Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் -23 | SudhaRaviNovels

அத்தியாயம் -23

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் – 23

சிவதாசிடம் சில பல விஷயங்களை பகிர்ந்து கொண்டவன் “இது வெளில யாருக்கும் தெரியாது தாஸ். இப்போ உங்க கிட்ட சொல்லி இருக்கேன். சோ நீங்க எப்போனு சொன்னா அதற்கு தகுந்தார் போல முடிவு பண்ணிக்கலாம்”.

“ஓகே குட் சித்தார்த். நீங்க அந்த கம்பனி விஷயத்தை முடிங்க. அதற்குள் மற்ற டீடைல்ஸ் கலெக்ட் செஞ்சுகிறேன். பட் பீ கேர்புல். உங்க மனைவிக்கு ஆபத்து காத்திருக்கு”.

“இனியொரு தடவை அவளை பாதுகாப்பில்லாமல் விட மாட்டேன் பார்த்துக்கிறேன் தாஸ்”.

சித்தார்த் அவன் சொன்னவற்றை எண்ணியபடி தன்னை தந்தை அடைத்து வைத்திருந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தான். நானாஜியும், தினுவை பற்றி அவன் மனதில் சந்தேகம் இருந்தது. ஆனால் அவர்கள் இத்தனை மோசமானவர்களாக இருப்பார்கள் என்று எண்ணவில்லை. தாஸ் சொன்னவைகள் சிறிது தான். அதற்கு மேலும் இருக்கும் என்று நினைத்தவன் அவர்களை விடக் கூடாது என்று தீர்மானித்தான். அதிலும் வளர்ப்பு அன்னையான பிம்லா தேவியும் இத்தனை மோசமானவராக இருப்பார் என்ற எதிர்பார்க்கவில்லை.

ஹோட்டலில் அவனுக்காக காத்திருந்தனர் அவனது நண்பர்களும், ஒரு சில ஷேர் ஹோல்டர்களும். அவர்கள் அனைவரிடமும் நலம் விசாரித்து விட்டு தனக்கு என்ன தேவை என்பதை விளக்கினான். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையும் அவர்களுக்கு புரிய வைத்தான். அதில் ஒன்று இரண்டு பேர் அவன் சொல்வதை ஏற்க மறுக்க, அவர்களுக்கு ஒரு ஆடியோவை போட்டு காட்டினான். அதை கேட்டதுமே அவர்களும் அவனுக்கு உதவுவதாக ஒத்துக் கொண்டனர்.

“எனக்கு வேண்டியது எல்லாம் கம்பனியிலிருந்து பிம்லா தேவியை விடுவிக்கணும். அவங்களுக்கும் கம்பனிக்கும் எந்த சம்மந்தமும் இருக்க கூடாது. அதற்கு என்ன செய்யணுமோ செய்ங்க. சட்ட விரோதமா இருந்தால் கூட பரவாயில்லை”.

“அவங்க உங்க அம்மா தானே சித்தார்த்? பின் ஏன்?”

“உங்க கேள்விகளுக்கு எல்லாம் நிச்சயம் பதில் கிடைக்கும். அதோட நாம செய்யப் போகிற இந்த விஷயம் குஜராத்தில் பிஸ்னெஸ் வட்டாரத்தில் நிறைய விளைவுகளை ஏற்படுத்தும்.நல்ல விளைவுகளை”.

“உங்களுக்காக இல்லேன்னாலும் அவருக்காக நாங்க இதை செய்து முடிக்கிறோம்” என்று உறுதி செய்தனர்.

அதன்பின் நண்பர்களில் வழக்கறிஞரான ஒருவரை வைத்து என்னென்ன செய்யலாம் என்று பலவிதமாக ஆராய்ந்தனர். எந்த இடத்திலும் சந்தேகம் எழாதவாறு காரியத்தை முடிக்க வேண்டும் என்று முடிவு செய்து திட்டங்களை வகுத்தனர். அதன்படி பிம்லா தேவியின் கையெழுத்தால் சில பிரச்சனைகளை உண்டாக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு நானாஜியிடம் இருந்தோ, தினுவீடம் இருந்தோ அவருக்கு உதவி கிடைக்காமல் செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதை மறுநாளே செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டு சித்தார்த் அங்கிருந்து கிளம்பினான்.

அவன் ஹோட்டலை விட்டு வெளியேறி காரில் பயணிக்கும் போது, அவனை பின்தொடர்ந்தது ஒரு கார். அதைக் கண்டதும் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன் தனது மொபைலில் இருந்து மெச்செஜ் கொடுத்தான் “ஸ்டார்ட் ஆபரேஷன்” என்று. அதை கொடுத்துவிட்டு ஜாலியாக காரை ஓட்ட ஆரம்பித்தான்.

அவனை விடாது தொடர்ந்தது அந்தக் கார். நேர் பாதையில் சென்று கொண்டிருந்த காரை திடீர் என்று வழிமறித்து ஒரு கார். சடாரென்று ப்ரேக் போட்டு நிறுத்தியவன் காரின் ஜன்னலைத் திறந்து என்னவென்று பார்க்க, அந்தக் காரிலிருந்து இறங்கிய ஆட்கள் அவனது காரை நோக்கி ஓடி வந்தனர்.

அவனை பின்தொடர்ந்த காரில் இருந்தவர்கள் அதிர்ந்து போய் இதை பார்த்துக் கொண்டிருந்தனர். கண் இமைக்கும் நேரத்திற்குள் சித்தார்த் அவனது காரிலிருந்து அந்த காருக்கு மாற்றபட்டான். அடுத்த நிமிடம் அந்தக் கார் சீறிப் பாய்ந்திருந்தது.

என்னவென்று உணரும் முன்பே சித்தார்த் கடத்தப்பட்டிருந்தான். அந்தக் காரிளிருந்தவர்கள் உடனே தகவலை தெரிவித்தனர். இப்படியொரு திருப்பத்தை எதிர்பாராதவர்கள் திகைத்து போய் அமர்ந்திருந்தனர்.

“பப்பா யாராக இருக்கும்? நம்மை விட அவனுக்கு வேற எதிரி யார் இருக்காங்க?’ என்றான் தினு கோபமாக.

“தெரியல தினு. ஒருவேளை இது அவனுடைய வேலையாக இருக்குமோ?”

“இருக்காது! அவன் பொண்டாட்டியை இங்கே விட்டு வச்சிட்டு நிச்சயம் இதை செய்ய மாட்டான். நம்ம எதிரிகள் தான் யாரோ அவனை கடத்தி இருக்கணும். அதன் மூலியமா நம்ம கிட்ட காரியத்தை சாதிக்க நினைத்திருக்கலாம்”.

“ம்ம்...பார்க்கலாம். என்ன வருதுன்னு. நீ எதுக்கும் பிம்லாவுக்கு சொல்லிடு”.

“வேண்டாம் பப்பா. அவ சரியில்லை. தானாக தெரியட்டும்”.

“சரி”.

அதே நேரம் வர்ஷுவின் எண்ணிற்கு ஒரு செய்தி வந்தது. நாளை என்னைப் பற்றி என்ன செய்தி வந்தாலும் தைரியமாக இரு. இது என்னுடைய போராட்டத்தின் ஒரு ஆட்டம். என்னைப் பற்றிய செய்தியை கேள்விப்படும் போது உன்னுடைய பயத்தை, வருத்தத்தை எல்லோரின் முன்பும் பதிவு செய். அப்போது தான் சந்தேகம் மற்றவர்களின் மேல் பாயும். என்னுடைய போராட்டமும் ஜெயிக்கும் என்று கொடுத்திருந்தான். அதை தாதியிடம் அவள் காட்டினாள்.

அவர் இதழ்களில் மெல்லிய புன்னகை “என் பேரன் ஆரம்பிச்சிட்டான். அவன் சொன்ன மாதிரி நீ நடந்துக்கோ. ஜெயிச்சிடலாம்” என்றார்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
“சரி பாட்டி”.

பாட்டி பஜ்ரங்கை அழைத்து “பாதுகாப்பு பலமாக இருக்கட்டும் பஜ்ரங். நேரம் நெருங்கிக் கொண்டிருகிறது. என்ன நடந்தாலும் வர்ஷினியின் உயிருக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது” என்றார்.

“நான் இருக்கிறேன் மேம்! எதுவும் செய்ய முடியாது”.

அவர் பேசி முடித்ததும் பயந்து போயிருந்த தான்யா “என்ன பாட்டி இது சினிமாவில் பார்ப்பது போல எல்லாம் நடக்கிறது? நாங்கள் வாழ்ந்த உலகம் வேற பாட்டி. அங்கே கஷ்டம் என்றால் பணக்கஷ்டம், இல்லேன்னா மனக்கஷ்டம் மட்டும் தான் இருக்கும். ஆனா உங்க வாழ்க்கை வேறு திக்கில் பயணிக்கிறது. இதெல்லாம் அக்கா எப்படி தாங்குவாள்?” என்றாள் கவலையாக.

“நிச்சயம் கஷ்டமான விஷயம் தாண்டா. ஆனா அவள் அவன் மேல வைத்த காதலுக்காக எல்லாவற்றையும் தாங்குவாள்” என்றார் சிரிப்புடன்.

அக்காவை திரும்பி பார்த்தவள் “அப்படியா?” என்று கேட்க ஆம் என்று தலையசைத்தாள்.

அவளோ படுக்கையில் கை, கால்களை நீட்டிப் படுத்தவள் “நிம்மதியா தூங்க கூட முடியாம எப்போ எவன் என்ன பண்ணுவான்னு எதிர்பார்த்துகிட்டே இருக்கிறது என்ன வாழ்க்கை. எனக்கெல்லாம் உங்க அரண்மனை வாழ்க்கை செட்டாகுது பாட்டி. நான் கல்யாணம் செய்தா சாதாரண ஆளாக பார்த்து தான் பண்ணிப்பேன்” என்றவளை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர் இருவரும்.

அவரவர் யோசனையில் மூழ்கியபடியே அன்றைய இரவை கடக்க, காலையில் படபடவென்று கதவு தட்டப்பட்டது. தாதி அவளுக்கு கண்ணை காண்பித்து கதவை திறக்கும்படி கூறினார்.

அவள் கதவை திறந்ததும் கோபமும் அழுகையுமாக உள்ளே நுழைந்தாள் கேஷ்வி. அவளை பின்தொடர்ந்தார் பிம்லா.

தாதியை பார்த்து “உங்க பேரனை கடத்திட்டாங்களாம்” என்றார் பிம்லா தேவி.

கேஷ்வியோ அழுகையுடன் “உண்மையான மனைவியா இருந்தா எதையுமே தெரிஞ்சுக்காம இப்படி இருப்பாளா?” என்று வர்ஷினியிடம் பாய்ந்தாள்.

வர்ஷினியோ சித்தார்த்தை கடத்தி விட்டார்கள் என்கிற செய்தியை கேட்டதும் அப்படியே மயங்கி சரிந்தாள். அதை பார்த்த கேஷ்விக்கு மேலும் கடுப்பானது.

அவள் அருகே சென்று “ஏய் ! இந்த டிராமா எல்லாம் செல்லுபடி ஆகாது. எழுந்திரு! எப்படியும் உன்னால எதுவும் செய்ய முடியாது. எதுக்கு இந்த வேஷம்?” என்று கத்தினாள்.

தாதியோ “ஷ்..கேஷ்வி!” என்றவர் தான்யாவிடம் தண்ணீர் எடுத்து வந்து தெளித்து அவளது மயக்கத்தை தெளிய வைக்கும்படி கூறினார். தண்ணீர் தெளிக்கப்பட்டதும் எழுந்தவள் நேரே சென்று பிம்லாவின் கைகளைப் பற்றிக் கொண்டு “ஏதாவது செய்ங்க...அவரை கண்டுபிடிங்க” என்று அழ ஆரம்பித்தாள்.

கேஷ்வியோ அவளது அழுகையை கண்டு கடுப்பாகி “என்ன ஓவரா சீன போடுற?” என்று அவளைப் பிடித்து உலுக்கினாள்.

தான்யா அவளிடம் இருந்து வர்ஷுவை பிரித்து விட, கடுப்பான தாதி “கேஷ்வி! அமைதியா இருக்கிறதா இருந்தா இங்கே இரு. இல்லேன்னா வெளியே போ” என்றவர் பிம்லாவிடம் “என்ன நடந்தது? யார் செய்திருப்பாங்க?’ என்றார்.

“தெரியல! அவனும் அவன் அப்பாவும் ஊர் முழுக்க எதிரிகளை சம்பாதிச்சு வச்சிருக்காங்கள்ளே. அவங்கள்ள யாராவது இருக்கும்” என்றார் அலட்சியமாக.

“அவன் உன் வயிற்றில் பிறக்கலேன்னாலும் நீ பாலூட்டி வளர்த்திருக்க பிம்லா. அந்த பாசம் கூடவா இல்ல?” என்றார் கோபமாக.

அவரின் கேள்வியில் முகம் கோபத்தில் ஜிவுஜிவுக்க “என்ன சொன்னீங்க? பாசமா? எவளோ பெற்ற பிள்ளையை என் பிள்ளை போல வளர்க்க வைத்த உங்க கணவர் இருந்திருக்கணும் இங்கே. என் உணர்வுகளை வைத்து விளையாடிய உங்களை எல்லாம் சும்மா விட்டிருக்க மாட்டேன். அவனுக்கு பாலூட்டி வளர்த்ததினால் தான் என் கையால் எதுவும் செய்யாம இருக்கிறேன்” என்று கத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

அவரின் கோபம் கண்டு விக்கித்துப் போய் நின்றிருந்தாள் வர்ஷினி. அவள் மனதில் பிம்லா மீதான பரிதாபம் எழுந்தது. கேஷ்வியோ அவர்களை அலட்சியாமாக பார்த்து விட்டு வெளியேறினாள்.

அவர்கள் சென்றதும் தனது வீல்சேரை உருட்டிக் கொண்டு வெளியே சென்ற தாதி தனது ஆட்களின் மூலம் போலீஸ் கமிஷனரிடம் பேசினார். அதை எல்லாம் கவனித்துக் கொண்டே தான் இருந்தார் பிம்லா. வர்ஷுவோ அழுத கண்ணும், சிந்திய மூக்குமாக அவரின் பின்னேயே சுற்றிக் கொண்டிருந்தாள். அவர்களின் நடவடிக்கைகள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

அதே நேரம் சிவதாஸ் நானாஜியின் மூலம் தொழிலை இழந்தவர்களிடம் விசாரணையை தொடங்கி இருந்தான். முதலில் பயந்தவர்கள் சிவதாஸின் பலத்தை உணர்ந்து வாயை திறக்க ஆரம்பித்தார்கள்.

சித்தார்த்தின் கம்பனியில் அவர்களின் முடிவின்படி முதல் ஆட்டம் ஆரம்பமானது. வெளிநாட்டு டீலிங் ஒன்று பிம்லாவினால் முடிக்கபப்ட்டு அது தொடர்பான வேலைகள் சென்று கொண்டிருந்தது. அது சம்மந்தமான அனைத்து முடிவுகளிலும் அவரே முதன்மையாக இருக்க, அவரின் கையெழுத்தே எல்லா இடங்களிலும் சேர்க்கப்பட்டிருந்தது.

சித்தார்த் கடத்தப்பட்டதால் அதை பற்றி விசாரித்து விட்டு கம்பனிக்கு லேட்டாக வந்து சேர்ந்தார் பிம்லா. அங்கு அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவர் முடித்த டீலிங்கில் பெரும் பிரச்சனை உருவாகி இருந்தது. அவரால் சரி பார்க்கப்பட்டு அனைத்தும் நடந்திருக்க, அந்த கம்பனியே பிராட் கம்பனி என்று தகவல் வந்திருந்தது. அந்த பிராஜெக்டுக்காக பல கோடி செலவில் அனைத்தும் தயாராகி கொண்டிருக்க, இப்படியொரு செய்தியை கேட்டு அதிர்ந்து நின்றார்.

இதை எப்படி எதிர்கொள்வது என்று யோசிக்கும் நேரம் ஷேர்ஹோல்டர்கள் அனைவரும் அவளை சந்திக்க காத்திருந்தனர்.

காலையில் இருந்தே இவற்றை எல்லாம் கண்காணிக்க தொடங்கி இருந்தார் நானாஜி. இருவருக்கும் பல குழப்பங்கள். பிம்லாவால் கம்பனியில் பிரச்சனை என்றதும் இருவரும் அவளை காண அங்கே சென்றனர். சித்தார்த்தும் கடத்தப்பட்டிருக்க, நீரஜ் கோமாவில் இருக்க நடப்பற்றை நடத்துவது யார் என்கிற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை.

ஷேர்ஹோல்டர்கள் அனைவரையும் சந்திக்கும் முன்பு மகளை சந்தித்தார் நானாஜி.

“என்ன நடக்குது பிம்லா? உனக்கு தெரியாமல் உன் குடும்பத்தில் பல விஷயங்கள் நடந்துகிட்டு இருக்கு? நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” என்றார் கூர்மையான குரலில்.

குழப்பத்துடன் கூடிய குரலில் ‘தெரியல பப்பா. என்ன நடக்குதுன்னு புரியல. சித்தார்த் இருந்திருந்தா அவன் தான் இதெல்லாம் செஞ்சிருப்பான்னு சொல்லலாம். இப்போ யார் இதை எல்லாம் செய்றாங்கன்னு புரியல?”

“சித்தார்த்தின் மனைவியை கவனிச்சியா? எனக்கென்னவோ சித்தார்த் தான் விளையாடுகிறானோன்னு தோணுது” என்றார் யோசனையுடன்.

தினுவோ “நிச்சயமாக இருக்காது பப்பா. நான் எல்லோரையும் என்னுடைய கண்காணிப்பில் தான் வைத்திருக்கிறேன். இது வேற யாரோ நம்ம கிட்ட விளையாடுறாங்க”.

“கிழிச்ச! கண்காணிப்பில் வைத்திருப்பவன் சித்தார்த்தை கடத்தும் வரை எப்படி கோட்டை விட்ட?”

“அது நான் எதிர்பார்க்காதது பப்பா”.

“தேவ் எங்கே? அவனையும் கண்காணிக்க சொல்லி இருந்தேனே?”

“இங்கே தான் இருக்கான்...சந்தேகப்படும் வகையில் அவன் எதையும் செய்யல”.

“ம்ம்...பிம்லா கம்பனி பிரச்னையை எப்படி சரி செய்யப் போற?”

“நானே பொறுபேற்றுக் கொள்கிறேன் பப்பா” என்றவளை முறைத்தவர் “நான் சொல்கிறபடி செய். எல்லாவற்றிலும் தேவ்வை முன்னே வை. டீலை நீ தான் முடிச்ச. ஆனா மற்ற விவரங்களை சரி பார்த்தது தேவ் தான் என்று சொல்லு. பேப்பர் வொர்க்கிலும் சிலவற்றில் அவன் பெயரை கொண்டு வா” என்றார்.

“இதெல்லாம் எதுக்கு பப்பா? எல்லாவறையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். அண்ணனை எதுக்கு உள்ளே கொண்டு வரணும்? அதில் நிறைய சிக்கல் இருக்கு” என்றார்.

“எனக்கென்னவோ கம்பனி பொறுப்பில் இருந்து உன்னை விடுவிக்க நடக்கிற சதி மாதிரி தோணுது. நீயா அதில் போய் சிக்காதே. தேவ் இதற்காவது உதவட்டும்” என்றார்.

அதே நேரம் தேவ் ஷேர்ஹோல்டர்களை சந்தித்து “டீலிங்கை பற்றிய விவரங்களை புட்டு-புட்டு வைத்துக் கொண்டிருந்தார். தங்கை தான் கவனக்குறைவாக நடந்து கொண்டிருக்கிறார் என்று கூறி அதற்கான பேப்பர் ஆதாரங்களை அவர்களிடம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
 
  • Like
Reactions: Sumathi mathi