அத்தியாயம் - 22

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,652
1,596
113
அத்தியாயம் –22

கையை ஆராய்ந்து கொண்டிருந்த டாக்டர் “இது பூனைக் கடி மாதிரி இல்லையே...மனுஷக் கடி மாதிரியில்ல இருக்கு” என்று கூறி விஸ்வாவின் முகத்தை ஆராய்ந்தார்.

சற்று கூச்சத்துடன் “குழந்தை கடிச்சிடுச்சு சார்” என்றவனை நிமிர்ந்து பார்த்தவரின் கண்களில் நம்பிக்கை இல்லை.

நிரஞ்சனோ ‘அடப்பாவி!..இவன் தேறிடுவான்’ என்று நினைத்துக் கொண்டவனின் இதழ்களில் குறுநகை தவழத் தொடங்கியது.

“என்ன மிஸ்டர்! அந்த குழந்தை கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க...பெரியவங்க கடிக்கிற மாதிரி கடிச்சு வச்சிருக்கு” என்றார்.

ஒன்றும் சொல்லாமல் அவர் ஊசி போடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். இருவரும் கிளினிக்கை விட்டு வெளியே வந்ததும் “விச்சு! நீ உன் வீட்டுகிட்ட ஒரு ஆஸ்பத்திரியை பார்த்து வச்சுக்கோ...அடிக்கடி தேவைப்படும்” என்றான் நிரஞ்சன்.

அதற்கு பதில் கூறாமல் யோசனையுடன் நடந்தவனை தடுத்து “என்ன யோசனை விஸ்வா?” என்றான்.

“நான் ஒரு சைக்கிரியார்டிஸ்டை பார்க்கணும் அண்ணா. அவளோட நிலையை சொல்லி எப்படி கையாளனும்னு தெரிஞ்சுக்கனும்” என்றான்.

“அவளையும் காட்டணுமா விஸ்வா?” என்றான் யோசனையுடன்.

மறுப்பாக தலையசைத்து “இல்லண்ணா! அது நல்லதில்லை...நான் மட்டும் பார்த்தா போதும்” என்றான்.

“ம்ம்..சரி” என்று கூறி இருவரும் பைக்கில் ஏற நிரஞ்சனின் வீடு நோக்கி பறந்தது.

விஸ்வா உள்ளே நுழைந்ததுமே அவனை பிடித்துக் கொண்ட சிவகாமி “ஏண்டா பேராண்டி வீட்டுக்குள்ள வரும் போது பார்த்து வர மாட்டியா? இப்படி நட்டுவாக்கிளி கிட்ட கடி வாங்கி இருக்கியே” என்றார் சத்தமாக.

குற்ற உணர்ச்சியில் படுத்திருந்த நித்யாவின் காதுகளில் விழ, கடுப்புடன் எழுந்தமர்ந்தாள்.

“உங்களை பார்க்க வந்ததுக்கு இப்படியா பாட்டி கடிக்க விட்டு வரவேற்பு குடுப்பீங்க” என்று அவன் பங்கிற்கு பேச, அதற்கு மேல் பொறுக்க முடியாமல் வேகமாக அறையை விட்டு வெளியே வந்தவளின் கண்கள் அவசரமாக அவன் கையை ஆராய்ந்தது.

அவன் முகத்தை பாராது “சாரி...தெரியாம பண்ணிட்டேன்” என்று கூறிவிட்டு பாட்டியை பார்த்து “இன்னொரு முறை நட்டுவாக்கிளி அது-இதுன்னு சொன்னீங்க அப்புறம் நடக்கிறதே வேற” என்றாள் ஆத்திரத்துடன்.

அவரோ சளைக்காமல் “அடியே! சீமை சித்துராங்கி! கடி வாங்கினது என் பேரன். நான் கேட்காம வேற யாரு கேட்பா? நட்டுவாக்கிளின்னு தாண்டி சொல்லுவேன்...என்ன பண்ணுவ?” என்று மேலும் வம்பிழுத்தார்.

அதுவரை அழுது கொண்டிருந்தவளா என்று யோசிக்கும் வகையில் அவரிடம் பாய்ந்து பாய்ந்து சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.

அவர்கள் இருவரையும் சுவாரசியமாக பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான் விஸ்வா. அப்போது நிரஞ்சன் ஒரு விசிடிங் கார்டை அவனிடம் தந்து “இவர் எனக்கு தெரிஞ்ச டாக்டர் தான் விஸ்வா போய் பாரு” என்றான்.

அவனை பார்த்து சிரித்து “வேண்டாம் அண்ணா! நம்ம வீட்டிலேயே பெரிய மனநல மருத்துவரை வச்சுகிட்டு ஏன் வெளில தேடனும்?”.

“என்ன சொல்ற விஸ்வா?”

“நித்யாவை பாருங்கண்ணா...இவ்வளவு நேரம் எப்படியிருந்தா? இப்போ பாட்டிகிட்ட சரிக்கு சரி சண்டை போட்டுக்கிட்டு இருக்கா...பாட்டிக்கு தெரிஞ்சிருக்கு இவளை எப்படி ஹான்டில் பண்ணனும்னு” என்றான்.

அவனும் நித்யாவை பார்த்து அசந்து விட்டான். “ஆமாம்-டா! நான் வந்தப்ப எப்படி அழுதிட்டு இருந்தா தெரியுமா? அவளா இவன்னு என்னமா சண்டை போடுறா?” என்று அதிசயித்தான்.

“சரி பண்ணிடலாம்னு எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு...ரொம்ப சுவாரசியமா போகும் என் வாழ்க்கை” என்றவனை பார்த்து சிரித்து “சுவாரசியமா? ஜகஜோதியா இருக்க போகுது விச்சு...சில பல அடி-கடியோட இருக்க போகுது” என்றான் நிரஞ்சன்.
 
  • Love
Reactions: Chitra Balaji

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,652
1,596
113
“ஹாஹா...நிச்சயமா அண்ணா” என்றவனை லேசாக தழுவி விடுவித்தவன் “உன்னை பார்த்து பெருமையா இருக்கு-டா” என்றான்.

“அண்ணி இங்க பாருங்க அண்ணனை...கடி வாங்கினதை பார்த்து பெருமையா இருக்காம்” என்றான் சத்தமாக.

அதை கேட்டு பயத்துடன் ரேணு விஸ்வாவை பார்க்க, பாட்டியோ தாடையில் கையை வைத்தபடி அவர்களை முறைக்க, நித்யா அவனை கோபத்துடன் பார்த்துவிட்டு அறைக்குள் சென்றாள்.

அவள் போவதை கண்டு கேலியாக சிரித்து “பார்த்து இடுப்பு சுளுக்கிக்க போகுது” என்றார்.

“பாட்டி போதும்! ரொம்ப சீண்டி கடி வாங்கிடாதீங்க” என்றான் மெல்லிய குரலில் விஸ்வா.

அவரோ அவனை கூர்மையான பார்வையுடன் அளந்து “என்ன பேராண்டி என் பேத்திக்கு என் கிட்டேயே சப்போர்ட்டுக்கு வரீயா?”

இருகைகளையும் உயரே தூக்கி ஒரு கும்பிடு போட்டவன் “உங்களை சமாளிக்க முடியுமா பாட்டி? என்னை விடுங்க” என்றான்.

“என்னையே சமாளிக்க முடியலேன்னா என் பேத்தியை எப்படி சமாளிப்ப?” என்றார் மெல்லிய குரலில்.

தன் காலரை தூக்கி விட்டுக் கொண்டு “வயசான உங்களை சமாளிக்க தான் கஷ்டம் பாட்டி...என் செல்ல குட்டியை இந்த விஸ்வா பார்த்துப்பான்” என்று அவரை போலவே மெல்லிய குரலில் கூறினான்.

அவனை ஒரு போடு போட்டு “போதும்-டா பேராண்டி ஓவரா வழிஞ்சு ஓடுது. கொஞ்சம் துடைச்சுக்க-டா” என்றார்.

அந்நேரம் விஸ்வாவின் அலைபேசி அடிக்க அதை எடுத்தவன் “சொல்லு-டா...பாட்டியை பார்க்க தான் வந்தேன்” என்றான்.

அந்த பக்கம் பேசியவனோ கொதிப்புடன் “தெரியும்-டா நீ பாட்டியை பார்க்க போன லட்சணம். நேரம் ஆகுது ஒழுங்கு மரியாதையா ரிஹர்சலுக்கு வந்து சேரு” என்றான் சுந்தர்.

“ம்ம்...சரி...சரி..வரேன்” என்று வைத்தவன்.

“பாட்டி நீங்க என் பாட்டை கேட்டதே இல்லையே...இன்னைக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு அடையார்ல ஒரு ப்ரோக்ராம் இருக்கு...நீங்க எல்லோரும் வாங்க...அதுக்கு இன்வைட் பண்ணத்தான் வந்தேன்” என்றான்.

சிவகாமியோ “நான் எதுக்கு விச்சு...நீ இங்கேயே ஒரு பாட்டை பாடி காண்பி சந்தோஷமா கேட்டுட்டு போறேன்” என்றவரை முறைத்து அவர் காதுக்கருகில் சென்று “காரியத்தை கெடுத்தீங்களே! உங்களுக்காகவா சொல்றேன்...நித்யாவை கூட்டிட்டு வர தான் இந்த ஏற்பாடே” என்றவனை கொலைவெறியுடன் பார்த்தார்.

“சோழியும் குடுமியும் சும்மா ஆடாதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். இப்போ தான் நேரா பார்க்கிறேன்...நீ நடத்து பேராண்டி”.

நிரஞ்சன் “என்ன பாட்டி போகலாமா” என்றான்.

அவர் சரி என்று சொல்லவும், அனைவரும் ஆர்வமாக அதைப் பற்றி பேச, உள்ளே உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு டென்ஷன் ஏறியது. கடுப்புடன் வெளியே வந்து “நான் வரல...அக்கா நீயும் என்னோட இரு” என்றாள்.

“ரேணு வருவா நித்யா...நீ வேணும்னா வீட்டில் இரு!” என்றவன் ரேணுவின் பக்கம் திரும்பி லேசாக கண் சிமிட்டி “நீ வரேல்ல ரேணு” என்றான்.

அவனது நோக்கத்தை புரிந்து கொண்டு “ம்ம்..வரேங்க” என்றாள்.

அதை கேட்டு அதிர்ச்சியடைந்து ரேணுவின் அருகில் வேகமாக சென்று “அக்கா! என்னோட இரேன்...எனக்கு தனியா இருக்க என்னவோ போல இருக்கு” என்றாள் கெஞ்சும் குரலில்.

அவள் செய்கையை கண்டு சிரித்துக் கொண்ட விஸ்வா “ஏங்க நான் நல்லா பாடுவேங்க...நீங்க இப்படி பயப்படுற அளவுக்கு ஒண்ணுமில்ல...வந்து தான் பாருங்களேன்” என்றான் கேலிக் குரலில்.

அவளோ அவனை சட்டை செய்யாது “அக்கா..ப்ளீஸ்-கா...அவங்க எல்லாம் போகட்டும் நீ இரு” என்றாள்.

“நித்யா! அவ எங்களோட வருவா...உனக்கு தனியா இருக்க விருப்பம் இல்லேன்னா நீயும் எங்களோட வா” என்றான் நிரஞ்சன் அழுத்தமாக.

அக்காவின் முகத்தை பரிதாபமாக பார்த்துக் கொண்டே கையை பிடித்துக் கொண்டு சிறு பிள்ளையை போல் நின்றவளை கண்டு கண்கள் கலங்க நிரஞ்சனை பார்த்தாள் ரேணு.

அவனோ கண்டுகொள்ளாதவன் போல திரும்பிக் கொள்ள, விஸ்வா சங்கடத்தை தவிர்க்க மெல்ல எழுந்தான் “நான் கிளம்புறேன் பாட்டி” என்றவனிடம் “ஆறுமணிக்கு அங்க இருந்தா போதுமா?” என்று கேட்டான் நிரஞ்சன்.

நித்யாவிடம் சென்ற கண்களை இழுத்து பிடித்துக் கொண்டு “ம்ம்..போதும்ண்ணா” என்றவன் வாயிலுக்கு வந்து “பார்த்து அண்ணா...ரொம்ப அப்செட் ஆகிட போறா” என்றான்.

“இல்ல-டா அவளை வெளில கொண்டு வரணும்ன்னா சில நேரங்களில் கண்டிப்பாகவும் இருக்கனும்...வேற வழியில்லை” என்றான்.
 
  • Love
Reactions: Chitra Balaji

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,652
1,596
113
“சரிண்ணா...பார்த்துகோங்க...ஈவனிங் மீட் பண்ணலாம்” என்று கூறியபடி தனது பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

அவளை பற்றிய சிந்தனையுடனே சென்றான் விஸ்வா.

அவனது நாயகியோ அக்காவை கெஞ்சிக் கொண்டிருந்தாள். எப்படியாவது அவளை கரைத்து தன்னுடன் இருக்க செய்து விடலாம் என்று முயற்சித்தாள்.

ரேணு தர்மசங்கடமான நிலையில் இருந்தாள். கணவன் கொஞ்சம் கூட இறங்காத மன நிலையில் இருக்க, தங்கை விடாப்பிடியாக கெஞ்சியதை பார்த்து தவிப்பாக இருந்தது.

வீட்டிலிருந்த அனைவரும் அவளை கண்டுகொள்ளாது பேசிக் கொண்டிருக்க, வேறுவழியில்லாமல் தானே சமாளித்தாக வேண்டிய சூழ்நிலைக்கு வந்தாள்.

“நித்தி! நான் தான் கூட வரேனே...நீயும் எங்களோட வந்திட்டு வாயேன்” என்றாள்.

அக்கா முதன்முறையாக தன் பேச்சைக் கேளாமல் சமாதானப்படுத்த முயற்சிப்பதை கண்டதும், முகம் சுருங்க “நீ என்னோட இருக்க மாட்டியா?” என்றாள் மீண்டும்.

அதற்குள் தன்னை தேத்திக் கொண்ட ரேணு “மச்...நித்தி நமக்கும் ஒரு சேஞ் வேண்டாமா? கண்டதையும் நினைக்காம வா” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

வேறுவழியில்லாமல் அக்கா சொன்னதை கேட்டுக் கொண்ட நித்யா, படுக்கையில் சென்று விழுந்தாள். அவனது நிகழ்ச்சிக்கு போக வேண்டும் என்கிற ஆவல் அவளை அறியாமலே எழுந்தது. அதே சமயம் தனக்கே உண்டான மனநிலையில் தேவையில்லாம உன் மனசை குழப்பிக்காதே என்றும் தோன்றியது. ஒரே நாளில் அக்காவின் மனமாற்றம் வேறு எதிர்காலத்தை பற்றிய பயத்தை கொடுத்தது.

நிரஞ்சனின் நடவடிக்கையும், உரிமையும் கண்டு தான் மட்டும் தனியாக போய் விட்டோம் என்று சுயபச்சாதாபத்தில் தன்னையே வருத்திக் கொண்டு படுத்திருந்தாள்.

நிரஞ்சனின் வீட்டிலிருந்து கிளம்பிய விஸ்வா நேரே தங்களின் ரிஹர்சல் நடக்குமிடத்துக்கு சென்றான். அங்கு குழுவினர் அனைவரும் வந்திருக்க, மிகுந்த உற்சாகத்துடன் ப்ராக்டிஸ் நடந்து கொண்டிருந்தது.

இவன் உள்ளே நுழையவும், சுந்தர் முறைத்துக் கொண்டு ஒரு ஓரமாக சென்று அமர்ந்து கொண்டான்.

“ஆரம்பிச்சிட்டீங்களா? எத்தனை போயிருக்கு” என்று சிவாவிடம் கேட்டுக் கொண்டு அவன் அருகில் சென்றமர்ந்தான்.

சுந்தரோ “அதெல்லாம் அப்போவே ஆரம்பிச்சாச்சு...உனக்கு தான் இப்போவெல்லாம் நேரம் காலமே தெரியறதில்லையே...எப்போ பாரு நித்தியானந்தா புராணமா இருக்கு” என்றான் கடுப்புடன்.

அப்போது குழுவிலிருந்த பெண் “என்னது அண்ணா நித்தியானந்தா கிட்ட சேர்ந்துட்டாங்களா?” என்றாள் அதிர்ச்சியுடன்.

அதை பார்த்த சிவா சுந்தரின் முதுகில் மொத்தி “ஏண்டா இப்படி பீதியை கிளப்புற” என்றான் கடுப்புடன்.

அவனும் விஸ்வாவை பார்த்து முறைத்துக் கொண்டே “எனக்கு இவன் பண்றது பிடிக்கவே இல்லை...இப்போ எதுக்கு-டா அங்க போன?” என்று நேரடியாக விஸ்வாவிடம் பாய்ந்தான்.

சுந்தரின் கோபத்தைக் கண்டு அடக்கப்பட்ட சிரிப்புடன் “பாட்டியை ஈவனிங் ப்ரோக்ராம்க்கு கூப்பிட போனேன்-டா அது ஒரு தப்பா?” என்றான்.

அதை கேட்டதும் மேலும் டென்ஷனான சுந்தர் “பாட்டியை கூப்பிட போனியா? நித்யாவை கூப்பிட போனியா” என்றான்.

இவர்களின் வாக்குவாதத்தை பார்த்து குழுவினர் அனைவரும் அவர்களை சூழ்ந்து கொள்ள, அவர்கள் விஸ்வாவை சுவாரசியத்துடன் பார்க்க ஆரம்பித்தனர்.

“எல்லோரையும் தான்-டா கூப்பிட்டேன்...அவளும் அங்க தான-டா இருக்கா” என்றான் குறுஞ்சிரிப்புடன்.

அதற்குள் குழுவிலிருந்த துடுக்கான பெண்ணொன்று “அண்ணா! நித்யா யாரு?” என்றது.

விஸ்வா தன்னைப் பார்த்து கேலி செய்கிறான் என்கிற எரிச்சலில் அந்த பெண் மீது பாய்ந்தான் சுந்தர். “ரொம்ப முக்கியம்! பாட சொன்னா கழுத வந்த மாதிரி இழுக்கிற...நித்யா யாராம்?” என்று எகிறினான்.

சிவாவும், விஸ்வாவும் அதை கண்டு வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க, “என்னை பார்த்தா சிரிப்பா இருக்கா-டா உங்களுக்கு” என்று பாய்ந்தான்.

அவன் தோள்களை பற்றி தன்னருகே இழுத்த விஸ்வா பாட ஆரம்பித்தான்.

கவலைபடாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிற்பா

காதலை தான் சேர்த்து வைப்பா கவலைபடாதே சகோதரா

அவனோடு சேர்ந்து சிவாவும் பாட, குழுவினர் அனைவரும் சேர்ந்து கொள்ள அந்த இடமே கொண்டாட்டமான மனநிலைக்கு வந்தது.மாலை நாலரைக்கு எல்லாம் அரங்கத்துக்கு சென்று நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தனர் சங்கீத ஸ்வரங்கள் குழுவினர்.

நேரம் ஆக ஆக நித்யாவிற்கு மனம் ஏனோ அடித்துக் கொண்டது. விஸ்வாவின் மீது ஒரு ஈர்ப்பு அவளை அறியாமலே மனதிற்குள் இருந்தது என்றாலும், கடந்தகால நிகழ்வுகளை எண்ணி வலுக்கட்டாயமாக அது வேண்டாம் என்று ஓரம் கட்டி வைத்தாள்.

தோழியின் திருமண வீட்டில் அவன் பாடியதெல்லாம் நினைவுக்கு வர, அவன் குரலை கேட்கும் ஆர்வம் வந்தாலும்...அவளது மனம் இடித்தது.

‘உன் தகுதி என்ன என்று உனக்கு தெரியாதா? உனக்கு திருமண வாழ்க்கை எல்லாம் சாத்தியப்படாத ஒன்று...தேவையில்லாமல் மனதை அலைபாய விடாதே...இத்தனை நாள் எப்படி இருந்தியோ அப்படியே இரு...உனக்கு எதற்கும் தகுதியில்லை...மனசை கட்டுப்படுத்து!’ என்று அவளது மனம் கடுமையாக நிந்தித்தது.

அவளது யோசனையை கண்டு அருகில் வந்தமர்ந்த ரேணு “நித்தி! கிளம்பலையா?” என்றாள்.

அப்போது தான் ரேணுவை பார்த்தவளின் விழிகள் விரிந்தது. என்றுமில்லாமல் மிக அழகாக பார்த்து-பார்த்து அலங்காரம் செய்து கொண்டிருந்தவளின் முகத்தில் தெரிந்த நாணமும், ஒருவித நிம்மதியும் சரியாக நித்யாவை சென்றடைந்தது. மனமோ “நான் தான் அக்காவின் வாழ்க்கையை கெடுத்து கொண்டிருந்தேனா? இதோ முகத்தில் எத்தனை மகிழ்ச்சி, தெளிவு எல்லாம் ஒரே நாளில் வந்திருக்கிறது என்றால் எத்தனை நம்பிக்கை கிடைத்திருக்க வேண்டும். சரிதானே! உனக்கு தலையெழுத்து...நீ எதற்கும் லாயகில்லாதவள். உன்னால் அக்காவின் வாழ்க்கையும் கெட்டு போகனுமா? என்று முதன்முறையாக சரியாக யோசிக்க ஆரம்பித்தாள்.

அவள் கைகளை தட்டி “நித்தி! என்னம்மா உனக்கு வர விருப்பமில்லையா?” என்று கேட்டவளின் குரலில் ஏமாற்றத்தின் சாயல் தெரிந்தது.

சட்டென்று தன் மனதை மறைத்துக் கொண்டு சிரித்தவள் “இல்லக்கா என்ன டிரஸ் போடுறதுன்னு யோசிச்சேன்” என்றாள்.

தங்கை அப்படி சொல்லவும் உற்சாகமான ரேணு “நான் உனக்கு எடுத்து வச்சிட்டேன் நித்தி. கோல்டன் கலர் சரீயை கட்டிட்டு வா” என்றாள்.

அதை கேட்டு முகம் சுளித்து “அக்கா! சுடிதார் போதும்...புடவை எல்லாம் வேண்டாம்” என்றவளை தடுத்து “முதல் முறை உன்னை பார்க்க போறாங்க விஸ்வாவோட அம்மா. புடவை கட்டாம சுடிதார் போட்டா சரியா இருக்காது” என்று உளறி கொட்டினாள்.

“வாட்? என்ன முதன்முறையா? யாரு அவங்க? அவங்களுக்காக நான் ஏன் புடவை கட்டனும்?” என்று கேள்விகளை அடுக்கினாள்.
 
  • Love
Reactions: Chitra Balaji

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,652
1,596
113
தான் உளறியதை நினைத்து மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டு “அம்மா தாயே! பெரியவங்க எல்லாம் வருவாங்க நிகழ்ச்சிக்கு. அதுக்கு புடவை தான் பெஸ்ட்ன்னு சொல்ல வந்தேன்” என்றாள் அலுப்புடன்.

அவளை யோசனையுடனே பார்த்துக் கொண்டு தயாராக ஆரம்பித்தாள்.

அனைவரும் கிளம்பியதும் அறையை விட்டு வெளியே வந்தவளை கண்டு சிவகாமி பாட்டிக்கு கண்கள் கலங்கியது. அழகாக செதுக்கி வைத்த சிற்பம் போல் இருப்பவளுக்கு, எந்த குறையும் இல்லாமல் இருந்திருக்க கூடாதா என்று ஒரு நிமிடம் நினைத்துக் கொண்டார்.

நிரஞ்சனுமே அவளை பார்த்ததும் ‘சும்மாவே தம்பி தலை சுத்தி போய் நிற்பான். இன்னைக்கு ஒரே லவ் சாங்கா பாடி தள்ளப் போறான்’ என்று நினைத்துக் கொண்டு முன்னே நடந்தான்.

சரியாக ஆறுமணிக்கு அரங்கத்திற்குள் நுழைந்தவர்களை வரவேற்றது சுந்தர் தான். எல்லோரையும் சாதரணமாக வரவேற்றவன் நித்யாவை இகழ்ச்சியாக ஒரு பார்வை பார்த்து விட்டு “நீ எங்க இங்க வந்த? இங்க ஒன்னும் சண்டை நடக்கலியே?” என்றான் கேலியாக.

அவளுக்கு அவனை தெரியவில்லை. இவன் யார் நம்மிடம் இப்படி பேசுகிறானே என்று குழப்பத்துடன் பார்த்தாள்.

“நீ விஸ்வாவை கல்யாணம் பண்ணிக்க நான் விட மாட்டேன்” என்று அவளருகில் சென்று மெல்லிய குரலில் கூறினான்.

விஸ்வா என்றதும் சற்று புரிகிறார் போல் தோன்றியது. இவன் விஸ்வா குழுவை சேர்ந்தவன் போலிருக்கிறது...ஆனால் கல்யாணம் அது-இது என்று உளறுகிறானே... என்று மேலும் குழப்பத்துடன் “என்ன சொல்றீங்க புரியல” என்றாள்.

அவனோ எப்படியாவது கல்யாணத்தை நிறுத்தி விட வேண்டும் என்கிற எண்ணத்தில் “இப்படி எல்லாம் நடிச்சா நான் நம்ப மாட்டேன். எங்க விஸ்வாவுக்கு நீ வேண்டாம். இந்த கல்யாணம் நடக்க நான் விடமாட்டேன்” என்றான் அழுத்தமாக.

அதுவரை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவள் “நீ ப்ரீயா கொடுத்தா கூட அந்த விஸ்வா எனக்கு வேண்டாம் போடா” என்று கூறிவிட்டு விடுவிடுவென்று அக்காவின் அருகில் சென்றமர்ந்தாள்.

அவள் சட்டென்று அப்படி பேசிச் செல்லவும், அதிர்ச்சியில் அங்கேயே நின்றான்.

சுந்தர் அவளிடம் பேசுவதை கண்டு வாசிமை அனுப்பி அவனை அழைத்து வர சொன்னான் சிவா.

விஸ்வாவை பார்த்ததும் ஆத்திரத்த்தில் குதிக்க ஆரம்பித்தான் “என்ன பேச்சு பேசுறா சிவா இந்த பொண்ணு. நம்ம விஸ்வாவை ப்ரீயா கொடுத்தா கூட வேண்டாமாம்” என்று ஆடினான்.

அவன் சொன்னதை கேட்டு பதறிய விஸ்வா “டேய்! ஏண்டா அவகிட்ட கல்யாணத்தை பத்தி பேசின” என்றான்.

“எனக்கு கொலைவெறியே வருது விஸ்வா. என்னை பார்த்து போடான்னு சொல்லிட்டா” என்று மேலும் எகிறினான்.

அதுவரை கல்யாண செய்தியை கேட்டு அவளின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று பயந்து போய் நின்ற சிவாவும், விஸ்வாவும்...அவன் சொன்னதை கேட்டு விழுந்து பிரண்டு சிரிக்க ஆரம்பித்தனர்.

அதற்குள் நிகழ்ச்சி தொடங்குவதற்கான அறிவிப்பு வர, தங்களை சமாளித்துக் கொண்டவர்கள். மற்ற ஏற்பாடுகளை கவனிக்க தொடங்கினர்.

குழுவில் இருந்த பாடகர்கள் ஒவ்வொருவராக தங்களின் பாடல்களை பாட ஆரம்பித்தனர்.

அக்காவின் அருகில் அமர்ந்திருந்த நித்யா, பாடல்களில் கவனத்தை செலுத்தாமல் மொபைலை பார்த்துக் கொண்டிருக்க, தன்னருகே யாரோ அமர்வதை போல தோன்ற நிமிர்ந்து பார்த்தவளின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தது.

“ரம்ஸ்.!நீ எங்க இங்கே?”

“விஸ்வா அண்ணா கூப்பிட்டாங்க நித்தி”.

அவள் விஸ்வாவை அண்ணா என்று உரிமையுடன் கூப்பிடுவதை கண்டு மனம் சுருங்க ‘நமக்கு அந்த கொடுப்பினை எதுவும் இல்லை...யாரையும் உரிமை கொண்டாட தகுதியில்லை” என்று எண்ணிக் கொண்டிருந்தவளை கலைத்தது விஸ்வாவின் குரல்.

கனா கண்டேனடி தோழி

கனா கண்டேனடி தோழி

உன் விழி முதல் மொழி வரை

அகமெது புறமெது புரிந்தது போலே

கனா கண்டேனடி.......

என்று பாடியவனின் விழிகள் தன்னவளையே சுற்றி வந்தது. அவள் கண்களில் தெரிந்த கலக்கத்தையும், குழப்பத்தையும் நிச்சயம் மாற்றியே தீரவேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டான்.
 
  • Love
Reactions: Chitra Balaji

Chitra Balaji

Active member
Feb 5, 2020
94
44
28
Woooooow... Super Super maa..... Semma semma episode... பாட்டி semma avangaluku avala கை yaalra ukthi therinji இருக்கு.... Nithiya vuku ava akka வாழ்க்கை ah இதனை நாள் azhichitom nu புரியுது.... இந்த சுந்தர் அடங்க maatengiraane.... Free ah கொடுத்தாலும் vishva vendaam ah 🤣🤣🤣🤣....