Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 2 | SudhaRaviNovels

அத்தியாயம் - 2

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
நெருப்பு ரதங்கள் -2

நீ பண்ணிட்டு வந்ததுதான் கரெக்ட் அழகி உணர்ச்சி வசப்பட்டு போலீஸ்க்கு போகாம வெளியே யார்க்கிட்டேயும் சொல்லாம வீடு வந்து சேர்ந்தியே அதுவே நல்ல விஷயம். மடியில் படுத்து கேவிய அவள் முதுகை தடவியபடியே சொன்னான் வாசு.

நல்ல மனுஷன்ங்க அவர் அடிக்கடி பஸ்ஸாண்டில் நிற்கும் போது பார்த்து இருக்கேன். போன பத்துபதினைந்து நாளுக்கு முன்னாடி பஸ்ஸாண்டில் சில பொண்ணுங்களை பொறுக்கிப்பசங்க கிண்டல் பண்ணப்ப கூட இவர்தான் தட்டி கேட்டார் பாவம் யாருன்னே தெரியலை. பயமா இருந்தா கடைக்கு பக்கத்தில் வந்து நில்லும்மா அத்தனை அக்கறையா பேசினார்.

அழகி தயவு செய்து அந்த விஷயத்தில் இருந்து வெளியே வா, ஏற்கனவே காலையிலே இருந்து நீ வெளியே வரலைன்னு அம்மா கத்திகிட்டு இருக்காங்க நல்லவேளை நேத்து பேயறைஞ்சா மாதிரி வீட்டுக்கு வந்ததை அவங்க பார்க்கலை.

கண்ணுக்கு முன்னாடியே ஒரு உயிர் போயிருக்கு. யாரோ ஒருத்தன்னு விட முடியலை. சின்னசின்ன பசங்க வாசு அவங்க கையில் கத்தியும் அறுவாளும் கடவுளே ?! நம்மளால எதையும் மாத்த முடியாது.

வாசு அவளை மேலும் இழுத்து அணைத்துக் கொண்டான். இங்கே பாரு அழகி நாம இப்போ இருக்கிற நிலை உனக்குத் தெரியும். ஒரு கொலை நடந்திருக்கு மனசார அதை தடுக்க முடியலைன்னு நீ கவலைப்படறே ?! ஆனா இப்போ நான்தான் அந்த கொலையைப் பார்த்தேன்னு நீ சொன்னா போலிஸ் நம்மை தொந்தரவு பண்ணிகிட்டே தான் இருப்பாங்க. ஏற்கனவே கல்யாணமாகி இரண்டு மூணு வருஷமா குழந்தையில்லைன்னு பிரச்சனை நடக்குது அம்மாவின் தொணதொணப்பு உனக்கு தெரியும் இப்போ தேவையில்லாத சிக்கலா இதையும் எடுத்து தலையிலே வைச்சிகிட்டா நம்ம நிம்மதி கெட்டுப் போயிடும் அழகி இப்போ வரைக்கும் உனக்கு இது தெரியுன்னு யாருக்கும் தெரியாது இது இப்படியே போகட்டுமே. நடந்ததை மறந்திடும்மா

அவள் தன் கேவல்களை நிறுத்தி கணவனைப் பார்த்தாள்.

இரண்டு நாள் வேலைக்குப் போக வேண்டாம் எழுந்து முகம் கழுவிட்டு வா சூடா காப்பி குடி நாம இரண்டு பேரும் வெளியே போகலாம் வற்புறுத்தி அவளை எழுப்பி முகம் கழுவச் சொல்லிவிட்டு வெளியே வந்தவன்.

என்னடா உன் பொண்டாட்டியை கொஞ்சி முடிச்சிட்டியா இப்படி அவளை தலையிலே தூக்கி வைச்சிட்டு ஆடுனா அவ எங்க என்னை மதிப்பா, ஏற்கனவே வயிறு விளங்கலை எல்லாம் என் தலையிலேதான் வந்து விடியணுமின்னு இருக்கு.

அம்மா கொஞ்ச நேரம் சும்மா இருங்க அவளுக்கு உடம்பு சரியில்லை, ஒருவாய் காப்பி வைச்சித் தரலைன்னாலும் பரவாயில்லை சும்மா தொந்தரவு பண்ணிகிட்டே இருக்காதீங்க.

எல்லாம் நேரம்டா எனக்கு முடியலைன்னு ஒரு நாளாவாது இப்படி கரிசனம் காட்டியிருக்கியா என்று கடிந்து கொள்ள வெறுப்பாய் ஹாலில் இருந்த தொலைக்காட்சியின் வேல்யூமை அதிகரித்தான் வாசு.

அம்பத்தூர் பழைய பஸ்நிறுத்தத்தின் அருகில் உள்ள துணிக்கடையில் பணிபுரியும் நபர் அடையாளம் தெரியாத நபர்களால் நேற்றிரவு சராமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் இறந்தவரின் பெயர் இந்திரன் என்றும் அவர் ஐந்து வருடங்களாக அந்த இடத்தில் துணிக்கடை நடத்திவந்தார் என்று தெரியவந்துள்ளது. இந்திரனுக்கு திருமணமாகி நீண்ட நாளாக குழந்தையில்லாமல் தற்போதுதான் அவரின் மனைவி நான்கு மாதம் கர்ப்பமாக உள்ளதாகவும் கணவரின் உடலின் முன் அவர் அழுதது பார்ப்போரின் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தியது.

இக்கொலைக்கான காரணத்தை ....செய்திகள் ஓடிக்கொண்டிருக்க அதுவரையில் உள் அறையில் படுத்திருந்த அழகி விருட்டென்று வெளியே வந்தாள். டிவியின் திரையில் நேற்று பார்த்த ஆளின் உருவம் இப்போது ரத்தம் உறைந்து சற்று உப்பிப்போய்.... அடித்தொண்டையில் இருந்து ஒரு அலறலுடன் மயங்கிச் சரிந்தாள் அழகி.

பதினைந்து அடுக்கு அழுக்கு அப்பார்ட்மெண்ட் ஒன்றில் சுழல் நாற்காலியில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு கையில் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது மற்றொரு கையில் செல்போன் அதில் மறுமுனையில் யாரிடமோ உற்சாகமாக பேசிக்கொண்டு இருந்தான். சார் பிரச்சனைக்குரிய ஆளை தீர்த்தாச்சு. டிவியிலே பார்த்திருப்பீங்களே பசங்க எல்லாம் கில்லி மாதிரி காரியத்தை முடிச்சிட்டாங்க. விஷயம் அஜய்பையா காதுவரைக்கும் போக வேண்டாம். நமக்குள்ளேயே முடிச்சிக்கலாம் சார். அவர் இழுக்க,

பாய் இப்போ இது அவர் காதுக்குப் போகாம இருக்கலாம் ஆனா எப்போதும் மறைக்க முடியாது உங்களுக்கு நான் நிறைய தடவை சொல்லி இந்த சின்ன விஷயத்தையெல்லாம் அவர்கிட்டே கொண்டு போகக்கூடாது பாய் இந்த பிரச்சனைக்கு காரணமே நீங்க தூக்கி தலையிலே வைச்சிருக்க அந்த பசங்கதான். சின்ன தப்பை கூட அவர் மன்னிக்க மாட்டார் உங்களுக்கே தெரியும் இனியொருமுறை இந்தமாதிரி சிக்கலை கொண்டு வராதீங்க. இதுதான் கடைசி எதிர்முனை எச்சிரித்து போனை வைத்துவிட,

டேய் உங்க விளையாட்டு எத்தனை பெரிய சிக்கலைக் கொண்டு வந்திடுச்சி பார்த்தீங்களா ? இனிமே எச்சரிக்கையா இருங்க. ஏற்கனவே உங்களுக்காக நான் ரொம்ப ரிஸ்க் எடுத்திருக்கேன் இன்னமும் ....

அவர் முடிக்கும் முன்னரே இல்லை ஸார் நான் இனிமே இந்தமாதிரி நடக்காது என்று கோரஸாய் சொன்னார்கள். அவர்கள் சொல்லில் உண்மை சிறிதளவும் இல்லை இதற்கு மேல் இவர்களை இங்கே வைத்திருப்பது சரியானது இல்லை என்பதை புரிந்து கொண்டு போங்கடா போய் சாப்பிடுங்க இன்னும் அரைமணியில் கிளம்பணும் என்று சொல்லி வாகனத்தை தயார் செய்யச்சொன்னார்.

வாகனங்களில் எல்லாரையும் ஆட்டுமந்தையாய் அடைத்து கிளம்பிய வண்டி இறங்கிய இடம் சிறுவர்கள் சீர்த்திருத்தப்பள்ளி என்ற போர்ட் மாட்டிய கேட்டின் முன்னால் நின்றது.

அஜய்யின் ஆட்டம் அடுத்த அத்தியாயத்தில் !