Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 28 | SudhaRaviNovels

அத்தியாயம் - 28

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் – 28

சிவதாஸ் தன் ஆட்களுக்கு தகவல் தந்து கொண்டே ஜீப்பை ஓட்டினான். சித்தார்த்தின் மனமோ நிலையில்லாமல் தவித்தது. இத்தனை செய்தும் அவளை ஆபத்து நெருங்கி விட்டதே என்று எண்ணி உருகி போனான். ஏதாவது நடந்து விடுமோ என்று பயந்தான்.

அவனை திரும்பி பார்த்த சிவதாஸ் “பிடிச்சிடலாம் சித்தார்த். ரொம்ப தூரம் போயிருக்க முடியாது. இங்கே தான் எங்கேயாவது இருப்பானுங்க”.

“இதை கொஞ்சமும் எதிர்பார்க்கல. கேஷ்வி இப்படி செய்வான்னு நினைக்கல தாஸ். அவளுக்கு பாவம் பார்த்தது தப்புன்னு புரிஞ்சுகிட்டேன்”.

“ம்ம்..” என்றவனது மொபைல் தொடர்ந்து அழைக்க, அதை எடுத்து காதில் வைத்தவனது இதழில் மெல்லிய புன்னகை.

சரி! எனக்கு லொகேஷன் அனுப்பு. சுற்றி வளைச்சிடுங்க ஆனா உங்க மேல சந்தேகம் வராதவாறு நடந்துக்கோங்க. நான் வந்துடுவேன்” என்று கூறி வைத்தவன் சித்தார்த்திடம் “ட்ரேஸ் பண்ணியாச்சு சித்தார்த். நாம போயிடலாம்” என்றான்.

அதை கேட்டதும் “தேங்க்ஸ் தாஸ்” என்றவனது இதயம் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது.

சுமார் நாற்பத்தைந்து நிமிடங்களுக்குப் பிறகு புதிதாக கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் ஒரு பகுதிக்குள் நுழைந்தது. பாதி முடிவடைந்த வீடுகளும், பணிகள் தொடங்கப்படாத நிலங்களும் அடங்கிய அந்தப் பகுதியில் மிகப் பெரிய பங்களா ஒன்று முக்கால்வாசி முடிவடைந்த நிலையில் இருந்தது. அதன் அருகே செல்லாமல் வண்டியை எட்டியே நிறுத்திவிட்டு போனை எடுத்து தன் ஆட்களை அழைத்தான்.

“எத்தனை பேர் இருப்பாங்க உள்ளே? அங்கே நிலவரம் என்ன?”

“பத்து பேருக்குள்ள தான் சார் இருப்பாங்க. இப்போவரை எந்த சப்தமும் கேட்கல அமைதியா தான் இருக்கு”.

“ஒ...நம்ம ஆட்கள் எத்தனை பேர் இருக்காங்க?”

“ஆறு பேர் இருக்காங்க”

“ம்ம்..ஓகே நான் சொல்றபடி எல்லோரும் மூவ் பண்ணுங்க. பிரன்ட் என்ட்ரன்ஸ் நான் பார்த்துக்கிறேன்” என்றவன் மடமடவென்று அவர்களுக்கான திட்டத்தை கூறினான்.

அதே போல அனைவரும் வீட்டின் எல்லா பக்கங்களில் இருந்தும் சுற்றி வளைத்து உள்ளே செல்ல நகர ஆரம்பித்தனர். சித்தார்த்தும் சிவதாசும் முன்பக்க கதவு வழியாக செல்வது என்று அந்தப் பக்கம் நகர்ந்தனர்.

“சித்து உன்னால முடியுமா? ஏன் கேட்கிறேன்னா நீ உணர்ச்சிவசபட்டா எல்லாமே கெட்டுடும்”.

“இல்ல தாஸ். நானும் வரேன்”.

அதுவரை அமைதியாக இருந்த சூழல் அவர்கள் வீட்டை சூழ்ந்ததை அறிந்து கொள்ளவும், வீட்டிற்குள் எதுவோ விழுந்து உடையும் சப்தமும் அதை தொடர்ந்து ஒரு பெண்ணின் சப்தமும் கேட்டது.

ஒரே நேரத்தில் நான்கு பக்கமும் வீட்டை தாக்குதலுக்கு உள்ளாக்கி அனைவரும் உள்ளே நுழைந்திருந்தனர். அங்கிருந்த ஆட்கள் போலீசாரின் மீது பாய்ந்து தாக்குதலை தொடங்க, பத்து நிமிடங்களுக்குள் அனைவரையும் அடித்து துவைத்து தங்கள் கைகளுக்குள் கொண்டு வந்திருந்தனர் சிவதாஸின் ஆட்கள். சித்தார்த்தோ மற்றதை கவனியாமல் அவசரம் அவசரமாக வர்ஷூவை தேடி ஓடினான்.

எங்கு தேடியும் கிடைக்காமல் ஒரு பெரிய அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றவன் அதிர்ந்து நின்றான். அவன் பின்னே வந்த சிவதாசுக்கு கூட அதிர்ச்சி தான். யாரும் இதை எதிர்பார்க்கவில்லை.

அந்த அறையின் நடுவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் கேஷ்வி கட்டிப் போடப்பட்டிருந்தாள்.

வேகமாக அவளிடம் ஓடிச் சென்று “ஏய்! எங்கே வர்ஷூ? அவளை என்ன பண்ணின?” என்று அதட்டினான்.

அவளது வாய் பிளாஸ்திரி போட்டு ஒட்டப்பட்டிருந்தது. கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிய மறுப்பாக தலையசைத்தாள். சித்தார்த்தின் பின்னே வந்து அவளை கவனித்துக் கொண்டிருந்த சிவதாஸ் “சித்தார்த்! அவ பதில் சொல்லனும்னா நாம அவள் வாயில் போட்டிருக்கிற பிளாஸ்திரியை எடுத்து விடனும்” என்றான்.

அப்போது தான் அவள் கட்டப்பட்டிருப்பதையே கவனித்தவன் “இவளை கட்டிப் போட்டிருக்கனும்கன்னா இவள் கடத்தலையா?” என்றான் அதிர்ச்சியாக.

“அப்படித்தான் போல” என்று சொல்லிக் கொண்டே சிவதாஸ் கேஷ்வியின் கட்டுகளை அவிழ்த்து விட்டான்.

பிளாஸ்திரி எடுக்கப்பட்டதுமே “சித்து! நான் வர்ஷூவை கடத்தல. அவ நல்லா இருக்கா” என்றாள் அழுது கொண்டே.

“எங்கே இருக்கா சொல்லு? உண்மையை சொல்லு” என்று அவளது தோள்களைப் பற்றி குலுக்கினான்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
”என்னோட வாங்க” என்றவள் வாசலை நோக்கிச் சென்றாள்.

அங்கிருந்த தங்கள் ஆட்களிடம் அந்த அடியாட்களை கஸ்டடியில் எடுக்கும்படி கூறிவிட்டு அவளை தொடர்ந்தான்.

இருவரும் அவளைத் தொடர அவள் சிவதாஸின் ஜீப்பில் சென்று அமர்ந்து கொண்டாள். எதுவும் பேசாமல் இருவரும் ஜீப்பில் அமர “எங்களை எங்கே வச்சிருந்தீங்களோ அங்கேயே போங்க” என்று கூறிவிட்டு கண்களை அழுந்த மூடிக் கொண்டாள்.

சிவதாசோ ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு “பொய் சொல்லி எங்களை எமாற்றலாம்னு நினைச்சே பொம்பளைன்னு பார்க்க மாட்டேன் வெளுத்துடுவேன்” என்றான் மிரட்டலாக.

அவள் இதழ்களிலோ வெறுமையான ஒரு சிரிப்புடன் “அங்கே போங்க” எனதரு சொல்லிவிட்டு கண்களை மூடிக் கொண்டாள்.

ஜீப்பிலிருந்த மூவரும் பேசிக் கொள்ளவில்லை. சித்தார்த்திற்கு கேஷ்வி சொல்வதில் சிறிதளவு நம்பிக்கை இருந்தது. ஆனால் சிவதாசிற்கோ ஒரு பெர்சென்ட் கூட அவள் மீது நம்பிக்கை இல்லை. தன்னை கட்டிப் போடா சொல்லி இவளே நாடகம் ஆடுகிறாலோ என்கிற சந்தேகத்தோடு தான் பயணித்துக் கொண்டிருந்தான்.

மௌனமான பயணத்திற்கு பின்னர் அந்த மாளிகையின் வாசலை அடைந்ததும் இறங்கியவள் எவரையும் எதிர்பார்க்காது வேக நடையுடன் உள்ளே நுழைந்தாள். இருவரும் அவளை பின் தொடர்ந்தனர். அங்கிருந்த அறைகளுக்குள் நுழையாது மாளிகையின் பின்புறம் சென்றாள். அங்கே இருந்த தட்டுமுட்டு சாமான்கள் போடும் அறைக்குள் சென்றவள் ஒரு பெரிய ட்ரம் அருகே சென்று நின்றாள். அதை பார்த்ததுமே சிவதாசிற்கு புரிந்து போனது.

சித்தார்த்தை நோக்கியவள் “சீக்கிரம் இங்கே வாங்க உங்க வர்ஷூ இதற்குள் தான் இருக்கிறாள்” என்று அந்த ட்ரம்மை கை காட்டினாள். அவள் வர்ஷூ அங்கிருப்பதாக சொல்லி காட்டியதுமே ‘நா’ உலர்ந்து போனது சித்தார்த்திற்கு. அந்த ட்ரம் அருகே செல்லவே பயமாக இருந்தது. சிவதாஸ் சித்தார்த் செல்வான் என்று பார்த்திருக்க அவனோ உடலெல்லாம் வியர்த்து முகமோ நடுக்கத்துதை பறைசாற்ற நின்றிருப்பதை கண்டான்.

இருளாக இருந்த அந்த அறையில் வெளிச்சம் தேவைப்பட தன் மொபைலில் இருந்து டார்ச்சை ஆன் செய்து கொண்டு ட்ரம்மை பார்த்தான். சித்தார்த்தும் வெளிச்சத்தில் ட்ரம்மை கவனிக்க, மேலிருந்து கீழ் வரை வெளிச்சத்தை பாய்ச்சிக் கொண்டே அருகே சென்றான் தாஸ். அப்போது ட்ரம்மின் ஒரு மூலையில் இருந்து லேசாக ரத்தம் கசிய தொடங்கி இருந்தது.அதை சித்தார்த்தும் கவனித்திருந்தான்.

விழிகள் அந்த இடத்தில் நிலைகுத்தி இருக்க உதடுகள் உலர்ந்து போயிருக்க நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொண்டது. மேற்கொண்டு முன்னேற முடியாமல் அவனது வர்ஷூ என்ன நிலையில் இருப்பாளோ என்கிற பயம் ஆட்டுவிக்க நெஞ்சை பிடித்தபடி தள்ளாடினான்.

தாசுக்குமே வர்ஷினி உள்ளே உயிருடன் இருப்பாளா என்கிற சந்தேகம் இருந்தது. சித்தார்த்தின் நிலையை கண்டு கொண்டவன் “சித்தார்த்!” என்று அதட்டலாக அழைத்து “அப்படியே நிற்க போறியா? அவளுக்கு உதவி தேவைப்படும் நிலையில் இருந்தால் நம்ம தாமதத்தினால் கிடைக்காமல் போய் விடக் கூடாது. சீக்கிரம் வா” என்றான் அதட்டலாக.

அவன் சொன்னது அவனது மனதை தாக்க உடனடியாக தாசின் அருகே சென்றான். இருவருமாக மெல்ல ட்ரம்மின் மூடியை திறந்து உள்ளே பார்த்தனர். அங்கே அக்கா தங்கை இருவருமே ஒருவரை ஒருவர் பிடித்தபடி மயங்கிய நிலையில் அமர்ந்திருந்தனர்.

அவசரமாக இருவரும் சேர்ந்து அவர்களை தூக்கி வெளியில் கொண்டு வந்தனர். அனைத்தையும் ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கேஷ்வி. சித்தார்த்தோ அங்கிருந்த இருவரையும் கண்டு கொள்ளாமல் வர்ஷினியின் அருகே குனிந்து மூச்சிருக்கிறதா என்று பார்த்து அவளது கன்னத்தை தட்டி எழுப்ப முயன்றான். தான்யாவோ அரைகுறை மயக்கத்தில் தான் இருந்தாள். அவளிடம் லேசான அசைவும் தெரிந்தது.

வர்ஷினியின் முகம் கை கால்களில் எல்லாம் அடிபட்டு ஆங்காங்கே சிராய்ப்புகளும், காயங்களும் ஏற்பட்டிருக்க அதிலிருந்து லேசாக ரத்தம் வடிந்து கொண்டே தான் இருந்தது. சிவதாஸ் மாளிகையின் உள்ளே சென்று தண்ணீரை எடுத்து வந்து வர்ஷினி, தான்யா இருவர் மேலும் தெளித்து மயக்கத்தை தெளிவிக்க பார்த்தான். தான்யாவிற்கு மட்டும் விழிப்பு வந்துவிட, வர்ஷினி அதே நிலையில் தான் இருந்தாள்.

சித்தார்த் அவளை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு “சோட்டி! நான் வந்துட்டேன் சோட்டி. எழுந்திரு” என்று அழைத்துக் கொண்டிருந்தான் கண்ணீருடன்.

கேஷ்வியைப் பார்த்த சிவதாஸ் அவள் அருகில் சென்று “என்ன நடந்தது? இவங்க ரெண்டு பேரும இங்கே எப்படி வந்தாங்க? உன்னை எதுக்கு அவங்க கடத்திட்டுப் போனாங்க?” என்று வரிசையாக கேள்வியை எழுப்பினான்.

அவளோ பதில் சொல்லாமல் சித்தார்த்தையே வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தாள். அவனது கண்களிலும் செயலிலும் அத்தனை பரிதவிப்பு. தன் உயிர் தன்னை விட்டு போய் விடுமோ என்கிற பயமும் தெரிந்தது. தன்னவளை எவரிடமும் கொடுக்க மாட்டேன் என்பது போல அணைவாக வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவனை ஏக்கமாக தழுவியது கேஷ்வியின் பார்வை.

“என்ன நடந்தது? சொல்லப் போறியா இல்லையா?” என்று உறுமினான் சிவதாஸ்.

“சித்தார்த் வந்து சென்ற பின் நான் என் மனதை மாற்றிக் கொண்டேன். நானாஜியினால் என் குடும்பத்திலும் தொழிலிலும் ஏற்பட்ட குழப்பத்தையும் எண்ணி இனி ஒருநாளும் அவர்களுக்கு துணை போகக் கூடாது என்று முடிவு செய்து கொண்டேன். அப்போது தினு மாமாவிடம் இருந்து போன வந்தது. தங்கள் ஆட்கள் வரும்போது அவர்களிடம் வர்ஷினியை ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. வர்ஷினி அவர்களிடம் கிடைத்தால் நிச்சயமாக கொலை செய்து விடுவார்கள் என்று தோன்றியது. அதனால் அவர்களிடம் சரி என்று ஒப்புக் கொண்டு விட்டேன். போனை வைத்ததும் வர்ஷினியிடமும், தான்யாவிடமும் நிலைமையை சொல்லி அங்கிருந்து போய் விடலாம் விடலாம் என்றேன். ஆனால் இருவருமே என்னை நம்ப மறுத்தார்கள். அதோடு மட்டும் அல்லாது உங்கள் ஆட்களிடம் சொல்லி என்னை அங்கிருந்து வெளியேற்றும் படி கூறினார்கள். நான் நொந்து போனேன். எப்படியாவது அவர்களை காப்பாற்றிவிட வேண்டும் என்று தோன்ற உங்கள் ஆட்களிடம் கெஞ்ச ஆரம்பித்தேன். யாரும் என்னை நம்பவில்லை. இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதே நானாஜியின் ஆட்கள் வீட்டை சூழ்ந்து விட்டனர். அதனால் என்னை விட்டுவிட்டு அவர்களை தடுக்க ஓடினார்கள். நானும் மீண்டும் இருவரிடமும் கேட்க, அவர்கள் என்னை நம்ப மறுத்தனர். வெளியில் இருதரப்பிலும் சண்டை நடந்து கொண்டிருக்க எந்த நேரம் வேண்டுமானாலும் உள்ளே நுழைந்து விடக் கூடிய அபாயம் தெரிந்தது. அதனால் இருவரையும் அழைக்க அவர்கள் மறுத்தனர். அதனால் ஆபத்திற்கு பாவமில்லை என்று அங்கிருந்த ஒரு கட்டையால் வர்ஷினியை அடித்து கீழே தள்ளினேன். அடுத்து தான்யாவை அடிக்க முயலும் போது அதை தடுக்க முயன்ற வர்ஷினியை மீண்டும் அடித்து கீழே தள்ளினேன். அதில் அவள் மயக்கநிலைக்கு செல்ல, அதைக் கண்டு அவளிடம் செல்ல முயன்ற தான்யாவை அடித்து போட்டேன். இருவரும் மயக்கநிலைக்கு சென்றதும். வேகமாக வர்ஷினியை இழுத்துச் சென்று பின்பக்க்கமிருந்த ட்ரம்மிற்குள் போட்டேன். அடுத்து தான்யாவையும் அப்படியே செய்தேன். எல்லாம் முடிந்த பின்னர் நான் மட்டுமே எஞ்சி இருக்க, உள்ளே நுழைந்த நானாஜியின் ஆட்கள் இவர்கள் இருவரையும் காணாமல் எல்லா இடங்களிலும் ஆராய்ந்து விட்டு தினுவிற்கு விஷயத்தை சொல்ல, அவர் என்னை தூக்கிச செல்லும்படி கூறி இருக்கிறார்” என்று கூறி தாசின் முகத்தைப் பார்த்தாள்.

சித்தார்த்தோ வர்ஷினியை கீழே படுக்க வைத்துவிட்டு நேரே கேஷ்வியின் அருகில் சென்றவன் அவள் எதிர்பார்க்கும் முன் ஓங்கி அறிந்திருந்தான்.

“இது என் வர்ஷூவை அடித்து காயப்படுத்தியதற்கு” என்றவன் இருகைகளையும் கூப்பி “இது அவளை காப்பாற்றியதற்கு” என்றான் கண்களில் நன்றியுடன்.

சிவதாசோ இதை கவனிக்காமல் தன் போனை எடுத்து ஆம்புலன்சை அழைத்தான். ஆம்புலன்ஸ் வந்ததும் வர்ஷூ, தான்யா இருவரையும் ஏற்றிவிட்டு சித்தார்த்தையும் அவர்களுடன் அனுப்பிவிட்டு கேஷ்வியை தன்னுடன் அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

அனைவரும் ஹாஸ்பிடல் சென்றிருக்க அங்கே மருத்துவர் இருவரையும் பரிசோதித்துக் கொண்டிருக்க, சித்தார்த் பதட்டத்துடனேயே நின்றிருந்தான். தாதிக்கு செய்தி தெரிவிக்கப்பட்டிருக்க அவரும் வந்துவிட்டிருந்தார். .சிவதாசுடன் வந்திருந்த கேஷ்வி ஓரமாக நீன்று சித்தார்த்தின் முகத்தில் தெரிந்த உணர்வுகளை பார்த்துக் கொண்டிருந்தாள். ஏனோ அவள் மனதில் ஒரு நிம்மதி வந்திருந்தது.

தாதி சித்தார்த்தின் அருகே அமர்ந்து அவனது கரங்களை வருடிக் கொடுத்தபடி அமர்ந்திருந்தார். அவர் முகத்திலும் வேதனையின் சாயல். அந்நேரம் மருத்துவர் வெளியே வர சித்தார்த் எழுந்து வேகமாக அவரிடம் சென்றான்.

“எதுவும் பிரச்சனை இல்லை மிஸ்டர் சித்தார்த். வர்ஷினி மேடம் அதிர்ச்சியிலும் தாக்கப்பட்டதிலும் மயக்கத்தில் இருக்காங்க. மற்றபடி ஷி இஸ் ஆல்ரைட். நத்திங் டூ வொர்ரி, தான்யா கண் முழிச்சிட்டாங்க. நல்லா இருக்காங்க” என்று சொல்லி பாலை வார்த்தார்.

“நாங்க போய் பார்க்கலாமா”.

“தாரளமா”.

எவரையும் பார்க்காது அவசரமாக தான்யாவின் அறைக்குள் நுழைந்தவன் அவள் அருகே சென்று பார்த்தான்.

அவனை பார்த்ததும் ‘மாமா...மாமா” என்றால் கண்ணீருடன்.

அவளது கைகளை தட்டிக் கொடுத்தவன் “ஒன்னுமில்லடா எல்லாம் சரியாகிடுச்சு. நீங்க சேப் ஆக இருக்கீங்க” என்றான்.

“அக்கா...அக்கா எப்படி இருக்கா?” என்றாள் கண்ணீர் வழிய.

“நல்லா இருக்காம்மா. நீ ரெஸ்ட் எடு. இனி எந்த பிரச்னையும் இல்ல. தைரியமா இரு” என்றான் பரிவுடன். தாதியும் வந்துவிட அவர் அவள் அருகே இருந்து கொண்டார். அங்கிருந்து வெளியே வந்தவன் ஒருவித தவிப்புடன் வர்ஷினியின் அறைக்குள் நுழைந்தான். தலையிலும் கை, கால்களிலும் கட்டுப் போடப்பட்டிருக்க சோர்ந்த முகத்துடன் மயக்கத்தில் இருந்தால்.

அவள் அருகே சென்றவன் கட்டிலில் அமர்ந்து கொண்டு அவளது கரங்களை இறுகப் பற்றிக் கொண்டான். மெல்ல குனிந்து அவள் காதருகே “சோட்டி! உன் சித்து வந்திருக்கேன். என்கிட்டே வந்துட்ட-டா. என்னோட என் கரங்களில் நீ இருக்கடா சோட்டி!” என்று அவளது இதயத்தை துளைத்து உள்நுழைந்தது அவனது அழைப்பு.

அவளது கரங்களில் மெல்லிய அசைவு. அதைக் கண்டது மென்மையாக அதை வருடிவிட்டு தன் நெஞ்சோடு அனைத்துக் கொண்டவன் “எழுந்து வா சோட்டி. நாம கனவு கண்ட வாழ்க்கையை வாழலாம். உன்னை இனி எந்த கஷ்டமும் தீண்டாமல் பார்த்துக் கொள்வேன்” என்றான் அவள் முகம் பார்த்து.

அவளது கண்களின் ஓரம் கண்ணீர் மெலிதாக வழிந்தது. உதடுகள் லேசாக துடித்தது. மெல்ல விழிகளில் அசைவு தெரிந்தது. இமைகள் இரெண்டும் பூ போல மலர, எதிரே இருந்தவன் மீது பார்வை படிய, அந்த கண்களில் அவன் மீதான நேசம் புத்தம் புது வெள்ளம் என பிரவாகம் எடுத்து கரை புரண்டோடியது.

அவன் எதிர்பார்க்கும் முன் பட்டென்று எழுந்து அவனை இறுக அணைத்திருந்தாள். அவள் உடலில் அத்தனை நடுக்கம். லேசான விசும்பலுடன் “பயந்துட்டேன் சித்து. உங்களை விட்டு போயிடுவேனோன்னு பயந்துட்டேன்” என்றாள் அழுகையுடன்.

“நம்மை அந்த கடவுளால கூட பிரிக்க முடியாது சோட்டி. உன்னை எப்படி போக விடுவேன்” என்று கூறி இறுக அணைத்துக் கொண்டான்.

அவளும் அவனிடம் இருந்து பிரிய மனமில்லாமல் நன்றாக இறுக்கிக் கொண்டு “இனி ஒரு போதும் என்னை விட்டு தனியே எங்கேயும் போகாதீங்க. என்னால உங்கள் பிரிவை தாங்க முடியாது”.

“என்னாலையும் சோட்டி இன்னைக்கு உன்னை காணாமல் செத்தே போயிட்டேன்” என்றவனது விரல்கள் அவளது முதுகை வருடிக் கொடுத்தது.
 
  • Like
Reactions: Sumathi mathi