Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 3 | SudhaRaviNovels

அத்தியாயம் - 3

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
329
323
63
அத்தியாயம் – 3

தெரிந்தவர்கள் மூலமாக கல்யாணிக்கு ஒரு துணிக்கடையில் சேல்ஸ் கேர்ல் வேலை கிடைத்தது. நாள் முழுவதும் நிற்க வேண்டிய வேலை தான். சந்தியா சொன்னது போல அவள் அதைப் பற்றி கவலைப்படவில்லை. ஆனால் பிள்ளைகளை தனியாக விட்டுப் போக வேண்டுமே என்று யோசிக்க, அப்போது அவளுக்கு ஆதரவாக வந்து சேர்ந்தார் அவளின் அத்தை.

திருமணமாகி குழந்தைகள் எதுவும் இல்லாமல் கணவரும் இறந்து போன பின்பு ஆதரவற்று இருந்தவருக்கு கல்யாணியின் நிலை தெரிய, தான் பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டு உனக்கு துணையாக இருக்கவா என்று கேட்டு வந்தார்.

அப்படியொரு உதவி கிடைக்கும் போது வேண்டாமென்று சொல்லாமல் உடனே அவரை தன்னுடன் தங்க வைத்துக் கொண்டாள். கல்யாணிக்கு வேலை கிடைத்திருப்பதை அறிந்ததும் உடனே கிளம்பி வந்தார் ஞானம்.

“வேலைக்குப் போக போறியாமே? யாரை கேட்டு முடிவு பண்ணின? நீ போக கூடாது”.

அவரின் பேச்சில் கடுப்பாகி “ஏன்?”

“துணிக்கடையில் வேலைக்கு போறது எல்லாம் நம்ம குடும்பத்துக்கு பழக்கமில்லை”.

“அப்படியா?”

“ஆமாம்!”

“அப்போ சரி! வேலைக்குப் போய் கிடைக்கிற சம்பளத்தை நீங்க கொடுத்திடுங்க. நான் போகல”.

“என்னடி கொழுப்பா?”

“என் குடும்பத்து வருமானத்துக்கு நான் எங்கே போக? யார் சொன்னாலும் நான் வேலைக்குப் போக தான் போறேன்”.

நாற்காலியிலிருந்து வேகமாக எழுந்து கொண்டவர் “இங்கே பாருடி கொழுப்பெடுத்து போய் ஆடுற. ஏதாவது உதவி தேவைபடுதுன்னு எங்க கிட்ட வந்தா செருப்பால அடிப்போம் சொல்லிட்டேன்”.

“வரும் போது பார்த்துக்கலாம்”

அவளை எரிக்கும் பார்வை பார்த்துவிட்டு வேகமாக வீட்டை விட்டு வெளியேறினாள்.

அதன்பின் வந்த நாட்கள் மாதங்கள் எல்லாம் கல்யாணிக்கு ஓட்டம் தான். காலையில் சமைத்து வைத்துவிட்டு ஓடுபவள் இரவு வரும் போது ஓய்ந்து போய் தான் வருவாள். தனது மனச் சுணக்கம் குழந்தைகளுக்கு தெரியக் கூடாது என்று எண்ணி உற்சாகமாக இருப்பது போல காண்பித்துக் கொள்வாள்.

அத்தை இருந்தது பெரும் உதவியாக இருந்தது. குழந்தைகளைப் பத்திரமாக பார்த்துக் கொண்டார். பெரியவன் வீட்டின் நிலையை புரிந்து கொண்டிருந்தான். சின்னவனும் அண்ணனைப் பார்த்து குறைகள் எதுவும் சொல்லாமல் பள்ளிக்கூடம் சென்று வந்தான்.

கயல் மட்டும் தான் அன்னையை விட்டு இருப்பதை எண்ணி அழுவாள். நாட்கள் செல்ல செல்ல அவளும் சூழ்நிலைக்குப் பழகிக் கொண்டாள்.

கடையில் கிடைத்த தொடர்புகள் மூலம் மெல்ல அருகே இருந்த அபார்ட்மென்ட்ட்களில் வீட்டு வேலைக்கு ஆள் தேவைப்படுவதை அறிந்து கொண்டாள். கடையை வேலையை விட்டுவிட்டு வீட்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள்.

அதற்கும் பலத்த எதிர்ப்பு வந்தது. வீட்டு வேலைக்குச் செல்வதால் குடும்ப மானமே போய் விட்டதாக சொல்லிக் காட்ட, எதையும் கண்டு கொள்ளவில்லை. அவளின் ஒரே குறிக்கோள் தனது பிள்ளைகளை படிக்க வைத்து நல்ல இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதே.

பிள்ளைகளைப் பற்றியும் கண்டபடி பேசினார்கள். தந்தை இல்லாத பிள்ளைகள் நல்ல முறையில் வளராது என்று. ஆனால் சிறு வயதில் இருந்தே அனைத்தையும் பார்த்திருந்தவர்களுக்கு அன்னையின் உழைப்பும் கஷ்டமும் புரிந்து போக, மூவரும் நன்றாகப் படித்தார்கள். அவளுக்கு உதவியும் புரிந்தார்கள்.

குணா படித்து முடித்து கிடைத்த வேலைகளை எல்லாம் பார்க்க ஆரம்பித்தான். பின்னர் எலெக்ட்ரிகல் ஷாப் ஒன்றை திறந்து விட்டான். முதலாளியாக அவன் அமர்ந்ததும் முதல் ஆளாக ஞானம் வந்து நின்றார்.

“மருமகனே உங்க அம்மாவை முதல்ல கூப்பிடாம நானும் மாமாவும் வந்து கடையைத் திறக்கிறோம்” என்றார் கடை திறப்பு அன்று.

அத்தையைப் பார்த்து புன்னகைத்தவன் “இல்ல அத்தை எங்கம்மா கையால தான் இந்தக் கடையைத் திறக்கனும். அதோட கடையும் அம்மா பேரில் தான் திறக்கவே போறேன்”.

அதில் கோபம் அடைந்தவர் “டேய்! உங்கம்மா ஒரு துக்கிரிடா. அவளை கூப்பிட்டு நல்லது எதுவும் செய்யக் கூடாது”.

“முடியாது அத்தை! எங்களுக்கு எங்கம்மாவை விட நல்லது நினைக்கிறவங்க யாரும் கிடையாது! அவங்க தான் வந்து திறப்பாங்க”.

அவனது பேச்சில் கடுப்பாகிப் போனவர் “கல்யாணி! உன் பிள்ளைக்கு நல்லது எதுவும் சொல்லிக் கொடுக்கலையா? வீட்டுக்குப் பெரியவர் மாமா. அவரை தானே மரியாதை பண்ணி கூப்பிட்டிருக்கணும். உன் பையன் ஓவரா பேசிட்டு இருக்கான்”.
 
  • Love
Reactions: Kothai suresh

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
329
323
63
“இல்லக்கா அவன்...” என்று கல்யாணி ஆரம்பிக்கும் முன்னே தடுத்த குணா
“அத்தை! எங்க வீட்டுக்கு எல்லாமே எங்கம்மா முன்னிலையில் இருக்கணும். நீங்களும் மாமாவும் விருந்தாளியா வந்து போகலாம் அவ்வளவு தான்”

அந்த பதிலில் ஆடித்தான் போய் விட்டாள் ஞானம்.

“புது பவுசு காட்டுறீங்களாடா? நடத்துங்க! நடத்துங்க!” என்று எரிச்சலுடன் பேசிவிட்டு சென்று விட்டார்.

அதன்பிறகு கல்யாணியின் குடும்பத்திற்கு ஏறுமுகம் தான். சின்னவனும் டிகிரியை முடித்துவிட்டு ஒரு மல்டிநேஷனல் கம்பனியில் ஹெச்ஆராக சேர்ந்து விட்டான். கயலும் டீச்சர் ட்ரெயினிங் எடுத்து ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்து விட்டாள்.

மூன்று பிள்ளைகளும் சம்பாதிக்க தொடங்கவே அன்னையை வேலையை விட சொல்லிவிட்டு அவரை உட்கார வைத்து அழகு பார்த்தனர். வீட்டையும் எடுத்துக் கட்டி தங்களை கண்டவிதமாக பேசிய சொந்தங்களுக்கு மத்தியில் கெத்தாக நின்றனர்.

ஞானம் தானாக வந்து ஒட்டிக் கொண்டார். உள்ளுக்குள் வயிறு எரிந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாது குடும்பத்தில் தானே நுழைந்து கொண்டார்.

குணாவிற்கு கல்யாணம் செய்ய வேண்டும் ஆசைப்பட்டார் கல்யாணி. பிள்ளைகள் இருவரும் கயலுக்கு பண்ணிவிட்டு பண்ணலாம் என்று சொல்ல, மூத்தவனுக்கு கல்யாணம் செய்து அவன் கயலை தாரை வார்த்துக் கொடுக்கக் வேண்டும் என்று விட்டார்.

பெண் பார்க்கும் படலம் தொடங்கியது. அப்போது கல்யாணியின் தம்பி வந்து நின்றார். அதுநாள் வரை கட்டிக் கொடுத்தப் பெண் என்ன ஆனாள் என்று எட்டிக் கூட பார்க்காமல் இருந்தவர்கள் குணாவிற்கு அவர்களின் பேத்தியை கட்டிக் கொடுக்க வேண்டும் என்று வந்து நின்றார் கல்யாணியின் தாய்.

சிறு வயதில் பார்த்த சம்பவங்கள் எதையும் மறக்க தயாரில்லை குணா. அதனால் அன்னையிடம் கூறி விட்டான். வெளியில் பெண் பாருங்கள் மாமா பெண்ணை கட்ட முடியாது என்றும் சொல்லி விட்டான்.

அங்கு ஆரம்பித்தது அடுத்த பிரச்சனை. அவள் ஏதோ தவறு புரிந்து விட்டது போலவும், கஷ்டப்பட்ட போது அப்பா உனக்கு பணம் கொடுத்து காப்பத்தினாரே என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

நாத்தனாரோ தனக்கு தெரிந்த இடத்தில் இருந்தெல்லாம் பெண் கொண்டு வந்தார். பிள்ளைகள் தெளிவாக இருந்தார்கள். தாங்கள் கஷ்டப்பட்டபோது யாரெல்லாம் உதவியாக இருந்தார்களோ அவர்கள் சொல்வதை மட்டுமே கேட்பது என்று. அப்படி குணாவின் தந்தைக்கு பங்காளியான சங்கரன் கொண்டு வந்த வரன் தான் வசந்தி.

பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தவர்களை கலைத்தது அன்னையின் இருமல்.

“என்னாச்சும்மா? அழுதழுது உடம்பை கெடுத்துகிட்டு இருக்கீங்க”.

கண்களைத் துடைத்துக் கொண்டவர் “கயல் நல்லா இருப்பா தானே?” என்றார் கலங்கிய கண்களுடன்.

சுடரும் அர்ஜுனை முதன் முதலாக பார்த்த நாளை தான் எண்ணிக் கொண்டிருந்தாள். தன்னை மறந்து அவள் இதழில் புன்னகை படர்ந்தது.

வசந்தியை பெண் பார்க்க குணாவும் அவர்களுடைய மற்ற சொந்தங்களும் தான் வந்திருந்தார்கள். அர்ஜுன் வரவில்லை.

நிச்சயம் திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பே செய்து விட வேண்டும் என்று கல்யாணி கேட்டுக் கொண்டார். அதனால் நிச்சயதார்த்த வேலைகள் நடக்கத் தொடங்கியது. குணாவை பார்த்ததுமே வசந்திக்குப் பிடித்து விட்டது என்றாலும் மங்களமும் அவளும் கல்யாணியை வைத்து தான் திருமணத்தை முடிவு செய்தனர். அதாவது மாமியார் வாயில்லாப் பூச்சியைப் போல இருப்பதாகவும் அங்கே நீ வைத்தது தான் சட்டமாக இருக்கும் என்று பேசிக் கொண்டு திருமணத்திற்கு ஒத்துக் கொண்டனர்.

அவர்களுக்கு குணாவைப் பற்றியும் தெரியவில்லை கல்யாணியைப் பற்றியும் தெரியவில்லை. வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் கஷ்டத்தை மட்டுமே பார்த்து வாழ்ந்தவர்கள். அத்தனை எளிதாக யாரிடமும் ஏமாந்து விட மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ளவில்லை.

நிச்சயதார்த்த நாளும் வந்தது. வீட்டிற்கு அருகிலேயே இருந்த ஒரு மண்டபத்தில் தான் ஏற்பாடு செய்திருந்தார் பரதன். மங்களம் செலவுகளை இழுத்துப் பிடித்து செய்திருந்தார்.

நிச்சயத்திற்கு புடவை வாங்க சென்ற போது கல்யாணி ஒரு தொகை சொல்லி இருக்க அதை விட இரு மடங்கு தொகையில் தான் மகளுக்கு புடவை எடுத்தார். கல்யாணிக்கு அது அதிகமாக தெரிந்தாலும் தன் வீட்டின் முதல் விசேஷம் என்பதால் எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஞானம் தான் ஆடி தள்ளி விட்டார். இப்படியே விட்டுக் கொடுத்தால் மருமகள் வந்து உனக்கு சோறு கூட போட மாட்டாள் என்று கடிந்து கொண்டார்.

அவள் எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. மகன் கல்யாணம் எந்தவித மனக் கஷ்டத்திற்கும் இடம் இருக்க கூடாது என்றே நினைத்தார்.

நிச்சயதன்று மண்டப வாசலில் இருந்த மேஜையில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தவளை யாரோ பார்ப்பது போல தோன்றியது. சுற்றுமுற்றும் பார்க்க யாரும் தென்படவில்லை. யோசனையுடன் உள்ளே நடந்தவளின் வந்து நின்றான் அர்ஜுன்.

கிட்டத்தட்ட அவன் மீது மோதுவது போல சென்று கடைசி நிமிடத்தில் தடுமாறி நின்றவள் கடுப்புடன் “ஹலோ! எதுக்கு இப்படி எருமை மாடு மாதிரி குறுக்கே நிற்குறீங்க?” என்று விட்டாள்.

அவளை முழுமையாக ஆராய்ந்து கொண்டே “எருமை மாதிரி கருகருன்னா இருக்கேன்?” என்றான் புன்னகையை அடக்கியபடி.
 
  • Like
Reactions: Kothai suresh

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
329
323
63
அவளோ இதென்ன இமசை என்று எண்ணிக் கொண்டு “யாருங்க நீங்க? கல்யாண வீட்டுக்காரங்களுக்கு நீங்க என்ன வேணும்?”

அவளின் வழியை மறைத்துக் கொண்டே நின்றவனின் பார்வை அவள் முகத்திலேயே தான் இருந்தது.

“அதையே தான் நானும் கேட்குறேன்? நீங்க யாரு? “

இடுப்பில் கை வைத்து முறைத்தவள் “நல்லா இருக்கு. நான் பொண்ணோட தங்கை. என்னையே யாருன்னா கேட்குறீங்க?”

பெண்ணுடைய தங்கை என்று சொன்னதுமே அவன் கண்களில் ஒரு மின்னல்.

“நானும் நல்லா இருக்குன்னு தான் சொல்றேன். எங்க அண்ணன் நிச்சயத்துக்கு வந்திருக்கேன்.
என்னைப் போய் யாருன்னு கேட்டா? இது தான் உங்க மரியாதையா?”

மாப்பிள்ளையின் அண்ணன் என்றதும் சற்றே பவ்யமாக “சாரி எனக்கு தெரியாது. சரி வழி விடுங்க” என்றாள் மெல்லிய குரலில்.

அவனோ வழிவிட மனமில்லாமல் நகர்ந்தவன் “மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது “
என்று பாடிக் கொண்டே செல்ல அதைக் கேட்டு மீண்டும் கடுப்பாகி விட்டாள்.

சொடக்குப் போட்டு அழைத்தவள் “ஹலோ! உங்க அண்ணனுக்கு தான் நான் மச்சினிச்சி உங்களுக்கு இல்லை”.

பட்டென்று திரும்பி அவளின் பக்கம் வந்தவன் “அப்போ எனக்கு என்ன வேணும்?அண்ணனோட மச்சினிச்சி என்னோட..” என்று முடிக்கும் முன்னே அங்கிருந்து ஓடி இருந்தாள்.

அவனோ சிரிப்புடன் “மச்சினிச்சி! கொஞ்சம் நில்லுங்க!” என்றான் சத்தமாக.

சுடர் வேகமாக ஓடிச் சென்று அக்கா இருந்த அறையில் நுழைந்திருந்தாள்.

வசந்திக்கு அலங்காரம் நடந்து கொண்டிருக்க, மூச்சிரைக்க ஓடி வந்த தங்கையைப் பார்த்தாள்.

“என்ன சுடர்? எதுக்கு இப்படி ஓடி வர?”

“அக்கா! அத்தானுக்கு தம்பி இருக்காங்களா?”

“ஆமாம்! ஏன் கேட்கிற?”

“நான் யாரோன்னு நினைச்சு விரட்டிட்டேன். அப்புறமா சொல்றாங்க நான் மாப்பிள்ளையோட தம்பின்னு”.

அவளோ சற்றே எரிச்சலுடன் “ஆமாம் அவன் ஏன் இப்போ வந்தான்? எல்லோரும் ஒண்ணா தானே வருவாங்க?”

“ஆமாம் நான் கேட்காம விட்டுட்டேன் பாருக்கா”.

அப்போது உள்ளே வந்த மங்களம் “நீ என்ன இங்கே நிக்கிற? கீழே போய் வேலையைப் பாரு” என்று விரட்டினார்.

“மா! மாப்பிளையோட தம்பி எதுக்கு வந்தாங்க இப்போ?”

“அதுவா! ஐயர் கேட்ட பொருள் எல்லாம் முழுக்க கிடைக்கல. அதை சம்மந்தி கிட்ட சொல்லி தம்பி சும்மா தானே இருக்கு வாங்கிட்டு வந்து கொடுக்க சொல்லுங்கன்னு சொன்னேன்”.

அவர் சொன்னதைக் கேட்டு வாயில் கை வைத்தவள் “அம்மா! அவங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க. அவங்களைப் போய் நீங்க?”

“மாப்பிள்ளை வீடுன்னா? நீ சும்மா இரு நான் பார்த்துக்கிறேன். முதல்ல நான் சொன்னதை செய்” என்று விரட்டி விட்டார்.

மனைவி சொன்னதைக் கேட்டுக் கொண்டு அங்கு வந்த பரதனும் “நீ ரொம்ப ஓவரா போயிட்டு இருக்க மங்களம். மாப்பிள்ளை வீட்டுக்கு நாம கொடுக்க வேண்டிய மரியாதையை சரியா கொடுக்கணும். பார்த்து இருந்துக்க”.

“போதும்! போதும்! அப்பாவும் மகளும் வாப்பெட்டியை சாத்திகிட்டு போய் சொன்ன வேலையை செய்ங்க” .

அன்னையின் செயலில் உள்ளுக்குள் நெருடல் எழ, ஒருவித சங்கடத்துடனே கீழே வந்து வாசலில் வைக்கப்பட்டிருந்த சந்தனம், குங்குமம் எல்லாவற்றையும் ஒழுங்கு செய்துவிட்டு, தன் பக்கத்துக்கு குட்டிகளை துணைக்கு அழைத்துக் கொண்டு அங்கே நின்றாள்.

அப்போது அவன் வேகமாக மண்டப வாசலுக்கு வரவும், சுடரின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. அவனும் அவளையே பார்த்தபடியே தான் வந்தான். அவனது இதழ்கள் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

நேரே அவர்களின் மேஜை அருகே வந்து நின்றவன் “நான் இதை எடுக்கலாமா மச்சினிச்சி” என்று கேட்டு தட்டிலிருந்த சிகப்பு ரோஜாவை எடுத்தான்.

அவளோ அன்னை சொல்லியதிலேயே உழன்று கொண்டிருந்தவள் “சாரி எங்கம்மா உங்க கிட்ட பொருள் வாங்க சொன்னதுக்கு” என்றாள் மெல்லிய குரலில்.

“இதென்ன பிரமாதம் மச்சினிச்சி நீ சொன்னதா நினைச்சு செஞ்சிட்டேன்” கிண்டலாக.

அதுவரை இருந்த நெருடல் மறைய “மச்சினிச்சின்னு கூப்பிடுற வேலை எல்லாம் வேண்டாம்” என்றாள் கடுப்பாக.

“அப்போ என்ன சொல்லி கூப்பிடுறது? பொண்டாட்டின்னு கூப்பிடவா?” என்று விட்டான்.

அதில் அதிர்ந்து போய் “என்ன திமிரா?”

“அண்ணியோட தங்கச்சி என் பொண்டாட்டி தான்” என்று கண்களை சிமிட்டி விட்டு சென்று விட்டான்.
 
  • Love
Reactions: Kothai suresh