அத்தியாயம் - 26

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,652
1,596
113
அத்தியாயம்- 26

“நீ ரொம்ப ஓவரா போயிட்டு இருக்க...உன்னை ஒன்னும் நான் விரும்பி கல்யாணம் பண்ணிக்கல...ஞாபகம் வச்சுக்கோ” என்றாள் கோபமாக நித்யா.

அவள் வீசிய தலையணையை லாவகமாகப் பிடித்து அங்கிருந்த சோபாவில் வீசிவிட்டு, கைகளைக் கட்டிக் கொண்டு சுவற்றில் சாய்ந்து நின்று அவளை பார்த்து கேலியாக சிரித்த விஸ்வா, ‘நான் மட்டுமென்ன உன்னை விரும்பியா கட்டிட்கிட்டேன்...இவங்க எல்லாம் சேர்ந்து என் தலையில் கட்டி வச்சிட்டாங்க” என்றான்.

“ஒ...இவ்வளவு சம்பாத்திக்கிற பெண்ணை கட்டிக்க கசக்குதோ உனக்கு?”

இதழில் குறுநகையுடன் “என் மனைவிக்கு வேண்டியதை செய்ய என்னால முடியும்...அவள் சம்பாத்தியம் எனக்கு தேவையில்லை” என்றான்.

“ஆஹான்...இந்த வேலை செய்றதுக்கே இவ்வளவு திமிரு?”

மெல்ல அவள் எதிரே சென்று நின்றவன் “உன் வேலையை நான் கத்துகிட்டு செஞ்சிட முடியும்...ஆனா, நீ பாடினா கழுதை கூட கேட்காது.”

அவனது பதிலை கேட்டவள் கடுப்பாகி “போடா” என்று விட்டு கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.

அதை பார்த்ததும் அவள் அருகில் சென்றவனை கண்டு “ஏய்! எதுக்கு இங்க வர?” என்றாள் பதட்டத்துடன்.

அவனோ கேலி சிரிப்புடன் “உன்னை கொஞ்சுற ஐடியா எல்லாம் இப்போதைக்கு இல்ல. என் போன் தலையணைக்கு கீழே இருக்கு அதை எடுக்க வந்தேன்” என்றான்.

அவனது பதில் அவளை சீண்டி விட, தலையணைக்கு கீழே இருந்த போனை எடுத்து அவனை நோக்கி வீசினாள். அதை சரியாக கேட்ச் பிடித்தவன் “உன்னை மாதிரி நான் ஐடி-ல வேலை பார்க்கல மேடம். இந்த போன் உடைஞ்சா அடுத்த போன் வாங்க ஒரு வருஷம் ஆகும்” என்று கூறி விட்டு அறையிலிருந்து வெளியேறினான்.

தான் செய்தது தப்பென்று உணர்த்தால் நகத்தை கடித்தபடி யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அப்போது உள்ளே வந்த ரஞ்சிதம் “நகத்தை கடிக்காதே நித்யா” என்று அதட்டிக் கொண்டே எதிரே அமர்ந்தார்.

அவரது அதட்டலில் சற்று மனம் சுணங்கினாலும், ஏனோ கோபம் வர மறுத்தது.

“எத்தனை நாள் லீவ் போட்டிருக்க நித்தி?” என்றார் இயல்பாக.

“ஒரு வாரம் அ..அத்தை” என்றாள் தயக்கத்துடன்.

“ம்ம்.. .நாளைக்கு உங்க வீட்டுக்கு போயிட்டு வந்துட்டு நாளான்னைக்கு இங்கேயே இருங்க...அப்புறமா எங்கேயாவது பக்கத்தில் போயிட்டு வாங்க” என்றார்.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் “ம்ம்...சரி அத்தை” என்றாள்.

நாற்காலியை விட்டு எழுந்தவர் “சாப்பிடலாம் வா...முகத்தை பார்த்தா ரொம்ப சோர்வா தெரியுது” என்ற கூறி முன்னே நடந்தவர் சட்டென்று நின்று “உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் ...விஸ்வாவோட தொழிலை பத்தி எப்பவும் தப்பா பேசாதே...எனக்கு பிடிக்காது” என்றார் கடுப்பாக.

அவர் சொன்னதை கேட்டு ஒன்றும் பேசாமல் தலையை குனிந்து கொண்டாள்.

திருமணம் நடந்த வீடு போல் அல்லாது அவர்கள் குடும்பத்தினர் மட்டும் உணவு மேஜையில் அமர்ந்திருந்தனர்.

நிரஞ்சன் வீட்டில் இதுவரை ஒன்றாய் அமர்ந்து சாப்பிட்டதே இல்லை மூவரும். நிரஞ்சனை கண்டால் அவனிருக்கும் திசையில் கூட பார்க்க மாட்டாள். தனக்கு வேண்டியதை தட்டில் போட்டுக் கொண்டு அறையில் சாப்பிடுவதையே வழக்கமாக கொண்டிருந்தாள். நித்யா சொன்னவற்றுக்கெல்லாம் தலையசைக்கும் ரேணு, சாப்பாட்டு விஷயத்தில் மட்டும் அவளது பேச்சை காதில் வாங்க மாட்டாள். இருவேளை உணவும் தன் கையால் பரிமாற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள்.

உணவு மேஜைக்கருகே நின்று கொண்டு விழித்துக் கொண்டிருந்தவளை “விஸ்வா பக்கத்தில் உட்காரு நித்தி” என்றார் ரஞ்சிதம்.

அவர் சொன்னதும் மறுத்து பேச முடியாமல் விஸ்வாவின் அருகில் அமர்ந்தாள். அவனோ அவசரமாக நாற்காலியை ஓரடி தள்ளி போட்டு அமர்ந்து கொண்டான். அன்புமணி அதை எல்லாம் கவனிக்காது உணவை ரசித்து சுவைக்க ஆரம்பித்தார். விஸ்வா தன்னிடமிருந்து விலகி அமர்ந்ததை கண்டு கடுப்பானவள்...அவன் புறம் குனிந்து “என்ன சீன் போடுறியா?” என்றாள்.

அவனோ மிகவும் பவ்யமாக “நான் பாட்டுக்கு தெரியாம இடிச்சு வச்சு...நீ கோபத்தில் கடிச்சு வச்சிட்டா என்ன பண்றது...எல்லாம் ஒரு பாதுகாப்புக்கு தான்” என்றான்.

அவனை உறுத்து விழித்தவள் “ரொம்ப தான் பேசுற...இதுக்காகவே உன்னை கடிக்கனும்” என்றாள் கடுப்புடன்.

அவர்கள் தங்களுக்குள்ளே பேசிக் கொள்வதை கண்ட ரஞ்சிதம் “ரெண்டு பேரும் சாப்பிட்டிட்டு போய் பேசுங்க...சாப்பாடு அப்படியே இருக்கு” என்றார்.

அதன் பின்னர் இருவரும் அமைதியாக சாப்பிட்டு முடிக்க, விஸ்வா அன்னைக்கு அனைத்தையும் எடுத்து வைக்க உதவுவதை அதிசயமாக பார்த்தபடி நின்றிருந்தாள்.

“ஒய்...என்ன வேடிக்கை பார்க்கிற...நாளையிலிருந்து நீ ஹெல்ப் பண்ணு அம்மாவுக்கு” என்றான்.

அவன் அவளை ‘ஒய்’ என்றழைத்ததை கண்டு அவன் முதுகில் ஒரு அடியை போட்டுவிட்டு “என்ன-டா இது..அவளுக்கு பெயரில்லையா? இப்படி எல்லாம் கூப்பிடாதே” என்றார்.

“என்ன மாமியார்-மா நீங்க...மருமக கிட்ட கெத்து காட்ட வேண்டாமா?” என்றான் கிண்டலாக.

காலையில் இருந்த பதட்டமான மனநிலை மாறி நித்யாவின் மனம் அமைதியாக இருந்தது. அந்த குடும்ப சூழல் அவளுக்குள் ஒருவித ஆசுவாசத்தை அளித்தது. அவள் அடுத்து என்ன செய்வது என்று முழித்துக் கொண்டு நிற்பதை கண்ட ரஞ்சிதம் “நீ போய் படும்மா” என்றார்.

அவர் எப்போது சொல்வார் என்று எதிர்பார்த்த மாதிரி விஸ்வாவின் அறைக்குள் நுழைந்தவளுக்கு, அவனும் இரவு அங்கு தங்குவான் என்கிற எண்ணம் எழுந்ததும் கால்கள் தடுமாறியது. ‘ஹையோ...அவன் இங்கே வந்தா எனக்கு பயமா இருக்குமே’ என்ற எண்ணம் எழ, கட்டிலில் அமராமல் மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள்.

அன்னையிடம் பேசி விட்டு வந்தவன், கதவை சாத்தி தாழிடவும், அந்த சத்தத்தில் உணர்வுக்கு வந்தவள் “எதுக்கு கதவை சாத்துற...திறந்து விடு...எனக்கு பயமாயிருக்கு ” என்று கதவருகே பாய்ந்தாள்.

அவன் கதவின் மீது சாய்ந்து நின்று கொண்டு “நான் சொல்ல வேண்டிய டயலாக்கை நீ சொல்ற டார்லிங்” என்றான்.

அவளோ அவன் பேச்சை கவனிக்காமல் “நீ தள்ளு...கதவை திற” என்றாள் பதட்டத்துடன்.
 
  • Love
Reactions: Chitra Balaji

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,652
1,596
113
“அடியே! டாபர்மேன் குட்டி...நான் தான் உன்னை கண்டு பயப்படனும்...நீ எதுக்கு இவ்வளவு டென்ஷனாகி கதவை திறக்க சொல்ற?”

அவனது கேலியை கண்டு கொள்ளாமல் “ப்ளீஸ்...கதவை திறந்து விடு” என்றாள் கெஞ்சலான குரலில்.

அவனும் பிடிவாதமாக “நோ...வே! பேசாம போய் படு...நானே என் கற்புக்கு பங்கம் வந்துடுமோன்னு பயந்துகிட்டு இருக்கேன்...ராத்திரி எழுந்திரிச்சு என் பக்கத்தில வந்துட மாட்டேயில்ல” என்றான் சீரியசான குரலில்.

அதுவரை கதவையே பார்த்துக் கொண்டு அவனது பேச்சை கவனிக்காமல் இருந்தவள், கடைசியாக அவன் சொன்னதை கேட்டு கடுப்பாகி பக்கத்தில் இருந்த டேபிளில் இருந்த சீப்பை தூக்கி எறிந்து, ‘கொன்னுடுவேன்!’ என்று எச்சரித்தாள். அதோடு வேகமாக சென்று இரு தலையணைகளை எடுத்து எதிரே இருந்த சோபாவில் போட்டு “நீ அங்க படு...ஏதாவது ஏடாகூடமா பண்ணனும்னு நினைச்ச ரத்தம் வர அளவுக்கு கடிச்சு விட்டுடுவேன்” என்றாள்.

அவள் கடித்துவிடுவேன் என்று சொன்னதுமே வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவன் ‘ஒரு தடவை கடிபட்டதே போதும்...விஸ்வா உனக்கு கடி தேவையா?’ என்று தன்னை தானே கேட்டுக் கொண்டு சோபாவில் சென்று சாய்ந்தான்.

அவன் அங்கு சென்று படுக்கவும், ஒருவித பயத்துடன் அவனை திரும்பி-திரும்பி பார்த்துக் கொண்டே படுக்கையில் சென்று அமர்ந்தாள். அவனோ தன் இரு கைகளை தலையின் அடியில் வைத்துக் கொண்டு விட்டத்தை பார்த்து ‘இந்த சினிமாவில் எல்லாம் முதலிரவு அன்னைக்கு பொண்ணு பால் சொம்போட குனிந்த தலை நிமிராம வந்து காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணும்...ஆனா, உனக்கு ஒரு டாபர்மேனோட முதலிரவை கொண்டாட விட்டுடாங்களே-டா...என்னமோ போடா விஸ்வா...உன்னால நிம்மதியா தூங்க கூட முடியாது போல...எந்த நேரம் டாபர்மேன் பாயுமோன்னு பயப்படணும்னு உன் தலைவிதி போலிருக்கு’ என்று புலம்பிக் கொண்டிருந்தான்.

அவன் என்ன செய்கிறான் என்று ஆராய்ந்தபடியே படுத்துக் கொண்டிருந்தவளுக்கு அவனது பேச்சு ஒருபுறம் சிரிப்பை கொடுக்க, மறுபுறம் தன்னை டாபர்மேன் என்று சொல்வதை கேட்டதும், பக்கத்திலிருந்த தலையணை எடுத்து அவன் மீது வீசினாள்.

அவன் அதை அழகாக கேட்ச் பிடித்து “டாபு குட்டி என்னால அடிக்கடி பாஸ்கெட் பால் விளையாட முடியாதுடா... இன்னைக்கு நிறைய கோல் போட முயற்சி செஞ்சு தோத்து போயிட்ட... நாளைக்கு மறுபடியும் ட்ரை பண்ணுடா...மாமன் இன்னைக்கு செம டையர்ட்” என்றான்.

அவன் மீண்டும் டாபர்மேன் என்று கூறுவதை கேட்டு கோபத்துடன் “இன்னொரு முறை டாபர்மேன்னு சொன்ன...உண்மையாவே சங்கை கடிச்சிடுவேன்..ஆமாம்” என்று விழிகளை உருட்டினாள்.

“நீ உங்க ஸ்கூல்ல காளி வேஷம் போட்டு நடிச்சிருக்கியா நித்தி...ஏன் சொல்றேன்னா உன் முட்டை முழியை பார்த்தா நல்லா சூட் ஆகும்னு தோணுது” என்றான் குறுஞ்சிரிப்புடன்.

‘அவன் வேண்டுமென்றே தன்னை கேலி செய்து ஒட்டுகின்றான்’ என்று கடுப்பாகி பேச்சுக் கொடுக்காமல் அமர்ந்து கொண்டாள். அவள் எதுவும் பதில் கொடுப்பாள் என்று காத்திருந்தவன், அவள் எதுவும் பேசாமல் போனதும் கண்களை மூடி அமைதியை ரசிக்கத் தொடங்குகின்றான்.

நித்யாவிற்கோ தூக்கம் கண்களை சுழற்ற, அதே சமயம் பயம் ஒருபுறம் இருக்க, சற்று நேரம் கண் அசருவதும், அவன் அங்கேயே படுத்திருக்கிறானா என்று பார்ப்பதுமாக இருந்தாள். அவளது நிலையை அறிந்து கொண்டவன் மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தான்.

கண்ணே கலைமானே கன்னி மயிலென

கண்டேன் உன்னை நானே- அந்தி பகல்

உனை நான் பார்க்கிறேன்

ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்

ராரிரோ...ஆரிராரோ...ஒ..ராரிரோ....

நீயோ கிளிப்பேடு பண்பாடும் ஆனந்த குயில் பேடு

ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது

முதலில் அவன் பாடுவதை கண்டு அதிர்ந்து பார்த்தவள், அவனது குரல் அவளிதயத்தை வருட, தன்னை மறந்து அயர்ந்து உறங்க ஆரம்பித்தாள். அவளுக்குள் இருந்த பயம், பாதுகாப்பற்ற நிலை அனைத்தையும் அகற்றி, அவனது குரல் ஆழ்ந்த உறக்கத்திற்கு அவளை அழைத்துச் சென்றது. பல வருடங்களாக தூக்கமின்றி தவித்தவளுக்கு அவனது பாடல் நிம்மதியை அளித்தது.

குழந்தை போல் அயர்ந்து உறங்குபவளின் அருகில் சென்று பார்த்தவனின் மனம் வலித்தது.’இவள் என்னவள்! அவள் துக்கத்தை களைந்து நல்ல வாழ்க்கையை கண்டிப்பாக கொடுப்பேன்!’ என்று சொல்லிக் கொண்டான்.

அவளது தலையை வருட துடித்த கைகளை தவிப்புடன் விலக்கி, போர்வையை போர்த்திவிட்டு தன்னிடத்தில் சென்று படுத்துக் கொண்டான்.
 
  • Love
Reactions: Chitra Balaji

Chitra Balaji

Active member
Feb 5, 2020
94
44
28
Vishva semma டா நீ love you da..... அவல enna panninaa avala normal ah வெச்சிக்க முடியும் nu Yosichi correct ah avala ethayum யோசிக்க mudiyaatha படி pannitaan.... அவன் பாட்டா la thunga vum vechitaan.... Super Super maa.... Semma episode