Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 21 | SudhaRaviNovels

அத்தியாயம் - 21

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் – 21

பிம்லா தேவியிடம் பேசிவிட்டு நேரே தங்களின் அறைக்கு வேக நடையோடு நுழைந்தாள். அங்கு தான் இதுவரை நினைத்துக் கூட பார்க்காத இடத்தில் அமர்ந்திருந்தவளைக் கண்டதும் மனதில் பொங்கிக் கொண்டிருந்த உணர்வுகள் வெடித்துக் கிளம்பியது.

வர்ஷினி கட்டிலின் ஓரத்தில் எந்நேரமும் விழுந்து விடுபவளைப் போல ஒருவித சங்கடத்துடன் அமர்ந்திருந்தாள். கதவு வேகமாகத் திறக்கப்பட்டதும் உள்ளே ஒரு பெண் நுழைந்ததையும் பார்த்தவள் அவளின் கோபம் முகம் கண்டு திகைத்து போனாள்.

கேஷ்வியோ “ஏய்! என்ன தைரியம் இருந்தா இந்த ரூமுக்குள்ள வந்ததும் இல்லாம கட்டிலில் வேற உட்கார்ந்திருக்க” என்று கத்திக் கொண்டே அருகே சென்றாள்.

அவளின் பேச்சில் அதிர்ந்து போய் கட்டிலில் இருந்து எழுந்து நின்று தயக்கத்துடன் அவளைப் பார்த்தாள்.

கேஷ்வியோ அவளை முறைத்து “அவுட்! வெளியே போ!” என்று கத்தினாள்.

வர்ஷினிக்கு அவளை யாரென்று தெரியவில்லை. ஒருமுறை மட்டுமே செய்தித்தாளில் பார்த்திருந்தவளுக்கு அவள் சித்தார்த்தின் மனைவி என்று தெரியவில்லை. அதனால் கலக்கத்துடன் கூடிய விழிகளுடன் அவளை பார்த்தபடியே அங்கிருந்து நகராமல் நின்றாள்.

தான் அத்தனை சொல்லியும் அப்படியே நிற்பவளின் மீது கொலைவெறி எழ, ஆத்திரத்தோடு அவளது கையைப் பற்றி தரதரவென்று இழுத்துச் சென்று அறையிலிருந்து வெளியே தள்ளினாள். அவள் தள்ளவும் சரியாக அந்நேரம் சித்தார்த் வரவும் வர்ஷினி அவன் மீது மோதி நின்றாள்.

கேஷ்வி அவளை வெளியே தள்ளியதை பார்த்தவன் வேக நடையுடன் வந்து தாங்கி இருக்க, அவனது கண்களோ சிவந்து கோபத்தை கக்கியது. வர்ஷினியை பாதுகாப்பாக தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டவன் “என்ன பண்ணிட்டு இருக்க கேஷ்வி? எதுக்கு இவளை வெளியே தள்ளின?”

அவன் அவளை அணைத்துக் கொண்டு நிற்பதைக் கண்டதும் நெஞ்சுக்குள் தீயாய் தகிக்க “நம்முடைய அறையில் மூணாவது மனுஷிக்கு என்ன வேலை?” ஈன்றாள் ஏகத்தாளமாக.

“அதை தான் நானும் கேட்கிறேன்? உனக்கு இங்கே என்ன வேலை?” என்றான் அதே நக்கலுடன்.

“சித்தார்த்! நீயும் நானும் கணவன் மனைவி”.

இதழில் எழுந்த ஏளனப் புன்னகையுடன் வர்ஷுவை தன்னோடு இழுத்தணைத்துக் கொண்டவன் “நானும் இவளும் தான் கணவன், மனைவி கேஷ்வி. உனக்கும் எனக்கும் நடந்தது பிசினெஸ் டீல். அவ்வளவு தான்”

“வேண்டாம் சித்தார்த்! தப்பா யோசிக்கிற. உனக்கு எல்லாவிதத்துலேயும் பொருத்தமா இருக்கிறது நான் தான்”.

‘அதை நான் சொல்லணும்”.

இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த வர்ஷினிக்கு உடல் எல்லாம் அருவெருத்துப் போனது. தன்னை உருகி உருகி காதலித்தவன் இன்னொருத்தியையும் மணந்திருக்கிறான். அது மறுக்க முடியாத உண்மை. அவனது காதலால் அனைத்தையும் இழந்து இன்று நிராதரவாக நின்று கொண்டிருக்கிறோம். அவன் தனக்கு மட்டும் கணவன் இல்லை இன்னொருத்திக்கும் அந்த உரிமையை கொடுத்திருக்கிறான் எனும் போது அவன் மீது வெறுப்பே எழுந்தது. ஆயிரம் காரணங்கள் கூறினாலும் நடந்தவற்றை இல்லை என்று மறுக்க முடியாது என்று எண்ணியவள் அவனிடமிருந்து உதறிக் கொண்டு தள்ளி நின்றாள்.

அப்போதும் இருவரின் பேச்சும் நிற்காமல் போய் கொண்டிருக்க “கொஞ்சம் நிறுத்துறீங்களா?’ என்று சப்தம் போட்டாள். இருவரும் அதிர்ந்து அவளை பார்க்க, அவளோ கேஷ்வியை நேராகப் பார்த்து “நான் இங்கே எதையும் எதிர்பார்த்து வரல. என்னால உங்க வாழ்க்கையில் எந்த பிரச்னையும் வராது. என்னைக்கு இருந்தாலும் இது உங்க வாழ்க்கை” என்று அவள் கூறியதும் கேஷ்வியின் முகத்தில் மின்னல் எழுந்து மறைந்தது.

சித்தார்த்தோ அதிர்ந்து “மது! என்ன பேசுற?” என்றான் அதட்டலாக.

“வேறென்ன பேச? எப்படி பேச? இது தானே நிஜம்”.

“வேண்டாம் மது! எதையும் பேசாதே! நீ உள்ளே வா” என்று அவளது கைகளைப் பற்றி அறைக்குள் அழைத்துச் செல்ல முயன்றான்.

அவளோ நகர மறுத்து அழுத்தமாக நிற்க, பார்த்துக் கொண்டிருந்த கேஷ்வியின் முகத்தில் உற்சாகப் புன்னகை. இரு கைகளையும் கட்டிக் கொண்டு வாசலை மறைத்தபடி நின்றவள் “சித்து! அவங்களை கெஸ்ட் ரூமில் கொண்டு விட்டுட்டு வாங்க. அவங்களுக்கு தெரியுது அவங்க இடம் எதுவென்று” என்றாள் கிண்டலாக.

வர்ஷினியின் பேச்சில் காயப்பட்டிருந்தவனை கேஷ்வியின் பேச்சு கொதிக்க வைத்தது.

“ஏய்! நகரு” என்றவன் இருவரும் எதிர்பார்க்கும் முன் வர்ஷினியை அலேக்காக தூக்கிக் கொண்டு தன்னறைக்குள் நுழைந்தான்.

அதில் அதிர்ந்து போய் விலகி வழிவிட, கையில் துள்ளிக் கொண்டிருந்தவளை படுக்கையில் விட்டு விட்டு “நான் உன் மேல வைத்திருந்த காதல் பொய்யாய் போய் இருக்கலாம். நீ என் மேல வைத்திருந்த காதல் உண்மைன்னா இப்படியே இரு” என்றான்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அவன் சொன்னதில் அதிர்ந்து அவனைப் பார்த்துக் கொண்டிருக்க, அவனோ வேக நடையுடன் சென்று கேஷ்வியின் கைகளைப் பிடித்து இழுத்து அறைக்கு வெளியே தள்ளி கதவை சாற்றினான்.

முகத்தில் அறைந்து சாற்றப்பட்ட கதவு தன் நிலையை சொல்ல, ஒரு நிமிடம் அங்கேயே நின்று வன்மத்துடன் பார்த்தவளின் விழிகளில் பழிவெறி மின்னியது. விட மாட்டேன் சித்தார்த்! நீ எப்படி அவளோட வாழப் போறேன்னு பார்க்கிறேன்’ என்று எண்ணியபடியே அங்கிருந்து நகர்ந்தாள்.

வர்ஷினியோ அவனது கேள்வி கொடுத்த அழுத்தத்திலும், அவனது செயலிலும் அதிர்ந்து போய் அப்படியே அமர்ந்திருந்தாள். அவள் எதிரே வந்தமர்ந்தவன் அவளது கைகளை இறுகப் பற்றிக் கொண்டு “உன் கிட்ட என்ன சொல்லி என்னுடைய சூழ்நிலையை விளக்கினாலும் அதை உன்னால ஏற்றுக் கொள்ள முடியாது தான். உன்னுடைய இழப்பு ஈடு செய்ய முடியாது. அதற்கு காரணமான என்னை உன்னால மன்னிக்கவே முடியாதுன்னு தெரியும். ஆனா நீயும், நானும் உயிருக்கு உயிராக காதலித்து நிஜம். அந்த காதலுக்காக எனக்கு இன்னொரு சான்ஸ் கொடுக்க கூடாதா?” என்றான் கெஞ்சலாக.

“இன்னும் என்கிட்டே இருக்கிறது என் தங்கச்சி மட்டும் தான். அவளையும் இழக்கிறதுக்கு எனக்கு தைரியமில்லை. உங்க காதல் அதை தான் செய்யும். அதை மட்டும் தான் செய்யும்” என்றாள் அழுத்தமாக.

அவளது பதில் அவன் மனதை வலிக்க-வலிக்க தாக்கியது. அது அவன் கண்களிலும் தெரிய “இதுக்கு நீ ஒரு கத்தியை எடுத்து குத்தி இருக்கலாம் வர்ஷு. உன்னுடைய வாயிலிருந்து இப்படியொரு வார்த்தையை கேட்பேன்னு நினைக்கவே இல்லை. நிச்சயமா உனக்கு இன்னொரு இழப்பை கொடுக்க மாட்டேன். இனி உனக்கு நான் கொடுப்பது என் காதலை மட்டும் தான். நீ என்னை நம்ப வேண்டாம் நம்ம காதலை நம்பி எனக்காக நம்ம வாழ்க்கைக்காக இந்த போராட்டத்துக்கு உதவனும். அமைதியா என்னுடைய செயல்களுக்கு உறுதுணையா நிற்க சொல்கிறேன். எங்கேயும் யாரிடமும் என்னை விட்டுக் கொடுக்கிறேன்னு வார்த்தையை மட்டும் விட்டுடாதே”.

அவனது பேச்சு அவள் மனதில் ஒருவித அழுத்தத்தை கொடுக்க “வேண்டாமே! எங்களை விட்டுடுங்க! முடிந்து போனது முடிந்து போனதாகவே இருக்கட்டும். நீ...நீங்க அந்தப் பெண்ணோடையே வாழுங்க. எங்களை நிம்மதியா இருக்க விடுங்க’ என்றாள்.

பட்டென்று அவளது வாயை தன கைகளால் மூடியவன் “தயவு செய்து இன்னொரு முறை இப்படி பேசாதே. எனக்காக நீ என் மேல் வைத்திருந்த அந்த காதலுக்காக எனக்கு டைம் கொடு. எல்லாவற்றையும் சரி செய்கிறேன். நாம கற்பனை செய்த வாழ்க்கையை என்னால உனக்கு தர முடியும். ஆனா இழந்தவைகளை என்னால திருப்பித் தர முடியாது. அதுக்கு பதிலா அளவில்லா என்னுடைய அன்பை உனக்கு தருவேன் வர்ஷு”.

அந்த சூழ்நிலையை தாங்க அவளால் முடியவில்லை. எத்தனை சம்பவங்கள் எத்தனை இழப்புகள். மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிப்பிவனை என்ன சொல்ல? அவளின் மனதோரம் ஒளிந்திருந்த அவன் மீதான நேசம் அவனைக் கண்டதும் எகிறி குதித்து வெளியே வந்தது. அதே சமயம் அன்று ஆதரவற்று அந்த வீட்டின் வாசலில் நின்ற கோலம் நினைவில் வர, லேசாக ஈரம் பாய்ந்த இதயம் மீண்டும் இறுகிப் போனது. வேண்டாம்! எதுவும் வேண்டாம்! இவனுடனான வாழ்க்கை எனது காயங்களை என்றும் ஆற விடாது. எப்படியாவது தங்கையை அழைத்துக் கொண்டு இங்கிருந்து சென்று விட வேண்டும் என்று எண்ணினாள்.

அவளிடம் பேசிவிட்டு வெளியே வந்தவனை அவனது அலைப்பேசி அழைத்தது. அவன் வெகுநேரமாக எதிர்பார்த்திருந்த அழைப்பு தான். அவசரமாக அங்கிருந்து நகர்ந்தவன் இருள் சூழ்ந்த தோட்டப்பகுதியை நோக்கிச் சென்றான். தன்னைச் சுற்றி எவரும் இல்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டவன் “சொல்லு” என்றான்.

“நீங்க சொன்ன மாதிரி ஒவ்வொருத்தர் கிட்டேயும் பேச்சு வார்த்தை ஆரம்பிச்சிட்டோம். ஆனால் எல்லா இடத்திலேயும் உங்கம்மாவுடைய கை இருக்கு. சோ அவங்களுக்கு தெரியாம காய் நகர்த்துறது கஷ்டமாக இருக்கு”.

“இதை சொல்லவா போன் பண்ணின? எந்த வகையிலும் இது வெளியே போக கூடாது. நாம நடத்தி முடிக்கும் வரை நம்மோட மட்டும் தான் இருக்கணும்” என்றான் சீறலாக.

“கஷ்டமா இருக்குன்னு தான் சொன்னேனே தவிர முடியாதுன்னு சொல்லல. பட் ஒன்னு ரெண்டு கேஸ் படிவதற்கு டைம் எடுக்கும். அதுக்குள்ள நீ மற்றதை முடிச்சிடு”.

“ம்ம்...அதை நான் பார்த்துக்கிறேன்” என்று கூறியவன் போனை அணைத்து விட்டு அங்கிருந்த கல்லின் மீது அமர்ந்து விட்டான்.

அவனது சிந்தனை முழுவதும் பிம்லாவை பற்றியும், நானாஜியை பற்றி மட்டுமே இருந்தது. தனது ஒவ்வொரு அசைவையும் கண்காணித்துக் கொண்டிருப்பவர்களை மீறி இந்த சாம்ராஜ்யத்தை கையில் எடுக்க வேண்டும். அது அத்தனை சுலபமான காரியமல்ல என்றவனது அலைப்பேசி மீண்டும் அழைத்தது.

எடுத்து பார்த்தவனின் நெற்றியில் முடிச்சுகள். புதிய எண்ணிலிருந்து அழைப்பு. யோசனையுடன் எடுத்தவன் “சித்தார்த் ஹியர்” என்றான்.

“தாஸ்! ஷிவ் தாஸ் ஹீயர்”

“சொல்லுங்க சார்? நீங்க எனக்கு எதுக்கு போன் பண்ணி இருக்கீங்க?”

“கால் மீ தாஸ்! உங்க கேஸில் எதிர்பாராமல் இன்வால்வ் ஆக வேண்டிய சூழ்நிலை. நான் ஒரு விஷயத்தை தொட்டால் ஆதி முதல் அந்தம் வரை தெரிஞ்சுகிட்டு தான் உள்ளே நுழைவேன். அப்படி பார்க்கும் போது உங்க நானாஜியை பற்றியும் உங்க மாமா தினுவை பற்றியும் நிறைய சிக்கி இருக்கு. நான் என்ன செய்யட்டும்?”

“வாட்?”

“எஸ்! நிறைய இருக்கு. எல்லாவற்றையும் போனில் சொல்ல முடியாது. நேரா பார்த்து பேசலாம்”.

மீண்டும் ஒருமுறை தான் இருக்கும் இடத்தை ஆராய்ந்து கொண்டவன் “நான் கண்கானிக்கபட்டுக் கொண்டிருக்கிறேன் மிஸ்டர் தாஸ். என்னால உங்களை நேராக சந்திக்க முடியாது”.

அதைக் கேட்டதும் சத்தமாக சிரித்தவன் “ஐ க்னோ சித்தார்த். இது கூட தெரியலேன்னா நானெல்லாம் என்ன போலீஸ்காரன். உங்களை கண்காணிப்பவர்களை நான் டைவேர்ட் பண்றேன். இடம் எங்கேன்னு உங்களுடைய இன்னொரு நம்பரில் மெச்செஜ் வரும்”.

“இன்னொரு நம்பரா?” என்று அதிர்ந்தவனை கண்டு சிரித்த தாஸ் “ரொம்ப ஷாக் ஆகாதீங்க. இன்னும் நிறைய இருக்கு. அதுக்கு முதலில் நாம சந்திக்கணும்” என்றவன் “இன்னொரு விஷயம் உங்க மிஸ்ஸஸ் அவங்களுக்கு நம்பிக்கையானவங்களை பாதுகாப்பா வைங்க. தே ஆர் வெரி டேஞ்சரஸ்” என்றான் யோசனையுடன் கூடிய குரலில்.

அதை கேட்டதும் பயந்து போனவன் “என்ன சொல்றீங்க தாஸ்? அவளுக்கு ஆபத்தா?”

‘ம்ம்...அது யார் மூலியமாக வேணும்னாலும் வரலாம். உங்க செகண்ட் வைப் கேஷ்வி பட்டேலாக கூட இருக்கலாம். சோ கேர்புல்லாக இருங்க”.

“ஒ..மை காட்! எங்களை நிம்மதியாக இருக்க விட மாட்டாங்களா?’

“சியர் அப் மேன்! ஒரு தடவை நீ இழந்தது அதிகம். சோ இந்த முறை உஷாரா இரு. நான் மெச்செஜ் பண்றேன்’ என்று சொல்லி காலை கட் செய்து விட்டான்.

வர்ஷினிக்கு ஆபத்து இருக்கிறது என்பதை கேட்டதும் அவனது மூளை வேகமாக செயல்பட ஆரம்பித்தது. தாஸ் சொல்லியது போல இம்முறை எக்காரணம் கொண்டு ஏமாறக் கூடாது என்று உறுதியாக இருந்தான்.

அதன்பின்னர் போனில் சில பல அழைப்புகளை மேற்கொண்டு அந்த மாளிகைக்கு தனது நண்பர்களின் உதவியுடன் பாதுகாப்பை பலபடுத்த வேண்டிய ஏற்பாடுகளை மேற்கொண்டவன் நேரே தனதறைக்குச் சென்றான். அங்கு ஓய்ந்து போய் அமர்ந்திருந்தவளைக் கண்டதும் அருகே சென்று நின்றான். அவனைக் கண்டதும் வெறுப்புடன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

அவனோ அவளது தோள்களைப் பற்றி எழுப்பியவன் “மது! நம்ம வாழ்க்கை சீராகிற வரை நான் சொல்வதை எல்லாம் கேட்டுக்கோ. நம்ம திருமணம் நடந்த போது என்னைச் சுற்றி உள்ளவர்களைப் பற்றி நான் புரிந்து கொள்ளவில்லை. அதனால உன்னையும் ஏமாற்றி நானும் ஏமாந்து நின்றேன். ஆனால் இனி அப்படி இருக்க மாட்டேன். ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டு என் சொல்படி நடந்து கொள்” என்றான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவள் “நீங்க சொல்கிறபடி கேட்டால் இறந்து போன எங்கப்பா அம்மா, சிதைந்து போன என்னுடைய கால் எல்லாம் வந்துடுமா?”

பட்டென்று அவளை இறுக அணைத்துக் கொண்டவன் “என்னால நீ இழந்தவைகளை எல்லாம் திருப்பிக் கொடுக்க முடியாது தான் ஆனா உன்னை காப்பாற்றிக்கணும்னு நினைக்கிறேன். நீ என் வாழ்நாள் முழுவதும் வேணும் வர்ஷு”.
 
  • Like
Reactions: Sumathi mathi