அத்தியாயம் - 20

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,652
1,596
113
அத்தியாயம் -20

கடற்கரையில் அமர்ந்திருந்த தாயும், மகனும் அவரவர் யோசனையில் மூழ்கியபடி அமர்ந்திருந்தனர்.

அலைகளையே வெறித்துக் கொண்டு அன்னையிடம் எவ்வாறு சொல்வதென புரியாமல் தவித்துக் கொண்டிருந்தவனை கலைத்தது ரஞ்சித்தின் குரல்.

“என்ன பேசணும் விஸ்வா? சீக்கிரம் பேசி முடிச்சிட்டா வீட்டுக்கு கிளம்பிடலாம். சித்தப்பா போன் பண்றேன்னு சொல்லி இருக்காங்க உனக்கு பொண்ணு பார்க்கிற விஷயமா” என்றார்.

அன்னையை திரும்பி பாராமலே “நானும் அது விஷயமா தான் பேசனும்மா” என்றான்.

அவன் சொன்னதில் சட்டென்று கோபம் தலைக்கேற “அதுதான் அன்னைக்கே பேசி முடிச்சாச்சே. எனக்கு நீ அந்த பெண்ணை கல்யாணம் பண்ணி கொள்வதில் விருப்பம் இல்லை. என்னோட சந்தோஷம் முக்கியம்னு நினைச்சா நான் சொல்கிற பெண்ணை கல்யாணம் பண்ணிக்க” என்றார்.

நீண்ட பெருமூச்சுடன் “அம்மா! ப்ளீஸ்! என்னோட கல்யாணத்தில் உங்க சந்தோஷமோ, என்னோட சந்தோஷமோ முக்கியமில்லை...அவளோட உணர்வுகளுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுக்கனும்” என்றான்.

அவன் சொன்னதில் ஆத்திரமடைந்தவர் “விஸ்வா! நீ ரொம்ப ஓவரா போற! என்னால இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க முடியாது!” என்றார் உறுதியாக.

“அப்போ அன்னைக்கு சம்மதம்னு சொன்னீங்களே அம்மா”.

“அது கோபத்தில் எப்படியோ போய் தொலைன்னு சொன்னேன். அதுக்காக என் பையன் கல்யாண விஷயத்தில் நான் விளையாட மாட்டேன்”.

அவர் பக்கம் திரும்பி அமர்ந்து கைகளை பிடித்துக் கொண்டு “அம்மா! நான் சொல்லப் போறதை தயவு செஞ்சு கோபப்படாம கேளுங்க” என்றான்.

‘என்ன சொல்ல வரியோ அதை சொல்லி முடி!’ என்கிற பாவனையில் அமர்ந்திருந்தார்.

அலைகளின் பக்கம் திரும்பி அமர்ந்து கொண்டு நித்தியின் வாழ்க்கையில் நடந்தவைகளை சொல்ல ஆரம்பித்தான்.

ஒரு தாயாக அவன் சொன்னவைகளை கேட்டு மனம் தாளாமல் கண்ணீர் விட ஆரம்பித்தார்.

அவரின் முகம் பார்த்து “இப்ப ஒரு பையனுக்கு அம்மாவா யோசிக்காம...இதை ஒரு பெண்ணா நீங்க எப்படி உணர்வீங்க?” என்றான் கரகரப்புடன் கூடிய குரலில்.

முந்தானையை எடுத்து கண்களை துடைத்துக் கொண்டவர் “பாவம்-டா! தன்னோட கஷ்டத்தை சொல்லி அழக் கூட முடியாம அந்த சின்ன மனசு என்ன பாடுபட்டிருக்கும்” என்றவர் “அதுக்காக என் பிள்ளைக்கு அவளை கட்டி வைக்கிற அளவுக்கு எல்லாம் எனக்கு பரந்த உள்ளம் இல்லை விஸ்வா” என்றார்.

அவர் அப்படி சொன்னதுமே “இது தான்-ம்மா பெண்களோட சாபம். ஒரு பெண்ணா இன்னொரு பெண்ணோட மனசையோ, கஷ்டத்தை பகிர்ந்துக்கவோ, புரிஞ்சுக்கவோ விரும்புறது இல்லை” என்றான்.

அவரோ “ஆமாம்-டா! நாங்க அப்படி தான். நீ உன் வாய் ஜாலத்தால என்கிட்ட சாதிக்கலாம்னு நினைக்காதே” என்றார் கடுமையாக.

அவனோ விடாப்பிடியாக “ஒரே ஒரு நிமிஷம் உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்து இப்படி நடந்திருந்தா...அப்போ நீங்க எப்படி ரியாக்ட் பண்ணுவீங்கன்னு யோசிச்சு பாருங்கம்மா” என்றான்.

அவன் சொன்னதை கேட்டு கண்களை மூடித் திறந்தவர் “எனக்கு தான் பெண்ணில்லையே...அப்புறம் எதுக்கு தேவையில்லாததை யோசிச்சுகிட்டு” என்றார்.

கேலியாக சிரித்தவன் “உங்களுக்கு பிறக்காத பெண்ணை அந்த இடத்தில் நினைச்சு பார்க்கவே யோசிக்கிறீங்க...ஆனா, இந்த மாதிரி சம்பவங்களை பத்தி கேள்விப்படும் போது ஆண் சமுதாயத்தை எல்லோருமா சேர்ந்து திட்டி தீர்ப்பீங்க” என்றான்.

“ஆமாம்! நாங்க அப்படி தான். அதுக்காக என் வீட்டுக்கு வருகிற மருமகளை குறையோட கொண்டு வருகிற அளவுக்கு நான் பெருந்தன்மை உள்ளவள் கிடையாது” என்றார் அழுத்தமாக.

வெறுப்பாக சிரித்து “உங்க வீட்டு பெண்ணுக்கு இப்படியொரு கொடுமை நடந்தா...யாராவது நல்ல பையன் என் பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க மாட்டானான்னு அழுவீங்க...இன்னொரு பொண்ணுக்கு நடக்கும் போது உங்க பையன் அந்த நல்லவனா மாறுவதை மட்டும் எந்த காலத்திலும் விரும்ப மாட்டீங்க” என்றான் கடுப்புடன்.

டென்ஷனானவர் வேகமாக எழுந்து நின்று “விஸ்வா! நான் ஒரு சராசரி தாய் தான். நான் வளர்ந்த சூழ்நிலையில் என்னால சட்டுன்னு என் மனசை மாத்திக்க முடியாது” என்றார்.

அவனும் எழுந்து நின்று “இல்லம்மா! நீங்க சராசரி தாய் இல்ல...எனக்காக என்னோட சந்தோஷத்துக்காக, அநாதையான சுந்தரை உங்க பிள்ளையா நினைச்சு இப்போ வரை ஆதரவு கொடுத்திட்டு இருக்கீங்க. என்னுடைய சிந்தனை, செயல் எல்லாமே உங்களை பார்த்து வந்தது தான்-மா. ஏனோ இந்த விஷயத்தில் கொஞ்சம் பிடிவாதம் பிடிக்கிறீங்க” என்று சரியாக அவரது மனதை படித்தான்.

கண்களை துடைத்துக் கொண்டு “சுந்தரோட கதை வேற, இது வேற விஸ்வா. நான் ஒரு பெண்ணா அவளுக்கு பாவப்பட்டாலும், உனக்கு அம்மா-டா. என் மகனுக்கு நல்லதொரு வாழ்க்கை அமையணும்னு நினைக்கிறது தப்பில்லையே. உனக்கு கல்யாணம் பண்ணி வச்சு நீ சந்தோஷமா இருப்பதை பார்ப்பதில் தான் எனக்கு சந்தோஷம். ஆனா, இந்த பெண்ணை திருமணம் பண்ணிகிட்டா, முதலில் அவ உன்னை மனதார ஏத்துக்கவே டைம் எடுக்கும். அதுக்கு நீ போராடனும், உன்னை அவளுக்கு புரிய வைக்கணும். அவ்வளவு ஈஸியா அவ மனசில் நீ இடம் பிடிக்க முடியாது. ஒரு பெண்ணா அவளோட மன உணர்வுகளை புரிஞ்சவளா சொல்றேன்...அந்த காயம், வடு ஆற நிறைய காலம் எடுக்கும். ஒரு கண்ணாடி பாத்திரத்தை கையாள்வது போல கையாளனும். உன்னை மறந்து ஒரு வார்த்தை வெளிய வந்துட்டாலும், இத்தனை நாள் பட்ட கஷ்டங்கள் அத்தனையும் போயிடும். மறுபடியும் முதலில் இருந்தே தொடங்கணும். இந்த கஷ்டமெல்லாம் வேண்டாம்னு தான் சொல்றேன். அவளுக்கு நாமே வேறொரு பையனை பார்த்து கட்டி வச்சிடலாம்” என்றார்.

பட்டென்று பாய்ந்து அவரின் கைகளை பற்றிக் கொண்டவன் “அம்மா! இதுதான் நீங்க! உங்களை அறியாமலே எவ்வளவு அழகா அவளோட உணர்வுகளை புரிஞ்சு, ஒவ்வொன்னையும் அலசி ஆராய்ந்து சொல்றீங்க...இதே அளவு புரிதலோட உள்ள நானும், நீங்களும் சேர்ந்து அவளுக்கு நல்லதொரு குடும்ப அமைப்பை கொடுக்கலாம்னு சொல்றேன்-மா. நிச்சயமா இப்படியொரு குடும்பம் வெளில கிடைக்க வாய்ப்பே இல்லை. ப்ளீஸ்! மா! ஒத்துக்கோங்க..நிச்சயமா நாங்க நல்லாயிருப்போம்” என்றான்.
 
  • Love
Reactions: Chitra Balaji

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,652
1,596
113
சற்று யோசனையுடன் பார்த்து “ஒன்னே ஒன்னு கேட்கிறேன் விஸ்வா! நீ இந்த திருமணத்தை அவள் பேரில் உள்ள பரிதாபத்தில் பண்ணிக்கிறேன்னு சொன்னா தயவு செஞ்சு விட்டுடு. பரிதாபத்தில் ஏற்படுகிற உறவு நிலைக்காது” என்றார்.

“சத்தியமா இல்ல-ம்மா. நான் மனதார அவளை விரும்பி தான் திருமணம் செஞ்சுக்க கேட்கிறேன்.”

“நான் என்ன சொல்ல வரேன்னா...இப்போ அவசரப்பட்டு ஒரு முடிவெடுத்திட்டு பின்னாடி வருத்தப்பட்டு...உன் வாழ்க்கையும் கெடுத்துகிட்டு அவளோட நிம்மதியும் கெடுக்க கூடாது.”

அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அப்போது தான் உணர்ந்தவன் பாய்ந்து அவரை கட்டிக் கொண்டு “அம்மா! ஓகே சொல்லிட்டீங்களா? தேங்க்ஸ்..மா..நிச்சயமா அவளை வருத்தப்பட வைக்கவே மாட்டேன்” என்றான்.

அவன் கன்னத்தை தட்டிக் கொடுத்து “உன்னை நினைச்சு ரொம்ப பெருமையா இருக்கு விஸ்வா. என் வளர்ப்பு தப்பா போகல. ஆனாலும், அதையும் மீறி என் மனசுல கொஞ்சமே கொஞ்சம் வருத்தம் இருக்கத்தான் செய்யுது. நாளடைவில் அது தானா சரியாகும்னு நம்புறேன்” என்றார்.

அவர் தோள்களில் கையைப் போட்டுக் கொண்டவன் “உங்க மருமக கிட்ட சண்டை போட தயராகுங்கம்மா...செம சண்டைக்காரி...நேத்து ஆபிசில் ஒரு பையனை வெளுத்து வாங்கிட்டாளாம்” என்றவனை பார்த்து “அப்போ இனி உன் உடம்பை தேத்தி அனுப்புற வேலையை கவனிக்கனும். என் மருமக கொடுக்கப் போகிற அடியை வாங்க தயாராகணும் இல்ல” என்றார் கேலியாக.

“ஹாஹா...ஆமாம்மா...கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்கவே சில

பல அடிகளை பரிசா வாங்கனும்ன்னு நினைக்கிறேன்” என்றான்.

அவன் கைகளைப் பற்றி நிறுத்தியவர் “நான் வேணா பேசி பார்க்கட்டுமா?” என்றார்.

“இல்லம்மா...அவ, அண்ணியை தவிர வேற யாரையும் தன்னருகில் விடல. அவங்க மட்டும் தான் பேச முடியும்.”

“உங்க பாட்டிக்கு ஒரு கச்சேரி வைக்கணும் விச்சு. எனக்குத் தெரியாம என் மகனை கவுத்து வச்சிருக்காங்க” என்றார் கடுப்புடன்.

“ஹாஹா..அது நீங்களாச்சு, பாட்டியாச்சு...நான் இனி என் டார்லிங்கை எப்படி எல்லாம் பாடி கவுக்கலாம்னு யோசனை பண்ணனும்” என்றான்.

அவன் பேசியதை கேட்டுக் கொண்டு நடந்தவரின் முகத்தில் சற்று சோகம் படர்ந்திருந்தது. அவர் முற்போக்கு எண்ணங்கள் கொண்டவர் தான். சமுதாயத்தில் மாற்றங்கள் எழ வேண்டும் என்று எண்ணுபவர் தான். ஆனாலும், தன் மகனுக்கு என்று வரும் போது முற்போக்கு எண்ணங்கள் எல்லாம் ஓடி ஒளிந்து கொண்டது. மகனுக்காக, அவனது திருப்திக்காக ஒத்துக் கொண்டாலும், அவரது மனம் சமாதானம் அடையவில்லை. தனது எண்ணம் தப்பு என்று புரிந்தாலும், மனதில் எழும் வருத்தத்தை போக்க முடியவில்லை.’என்னுடைய மன உணர்வுகள் அவளை பாதித்து விடாமல் நடந்துக்கனும். என் மகன் அவளை விருப்பிட்டான். இது அவனுடைய வாழ்க்கை. தன் வாழ்க்கை எப்படி இருக்கனும்ன்னு அவன் தெளிவா இருக்கும் போது, அதுக்கு நான் உதவனுமே தவிர தொல்லையா இருக்க கூடாது!’ என்று முடிவு செய்து கொண்டார். அதன் பிறகு அவர் முகத்தில் ஒருவித சாந்தம் வந்தமர்ந்து கொண்டது.

அதே நேரம் சுந்தர் சிவாவிடம் குதித்துக் கொண்டிருந்தான்.

“என்ன-டா நினைச்சிட்டு இருக்கான் இந்த விஸ்வா. இவனுக்கு பிடிச்சிருக்கு என்பதற்காக அம்மாவை நினைச்சு பார்க்காம அவளை தான் கட்டிக்கனும்னு ஒத்தை காலில் நின்னுட்டு இருக்கான்”.

“விடு சுந்தர்...அவன் யார் பேச்சையும் கேட்கும் நிலையில இல்லை. பைத்தியம் பிடிச்சு கிடக்குறான்” என்றான் வெறுப்பாக.

“நீ பேசு சிவா! நீ சொன்னா கொஞ்சமாவது காது கொடுத்து கேட்பான்”.

அதை கேட்டு முகத்தை சுளித்து “நான் சொன்னதுக்கு தான் என்னை ஒரு வார்த்தை சொல்லிட்டானே சுந்தர். அதுக்கு மேல பேசி என்னையும், என் தங்கச்சியையும் அசிங்கபடுத்திக்க விரும்பல.”

அவனது பதிலில் கோபமடைந்த சுந்தர் “இவ்வளவு தானா-டா நீ! எத்தனை அவமானப்பட்டாலும் துன்பத்திலிருந்து நண்பனை காப்பாத்தனும் அதுதான் உண்மையான நட்பு...அவன் ஒருவார்த்தை சொல்லிட்டா...எப்படியோ போகட்டும்னு விட்டுடுவியா?”

“என்னை என்ன-டா செய்ய சொல்ற?” என்றான் பரிதாபமாக.

அவனோ கடுப்பாகி “என்ன பண்ணுவியோ தெரியாது...அவன் அந்த பெண்ணை கல்யாணம் பண்ணிக்க கூடாது!” என்றான் டென்ஷனுடன்.

அந்நேரம் விஸ்வா வந்தான். “ரீஹர்சல் பண்ணாம என்ன பண்ணிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்?”

அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த சிவா, சட்டென்று அவனது கையை பற்றிக் கொண்டு அங்கிருந்த அறைக்குள் நுழைந்து கதவை சாத்தினான்.

பின்னர் சுவரோரம் கைகளை சாய்ந்து நின்று கைககளை கட்டிக் கொண்டு விஸ்வாவை பார்த்து “சொல்லு” என்றான்.

அவனை புரியாமல் பார்த்து “என்ன சொல்ல சொல்ற?”

“நீ ஒரு விஷயத்தில் உறுதியா இருக்கேன்னா நிச்சயம் அதுக்கு பின்னாடி ஏதாவது ஒரு காரணம் இருக்கும்..அதை தான் சொல்ல சொல்றேன்” என்றான்.

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லடா”

“நம்ம நட்பு உண்மைன்னா சொல்லு விஸ்வா”.

அவன் கேட்டதும் சற்று யோசனையுடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தவன் தனது மொபைலை எடுத்து பார்க்க ஆரம்பித்தான்.

அதை கண்டு எரிச்சலடைந்த சிவா “உனக்கு விருப்பமில்லேன்னா சரி...அதை சொல்லக் கூட முடியாம என்னை தவிர்க்கிற இல்ல” என்று கூறி கதவின் அருகே சென்றான்.

அவனது கைகளைப் பற்றி தனதருகே இழுத்த விஸ்வா மொபைலை அவன் கையில் கொடுத்து பார்க்க சொன்னான்.

ஒன்றும் புரியாமல் “டேய்! நான் என்ன கேட்கிறேன்...நீ என்ன பண்ற” என்றான் கோபத்துடன்.

சோர்வான முகத்துடன் “அதை படி சிவா” என்றான்.

அவனது முகத்தை யோசனையுடன் பார்த்துக் கொண்டே அதிலிருந்த செய்தியை வாசித்தான். அப்போதும் புரியாமல் “இதை ஏன் என்கிட்ட காண்பிக்கிற விஸ்வா?”

“என்ன பிரச்சனைன்னு நீ கேட்ட கேள்விக்கு அதுதான் பதில்” என்றான் கண்களை அழுந்த மூடியபடி.

ஒருநிமிடம் மொபைலையும், விஸ்வாவின் முகத்தையும் மாறி மாறி பார்த்தவனுக்கு அந்த செய்தியை உள்வாங்கவே நேரமெடுத்து. அதை உணர்ந்த பின்போ கண்கள் கலங்கி கண்ணீர் விழுந்து விடுவேனோ என்றது.

பாய்ந்து விஸ்வாவை அணைத்துக் கொண்டு “என்னை மன்னிச்சிடு விச்சு! நான் இப்படியொரு விஷயத்தை எதிர்பார்க்கவே இல்லை. இதை என்கிட்ட காண்பிக்கிறப் போது உன் மனசு என்ன பாடுபடும்னு எனக்கு புரியுது. இத்தனை வருஷம் பழகியும் உன்னை புரிஞ்சுக்காம போயிட்டேனே. ஆனா ஏன் இந்த முடிவு?”என்று கண்ணீர் விட ஆரம்பித்தான்.

அவன் முதுகை வருடிக் கொடுத்து தன்னிடமிருந்து பிரித்தவன் “சிவா! அவளை பார்த்த அந்த நிமிடத்தில் இருந்து நான் விரும்புறேன். எங்களுக்கு கல்யாணம் பேச ஆரம்பிச்ச பிறகு தான் அவளோட பிரச்சனை எனக்கு தெரியும். எப்போ என் மனசுல வந்து உட்கார்ந்திட்டளோ அப்போவே என்னவளாகிட்டா...அவளோட சுக, துக்கங்களில் நான் கூட இருப்பேன். நீ எனக்கு ஒரு சத்தியம் பண்ணிக் கொடு...எந்த காலத்திலேயும் இந்த விஷயம் உன் மனசை விட்டு வெளில போகக் கூடாது. உன் குடும்பத்தில் உள்ளவங்க கிட்ட கூட சொல்லக் கூடாது. என் மனைவியை பரிதாபமாக யாரும் பார்ப்பதை நான் விரும்பவில்லை”.

கண்களை துடைத்துக் கொண்டவன் “நிச்சயமா யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன் விச்சு. இந்த நிமிஷத்திலிருந்து சக்தி எனக்கு எப்படியோ அப்படி தான் நித்யாவும்...உன்னை நினைச்சு எனக்கு பெருமையா இருக்கு விச்சு” என்றவனை இடைமறித்து “வேண்டாம் சிவா! அந்த வார்த்தையை சொல்லாதே...நான் தியாகம் எல்லாம் பண்ணல. அவளை மனசார விரும்பி கல்யாணம் பண்ணிக்கிறேன்...பெண்கள் காலம் காலமா செய்றதுக்கு பேர் தான் தியாகம்...கணவன் ஊரெல்லாம் சுற்றி அலைந்து வயது போன காலத்தில் திரும்பி வரும் போது அவனை தூற்றி விரட்டி அடிக்காமல் அவனுக்கு கஞ்சி ஊத்துராங்களே அதுதான் தியாகம்....அதிலும் அவன் தெரிஞ்சே செய்யும் தப்பை ஏற்றுக் கொண்டு அவனை மன்னிகிறாங்க பாரு அது தியாகம்” என்றான் உணர்ச்சிவசப்பட்ட குரலில்.
 
  • Wow
Reactions: Chitra Balaji

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,652
1,596
113
மீண்டும் பாய்ந்து அவனை அணைத்து விடுவித்தவன் “ரொம்ப சந்தோஷம்-டா விச்சு. இந்த கல்யாணத்தை நித்யாவோட அண்ணனா நானே முன்னாடி நின்னு நடத்தி வைக்கிறேன்” என்றான்.

“ம்ம்...நன்றி சிவா..என்னை புரிஞ்சுகிட்டதுக்கு”

“எல்லோரையும் சமாளிச்சிடலாம்-டா...ஆனா, இந்த கட்டையனை சமாளிக்கிறது தான் பெரிய விஷயம்”.

“ஹாஹா...அவனை அம்மா பார்த்துக்குவாங்க சிவா”.

இருவரும் பேசி சிரித்துக் கொண்டே வெளியே வருவதை பார்த்த சுந்தர் “டேய்! சிவா? என்னடா பேசிட்டியா?” என்றான் பதட்டத்துடன்.

விஸ்வாவை பார்த்து சிரித்துக் கொண்டே “ம்ம்..பேசிட்டேன்-டா...இந்த கல்யாணத்தை முன்னாடி நின்னு நானே நடத்தி வைக்கிறேன்னு சொல்லிட்டேன்” என்று கூறியவனை பார்த்து விழிகள் தெறிக்க முறைத்தவன் “என்ன-டா சொல்ற?” என்றான் சுந்தர்.

அவன் தோளில் கையைப் போட்டு “சுந்தர்! நீ வீட்டுக்குப் போய் அம்மா கிட்ட பேசு” என்றான் விஸ்வா.

அவசரமாக அவன் கையை தட்டிவிட்டு “யார் சொன்னாலும் நான் ஒத்துக்க மாட்டேன். சிவா! துரோகி! அப்படி என்ன சொன்னான் இவன்? நீயும் ஒத்துகிட்டு கல்யாணத்தை முன்னாடி நின்னு நடத்துறேன்னு சொல்ற? அந்த பொண்ணு எங்க அம்மாவுக்கு மருமகளா வருவதை நான் ஒத்துக்க மாட்டேன்” என்றான் அழுத்தமாக.

“ஹாஹா...சுந்தர்! நீ முதல்ல கிளம்பு...வீட்டுக்கு போய் அம்மாவை பாரு...அப்புறம் இந்த கல்யாணத்தை எப்படி நிறுத்தலாம்னு யோசனை பண்ணலாம்” என்று கூறி சுந்தரை அங்கிருந்து கிளப்பி விட்டான்.

அவன் போவதை பார்த்துக் கொண்டிருந்த சிவா “அவனுக்கு உன் மேல பாசம் அதிகம் விச்சு.”

“ம்ம்ம்..அவனுக்கும் ஒரு நல்ல பொண்ணா பார்த்து கட்டி வைக்கணும் சிவா” என்றவனை பார்த்து முறைத்து “நானும் உனக்கு ஒரு பிரெண்ட் தான்-டா. எனக்கு அப்படியே ஒரு பெண்ணை பாரு” என்று கேலியாக பேசி அவனை லேசாக அணைத்து விடுவித்தான்.

“ஹாஹா...அதுகென்னடா! உனக்கும் பார்த்துட்டா போச்சு!” என்றவன் “ரொம்ப நன்றி சிவா...என்னை புரிஞ்சுகிட்டதுக்கு”.

“அதை விடு! தங்கச்சியை எப்படி சமாதானப்படுத்தி சம்மதிக்க வைக்கப் போற?” என்றான் கவலையுடன்.

“அதை அண்ணி பார்த்துக்குவாங்க சிவா...என் கிட்ட வந்த பிறகு தான் கவனமா கையாளனும்” என்றான்.

அவன் கைகளை தட்டிக் கொடுத்து “நல்லாயிருப்ப விச்சு! நீ யார் மனசையும் புண்படுத்த மாட்ட...தங்கச்சியை நிச்சயம் நல்லா பார்த்துக்குவ..எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு”.

“தேங்க்ஸ் சிவா...என்னை மன்னிச்சிடு அன்னைக்கு சக்தியை வச்சு உன்னை தப்பா பேசியதற்கு...அவளை என்னோட தங்கையா தான் பார்க்கிறேன். என்னை புரிஞ்சுக்கோ சிவா” என்றான் பரிதவிப்புடன்.

“அந்த நிமிஷம் தான் கோபப்பட்டேன் விஸ்வா. அது கூட என் நட்பை சந்தேகப்பட்டேன்னு தான். எனக்கு உன்னை பற்றி தெரியும் விச்சு”.

அப்போது அங்கே வாசிம் அவர்கள் இருவரும் சாதரணமாக பேசிக் கொள்வதை பார்த்து அதிசயித்து “என்னங்கடா நடக்குது இங்கே?” என்றான்.

அவனை பார்த்து இருவரும் சிரித்துக் கொண்டே பாட ஆரம்பித்தனர்.

முஸ்தபா முஸ்தபா டோன்ட் வொர்ரி முஸ்தபா

காலம் நம் தோழன் முஸ்தபா

டே பை டே வாழ்க்கைப்பயணம் டே பை டே

மூழ்காத ஷிப்பே பிரெண்ட்ஷிப்பா.....
 
  • Love
Reactions: Chitra Balaji