அத்தியாயம் - 26

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,852
2,040
113
அத்தியாயம் – 26

அன்று குஜராத்தின் தொழிலதிபர்களுக்கான மாநாடு மிகப் பெரிய அளவில் ஏற்பாடாகி இருந்தது. பொதுவாக ஒவ்வொரு வருடமும் நடக்கும் இந்த மாநாட்டில் தலைமை ஏற்று நடத்துவது நானாஜி குடும்பத்தினர் தான். இந்த வருடமும் அவர்களை தான் அழைத்திருந்தனர்.

முடிசூடா மன்னர்களாக குஜராத்தின் தொழில் ராஜாங்கத்தில் இருந்தவர்களுக்கு தங்களின் நிலையை எண்ணி எப்பொழுதும் பெருமிதம் உண்டு. இந்த இடத்திற்கு வரவும், தக்க வைத்துக் கொள்ளவும் தாங்கள் செய்த தகிடு தத்தங்கள் எத்தனை குடும்பங்களை அழித்திருக்கிறது என்பதை சிறிதளவும் எண்ணவில்லை.

இன்னும் எத்தனை குடும்பங்களும் தொழில்களும் அழிந்தாலும் தாங்கள் மட்டுமே அரசாள வேண்டும் என்கிற எண்ணம் நானாஜிக்கும், தினுவிற்கும் இருந்தது. அதில் தேவ் கொஞ்சம் நியாயவாதி. ஆரம்பத்தில் அவர்களுக்கு துணை போனவர் தான். ஆனால் என்று பிம்லாவின் வாழ்க்கை இவர்களின் தொழில் ஆசையால் வீனானதோ அன்றிலிருந்து அவர்களிடம் இருந்து விலகி சென்று கொண்டிருக்கிறார்.

சில நாட்களாக தங்களை சுற்றிலும் பிரச்சனைகளுடனே பயணித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த தொழிலதிபர்கள் மாநாடு ஒரு சிறிய சந்தோஷத்தை தந்தது. அங்கே தங்களின் மரியாதை, அந்தஸ்து எல்லாம் தெரியும் என்பதால் ஒவ்வொரு வருடமும் ஆர்வமாக எதிர்பார்ப்பார்கள் . அதிலும் நானாஜியிடம் கேட்காமல் எதையும் செய்ய மாட்டார்கள். அதனால் எல்லாவற்றிலும் நானாஜியின் தலையீடு இல்லாமல் இருக்காது.

அப்படிப்பட்ட ஒரு விழாவிற்கு கிளம்பிக் கொண்டிருந்த நானாஜியின் மனதில் சிறு சலனம். ஏனோ அவரால் உற்சாகமாக கிளம்ப முடியவில்லை. மனதில் ஏதோ நெருடல். பலத்த சிந்தனையுடன் கிளம்பிக் கொண்டிருந்தவரை பார்த்த தினு “என்னாச்சு பப்பா? உங்க முகமே சரியில்ல்லை?” என்றான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவர் “எனக்கென்னவோ நடப்பவற்றை எல்லாம் பார்த்தால் சித்தார்த் எங்கேயோ விளையாடுறானோன்னு தோணுது. எல்லாமே அவனோட திட்டப்படி நடக்குதோன்னு தோணுது தினு” என்றார் அனுபவசாலியாக.

தினுவோ திமிராக “இது நம்ம எழுப்பின சாம்ராஜ்யம் பப்பா. அவன் சின்னப் பையன். அவனால என்ன பண்ண முடியும். கொஞ்ச நாள் வேணா ஆடிப் பார்க்கலாம். நம்மோட மோதுகிற தைரியம் அவனுக்கு கிடையாது” என்றான் தெனாவெட்டாக.

அவனை அதிருப்தியுடன் பார்த்து “யாரையும் அத்தனை எளிதா நினைச்சிடாதே தினு. வெளில இருந்து பார்ப்பதற்கு நம்ம நிலைமை பலமானதா தெரியும். ஆனால் யோசிச்சு பாரு நம்ம நிலை என்னன்னு புரியும்”.

“தேவையில்லாம யோசிக்காதீங்க பப்பா. எதுவும் நம்ம கை விட்டு போகல”.

“வர்ஷினியை கேஷ்வி கடத்திட்டதா சொல்றாங்க. அதை நீ நம்புறியா தினு?”

“நம்புறேன் பப்பா. அவளுக்கு வர்ஷினி மேல அத்தனை கோபம் இருந்தது. நிச்சயம் செய்திருப்பாள்”.

“நான் அப்படி நினைக்கல தினு. நிச்சயம் வர்ஷினி சித்தார்த்தின் பாதுகாப்பில் இருப்பாள்”.

“அவனே யார் கிட்டேயும் சிக்கி இருக்கான். இதுல அவளுக்கு எப்படி அவன் பாதுகாப்பு கொடுக்க முடியும்?”

“இது தான் நீ. எந்தவொரு விஷயத்தையும் முழுசா ஆராயாம முடிவிற்கு வந்துடுவ. சித்தார்த்தை யாரும் கடத்தல. நம்மள திசைதிருப்புவதற்காக அவன் ஆடிய நாடகம் அது. அதே மாதிரி கேஷ்வி கடத்தி இருந்தாலும் அவளிடம் இருந்து வர்ஷினியை அவன் காப்பாற்றி இருப்பான்”.

“பப்பா நல்ல கற்பனை உங்களுக்கு” என்று கேலியாக சிரித்தான்.

அவனை வருத்தமாகப் பார்த்து “எனக்குப் பிறகு இந்த சாம்ராஜ்யத்தை நல்லா பார்துப்பன்னு நினைச்சேன் தினு. உனக்கு அறிவில்லேன்னு நிருபிச்சிட்ட” என்றபடி சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டு அங்கிருந்து சென்றார்.

“போங்க உங்க பெரிய பையன் தான் உங்களுக்கு பிறகு எல்லாவற்றையும் கட்டி காப்பாத்துவான்” என்று கத்தினான்.

“அவன் தான் எப்பவோ விலை போயிட்டானே” என்றபடி சென்றார்.

அவரின் மனதில் அன்று ஏதோ பெரிய சம்பவம் நடக்க இருப்பதாக தோன்றியது. சின்ன மகன் இத்தனை முட்டாளாக இருக்க வேண்டாம் என்று எண்ணிக் கொண்டே சென்றார். தங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களை அறிந்து கொள்ளாது பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருட்டு என்று நம்புவது போல நம்பிக் கொண்டிருப்பதாக தோன்றியது.

தந்தை,மகன் இருவரும் அவரவர் யோசனையில் மூழ்கியபடி காரில் பயணிக்க, தேவ்வோ உற்சாகமாக பாட்டு பாடிக் கொண்டே அமர்ந்திருந்தார். அதில் சற்று எரிச்சல் அடைந்த நானாஜி “என்ன தேவா? ரொம்ப உற்சாகமா இருக்க?”

“இந்த மாநாடு நமக்கு எப்பவும் ஸ்பெஷல் இல்லையா பப்பா?

“அது மட்டும் தானா இல்ல வேற எதுவும் இருக்கா?”

பட்டென்று தந்தையை திரும்பி பார்த்தவர் “வேற என்ன இருக்கும்னு நினைக்கிறீங்க?” என்றார்.

“இப்போ எல்லாம் நீ எங்க கிட்ட எதையும் சொல்வது இல்லை கேட்பதும் இல்லை. அதனால தான் கேட்டேன்”.
 
  • Like
Reactions: Sumathi mathi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,852
2,040
113
தந்தையை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தவர் எதுவும் பேசாமல் முன்பக்கம் திரும்பி அமர்ந்து விட்டார். அவரின் அந்த செயலில் நானாஜிக்கு உறுதியானது எதுவோ நடக்க இருப்பதை. அதன்பின்னர் ஒருவரும் பேசிக் கொள்ளவில்லை. அமைதியாக சென்று மாநாடு நடக்கும் இடத்தில் சென்று இறங்கினார்.

வழக்கம் போல அமர்க்களமான வரவேற்பு வழங்கப்பட்டு அவர்களை உள்ளே அழைத்துச் சென்று அமர வைத்தனர். மாநாடு தொடங்கப்பட்டு மதியம் வரை எந்தவித குழப்பமும் இல்லாமல் சென்றது. அதுவரை இருந்த சஞ்சலம் நீங்க நானாஜியின் முகம் தெளிவடைந்தது.அதைக் கண்டு கேலி செய்து சிரித்தான் தினு.

“வயசாகிடுச்சு பப்பா உங்களுக்கு. காலையில எத்தனை டென்ஷன் பண்ணுனீங்க?”

மெல்லிய சிரிப்புடன் அவனுக்கு பதில் சொல்லாமல் இருந்து கொண்டார். மதியம் தொடங்கப்பட்ட மாநாட்டின் போக்கு வேறு மாதிரி போக தொடங்கியது. அதை முதலில் ஆரம்பித்தது இளம் தொழிலதிபன் ஒருவன். ஒவ்வொரு தொழில் முனைவோரும் தனித்து நிற்க வேண்டும். யாரையும் சார்ந்து இருக்க கூடாது என்று தொடங்கி மெல்ல நடக்கும் அக்கிரமங்களை முன் வைக்கத் தொடங்கினான்.

அதில் டென்ஷன் ஆக ஆரம்பித்தான் தினு. நானாஜியும் மெல்ல கூட்டத்தை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார். யாரை எல்லாம் ஒதுக்கி, அழித்து விட்டதாக நினைத்தாரோ அவர்கள் எல்லோரும் அதிசயமாக கூட்டத்திற்கு வந்திருந்தனர். தங்களைச் சுற்றி பயங்கரமான சதி வலைப் பின்னப்பட்டு விட்டதை உணர்ந்தவருக்கு தெரிந்து போனது. முடிவை நோக்கி பயணிக்கிறோம் என்று.

அது புரியாத தினு “என்ன பப்பா இவன் இப்படி பேசிட்டு இருக்கான்? நம்ம ஆட்களை கூப்பிட்டு அவனை அப்படியே அமுக்கி உட்கார வைக்கவா?” என்றான் கோபமாக.

“நீ முதல்ல சுற்றி உள்ளதை கவனி தினு. எல்லாமே நம்ம கை மீறி போயிடுச்சு”.

“என்ன சொல்றீங்க?” என்றவனது பார்வை வட்டத்தில் விழுந்தவர்கள் சொன்ன செய்தி உவப்பானதாக இல்லை.

அவர்கள் தங்கள் நிலையை அலசி ஆராய்ந்து கொண்டிருக்க, சிவதாசும் சித்தார்த்தும் ஒன்றாக மாநாடு நடக்கும் இடத்திற்கு வந்திறங்கினர்.

இருவரையும் வரவேற்று உள்ளே அழைத்து வர, அவர்களை கண்டதும் நானாஜிக்கும் மேலும் உறுதியானது. அதிலும் சித்தார்த்தை கண்டதும் தன் கணக்கு சரி என்று தோன்ற தினுவை பார்த்தார். அவனோ அதிர்ச்சியும், ஆத்திரமும் எழ அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

இருவரையும் அமர வைக்க, சிவதாசோ அமராமல் “எனக்கொரு வேலை இருக்கு. அதற்காக தான் வந்தேன்” என்று கூறினான்.

நிகழ்ச்சி அமைப்பாளர்கள் என்னவென்று யோசித்து அவனை பார்க்க “வாங்க!” என்றழைத்து கொண்டு மைக்கின் அருகில் சென்று நின்றான். பேசிக் கொண்டிருந்த தொழிலதிபரின் காதில் ஏதோ சொல்லவும் அவன் சென்று அமைதியாக அமர்ந்து விட்டான்.

சித்தார்த்தோ யாரையும் கவனிக்காமல் நானாஜியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவரது முகத்தில் வந்து போகும் உணர்வுகளை எல்லாம் ஒன்று விடாமல் அவன் மனதில் ஏற்றிக் கொண்டிருந்தான்.

மைக்கை கையில் பிடித்துக் கொண்டு நடு மேடைக்கு வந்து நின்ற சிவதாஸ் “தொழிலதிபர்கள் மாநாடில் இவனுக்கு என்ன வேலைன்னு தானே பார்க்குறீங்க?” என்று கேட்டு அனைவரையும் பார்த்தான்.

அங்கிருந்த அனைவரின் மனதிலும் அந்த கேள்வி இருந்தது.

“என்னுடைய தேவை இங்கே இருக்கப் போய் தான் வந்திருக்கிறேன். ஒரு தொழில் தொடங்குவது என்பது மிகப் பெரிய சாதனை. அதில் ஆயிரம் கஷ்டங்கள் இருக்கு. ஆனா அதை எல்லாம் விட வேறொரு கஷ்டம் உங்களுக்கு எல்லாம் இருக்குன்னு கேள்விபட்டேன். அதை உண்மையான்னு தெரிஞ்சுக்கலாம்னு தான் வந்திருக்கிறேன்” என்றான்.

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிட்டு அவனே பேசட்டும் என்று அமைதியாக இருந்தனர். அப்போது சித்தார்த்து எழுந்து வந்து சிவதாசிடம் இருந்து மைக்கை வாங்கி “நான் சொல்றேன். இங்கே புதிதாக தொழில் தொடங்கும்னா அதுக்கு முறையா நாம அப்ரூவால் வாங்கினாலும், வேறொருவர் கிட்ட சம்மதம் வாங்காம தொடங்க முடியாது. அதற்க்கு நாம கொடுக்கும் விலை பெரியது. சரி தானே நான் சொல்றது?” என்றான்.

அங்கிருந்த அனைவருமே சித்தார்த்தின் கேள்வியில் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர். என்ன சொல்வது என்று தெரியாமல் இருக்க, நானாஜியினால் அனைத்தையும் இழந்து நின்ற தொழிலதிபர் எழுந்து “ஆமாம்! அதோ மேடையில் அமர்ந்திருக்கிறாரே அவர் தான் இதற்கெல்லாம் தலைவர்” என்று நானாஜியை கை காட்டினார்.

அவர் சொன்னதுமே அதுவரை பயந்து கொண்டிருந்த அனைவரும் தங்களின் வாக்குமூலத்தை கொடுக்க, நானாஜியின் முகம் இறுகிக் கிடந்தது. கொஞ்சமும் இதை எதிர்பார்க்கவில்லை. தனது நாற்காலியை உருட்டிக் கொண்டு சித்தார்த்தின் அருகே வந்தவர் “நானா உங்களிடம் எல்லாம் அப்படி நடந்து கொண்டேன்? என்னிடம் யாரும் நேரடியாக பேசி இருக்குறீர்களா?” என்று கேட்டார்.

அவரின் கேள்வியை கண்டு இல்லை என்று அனைவரும் சொல்லவும், சித்தார்த்தை நிமிர்ந்து பார்த்து விட்டு “இதற்கெல்லாம் காரணம் என் மருமகனும், மகளும் தான்” என்றார்.

சித்தார்த்தின் இதழில் மெல்லிய புன்னகை. சிவதாசோ நானாஜியை கூர்ந்து பார்த்தபடி நின்றிருந்தான்.

“அப்படியா நானா? என்னுடைய அப்பா நீரஜ் மல்ஹோத்ரா தான் இங்கு நடக்கும் தொழில்களின் தாதாவா?”

“ம்ம்...நீரஜ் தான் எல்லாவற்றிற்கும் காரணம்” என்றார்.

“உங்கள் பங்கு எதுவுமே இல்லையா?”

“நான் என் மகளுக்கு உதவுவேன் அவ்வளவே”.

“ஒ...” என்றவன் அங்கிருந்தவர்களின் முகங்களை கவனிக்க அதில் அதிருப்தி தெரிந்தது.

“என்னோட அப்பா நீரஜ் மல்ஹோத்ரா தான் உங்களை எல்லாம் தொழில் செய்ய விடாம தடுத்ததா?”

“இல்ல! இவர் பொய் சொல்கிறார். இவர் தான் எல்லாவற்றிற்கும் காரணம்”.

தாடையை தடவியபடி நானாஜியை பார்த்தவன் “என்ன சொல்றீங்க நானா?”

அவர் பதில் எதுவும் பேசாமல் இருக்க, “அப்போ நீரஜ் மல்ஹோத்ராவிடம் கேட்டு விடுவோமா?” என்றான் அங்கிருந்தவர்களை பார்த்து.

அதில் அதிர்ந்து போனவர் அவனை நிமிர்ந்து பார்க்க, அந்நேரம் நீரஜ் கம்பீரமாக அரங்கத்திற்குள் நுழைந்தார்.

அதை கண்டதும் அங்கிருந்தவர்கள் அனைவரும் உற்சாகமாகி அவரை சூழ்ந்து கொண்டனர். அவரும் அனைவரிடமும் தலையசைத்து வணக்கத்தை தெரிவித்து விட்டு மகன் அருகில் வந்தார். அவரின் பார்வை முழுவதும் நானாஜியின் மீது தான் இருந்தது. இந்த இடைப்பட்ட நேரத்தில் பிம்லாவும் அரங்கிற்கு வந்திருந்தார். அவருக்கு நீரஜை பார்த்ததும் இதயம் எகிறி குதித்துக் கொண்டிருந்தது.

“அனைவருக்கும் வணக்கம்! எல்லோரும் என்னை மன்னிக்கணும். உங்களை சுற்றி என் குடும்பத்தை சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். முக்கியமா எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களால உங்களில் பல பேரின் தொழில் பாதிக்கப்பட்டிருக்கு என்று தெரியும். அதற்கு காரணமாக என்னை கை காட்டி இருப்பார் என் மாமனார். உங்களைப் போல அவரிடம் மிக நெருக்கமாக சிக்கியவர்களில் நானும் ஒருவன். ஆனால் இவற்றை எல்லாம் நான் செய்யவில்லை என்பதற்கான ஆதாரத்தை சிவதாஸ் கிட்ட கொடுத்திருக்கிறேன். அவர் உங்களுக்கு என்னவென்று தெரிவிப்பார்” என்றார்.

சிவதாஸ் கண்ணை காட்ட அங்கிருந்த திரையில் ஒரு விடியோ ஓட விடப்பட்டது. அதில் நானாஜி, தினு, பிமலா, தேவ் மற்றும் நீரஜ் பேசிக் கொண்டிருந்த காட்சி ஓடியது. அதில் நீரஜ்ஜிடம் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் கொடுத்து அவர்களை கைக்குள் வைக்க வேண்டும் என்று நானாஜி சொல்பவை அனைத்தும் பதிவாகி இருந்தது.

நானாஜி, தினு மற்றும் பிமலா மூவருக்கும் அதிர்ச்சி. நீரஜ் இப்படி செய்திருப்பார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒன்றன் பின் ஒன்றாக அவர்கள் செய்தவைகள் அனைத்தும் காணொளிகளாக ஓடியது. அதை தவிர நீரஜை அடித்து கோமாவில படுக்க வைக்கும்படி பிம்லாவிற்கு நானாஜி சொல்வதும் வந்தது.

அதை கேட்டுக் கொண்டிருந்த சித்தார்த்தின் முஷ்டி இறுகியது. அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து நின்றனர். சொந்த மருமகனையே கொலை செய்யும் அளவிற்கு இருப்பவர் என்ன மனிதர் என்று அருவெறுத்து பார்த்தனர்.


 
  • Like
Reactions: Sumathi mathi