அத்தியாயம் - 3

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,546
1,114
113
அத்தியாயம் –3குளிர்ந்த காற்று மேனியை வருட, காதில் மாட்டியிருந்த இயர் போன் வழியே கசிந்த இசை நெஞ்சைத் தீண்ட, இளங்காலை பொழுது கண்களுக்கு விருந்தாக,அனைத்தையும் ரசித்துக் கொண்டே ஜாகிங் சென்று கொண்டிருந்தான் விஸ்வா.முதல்நாள் மாமா வந்த பின் நடந்த நிகழ்வுகள் மனதில் வருத்தத்தைத் தந்திருந்தாலும், அவர் பக்க நியாயத்தை அலசி ஆராய்ந்து அமைதியானது. சுமியின் மீது மாமாவின் மகள் என்பதைத் தாண்டி ஒருவித ஈர்ப்பு இருந்தது என்னவோ உண்மை தான். அவளது குணமும் அதற்கொரு காரணம். எவரையும் அனுசரித்து செல்லும் மனப்பான்மை கொண்டவள்.தனது மனது செல்லும் பாதையை எண்ணி லேசாகத் தலையை உலுக்கிக் கொண்டு ‘சுமி என் வாழ்வில் முடிந்து போன அத்தியாயம். இனி, எனக்கு யார் மனைவியாக வரப் போகிறாளோ அவளைத் தான் நேசிப்பேன்’ என்று எண்ணிக் கொண்டு வீடு நோக்கி ஓடத் தொடங்கினான்.கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவன் தோட்டத்தை ஒரு ரவுண்டு அடித்துவிட்டு, வீட்டிற்குள் நுழைந்தான். சோபாவில் அமர்ந்து ஷூவை கழற்றும் வரை தாய் வரவில்லை என்றவுடன், சமையலறைக்குள் புகுந்தான்.அங்கே வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு காய் நறுக்கிக் கொண்டிருந்த தந்தையைக் கண்டதும் “அம்மா எங்கேப்பா? நீங்க இங்கே என்ன பண்றீங்க?” என்றான்.அவனை பார்த்துவிட்டு “வந்துட்டியா? ஒரு நிமிஷம் இரு காப்பி போட்டு தரேன்” என்றார்.அவர் கையைப் பற்றித் தடுத்தவன் “அம்மாவுக்கு என்ன ஆச்சு?” என்றான்.அவனைப் பார்த்து ஆயாசத்துடன் “நேத்து நடந்ததை நினைச்சுகிட்டே படுந்திருப்பா போல இருக்குடா. காலையில கொஞ்சம் மூச்சிறைப்பு. என் பையனுக்கு பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாரேன்னு ஒரே புலம்பல்” என்று அலுத்துக் கொண்டார்.அவர் சொன்னதை கேட்டதும் அவசரமாக அங்கிருந்து அன்னையின் அறைக்குச் சென்றான். அங்கே தலையணையை உயரமாக வைத்து கண்களை மூடி சாய்ந்திருந்த ரஞ்சிதத்தை கண்டதும் அவரருகில் சென்றமர்ந்து அவரது கைகளை எடுத்து தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டான்.மகனது ஸ்பரிசம் பட்டதுமே கண்களை திறந்தவர் “ஜாகிங் போயிட்டு வந்துட்டியா விச்சு?” என்றார்.“ம்ம்..போயிட்டு வந்துட்டேன் மா. என்னம்மா நீங்க? உலகத்துல மாமாவை விட்டா எனக்கு பொண்ணு கொடுக்க ஆளே இல்லையா என்ன? இதுக்கு போய் இவ்வளவு கவலைப்பட்டு உங்க உடம்பை கெடுத்துக்கலாமா?” என்றான் பரிவாக.சோர்வான கண்களை மூடித் திறந்தவர் “என் கூட பிறந்தவரே உன்னை புரிஞ்சுக்கலேன்னா, வெளியில உள்ளவங்க உன்னை எப்படி புரிஞ்சுக்குவாங்க விச்சு. சொந்த மாமாவே பொண்ணு குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டார்னு தானே சொல்லுவாங்க” என்றார் வருத்தமாக.அவர் கைகளை லேசாக அழுத்திக் கொடுத்தவன் “அம்மா! தேவையில்லாததை எல்லாம் யோசிக்காதீங்க. என் பொண்டாட்டியை இன்னொருத்தன் கட்ட முடியாது. அவ எங்கே இருந்தாலும் என்னைத் தேடி வருவா. அதனால நீங்க மனசுல எதையும் போட்டு அலட்டிக்காம ரெஸ்ட் எடுங்க. இன்னைக்கு சமையல் வேலையை நான் பார்த்துகிறேன்” என்று எழுந்து கொண்டான்.அந்தநேரம் மகனுக்கு காப்பியுடன் உள்ளே வந்தார் அன்புமணி. “என்ன அம்மாவும் பிள்ளையும் பேசி முடிச்சாச்சா?” என்றவர் மகன் கையில் கோப்பையை கொடுத்தார்.அவர் ரஞ்சிதம் அருகில் அமர்ந்ததும் “நீங்க அம்மா கூட பேசிட்டு இருங்கப்பா. மத்த வேலைகள் எல்லாம் நான் பார்த்துகிறேன். சமையலை முடிச்சு வச்சிட்டு ரிஹர்சலுக்கு கிளம்புறேன். அடுத்த வாரம் திருநெல்வேலி ப்ரோக்ராம் இருக்கே”.“உனக்கு ஏன் விச்சு சிரமம். நான் அதெல்லாம் பார்த்துகிறேன்”.தாய்,தந்தை இருவரையும் பார்த்து மெல்லிய புன்னகையை சிந்தியவன் “பெத்தவங்களுக்கு செய்றது ஒரு சிரமமா அப்பா! நீங்க அம்மா கூட பேசிட்டு இருங்க போதும்” என்றான்.அவன் எழப் போன போது அவனது கைகளை பற்றிக் கொண்ட ரஞ்சிதம் “விச்சு! பொண்ணு பார்க்கலாமா? உனக்கு மனசுல எதுவும் எண்ணம் இருக்கா? சொல்லுப்பா?” என்றார்.அவரின் கைகளை அழுந்தப் பற்றிக் கொண்டு “இப்போ அதுக்கு என்னம்மா அவசரம்? முதலில் உங்க உடம்பு சரியாகட்டும்” என்று கூறி எழுந்து கொண்டான்.தனதறைக்கு சென்று ஆடையை மாற்றிக் கொண்டு கிட்சனிற்குள் நுழைந்தான். அப்பா விட்டுச் சென்ற பணியை மடமடவென்று செய்ய ஆரம்பித்தான். அப்போது அங்கே வந்த அன்புமணி “தள்ளு விச்சு! நான் பண்றேன்” என்றார்.அவரைப் பார்த்து லேசாக கடிந்து கொண்டான் “என்னப்பா நீங்க? அம்மா பக்கத்தில் இருக்க சொன்னா இங்கே வந்து நிக்கிறீங்க?” என்றான்.கொத்சிற்க்காக காய் நறுக்கிக் கொண்டிருந்தவர் “பிள்ளை கஷ்டப்படுறான் இங்கே உட்கார்ந்து கதை பேசாம போய் ஹெல்ப் பண்ணுங்கன்னு விரட்டி விட்டுட்டா” என்றார் பாவமாக.அதைக் கேட்டு சத்தமாக சிரித்துக் கொண்டே குக்கரை அடுப்பில் வைத்து விட்டு அவரை நோக்கி திரும்பி “அப்பா! பாடுங்களேன்” என்றான்.“ஒரு மேடை பாடகன் என்னை பாட சொன்னா எப்படி டா?”அவரது பேச்சைக் கேட்டு தலையை மறுப்பாக அசைத்து “என்னோட குரு நீங்க தான் பா. சின்ன வயதில் நீங்க பாடிய பாட்டுகளை எல்லாம் கேட்டு கேட்டு என் மனதில் அப்படியே பதிஞ்சு போச்சு. என்னோட இந்த ரசனை உங்க கிட்ட இருந்து வந்தது தான் பா” என்றான்.அதைக் கேட்டு பெருமையுடன் கண்கள் கலங்க பாடிக் கொண்டே வேலையை செய்ய ஆரம்பித்தார்.வந்த நாள் முதல் இந்த நாள் வரைவந்த நாள் முதல் இந்த நாள் வரைவானம் மாறவில்லை வான்மதியும்மீனும் கடல் காற்றும் மலரும் மண்ணும்கொடியும் சோலையும் நதியும் மாறவில்லைமனிதன் மாறிவிட்டான்.......

அப்பா பாட மகன் அதையே விசிலடித்துக் கொண்டே சமையலை கவனிக்க அங்கே ஒரு கச்சேரியே நடந்தது. இருவரின் பாடல் சங்கமத்தைக் கேட்ட ரஞ்சிதம் படுக்க பிடிக்காமல் அவர்களைத் தேடி அங்கே வந்தார்.அவரை ஒரு நாற்காலியைப் போட்டு அமர வைத்துவிட்டு இருவரும் பாடிக் கொண்டே வேலையைத் தொடர்ந்தனர். தந்தையும், மகனும் வேலை செய்வதை பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சிதம் “விச்சு! உனக்கு பொண்ணு பார்க்கவாப்பா?” என்றார் திடீரென்று.கொத்ஸை அடுப்பிலிருந்து இறக்கி வைத்துவிட்டு அன்னையின் முன்பு மண்டியிட்டு அமர்ந்து “ ஏன்ம்மா இவ்வளவு சீரியஸா எடுத்துகுறீங்க? நீங்க உங்க பிள்ளை நல்லா இருக்கனும்-னு நினைக்கிற மாதிரி தானே மாமாவும் நினைப்பாங்க” என்றான்.அவனை முறைத்தவர் “உன்னை கல்யாணம் பண்ணினா நல்லா இருக்க முடியாதுன்னு நினைக்கிறது தப்பில்லையா விச்சு?”அவர் கைகளை பிடித்துக் கொண்டு “அப்படி இல்லைம்மா. மகளை பெற்றவங்களா அவங்களுக்கு தன்னோட பெண்ணுக்கு இப்படிப்பட்ட மாப்பிள்ளை வேணும்-னு ஒரு கனவு இருக்கும். அவங்க எதிர்பார்த்த தகுதி என் கிட்ட இல்லேன்னு நினைக்கிறாங்க. அது தப்பில்லையே” என்றான்.“உனக்கு என்ன தகுதி இல்லை? நல்லா படிச்சிருக்கே, அழகாவும் இருக்கே, அருமையா பாடவும் செய்ற, உன் மனசுக்கு பிடித்த வேலையை செஞ்சு கை நிறைய சம்பாதிக்கிற. இதை விட வேற என்ன தகுதி வேணும்” என்று ஆத்திரமாக கேட்டவருக்கு மூச்சிரைக்க ஆரம்பித்தது.அவசரமாக ஒரு டம்பளர் வெந்நீரை எடுத்து வந்து அவரை குடிக்க வைத்தவன் “அம்மா! தயவு செஞ்சு உணர்ச்சிவசப்படாதீங்க. தகுதியோட அளவுகோல் ஒவ்வொருத்தரோட பார்வையில் வேறுபடும். நமக்கு நல்ல தகுதியா தெரியிறது மற்றவங்களுக்கு கம்மியா தெரியும். அதனால இந்த பேச்சை மறந்திட்டு அப்பா பாட்டை என்ஜாய் பண்ணுங்க” என்றான்.அவரோ விடாப்பிடியாக “நீ சொல்லு? உனக்கு எப்படிப்பட்ட பெண் வேணும்?” என்றார்.அம்மாவின் பிடிவாதத்தைக் கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டு தந்தையைப் பார்க்க, அவரும் சிரிப்பை அடக்கிக் கொண்டு நிற்பது புரிந்தது.மெல்ல அன்னையின் புறம் திரும்பியவன் “எனக்குன்னு தனிப்பட்ட விருப்பம் எதுவுமில்லைம்மா. மற்றவங்களோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கிறவளா இருந்தா போதும். முக்கியமா என்னுடைய தொழிலை புரிந்து கொள்பவளா இருந்தா ரொம்ப சந்தோஷம்” என்றான்.மகனது பேச்சைக் கேட்ட பெற்றவர்கள் இருவரும் நெகிழ்ந்து போனார்கள். இப்படிப்பட்ட பிள்ளைக்கு நல்லதொரு வாழ்க்கை அமைய வேண்டும் என்கிற வேண்டுதலை கடவுளிடம் முன் வைத்தார்கள்.ரஞ்சிதாமோ மிகவும் மகிழ்ந்து போய் மகனின் தலையை வருடி “எல்லோரும் அசந்து போகிற மாதிரி ஒரு பெண்ணை பார்க்கிறேன். உன்னை, உன் வேலையை மட்டமா பேசினவங்க எல்லாம் உன் வாழ்க்கையைப் பார்த்து மலைச்சு போகணும். அந்த அனந்தநல்லூர் மாரியம்மன் உனக்கு நல்லதே செய்வா” என்றார் உணர்பூர்வமான குரலில்.தாய், தந்தை இருவரின் பாசமும் அவன் மனதை நெகிழ செய்ய கண்கள் கலங்க எழுந்து சமையலை கவனிக்கச் சென்றான். நெகிழ்வான அந்த சூழ்நிலையை மாற்ற அன்புமணி பாட ஆரம்பித்தார்.அலுவலக காண்டீனில் நித்யாவும், ரம்யாவும் கையில் காப்பியுடன் அமர்ந்திருந்தனர். அலுவலக நடப்புகளை பேசிக் கொண்டிருந்த நித்யா, எதிரில் அமர்ந்திருந்தவளின் முகத்தில் தெரிந்த பளபளப்பைக் கண்டு “ஹேய்! மறந்தே போயிட்டேன் பார்! நேத்து என்னாச்சு? உன் முகத்தை பார்த்தா ஒளிவட்டம் தெரியுதே. என்ன மேடம் சொல்லுங்க?” என்றாள்.முகம் லேசாக கன்றி சிவக்க “கிரீஷ்க்கு என்னை ரொம்ப பிடிச்சு போச்சு நித்தி. உடனே நிச்சயம் பண்ணனும்ன்னு கேட்டாங்க. எங்க வீட்டில் தான் அடுத்த வாரம் வச்சுக்கலாம்ன்னு சொல்லிட்டாங்க” என்றாள் வெட்கத்துடன்.அவள் சொல்லி முடித்ததுமே காபி கோப்பையை மேஜை மேல் வைத்துவிட்டு அவளது கன்னங்களை பிடித்து கிள்ளி “அட! அட! இந்த வெட்கத்தை பார்க்காம மாப்பிள்ளை சார் மிஸ் பண்ணிட்டாரே” என்று ஓட்டினாள்.சிறிது நேரம் அவளது திருமணம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது “ என்னை கலாட்டா பண்றீங்களே மேடம். நீங்க எப்போ உங்க ஹீரோவை பார்க்க போறீங்க?” என்றாள் ரம்யா.அதுவரை சந்தோஷமான மன நிலையில் இருந்தவளின் முகம் சோர்ந்து போக “ம்ம்ச்..எனக்கு அக்காவோட சந்தோஷம் தான் முக்கியம் ரம்ஸ். நான் வேலையில் கொஞ்சம் ஸ்டெடி ஆனதும் அவளை கூட்டிட்டு தனியா போயிடுவேன். அந்த ஆள் கிட்டேயிருந்து அவளுக்கு விடுதலை வேணும்” என்றாள் இறுகிய குரலில்.அதைக் கேட்டு அதிர்ந்து போன ரம்யா “என்னடி சொல்ற? அப்படியென்ன கொடுமை பண்றார் உங்க மாமா?”விரக்தியாக அவளைப் பார்த்து சிரித்தவள் “உடலால காயப்படுத்தினா தான் கொடுமைன்னு அர்த்தமா? எங்க அக்கா முகத்தில் இருந்த சிரிப்பு மறைஞ்சு போய் நாலு வருஷம் ஆச்சு. கண்ணுல ஜீவன் இல்லாம நடமாடிக்கிட்டு இருக்கா” என்றாள் வருத்தமாக.நித்யா சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாமல் சந்தேகத்துடன் “உங்க அக்கா கிட்ட இதை பற்றி பேசினியா? அவங்களுக்கு என்ன கஷ்டம் இருக்குனு உன் கிட்ட சொன்னாங்களா?” என்று கேட்டாள்.“எப்படி சொல்வா ரம்ஸ்? ரேணுவை பொறுத்தவரை நான் அவளோட பொண்ணு. நானா தான் அவளுடைய கஷ்டத்தை புரிஞ்சுக்கணும். அவளோட ஒவ்வொரு உணர்வும் எனக்கு நல்லா புரியும். கண்டிப்பா ரேணுவை நான் இந்த இக்கட்டில் இருந்து காப்பாத்தியே ஆகணும்” என்றாள் பிடிவாதமாக.நித்யா பேசியதைக் கேட்ட ரம்யாவோ குழம்பி நின்றாள். ஓரிரு முறை நித்தியின் வீட்டிற்க்கு சென்ற போது ரேணுவையும், நிரஞ்னையும் கவனித்திருக்கிறாள். இருவரும் மிக அன்பான தம்பதியாகவே தெரிந்தனர். அதிலும் நிரஞ்சன் மிக மரியாதையான மனிதனாக தான் தெரிந்தான். அப்படிப்பட்டவர்களுக்கு இடையில் என்ன பிரச்சனை இருக்க கூடும் என்று எண்ணினாள். ஒருவேளை அவர்களிடையே ஏற்படும் சிறிய பிணக்குகளை தான் தோழி தவறாக புரிந்து கொண்டிருக்கிறாளோ? என்றும் யோசித்தாள்.அவளது யோசனையை தவறாக புரிந்து கொண்ட நித்யா முகத்தருகே கையை நீட்டி “ஹலோ மேடம்! என்ன அதுக்குள்ளே கிரீஷ் சார் கூட டூயட் பாட போயாச்சா?” என்றாள்.தனது யோசனையில் இருந்து மீண்டவள், தோழியின் கேலியை கண்டு “நினைப்பு தான் நித்தி உனக்கு. நானே சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு எப்படி ஷாப்பிங் போறதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன். நீ வேற” என்று அலுத்துக் கொண்டாள்.“ஹேய்! அதுக்குள்ள நிச்சயதார்த்த ஷாப்பிங்கா? ம்ம்..நடத்து..நடத்து”“அடியே பிசாசே! கொஞ்சம் காஸ்மெடிக்ஸ் வாங்கணும். நீயும் வரியா நித்தி?”அவள் கேட்டதும் சற்று யோசித்தவள் “ம்ம்..சரி போகலாம். இப்போவே போய் வேலையை ஆரம்பிச்சா தான் வர முடியும். நீயும் ஓடு!” என்றபடி நடந்தாள்.இருவரும் தங்களது வேளைகளில் மூழ்கினர்.நிரஞ்சனிற்கு அன்று வேலை குறைவாக இருந்தது. வீட்டிற்கு சீக்கிரம் சென்று மனைவியுடன் தனிமையில் நேரத்தை செலவிடலாம் என்றெண்ணி உல்லாசமாக விசிலடித்தபடி கிளம்பினான். நித்தி எப்படியும் ஏழு மணிக்கு தான் வருவாள். அதுவரை தங்களது தனிமையை அனுபவிக்கலாம் என்று எண்ணினான். திருமணம் முடிந்து இந்த நான்கு வருடங்களில் அவ்வப்போது இது போன்ற தனிமை கிடைத்தாலும் ஏதோ ஒரு வில்லனோ அல்லது வில்லியோ இல்லை ஏதாவது நிகழ்வுகளோ அதை கெடுத்து விடும்.‘இன்று அப்படி எதுவும் நடவாது!’ என்கிற எண்ணத்தில் வீட்டிற்கு வரும் வழியில் மனைவிக்கு மிகவும் பிடித்த ஜாதி மல்லியை வாங்கிக் கொண்டான்.

அதே நேரம் ரம்யா தனது வேலையை முடித்துக் கொண்டு நித்யாவை அழைக்க “சாரி ரம்ஸ்! நான் வரல. அதிசயமா இன்னைக்கு தான் எனக்கு சீக்கிரம் வேலை முடிஞ்சிருக்கு. நான் சீக்கிரம் போனா ரேணுவுக்கு ஹாப்பியா இருக்கும்” என்றாள்.அதீத அன்பும் விடமாய் போவதுண்டு

நேசித்தவர்களின் வாழ்க்கையில்

அன்பே பகடை காயாக

மாறுவதும் உண்டு..மல்லிகை

மலருமோ? மணம் வீசுமோ?

அன்பான தங்கையவள் அக்காளின்

மனதை அறிந்து கொள்வாளா?

அவளின் வாழ்வை மலர வைப்பாளா?
 

Chitra Balaji

Member
Feb 5, 2020
43
27
18
Aiyayo paavam ava மாமா romba ஆசை ah வீடு ku வறாரு..... இவளும் வீடு ku வந்துடுவா போல.... விஷ்ணு oda parents semma... Avanga மூணு peroda உணர்வுகளை yum semma ah describe panni இருந்திங்க maa... Super Super
 
  • Like
Reactions: Ramavaradharajan