Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 20 | SudhaRaviNovels

அத்தியாயம் - 20

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,830
113
அத்தியாயம் – 20

இருள் சூழ்ந்த நீர் பரப்பில் சித்திர காயலின் ஓரம் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது படகு வீடு.மரங்களடர்ந்த ஒரு சிறிய திட்டில், ஓர் சிறிய அறை மட்டுமிருந்தது.அந்த இடத்திற்கு வரும் படகுகளுக்கு மின்சாரத்தை வழங்க அமைக்கப்பட்டிருக்கும் அறை அது.

சுவர்கோழிகளின் ரீங்காரமும், சில்லென்று வீசிய காற்றும் மேனியை வருட, அனைவரும் அந்த இடத்தை ரசித்துக் கொண்டிருந்தனர்.

அதுநாள் வரை அனைவரையும் உறுத்திக் கொண்டிருந்த சங்கடங்கள் அகன்று, மனம் அமைதியடைந்ததால் அந்தச் சூழலை அனுபவித்தனர்.

“எல்லோரும் இப்படிச் சும்மா உட்கார்ந்திருந்தா எப்படி? அந்தாக்ஷரி விளையாடலாமா?” என்றான் ஆகாஷ்.

“சூப்பர்!விளையாடலாம்!நான் ரெடி..நான் ரெடி!”என்று பறந்தாள் சரண்யா.

எல்லோரும் ஆர்வமாகச் சுற்றி உட்கார்ந்து கொள்ள,ஆர்த்தியின் அருகில் உட்கார சென்ற ஸ்ருதியை இழுத்து தன் அருகில் அமர்த்திக் கொண்டான்.மதி சரண்யாவை தன்னருகே அழைக்க, அவளோ காயத்ரியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

‘இருடி! வீட்டுக்கு வருவே இல்ல.அப்போ பார்த்துக்கிறேன்’என்று கருவி கொண்டான்.

“அப்பா! நீங்க ஏதாவது பாடி ஆரம்பிங்க, நாங்க கண்டினியு பண்ணிக்கிறோம்.”

தொண்டையைச் சரி செய்து கொண்டு பாட ஆரம்பித்தார் சாம்பு.

அதைப் பார்த்த காயத்ரி “பெரிய பாகவதர், பண்ற அலம்பலை பாரேன்”என்று தோளில் இடித்துக் கொண்டார்.

அறியாத வயசு புரியாத மனசு ரெண்டும்

இப்போ காதல் செய்யும் நேரம்...

அவர் பாட ஆரம்பித்ததும் மகன்கள் மூவரும் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொள்ள முயற்சிக்க, காயத்ரியோ கொலைவெறியோடு பார்த்தார்.

“உன் மாமானாருக்கு மூளை குழம்பி போச்சு. மருமகளை வச்சுகிட்டு பாடுற பாட்டைப் பாரு”என்று அகல்யாவிடம் கடுப்படித்தார்.

ஒருமணி நேரத்திற்கு மாற்றி மாற்றிப் பாடிக் கொண்டிருந்தார்கள்.ஸ்ருதி மட்டும் மௌனமாக எல்லோர் பாடுவதையும், ரசித்துக் கொண்டிருந்தாள். அவள் மனது மிகவும் சந்தோஷத்தில் ஆழ்ந்திருந்தது.இப்படி ஒரு வாழ்க்கை கனவில் மட்டுமே என்றிருந்தவளுக்கு, இன்று அந்த வாழ்க்கை தன் கையில் என்று எண்ணி கண்கலங்க அமர்ந்திருந்தாள்.

அவளது உணர்வுகளைப் புரிந்து கொண்ட நிகில், எவரும் அறியாது அவள் கைகளை இறுக பற்றிக் கொண்டான்.

“ஸ்ருதி! நீ ஏதாவது பாடு!நைசா பாடாம எஸ்கேப் ஆகிட்டே இருக்க”என்றாள்.

“இல்லக்கா..நான் பாடல”என்றாள்.

நிகிலோ அவளிடம் “ப்ளீஸ்!எனக்காகப் பாடு ஸ்ருதி.”

அனைவரையும் ஒரு முறை பார்த்தவள்

மனம் விரும்புதே உன்னை...உன்னை

உறங்காமேலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே

நினைத்தாலே சுகம்தானடா

நெஞ்சில் உன்முகம் தானடா


என்று பாடியவுடன் “ஆஹா! ஸ்ருதி செம போ” என்று ஆர்த்தி அவளைக் கட்டிக் கொண்டாள்.

“பார்த்து ஆர்த்தி! தம்பி கண்ணுல பொறாமை தாண்டவம் ஆடுது”என்றாள் அகல்யா.

“என்னைக்காவது எங்க அண்ணன்னை பார்த்து பாடி இருக்கீங்களா அண்ணி? என் பொண்டாட்டியை பாருங்க” என்று காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.

“அண்ணா! நான் பாடுவேன் உங்க பிரெண்டை பார்த்து, பாடவா”என்றாள் சரண்யா.

அவள் சொன்னதைக் கேட்ட மதிக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது, ‘என்ன இவ திடீர்ன்னு சேம் சைட் கோல் போடுறாளே, ஏதோ இருக்கு’என்று எண்ணியபடி அவளைப் பார்த்தான்.

“நீ பாடு சரண்யா”என்றார் காயத்ரி

போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு என்று பாட ஆரம்பித்தாள்.

அதைக் கேட்டதும் காயத்ரி அவள் முதுகில் ரெண்டு அடி போட்டு “என்ன பண்ற நீ?அவனும் என் புள்ள தான்.நீ ஓவரா தான் துள்ளுற” என்று மொத்தினார்.

அதற்குள் தான் இருந்த இடத்திலிருந்து எழுந்த மதி, பாய்ந்து அவளைப் பிடிக்க முயற்சி செய்ய, அவன் எழுந்ததுமே உஷாரான சரண்யா மாடியை நோக்கி ஓடினாள்.அவளை துரத்திக் கொண்டே மதியும் மேலே சென்றான்.

அதைப் பார்த்த அனைவரும் சிரித்தனர்.

தங்கள் அறைக்குள் நுழைந்த சரண்யா கதவோரம் நின்று கொண்டாள். வேகமாக உள்ளே நுழைந்த மதி அவளைத் தேடினான்.சரண்யாவோ மெல்ல சப்தம் வராமல் கதவை தாழிட்டவள், அவன் பின்னே நின்று “வாங்க சார்! ஹனிமூன் ட்ரிப் எப்படியிருக்கு?” என்றாள் நக்கலாக.

வேகமாகச் சென்று அவள் காதை பிடித்தவன் “பாட்டா பாடுற,ரொம்பத் தாண்டி ஆடுற”என்றான் சீறலுடன்.

அவனைக் கண்டு கிண்டலாகச் சிரித்தவள் “ஏமாற்றத்தோட வலி எப்படி இருக்கும்-னு இப்போ தெரியுதா?நான் எத்தனை நாள் வெளில போறதுக்கு உங்களை எதிர்பார்த்து ஏமாந்து போயிருக்கேன். என்னை மறந்திட்டு ஸ்கூலில் படிச்ச பிரெண்டு வந்தான், காலேஜ்ஜில் கூடப் படிச்சவன் வந்தான்னு சொல்லி வராம ஏமாத்தி இருக்கீங்க.என்னடா இது பொண்டாட்டி காத்துகிட்டு இருப்பாளே ஒரு போன் பண்ணி சொல்லுவோம்னு கூட இல்லாம இருந்தீங்க இல்ல, அதுக்குத் தான் இப்படிப் பண்ணினேன்.உண்மையா சொல்லுங்க உங்களுக்கு எப்படி வலிச்சுது?”

அவள் சொன்னதைக் கேட்டதும், தான் இத்தனை நாள் சாதரணமாகச் செய்து வந்த விஷயங்கள் அவளை எவ்வளவு காயப்படுத்தி இருக்கிறது என்பதை உணர்ந்தான்.

அவள் இருகைகளையும் பிடித்துக் கொண்டவன் “சாரி அம்மு! நான் தெரிஞ்சு செய்யல.கல்யாணத்துக்கு முன்னாடி இருந்த மாதிரியே இருந்துட்டேன். நமக்காக ஒருத்தி வீட்டில் காத்துகிட்டு இருப்பான்னு எண்ணமே இல்லாம இருந்திருக்கேன்.இனி, இந்தத் தப்பு நடக்காம பார்த்துக்கிறேன்.என் மேல கருணை காட்டு-டா”

அவனிடமிருந்து கைகளை விடுவித்துக் கொண்டவள், எம்பி அவன் மண்டையில் ஒரு கொட்டு கொட்டி “அதானே,காரியத்திலேயே கண்ணா இருப்பீங்களே”.

“எந்தக் காரியம்...” என்றபடி காதலுடன் பார்த்தவன், அவளது இடுப்பை பற்றித் தன்னருகே இழுத்தவன், மெல்ல அவள் முக வடிவை அளந்தான்.

அதுவரை அதிரடியாகப் பேசிக் கொண்டிருந்தவள் அவனது செயலில் மதி மயங்கி நின்று “என்ன..என்..ன” என்றாள் திணறலாக.
 
  • Like
Reactions: Chitrasaraswathi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,830
113
அவளுடைய தவிப்பை ரசித்தவன், மேலும் முன்னேறி தன்னோடு இறுக அணைத்து அவள் முகத்தை நோக்கி குனிந்தான்.

மதியின் காத்திருப்புக்கான பரிசுகள் அவளிடத்தில் கிடைக்க ஆரம்பித்தது.கீழே இருந்தவர்கள் அனைவரும் இரவு உணவை முடித்துக் கொண்டு அவரவர் அறைக்குச் சென்றனர்.ஸ்ருதியும், நிகிலும் தங்கள் அறைக்கு வந்தனர். அப்போது ஸ்ருதி “ஏங்க! சரண்யா அக்காவும், அன்னணனும் சாப்பிடவே இல்லையே.நான் போய்ச் சொல்லிட்டு வரேன்”என்று திரும்பினாள்.

சட்டென்று அவள் கையைப் பற்றிக் கொண்டு தங்கள் அறைக்குள் நுழைந்தான்.

“கையை விடுங்க! நான் போய்ச் சொல்லிட்டு வரேன்.பாவம் பசிக்கப் போகுது.”

அவள் கையை விட்டுவிட்டு அறைக்கதவை தாழிட்டவன் “அதெல்லாம் பசிக்காது” என்றான்.

அவனைத் தாண்டிக் கொண்டு செல்ல முயன்றவளை பிடித்து நிறுத்தினான்.

“என்னங்க இது! ரெண்டு பேரும் சாப்பிடாம போயிட்டாங்க.நீங்க வேற வம்பு பண்ணிக்கிட்டு”என்று அலுத்துக் கொண்டாள்.

“ஹே லூசு!புரிஞ்சு தான் பேசுறியா?”

முகத்தைச் சுருக்கி “எதுல தான் விளையாடுறதுன்னே கணக்கில்லாம போச்சு உங்களுக்கு”என்று சொல்லி கதவருகே சென்றாள்.

அவள் தோள்களைச் சுற்றி கையைப் போட்டவன் “அவங்களுக்கு இப்போ பசிக்காது” என்று சொல்லி அவள் விழிகளைப் ஆராய்ந்தான்.

அவன் கைகள் தோள்களைச் சுற்றியதுமே ‘நா’ உலர்ந்து போக, அவன் விழிகளைச் சந்திக்க முடியாமல் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.

மெல்ல முகவாயை நிமிர்த்தியவன் “ஏன்னு கேட்கமாட்டியா ஹனி?”என்று ஆழ்ந்த குரலில் கேட்டான்.

அவனது நெருக்கமும்,குரலில் தெரிந்த காதலும் அவளுள் சலனத்தை ஏற்படுத்த, விழியுர்த்தி அவனது முகத்தைப் பார்த்தாள்.

குறுகுறுவென்று பார்க்கும் விழிகளும்,கூர்மையான நாசியும்,ட்ரிம் செய்யப்பட்ட மீசையும், சிரிப்புடன் கூடிய இதழ்களும் அவளுக்குள் படபடப்பை ஏற்படுத்தியது.

புருவத்தை உயர்த்தி அவளைக் கேலியாக “ம்ம்..என்ன மேடம்,நல்லாயிருக்கனா? ஆராய்ச்சி முடிந்ததா?” என்றான்.

காதல் ததும்பிய அவனது பார்வையில் வெட்கமடைந்தவள் குனிந்து கொண்டாள்.

அவளது நிலை அவனுள் காதல் தீயை கொழுந்துவிட்டு எரியச் செய்ய, தோள்களிலிருந்து கையை அகற்றியவன்,இடையை அழுந்த பற்றினான்.குனிந்து அவளது கழுத்தில் முத்தமிட,அவளுள் நடுக்கம் எழுந்தது.அவனது உதடுகள் முன்னேறி கன்னங்களில் உரச,தன்னை மறந்து அவனது கைகளில் நெகிழ ஆரம்பித்தாள்.

“ப்ளீஸ் நிக்கி!” என்று சிணுங்கியவளை தனது கைகளில் ஏந்திச் சென்று படுக்கையில் கிடத்தினான்.

அதுவரை மயக்கத்திலிருந்தவள், பதட்டத்துடன் எழுந்து “நிக்கி!ப்ளீஸ்! இது இப்போ இங்கே வேண்டாமே”என்றாள் தவிப்புடன்.

காதலென்னும் மாயவலையில் இருந்தவன், அவள் சொன்னதைக் கேட்டு முகம் இறுகி, உடல் விரைக்க “ஏண்டி? ஏன்?”என்று உறுமி, அவளது முகம் பார்க்காமல் வெறுப்புடன் திரும்பி நின்றான்.

முதலில் அவன் கோபத்தைக் கண்டு பயந்தாலும்,அவனுக்கு நந்தனாவுடன் நடந்த நிகழ்வு நியாபகத்துக்கு வந்தது. அவனது கோபத்தின் காரணம் அறிந்து, படுக்கையிலிருந்து எழுந்தவள் பின்புறமாக அவனை அணைத்து “ஏன் இவ்வளவு கோபம் என் புஜ்ஜிக்கு?ம்ம்..நம்ம வாழ்க்கை நீங்க பிறந்த வீட்டில் ஆரம்பிக்கணும்-னு ஆசைப்பட்டேன்.அதுக்கு ஏன் இவ்வளவு கோவம்? என்றாள்.

அவளது பேச்சில் கோபம் மட்டுப்பட, அவளது கைகளைப் பற்றி முன்னே இழுத்து முகத்தைப் பார்த்தவன் “நீயும் என்னை ஏமாத்திட்டியோ-னு நினைச்சேன் ஹனி.சாரி-மா உன்னைச் சரியா புரிஞ்சுக்காம கோபப்பட்டுடேன்”என்றான் உடைந்த குரலில்.

அவனது வார்த்தையில் அவனது கடந்தகால வலியின் வீரியம் தெரிய கண்கள் கண்ணீரை பொழிய, எம்பி அவன் முகத்தில் முத்தங்களைப் பரிசாகத் தந்தாள்.

தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டவள் “இல்ல புஜ்ஜி!நான் உங்களைவிட்டு எங்கேயும் போக மாட்டேன்.உங்க விருப்பம் எதுவா அதுதான் என் விருப்பமும்” என்றாள் விசும்பலுடன்.

அவள் முகத்தை நிமிர்த்திக் கண்ணீரை துடைத்துவிட்டு “இனி, நமக்குள்ள இது மாதிரி சந்தேகங்களுக்கு இடம் கிடையாது.உன் விருப்பம் போல, நம்ம வாழ்க்கையை அங்கேயே ஆரம்பிக்கலாம்” என்று சொன்னவன் ஆயாசமாகப் படுக்கையில் சரிந்தான்.

அவனது எதிர்பார்ப்பும், அதன்பின்னே விளைந்த ஏமாற்றமும் அவளைக் குற்ற உணர்ச்சியில் தள்ள, மெதுவாகச் சென்று அவனருகில் அமர்ந்தாள்.

தலையணையில் படுத்திருந்தவன்,அவள் அமர்ந்ததும் உருண்டு வந்து அவள் மடியில் தலையை வைத்துக் கொண்டான்.அதை சற்றும் எதிர்பாராது விழித்தவள்,தன்னை அறியாமலே கைகளை உயர்த்தி அவன் தலையை வருடஆரம்பித்தாள்.அதுநாள் வரை தனிமையில் அனுபவித்து வந்த வேதனயும்,மனதிலிருந்த பாரம் அகன்று,ஸ்ருதியின் நெருக்கத்தில் அவன் மனதில் நிம்மதி எழ, அவள் மடியிலேயே உறங்க ஆரம்பித்தான். அவனது மார்பிலேயே சாய்ந்து அவளும் உறங்கத் தொடங்கினாள்.அடுத்தநாள் அனைவரும் சென்னையை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தனர்.வரும்போது தனிமையில் வாடிய ஸ்ருதிக்கு, இந்தப் பயணம் மிகவும் ரசிக்கும்படியாக அமைந்தது.

தங்கள் வீட்டிற்கு இருவரையும் அழைத்து வந்து, மீண்டும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர்.ஒருவருட கடினமான நிகழ்வுகளுக்குப் பிறகு, நிகிலுடன் அவர்கள் வீட்டிற்கு வருவதை எண்ணி மனம் நெகிழ்ந்து போனாள் ஸ்ருதி. அவளுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்ட காயத்ரி, அவளை அணைத்து “இனி, உங்க ரெண்டு பேருக்கும் நல்ல காலம் தான்-டா.ஆனா, எதுவா இருந்தாலும் மனசு விட்டு பேசிடுங்க.மூடி மூடி வைக்கத் தான் பிரச்சனைகள் பெருசாகும்”என்றார்.

அவர் தோள்களில் உரிமையுடன் சாய்ந்து கொண்டவள் “நீங்க இருக்கிறப்ப எனக்கு எந்தப் பிரச்னையும் வராது அத்தை” என்றாள்.

அதைப் பார்த்த நீரஜ் “ஏன் ஆகாஷ் இங்கே ஏதோ கருகிற வாசனை வருதே.உனக்குத் தெரியுதா”என்றான்.

நன்றாகச் சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்ட நிகில் “சின்ன அண்ணாத்த உங்க கல்யாணத்தப்ப நீங்க அடிக்காத லூட்டியா?எல்லாத்தையும் மறந்திட்ட பார்த்தியா?” என்றான் கிண்டலாக.

அந்தநேரம் அங்கு வந்த ஆர்த்தி “ஏங்க உங்களுக்கு இது தேவையா?வாயை கொடுத்து நீங்களே மாட்டிகிட்டீங்களே?என்று கேலியாகச் சிரித்தாள்.

‘சரி!சரி!போய்ச் சூடா ஒரு காப்பிப் போட்டுட்டு வா.சும்மா நின்னு வளவளத்துகிட்டு இருக்காதே.”

ஆர்த்திச் சென்றதும் மூவரும் அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.சிறிது நேரத்திற்குப் பிறகு மேலே சென்ற நிகில், அங்கு ஜன்னல் அருகில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ருதியின் அருகில் மெதுவாகச் சென்றான்.

அவளருகே சென்றவன் குனிந்து தோள்பட்டையில் தாடையை அழுத்திக் கொண்டு, இடையில் ஒரு கை போட்டவன் “ஏன் ஸ்ருதி நீ புடவையே கட்ட மாட்டேங்கிற”என்றான் ஏக்கமாக.

அவனது கையை நறுக்கென்று கிள்ளி ‘இந்தக் கை சும்மா இருக்காதுன்னு தான் கட்டல”என்றாள்.
 
  • Like
Reactions: Chitrasaraswathi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,830
113
‘ஸ்..ஆ” என்று கையை உதறியவன் “பாவி..எப்படி கிள்ளி வைக்கிற”.

“இந்தப் பிரேக் டான்ஸ் நல்லாருக்கு எம்ஸ்கொயர்”என்று கிண்டலடித்து விட்டு ஓடினாள்.

பாய்ந்து அவள் கையைப் பிடித்தவன் “நக்கலா பண்ற?ஆமாம் எம்ஸ்கொயர்ன்னா என்ன?”

“ஹம்..நான் சொல்ல மாட்டேன்”

“உன்னை எப்படிச் சொல்ல வைக்கிறதுன்னு எனக்குத் தெரியும்”என்றவன் அவளைத் தூக்கினான்.

அதைக் கண்டு பயந்து “நான் சொல்லிடுறேன் கீழே இறக்கி விடுங்க”என்று அலறினாள்.

“அப்படி வா வழிக்கு” என்றவன் அவளை இறக்கி விட்டான்.

“எம்ஸ்கொயர்ன்னா முசுட்டு மாக்கான்”என்றாள் பயத்துடனே.

“ஹாஹா”என்று தலையில் கை வைத்துக் கொண்டு சிரித்தவன் “நீ இவ்வளவு வாயாடியா?ஆனாலும், முசுட்டு மாக்கான்..ஹாஹா..செம பேரு போ”

“உங்களுக்குக் கோவம் வரலையா?என் மேல?”என்றாள் அதிசயமாக.

“கோபமா உன் மேலையா?”என்றவன் அருகில் வந்து “என்னையும் என் குடும்பத்தையும் பழைய நிலைமைக்குக் கொண்டு வந்த தேவதை மேல வராது-டா” என்றான்.

அவனது கூற்றில் மனம் நெகிழ்ந்து போய் அவன் மார்பிலேயே சாய்ந்து கொண்டாள்.

சிறிது நேரம் அப்படியே நின்றவன் “எனக்குக் கொஞ்சம் வெளிய வேலை இருக்கு. முடிச்சிட்டு வரேன். நீயும் உன் கம்பனிக்கு போய் எழுதி கொடுத்திட்டு வந்துடு” என்றான்.

சற்று திகைத்தவள் “நீங்க தான் வேலையை விட்டுட்டு வந்துட்டீங்கன்னு சொன்னாங்க.நாம இங்கே இருந்தா நானும் வேலைக்குப் போகலாம் தானே”.

சட்டையை மாற்றிக்கொண்டே திரும்பியவன் “யார் சொன்னா நாம இங்கே இருக்கப் போறோம்-னு”கையை விமானம் பறப்பது போல் காட்டி “மேடம்-ஜி உங்களைத் தூக்கத்தான் இங்கே வந்தேன்.வந்த வேலை நல்லபடியா முடிஞ்சு போச்சு.இனி, நம்ம ஹனிமூன் துபாயில் தான்”.

“ஆ”வென்று வாயைப் பிளந்தவள் “அதெப்படி உங்களுக்கு நினைச்சவுடனே வேலை கிடைச்சிடுமா என்ன?” என்றாள் நக்கலாக.

அவள் தோள்களின் இருபக்கமும் கையைப் போட்டுக் கொண்டு, தன் வசீகரப் புன்னகையைச் சிந்தியவன் “என்ன கிண்டலா ஹனி? என் பழைய கம்பனியிலேயே போய் ஜாயின் பண்ணிக்கலாம்.ஏன்னா நம்ம வேலை அப்படி.இது உனக்கு இப்போ புரியாது.நைட் வந்து சொல்றேன்”என்றவன் கண்ணடித்துவிட்டுக் கிளம்பினான்.

அவன் சென்றதும் கீழே சென்று காயத்ரிக்கு சமையலுக்கு உதவ ஆரம்பித்தாள்.அவரோ “உன்னைக் கம்பனிக்கு போய் எழுதி கொடுத்திட்டு வர சொன்னான் இல்ல.நீ கிளம்பு.இதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்”என்றார்.

அவள் கிளம்பி சென்றதும் காயத்ரியும், மருமகள்கள் இருவரும் கூடி பேசி சில முடிவுகளை எடுத்து விட்டு மடமடவென்று வேலையைப் பார்க்க ஆரம்பித்தனர்.

போன வேலையை முடித்துக் கொண்டு வந்த ஸ்ருதியை தங்கள் அறைக்குச் செல்ல விடாமல் கீழேயே பிடித்து வைத்துக் கொண்டனர்.

“அக்கா!நான் போய் டிரஸ் மாத்திட்டு வரேன் கா”என்று எழுந்தாள்.

“உன்னோட டிரஸ் அத்தை ரூம்ல இருக்கு ஸ்ருதி, போய் மாத்திக்கோ” என்றாள் ஆர்த்தி.

அதைக் கேட்டுச் சந்தேகமாக அவளைப் பார்த்த ஸ்ருதி “என் டிரஸ் எப்படி அத்தை ரூம்ல?”.

“குமரகம்லேயே விட்டுட்டு வந்துட்டியாம் அத்தை எடுத்திட்டு வந்திருக்காங்க”என்றவளை சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டே சென்று ஆடை மாற்றி வந்தாள்.

“ஸ்ருதி! ரொம்ப டயர்டா தெரியிற கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திரி” என்றார் காயத்ரி.

“இருக்கட்டும் அத்தை.இப்போ எனக்குத் தூக்கம் வரல” என்றாள்.

மறுப்பாகத் தலையாட்டிய காயத்ரி “வெயில்ல போயிட்டு வந்து, சுண்டி போன கத்திரிக்காய் மாதிரி இருக்கு முகம்.கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு”என்றார்.

அதற்கு மேலும் மறுக்க முடியாமல் எழுந்து தங்கள் அறைக்குச் செல்லப் போனவளை, தடுத்து நிறுத்திய அகல்யா “இங்கேயே அத்தை ரூமில் படு ஸ்ருதி” என்றாள்.

அதைக் கேட்டு விழித்தவள், அவர்களின் முகங்களை ஆராய்ந்தாள்.ஏதோ ஒன்றை மறைக்கும் முயற்சி தெரிந்தது. சரி, நேரம் வந்தால் தானாகத் தெரிய போகிறது என்றெண்ணி காயத்ரியின் அறையில் சென்று படுத்து உறங்கி விட்டாள்.

மாலை ஹாலில் கேட்ட பேச்சுக் குரலில் விழித்து எழுந்தவள், முகம் கழுவி கொண்டு வெளியே வந்தாள். அங்கே அகல்யாவும், ஆகாஷும் பெட்டியும் கையுமாக நின்று கொண்டிருந்தனர்.நிகில் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தான்.என்னவென்று புரியாமல் அகல்யா அருகில் சென்று “என்னக்கா?” என்றாள்.

அவளைக் கையைப் பிடித்துச் சற்று தள்ளி அழைத்துச் சென்றவள் “ஒரு வருஷம் முன்னாடி கல்யாணம் நடந்திருந்தாலும்,உங்களுக்குள்ள எதுவும் சுமுகமா இல்லேன்னு தெரியும் ஸ்ருதி.எல்லா பிரச்சனைகளும் முடிந்து இன்னைக்கு உங்களுக்குள்ள ஒரு நல்ல புரிதல் வந்திருக்கு.அதுதான் அத்தை நாள் பார்த்து இன்னைக்கே உங்க வாழ்க்கையை ஆரம்பிச்சா நல்லாயிருக்கும்னு ஏற்பாடு பண்ணியிருக்காங்க”என்றாள்.

அதைக் கேட்டு முகம் சிவந்தவள் “நீங்க எங்கேயோ கிளம்புற மாதிரி இருக்கே”என்றாள் கேள்வியாக.

அவள் தாடையைப் பற்றி லேசாகக் கொஞ்சி விட்டு, காதருகில் சென்று “உங்களுக்கு ப்ரைவெசி வேணும்-னு தான் கிளம்புறோம்.நாங்க மட்டுமில்ல,ஆர்த்தி, நீரஜ்,அத்தை, மாமா கூடக் கிளம்புறாங்க”.

அப்போது அங்கே வந்த ஆர்த்தி “ஸ்ருதி! மச்சினர் கண்ணுல ஹல்வாவை மட்டும் காட்டிடாதே.அதை பார்த்ததும் மத்ததை எல்லாம் மறந்திடுவார்”என்றாள் கேலியாக.

அவள் சொன்னதைக் கேட்டு விழித்தாலும்“என்னக்கா இது! அதெல்லாம் இல்ல.நீங்க யாரும் எங்கேயும் போக வேண்டாம்.இங்கேயே இருங்க.”

அவர்கள் மூவரும் வழக்கடித்துக் கொண்டிருக்க,ஸ்ருதியின் அருகில் வந்த காயத்ரி “ஸ்ருதி! நானும் மாமாவும் கிராமத்து வீட்டுல போய் நாலு நாள் இருந்த்திட்டு வருவோம்.அகல்யாவும்,ஆர்த்தியும் அவங்க அம்மா வீட்டுக்கு தான் போறாங்க.நீ எதையும் மனசில போட்டு குழப்பிக்காம நிம்மதியா இரு”என்றவர் அவளையும்,நிகிலையும் பூஜை அறைக்கு அழைத்துச் சென்று விளக்கேத்தி அவர்கள் நமஸ்கரித்ததும் குங்குமமிட்டு “இனி, உங்க வாழ்க்கையில் எல்லாமே நல்லதே நடக்கும்”என்று ஆசிர்வதித்தார்.

அரை மணியில் அனைவரும் கிளம்பி சென்று விட, வீடே அமைதியாக இருந்தது.நிகில் தங்கள் அறைக்குச் சென்று ஒரு கவரை எடுத்து வந்து அவள் கையில் கொடுத்தான்.

“நான் போய்க் குளிச்சிட்டு வரேன்.நீ சாப்பாடை எடுத்து வை”என்று சொல்லிச் சென்றான்.

மெதுவாக அவன் கொடுத்த கவரைப் பிரித்து உள்ளே இருந்ததை எடுத்தாள். ஆகாய நீலத்தில், ஆங்காங்கே கற்கள் பதிக்கப்பட்ட டிசைனர் புடவையும், அதற்குண்டான ரவிக்கையும் வைத்திருந்தான்.அதனோடு மல்லிகைப் பூவும் இருந்தது.

மதியத்திலிருந்தே மற்றவர்களின் நடவடிக்கையை வைத்து இதை எதிர்பார்த்திருந்தாலும், உள்ளுக்குள் ஒருவித பயம் ஓடியது.மனதில் ஓடிய குழப்பங்களைத் தள்ளி வைத்துவிட்டு, மெல்ல எழுந்து சென்று குளித்துவிட்டு அவன் கொடுத்த புடவையை அணிந்து, தலையில் மல்லிகையி சூடிக் கொண்டாள்.

அத்தை செய்து வைத்துவிட்டுப் போயிருந்த உணவுகளை எடுத்து வருவதற்குச் சமயலறைக்குச் சென்றாள். மைக்ரோவேவில் சூடு செய்ய வைத்துவிட்டு, பெருமூச்சுடன் நின்றிருந்தவளின் இடையில் கதகதப்பான வலிய கரமொன்று படர்ந்தது.

தலையில் சூடியிருந்த மல்லிகையை நுகர்ந்தவனின் உதடுகள்,அவளது கழுத்தில் பயணிக்க, அவனது நெருக்கமும்,மூச்சுக்காற்றும், இதழ்களின் கதகதப்பும் அவளைச் செயலிழக்க செய்திருந்தது.

மெல்ல அவளைத் தன் புறம் திருப்பியவன் குனிந்து அவள் இதழில், கவிதையை எழுதத் தொடங்கினான்.

தனது கைகளிலேயே தொய்ந்து விழுந்தவளை தூக்கிக் கொண்டு மாடி ஏறினான்.அவர்களின் அறைக் கதவை திறந்ததும், ஸ்ருதி மலைத்துவிட்டாள். முதலிரவு அறை போன்று அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அவன் காதோரம் “சாப்பிடலையா?” என்று கிசுகிசுத்தாள்.

அவனும் அதே தொனியில் அவளிடம் ஏதோ சொல்ல “சீ” என்று முகம் சுளித்தாள்.

மெதுவாக அவளைப் படுக்கையில் கிடத்தியவன், அவளது அழகை கண்களால் பருகிக் கொண்டே விளக்கை அனைத்தான்.அலைபாய்ந்த நெஞ்சங்கள் ஒன்றோடு ஒன்றாக இணைந்து தாம்பத்தியம் என்னும் கவிதையை எழுதத் தொடங்கியது.

நான்கு நாட்கள் நேரம் காலமின்றிக் கூடி களித்திருந்த இருவரும், மனதாலும், உடலாலும் நெருங்கியிருந்தனர்.

அதன் பின்னர்ப் பதினைந்து நாட்கள் சடுதியில் ஓட, அவர்களிருவரும் துபாய் செல்வதற்கான நாளும் நெருங்கியது.

குடும்பத்தினர் அனைவரும் வழியனுப்ப கணவனின் கையைப் பிடித்தபடி விமானம் ஏறினாள்.

விமானம் மேலே ஏறும் போதும், இறங்கும் போதும் அவன் தோள்களில் சாய்ந்து கொண்டு இறுக கண்மூடிக் கொண்டவளை,ரசித்தது அவனது விழிகள்.

தாங்கள் முதலில் இருந்த இடத்திலேயே பிரெண்ட்ஸின் உதவியுடன் ஏற்பாடு செய்திருந்தான்.தங்களது வீட்டிற்குள் நுழைந்ததும், பழைய நினைவுகள் அவளைத் தாக்க, அவனை யோசனையுடன் பார்த்தாள்.

அவளது மனதை புரிந்து கொண்டவன், அருகில் சென்று தோளோடு அணைத்துக் கொண்டு, தங்கள் அறைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த கட்டிலில் அமர வைத்தவன் “ஸ்ருதி! அது நம்ம வாழ்க்கையின் கடந்தகாலம்.உன் முன்னாடி இருக்கிறது உன்னோட நிகில்.உன் அடிமை. நீ என்ன சொன்னாலும் கேட்பேன்”என்றான் கிண்டலாக.

அதைக் கேட்டவளின் இதழ்கள் புன்முறுவலை சிந்த “அடிமையே!இது என்னுடைய அறை. எஜமானி அறையில் அடிமைக்கு என்ன வேலை?” என்றாள் நக்கலாக.

“அடிப்பாவி..முதலுக்கே மோசம் பண்ணிடுவ போல”என்றவனைப் பார்த்துப் பழிப்பு காட்டிவிட்டு அங்கிருந்து ஓடினாள்.

நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமாக இருவரின் அன்பும், காதலும் குறையாது வளர்ந்து கொண்டே சென்றது...ஐந்து வருடங்களுக்குப் பின்....

நிகிலின் மாமாவின் மகள் திருமணம்.இருவரும் விடுமுறைக்கு வந்த இடத்தில் திருமணத்திலும் கலந்து கொண்டு விட்டுச் செல்லலாம் என்று மொத்த குடும்பத்தினருடன் வந்திருந்தனர்.

ஸ்ருதி, அண்ணிகள் இருவருடன் திருமண வேலைகளில் பிஸியாக இருக்க, நிகிலோ தான் பெற்ற செல்வங்களின் பின்னே ஓடுவதிலேயே இருந்தான்.

அவனது மூத்த மகள் ஆரண்யா மூன்றரை வயதிலும், மகன் கவின் ஒன்றரை வயதிலும் இருந்தனர்.அபிமன்யு எல்லோருக்கும் மூத்தவனாக வழி நடத்த, நீரஜின் மகன் ரிஷியும்,ஆரண்யாவும் அவனைத் தொடர, கவின் தன் தளிர் நடையுடன் அவர்களின் பின்னே சென்று கொண்டிருந்தான்.

காலையிலிருந்து குழந்தைகளின் பின்னே ஓடி ஓடி களைத்திருந்த நிகில்,அதற்கு மேல் முடியாமல் போகக் குனிந்து கவினை தூக்கிக் கொண்டு, போனில் ஆகாஷையும், நீரஜையும் அழைத்தான்.

“டேய்! எல்லாத்தையும் என் தலையில கட்டிட்டு எங்கடா போய்த் தொலைஞ்சீங்க?சீக்கிரம் வந்து அவன் அவன் புள்ளைய சார்ஜ் எடுக்குறீங்க.இதுக்கு மேல நம்மால சமாளிக்க முடியாதுடா சாமி” என்று அலுத்துக் கொண்டான்.

சிறிது நேரத்தில் அவர்கள் வந்து தங்களது பிள்ளைகளைத் தூக்கிக் கொள்ள,நிகில் ஆரண்யாவை ஒரு கையிலும்,கவினை ஒரு கையிலும் தூக்கிக் கொண்டு உள்ளே நடக்கு நேரம், நந்தனாவின் குடும்பம் உள்ளே நுழைந்தது.

இருதரப்பும் ஒருவரை ஒருவர் கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்தாலும், முதலில் தன்னைச் சுதாரித்துக் கொண்ட நிகில், அவர்களைத் திரும்பியும் பார்க்காது உள்ளே சென்றான்.சொந்தங்களின் மூலம் அவனுக்குத் திருமணம் நடந்து பிள்ளைகள் இருக்கிறதென்று கேள்வி பட்டிருந்தாலும்,இன்று அவன் கையில் பிள்ளைகளுடன் காட்சி தந்ததை ஜீரணிக்க முடியாமல் தயங்கி தயங்கி உள்ளே சென்றனர்.

நந்தனாவிற்கும், ராஜிற்கும் நிகிலை கண்டதிலிருந்து முள் மேல் நிற்பது போலானது.உள்ளே சென்ற நிகிலோ ஸ்ருதியை பார்த்து அவளிடம் கவினை கொடுத்துவிட்டு ஆரண்யாவை தூக்கிக் கொண்டு, ஒரு அறைக்குள் சென்றமர்ந்தான்.அவனது முகத்தைக் கவனித்த ஸ்ருதிக்கு, அது இறுகி போயிருப்பதைப் போல் தோன்றியது.

அதே யோசனையுடன் கவினை தூங்க வைக்கச்சென்றாள்.அகல்யா நந்தனா குடும்பத்தைக் கண்டுவிட்டு, ஸ்ருதியிடம் வந்து “ஸ்ருதி! அவ வந்துருக்கா பார்த்தியா” என்றாள்.

கவினை உறங்க வைத்துக் கொண்டிருந்தவள் “யாருக்கா?”

“அவ தான் நந்தனா.நம்ம குடும்பத்தை அழ வச்சிட்டு போனாளே அந்த மகராசி தான்”என்றாள்.
 
  • Like
Reactions: Chitrasaraswathi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,830
113
அதைக் கேட்டதும், நிகிலின் சோர்வுக்குக் காரணம் விளங்கியது. கவின் ஆழ்ந்து உறங்கிவிட, அவசரமாக எழுந்தவள் “எங்கக்கா?எனக்கு காண்பிங்க?அந்த பிறவி எப்படி இருக்குன்னு பார்க்கிறேன்”என்றாள் வெறுப்புடன்.

அவள் காட்டிய திசையில் பார்த்தவளுக்கு நந்தனாவின் தோற்றம், அவளுடைய இன்றைய நிலையை உணர்த்தியது.கண்கள் கருவளையம் கட்டி, கன்னங்கள் பொலிவிழந்து,கண்களில் துயரத்துடன்அமர்ந்திருந்தாள். அவ்வப்போது அவளது பார்வை நிகிலை தொட்டு மீண்டது.அதை கண்ட ஸ்ருதிக்குக் கோபம் கொப்பளிக்க “அக்கா! கொஞ்சம் கவினை பார்த்துக்கோங்க”என்றவள் நேராகச் சென்று நந்தனாவின் அருகில் நின்றாள்.

“உங்க கூடக் கொஞ்சம் பேசணும் வரீங்களா?

நந்தனா நிமிர்ந்து பார்த்து விழிக்க, “தனியா வந்தா உங்களுக்கு நல்லது.இல்ல இங்கேயே பேசலாம்ன்னா எனக்கொன்னும் இல்லை” என்றாள் ஸ்ருதி

“நீங்க யாரு?எதுக்கு என்கிட்ட பேசணும்?”

“அவசியம் தெரிஞ்சுக்கனுமா?உங்க காதலுக்காக ஒரு மனுஷனோட உணர்வுகளைக் கொன்னு போட்டீங்களே,அவரோட மனைவி” என்றவள் இகழ்ச்சியாக “இந்த விபரம் போதுமா?” என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்டு அவசரமாக எழுந்து நின்றாள்.

நந்தனாவின் தாயையும்,நந்தனாவின் கையைப் பிடித்துக் கொண்டிருந்த ராஜைப் பார்த்து “நீங்களும் வாங்க” என்றழைத்து முன்னே சென்றாள்.

அங்கிருந்த அறைக்குள் சென்றவள், அவர்கள் உள்ளே நுழைந்ததும் கதவை தாழிட்டு, திரும்பி அவர்களைப் பார்த்தாள்.

நந்தனாவின் அன்னையிடம் சென்றவள் “என்னம்ம்மா பார்க்குறீங்க?இவ யாரு என்ன பேசப் போறான்னு உங்களுக்குப் புரியல இல்லையா?” என்றவள் தான் யார் என்பதையும்,நிகிலின் வாழ்வில் அவர்களின் பெண்ணும், மாப்பிள்ளையும் விளையாடிய விளையாட்டையும் எடுத்துக் கூறினாள்.

அவள் கூற கூற இருவரும் தலையைக் குனிந்து கொண்டு நின்றிருந்தனர்.

நந்தனாவின் தாய் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருகி ஓடியது.தன் கைகளில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தார்.

குனிந்து கொண்டு நின்றவர்களின் அருகில் சென்றவள் “திருமணம் உங்களுக்கெல்லாம் விளையாட்டா போயிடுச்சு இல்ல.காதலிச்சவனைக் கல்யாணம் பண்ணிக்க நினைச்சது தப்பில்லை.ஆனா, அதுக்காக நீங்க செஞ்சிருக்க வேலை, எத்தனை பேருடைய நம்பிக்கையை ஏமாத்தி இருக்கீங்க.இதோ உங்க முன்னாடி குமுறி குமுறி அழுதிட்டு இருக்காங்களே, இவங்க எத்தனை பாசத்தோட, கனவுகளோட உங்களை வளர்த்திருப்பாங்க.என் பொண்ணு என் பொண்ணு-னு உனக்காக நீ பொறந்ததில் இருந்து பார்த்து பார்த்து வளர்த்தவங்களை உன்னோட நடத்தையால எவ்வளவு அசிங்கப்படுத்தி இருக்கே.ஒரு குடும்பத்தோட சந்தோஷங்களை மொத்தமா அழிச்சு அதன் மேல உங்க வாழ்க்கையை ஆரம்பிச்சு இருக்கீங்க.அதிலும் நிகிலை நீங்க அவமானபடுத்தினது யாராலையும் மன்னிக்கவே முடியாது”.

ராஜின் அருகில் சென்று “நீயெல்லாம் ஒரு ஆம்பளையா? நீ காதலிச்ச பெண்ணை, பெண் கேட்டுத் தைரியமா கல்யாணம் பண்ணிக்கத் துப்பில்லை.அவளை இன்னொருத்தனுக்குக் கட்டி வச்சு, அவன் மேல பழியைப் போட்டு, அதை வைத்து நம்பிக்கையை ஏற்படுத்தி உனக்கொரு வாழ்க்கை தேவையா?காதலிங்க வேண்டாங்கல...ஆனா, காதலிக்கிற தைரியம் இருக்கிற உங்களுக்கு, எதிர்த்து நின்னு போராடி ஜெயிக்கவும் தெரியனும்.அதை விட்டுட்டு குறுக்கு வழியில் உங்க காதலை நிறைவேத்திக்க நினைக்காதீங்க.”

ஆத்திரமாகத் தலையை மேலும், கீழும் ஆட்டியவள் “ஆனா ஒன்னு, நீங்க மனுஷங்களை ஏமாத்தலாம்.கடவுளை ஏமாத்த முடியாது.இதோ உங்க கண்ணும் முன்னே அவர் நல்லா வாழ்ந்துகிட்டு இருக்கார்.யாரை ஆண்பிள்ளை இல்லேன்னோ சொன்னீங்களோ, அவர் ரெண்டு குழந்தைகளுக்குத் தகப்பன்.ஆனா, நீ ஒரு நல்ல ஆண்மகன் இல்லேன்னு கடவுள் உன் மேல முத்திரை குத்திட்டார்.”

நந்தனாவின் அம்மா அருகில் சென்று “இதை நான் அங்கே கூட்டத்திலேயே சொல்லியிருக்க முடியும்.உங்க வீட்டு ஆளுங்களைப் போல.உங்களைப் போல நாங்களும் தரம் தாழ்ந்து போக விரும்பல”என்றவள் அறைக் கதவை திறந்து கொண்டு வேகமாக வெளியேறினாள்.

அவளது பேச்சில் அதுநாள் மனதை குடைந்து கொண்டிருந்த கேள்விகளுக்கான விடை கிடைக்க, மனம் நொந்து போன நந்தனாவின் தாய், நிமிர்ந்து அவர்கள் இருவரையும் பார்த்த பார்வையில், அந்த நிமிடம் நந்தனாவின் உணர்வுகள் மரத்துப் போனது.

“நான் செத்தா, பிணத்தைக் கூட நீங்க ரெண்டு பேரும் பார்க்க கூடாது-னு நினைக்கிறேன்”என்றவர் அருவெறுப்பாக இருவரையும் பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

அந்த நிமிடம் வரை செய்த தவறின் அளவை உணராது இருந்தவர்கள், அவரின் பேச்சில் கூசி, கூனி குறுகி நின்றனர்.

நேரே நிகிலின் அருகில் சென்று அவன் கையைப் பற்றிக் கொண்டு “என் வீட்டு ஆளுங்க உங்க குடும்பத்துகிட்ட நடந்துகிட்டதுகெல்லாம் என்னை மன்னிச்சிடுப்பா”என்று கதறி அழ ஆரம்பித்தார்.

அதைப் பார்த்த காயத்ரியும், மற்றவர்களும் அங்கு வர, நந்தனாவின் தந்தை “ஏய்!என்ன பண்ற?”என்று அதட்டினார்.

அதைக் கண்டு வெகுண்டெழுந்தவர் “நீங்க எல்லோரும் பண்ணிய தவறுக்கு நான் மன்னிப்பு கேட்டுகிட்டு இருக்கேன்.இதோ நம்ம மாப்பிள்ளையா வந்தவரை, தன்னோட சுயநலத்துக்காக அவமானப்படுத்தினா உங்க மக. உங்க பங்குக்கு அவர் குடும்பத்தையும் ஊரார் மத்தியில் அசிங்கப்பட வச்சீங்களே,அதுக்குத் தான் மன்னிப்பு கேட்கிறேன்”என்றார் ஆங்காரமாக.

அவர் கையைப் பிடித்து இழுத்து “என்ன உளறுற”என்றார் ஆத்திரமாக.

“ஏங்க!உண்மை கசக்குதா?நம்ம பெண்ணைப் பத்தி உங்களுக்கு எல்லாம் முன்னாடியே தெரிஞ்சிருக்கும்-னு எனக்குத் தெரியும்.ஆனா, உங்க சுய கௌரவத்தை விட்டு இவங்க கிட்ட மன்னிப்பு கேட்க முடியல இல்ல.”

அவமானத்தில் முகம் கறுத்து போன நந்தனாவின் தந்தை, ஓரளவிற்கு மேல் முடியாமல், ஓரமாக நின்று கொண்டிருந்த காயத்ரி, சாம்பசிவத்தின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்தார்.

பதறி போன காயத்ரியும்,சாம்பசிவமும் அவரை எழுப்ப “என்னை மன்னிச்சிடுங்க! என் பெண்ணும், மாப்பிள்ளையும் பண்ணின பாவத்தை எப்படிப் போக்க போறேன்னு தெரியல.நாங்க வேற உங்க குடும்பத்தைக் கேவலமா பேசி ஏகப்பட்ட பாவத்தை ஏத்தி வச்சிருக்கோம்.அது ரெண்டும் பண்ணின பாவத்துக்கு, ஆண்டவன் நல்ல தண்டனையா கொடுத்திட்டான்.உங்க பிள்ளையைச் சொன்னதுக்கு, அவங்களுக்கே அதைத் திருப்பிக் கொடுத்திட்டான்.விஷயம் தெரிஞ்ச நாளிலிருந்து என்னால ஒரு நிமிஷம் கூட நிம்மதியா இருக்க முடியல.நீங்க மன்னிச்சேன் ஒரு வார்த்தை சொன்னா போதும்.சாவிலாவது என் நெஞ்சு கூடு வேகும்”என்றார் கதறியபடி.

அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு, திருமணம் முடிந்து வீடு திரும்பியவர்களின் மனதில் நடந்த சம்பவங்களே ஓடிக் கொண்டிருந்தது.

மகன்களுடன் அமர்ந்து அனைத்தையும் பேசிக் கொண்டிருந்தார்கள் காயத்ரியும், சாம்பசிவமும்.ஸ்ருதி மகனையும், மகளையும் தூங்க வைத்துக் கொண்டு தங்களது அறையிலிருந்தாள்.

ஆரண்யா அம்மாவை பாட சொல்லி கேட்க, அவளுக்காகப் பாடிக் கொண்டே இருவரையும் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

செல்வக் களஞ்சியமே

என்னைக் கலிதீர்த்தே உலகில்

ஏற்றம் புரிய வந்தாய்....

மனைவியின் பாடலை ரசித்தபடியே உள்ளே வந்தவன், அவளது மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான்.

பிள்ளைகள் இருவரும் உறங்கி இருக்க, அவர்களை விட்டு நிகிலின் கேசத்தை வருடியவள் “என்ன இன்னைக்கு என் புஜ்ஜுவுக்கு ஆச்சு? என் மடியை தேடி வந்திருக்கார்?”

அவளது கேள்வியில் உருண்டு அவளது வயிற்றில் முகம் புதைத்தவன் “ரொம்ப நாளைக்குப் பிறகு, இன்னைக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கேன் ஹனி” என்றான்.

“ம்ம்..”

“ஏன்னு கேட்க மாட்டியா?”

“சொல்லுங்க”

“என்னால என் குடும்பத்துக்கு நேர்ந்த அவமானம், என் மனசை உறுத்திகிட்டே இருந்துது.ஆனா, இன்னைக்கு நடந்த சம்பவத்துல எல்லாமே கரைஞ்சு காணாம போயிட்டு. என் மனசு அப்படியே லேசா ஆகிடுச்சும்மா.”

“எனக்குப் புரியுதுங்க”

“கள்ளி!இவ்வளோ சொல்றேன்.இதெல்லாத்துக்கும் காரணம் நீ தான்னு வாயை திறக்கிறியா பாரு”என்று அவள் கன்னத்தில் இடித்தான்.

அவன் முகத்தைக் கைகளால் தாங்கியவள் “இந்தக் குடும்பத்தோட அன்புக்கும், உங்களோட காதலுக்கும் நான் செய்தது ஒண்ணுமே இல்லையே.கனவாய் இருந்த திருமணமும், குடும்பமும் உங்களால தான் சாத்தியமாயிற்று” என்றவள் அவன் நெற்றியில் இதழ் பதித்தாள்.

“பிள்ளைகளுக்காக ஒரு பாட்டு பாடியாச்சு மேடம். இப்போ எனக்காகப் பாடு”.

“உங்களுக்குப் பாட்டு கிடையாது.என்ன இருந்தாலும் நீங்க அவளை ரசிச்சீங்க இல்ல.அதனால நோ பாட்டு”என்று திருப்பிக் கொண்டாள்.

அவள் சொன்னதைக் கேட்டவன் தலையில் கை வைத்துக் கொண்டு “அடிபாவி! ரெண்டு பிள்ளை பெத்த பிறகும், அதையே சொன்னா நியாயமா?”என்று அவளைத் தன் புறம் இழுத்தான்.

மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தாள்...கண்ணன் ஒரு கை குழந்தை

கண்கள் சொல்லும் பூங்கவிதை

கன்னம் சிந்தும் தேனமுதை

கொண்டு செல்லும் என் மனதைஉன் மடியில் நானுறங்க

கண்ணிரெண்டும் தான் மயங்க

என்ன தவம் செய்தேனோ

என்னவென்று சொல்வேனோ...

அவளுடன் இணைந்து அவனும் பாட ஆரம்பித்தான்....

ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும்

சொந்தமிந்த சொந்தமம்மா

வாழ்விருக்கும் நாள் வரைக்கும்

தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா...
 
Need a gift idea? How about a breakfast sandwich maker?
Buy it!