அத்தியாயம் - 23

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,652
1,596
113
அத்தியாயம் –23

ரம்யா பேசியதும் அதுவரை இருந்த குழப்ப மனநிலை மாறி உள்ளுக்குள் உற்சாகம் தோன்ற, தன்னை மறந்து விஸ்வாவின் பாடலை ரசிக்க ஆரம்பித்திருந்தாள். ‘பரவாயில்ல...நல்லா தான் பாடுறான்’ என்று மெச்சிக் கொண்டாள்.

இரண்டு மணி நேர நிகழ்ச்சி முடிந்ததும், அதுவரை எட்டி இருந்தே அவளை கவனித்துக் கொண்டிருந்த ரஞ்சிதம் அவள் அருகில் வந்தார். அவர் மனதில் அவளைப் பற்றிய கணிப்பு சற்று உயர்ந்திருந்தது. இத்தனை வலிகளுக்கு பிறகு படித்து தன்னம்பிக்கையுடன் வேலைக்குப் போய் கொண்டிருக்கும் அவள் மீது மதிப்பு கூடியது.

தன்னருகில் வந்து நின்றவரை யோசனையுடன் பார்தவளைக் கண்டு மென்னகை புரிந்து “நான் விஸ்வாவோட அம்மா” என்றார்.

“ஒ..ஹலோ ஆண்ட்டி. நான் ரேணுவோட சிஸ்டர் நித்யா” என்றாள் மரியாதையாக.

உள்ளுக்குள் தயக்கமிருந்தாலும் அதை வெளிக்காட்டாது தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவளது செயல் அவரை கவர்ந்தது.

மெல்ல அவளிடம் பேச்சுக் கொடுத்து அவளைப் பற்றி சிலபல விவரங்களை வாங்கிக் கொண்டார். ஆரம்பத்தில் தயங்கினாலும், அவரது கனிவான பேச்சு அவளை அவரிடம் இயல்பாக பேச வைத்தது.

நிகழ்ச்சி நிர்வாகிகளிடம் பேசிக் கொண்டிருந்தாலும் விஸ்வாவின் கண்கள் தன்னவளையே சுற்றி வந்தது. மிக சாதரணமாக தன் அன்னையிடம் பேசிக் கொண்டிருக்கும் அவள் மீது அன்பு பெருகியது. அப்படியே ஓடிச் சென்று அவளை அணைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்ற, அது இப்போதைக்கு தன் வாழ்க்கையில் நடக்காத காரியம் என்பதை உணர்ந்து பெருமூச்செழுந்தது.

அவனையே கவனித்துக் கொண்டிருந்த சிவா நண்பனின் அருகில் தோள்களில் தட்டி “நீ நினைக்கிறது நடக்கும் விச்சு...தங்கச்சியோட நல்லாயிருப்ப” என்றான்.

“ம்ம்..இப்போ அவ இருக்கிற மனநிலை தொடர்ந்தா எல்லாம் எளிதா இருக்கும். பூவை போல அவளை பார்த்துக்கனும்-டா...அவளோட சின்ன வயசு கனவுகளை எல்லாம் நிறைவேத்தி கொடுக்கனும்” என்றான் அவளை கண்களால் வருடிக் கொண்டே.

நண்பனின் மனதை புரிந்து கொண்ட சிவா “சரி..நீ போய் பேசலையா? அம்மா பேசிட்டு இருக்காங்களே?”.

“இல்ல சிவா...இப்போ வேண்டாம்...நான் போய் பேசினா அவளுக்கு இப்போ இருக்கிற சந்தோஷம் போயிடும்...நேத்து வேற நைட் ரொம்ப கஷ்டபட்டான்னு சொன்னாங்க...இன்னைக்காவது நல்லா தூங்கட்டும்” என்றான் பரிவுடன்.

சிறிது நேரத்தில் அனைவரும் கிளம்ப, விஸ்வா மட்டும் அவள் அருகில் செல்லாமலே பார்வையாலேயே அவளை தொடர்ந்து கொண்டிருந்தான். சுந்தரோ விஸ்வாவையே கவனித்துக் கொண்டிருந்தவன்...அவன் அருகில் சென்று “என்ன-டா பார்வை எல்லாம் பலமா இருக்கு. நீ இப்படி ஆ-ன்னு வாயை பிளந்துகிட்டு பார்க்கிற...அவளோ உன்னை ப்ரீயா கொடுத்தா கூட வேணாங்கிறா” என்றான் கடுப்புடன்.

அதை கேட்டு விஸ்வாவும், சிவாவும் சத்தம் போட்டு சிரிக்க, பார்த்துக் கொண்டிருந்த சுந்தர் மேலும் எரிச்சலாகி “உனக்கு வெட்கமே இல்லையா விச்சு...டேய்! சிவா நீ எதுக்கு அவன் கூட சேர்ந்து சிரிக்கிற” என்று கடுப்படித்தான்.

காரில் ஏறப் போன நித்யா சிரிப்பு சத்தத்தை கேட்டு தலையை திருப்பி பார்க்க, அங்கே சிரித்துக் கொண்டிருந்த விஸ்வாவை கண்டதும் தன்னைறியாமல் ரசித்துக் கொண்டு நின்றாள்.

எதேச்சையாக திரும்பியவன் தன்னை பார்த்துக் கொண்டிருப்பவளை கண்டு ஆச்சர்யபட்டு...இதழில் குறுநகையுடன் அவளை பார்த்து புருவத்தை உயர்த்தினான்.

அதை கண்டு அதிர்ந்து போய் அவசரமாக காரில் ஏறினாள். அவள் தன்னை கவனித்ததை எண்ணி பார்த்தவனுக்கு, நிச்சயம் அவள் மனதில் தன்பால் ஒரு ஈர்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்தான். அது நிச்சயம் அவளை தன்னிடம் சேர்க்கும் என்கிற நம்பிக்கை பிறந்தது.

வீட்டிற்கு சென்ற பிறகு நித்யாவிடம் யாரும் நிகழ்ச்சியை பற்றியோ, அங்கு சந்தித்தவர்களை பற்றியோ பேசாமல் எதார்த்தமாக இருந்தனர். அதனால் அவளது மனம் மிக அமைதியாக இருந்தது. விஸ்வாவின் அன்னை தன்னிடம் வந்து பேசியதை கூட பெரிதாக எண்ணாமல், தன்னுடைய மகன் நிகழ்ச்சிக்கு வந்ததற்காக பேசி சென்றார்கள் என்று நினைத்துக் கொண்டாள்.

அன்றிரவு ரேணு அவளுடன் தங்க, முதல்நாள் இரவு போல் அல்லாது நிம்மதியாக உறங்கினாள். காலையில் நித்யா எழும் முன்பே வெளியே வந்த ரேணு...சமயலறைக்கு செல்ல அங்கே வந்த நிரஞ்சன் “ரேணு! நேத்து நல்லா தூங்கினாளா?” என்று கேட்டான்.

“ம்ம்...நிம்மதியா தூங்கினாங்க” என்றாள்.

“ம்ம்..சரி...சாயங்காலம் எல்லோரையும் அழைச்சிட்டு வெளில போயிடுறேன். அவ ஆபிஸ் போயிட்டு வந்ததும் நீ கல்யாணத்தை பத்தி பேசிடு” என்றான்.

அதை கேட்டதும் காப்பி கலந்து கொண்டிருந்தவளின் கை அப்படியே நிற்க, கலக்கத்துடன் அவனை பார்த்து “ஒத்துக்குவாளாங்க? எனக்கு எப்படி அவ கிட்ட பேசுறதுன்னு தெரியலையே?” என்றாள் பயத்துடன்.

அவளது மனம் புரிந்தாலும், வேறு யாராலும் நித்யாவிடம் பேச முடியாது என்கிற காரணத்தால் “நீ தான் பேசணும் ரேணு...அவ மனசு புண்படாம பக்குவமா எதை சொன்னா ஒத்துக்குவாளோ அப்படி பேசு” என்றான் ஆதரவாக.

“கண்களை துடைத்துக் கொண்டவள் “பேசுறேங்க...நிச்சயம் பேசுறேன். அவளுடைய நிலையை புரிஞ்சிக்கிற விஸ்வா மாதிரி ஒருத்தர் கிடைக்கும் போது..அவ வாழ்க்கை நல்லாயிருக்கும். கண்டிப்பா பேசுறேன்” என்று அவனை சமாதானப்படுத்துவது போல் தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டாள்.

அப்போது நித்யா வரும் அரவம் கேட்டதும் நிரஞ்சன் தன்னறைக்கு சென்றான். அக்காவின் கண்கள் கலங்கியிருப்பதை கண்டதும் நேற்று தன்னுடன் தங்கியதால் அவன் எதுவும் கடிந்து கொண்டு செல்கிறானோ என்று யோசனையுடன் பார்த்தாள்.

“என்னக்கா? கண்ணெல்லாம் கலங்கியிருக்கு?” என்றாள்.

அவள்புறம் திரும்பாமலே “ஒண்ணுமில்ல நித்தி...தூசி விழுந்துடுச்சு” என்றாள்.

ரேணுவை தன் பக்கம் திருப்பி “என்கிட்டே ஏன் பொய் சொல்றக்கா? அவர் ஏதாவது திட்டிட்டு போறாரா?” என்றாள்.

அப்போது அங்கு வந்த சிவகாமி நித்யாவை முறைத்து “உனக்கு ஏதாவது அறிவு இருக்கா? புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும். அதை உன்கிட்ட வந்து சொல்லிக்கிட்டு இருப்பாளா?” என்றார் கோபமாக.

அவர் சொன்னதை கேட்டு கடுப்பான நித்யா “இங்க பாருங்க நான் எங்க அக்கா கிட்ட கேட்டுட்டு இருக்கேன். நீங்க நாகரீகம் இல்லாம வந்து எதுக்கு மூக்கை நுழைக்கிறீங்க?” என்றாள்.

அவளது பதிலில் ஆத்திரம் எழ “எனக்கு நாகரீகம் இல்லையா? நல்லா இருக்குடி உன் நியாயம். நாலு வருஷமா புருஷன், பொண்டாட்டிக்கு நடுவுல நின்னுகிட்டு அவங்களை வாழ விடாம பண்ணின உனக்கு நாகரீகம் தெரிஞ்சிருக்கு..எனக்கு தெரியல பாரேன்” என்று அவளை நேரடியாக தாக்கி விட்டார்.

இதை சொல்ல வேண்டும் என்று சிவகாமியும் நினைக்கவில்லை, இப்படி ஒரு பிரச்சனை எழும் என்று வீட்டிலிருந்த ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. சத்தம் கேட்டு வந்த நிரஞ்சன் விக்கித்து நிற்க, சுமதி அதிர்ந்து போய் அன்னையை பார்த்துக் கொண்டிருந்தார்.

நித்யாவின் நிலையோ சொல்ல முடியாமல் இருந்தது. இரு நாட்களாக அவள் மனதில் ஓடியது தானே...அதிலும் பெங்களூர் சென்று வந்ததில் இருந்து ரேணுவிடம் தெரியும் மாற்றத்தை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள். அவளுக்கு மட்டும் ஆசையா என்ன அக்காவின் வாழ்க்கையை கெடுக்க, இல்லையே! பத்து வயதிலிருந்து தனக்கு ஏற்பட்ட வலியின் அளவை புரிந்து கொள்ளாமலே அன்னைக்கு அன்னையாய் மடி தாங்கியவளை விட்டு பிரிய மனமில்லாமலும், எவர் மீதும் நம்பிக்கை இல்லாததும் தானே அவளை இப்படி நடக்க வைத்தது.

‘நிரஞ்சனை நான்கு வருடமாக பார்த்துக் கொண்டிருந்தாலும், அவன் மீது எந்த வெறுப்பும் இல்லையென்றாலும்...பட்ட ரணத்தின் வலி உயிர் வரை தாக்கி அவனையும் நம்ப மறுக்கிறதே. மனதுக்கு புரிகிறது...ஆண் என்றாலே நம்ப மறுக்கும் மனதை என்ன செய்வது? அக்காவின் வாழ்க்கையும் கேள்விக்குறியானால் என்கிற பயத்திலேயே ரேணுவிடம் நிரஞ்சனை நெருங்க விடாமல் செய்தேன்...அவர்கள் கேட்பதில் தப்பில்லை என்றாலும்...என் நிலை யாருக்கும் புரியாது’ என்று எண்ணியவள் ஒருவரையும் நிமிர்ந்து பார்க்காது அறைக்குச் சென்றாள்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,652
1,596
113
அதுவரை மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டிருந்த ரேணு “என்ன பாட்டி இப்படி பேசிட்டீங்களே” என்று அழுகையுடன் அவரை கேட்டுவிட்டு நித்யாவின் பின்னே ஓடினாள்.

படுக்கையில் பதுமை போல் அமர்ந்திருந்தவளின் பக்கத்தில் சென்றமர்ந்த ரேணு “நித்தி! பாட்டி ஏதோ ஆதங்கத்தில் சொல்லிட்டாங்கடா...நீ ஒன்னும் தப்பா நினைச்சுக்காதே” என்று அவளை தன்னோடு இழுத்து அணைத்துக் கொண்டாள்.

அதுவரை மனதிற்குள்ளேயே அழுது கொண்டிருந்தவள் அக்காவின் தோள் சாயவும் வெடித்து அழ ஆரம்பித்தாள்.

“என்னால உனக்கு ரொம்ப கஷ்டம் அக்கா...நான் இப்படி வாழ்ந்து என்ன பண்ண போறேன்...அதுதான் எல்லாம் என் வாழ்க்கையில் முடிஞ்சு போச்சே...நான் இருந்து உன்னை வாழ விடாம பண்ணிட்டு இருக்கேனே” என்று கதற ஆரம்பித்தாள்.

அவள் முகத்தை இருகைகளால் தாங்கி பிடித்துக் கொண்ட ரேணு “இல்ல-டா! நீ எனக்கு எந்த கஷ்டமும் கொடுக்கல....இப்படி பேசாதே நித்தி” என்றவளை இடைமறித்து “எல்லோருக்கும் கஷ்டத்தை கொடுத்துகிட்டு இருக்கிறதை விட செத்து போயிடலாம்னு தோணுது அக்கா...இனி, நான் வாழ்ந்து என்ன பண்ண போறேன்...எப்பவும் உனக்கு பாரமா, தொந்திரவா தான் இருப்பேன்...நீயாவது நல்லாயிருக்கா” என்று முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

வேலையில் நின்றிருந்தவர்களின் கண்களில் கண்ணீர் சரசரவென்று வழிய, அக்கா, தங்கை இருவரின் அழுகை குரலை கேட்டு சோகத்துடன் நின்றிருந்தனர்.

தங்கையின் முகத்தை இறுக்கமாக பற்றி வெறி பிடித்தவள் போல் “எனக்கு யாரும் வேண்டாம் நித்தி...நீ மட்டும் தான் முக்கியம் எனக்கு...நீ சந்தோஷமா இருக்கணும்” என்று கத்தினாள்.

அதை கேட்டுக் கொண்டிருந்த நிரஞ்சனின் முகம் கல்லாக இறுகி போனது. அவள் தரப்பில் அது நியாயம் என்றாலும், நான்கு வருடம் எந்தவித எதிர்பார்ப்புமின்றி காத்திருந்த தனது நேசத்தை ஒற்றை வார்த்தையில் ஊதி தள்ளிவிட்டாளே என்று மனம் சுருங்கி போனான். நித்யாவின் வாழ்க்கைக்காக தான் எடுக்கும் அத்தனை நடவடிக்கைகளை அறிந்தும், இப்படியொரு வார்த்தையை விடலாமா? என்று நொந்து போனான்.

ரேணுவின் வார்த்தையை கேட்டு, அதுவரை பொறுமையாக நின்றிருந்த பாட்டி வேகமாக உள்ளே சென்று “இதென்ன எழவு வீடா? அக்காளும், தங்கையும் ஒப்பாரி வச்சிட்டு இருக்கீங்க?” என்று அதட்டினார்.

அவரை கண்டுகொள்ளாமல் அக்காவின் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள் நித்யா. ரேணுவோ பாட்டியை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

இதை இப்படியே விட்டால் சரி வராது என்று புரிந்து கொண்டவர் “என்ன சொன்ன ரேணு? உனக்கு யாரும் வேண்டாமா? நல்லா யோசிச்சு தான் சொல்றியா?” என்றார் மிரட்டலாக.

தங்கையின் தலையை வருடி கொடுத்தபடி அமர்ந்திருந்தவள் பாட்டியை நிமிர்ந்து பார்த்து “ஆமாம்! எனக்கு யாரும் வேண்டாம்” என்றாள் அழுத்தமாக.

அவள் மீண்டும் அதையே சொல்ல, நிரஞ்சனின் மனம் நொறுங்கி போனது. இவ்வளவு தானா நீ என்னை புரிந்து கொண்டது’ என்று நொந்து போய் விடுவிடுவென்று அங்கு நிற்காது வெளியே சென்றான்.

சுமதி மகனின் முகத்தில் தெரியும் வலியை கண்டு, அவன் வேகமாக செல்வதை தடுத்து நிறுத்த “நீரு! நில்லு! எங்க போற?” என்று பின்னோடு ஓடினார்.

அவனோ திரும்பியும் பாராது பைக்கை படுவேகமாக எடுத்துக் கொண்டு சென்றான்.

வெளியில் கேட்ட சத்தத்தில் நிரஞ்சனின் மனதை புரிந்து கொண்ட பாட்டி, ரேணுவின் மேல் கோபம் எழ “அப்போ சரி! தாலியை கழட்டிக் கொடுத்திட்டு இந்த நிமிஷமே அக்காளும் தங்கச்சியும் இடத்தை காலி பண்ணுங்க” என்றார் கடுமையாக.

அழுது கொண்டிருந்தவளும் சரி, அவளை தாங்கி கொண்டிருந்தவளும் சரி அதிர்ந்து போய் பாட்டியை பார்த்தனர்.

“என்ன பார்க்குறீங்க? உனக்கு உன் தங்கச்சி வாழ்க்கை முக்கியம் மாதிரி...எங்களுக்கு எங்க பிள்ளை வாழ்க்கை முக்கியம்...நீ எத்தனை வருஷம் ஆனாலும் அவளுக்காக மட்டுமே யோசிப்ப...உனக்கு ஒருத்தன் தாலி கட்டி நாலு வருஷமா மண்ணு மாதிரி காத்துகிட்டு இருக்கானே...அவனை பற்றி எந்த காலத்திலேயும் நினைக்க மாட்ட” என்று கொதிப்புடன் பேசினார்.

பாட்டி கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்திலிருந்து மீண்டவள் சொருமலுடன் “வயசானவங்க தானே நீங்க இப்படி பேசலாமா பாட்டி?” என்றாள் ரேணு.

நித்யாவோ தவிப்புடன் “என்ன இப்படி பேசுறீங்க?” என்றாள் கம்மிய குரலில்.

“வேறெப்படி பேச சொல்ற? நாலு வருஷமா எங்க பிள்ளை வாழ்க்கை நல்லபடியா அமையும்னு ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து ஏமாந்து போனோம்...சரி, ஏதோ இப்போவாவது கொஞ்சம் காத்து திரும்புதேன்னு நினைச்சா...ஒத்தை வார்த்தையில் அவன் உனக்கு ஒண்ணுமே இல்லைன்னு சொன்ன பாரு..இதுக்கு மேல எதுக்கு நாங்க காத்திருக்கனும்? வேற ஒரு நல்ல பொண்ணா பார்த்து,கட்டி வச்சு நிம்மதியா இருப்போம். அக்காளும், தங்கச்சியும் கிளம்பி வழியை விடுங்க” என்றார் ஆத்திரத்துடன்.

கன்னங்களில் வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டே “இவளுக்கு நடந்தது தெரிஞ்சும் நீங்க இப்படி பேசுறது நல்லாயில்லை” என்றாள்.

அதை கேட்டு மேலும் கடுப்பான சிவகாமி “அதனால தான் இவ்வளவு நாள் பொறுமையா இருந்தோம். உன் தங்கை தான் முக்கியம்ன்னா கல்யாணம் பண்ணிக்காம இருந்து தொலைச்சிருக்க வேண்டியது தானே. கல்யாணத்தை பண்ணிக்கிட்டு அவனை ஒதுக்கி வச்சிட்டு எனக்கு யாரும் வேண்டாம்ன்னு சொன்னா என்ன அர்த்தம்...அதெல்லாம் சரியா வராது...நான் சொன்னதை செஞ்சிட்டு கிளம்பி போங்க...நாங்க எங்க பிள்ளைக்கு நல்ல பெண்ணா பார்த்து கட்டி வைக்கிறோம்” என்றார்.

அதை கேட்டு கழுத்தில் கிடந்த தாலியை இறுக்கிப் பிடித்துக் கொண்டு “நான் மாட்டேன்...நிரஞ்சனை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்...தயவு செஞ்சு அப்படி சொல்லாதீங்களேன்” என்று கையெடுத்து கும்பிட்டு அழ ஆரம்பித்தாள்.

ரேணு அப்படி அழவும், அவளை விழிவிரிய பார்த்த நித்யாவின் மனதில் முதன்முறையாக தனது தவறு புரிய ஆரம்பித்தது. அக்காவின் மனதில் நிரஞ்சன் மேல் இத்தனை காதல் இருக்குமானால் அவன் அவளுக்கு நம்பிக்கையானவன் தானே...நான் தானே அவர்களை பிரித்து வைத்தேன் என்று தவித்தாள்.

சிவகாமி ரேணு அழுவதை பார்த்துவிட்டு நித்யாவின் முகத்தில் வந்து போகும் உணர்வுகளை படித்தார்.

“மச்..போதும் ரேணு...நாங்களும் ரொம்ப நொந்து போயிருக்கோம்...இப்போவே முடிவெடுத்திடலாம். உனக்கு நிரஞ்சனோட வாழணும்னு ஆசையிருந்தா, நித்யா உன்னோட இருக்க கூடாது” என்றார்.

அவளோ அழுகையுடன் தலையை ஆட்டி “இல்ல எனக்கு ரெண்டு பேரும் இருக்கணும்” என்றவளை இடைமறித்து “எதுக்கு? நீ உன் தங்கையை மடியில வச்சு கொஞ்சுறதை பார்க்கவா? இதோ பாரு ரேணு...நான் ஒரு முடிவு சொல்றேன்...அதுக்கு சம்மதம்ன்னா நீ இங்கே இருக்கலாம்..இல்லேன்னா நடையை கட்டு” என்றார் பிடிவாதமாக.

நித்யாவோ தன்னை வைத்து நடக்கும் பேச்சு வார்த்தையை கண்டு ஒருவித விரக்தியான மனநிலையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அக்காவின் தவிப்பை கண்டு குற்ற உணர்ச்சியில் மனம் உழன்றது. உளுத்து போன தன் வாழ்க்கைக்காக அக்கா தன் வாழ்க்கையை இழக்க கூடாது என்கிற எண்ணம் எழுந்தது.

பாட்டி ரேனுவிடம் “நித்யாவை விஸ்வாவுக்கு கட்டி கொடுக்கனும்...அதுக்கு ஒத்துகிட்டா நீ இங்கே இருக்கலாம்”. என்றார்.


ரேணுவிற்கு பாட்டி நித்யாவின் முன்பே விஷயத்தை உடைத்தது அதிர்ச்சியை கொடுத்ததென்றால் நித்யாவிற்கோ தலையில் பேரிடி விழுந்தது போல உணர்ந்தாள்.

அடுத்த நிமிடம் தன்னை சுதாரித்துக் கொண்டு “எனக்கு கல்யாணமா? புரிஞ்சு தான் பேசுறீங்களா? அக்கா நீ சொல்லு..எனக்கு கல்யாணமா? வேண்டாம் பாட்டி! எதுவும் தெரியாம பேசாதீங்க” என்றாள் அழுகையுடன்.


அவரோ சளைக்காமல் “எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறேன்” என்றார் அழுத்தமாக.

அவரை அதிர்ச்சியுடன் பார்த்து “என்ன சொல்றீங்க?...தெரிஞ்சும் ஏன்? வேண்டாம்..உங்களை கையெடுத்து கும்பிடுறேன்...நான் எங்கேயாவது போயிடுறேன்...அக்காவை மாமாவோட சேர்த்து வைங்க...என்னை விட்டுடுங்க..எனக்கு கல்யாணமெல்லாம் வேண்டாம்” என்று அவர் கைகளை பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

அவரோ சிறிதும் இளகாமல் “எங்கேயோ போறதுக்கு என் பேரன் விஸ்வாவை கல்யாணம் செஞ்சுக்கோ...நிச்சயம் உன்னை அவன் நல்லா பார்த்துப்பான்” என்றார்.

அவர்கள் பேசுவது எதையும் காதில் வாங்காமல் அழுது கொண்டிருக்கும் ரேணுவை பார்த்த நித்யா ‘எனக்காக அக்கா ஏன் கஷ்டப்படனும்...அவ நல்லாயிருக்கனும்...அதுக்காக நான் இதுக்கு ஒத்துகிட்டா பரவாயில்லை’ என்று சமாதானப்படுத்திக் கொண்டாலும், ஆறாத வடுவாக உள்ள காயங்கள் மேலெழும்பி திருமண வாழ்க்கையை இயல்பாக ஏற்றுக் கொள்ள உன்னால் முடியுமா என்று கேள்வி எழுப்பியது?

அவளது உணர்வை புரிந்து கொண்ட சிவகாமி “உங்க ரெண்டு பேருக்கும் ரெண்டு நாள் அவகாசம் தரேன்...யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
 
  • Love
Reactions: Chitra Balaji

Chitra Balaji

Active member
Feb 5, 2020
94
44
28
இந்த ரேணு panrathu கொஞ்சம் kuda சரி இல்ல அது எப்படி ava நிரஞ்சன் ah vechikitu appadi sollamal appo avaluku avan ஒண்ணுமே illayaa.... அவன் odanji poitaan... பாட்டி semma correct ah nerathula correct ah check vechitaanga paakalam enna நடக்க poguthunu... Super Super maa.. Very very emotional episode maa