அத்தியாயம் - 4

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,546
1,114
113
அத்தியாயம் –4உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க, தன்னவளிடம் என்னவெல்லாம் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டே உற்சாகத்துடன் வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான்.ஏனோ இனம் புரியாத படபடப்பு தொற்றிக் கொள்ள, கார் ரியர்வியு மிரர்ரில் தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டும். தலையை கைகளால் அழுந்த கோதி விட்டு சரி செய்து கொண்டு கீழே இறங்கினான். தனது செயல்களை நினைத்து அவனுக்கே வெட்கப் புன்னகை இதழில் வந்தமர்ந்தது.“என்ன இது! சின்னப் பையன் மாதிரி நடந்துக்கிறேன்” என்று தன்னைத் தானே கடிந்து கொண்டு காலிங் பெல்லை அழுத்தினான்.தங்கையின் உடைகளை அயர்ன் செய்து கொண்டிருந்த ரேணு தலையை நிமிர்த்தி கடிகாரத்தை பார்த்து விட்டு ‘யாரவது சேல்ஸ் ஆட்களாக இருக்கும். நமக்கு அவங்க கதவை தட்டுறது எரிச்சலாக இருக்கு. ஆனால் அவங்க, வயிற்று பிழைப்புக்காக ஒவ்வொரு முகத்தில் வந்து போகும் உணர்வுகளையும் சாதரணமாக எடுத்து கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருக்காங்க’ என்று எண்ணிக் கொண்டே மெல்ல கதவை ஒருக்களித்து திறந்து தலையை மட்டும் நீட்டி யாரென்று பார்த்தாள்.

அங்கே நின்றிருந்தவனைக் கண்டதும் தானாக முகம் மலர்ந்து போனது. அவளை அறியாமலே கண்கள் கடிகாரத்தின் பக்கம் திரும்பி மீண்டது.அவளது முகத்தில் வந்து போன உணர்வுகளையும், விழிகள் கடிகாரத்தின் பக்கம் சென்று மீண்டதையும் கண்டவனது இதழ்கள் புன்னகையை பூசிக் கொள்ள “இப்படி வெளியே வச்சு எவ்வளவு நேரம் சைட் அடிப்பீங்க மேடம்?” என்று கேலியாக கேட்டான்.அவனது கேலியில் முகம் சிவந்து போனவள் கதவை விரிய திறந்து விட்டு “உழைப்பாளர் திலகம் இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துருக்கீங்க? எல்லோருக்கும் லீவ் விட்டுட்டாங்களா? என்றாள் நக்கலாக.அவள் தலையில் லேசாக தட்டி “உன் கூட இருக்கணும்-னு ஓடி வந்திருக்கேன் இல்ல. உனக்கு என்னைப் பார்த்தால் கிண்டலாக தான் இருக்கும்” என்றான் சிறு முறைப்புடன்.அவன் சொன்ன விஷயம் மனதை தாக்க முகம் சுருங்கி, கண்கள் கலங்க “சாரி! நீங்க வேற பெண்ணை கட்டியிருந்தால் நல்லா இருந்திருப்பீங்க. என்னால தானே நாலு வருஷமா...” என்றவள் கேவலுடன் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.அவளின் நிலையை உணர்ந்தவன் “ரேணு! என்ன இது! சின்ன பிள்ளை மாதிரி அழுதுகிட்டு. யார் சொன்னா நான் நல்லாயில்லைன்னு? தாம்பத்தியம் மட்டும் தான் வாழ்க்கையா? இந்த நான்கு வருடங்களில் நான் உன்னை புரிந்து கொண்டதை விட, என்னை நீ புரிந்து கொண்டது அதிகமில்லையா? திருமண வாழ்க்கைக்கு தாம்பத்தியத்தை விட நல்ல புரிதல் தான் முக்கியம். அது நமக்கு நன்றாக அமைஞ்சிருக்கு. எனக்கு என்ன குறை சொல்லு? அன்பான மனைவி, நான் பெறாத மகளான நித்யா. இதை விட எனக்கு என்ன வேணும் சொல்லு?” என்று கூறி அவள் தலையை வருடினான்.அவனது கூற்றைக் கேட்டவுடன் மேலும் கண்ணீர் பொங்க நன்றாக அவன் மார்பில் சாய்ந்தவள் “நீங்க தான் அவளை மகளா நினைக்கிறீங்க. ஆனால் அவ உங்களை எதிரியா பார்க்கிறாளே. உங்க நல்ல மனசை புரிஞ்சுக்க கொஞ்சம் கூட முயற்சி பண்ண மாட்டேங்கிறாளே. நீங்க தாம்பத்தியம் முக்கியம் இல்லேன்னு சொன்னாலும், திருமண பந்தத்திற்கு ஆதாரமே அது தானே. என்னை கல்யாணம் பண்ணி கிட்டதால உங்க ஆசைகள் அனைத்தையும் குழி தோண்டி புதைச்சிட்டு ஊரார் முன்னாடி கெட்ட பெயரை வேற வாங்கிகிட்டு இருக்கீங்க. பேசாம என்னை டைவேர்ஸ் பண்ணிட்டு வேற பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க” என்று அழ ஆரம்பித்தாள்.அவளது பேச்சில் கோபமடைந்தவன்..தன்னிடமிருந்து விலக்கி “இதுக்காகவா நாலு வருஷம் உன் கூட வாழ்ந்தேன். உன் கிட்ட இருந்து இந்த வார்த்தையை எதிர்பார்க்கவேயில்லை. எப்படி ரேணு இந்த வார்த்தையை சொல்ல உனக்கு மனசு வந்துச்சு? என்னை அவ்வளவு கேவலமானவனா நினைச்சிருக்கியா? நீ என்னை விட்டு விலகி இருந்தாலும் இருந்திடுவ. என்னால உன்னை விட்டு ஒரு நிமிஷம் இருக்க முடியாது கண்ணம்மா. இதோ உன் கூட கொஞ்ச நேரமாவது செலவிடனும்-னு ஓடி வந்திருக்கேன். என்னைப் பார்த்து இப்படி சொல்லலாமா?” என்றான் பாவமாக.அவனது பாசத்தில் நெகிழ்ந்து போனவள்..அவசரமாக “இல்லைங்க! இனி, எந்த காலத்திலும் இப்படியொரு வார்த்தையை சொல்ல மாட்டேன் என்னை மன்னிச்சிடுங்க” என்றாள் கண்ணீர் சிந்தியபடியே.தன்னிடமிருந்த கைகுட்டையால் அவள் கண்ணீரை துடைத்துவிட்டு “ஹப்பா! எப்படி தான் இவ்வளவு கண்ணீர் வருதோ பெண்களுக்கு. ஆனா பாரு நாட்டில் எங்க பார்த்தாலும் தண்ணீர் பஞ்சம்-னு பேசிக்கிறாங்க” என்று கிண்டலாக பேசியவனை முறைத்தாள்.அதுவரை அவளுக்கு வாங்கி வந்திருந்த மல்லியை மறந்திருந்தவன் சட்டென்று ஞாபகம் வர “ஒரு நிமிஷம் இரு ரேணு வரேன்” என்றவன் காருக்கு சென்று பூவை எடுத்து வந்து அவள் கையில் கொடுத்தான்.அதைக் கண்டதும் முகம் மலர “இதை நீங்களே வச்சுவிடுங்க” என்றாள்.அவனோ தன் இருகைகளால் அவள் முகத்தை ஏந்தி கன்னங்களில் வழிந்திருந்த கண்ணீர் தடங்களை தடவியபடியே...அவள் முகம் நோக்கி குனிந்தவனின் இதழ்கள் கதை பேச ஆரம்பித்தது.அவனது செய்கையில் நிலைகுலைந்து போனவள் தன்னை அவனிடம் ஒப்புக் கொடுத்தாள்.சிறிது நேரம் தொடர்ந்த தீண்டலை, அவளின் நிலை கண்டு விலகியவன்...கன்னத்தில் லேசாகத் தட்டி “ரேணு! நான் போய் குளிச்சிட்டு வரேன். நீயும் முகம் கழுவிக்கோ. அழுதது நல்லா தெரியுது” என்றவன் அவளது குட்டி மூக்கை பிடித்து ஆட்டி “ இது வேற சிவந்திருக்கு. நித்யா வந்து நானென்னவோ உன்னை அடிச்சு வச்ச மாதிரி பார்ப்பா” என்று கூறி சிரித்தான்.அவனது திடீர் தாக்குதலில் உறைந்து போயிருந்தவள்..அவனது பேச்சிற்கு பதிலேதும் பேசாது தலையசைத்து விட்டு சமையலறைக்குச் சென்றாள்.அவன் குளிக்க சென்ற சிறிது நேரத்திற்குள் நித்யா தங்கள் வீட்டின் காலிங் பெல்லை அழுத்திக் கொண்டு நின்றாள்.நிரஞ்சன் வருவதற்குள் பக்கோடா போடலாம் என்றெண்ணி சமையலறைக்குள் நுழைந்திருந்த ரேணு முகம் கழுவ மறந்திருந்தாள்.அழைப்பு மணியின் சத்தம் கேட்டவுடன் அவசரமாக சென்று கதவை திறந்தவளை நித்யாவின் பார்வை துளைத்தது. கண்ணீர் காய்ந்திருந்த கன்னங்களும், சிவந்த மூக்கும் அவளுக்கு என்னென்னவோ கதைகளை கூறியது. வரும் போதே கண்டு விட்ட நிரஞ்சனின் கார் வேறு அவளது எண்ணங்களுக்கு தீனி போட்டது.அவசரமாக ரேணுவின் தோளில் கை போட்டவள் பதட்டத்துடன் “என்னக்கா இது! எதுக்கு அழுத? இன்னைக்கு என்ன சொன்னார்? உனக்காக யாருமில்லேன்னு நினைச்சாரா அவரு? கூப்பிடு அவரை இன்னைக்கே ரெண்டுல ஒன்னு தெரியனும்” என்று குதிக்க ஆரம்பித்தாள்.அதை கண்ட ரேணு “ஷ்..ஷ்...நித்தி! அத்தான் நீ நினைக்கிற மாதிரி இல்லை. ரொம்ப நல்லவங்க. நீ தான் தப்பா நினைச்சிட்டு இருக்க” என்றாள்.அவள் சொன்னதைக் கேட்டதும் இடுப்பில் கை வைத்துக் கொண்டு “அப்படியா! நீ சொல்றதை நான் ஒத்துகிறேன். ஆனால், எதுக்கு அழுத? அதுக்கு யார் காரணம்-னு மட்டும் சொல்லிடு” என்றாள் அழுத்தமாக.அழுத காரணத்தைக் கேட்டதும் என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டு நின்றாள். மனமோ ‘அதை எப்படி உன்னிடம் சொல்வேனடி. தங்கையிடம் சொல்லக் கூடிய விஷயமா அது. அப்படியே உடைத்துக் கூறினாலும் உன்னால் அதை புரிந்து கொள்ள முடியுமா? அதை நீ எப்படி ஏற்றுக் கொள்வாய்?’ என்று எண்ணி முகம் வாட நின்றாள்.ரேணுவின் முக மாற்றத்தை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு நிரஞ்சன் தான் அவளது அழுகைக்கு காரணம் என்று உறுதியானது.“சொல்ல முடியல இல்லை. ஏன் அக்கா? உனக்கு நான் இருக்கேன். தைரியமா சொல்லு. என்ன பிரச்சனை பண்றார் அவர்?” என்றாள் பதமாக.எதை சொல்லி தங்கையின் மனதை மாற்றுவது என்று புரியாமல் தவித்தவள் “அடுப்பில எண்ணெய் காயுது. பக்கோடா போட வச்சேன். நீயும் போய் முகம் கழுவிட்டு வா நித்தி. சூடா போட்டுத் தரேன்” என்றபடி சமையலறைக்கு ஓடினாள்.அந்த நேரம் விசிலடித்தபடியே அறையை விட்டு வெளியே வந்த நிரஞ்சன் நித்தியைக் கண்டதும், அதிர்ந்து போய் சமையலறையை ஒரு பார்வை பார்த்து விட்டு தனதறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டான்.அவன் சென்ற திசையை இகழ்ச்சியுடன் நோக்கி விட்டு உணவு மேஜை மேலிருந்த மல்லிகையை கண்டவுடன் ‘ என்னவோ பொண்டாட்டி மேல ஆசை உள்ளவர் மாதிரி பூவெல்லாம் வாங்கிட்டு வந்து சீன் போட ட்ரை பண்ணியிருக்கார்’ என்றவள் எரிச்சலுடன் அதை எடுத்து சாமி படத்துக்கு வைத்து விட்டு திரும்பினாள்.இரு தட்டுகளில் பக்கோடாவுடன் வெளியே வந்த ரேணு, நிரஞ்சன் வாங்கி வந்திருந்த மல்லிகையை எடுத்து சாமி படத்திற்கு நித்தி போடுவதை கண்டு ஏமாற்றத்துடன் ‘அவர் கூட வாழத்தான் அந்த சாமி வரம் கொடுக்கல. அவர் வாங்கிட்டு வந்த பூவை வச்சுக்க கூட எனக்கு விதியில்லை போலிருக்கு’ என்றெண்ணி பெருமூச்சு விட்டாள்.அக்காவின் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை மல்லிகையின் மேல் அவளுக்கு உள்ள ஆசையினால் விளைந்தது என்று தவறாக எண்ணி “கவலைப்படாதே அக்கா! உனக்கு சூப்பரான மதுரை மல்லி நான் வாங்கித் தரேன்” என்றாள்.மன்னவனுக்கும் மல்லிகைக்கும்

தொடர்பை இப்பேதை அறிவாளோ?

தன்னவன் கரங்களினால் சூடி கொண்ட

மல்லிகையின் மாண்பை அறிவாளோ

இந்நங்கை..அதை அறிய வைப்பானா

நம் நாயகன்?
 

Chitra Balaji

Member
Feb 5, 2020
43
27
18
Seriya loose ச இருக்கு போல இது... Ithu ellam என்னத்தை velaiku pogutho....romba paavam avanga rendu perum
 
  • Love
Reactions: sudharavi