அத்தியாயம் – 21
அந்த சமயத்தில் தான் விஸ்வா வீட்டிற்க்கு அடிக்கடி வர ஆரம்பித்தான் கதிர். அப்போது விஸ்வா சிதம்பரத்திலேயே வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். “நான் தாண்டவம் கேஸ் விஷயமா முதன் முதலா சிதம்பரம் வந்து விஸ்வா வீட்டில் பேயிங் கெஸ்ட்டாக தங்கி இருந்தேன்.”
“விஸ்வாவின் அறையும் என்னுடைய அறையும் எதிர் எதிராக இருக்கும். அப்போதெல்லாம் விஸ்வாவின் நண்பன் என்று ஒருவன் வந்து போகிறான் என்று மட்டுமே தெரியும் எனக்கு. அவன் பெயர் கூட தெரியாது. இருவரும் ஒரு முறை கூட நேருக்கு நேர் சந்தித்ததில்லை. அவன் வரும் நேரம் நான் இருப்பதில்லை. என்னுடைய வேலை அந்த மாதிரி.”
“இதெல்லாம் எனக்கு தெரியுங்க” என்றாள் உத்ரா அவன் முகத்தை பார்த்தபடி.
அவனும் அவள் முகத்தை பார்த்தவன் “உனக்கு தெரியாத விஷயம் ஒன்னும் இருக்கு உத்ரா. பௌர்ணமி அன்று தான் நான் உன்னை முதலில் பார்த்தேன்.”
முகம் சிவக்க அன்றைய நினைவுகளில் தலை குனிந்தவள்”எனக்கு தெரியுமே.நானும் அன்னைக்கு தானே முதன் முதலா உங்களை பார்த்தேன்” என்றாள்.
“நீயும் நானும் மட்டும் அன்னைக்கு பார்க்கல உத்ரா. விஸ்வாவோட அறையில் இருந்து உன்னுடைய டான்ஸை கதிரும் பார்த்திருக்கிறான். அன்று தான் அவனும் உன்னை முதன் முதலா பார்த்தது.”
அவன் சொன்ன செய்தியில் அதிர்ந்து போய்“என்ன சொல்றீங்க..அவன் என்னை பார்த்தானா?” என்று கேட்டாள்.
“ம்ம்”என்று சொல்லி தலையாட்டியவன்.”விதி எப்படி எல்லாம் விளையாடி இருக்கு பார் உத்ரா. என்றும் இல்லாம அன்னைக்கு சீக்கிரம் அறைக்கு வந்து ரெஸ்ட் எடுத்திட்டு, காற்று வாங்க மொட்டை மாடிக்கு வந்தேன்.நான் மேலே வந்த பிறகு அவன் விஸ்வாவை தேடி வந்து இருக்கான். விஸ்வா வெளியில் போய் இருந்தால அவனோட அறையில் வெயிட் பண்றேன்னு சொல்லி அங்கே வந்து இருக்கான்.அப்போ தான் நீ ஆட ஆரம்பிச்சே. நான் மொட்டை மாடியில் நின்று கொண்டு பார்த்ததால் என்னை அவனால் பார்க்க முடியவில்லை. அவன் அறைக்குள் நின்றதால் என்னால் அவனை பார்க்க முடியவில்லை. நான் உன்னை மட்டும் தான் பார்த்தேன்.நீயும் என்னை மட்டும் தான் பார்த்தாய்.. நம்ம மூணு பேரை சுற்றி கண்ணுக்கு தெரியாத ஒரு நூலை கொண்டு கட்டி முடிச்சுகளை போட்டு விதி தன் விளையாட்டை தொடங்கி இருக்கு.”
அவன் சொன்னதை கேட்டவளின் மனதும் உடலும் நடுங்க அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். அவனும் தன்னுடன் அணைத்துக் கொண்டு கதையை தொடர்ந்தான்.
“அன்னைக்கு தொடங்கியது இந்த காதல் போராட்டம். அதன் பின்னர் உன்னை பார்க்க வேண்டும் என்றே விஸ்வா வீட்டிற்கு வர ஆரம்பித்தான். அவனை பார்த்து நீ சாதரணமாக தலை அசைத்தது, சிரித்தது என்று ஒவ்வொன்றையும் அவன் மனசுக்குள் வச்சு ரசிக்க ஆரம்பிச்சு இருக்கான். நாள் ஆக ஆக அவனுக்குள் நீ அவனுடயவள் என்ற எண்ணம் வலுப்பெற தொடங்கி இருக்கு.
“தெரிந்தவன் என்ற முறையில் மட்டும் தான் அவன் கிட்ட பழகினேன்.அதை எப்படி அவன் காதல்ன்னு புரிந்து கொண்டான் என்று தான் புரியவில்லை.”
“ தெரியும் உத்ரா. எப்பவும் உன்னுடைய கண்கள் என்னை தேடி அலைபாயுரதை பார்த்து நீ அவனை காதலிக்கிறதா நினைத்து இருக்கான். விஸ்வாவும் அப்படி தான் நினைச்சு இருக்கான்.
“ஒரு முறை வந்து நின்னு வழிமறிச்சு தன்னோட காதலை சொன்னான். நான் அப்போவே மறுத்தேன். அப்புறம் விஸ்வா அண்ணா வீட்டுக்கு வரும் போது வாசலில் வச்சு ஒரு முறை சொன்னான். அந்த முறை நான் கொஞ்சம் கடுமையா பேசினேன். அதுக்கும் லூசு மாதிரி சிரிச்சுகிட்டு போனான்.அப்புறம் அன்னைக்கு காலேஜில் நான் ஆடி முடித்த பிறகு கிரீன் ரூமுக்கு வந்து தன்னை பார்த்து ஆடியதா நினைச்சு மகிழ்ந்து போய் பேசினான். அப்போ தான் நான் முதன் முறையா அவனை கண்டு பயந்து போனேன். நான் உன்னை காதலிக்க முடியாதுன்னு கடுமையா மறுத்தேன். அதுக்கு உன்னை நான் யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு போய்ட்டான்.
நான் திகைச்சு போய் நின்னுட்டேன். அந்த சமயத்தில் தான் நீங்க வந்தீங்க. என்னால உங்க கிட்ட அந்த சம்பவத்தை சொல்ல முடியல.”
“நீ அன்னைக்கே என் கிட்ட சொல்லி இருந்தா நடந்த சம்பவங்களை தடுத்திருக்கலாம். ஆனா இப்படி தான் நடக்கணும்ன்னு இருந்திருக்கு.”
அவன் கைகளை இறுக பற்றிக் கொண்டவள் “அவன் இந்த அளவுக்கு போவான்னு நான் நினைக்கவே இல்லை. விஸ்வா அண்ணாவின் வீட்டில் பார்க்கும் போது எல்லாம் ரொம்ப இயல்பா சாதரணமா தான் இருப்பான். அண்ணா முன்னாடி என்னை நிமிர்ந்து கூட பார்த்தது இல்லை. அதனால தான் அவன் மேல எனக்கு ஒரு நல்ல அபிப்ராயம் இருந்துது.”
“காலேஜ்ல நீ மறுத்த பிறகு அவனுக்கு உன்னை எப்படியாவது சம்மதிக்க வைக்கணும்ன்னு வெறி எழுந்து இருக்கு. அந்த நினைப்போடவே இருந்து இருக்கான். அப்போ தான் கிஷோர் விசாரிச்சு இருக்கான். அவன் கிட்ட விஷயத்தை சொன்னதும் ரொம்ப சாதரணமா பொண்ணை தூக்கிடுன்னு சொல்லி இருக்கான். முதலில் அதை பெருசா எடுத்துக்காத கதிர் பின்னர் ஏன் அதை செய்ய கூடாதுன்னு யோசிக்க ஆரம்பிச்சு இருக்கான்.”
அதையே கிஷோர் கிட்டேயும் சொல்லி இருக்கான். கதிரின் சம்மதத்தை வாங்கிய பிறகு கிஷோர் உன்னை பற்றி விசாரித்து உன்னை தூக்குறதுக்கு நாள் பார்த்துகிட்டு இருந்தாங்க. அப்போ தான் நீங்க பிச்சாவரம் போகிற ஏற்பாடு நடந்தது. அதை தெரிஞ்சு கிட்டு மடமடன்னு பிளானை போட்டாங்க.. லைப்ரரில உன் கிட்ட வம்பு பண்ணின பையனை பிடிச்சு போட்லே இருந்து உன்னை தள்ளி விட பணம் கொடுத்து இருக்கான் கிஷோர் . அவனும் சொன்ன மாதிரி உன்னை தள்ளி விட்டுட்டான். சரியா நீ விழும் இடத்துக்கு கொஞ்சம் தள்ளி ரெண்டு மூணு பேரை நீருக்குள் இருக்க வச்சிருந்தான். நீ விழுந்ததும் சிறிது நேரத்திற்குள் உன்னை நெருங்கி ஆக்சிஜென் மாஸ்க்கை உன் முகத்தில் மாட்டி அங்கே இருந்து கொண்டு போய் இருக்காங்க. ஆனா அவங்க உன் கிட்ட வருவதற்குள்ளேயே நீ மயங்கி போய் இருக்க அதனால் உனக்கு தெரிஞ்சு இருக்காது. உன் அளவுக்கு ஒரு உடம்பை பிணவறையில் இருந்து வாங்கி அதை வேர்களுக்கிடையில் கிடைக்குமாறு போட்டுடாங்க.”