அத்தியாயம் – 5
இரு நாட்கள் கழித்து குணா வசந்தி வீட்டிற்கு வந்திருந்தான். பரதன் மாப்பிள்ளையுடன் பேசிக் கொண்டிருந்தார். மங்களமும் வசந்தியும் அறைக்குள் நின்று தாங்கள் சாதித்து விட்ட பெருமையை எண்ணி பூரித்து போயிருந்தனர்.
“எப்படிம்மா நான் போட்ட போடுல தானா வந்து நிற்கிறார் பாரு. இப்படியே இந்த கெத்தை மெயிண்டேன் பண்ணி மாமியார்காரியை ஆப் பண்ணனும்”.
“இங்கே பாரு வசந்தி இப்போ அவர் கூப்பிட்டாலும் நீ கிளம்பி போயிடாதே. நானும் அப்பாவும் கொண்டு போய் விடுறோம். அப்போ தான் உன் மாமியாரை சரியான இடத்தில் வைக்க முடியும்”.
“அப்படியா சொல்ற? நான் அவர் கூட கிளம்பிடலாம்னு நினைச்சேன்”.
“வேண்டாம்டி! நாங்க கொண்டு போய் விட்டா தான் அந்த பொம்பளைக்கு பயம் இருக்கும்”.
“சரிம்மா! நான் பார்த்துக்கிறேன்”.
மகளிடம் பேசிவிட்டு வெளியே வந்தவர் “என்ன சமைக்கட்டும் மாப்பிள்ளை?” என்று கேட்டார்.
“எதுவும் வேண்டாம் அத்தை. நான் வசந்தியை கூட்டிகிட்டு கிளம்புறேன்”.
“அப்படி எல்லாம் அனுப்ப முடியாது மாப்பிள்ளை. நானும் மாமாவும் கொண்டு வந்து விடுறோம். அது தான் முறை”.
“உங்களுக்கு அந்த சிரமம் எல்லாம் வேண்டாம் அத்தை. நான் கூட்டிட்டு போறேன்”.
“நாள் பார்த்து தான் கூட்டிட்டுப் போகணும் மாப்பிள்ளை” என்று முடிக்கும் முன்னே “இன்னைக்கு நாள் நல்லா இருக்குன்னு பார்த்து தான் அம்மா அனுப்பினாங்க அத்தை” என்று விட்டான்.
பல்லைக் கடித்துக் கொண்ட மங்களம் “இருந்தாலும் மாப்பிள்ளை..” என்றவரை “இப்போ என் கூட வரதா இருந்தால் அவ வரட்டும் இல்லேன்னா மெதுவா பார்த்துக்கலாம்”.
அவனுடைய பேச்சு அதிர்ச்சியைக் கொடுக்க உள்ளுக்குள் எழுந்த எரிச்சலை அடக்கியபடியே வசந்தியைப் பார்க்க, அவளும் கடுப்புடனே “உங்க கூடவே வரேன்” என்றாள்.
அன்னையிடம் மெல்லிய குரலில் “நான் உள்ளே போனால் தான் இதுகளை ஒரு வழிக்கு கொண்டு வர முடியும். நீ எதுக்கும் கவலைப்படாதே” என்று சொல்லிவிட்டு அறைக்குச் சென்று விட்டாள்.
சற்று நேரத்தில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்தாள். அவளிடமிருந்த பையை வாங்கிக் கொண்டவன் பெரியவர்கள் இருவரிடமும் சொல்லிக் கொண்டு மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.
அலுவலகத்துக்குச் சென்றிருந்த அர்ஜுன் டீ குடிக்க வெளியே வந்து நின்று சுடருக்கு அழைத்தான். முதல் இரண்டு அழைப்புகளை அவள் எடுக்கவே இல்லை. அவனும் விடாது அழைத்தான்.
ஒரு ஐந்து கால்கள் போன பின்பு பட்டென்று எடுத்து விட்டாள்.
“என்ன? எதுக்கு போன் பண்றீங்க? அன்னைக்கு அவ்வளவு சொன்னப் பிறகும் எதுக்கு கூப்பிட்டீங்க?” என்று பொரிந்தாள்.
காதிலிருந்து போனை தள்ளிப் பிடித்தவன் சற்று நேரம் அப்படியே வைத்திருந்துவிட்டு அவள் கத்தி முடித்த பின் காதருகே வைத்தான்.
“சூடா இருக்க போல?”
“எதுக்கு கூப்பிட்டீங்க? தேவையில்லாம பேசினா ப்ளாக் பண்ணிட்டுப் போயிடுவேன்”
“உன் அக்கா வீட்டுக்கு வந்தாச்சு”.
“அதுக்கு!”
“ஓவரா பண்ணாதடி. உன் பின்னாடியே சுத்துறேன்னு படுத்துற இல்ல நீ”.
“எனக்கு புரியல. உங்க அண்ணி உங்க வீட்டுக்கு வந்ததை எனக்கு எதுக்கு சொல்லணும்?”
உள்ளுக்குள் எழுந்த எரிச்சலை அடக்கிக் கொண்டு “எல்லாம் சரியாகும் என்று சொல்ல வரேன்”.
“கயல் பற்றி எதுவும் தெரிந்ததா? அவள் எங்கே இருக்கா? எப்போ வருவா? இதெல்லாம் தெரிந்தால் தான் மற்றதைப் பற்றி யோசிக்கவே முடியும்”.
“அது என் கவலை. என் தங்கச்சியை கண்டுபிடிக்க வேண்டியது எங்க வேலை. நீ கயலைப் பற்றி அனாவசியமா பேசாதே”.
“நானா போன் பண்ணினேன். இதெல்லாம் சரியா இல்ல. நமக்குள்ள எதுவும் சரி வராது. விட்டுடுங்க”.
“சும்மா இதையே சொன்னா என்ன அர்த்தம்? விட்டுடு விட்டுடுன்னு சொன்னா எப்படி சுடர்? அப்படி சட்டுன்னு விடக் கூடிய உறவா?”
“வேறென்ன பண்ண சொல்றீங்க? நடந்த எதையும் மாற்ற முடியாது. மறக்கவும் முடியாது. காலம் முழுக்க நம்மைச் சுற்றி வந்துகிட்டே தான் இருக்கும். நாம சேருவதால யாருக்காவது சந்தோஷம் இருக்குமா? நம்மையும் சேர்த்து தான் சொல்றேன். ஒவ்வொரு நாளும் நரகம் தான். யாருக்குமே சந்தோஷம் இல்லாத ஒன்றை எதுக்கு செய்யணும்?”
அவளின் பேச்சு அவனிடத்தில் ஒரு அழுத்தத்தைக் கொடுக்க “உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக் கொள்வதில் சந்தோஷமே இல்லையா?” என்றவனது குரல் கலங்கி இருந்தது.