அத்தியாயம் -19

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,582
1,173
113
அத்தியாயம் – 19

இரு பெண்கள் ஓடி வருவதையும், ஒருத்தி உள்ளுக்குள் நின்று கொண்டு மற்றவளை வெளியே தள்ளியதையும், அடுத்தவள் குத்துப்பட்டு விழுவதையும் பார்த்து விட்டு வேகமாக காரிலிருந்து இறங்கி ஓடி வந்தான் ஆதி கேசவன்.

தன் எதிரே தோழி குத்துப்பட்டு விழுவதை கண்டு மயங்கி சரிந்தாள் சக்தி. கேசவன் வந்துவிட்டதை கண்டதும் கருணாவின் ஆட்களில் ஒரு சிலர் கருணாவை சூழ்ந்து கொண்டு பத்திரமாக அங்கிருந்து வெளியேற்றினர். மற்றவர்களோ கேட்டின் குறுக்கே அரணாக மறைத்துக் கொண்டு நின்றனர்.

மயங்கி விழுந்தவளை விட்டுவிட்டு குத்துபட்டவளின் அருகே ஓடி குனிந்து அவளை தூக்கினான். அவளோ வலியில் முகத்தை சுருக்கிக் கொண்டு கேசவனின் முகத்தை பார்த்து “அண்ணா! நீங்க யாருன்னு எனக்கு தெரியாது. உங்களை என் அண்ணனா நினைச்சு கேட்கிறேன். என் சக்தியை பாதுகாப்பா அவ அண்ணன் கிட்ட ஒப்படைக்கணும்” என்று கூறுவதற்குள் மூச்சிரைக்க மனமோ தனது முடிவு நெருங்கி கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தவள் உதட்டை அழுத்தி கடித்துக் கொண்டு “அவங்க அண்ணனை கண்டு பிடிக்க முடியலேன்னா ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை கொ..கொ..” என்று அப்படியே அவனது கரத்திலேயே உயிர் துறந்தாள்.

சரியாக அந்த நேரம் கார்த்திக்கின் ஜீப் அதிக அழுத்தத்தோடு ப்ரேக் போடப்பட்டு நிறுத்தப்பட்டது. பல கொலைகளை சர்வ சாதரணமாக செய்தவனின் உடல் முதன்முதலாக ஒரு பெண்ணின் உடலை கையில் சுமந்தபோது அதுநாள் வரை செய்து வந்த தவறுகள் எல்லாம் கையிலிருப்பது போல கனமாக உணர்ந்தான்.

அதிலும் இறக்கும் தருவாயில் அண்ணா என்றழைத்து கையிலேயே உயிர் துறந்தவளின் முகத்தை பார்த்து முதன்முறையாக மரித்து போனான். ஒரு உயிரின் வலி இது தானோ? எவருமே உரிமையாக உறவு சொல்லி அழைக்காமல் வாழ்ந்தவனுக்கு அவளது அழைப்பு நெஞ்சில் ஆணியடித்தது போலிருந்தது.

அவனருகே சென்ற கார்த்தி குத்துபட்டவளை கையில் வைத்துக் கொண்டு திகைத்து போய் அமர்ந்திருப்பவனின் தோளில் அழுத்தமாக கையை வைக்க, மெல்ல நிமிர்ந்தவனின் பார்வையில் இருந்த வலியை கண்டு அதிர்ந்தான். எதற்காகவும் கலங்காத கேசவனின் கண்களில் வலியா? அதுவும் ஒரு பெண்ணுடலை கைகளில் சுமந்து கொண்டு இத்தனை நேரம் நிற்கிறானா? என்று அதிர்ந்து விழித்தவன் “கேசவா!” என்றழைத்தான்.

“ம்ம்..” என்று உதறிக் கொண்டு வேகமாக எழுந்தவன் எதுவும் சொல்லாமல் சென்று அவளின் உடலை காரில் வைத்தான். பின் வேக நடையுடன் வந்து மயங்கி கிடந்தவளை பூ போல அள்ளிச் சென்று பின்னிருக்கையில் படுக்க வைத்துவிட்டு வந்தவன் கேட்டருகே சென்று “கருணா! இப்போ போறேன்! கூடிய சீக்கிரம் வருவேன்” என்று கூறி அதிர்ந்த நடையுடன் சென்று காரில் அமர்ந்தான்.

அவன் ஏறியதுமே கார்த்திக் மற்றும் அவனுடன் வந்த அடியாட்களும் அவர்கள் வந்த காரில் ஓடிச் சென்று ஏறிக் கொள்ள, ஈசிஆர் நோக்கி பறந்தது. போகும் போதே டாக்டருக்கு அழைத்து உடனே அங்கு வரும்படி அழைப்பு விடுத்து விட்டு சிந்தனையுடன் அமர்ந்திருந்தான்.

தன் கையில் இறந்தவளைப் பற்றி முழுமையாக அவனுக்கு தெரியும். தன் கையால் இறந்து போனவனின் காதலியும், தங்கையுமே இவர்கள் என்பதை அவன் அறிவான். தன்னால் ஒரு குடும்பமே சிதைக்கப்பட்டிருப்பதை முதன்முறையாக அறிந்து கொண்டவனுக்கு தலை வலித்தது. தன்னிடமே அவளின் பொறுப்பை விட்டுச் சென்றதை என்னவென்று சொல்ல?

அதே நேரம் அமைச்சரிடம் இருந்து அழைப்பு வர, “சொல்லுங்க” என்றான் எரிச்சலான குரலில்.

“தூத்துக்குடி போகாம இங்கே என்ன பண்ற கேசவா? சரக்கு எல்லாம் இன்னைக்கே அனுப்பியாகனும். நீ அங்க இருக்காம இங்கே என்ன பண்ற?” என்றார் எரிச்சலாக.

“உங்க சரக்கு சரியான நேரத்துக்கு கிளம்பிடும். நான் என்ன பண்ணனும் பண்ண கூடாதுன்னு சொல்ல எவனுக்கு அதிகாரமில்ல” என்றவன் போனை ஆப் செய்து டாஷ் போர்டில் தூக்கி எறிந்தான். ஒருத்தி மூச்சுக்காற்றை துறந்து உயிர் துறந்தாள் என்றாள், மற்றவளோ வரிசையாக நடந்து கொண்டிருக்கும் அவலத்தை கண்டு நினைவுகளை துறந்து உயிற்றவள் போல கிடந்தாள்.

மெல்ல தலையை திருப்பி பின் சீட்டில் கிடந்தவளை பார்த்தவனின் கண்களில் அவளது சிகப்பு மூக்குத்தி பட்டது. கண் மூடி கிடந்தவளின் முகம் கள்ளம் கபடமற்று இருந்தது. இதுவரை வாழ்வில் இது போன்ற சம்பவங்களை பற்றி அறிந்திராதவள், தனது தோழியின் மரணத்தில் அதிர்ந்து போயிருந்தாள்.

இதுவரை இல்லாத வகையில் மிகுந்த மன உளைச்சலுடன் ஈசிஆர் பங்களாவிற்குள் நுழைந்தவன், முதலில் சக்தியை தூக்கிச் சென்று கீழே இருந்த ஒரு அறைக்குள் படுக்க வைத்துவிட்டு வந்தான்.

கார்த்திக்கும் வந்துவிட, சற்று நேரம் அவனிடம் கூட பேசாமல் அமைதியாக அங்குமிங்கும் நடந்தபடி யோசனையில் மூழ்கி இருந்தான். எதுவும் பேசாமல் கைகளை கட்டியபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்த கார்த்தி “கேசவா! கார்ல பாடி இருக்கு. என்ன பண்ணனும்?” என்றான் பொறுக்க முடியாமல்.

அவன் கேட்டதும் நின்று ஒரு நிமிடம் கண்களை மூடி யோசித்தவன் “தோட்டக்காரனை கூப்பிட்டு பின்னாடி குழி தோண்ட சொல்லு புதைச்சிடுவோம்” என்றான்.

அவனையே ஆழ்ந்து பார்த்த கார்த்திக் “நீ இன்னைக்கு நடந்துகிறது எனக்கு புதுசா இருக்கு கேசவா. இந்த பெண்ணை இங்கே புதைப்பதால நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்” என்றான் கோபமாக.

“எவனுக்கும் என் மேல கை வைக்க தைரியம் வராது கார்த்தி. அப்படி வந்தா பார்த்துக்கலாம். நீ ஏற்பாடு பண்ணு” என்று கூறி விட்டு சோபாவில் அமர்ந்து விட்டான்.

அவன் சொல்வது பிடிக்கவில்லை என்றாலும் அதை நிறைவேற்ற அங்கிருந்து வெளியேறினான் கார்த்திக். அந்நேரம் சரியாக டாக்டர் வந்துவிட, அவரை அழைத்துக் கொண்டு சக்தி படுக்க வைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றான்.

அவர் பரிசோதனை செய்து பார்த்து விட்டு, அதிர்ச்சியில் மயங்கி இருக்கிறாள் என்றும் விழிப்பதற்கு சில மணி நேரங்கள் ஆகலாம் என்று தெரிவித்து விட்டு, லேசாக காய்ச்சல் இருப்பதால் அதற்கான மருந்துகளை கொடுத்துவிட்டு கிளம்பிச் சென்றார்.

அவனது வீட்டில் பெண்கள் என்றுமே இருந்ததில்லை. வாட்ச்மேனில் தொடங்கி தோட்டக்காரன், சமையல்காரன் என்று அனைவருமே ஆண்கள். மருத்துவர் கூறியபடி இரவெல்லாம் விழித்திருந்து மருந்தும், உணவும் கொடுக்க வேண்டும். அதை தாங்கள் செய்ய முடியாது. டாக்டரிடம் ஒரு நர்ஸ் ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று கேட்டும் பார்த்தாகி விட்டது. உடனடியாக ஏற்பாடு செய்ய இயலாது என்று கை விரித்து விட்டார்.

யோசனையுடன் சோபாவில் சென்றமர்ந்தவன் இதற்கு என்ன வழி என்று யோசிக்க ஆரம்பித்தான். சற்று நேரத்தில் கார்த்திக் வந்துவிட, சிந்தனையுடன் அமர்ந்திருக்கும் நண்பனை கண்டு “என்ன கேசவா? அந்த பொண்ணு நல்லா இருக்கு தானே?” என்றான் கேள்வியாக.

“ம்ம்...நான் சொன்னதை நீ முடிச்சியா?”

“முடிச்சாச்சு கேசவா! சின்ன பொண்ணு! இந்த கருணா மனுஷனே இல்ல” என்றான் வெறுப்பாக.

“நாம மட்டும் என்ன?” என்றான் வெறுப்பாக.

அவன் அருகே குனிந்து அமர்ந்தவன் “என்ன பிரச்சனை கேசவா? அமைச்சர் எதுவும்..?”

“ம்ச்! இல்ல கார்த்தி! உள்ளே இருக்கில்ல அந்த பொண்ணுக்கு ராத்திரி எல்லாம் மருந்து கொடுக்கணுமாம், சாப்பாடு கொடுக்கணுமாம். நாம எப்படி கொடுக்கிறது?” என்றான் எரிச்சலாக.

அவனது பதிலில் அதிர்ச்சியுடன் எழுந்து கொண்ட கார்த்தி “கேசவா! இதுக்கா இவ்வளவு யோசிச்ச?”.

எதுவும் பேசாமல் அமைதியாக அவனை பார்க்க, “நம்ம தோட்டக்காரன் பொண்டாட்டியை அழைச்சிட்டு வர சொல்லி கொடுக்க சொல்லுவோம் விடு” என்றான் கார்த்திக் சமாதானமாக.

“ம்ம்ம்..” என்று உறுமலாக சொல்லிவிட்டு அங்கிருந்து பின்பக்கம் சென்றான்.

அப்போது தான் தோண்டப்பட்டு, தேனுவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் மண் போட்டு நன்றாக மூடி அதன் மீது ஒரு ரோஜா செடி நட்டு வைக்கப்பட்டது. குனிந்து அதன் அருகே அமர்ந்தவன் மெல்ல அந்த இடத்தை தொட்டு பார்த்து “நான் யார்ன்னு தெரிஞ்சிருந்தா உன்னோட தோழியை என்னிடம் விட்டுட்டு போயிருப்பியா? என்னை எல்லோரும் பொறம்போக்கு, பொருக்கிபயன்னு சொல்லி தான் கேட்டிருக்கேன். இதுவரைக்கும் யாரும் அண்ணான்னு கூப்பிட்டதில்ல. அந்த ஒத்த வார்த்தையால என்னை அசைச்சு பார்த்திருக்கம்மா. நீ உயிரோட இருந்திருந்தா அந்த வார்த்தை சொல்லி என்னை நிச்சயமா கூப்பிட்டிருக்க மாட்ட. எல்லோர் மாதிரியும் தான் திட்டி இருப்ப. அந்த வார்த்தையில் திட்டி இருந்தா கூட எனக்கு வலிச்சிருக்காது. இப்படியொரு வார்த்தையை சொல்லி என்னை காலம் முழுக்க வேதனைப்பட வச்சிட்ட” என்று கூறி வேகமாக எழுந்து சென்று கடல் அலையை நோக்கி ஓடினான்.

அவனது மனதின் வெம்மை தீர்க்க, அது தேவையாக இருந்தது. அவன் பின்னோடு வந்து நின்ற கார்த்திக்கின் மனம் கேசவனின் சிந்தனை போகும் பாதையை பற்றி யோசித்தது. அவனுக்கும் அந்த உணர்வுகள் எல்ல்லாம் தெரியும் தான். ஆனால் கேசவனிடம் இதை முற்றிலும் எதிர்பார்க்கவில்ல்லை.

அமைதியாக அலைகளோடு போட்டி போட்டிக் கொண்டு நீந்தி விளையாடுவதை பார்த்தபடியே மணலில் அமர்ந்தான். நண்பன் வந்து அமர்ந்திருப்பதை பார்த்ததும் சற்று நேரம் நீந்தி விட்டு அவன் அருகே வந்தமர்ந்தான் கேசவன்.

அவனே பேசட்டும் என்று கார்த்தி அமைதியாக காத்திருந்தான்.

“உனக்கு நினைவிருக்கா கார்த்தி. நாம ஒரு தடவை சாப்பாடு கிடைக்காம ஒரு கிழவி கடையில் திருடினப்ப, அங்கிருந்த ஜனங்க எல்லாம் நம்மள என்னென்ன சொல்லி திட்டினாங்க. ஒருத்தருக்கு கூட நம்ம பசி புரியல. அனாதையாவும் படைச்சு பசியையும் கொடுத்தது அவன் தப்பில்லையா?”.

“ம்ம்..”

“நாம இந்த வழியை விரும்பி ஏற்கலையே. ஓட ஓட துரத்தி இறுதியில் இங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்காங்க”.

“எதுக்கு இதெல்லாம் பேசுற?”

வெறுமையை சுமந்த விழிகளுடன் “என்னவோ தெரியல பழசெல்லாம் நினைவுக்கு வருது”.

அந்நேரம் சரியாக கார்த்திக்கின் மொபைல் அழைக்க “சொல்லு! ம்ம்...வருவார்” என்று கூறி போனை வைத்தான்.

“கணேசனா?”

“ம்ம்...ரிச்சி வருகிற கப்பல் ராத்திரி வந்துடும். நீ அங்கே இருக்கணும்னு எதிர்பார்க்கிறான்”.

“சரி! நீ சொன்ன மாதிரி தோட்டக்காரன் பொண்டாட்டியை வச்சு அந்த பொண்ணை பார்த்துக்கோ. கருணா வாலாட்ட முயற்சி பண்ணுவான்.கவனம்!” என்று எழுந்தவன் ஈர உடைகள் காய்ந்திருக்க, விறுவிறுவென்று நடந்து வீட்டிற்குள் நுழைந்தான்.

அந்த நேரம் சக்தி படுத்திருந்த அறையிலிருந்து முனகல் சப்தம் கேட்க, அவசரமாக அவளது அறைக்குள் நுழைந்திருந்தான். அங்கு அவன் கண்ட காட்சியில் திகைத்து நின்று விட்டான். உடல் தூக்கி போட, உதடுகள் “தேனு! தேனுவ...கத்தி...குத்தி” என்று கதற ஆரம்பித்திருந்தாள்.

கத்தி, ரத்தம், உடல் சிதைவது எல்லாம் அவனுக்கு புதிதல்ல. ஆனால் இது புதிது!

அவனது மூளை வேலை செய்ய மறந்து திகைத்து விழித்தது. ஒரு கட்டத்திற்கு மேல் அவளின் உடல் முறுக்கிக் கொள்ள ஆரம்பிக்க, தன்னை சுதாரித்துக் கொண்டவன் வேகமாக சென்று போர்வையை எடுத்து நன்றாக உடலில் சுற்றினான். இரு பக்கமும் அரவணைப்பாக தலையணை வைத்து இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.

போர்வையின் கதகதப்பிலும், தலையணையின் அரவணைப்பிலும் சற்றே ஆறுதலடைந்து மெல்ல ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள். அதற்குள் கேசவனுக்கு வியர்த்து வழிந்தது. கார்த்திக்கும் வந்திருந்தான். அவள் நன்றாக உறங்குகிறாள் என்று தெரிந்தே பிறகே வெளியேறினர் இருவர்.

கேசவன் செல்ல வேண்டிய நேரம் நெருங்கி கொண்டே இருந்தது. ஆனால் அவன் கிளம்பாமல் பலத்த யோசனையுடனே நின்றான். கார்த்தி டென்ஷனாகி “நீ கிளம்பலையா கேசவா?” என்றான்.

“இல்ல! எனக்கு பதிலா நீ போ. நான் இங்கே இருக்கணும்” என்றான் உறுதியாக.

இதை சற்றும் எதிர்பார்க்காத கார்த்தி “என்ன சொல்றேன்னு புரிஞ்சுது தான் சொல்றியா?” என்றான் கடுப்பாகி.

“நான் சொல்றதை கேளு கார்த்தி. இந்த தடவை நீ தான் போற ரிச்சியை பார்த்து முடிச்சிட்டு வர” என்றான் அழுத்தமாக.

“உன்னை தவிர யாரையும் ரிச்சி ஒத்துக்க மாட்டான்”.

“அதை நான் பார்த்துக்கிறேன் நீ கிளம்பு” என்றதோடு பேச்சு முடிந்து விட்டது என்பது போல நின்றான்.

அப்போது தோட்டக்காரன் அவன் மனைவியை அழைத்து வந்திருக்க, இருவரும் அவனிடம் பேசச் சென்றார்கள். சக்திக்கு வேண்டியதை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு அவளுக்கு கொடுக்க வேண்டிய மாத்திரைகளை எல்லாம் எடுத்து கொடுத்த பின் தான் ஆசுவாசம் அடைந்தான் கேசவன்.

“இப்போ நீ போகலாம் இல்ல” என்றான் கார்த்தி விடாக்கண்டனாக.

சட்டென்று “என்ன எதிர்பார்க்கிற கார்த்தி என்னிடம்? இந்த பொண்ணுங்களுக்கு நான் பண்றது பரிகாரம்னோ இல்ல தவறுக்கு தண்டனைன்னு நினைசெல்லாம் இதை செய்யல. செத்தவ அண்ணன்னு கூப்பிட்டு இவளுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை கொடுக்கணும்னு சொல்லிட்டு போயிட்டா. இவளோ ஒரு காலத்துல நான் வாழணும்னு ஆசைப்பட்ட வாழ்க்கையில் என் மனைவியை எப்படி கற்பனை செய்திருந்தேனோ அப்படி இருக்கா. மொத்தத்தில் இவங்க ரெண்டு பேரும் என்னை ரொம்பவே தொல்லை பண்றாங்க” என்று தன் மனதில் இருப்பதை போட்டுடைத்தான்.

“கேசவா!”

“பாதுகாப்பு மட்டும் தான்! ஓடிக் கொண்டிருக்கிற என் வாழ்க்கையில் பெண்களுக்கு இடமில்லை கார்த்தி. நீ தைரியமா போயிட்டு வா!”.
 
Jovi

New member
Jan 10, 2019
16
10
3

ஐயோ தேனு
சந்துரு இல்லாமல் அவ இருந்தாலும் இதைவிட வலிதான்
 
  • Love
Reactions: sudharavi

Chitra Balaji

Member
Feb 5, 2020
52
31
18
Super Super Super maa.... Very very emotional episode..... Thenu இறந்து poitaala.... அண்ணா nu vera sollita... Avanuku எப்படி react panrathune theriyala.... Shakthi ah avan kita oppadichittu poita... அவன் வீடு thottathula ye avala pothachitaan.... Karthik ku இஷ்டம் pirachanai varum nu.... யாரு ரிச்சி.... Avanuku என்ன
 
  • Love
Reactions: sudharavi

bselva

Active member
Sep 19, 2018
131
28
28
ப்ச் பாவம் தேனு, அவ செத்திருக்க வேண்டாம். என்ன ஒரு நட்பு, சந்துரு சொன்ன மாதிரியே சக்திய காப்பாத்திட்டா தேனு.
இரண்டு பேரும் துரதிர்ஷ்டசாலிகள்.
 
  • Love
Reactions: sudharavi