அத்தியாயம் – 4
பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த தீபனின் மனம் தவித்துக் கொண்டிருந்தது. ஆனந்திடம் தங்களின் காதலை சொல்லி இருக்கலாம். ஆனால் அவன் அதை எப்படி எடுத்துக் கொள்வானோ என்கிற யோசனையும், பட்டென்று விஷயத்தை போட்டுடைத்து அவனுடைய கோபத்திற்கு ஆளாகி விட்டால் சமாதானப்படுத்த நேரமில்லாமல் போய் விடும் என்கிற காரணத்தினாலேயே சொல்லாமல் கிளம்பி இருந்தான். விரைவாக வேலையை முடித்துக் கொண்டு வந்து பேசிவிட வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.
அதே நேரம் தாட்சாயினி தன்னவனின் நினைவுகளுடனே படுத்திருந்தாள். இந்நேரம் பேசி இருப்பானா? அவனுடைய அப்பாவும், அம்மாவும் என்ன சொல்லி இருப்பார்கள்? நான் தான் மகனின் மனம் கவர்ந்தவள் என்று தெரிந்ததும் அவர்களின் மனநிலை என்னவாக இருக்கும்? என்று பல்வேறு சிந்தனைகளில் உழன்று கொண்டிருந்தாள்.
ஆனந்தும் நண்பன் கிளம்பி விட்டான் என்கிற தகவலை அறிந்து கொண்டு தன் வழக்கமான பணிகளை தொடர ஆரம்பித்தான். அங்கயற்கண்ணியும், மீனாட்சி மட்டும் எந்நேரமும் அவளின் திருமணத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள்.
வேலனோ அலுவலகத்தில் நடந்த சம்பவத்திற்குப் பின் ஆழ்ந்த சிந்தனையுடனே இருந்தார். ஆனந்தை கூப்பிட்டு பேசவும் செய்தார். அவர் முகத்தில் எந்நேரமும் சிந்தனைக் கோடு ஓடிக் கொண்டே இருந்தது. பெண்ணின் திருமணத்தை தாண்டி ஆனந்தின் எதிர்காலம் குறித்த சிந்தனையே அவருக்கு கவலையை அளித்தது.
தீபன் கிளம்பிய மறுநாள் இரவு உணவை முடித்துக் கொண்டு அனைவரும் படுக்கச் சென்றுவிட, வேலன் அன்னையின் அறைக்குச் சென்றார். மகன் அந்நேரத்திற்கு தன் அறைக்கு வந்திருப்பதை யோசனையுடன் பார்த்தவர் “வா வேலா. உட்கார்!” என்றார்.
“ஒரு முக்கியமான விஷயமா உங்க கிட்ட பேச வந்தேன்-மா”.
“பேத்தி கல்யாணத்தைப் பற்றி தானே”.
“இல்லம்மா. இது வேற ஒரு விஷயம்”.
மகனை கூர்மையான பார்வையால் அளந்தபடி “எனக்கும் நம்ம குடும்பத்திற்கும் அவள் தான் முக்கியம் வேலா”.
“ம்ச்...அம்மா! ப்ளீஸ்! நான் சொல்ல வருவதை கேளுங்க”.
“அது நீ சொல்லப் போகும் விஷயத்தை பொறுத்து வேலா”.
“ம்மா! நேற்று நம்ம ஆபிசில் நமக்கு கீழே வேலை பார்க்கும் ஒருவன் ஆனந்தை மோசமா நடத்திட்டான்”.
“இதை சொல்லவா இந்த நேரத்திற்கு வந்த?”
அவரின் பேச்சை காதில் வாங்காமல் “ஆனந்தோட முகம் சுருங்கிப் போச்சு. பார்க்கவே பாவமாக இருந்தது. இங்கே அவன் என் மகனாக வளர்கிறான். அப்படி இருக்கும் போது நம்ம கிட்ட சம்பளம் வாங்கும் ஒருவன் என் மகனை அவமதிப்பது தப்பில்லையா? அதற்கு நானும் இடம் கொடுத்திருக்கிறேன்னு நினைக்கிறேன்-மா”.
“உன்னைத் தவிர உன் பொண்டாட்டியைத் தவிர ஊரில் இருப்பவர்கள் அனைவருக்கும் அவன் இடம் எது என்று நல்லாவே தெரியுது. அவன் உன் மகன் மாதிரி தான் மகனில்லை. உன் ரத்தமில்லை. அதை முதலில் நன்றாக புரிஞ்சுக்கோ”.
“அம்மா! நான் சொல்ல வருவதை நீங்க புரிந்து கொள்ளுங்கள். அவனோட கடந்த காலம் முடிந்து போன ஒன்று. இப்போ அவன் என் மகன். அவனுக்கான மரியாதை நம்ம கம்பனியில் கிடைத்தாகணும். எனக்கு அடுத்த இடம் அவ....” என்று அவர் முடிக்கும் முன் “வேலா!” என்று கத்தி விட்டார்.
“இது...இதற்கு தான் பயந்தேன். அவன் என்னைக்கும் உன் இடத்திற்கு வர முடியாது. இங்கே இருக்கிற எல்லாவற்றிற்கும் சொந்தக்காரி என் பேத்தி மட்டும் தான்”.
“அம்மா! ஏம்மா உங்களுக்கு அவன் மேல இத்தனை வன்மம்? சின்ன பையன்-மா. என்னுடைய வளர்ப்பில் வளர்ந்தவன். அவன் கிட்ட உங்களுக்கு ஏன் இத்தனை கோவம்?”
“ஏன்னு கேட்கிறியா வேலா? அதுக்கு காரணம் நீ தான். ஒருவனுக்கு உதவி பண்ண நினைச்சா எப்படி வேண்டுமானாலும் பண்ணலாம். நீ அவன் மேல பரிதாபப்பட்ட, உதவி செய்த எல்லாம் சரி தான். ஆனா அவனை உன் மகனா வளர்க்க நினைத்த பாரு அது தான் தவறு. உனக்கொரு மகள் இருக்கும் போது எதுக்கு அந்தப் பையனை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்த?”
“என்னமோ மனசுல அவன் மேல ஒரு பாசம்,அன்பு அழைச்சிட்டு வந்துட்டேன். வருடங்கள் போகப் போக உங்களுக்கு அவன் மேல இருக்கும் கோபம் குறையும் என்று நினைத்தேன். ஆனா நீங்க இப்பவும் அதே மாதிரி தான் நடத்துறீங்க. என் வீட்டுலேயே அவனுக்கு இது நடக்கும் போது வெளியில் உள்ளவர்களை என்ன சொல்ல?”
“உன் மகள் இடத்திற்கு இன்னொருவனை கொண்டு வரணும் என்று நீ நினைத்தது முதல் தவறு. அடுத்து நான் அவனை ஏற்றுக் கொள்ளனும் என்று நினைத்தது அடுத்த தவறு. இந்தக் குடும்ப வாரிசு என்றால் என் பேத்தி மட்டும் தான்”.