Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 4 | SudhaRaviNovels

அத்தியாயம் - 4

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் – 4

அறைக்குள் நடந்து கொண்டிருந்த சித்தார்த்திற்கு தலை வெடிப்பது போலிருந்தது. தன்னிடமிருந்து எந்த செய்தியும் வரவில்லை என்று வர்ஷு தவித்து போயிருப்பாள் என்பதை உணர்ந்தவன் மனது என்ன செய்வது என்று புரியாமல் தவித்தது. தந்தையிடம் இருந்து இப்படியொரு செயலை எதிர்பார்க்கவில்லை.

வர்ஷுவின் குடும்பத்தில் தான் காதலுக்கு எதுவும் பிரச்சனை வரும் என்று நினைத்திருக்க, தனது தந்தையே இப்படி விவகாரமாக செயல்படுவார் என்று நினைக்கவில்லை. முதலில் இங்கிருந்து எப்படியாவது வெளியேற வேண்டும். அவளுக்கு செய்தி அனுப்பவில்லை என்றாலும் நண்பர்களுக்காவது தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தான்.

தந்தையின் கையாள்களிடம் அலைபேசியை பெற முயன்று முடியாமல் போனது. அங்கிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்து தலைவலி வந்தது தான் மிச்சம். அவனை மடக்கும் எல்லா வழிகளையும் தந்தை பிரயோகித்திருந்தார். அவனை மொத்தமாக அங்கேயே முடக்கிப் போடும் வழியும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் போனான்.

இப்படியே ஒரு வாரம் கழிந்திருந்த நிலையில் தனக்கு உணவு கொண்டு வரும் பையனை மெதுவே தாஜா செய்து அவனிடமிருந்து அலைபேசியை வாங்கி இருந்தான். அவனோ பயத்துடன் இரு கால்களுக்கு மட்டுமே அனுமதி என்கிற கண்டிஷனோடு கொடுத்தான்.

அவசரமாக அலைப்பேசியை எடுத்துக் கொண்டு ரெஸ்ட் ரூமிற்குள் புகுந்து கொண்டு வர்ஷியை அழைத்தான். அவளோ புது எண்ணிலிருந்து அழைப்பு வரவும் அதை நிராகரித்தாள். இருமுறை தவிப்புடன் அழைத்து ஓய்ந்தவன் இது வேலைக்கு ஆகாது என்று உணர்ந்து சரவணனுக்கு அழைத்தான்.

அவன் அழைப்பை எடுத்ததும் அவசரமாக அவனிடம் தனது நிலையை கூறினான். அவனும் அங்கிருந்த நிலையை சித்தார்த்திற்கு எடுத்துக் கூறினான். அதை கேட்டு சித்துவிற்கு பேரதிர்ச்சி. தந்தை இத்தனை வேகமாக செயல்படுவார் என்று நினைக்கவில்லை.

உடனே தன்னை சமாளித்துக் கொண்டவன் சரவணனிடமிருந்து சில தகவல்களைப் பெற்றுக் கொண்டு தனது அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்துரைத்தான்.

“நான் சொல்றபடி நீ ஏற்பாடு செஞ்சிடு சரவணா. நான் எப்படியும் வந்து சேர்ந்திடுவேன்” என்று கூறி போனை அணைத்தான்.

அதற்குள் அந்த பையன் வெளியில் கதவை தட்ட ஆரம்பித்தான். அதிக யோசனை செய்யாமல் உடனே அந்த எண்ணிலிருந்து அன்னைக்கு அழைத்தான்.

உடனே எடுத்த பிம்லா தேவி “சொல்லு பேட்டா” என்றார்.

அதில் அதிர்ந்தவன் “மாம்! எப்படி உங்களுக்கு தெரியும் நான் தான் கூப்பிடுறேன்னு? இந்த நம்பர் நியூ நம்பர்ல இருந்து கூப்பிடுறேனே”.

“பேட்டா! நீ இப்போ எங்கே இருக்க என்ன பண்ற எல்லாம் எனக்கு தெரியும். பப்பா சொல்றதை கேட்டு அங்கேயே இரு. தப்பா எதையும் முயற்சிக்காதே. அது நீ அன்பு வைத்திருக்கிறவங்களுக்கு நல்லதில்லை”.

“மாம்! என்னை மிரட்டி பார்க்குறீங்களா?”

“உண்மையை சொல்றேன் பேட்டா! நம்ம குடும்பத்துக்கு எது நல்லது கெட்டதுன்னு எங்களுக்கு தெரியும். அனாவசியமா எதையும் முயற்சி செய்யாதே. நானோ அப்பாவோ இல்ல உன்னுடைய பிரிய தாதியோ அதை விரும்ப மாட்டோம்”.

“இது என்னுடைய வாழ்க்கை மாம்!”

“நம்ம குடும்பத்து ஆட்களுக்கு தனிப்பட்ட விருப்பம் எதுவும் இருந்ததில்லை. எல்லாமே தொழிலை முன்வைத்து தான். சோ நம்ம தொழிலுக்கு எது நல்லதோ அது தான் நமக்கும் நல்லது”.

“என்னால முடியாது மாம்!”

“நான் சொல்றதை சொல்லிட்டேன் அப்புறம் உன்னிஷ்டம்” என்று கூறி அலைப்பேசியை வைத்து விட்டார்.

அவனுக்கு பேரதிர்ச்சி. முதலில் தந்தை மட்டும் தான் தன்னை தடுக்கிறார் என்று எண்ணி இருந்தவனுக்கு இப்போது குடும்பமே தனக்கு எதிராக இருப்பது தெரிந்ததும் உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த நெருப்பானது பற்றி எரிய ஆரம்பித்தது. யார் தடுத்தாலும் வர்ஷினி தான் என் மனைவி.

அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே வெளியே வந்தவன் அந்த பையனிடம் போனை கொடுத்து விட்டு தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தான். இன்று மாலைக்குள் இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும் என்று அவன் மனம் பரபரத்தது. வர்ஷினி அழுததைப் பற்றி சரவணன் சொன்னது மனதை காயப்படுத்தியது.

தந்தை வேகமாக இருக்கிறார் என்றால் நிச்சயம் அடுத்த கட்ட நடவடிக்கைக்கும் தயாராக இருப்பார் என்று புரிந்தது. அன்னையின் பேச்சில் அது உறுதியானது. அதுவரை அவனது வாழ்வில் இப்படியொரு சந்தர்ப்பத்தை சந்தித்ததில்லை. எப்படியாவது அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்கிற வெறி எழ, தீவிரமாக யோசித்து சில, பல முடிவுகளை எடுத்துக் கொண்டான்.

அன்று மாலையே அந்த ஹோட்டலில் இருந்து சித்தார்த் தப்பி இருந்தான். அவனை தேடி ஏர்போர்ட் ரயில்வே ஸ்டேஷன் என்று எல்லா இடங்களிலும் தேடலை தொடங்கி இருந்தனர். அவனோ நகரத்தை விட்டு செல்லும் லாரி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தான்.

அவனது வாழ்வில் அப்படியொரு பயணத்தை மேற்கொண்டது இல்லை. காதலுக்காக எதையும் எதிர்க்கும் தைரியம் வந்திருந்தது. கையிலிருந்த காசை வைத்து புது போன் ஒன்றை வாங்கி அதில் புதிய சிம்மை போட்டவன் நண்பர்களுக்கு அழைத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவித்து விட்டே நிம்மதியானான்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
நீரஜோ இங்கே டென்ஷனாகி தனது ஆட்கள் முழுவதையும் கோயம்பத்தூரில் அவன் படித்த கல்லூரியை சுற்றியும், அவளது வீடு இருக்கும் பகுதியை சுற்றிலும் இறக்கி விட்டார். எப்படியும் மகன் அவளைத் தேடி வருவான் என்பது புரிந்து காத்திருக்கலானார்கள்.

சரவணனும், மற்றவர்களும் நடப்பது என்ன என்பதை உணர்ந்து கொண்டார்கள். இது எதையுமே அறியாத வர்ஷினி அன்று காரில் ஏறி போய் விட்டு வந்த பிறகு பேயறைந்தது போலவே இருந்தாள். அவளுக்கு உடல்நலம் சரியில்லை என்று எண்ணிய பெற்றவர்களுக்கு, கல்லூரிக்கு விடுப்பு கொடுத்து வீட்டிலேயே வைத்துக் கொண்டனர்.

அவளோ தன் காதில் வந்து விழுந்த வார்த்தைகளை எண்ணி-எண்ணி மறுகிக் கொண்டிருந்தாள். தங்கள் காதலுக்கு எதிர்ப்பு வரும் என்று நினைத்தாலும் இப்படியொன்றை அவள் எதிர்பார்க்கவே இல்லை. மனமோ உள்ளுக்குள் அழுது கரைந்து கொண்டிருந்தது. ஒன்றரை வருட காதலில் அவன் மீதான அன்பு எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மாறப் போவதில்லை. ஆனால் அந்த வார்த்தைகளை கேட்ட பின்பு என்ன மாதிரி உணர்வது என்றே தெரியவில்லையே என்றெண்ணி வெளியில் தெரியாமல் தனக்குள்ளேயே அழுதாள்.

அக்காவின் முகத்தைப் பார்த்த தான்யாவிற்கு எதுவோ சரியில்லை என்று மட்டும் தோன்றியது. நிச்சயமாக உடல்நலத்தை விட, அவளது மனம் எதனாலோ பாதிக்கப்படிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டாள்.

கதவை சாற்றி விட்டு அக்காவின் அருகில் சென்றவள் “அக்கா! என்னாச்சுக்கா?” என்றாள் மெல்லிய குரலில்.

தங்கை கேட்டதும் அதுவரை அடக்கி வைக்கப்பட்டிருந்த அழுகை உடைப்ப்பெடுக்க அவளது மடியில் படுத்து கதறி விட்டாள். வர்ஷிணியின் அழுகையை கண்டு திகைத்துப் போனவள் அவளது தலையை வருடிக் கொடுத்து மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தாள்.

தங்கை பேசியதும் தன் மனதிலிருந்தவற்றை எல்லாம் அவளிடம் பகிர்ந்து கொண்டாள். வர்ஷினி சொன்னவற்றை எல்லாம் கேட்ட தான்யாவிற்கும் அழுகை தான் வந்தது. அவளும் சிறு பெண் தானே. திரையில் பார்த்த காதலுக்கும் நிஜத்தில் நடப்பவற்றிற்கும் இருக்கும் வேற்றுமை புரிந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் தவித்தது.

அதிலும் வர்ஷினி சொன்ன வாக்கியங்களும் அவள் நெஞ்சிலும் ஊசியாய் குத்தியது.அன்பிற்கும் விலை உண்டா? அதற்கும் தகுதி தேவைப்படுகிறதா? என்கிற கேள்விகள் நெஞ்சை தாக்கியது.

அக்காவும், தங்கையும் தங்களின் துக்கத்தை வெளிகாட்டாது தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டனர். அன்னை, தந்தைக்கு தெரிந்தால் பெரிய பிரச்சனை என்பதால் தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டனர். தான்யா மட்டும் அடுத்த நாள் பள்ளிக்கு சென்று வர, அவளது கண்களில் தங்கள் தெருவை சுற்றிக் கொண்டு இருக்கும் அந்த புதிய மனிதர்கள் பட்டார்கள்.

ஏனோ அவர்களை கண்டு அவளது மனம் பதைபதைத்தது. அக்காவின் காதல் கைகூடாதோ என்கிற எண்ணம் எழுந்தது.

சித்தார்த்தின் வருகைக்காக இவர்கள் காத்திருக்க, அவனோ ஊட்டியில் சென்று இறங்கி இருந்தான். அவனது நண்பர்களின் உதவியுடன் அங்கு ஒரு எஸ்டேட் தொழிலாளியின் வீட்டில் தங்கிக் கொண்டான்.

மூன்று நாட்கள் கல்லூரியையும், அவளது வீட்டையும் சுற்றி சுற்றி வந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவன் எந்த வகையிலும் அவளை தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை என்பதே எரிச்சலை கொடுத்தது நீரஜ் மல்ஹோத்றாவிற்கு.

வர்ஷிணியும் உடல்நலமில்லாமல் மூன்று நாட்களாக வீட்டிலேயே அடைந்து கிடக்க, மகனை கண்டுபிடிக்கவும் முடியாமல் தான் எதிர்பார்த்தது எதுவும் நடக்காமல் கடுப்பாகி போனார். ஆட்களில் பாதி பேரை தமிழ்நாட்டை சுற்றி உள்ள இடங்களுக்கு அனுப்பிவிட்டு ஒன்றிரண்டு பேரை மட்டும் கல்லூரியை காவல் காக்க வைத்தார். அவளது வீட்டைச் சுற்றியும்.

நான்காம் நாள் தனது மனதை சீர்படுத்திக் கொண்டு கல்லூரிக்கு கிளம்பினாள் வர்ஷினி. அவளிடம் பேசி பேசியே அவளது மனதை சரிபடுத்தி இருந்தாள் தான்யா. சித்தார்த் நிச்சயம் தனக்கு எந்தவிதத்திலாவது தகவல் தருவான் என்கிற நம்பிக்கையும் பிறந்திருந்தது.

அதனால் வரவழைத்துக் கொண்ட உற்சாகத்துடன் கல்லூரிக்கு கிளம்பிச் சென்றாள். அவளது வருகையை கண்டதும் நீராஜின் ஆட்கள் உஷாரானார்கள். அவளை சந்திக்கவென்று எப்படியும் சித்தார்த் வருவான் என்பது அவர்களது எண்ணம்.

கல்லூரியை பார்த்ததுமே தன்னவனின் நினைவு எழ, மீண்டும் சுணங்கிய மனதிற்கு கடிவாளமிட்டு விட்டு முன்னே நடந்தவளின் அருகே வந்தனர் சரவணனும் மற்றவர்களும். அவர்களைப் பார்த்ததுமே அவனிடமிருந்து செய்தி எதுவும் வந்திருக்குமோ என்கிற ஆர்வத்துடன் “சி...சித்து கிட்ட இருந்து எதுவும் நியுஸ் வந்துச்சா அண்ணா?” என்றாள் பரபரப்புடன்.

அப்போது அவர்களிடம் அவள் பேசுவதை அந்த அடியாட்கள் கவனிப்பதை குறித்துக் கொண்ட சரவணன் “இல்லம்மா எதுவுமில்ல” என்றவன் நகர்ந்து கொண்டே “உன் பிரெண்ட் மாலினி கிட்ட சொல்லி அனுப்புறேன்” என்றுவிட்டு அங்கிருந்து சென்றான்.

அவன் எதற்கு அப்படி சொல்லி சென்றான் என்று புரியாமல் அந்த இடத்திலேயே திகைத்து நின்று விட்டு தனது வகுப்பிற்கு நடந்தாள். தன்னை சுற்றி எல்லாமே மர்மமாக நடப்பது போல தோன்றியது.அப்போது அவளின் பின்னே ஓடி வந்து அவளுடன் இணைந்து கொண்டாள் மாலினி.

“என்ன வர்ஷூ? உடம்பு சரியில்லையா? என்னடி நடக்குது? சித்தார்த் வேற டிசி வாங்கிட்டு போயாச்சாமே?”

சட்டென்று கால்கள் தடுமாற நின்றவள் “ப்ளீஸ்! அதைப் பற்றி பேசாதே” என்றாள்.

அவளோ தோளோடு அணைத்துக் கொண்டு “கவலைப்படாதே வர்ஷ்! உன் ஹீரோ வந்தாச்சு உன்னை தூக்க” என்று முணுமுணுத்தாள்.

விழிகள் விரிய “என்ன சொல்ற?” என்றாள் மகிழ்ச்சியில்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
நெருக்கமாக அவளை பிடித்துக் கொண்டு மெல்லிய குரலில் “சித்தார்த் ஊட்டியில் இருக்கான். நீ அங்கே போகணும். அங்கேயே வச்சு நம்ம பிரெண்ட்ஸ் முன்னிலையில் கல்யாணம் பண்ணனும் முடிவு பண்ணி இருக்காங்க” என்று குண்டை தூக்கிப் போட்டாள்.

“என்னது கல்யாணமா?” என்று கேட்டு அதிர்ந்து நின்றாள்.

அவளை கடுப்புடன் பார்த்த மாலினி “உனக்கு சித்தார்த் வேணுமா வேண்டாமா? ஏற்கனவே அவன் பாமிலியில் உன்னை கண்காணிக்கவும், காலேஜை கண்காணிக்கவும் ஆட்கள் போட்டிருக்காங்க. அப்படி இருக்கும் போது இந்த சந்தர்ப்பத்தை விட்டா நீ சித்தார்த்தை இழக்க வேண்டி இருக்கும்” என்று மிரட்டினாள்.

இப்படியொரு நிகழ்வை அவள் எதிர்பார்க்கவில்லை. அதிலும் இத்தனை சீக்கிரம் ஒரு பெரிய முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் வரும் என்றும் சிந்திக்கவில்லை. என்ன செய்வது? பெற்றவர்களிடம் பொய் சொல்வதா? சித்தார்த்தை இழக்க தன்னால் முடியுமா? இந்த திருமணம் நடந்தாளும் அவனது குடும்பத்தினர் தன்னை ஏற்றுக் கொள்வார்களா என்பதே கேள்விகுறி தான். சித்தார்த் இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்க கூட முடியவில்லை.

தன் மீதும் கல்லூரியின் மீதும் இத்தனை கண்காணிப்பு இருக்கும் போது எப்படி இங்கிருந்து ஊட்டிக்கு செல்வது? அதிலும் பெற்றவர்களிடம் எப்படி அனுமதி கேட்பது? என்ன காரணம் சொல்ல முடியும்? என்று பலவாறாக யோசித்தாள். என்ன முயன்றும் அதற்கான தீர்வை கண்டுபிடிக்க முடியவில்லை.

மாறி மாறி யோசித்து குழம்பிக் கொண்டிருந்தவளேயே பார்த்துக் கொண்டிருந்த மாலினி இதழில் எழுந்த புன்னகையுடன் “நீ ரொம்ப வொரி பண்ணாதே வர்ஷூ. சித்தார்த்தும் நம்ம பிரெண்ட்சம் பார்த்துப்பாங்க”.

கலங்கிய கண்களுடனும் பயத்துடனும் “அம்மா அப்பாவை எப்படி சமாளிப்பாங்க?” என்றாள்.

“பயப்படாதே”

அவளது கைகளை இறுகப் பற்றிக் கொண்டவள் “எனக்கு பயமா இருக்கு மாலு” என்றாள்.

அவளது கைகளைத் தட்டிக் கொடுத்து “ப்ரீயா இரு! அதே சமயம் ரெடியா இரு. அவங்க எப்படி ப்ளான் பண்ணுவாங்கன்னு தெரியாது. உடனடியா கிளம்புகிற மாதிரி கூட இருக்கலாம்”.

உடல் வெடுவெடுக்க அடுத்து என்ன நடக்கப் போகிறது என்கிற பயத்துடன் அமர்ந்திருந்தாள் வர்ஷினி. எதிலும் கவனத்தை வைக்க முடியவில்லை. விழிகளோ வெற்றிடத்தை வெறித்தபடி இருந்தது. மதிய நேரம் கடந்திருந்தது.

மாலினி அவளது நிலையை யோசித்து காண்டீனிற்கு அழைத்துச் சென்று டீ வாங்கிக் கொடுத்து அமர வைத்தாள். அவள் அதை அருந்தி முடிக்கும் நேரம் சரவணனும், மற்ற நண்பர்களும் அவசரம் அவசரமாக வந்து அவள் முன் நின்றனர்.

“வர்ஷு! எதுவும் கேட்காம எங்க கூட கிளம்பு. சித்தார்த் உனக்காக காத்துகிட்டு இருக்கான். நாளைக்கு உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்” என்றனர் மெல்லிய குரலில்.

அதிர்ந்து எழுந்து கொண்டவள் “நா...நான் சித்து கிட்ட பேசணுமே” என்றாள் கலவரத்துடன்.

உடனே அவனுக்கு அழைத்து அலைப்பேசியை அவள் கையில் கொடுத்தார்கள்,

கலங்கிய கண்களுடனும் நடுங்கிய கைகளுடனும் அலைப்பேசிய வாங்கியவள் “சி..சித்து” என்றாள்.

“வர்ஷூ!” என்று அவளது பெயரை உயிர் வரை அழைத்தவன் கண்கள் கலங்கி இருக்க “நமக்கு அதிக நேரமில்ல-டா. நீ அவங்களோட கிளம்பி வந்துடு. இங்கே எல்லாம் தயாராக இருக்கும். மாலினியும் உன் கூட வருவா” என்று கூறி வைத்துவிட்டான்.

போனை வெறித்து பார்த்தவளின் விழிகளில் வலியும், பயமும் இருந்தது. கலங்கிய விழிகளுடன் சரவணனிடம் “போகலாம்” என்றாள்.
 

Chitra Balaji

Active member
Feb 5, 2020
125
68
28
Aiyayo அவன் ooty la இருக்கான் ivala தான் kankaanichikite இருக்காங்க le..... அவல vera kutikitu போய் enna miratti vittu இருக்காங்க nu theriyala பயங்கரமா காலைல இருக்கா....... அவல எப்படி யாரு கண்ணுல yum படாமல் ooty போக முடியும் ava parents kita enna solluvaa...... Enna aaga pooguthoo... Super Super maa.... Semma episode