Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 4 | SudhaRaviNovels

அத்தியாயம் - 4

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
329
323
63
அத்தியாயம் – 4

எத்தனை இனிமையான நினைவுகள். அனைத்தும் வசந்தியால் மொத்தமாக சிதைக்கப்பட்டு விட்டது. இனி, தங்களின் காதல் உயிர்ப்புடன் திரும்புமா என்கிற கேள்விக்கு விடையில்லை.

அங்கே அன்னையை சமாளித்து விட்டு கடைக்கு கிளம்பிச் சென்றான் குணா. அவன் சென்றதும் அர்ஜுனின் கைகளைப் பற்றிக் கொண்ட கல்யாணி “நானே அவன் வாழ்க்கையை கெடுத்துட்டேன் அர்ஜுன். நல்ல பெண்ணா பார்த்து கட்டி வைக்கிறேன்னு நினைச்சு...” என்று பேசியவரை தடுத்து நிறுத்தியவன் “போதும்மா! நடந்தையே பேசிப்பேசி உங்க மனசை புண்ணாக்கி வச்சிருக்கீங்க. நமக்கு கயல் கிடைச்சா போதும். மற்றதை பேச வேண்டாம்”.

அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவர் “கிடைச்சிடுவா தானே?” என்றார் ஏக்கமாக.

“கண்டிப்பாம்மா! அவளுக்கு எதுவும் இருக்காது. நல்லா இருப்பா”.

அப்போது வாசல் மணி அழைக்க, கல்யாணியை அமர வைத்துவிட்டு சென்று கதவை திறந்தான். அங்கே பழனியும், ஞானமும் நின்றிருந்தார்கள்.

அவர்களைப் பார்த்ததுமே அர்ஜுனுக்கு உள்ளுக்குள் எரிச்சல் எழுந்தது. அதை அடக்கிக் கொண்டு “வாங்க அத்தை! வாங்க மாமா” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.

இருவரும் வந்து சோபாவில் அமர்ந்தார்கள். ஞானம் தான் சுற்றிமுற்றி பார்த்துவிட்டு “என்ன கல்யாணி எங்கே உன் மருமகளும் பேரனும்?” தெரியாத மாதிரி.

“அவங்க அம்மா வீட்டில் இருக்கா அண்ணி”.

“அது சரி! உன் பொண்ணு ஓடிப் போனதுக்கு அடுத்த வீட்டுப் பெண்ணை எதுக்கு தண்டிக்கிற?”
“அண்ணி!”

“ஆம்பள புள்ளையை வளர்க்கிறது பெருசில்லை. பெண்ணை வளர்க்கிறது தான் பெரிய காரியம். நீ அதை ஒழுங்கா செய்யாம அடுத்த வீட்டுப் பெண்ணை ஒதுக்கி வச்சிருக்க” என்று முடிக்கவுமே “அத்தை! இது எங்க வீட்டு விவகாரம். நாங்க என்ன செய்யணும் செய்யக் கூடாது என்பதை முடிவு பண்ணிக்கிறோம்” என்று விட்டான்.

அவனது பேச்சில் பழனிக்கு கோபம் வந்துவிட “என்னடா பேசுற? சொந்தபந்தம் பெரியவங்கன்னு எதுக்கு இருக்கோம்? கொஞ்சம் கூட மரியாதை இல்லாம பேசுற?”

ஞானமோ கண்களை கசக்கிக் கொண்டு “ஏண்டா மாமான்னு கொஞ்சமாவது மரியாதை கொடுக்குறீங்களா இந்த வீட்டில்? என் தம்பி குடும்பம்ன்னு நாங்க பார்த்து பார்த்து செஞ்சது போக இப்படி அநியாயமா பேசுறீங்களே”.

அர்ஜுன் பேசும் முன் “அண்ணி! அவன் சொன்னதை தான் நானும் சொல்றேன். எங்க வீட்டு விவகாரம் இது. முடிவெடுக்க வேண்டியது நாங்க தான்” என்று விட்டார் கல்யாணி.

பழனிக்கு இப்போது ஆங்காரம் எழ “என்னம்மா பேச்செல்லாம் புதுசா இருக்கு? ஓஹோ! காசு பணமெல்லாம் வந்ததும் பேசுறீங்க..ம்ம்..”.

அவர்களில் எள்ளல் பேச்சைக் கண்டு கொள்ளாமல் “இல்ல அண்ணன். நிதர்சனத்தைப் பேசுறேன். இப்போ உங்க வீட்டுல ஒரு பிரச்சனைன்னா நாங்க வந்து நாட்டாமை பண்ணினா நீங்க ஒத்துக்குவீங்களா?”

கல்யாணியின் கேள்வியில் கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“அதெப்படி! எங்க வீட்டுல நீ வந்து நாட்டமை பண்ண முடியும்?”

“அதே தான் அண்ணி. எங்க வீட்டுப் பிரச்சனைகளை நாங்க பார்த்துக்கிறோம்”.

“ஒரு நிமிஷம் இரு! எங்க வீடும் உங்க வீடும் ஒண்ணா? என் தம்பி இறந்த பிறகு இந்த குடும்பத்துக்கு நாங்க தான் எல்லாம். எங்களை கேட்டு தான் நீ செய்யணும்”.

“அப்படியா அத்தை! அப்போ நாங்க சாப்பாட்டுக்கு இல்லாம கஷ்டப்பட்டப்ப நீங்க ஏன் உதவல? அப்போ எங்கே போச்சு இந்த கரிசனமும் அக்கறையும்”.

பழனிக்கு பொறுமை போக “ஞானம் கிளம்பு! நமக்கு இந்த வீட்டில் மரியாதை கிடையாது” என்று வெளியேற தொடங்கினார்.

ஞானம் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டே “என் தம்பி இருந்திருந்தா இப்படி நடந்திருக்குமா? புழுக்கை எல்லாம் படம் எடுத்து ஆடுது” என்று புலம்பிக் கொண்டே சென்றார்.

கல்யாணி ஓய்ந்து போய் விட்டார். எத்தனை கேள்விகளையும் பேச்சுகளையும் தான் சமாளிப்பது.

அன்னையின் மனநிலையை கவனித்த அர்ஜுன் அவரை அழைத்துச் சென்று படுக்க வைத்து விட்டு வந்தவன் ஹாலில் அமர்ந்து விட்டான்.

சுடரை பார்ப்பதற்காகவே விடுமுறை எடுத்திருந்தான். அன்று தொடங்கிய எதுவுமே சரியாக செல்லவில்லை. சுரேஷை வைத்து கமிஷனர் அலுவலகத்திற்கும் சென்று அங்கும் பெரிதாக உதவி கிடைக்கவில்லை.

அடுத்து என்ன செய்வது? கயலை எப்படி கண்டுபிடிப்பது என்றும் புரியவில்லை. அதோடு குணாவின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. சுடருக்கும் தனக்குமான உறவிற்கும் எதிர்காலமில்லை என்று எண்ணி மண்டை காய்ந்து போனான்.

அதே நேரம் வசந்தி குணாவின் கடைக்கு வந்திருந்தாள். அவள் கடைக்கு வருவாள் என்று எதிர்பார்க்காதவன் பதட்டமடைந்து விட்டான்.

“ஏய்! இங்கே எதுக்கு வந்த?”
 
  • Love
Reactions: Kothai suresh

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
329
323
63
“வேற எங்க வர? வீட்டுக்கு வந்தா உங்கம்மா பேசுற பேச்சுல காது செவிடாகிப் போகுது”.

“சரி எதுக்கு வந்த?”

“என்னையும் பையனையும் எப்போ வீட்டுக்கு கூட்டிட்டுப் போக போறீங்க?”

அவளை கடுமையாக முறைத்து “என் தங்கச்சி வந்த பின்னாடி தான் உன்னை வீட்டுக்கு கூப்பிடுறதா இல்லையான்னு முடிவு பண்ணும்”.

“அவ வரலேன்னா? என் நிலைமையும் என் குழந்தை நிலைமையும் என்னாகுறது?”

“சீ! வாயை மூடு! கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையாடி?”

“எதுக்குன்னு கேட்குறேன்? காதலிச்சது அவ. ஓடிப் போனது அவ. இதுல எனக்கு எதுக்கு குற்ற உணர்ச்சி?”

“நீ எதுவுமே பண்ணல. வேண்டாமடி! நீயும் உன் அம்மாவும் பேசினதை எல்லாம் நான் கேட்டுட்டேன். இதுக்கு மேலையும் பொய் சொல்லி உன்னை நீயே அசிங்கப்படுதிக்காதே”.

“இங்கே பாருங்க. உங்களுக்கு பத்து நாள் தான் டைம். அதுக்குள்ள என்னை வீட்டுக்கு கூப்பிடல. அசிங்கப்படுத்திட்டு தான் மறுவேலை பார்ப்பேன்”.

கை பரபரவென அவளை அறைந்துவிட துடிக்க, எதுவும் செய்ய முடியாத எரிச்சலில் அருகே இருந்த கண்ணாடி டம்ளரை தூக்கி அடித்திருந்தான்.

“செய்-டி! அது தான் ஏற்கனவே என்ன பண்ணணுமோ பண்ணியாச்சு. இன்னும் என்ன?”

அவளோ அதற்கெல்லாம் கவலைப்படாமல் “இந்த அதுப்புக்கெல்லாம் அசருகிற ஆள் நானில்லை. பத்து நாள் தான் டைம் சொல்லிட்டேன்” என்று மிரட்டிவிட்டு சென்று விட்டாள்.

அவனது கடையில் வேலை செய்யும் பையன் அனைத்தையும் பார்த்துக் கொண்டு ஓரமாக அமர்ந்திருந்தான். அவமானமாக இருந்தது குணாவிற்கு. கல்யாணத்திற்கு முன்பு வரை அவர்களை பற்றிய நல்ல அபிப்பிராயம் இருந்தது. வசந்தி வந்த பின்பு அனைத்தையும் குழி தோண்டி புதைத்து விட்டாள்.

இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணமான கயல் தஞ்சாவூரில் அருளானந்தா நகரில் இருந்த அந்த பங்களாவின் அவுட் ஹவுசில் அமர்ந்திருந்தாள். அவள் முன்னே அமர்ந்திருந்த அந்தப் பெண்மணி அவளின் பதிலுக்காக காத்திருந்தார்.

“சொல்லும்மா? உன்னை சேர்ந்தவங்க எல்லாம் தேடிகிட்டு இருப்பாங்க. நீ எப்போ போகணும்னு சொல்லு. நானே கொண்டு போய் விடுறேன்” என்றார் சௌடாம்பிகை.

“இல்ல மேம்! தயவு செய்து எனக்கு ஒரு உதவி செய்ங்க. இங்கேயே ஏதாவது ஒரு வேலை போட்டுக் கொடுங்க. என்னால என் வீட்டுக்குப் போக முடியாது மேம்”.

“இங்கே பாரும்மா! வீட்டுல உள்ளவங்க மேல ஆயிரம் கோபம் இருக்கலாம். அதற்காக அவர்களை விட்டு வெளியே இருப்பது என்பது தவறானதும்மா. உன்னை காணவில்லை என்று எப்படி தவிச்சு போயிருப்பாங்க, புரிஞ்சுக்கோ!”

கலங்கிய கண்களுடன் “புரியுது மேம்! ஆனா நான் போனாலும் அவங்களுக்கு கஷ்டம் தான். அதனால தான் இங்கேயே இருந்திடுறேன் என்று சொல்றேன்”

“உன்னுடைய மனம் மாறுவதற்காக தான் இந்த மூன்று மாதங்கள் டைம் கொடுத்தேன்-மா” என்றவர் தலையசைத்துக் கொண்டே எழுந்தவர் “நல்லா யோசிச்சு சொல்லும்மா. இன்னும் ஒரு பத்து நாள் டைம் கொடுக்கிறேன். அதற்கு பிறகு நீயே போறேன் என்று சொன்னாலும் அனுப்ப மாட்டேன்”.

கையெடுத்து கும்பிட்டவள் “நன்றி மேம்! பத்து நாள் கழித்து நீங்க எனக்கொரு வேலை கொடுங்க” என்று விட்டாள்.

சௌடாம்பிகை யோசனையுடனே அங்கிருந்து வெளியே வந்தவர் பங்களா தோட்டத்திற்குள் நுழைந்தார். மூன்று மாதங்களுக்கு முன்னர் சென்னை சென்று விட்டு திரும்பும் போது வழியில் இந்தப் பெண் தனியாக அமர்ந்திருந்ததைப் பார்த்து விசாரித்தார். ஏதோவொரு கலக்கத்திலும், குழப்பத்திலும் இருந்தவளை தன்னுடனே அழைத்து வந்து விட்டார்.

மூன்று மாதங்களாக அவளை திருப்பி அனுப்பி விட முடிவு செய்து பேசிப் பார்த்தார். நல்ல குடும்பத்து பெண்ணாக தெரிந்தவள் தீயவர்கள் கையில் சிக்கி விடாமல் இருக்க வேண்டுமே என்கிற பயத்துடன் தான் வெளியே அனுப்பி விடாமல் வைத்திருந்தார். ஆனால் திருமணம் ஆகாத பெண்ணொருத்தியை இப்படி தன்னிடம் வைத்திருப்பது தவறு என்று புரிய, இன்று அவளிடம் நேரடியாகப் பேசிப் பார்த்தார். அப்போதும் அவள் தனது முடிவில் உறுதியாக இருப்பதை பார்த்ததும் அவள் விருப்பபடி இங்கேயே இருக்கட்டும் என்கிற முடிவிற்கு வந்தார்.

அந்நேரம் அவரின் போன் அடிக்க திரையில் இருந்த எண்ணை பார்த்ததும் அவர் இதழில் மெல்லிய புன்னகை.

“சொல்லு ஜீவா”.

“எப்படிம்மா இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன் ஜீவா. நீ எப்படி இருக்க? என்ன பண்ணிட்டு இருக்க? எந்த நாட்டில் இருக்க?” என்றார் சிரிப்போடு.

“எனக்கென்னம்மா சுற்றிலும் பத்து பதினைந்து பெண்களுடன் ஒரே கொண்டாட்டமாக காலை அமெரிக்கா, மதியம் லண்டன் இரவு துபாய் என்று என்ஜாய் பண்ணிக் கொண்டு இருக்கிறேன்”.


“படவா! ஒழுங்கா சொல்லு. எங்கே இருக்க?”
 
  • Like
Reactions: Kothai suresh

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
329
323
63
“லண்டனில் இருக்கேன்-மா. ஒரு மருத்துவர்கள் மாநாட்டிற்காக வந்திருக்கேன். அப்புறம் உங்களுக்கு அங்கே எல்லாம் ஓகே தானே?”

“ம்ம்...நல்லா இருக்கேன்-பா. மாமாவும் மாமியும் வந்துவிட்டு போனாங்க”.

“அப்புறம் உங்க புது பிரெண்ட் எப்படி இருக்காங்க? எப்போ ஊருக்குப் போறாங்க?”

“அதை தான் இப்போ யோசிச்சிட்டு இருந்தேன் ஜீவா. அவள் கிட்ட பேசிட்டேன். எனக்கு இங்கேயே ஏதாவது வேலை வாங்கி தாங்க நான் ஊருக்கு போக மாட்டேன்னு சொல்றா தம்பி”.

சிந்தனையுடன் தாடையை வருடியவன் “அப்படியா? ஏன்னு கேட்டீங்களா?”

“அதற்கு பதில் வரல தம்பி. கல்யாணம் ஆகாத பெண்ணை இத்தனை நாள் வச்சிருந்ததே தப்பு. ஆனாலும் அவளுடைய முகத்தைப் பார்த்தால் போக சொல்லவும் கஷ்டமாக இருக்கு”.

சற்றே யோசித்தவன் “மா! அவங்க இருக்கட்டும். நீங்க எனக்கு ஒரே ஒரு உதவி பண்ணுங்க. அவங்க போட்டோவை அனுப்பி வைங்க. நான் என் சோர்ஸ் மூலியமா யார் என்ன என்று விசாரிக்கிறேன்”.

“அது நல்லது தம்பி. நமக்கும் அவளைப் பற்றி தெரியுறது சரி தான்”.

“ஓகே மா நீங்க அனுப்பி வைங்க நான் பார்க்கிறேன்” என்றவன் போனை வைத்து விட்டான்.

முதல் வேலையாக தன்னிடம் இருந்த அவளது புகைப்படத்தை அவனுக்கு அனுப்பிவிட்டு அங்கிருந்த கல்லில் அமர்ந்தார்.

தனது மருத்துவ கட்டுரையை படித்துக் கொண்டிருந்தவனின் மொபைலில் செய்தி வந்ததற்கான நோடிபிகேஷன் வர, அதை எடுத்துப் பார்த்தவனின் விழிகள் தன்னையறியாமல் மலர்ந்தது.
புகைப்படத்தின் மீது சிறிது நேரம் விழிகள் பதிந்தே இருந்தது. ஏனோ அவளின் படம் அவன் மனதில் சிறு சலனத்தை உண்டாக்கியது. தன் மனநிலையை எண்ணி சிரித்துக் கொண்டவன் உடனே தன் நண்பன் ஒருவனுக்கு புகைப்படத்தை அனுப்பி அவளைப் பற்றி விசாரிக்கச் சொல்லிவிட்டு மீண்டும் தனது கட்டுரையை படிக்க ஆரம்பித்து விட்டான்.

குணாவும், அர்ஜுனும் மாடியில் அமர்ந்திருந்தனர். கடையில் நடந்தவைகளை எல்லாம் குணா தம்பியிடம் பகிர்ந்து கொண்டிருந்தான். மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்தான்.

“என்ன வாழ்க்கைடா இது! என் குழந்தையை விட்டு தள்ளி இருக்க வேண்டிய நிலைமை.
கட்டிக்கிட்டு வந்தவள் பேயா இருக்கா. அம்மாவைப் பார்த்தால் பாவமா இருக்கு. கூட பிறந்தவனோட காதலுக்கும் குழி தோண்டியாச்சு”.

“குணா! ரொம்ப யோசிக்காதே! ஏற்கனவே அம்மா ரொம்ப வருத்தத்தில் இருக்காங்க. நீயும் இப்படி உடைஞ்சு போனா யார் பார்க்கிறது சொல்லு?”

“கடைக்கு வந்து அப்படி பேசிட்டு போறாடா. சீ! இவள் எல்லாம் என்ன பொண்ணுன்னு தோணுது”.
“பேசாம அவங்களையும் குழந்தையையும் கூட்டிட்டு வந்துடு குணா”.

“ஏன் யாருக்குமே நிம்மதி இல்லாம போகவா. அவ மட்டும் இங்கே வந்தா அடுத்து அம்மாவை ஒரேடியா தூக்கி கொடுக்க வேண்டியது தான்”.

“இல்ல குணா! அவங்களை அவங்க அம்மாவோட விட்டு வைக்கிறது தப்பு. இது எல்லாவற்றுக்கும் காரணம் அந்தம்மா தான்”.

“நீ சொல்றது சரி தான். ஆனா அவளை இங்கே அழைச்சிட்டு வந்து வச்சுகிட்டா நம்மள ஒரு நாள் கூட நிம்மதியா வாழ விட மாட்டாடா. படுத்தி எடுப்பா”.

“உன்னுடைய குழந்தையையும் நீ யோசிக்கணும். அவங்களை எப்படி ஹான்டில் பண்ணனும்னு நீ கத்துக்கோ குணா. உனக்கு வேற சாய்ஸ் இல்ல. இப்படியே பயந்து ஓடிகிட்டே இருந்தா அவங்களோட கை தான் ஓங்கும்”.

“சுடர் இவளை மாதிரி இல்லடா. அது நல்ல பொண்ணு. இவ என்னவேணா சொல்லுவாடா”.

“நீயாவது சுடரைப் பற்றி புரிஞ்சு வச்சிருக்கியே” என்றான் சலிப்பாக.

“அம்மா கயல் போன துக்கத்தில் கண்டபடி பேசிட்டாங்க அர்ஜுன். கயல் கிடைச்சிட்டா எல்லாம் சரியாகிடும்-டா”.

“ரொம்ப கஷ்டம் குணா. அம்மா விட்ட வார்த்தைகள் சாதரணம் இல்லை. உன் பொண்டாட்டிக்கு அது பழக்கமாக இருக்கலாம். சுடர் அப்படிபட்டவ இல்ல இல்லையா? அந்த வார்த்தைகளை நினைச்சு நினைச்சு குமுறிக் கொண்டு இருக்கிறாள்”.

“நான் கல்யாணம் பண்ணிக்காமையே இருந்திருக்கலாம் அர்ஜுன்”.

“குணா! என்ன நீ? விடு! நான் சொல்றபடி முதல்ல அவங்களை அழைச்சிட்டு வருகிற வழியைப் பாரு. முதல்ல உன் மாமியாருக்கு ஆப்பு வைக்கணும். அப்போ தான் நம்ம வீடு சரியாகும்”.

“அதென்னடா என் மாமியாரு? உன்னுடைய வருங்கால மாமியாரும் தானே?” என்றான் கிண்டலாக.

“அது நடக்கும் போது பார்த்துக்கலாம். குட்டிப் பையனை அழைச்சிட்டு வா குணா. அம்மாவுக்கும் கொஞ்சம் மனநிலை மாறும்”.

“சரிடா! வரட்டும் இங்கே அப்புறம் இருக்கு அவளுக்கு”.

அவர்கள் இருவரும் பேசிவிட்டு வந்து அன்னையிடம் சொல்ல, முதலில் அவர் மறுத்தாலும் பின்னர் ஒத்துக் கொண்டார். அதன்படி இரு நாட்களில் குணா சென்று வசந்தியை அழைத்து வந்து விடலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

கல்யாணிக்கு தான் மனம் ஒரு நிலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. அவருக்கு வசந்தியை அழைத்து வர மனமில்லை என்றாலும் குணாவிற்காக தான் ஒத்துக் கொண்டார்.
 
  • Like
Reactions: Kothai suresh

Kothai suresh

Member
Jan 26, 2022
82
17
18
வசந்தி யையும் அவ அம்மாவையும் பிரிச்சு வைச்சாலே பாதி பிரச்சனை சரியாகிடும்
 
  • Love
Reactions: SudhaRavi50

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
329
323
63
வசந்தி யையும் அவ அம்மாவையும் பிரிச்சு வைச்சாலே பாதி பிரச்சனை சரியாகிடும்
நன்றி அக்கா.....................