Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 2 | SudhaRaviNovels

அத்தியாயம் - 2

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
206
169
43
அத்தியாயம் – 2

சீப் செகரெட்டரி மாதவ்ராவின் முன்பு அமர்ந்திருந்தான் சிவதாஸ். இந்த மாநிலத்திற்கு அவன் எவ்வாறு தேவைப்படுகிறான் என்பதை எடுத்துக் கூறி விரைந்து டியுட்டியில் ஜாயின் செய்யும் படி கூறி வாழ்த்தினார்.

அவரிடம் விடைப் பெற்றுக் கொண்டு கிளம்பியவன் தனது அலுவலகத்திற்குள் நுழைந்தான். அவனைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டதால் மற்ற ஆபிசர்கள் அனைவரும் அவனுக்கு முன்னதாகவே வந்து காத்திருந்தனர்.

தனது இருக்கையில் அமர்ந்தவன் மடமடவென்று வேலையை ஆரம்பித்தான். அனைவரையும் அழைத்து உடனடியாக ஒரு மீட்டிங் போட வேண்டும் என்று சொல்லி அனைவரையும் கான்பாரன்ஸ் ரூமில் காத்திருக்கும் படி கூறி விட்டு, நகரத்தின் முக்கியமான ரவுடிகளைப் பற்றி குறிப்பெடுத்துக் கொண்டு மீட்டிங் ஹாலிற்கு சென்றான். அங்கு அவனுக்காக அனைவரும் காத்திருந்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த கூட்டத்தில் நகரத்தின், மாநிலத்தின் ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் அக்குவேறு ஆணிவேராக பிரித்து அங்கிருக்கும் நிலைமையை மு வைத்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துரைத்தான்.

அவனது ஆராய்ச்சியைக் கண்டு உள்ளுக்குள் அனைவருக்கும் கிலியானது. நிச்சயமாக அவன் அனைவரையும் பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பான் என்பதை புரிந்து கொண்டார்கள். யார் யாருக்கு என்னென்ன ஆப்பு வரப் போகிறதோ என்கிற பயம் எழுந்தது.

மீட்டிங்கை முடித்துக் கொண்டு கிளம்பியவன் பிரதீபை தனது அறைக்கு வர சொல்லிவிட்டு விறுவிறுவென்று அங்கிருந்து வெளியேறினான்.

அறைக்குள் சென்ற சிவதாஸின் முன்பு “எங்கள் குரல்” இயக்கத்தின் பைல் இருந்தது. அவனுக்கு தெரியும் எதை முன்னே எடுக்க வேண்டும் எதை பின்னே பார்க்க வேண்டும் என்று. மீட்டிங்கில் அவன் எங்கள் குரல் இயக்கத்தைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. நகரத்தில் இருக்கும் முக்கியமான ரவுடி ராஜியங்களைப் பற்றி மட்டுமே பேசி அவர்களை எப்படி மடக்க வேண்டும் என்பதை கூறினான்.

இங்கு அவனது அலுவலகத்தில் அவன் பேசும் விஷயங்கள் கூட ஒவ்வொன்றும் இங்கிருப்பவர்கள் மூலியமாக யாருக்கு போக வேண்டுமோ அவர்களுக்கு போய் சேரும் இடத்தை இத்தனை வருட அனுபவத்தில் உணர்ந்திருக்கிறான்.

இங்கு வரும் முன்பே இங்கிருக்கும் அனைவரையும் பற்றியும் விசாரித்திருந்தான். அதனால் தான் பிரதீப் மிக நேர்மையானவன் என்றும் அறிந்து வைத்திருந்தான். இந்த இயக்கத்தின் செயல்பாடுகளை கவனிக்க அவன் தேவைப்படுவான் என்பதால் அழைத்திருந்தான்.

“குட் மார்னிங் சார்”.

“குட் மார்னிங் பிரதீப்” என்றவன் வேறு எதுவும் பேசாது எங்கள் குரல் இயக்கத்தின் பைலை அவன் முன்னே நகர்த்தினான்.

அதை பார்த்ததும் முகத்தில் எந்த உணர்வையும் காண்பிக்காது சிவதாசை பார்த்தான்.
அவனையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த தாஸ் மனதிற்குள் பாராட்டிக் கொண்டே “ஜஸ்ட் ரீட் திஸ் பைல். இங்கேயே உட்கார்ந்து படிங்க” என்று அங்கிருந்த ஒரு நாற்காலியை காண்பித்தான்.
தாஸின் மேஜைக்கு சற்று தள்ளி ஒரு காஷ்மிரி தட்டி இருக்க, அதன் பின்னே இரு இருக்கைகளை இருந்தது. அங்கே அமர்ந்து படிக்கும்படி தான் கூறினான்.

மேற்கொண்டு எதுவும் பேசாது அந்த பைலை எடுத்துக் கொண்டு அங்கே சென்றமர்ந்து படிக்க ஆரம்பித்தான். தாசின் அறைக்குள் வருபவர்களின் கண்களில் தட்டியின் பின்னே இருப்பவர்களை பார்க்க முடியாது. எக்காரணம் கொண்டும் எங்கள் குரல் இயக்கத்தைப் பற்றி தான் எடுக்கப் போகும் முடிவுகளை எவரும் அறிந்து கொள்ள கூடாது என்பதில் உறுதியாக இருந்தான் தாஸ்.

அதே நேரம் எங்கள் குரல் இயக்கத்தின் குழுவினர் எண்ணூரில் இருந்த வீட்டில் குழுமி இருந்தனர். சிவதாஸின் வரவை பற்றியதாக இருந்தது அந்த கூட்டத்தின் பேச்சு. அன்றைய மீட்டிங்கில் அவன் தங்களைப் பற்றி பேசவில்லை என்கிற தகவல் வந்து சேர்ந்திருந்தது.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
206
169
43
ஒரு ஓரமாக நாற்காலியில் அமர்ந்திருந்த சஞ்சலா “அவன் நமக்கு தெரியாம காய் நகர்த்த ஆரம்பிச்சிருப்பான். அவனைப் பற்றி விசாரித்ததில் குற்றவாளிகளை அவன் அணுகும் விதம் வேற மாதிரி இருக்கும்” என்றாள் அலட்சியமாக.

இயக்கத்தின் தலைவன் குணாளன் அவள் சொல்வதை ஆதரிப்பது போல தலையசைத்து “ம்ம்...சஞ்சலா சொல்வது உண்மை தான். மற்ற ஆபிசர்கள் போல இல்லாது இவனோட ஸ்டைலே வேற மாதிரி இருக்கும். அதிலும் குற்றவாளிகளை இவன் நடத்தும் விதம் கொடூரமானதா இருக்கும். சோ கொஞ்ச நாளைக்கு நம்ம ஆட்கள் கவனமா இருக்கணும்”.

அப்போது எழுந்து நின்ற பார்த்திபன் “நாம மீட் பண்றதும் வேண்டாம். நம்மோட அமைதி அவனை குழப்பனும். எந்த வகையிலும் நம்மை அவன் நெருங்க விடக் கூடாது. முக்கியமா இந்த சஞ்சலாவை அடக்கி வைங்க. இவ தான் அவசரப்பட்டு ஏதாவது செய்து வைப்பா” என்றான் அவளை பார்த்தபடி.

பட்டென்று நாற்காலியை தள்ளி விட்டு எழுந்து நின்ற சஞ்சலா “லுக் பார்த்தி! பேசும் முன் பார்த்து பேசு. நான் ஒரு காரியத்தில் இறங்கினா அதில் வெற்றியடையாம விட மாட்டேன். அது இங்கே உள்ள எல்லோருக்கும் தெரியும்”.

குணா இருவரையும் பார்த்து “அமைதியா இருங்க! நமக்குள்ள எந்த பிரச்னையும் வரக் கூடாது. அது நம்ம கொள்கையை பாதிக்கும். இப்போதைக்கு நம்முடைய நோக்கம் இந்த சிவதாசை தீர்த்து கட்டனும் என்பது தான்”.

கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்தவள் “அதை நான் முடிச்சு காட்டுறேன்” என்றாள் திமிராக.

அதைப் பார்த்து கடுப்பான பார்த்திபன் “அவனுக்கு பெண்கள் மேல ஈடுபாடெல்லாம் கிடையாது. சோ உன் பாச்சா பலிக்காது” என்றான் கிண்டலாக.

அவனை பார்த்து கிண்டலாக சிரித்தவள் “இந்த கிண்டலுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன். அவனை முடிச்சிட்டு சொல்றேன்” என்றாள்.

“சஞ்சலா! நான் சொல்கிற வரை எதுவும் முயற்சி பண்ணாதே. அது நம்ம இயக்கத்திற்கு கெடுதலாக முடியும்”.

சிவதாஸின் முன்பு அமர்ந்திருந்த பிரதீப்பிடம் தன் கையிலிருந்த ஒரு போட்டோவை அவன் முன்னே போட்டான்.

“எனக்கு இவ வேணும். ஒன் வீக் டைம். உங்க டீமில் ரஞ்சன், அப்துல், சுபேஷ் அண்ட் பிரதீப். என்ன செய்வீங்களோ தெரியாது இவ நம்ம கஸ்டடிக்கு வந்தாகணும்” என்று சஞ்சலாவின் போட்டோவை காண்பித்தான்.

“ஓகே சார்”.

“கால் மீ தாஸ்” என்றவன் “இவ தான் இந்த கூட்டத்தோட பிரைன். அதோட பார்த்தின்னு ஒருத்தனும் இருக்கான். அவனையும் தூக்க முடிஞ்சா தூக்கிடுங்க”.

சிவதாசை யோசனையுடன் பார்த்தவன் “நான் ஒரு சஜஷன் கொடுக்கலாமா?” என்றான்.

“ம்ம்..”

“ஒரு ஒன வீக் டைம் கொடுத்து அவங்களை ப்ரீயா விட்டுட்டு தூக்கினா என்ன?”

தனது சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தவன் சற்றே நிமிர்ந்து “நம்மளுடைய நடவடிக்கை என்னன்னு கவனிக்கிறதுக்கு அவனுங்களுக்கு கிடைக்கும் நேரம் இந்த ஒரு வாரம். அவனுங்க சுதாரிப்பதற்கு முன்னே நாம தூக்கிடனும். பிகாஸ் நம்முடைய ஆபிஸ்ல இருந்தே அடுத்த வாரத்திலிருந்து தகவல் போக ஆரம்பிச்சிடும்” என்றான் கூர்மையான பார்வையுடன்.
“எனக்கென்னவோ கொஞ்ச நாளைக்கு இந்த கும்பல் தலைக்காட்டாதுன்னு தோணுது”.

இதழில் எழுந்த ஏளனமான சிரிப்புடன் “அந்த போட்டோவில் இருக்கிறவ ஒரு ஆர்வ கோளாறு. சோ என்னுடைய கணிப்புப்படி இன்னும் நாலு நாளைக்குள்ள நம்ம கையில சிக்கிடுவா” என்றான்.

அவனது பேச்சில் தெரிந்த உறுதியை கண்ட பிரதீப் நாற்காலியை விட்டு எழுந்து கொண்டு “ஓகே! அப்போ நான் வேலையை ஆரம்பிச்சிடுறேன்” என்று சொல்லி வெளியேறினான்.

அதன்பின்னர் சிவதாசிற்கு வேலைகள் இழுத்துக் கொள்ள, எங்கள் குரலை மறந்து மற்றவற்றை கவனிக்கலானான்.

குணாளனுக்கு கமிஷனர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்தது. அவர்கள் இயக்கத்தைப் பற்றி சிவதாஸ் எதுவும் பேசவில்லை என்று சொன்னார்கள். பார்த்திபன், குணாளன் மற்றும் சஞ்சலா மட்டுமே அங்கிருந்தார்கள்.

தாடையை தேய்த்துக் கொண்டே எழுந்து குறுக்கும் நெடுக்கும் நடந்தவன் “நிச்சயமா வெளியே தெரியாம நம்மள பற்றி தகவல்கள் திரட்ட ஆரம்பிச்சிருப்பான்” என்றான் கவலையாக.

நக்கலாக சிரித்த பார்த்திபன் “அதுல இன்னமும் சந்தேகம் இருக்கா என்ன? அதை தான் பண்ண ஆரம்பிச்சிருப்பான்”.

“அவன் ஆரம்பிக்கட்டும் நாம முடிச்சிடுவோம்” என்றாள் கிண்டலாக.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
206
169
43
அவளை கோபத்தோடு பார்த்த பார்த்திபன் “லூசு மாதிரி பேசாதே சஞ்சலா. நாம இதுவரை பார்த்தவனுங்க மாதிரி இல்ல இவன். அவசரப்பட்டா சேதாரம் நமக்கு தான்” என்றான் கடுமையாக.

குணாலனும் அதை ஆமோதிக்க “நீங்க ரெண்டு பேரும் முன்னாடி இருந்த வீரியத்தோட இல்லேன்னு தோணுது” என்றாள் கிண்டலாக.

அவளது கேலிப் பேச்சில் கடுப்பான குணாளன் “வீரியத்தை விட விவேகம் சிறந்தது சஞ்சலா. அவசரப்பட்டு காரியத்தில் இறங்கி தோற்றுப் போக கூடாது” என்றான் எரிச்சலாக.

அவள் ஏதோ சொல்ல வாயெடுக்கும் முன் குணாளனின் போன் விடாது அழைத்தது. அங்கிருந்த மூவருக்கும் அழைப்பது யார் என்று தெரிந்து போனது. மூவரின் உடலிலும் அதுவரை இருந்த இலகுத்தன்மை மறைந்து ஒரு இறுக்கம் வந்தமர்ந்தது.

“ஜி..”

“சிவதாஸ் வந்தாச்சு போல”

“ஆமாம் ஜி”.

“ம்ம்...ஒரு பத்து நாள் எந்த வேலைகளும் செய்யாம அவனை கவனிங்க. நம்ம ஆட்கள் கிட்ட இருந்து தகவல் வரும் வரை எல்லாவற்றையும் ஆறப் போடுங்க”.

“ஓகே ஜி”.

“முக்கியமா அந்த அமைச்சர் பையன் விவகாரம்”.

“அதுல எல்லாமே முடிச்சாச்சு ஜி. ப்ளான் எக்சிகியூட் பண்ண வேண்டியது தான் பாக்கி”.

“நோ! இப்போ எதையுமே பண்ண வேண்டாம். அதற்கான நேரத்தை நம்ம ஆட்கள் உங்களுக்கு தெரிவிப்பாங்க”.

“ஓகே ஜி” என்றதும் அந்தப் பக்கம் போன் வைக்கப்பட்டது.

சஞ்சலாவோ ஒருவித எரிச்சலுடன் “அவன் என்ன அவ்வளவு பெரிய அப்பாட்டக்காரா? மேலிடமே அவனைக் கண்டு பயப்படுது?” என்றாள் கோபமாக.

கண்டிப்புடன் அவளைப் பார்த்த குணாளன் “அதுக்கு பேர் பயமில்லை சஞ்சலா. எதையும் சரியா செய்யணும். எங்கேயும் யாருக்கும் எந்த நூலிழையும் விட்டுடக் கூடாது. அதிலும் இவன் ஒரு கேசை எடுத்தா அக்குவேறு ஆணிவேரா பிரிச்சு எடுப்பான்”.

ஒருவித சலிப்புடன் “ப்ளீஸ் குணா! போதும் அவன் புராணம். இப்போ நாம என்ன செய்றது?”.

அவளை கிண்டலாக பார்த்த பார்த்திபன் “உன் ரூமை விட்டு வெளியே வராம இரு” என்றான்.
நக்கலான ஒரு பார்வையுடன் “இத்தனை வருட பயணத்தில் நீ இன்னும் என்னைப் பற்றி புரிஞ்சுக்கவே இல்ல பார்த்தி. நான் சுனாமி மாதிரி. எனக்குள் இருக்கும் அமைதியை வைத்து எதையும் கணக்கிட முடியாது. பொங்கி எழுந்தா ஊரையே அழிச்சிட்டு போயிட்டே இருப்பேன்”.

பார்த்தியை கண்டிப்பான பார்வை பார்த்த குணாளன் அவளிடம் திரும்பி “நம்மோட அமைதி தான் இப்போ முக்கியம் சஞ்சலா. மேலிடமும் அதை தான் சொல்றாங்க. அதனால பத்து நாளைக்கு இந்த அமைச்சர் பையன் விஷயத்தையும் தள்ளி வைப்போம். அவனை நம்ம கண்காணிப்பிலேயே வச்சிருப்போம்”.

குணாளன் சொன்னதை ஏற்றுக் கொள்வதை போல தலையசைத்தாலும் அவளது மனம் உள்ளுக்குள் சில கணக்குகளை போட்டுக் கொண்டிருந்தது.
 
Need a gift idea? How about a dinosaur night light?
Buy it!