறியதையும் கூறினான்.அண்ணன் சொல்லுவதை கேட்டுக் கொண்டிருந்த சக்தி தன்னையறியாமல் விசும்ப ஆரம்பித்தாள். அதை கண்டவன் அவசரமாக அவளருகில் சென்று கையைப் பிடித்து அன்னையின் அருகில் சென்றவன் “இவளுக்காக தான் நான் அவன் விரும்பும் பெண்ணை வேண்டாம்-னு சொல்றேனாம். என்னைக்காவது நான் அப்படி நினைச்சிருக்கேனாம்மா. இவ அவனை விரும்புறான்னு தெரிஞ்சும், அவனுக்கு விருப்பம் இல்லாத போது கேட்க கூடாதுன்னு தானே இருந்தேன். என்னை பார்த்து அப்படி சொல்லிட்டானேம்மா” என்றான் ஆதங்கத்துடன்.அவன் சொன்னதை கேட்டவர் “அப்படியா சொன்னான்? விஸ்வா அப்படி பேச மாட்டானேப்பா. அவனுக்கு யாரையும் தப்பா சொல்றது பிடிக்காதேப்பா” என்றார்.அதற்கு மறுப்பாக தலையைசைத்து “சொன்னான்-மா..அவனே சொன்னான். என் தங்கைக்கு நல்ல அண்ணன்னா நடந்துகிறேனாம்”.அதை கேட்டவர் “ஈஸ்வரா” என்று நெஞ்சில் கை வைத்துக் கொண்டார்.விஸ்வா சொன்னான் என்று சொன்னதுமே அழுகையுடன் அண்ணனின் தோளில் சாய்ந்தவள் “சாரி அண்ணா! என்னால தானே! என்னோட காதலால தானே நீங்க இன்னைக்கு அசிங்கப்பட்டு நிக்கிறீங்க? என்னை மன்னிச்சிடுங்கன்னா” என்று கதறினாள்.மகளின் முதுகை வருடியவர் “இதுக்கு தான் அன்னைக்கே சொன்னேன். அண்ணன் நல்ல மாப்பிள்ளையா பார்ப்பான் அவனையே கல்யாணம் பண்ணிக்கோன்னு. இப்போ பாரு! நல்ல நட்புக்குள்ள தவறான பேச்சு வந்துடுச்சு”.கன்னங்களில் கண்ணீர் வழிய அண்ணனின் தோள்களை நனைத்தவள் “உன்னால கூட அவர் அளவுக்கு நல்லவனா நடந்துக்க முடியாதே அண்ணா. நான் எப்படி அவரை மறப்பேன்? ஆனால், என்னால எப்போ உன் மேல இப்படியொரு பழி வந்துச்சோ..இனி, எனக்கு அவர் வேண்டாம்” என்றாள் கதறலுடன்.“அப்போ அண்ணன் பார்க்கிற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கோ” என்றார்.அன்னையின் புறம் திரும்பியவள் “என்னால அது முடியாதும்மா. என்னை இப்படியே விட்டுடுங்க” என்று அழ ஆரம்பித்தாள்.அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்து “இன்னும் என்னெவெல்லாம் பேச்சு வாங்கி கொடுக்க போற அவனுக்கு?” என்றார் ஆத்திரத்துடன்.அன்னையின் கோபத்தைக் கண்டு தங்கையை தன்னருகில் இழுத்துக் கொண்டவன் “அம்மா! விடுங்க! அவளுக்கு கொஞ்சமாவது அவகாசம் கொடுங்க” என்றான் கெஞ்சலாக.அதை கேட்டு ஆத்திரத்துடன் “இப்படி இடம் கொடுத்து கொடுத்து தான் இன்னைக்கு அசிங்கப்பட்டு நிற்கிற. எப்படியாவது போங்க அண்ணனும், தங்கச்சியும்.ஆனா, ஒன்னு! இன்னும் ரெண்டு மூணு மாசத்தில் இவளுக்கு ஒரு மாப்பிள்ளையை பார்த்து கட்டிக் கொடுக்கனும் சொல்லிட்டேன்” என்றார்.அன்னையின் முகத்தில் தெரிந்த உறுதியை கண்டவன் “ம்ம்..சரிம்மா..நீங்க போய் படுங்க. நான் சக்தி கிட்ட பேசிட்டு படுக்கிறேன்” என்றான்.சிறிது நேரம் தங்கையை சமாதானப்படுத்திவிட்டு படுத்தவனுக்கு நெஞ்சம் பாரமாகி போனது.சக்தியோ அன்னைக்குத் தெரியாமல் அழுது கரைந்தாள். சிவாவின் நண்பனாக அறிமுகமான நாளில் இருந்தே அவள் மனதை கொள்ளை கொண்டவன் விஸ்வா. அவளது காதலை அவன் புறக்கணித்தாலும், என்றாவது ஒரு நாள் தன்னை புரிந்து கொள்வான் என்று ஆசையுடன் காத்திருந்தாள். ஆனால், இன்று அவன் வேறு பெண்ணை நேசிப்பதும், அண்ணனிடம் பேசியவிதமும் முற்றிலுமாக உடைத்தது மனதை..நல்லதோர் வீணை செய்தேன்- அதை

நலெங்கெடப் புழுதியில் எரிவதுண்டோதசையினைச் தீச்சுடினும் – சிவ

சக்தியைப் பாடும் நல் அகம் கேட்டேன்நசையரூ மனம் கேட்டேன் – நித்தம்

நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்அசைவுறு மதி கேட்டேன் – இவை

அருள்வதில் உனக்கேதும் தடையுள்ளதோ...
 

Chitra Balaji

Member
Feb 5, 2020
43
27
18
Oooooo.... Shiva vuku avalodaya charater pidikala அந்த எடுத்து erinji pesurathu... ஆனா விஷ்வா அவன் தங்கச்சி kaaga thaan avala வேண்டாம் nu sonna maari பேசுறான்.... Shiva vuku kovam வந்துடுச்சி தேவை illaatha பிரச்சனை.... Super Super Super pa.... Semma episode