Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 2 | SudhaRaviNovels

அத்தியாயம் - 2

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
274
268
63
அத்தியாயம் 2

உன்னோடு நான்.. என்னோடு நீ..

திருவான்மியூர் தெரசா ஸ்கேன் சென்டர். இருவரும் உள்ளே சென்றனர்

“இங்க உட்காரு கண்ணம்மா ரிசப்ஷன்ல கேட்டுட்டு வந்துடுறேன்” என்று இனியாவை அமர வைத்துவிட்டு ரிசப்ஷனில் நின்றிருந்த பெண்ணிடம், மேடம் நேம் இனியா அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கேன்” என்றான்

“லாஸ்ட் ஸ்கேன் ரிப்போர்ட் கொண்டு வந்து இருக்கீங்களா சார்”

“ஆமா மேடம்” என்றவாறு தன் கையில் இருந்த ரிப்போர்ட்டை கொடுத்தான்

“ஓகே சார் ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க” என்றாள் அந்த பெண்

“ஓகே! தேங்க் யூ மேடம்” என்று கூறிவிட்டு இனியாவின் அருகில் வந்து அமர்ந்தான்

“என்னாச்சு நிலன்?”

“வெயிட் பண்ண சொன்னாங்கமா”

“ம்ம்..”என்றாள்

“ஏண்டி முகம் வாடி போய் இருக்கு? இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்த என்ன ஆச்சு கண்ணம்மா?”

“எனக்கு பயமா இருக்குடா”

“ஏன்மா ஸ்கேன் எடுக்க பயமா இருக்கா? நீ என்ன சின்ன புள்ளையா??”

“இல்லடா! எனக்கு என்னன்னு தெரியல ரொம்ப பயமா இருக்கு”

“ஒன்னும் இல்லடி பயப்படாதே, நான் கூடவே தானே இருக்கேன், அப்புறம் எதுக்கு பயப்படுற நம்ம பாப்பாவா நல்லபடியா பெத்து எடுப்ப கவலைப்படாதடி” என்றவாறு இனியாவின் கையைப் பிடித்து தன் கைக்குள் வைத்து விரல்களால் மூடினான்

நிலனின் தோளில் சாய்ந்தாள் இனியா

“சார் நீங்க இங்க வெயிட் பண்ணுங்க, மேடம் நீங்க உள்ள போங்க” என்றாள் ரிசப்ஷனில் இருந்த பெண்

“பயப்படாத இனியா தைரியமா போயிட்டு வா” என்றான் நிலன்

தலை அசத்துக் கொண்டே எழுந்து ஸ்கேன் எடுக்கும் அறைக்குள் சென்றாள் இனியா

அங்கிருந்த அசிஸ்டன்ட் உதவி செய்ய, ஸ்கேன் எடுப்பதில் மும்முரமானாள் டாக்டர் சுகன்யா

இன்பாவிடம் “உங்க கூட யார் வந்திருக்காங்கமா”என்று கேட்டார் சுகன்யா

“ஹஸ்பண்ட் வந்திருக்காங்க” என்றாள் இனியா

நிலவை அழைத்து வர சொன்னாள்

“நீங்க எழுந்திருங்க இனியா”

இனியா எழுந்து உடையை சரி செய்தாள்

“மேடம்”

“வாங்க நிலாவ உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க, வயித்துல தண்ணி இல்ல, உடனே கிளம்புங்க” என்று கூறி ரிப்போர்ட்டை ரெடி செய்து கொடுத்தாள்

நிலனுக்கு ஒன்றுமே புரியவில்லை ஸ்கேன் எடுக்க வந்த இடத்தில் இப்படி சொல்லுவாங்கன்னு எதிர்பார்க்கவில்லை கண் கலங்கிய இனியாவை ஆறுதல் படுத்தி அழைத்து வந்து காரில் அமர செய்து காரை ஸ்டார்ட்ச் செய்தான்

வேகமாக அடையார் தருண் மருத்துவமனைக்கு ஓட்டினான்
மருத்துவமனையை அடைந்தனர்

காரில் இருந்து இருவரும் இறங்கி மருத்துவமனைக்குள் சென்றனர்

“டாக்டர் சிவகாமி இருக்காங்களா?” என்று ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம் நிலன் கேட்க

“இருக்காங்க வெயிட் பண்ணுங்க” என்றாள்

“அவசரமா அவங்கள பார்க்கணும்” என்று ஸ்கேன் ரிப்போர்ட்டை கொடுத்தான் நிலன்

“சரி உட்காருங்க, மேடம் கிட்ட குடுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு டாக்டர் அறைக்குள் சென்றாள்

சற்று நேரத்தில் வெளியே வந்த “பெண் டாக்டர் உங்கள கூப்பிடுறாங்க” உள்ள போங்க என்றாள்

“நிலன் எனக்கு ரொம்ப பயமா”

“கண்ணம்மா ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இரு, வா உள்ள போலாம்” என்று இனியாவை டாக்டர் அறைக்குள் அழைத்துச் சென்றான்

“நிலன் வயித்துல சுத்தமா தண்ணியே இல்ல உடனே சிசேரியன் பண்ணி ஆகணும்” என்று கூறியபடியே இனியாவின் பி.பியை செக் செய்தாள்

“மேடம் குழந்தைகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே?” என்று பயந்தபடியே கேட்டான் நிலன்

“இல்ல பயப்பட வேண்டாம், ஆனா உடனே ஆபரேஷன் பண்ணி குழந்தைகளை வெளியே எடுக்கணும் நமக்கு டைம் இல்ல இனியா நீங்க பயப்படாதீங்க தைரியமா இருங்க ஓகே”

தலையசைத்தாள் இனியா பயந்தபடியே


டாக்டர் ரூமில் இருந்து நர்ஸ் இருவரையும் வெளியே அழைத்து வந்தாள்

“சார் இருபதாவது நம்பர் ரூம் குடுத்துருக்காங்க அங்க வெயிட் பண்ணுங்க” என்று ரூமிற்கு செல்ல வழி காட்டினாள்

இருவரும் ரூமிற்குள் சென்றனர்

நிலனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை எந்த முன்னேற்பாடும் இல்ல என்ன பண்ணப் போறோம் தன்னைத் தவிர மனைவி குழந்தைகளை பார்க்க கூட யாருமே இல்ல எப்படி சமாளிக்க போறோம் என்று நினைத்தான் அழுகை வந்தது நிலனுக்கு


“எனக்கு ரொம்ப பயமா இருக்குடா படபடன்னு வருது” என்று அழுதாள் இனியா

அலாதடி கண்ணம்மா ஒன்னும் இல்ல நல்லபடியா நம்ம குழந்தைகளும் நீயும் வெளியே வருவீங்க நான் உங்களுக்காக காத்துட்டே இருப்பேன் என்றான் தழுதழுத்த குறளில்

மனைவியின் நெற்றியில் முத்தமிட்டு கட்டி அணைத்தான்

“நிலன் என்னையும் குழந்தைகளையும் உங்களால் தனியா பார்த்துக்க முடியுமா?”

“பொண்டாட்டி நான் இருக்கேனடி உங்க மூணு பேரையும் நான் பார்த்துப்பேன்”.

“மேடம்” என்று அழைத்துக் கொண்டு நர்ஸ் உள்ளே வந்தாள்

“போலாமா மேடம் உங்கள ரெடி பண்ணனும் டைம் ஆயிடுச்சு என்றாள்

“சரிங்க சிஸ்டர்” என்று எழுந்து நிலனின் கைகளைப் பிடித்து முத்தமிட்டு “நான் போயிட்டு வரேன் புருஷா” என்றாள்

“சரிடி லட்டு! பயப்படாத தைரியமா இரு, உன் கூடவே தான் நான் இருக்கேன்” என்றவாறு வயிற்றில் முத்தமிட்டான்

இனியாவை ஆபரேஷன் தியேட்டருக்குள் அழைத்துச் சென்றாள் நர்ஸ்

தன் போனை எடுத்து அம்மாவிற்கு கால் செய்தான் நிலன். விஷயத்தை கூறினான் அம்மா டிக்கெட் போடுறேன்மா அண்ணாவை கூட்டிட்டு வாங்க அம்மா என்றான்”.

“உடனே என்னால எல்லாம் வர முடியாது. எனக்கு உடம்புக்கு வேற முடியல, நீயே பார்த்துக்கோ யாரும் வேண்டாம் என்று தானே நீ அவளை கல்யாணம் பண்ணிக்கிட்ட நீயே பார்த்துக்கோ என்றாள் நிலனின் தாய்

நிலனுக்கு அழுகை வந்தது தைரியத்தை வரவழைத்துக் கொண்டான்

ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியில் வந்து நின்றான் நிலன்

தனது கைபேசி சிணுங்கியது

பார்த்தான் அட்டன் செய்து “ஹலோ சொல்லுடா” என்றான்

“ஏண்டா டல்லா பேசுற” என்றான் நிலனின் நண்பன் பிரசாத்

“ஒன்னும் இல்லடா, இனியாவுக்கு ஆபரேஷன் நடக்குது” என்றான்

“டேய் ஒரு வார்த்தை சொல்ல மாட்டியாடா? நீ எல்லாம் மனுசனாடா? இரு உடனே வரேன் போன வை” என்று போனை கட் செய்து விட்டு தருண் மருத்துவமனைக்கு விரைந்தான்

நிலன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தான் பின்பு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான் உடனே எழுந்தான் அங்கும் இங்குமாய் நடந்தான் நிலனுக்கு கால்கள் நடுங்கியது மனம் பதைபதைத்தது கண்கள் கலங்கியது மனதெல்லாம் பாரமாகியது இரு கை கூப்பி கடவுளே என் குழந்தைகளையும் என் மனைவியையும் நல்லபடியா என்கிட்ட கொடுத்துடு என்று மனதில் வேண்டிக் கொண்டான்

ஆப்ரேஷன் தியேட்டரில் இருந்து ஒரு நர்ஸ் வெளியே வந்தாள்

தொடரும்…

நித்யா மது