அத்தியாயம் - 18

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,686
1,503
113
அத்தியாயம் –18

ரம்யா அவனிடம் சிரித்து பேசுவதை கண்டு மேலும் எரிச்சல் ஏற்பட, கடுகடுப்புடன் வாங்கி வந்திருந்த ஜூசை தொண்டைக்குள் கவிழ்த்தாள். அவளது மனநிலைக்கேற்ப அதுவும் கசந்தது.

தான் இவ்வளவு நேரமாக இங்கே அமர்ந்திருப்பதை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் எவனோ புதியவனிடம் இவளுக்கு அப்படியென்ன பேச்சு? என்று கடுப்பு எழுந்து, அங்கிருந்து செல்ல கிளம்பினாள்.

அப்போது விஸ்வாவும் அனைவரிடம் சொல்லிக் கொண்டு வாயிலை நோக்கி நடக்க, கண்கள் தானாக நித்தியின் பக்கம் செல்ல...அவளது முகமே அவளது மனநிலையைக் காட்ட...மெல்லிய புன்சிரிப்புடன் ரம்யாவின் பக்கம் திரும்பி “ஏங்க...இங்கே எதுவும் புகையிற மாதிரி தெரியுதே...உங்களுக்கு தெரியுதா?” என்றான்.

ரம்யாவோ அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் “எனக்கு ஒன்னும் தெரியலையே” என்றாள் வெகுளியாக.

சிரிப்பை மென்றபடி “உங்க பிரெண்டை பாருங்க! அப்படியே வயிறு காந்தி போகுது போல...ஆனா வலிக்காத மாதிரியே நிற்கிறா”.

அவன் சொன்னதை கேட்டு நித்யாவை பார்க்க...சிடுசிடுவென்று இருவரையும் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு “ஹலோ பாஸ்! இந்த ரியாக்ஷன் உங்களுக்குன்னு நினைச்சுக்காதீங்க. அவளுக்கு இருக்கிற ஒரே பிரெண்ட் நான் தான்...அதையும் தட்டிப் பறிக்க வந்துடீங்களேன்னு தான் பார்க்கிறா”.

“உங்க பிரெண்டை விட்டுக் கொடுப்பீங்களா என்ன?”

இருவரும் வழக்கடித்துக் கொண்டு போவதை கொலைவெறியுடன் பார்த்துக் கொண்டே தனது சீட்டிற்கு சென்றாள் நித்யா.

விஸ்வாவை வழியனுப்பி விட்டு தனது வேலையைத் தொடர்ந்தவளின் தோள்களில் ஒரு கை தட்ட, ரம்யாவின் முகத்தை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் நித்யா.

“ஏதோ கோபத்தில் பேசலேன்னா அப்படியே விட்டுடுவியா?”

நித்தியின் முகத்தை பார்த்துக் கொண்டே தனது நாற்காலியில் நன்றாக சாய்ந்தமர்ந்து கொண்டு “வேலை விஷயமா எதுவும் பேசணும்னா சொல்லு நித்யா...வெட்டியா பேச எனக்கு டைம் இல்ல”.

சட்டென்று அவளது பதிலில் முகம் சுருங்கி போக “அன்னைக்கு தெரியாம பேசிட்டேன்...அதுக்காக நீ என்னை இப்படி ஒதுக்கலாமா?”

அவள் பேசும் தொனியே பாவமாக தோன்ற, விஸ்வா சொன்னதை மறந்து பேசிவிடலாமா என்று நினைத்தாலும் அவனுக்கு கொடுத்த வாக்கு நியாபகம் வர, முகத்தை கடுமையாக மாற்றிக் கொண்டு “சாரி நித்தி! உன் இஷ்டத்துக்கு கோவிச்சுகிட்டு போவ..வருவ அதுக்கெல்லாம் என்னால ஆட முடியாது” என்றாள்.

ரம்யாவின் கோபம் அவளை தாக்க “ரம்ஸ்...சாரி-டி”.

“கொஞ்சம் இடத்தை காலி பண்றியா? எனக்கு ஏகப்பட்ட வேலையிருக்கு” என்றாள் கடுமையாக.

கன்னங்களை தாண்டி கண்ணீர் விழுந்து விடுவேனோ என்று பயமுறுத்த மெல்ல தனது இருக்கைக்கு சென்றமர்ந்தாள்.

நித்யாவை அப்படி பார்க்க மனமில்லாமல் கணினியின் பக்கம் திரும்பி அமர்ந்த ரம்யாவின் கண்களிலும் கண்ணீர். மனமோ ‘சாரி-டி..உன் வாழ்க்கை நல்லா அமையணும்ன்ற எண்ணத்தில் தான் இதை பண்றேன்..என்னை மன்னிச்சிடு’ என்று புலம்பிக் கொண்டிருந்தது.

அதன்பின் வேலையில் கவனம் செல்லாமல், நேரத்தை கடத்த வேண்டுமே என்கிற எண்ணத்தில் அமர்ந்திருந்தவள் ஐந்து மணிக்கு சோர்வாக வீட்டிற்கு கிளம்பினாள்.

தனது கோபத்தில் சோர்ந்து செல்லும் தோழியை ஓடிச் சென்று அனைத்து சும்மா தான் சொன்னேன் என்று கூறிவிட மனம் தவித்தது ரம்யாவிற்கு. மனதில் எழுந்த ஆதங்கத்தில் விஸ்வாவின் எண்ணுக்கு அழைத்து “நீங்க சொன்னதை கேட்டு அவளை ரொம்பவே காயப்படுத்திட்டேன்...ரொம்ப பாவமா இருக்கு...என்னை கில்டியா பீல் பண்ண வச்சிட்டீங்க பாஸ்” என்றாள்.

“அவ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கனும்ன்னா வேற வழி இல்லைங்க...கார்னர் பண்ணி தான்ஆகணும்.உங்க உதவிக்கு ரொம்ப நன்றிங்க... இனி, நான் பார்த்துகிறேன்” என்று கூறி அலைபேசியை வைத்தான்.

அடுத்து சுமதிக்கு அழைத்து நித்யா வந்து கொண்டிருப்பதை கூறி “பெரியம்மா அவ அண்ணி இல்லைன்னு தெரிஞ்சவுடனே எப்படி ரியாக்ட் பண்றான்னு மறக்காம சொல்லுங்க” என்றான்.

“சரி விஸ்வா” என்றவர் அன்னையிடம் அவன் சொன்னதைக் கூறினார்.

யோசனையுடன் “நீ எதுவும் பேசிக்காதே சுமதி! அவ என்ன கேட்டாலும் நானே பதில் சொல்லிக்கிறேன்” என்றவர் சுனாமியை எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்தார்.

சுமார் ஒருமணி நேர பயணத்திற்கு பிறகு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். ரம்யாவின் முகத் திருப்பலும், விஸ்வாவை பார்த்ததால் வந்த சோர்வும் மனதை அழுத்த அக்காவின் மடியில் படுத்து ஆறுதல் தேட மனம் விழைந்தது. அவசரமாக செருப்பை கழட்டி போட்டுவிட்டு கண்களை சுழற்றியபடியே “அக்கா!..அக்கா!” என்றழைத்துக் கொண்டு சிவகாமியை கடந்து சென்றாள்.

அவளது முகச் சோர்வை கண்டுகொண்ட சிவகாமியோ ‘பேரன் திருவிளையாடலை ஆரம்பிச்சிட்டான் போலருக்கே’ என்றெண்ணிக் கொண்டு வாயை அழுந்த மூடி அமர்ந்திருந்தார்.

தங்களது அறைக்குச் சென்று அங்கில்லை என்றதும், ஒவ்வொரு இடமாக தேடியவளின் மனதில் படபடப்பு ஏற, ஏதோ ஒன்று மனதிற்கு அதிர்வை கொடுக்கப் போகிறது என்ற எண்ணம் எழத் தொடங்கி இருந்தது. அதே தவிப்புடன் ஹாலிற்கு வந்தவள் பாட்டியை பார்த்து கேட்கலாமா? வேண்டாமா என்கிற குழப்பத்துடன் சற்று நின்றவள்...ஒருவேளை பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு போயிருந்தாலும் இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு செருப்பை மாட்டிக் கொண்டு கிளம்பினாள்.

அதுவரை அவளது நடவடிக்கையை அமைதியாக பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த சிவகாமி “நித்யா! உங்கக்கா கோவிலுக்கு போகல” என்றார்.

அவர் சொன்னதும் அதுவரை இருந்த பரிதவிப்பில் செருப்பை ஒரே உதறாக உதறியவள் பாய்ந்து அவரிடம் வந்து “அக்கா எங்க காணுமே” என்றாள் சிறு குழந்தை போல.

அவரோ சிறிதும் அசராது “சுமதி! இவளுக்கு முறுக்கும் காப்பியும் எடுத்திட்டு வா” என்றார்.

“எனக்கு ஒன்னும் வேண்டாம்...அக்கா எங்க?”

“அடடா! இதென்ன சின்ன குழந்தை மாதிரி...வெளில போயிருக்கா வருவா...சுமதி! மசமசன்னு நிற்காம காப்பியை கொண்டு வந்து கொடு” என்று அதட்டினார்.

அதுவரை இருந்த பொறுமை பறந்து போக “எங்க போயிருக்கா சொல்றீங்களா? என்கிட்ட சொல்லாம எங்கேயும் போக மாட்டாளே” என்றவள் அவசரமாக தனது போனை எடுத்து ரேணுவின் போனிற்கு அழைத்தாள். அது அங்கேயே அடிக்க...”ச்சே..போன எடுத்திட்டு போகாம எங்க போயிருக்கா” என்றவள் பாட்டியின் புறம் திரும்பி “எங்க தான் போயிருக்கான்னு சொல்லுங்க” என்று கத்தினாள்.

அவளை கூர்ந்து பார்த்து “நித்யா! வெளில போனவளுக்கு வீட்டுக்கு வரத் தெரியாதா என்ன? வந்ததும் அவ கிட்டேயே கேட்டுக்க” என்றார்.

அதற்குள் சுமதி முறுக்கும், காப்பியும் எடுத்து வந்து டீப்பாயில் வைக்க, அவளோ அதை திரும்பியும் பாராது பாட்டியை முறைத்துக் கொண்டே இங்குமங்கும் நடக்கத் தொடங்கினாள்.

பாட்டியும் விடாது “சம்பாதிக்கிற உனக்கு உணவு பொருளை வேஸ்ட் பண்ணக் கூடாதுன்னு தெரியாதா? காப்பி ஆறுது பாரு! எடுத்து குடி” என்றார்.

அக்காவை காணாத பதட்டத்தில் இருந்தவள் பாட்டியின் பேச்சில் கடுப்பாகி சுமதி வைத்திருந்த காப்பியை சுட சுட எடுத்து ஒரே மடக்கில் கவிழ்த்துக் கொண்டாள்.

குடித்து முடித்ததும் “போதுமா! இப்போவாவது சொல்லுங்க? எங்கே போயிருக்கா?”

எதிரில் இருந்த தட்டிலிருந்து முறுக்கை உடைத்து வாயில் போட்டுக் கொண்டு “நிரஞ்சனும், அவளும் பெங்களுர் போயிருக்காங்க” என்றார்.

தன் காதில் விழுந்த செய்தி உண்மை தானா என்று புரியவே ஒரு நிமிடம் எடுத்தது.அடுத்த நிமிடம் “என்ன சொல்றீங்க? பெங்களூரா?” என்றவள் பாய்ந்து பாட்டியின் முகத்தை இருகைகளால் பற்றி “நீங்க தானே அனுப்புனீங்க...நீங்க தான்...நீங்க தான் என்னையும் அக்காவையும் பிரிக்கிறீங்க” என்று அழ ஆரம்பித்தாள்..

சுமதிக்கு அவளது அழுகையை கண்டு பயம் வர, கணவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு பயத்துடன் அன்னையை நோக்கினார். சிவகாமியோ தன் மேல் சாய்ந்து அழுபவளின் தோளை தட்டி “நித்தி! என்ன இது! முதல்ல அழுகையை நிறுத்து! அவ பெங்களுர் தானே போயிருக்கா? என்னவோ செத்து போன மாதிரி அழுகுற?” என்றார்.

அதை கேட்டு பதறி போய் எழுந்தவள் எதுவும் பேசாது தனது அறைக்குள் சென்று சுவரோரமாக சாய்ந்தமர்ந்து, முட்டியில் முகம் புதைத்துக் கொண்டாள்.

அவளிடமிருந்து பல கேள்விகளை எதிர்பார்த்திருந்த சுமதி, அவள் பேசாமல் சென்றதும் ஒன்றும் புரியாமல் அன்னையை பார்த்தார்.

மகளிடம் “விஸ்வாவுக்கு போனை போட்டு கொடு” என்றார்.

அவன் போனை எடுத்ததுமே “என்ன ஆச்சு பாட்டி” என்றான் பதட்டமாக.

“நாம நினைச்சது போல தான் விசு...ஆர்பாட்டம் எல்லாம் இல்ல...கேள்வி கூட கேட்கல..எப்போ திரும்பி வருவா? என்ன ஏதுன்னு...அப்படியே மூலையில் ஒதுங்கியாச்சு” என்றார் கவலையாக.

அதை கேட்டவன் “அப்போ ராத்திரி கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க” என்றான்.

“ம்ம்..நானும் அதை தான் நினைச்சேன்...ரொம்ப முரட்டுத்தனமா நடந்தா தான் என்னால சமாளிக்க முடியாது” என்றார் யோசனையாக.
 
  • Love
Reactions: Chitra Balaji

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,686
1,503
113
அவனும் கவலையும், தவிப்பும் கலந்த குரலில் “வேறவழியில்லை பாட்டி...பெரியம்மாவை கூட வச்சுகிட்டு சமாளிங்க” என்றான்.

அவர்கள் இருவரும் பேசுவதை கேட்டு குழம்பி போய் நின்றிருந்தார் சுமதி. விஸ்வாவிடம் பேசி முடித்ததும் “என்னம்மா நடக்குது? எனக்கு ஒண்ணுமே புரியல? அக்காவை காணும்னு சொல்லி எல்லாத்தையும் அள்ளி போட்டு உடைப்பா, ஆடுவா, கத்துவான்னு எதிர்பார்த்தா அவ பாட்டுக்கு அறைக்குள்ள போய் உட்கார்ந்திட்டா...நீயும் விஸ்வாவும் என்னவோ பேசுறீங்க? என்னன்னு சொல்ல போறீங்களா இல்லையா?” என்றார் கோபமாக.

நாற்காலில் இருந்து எழுந்தவர் வாசலை நோக்கி சென்று கொண்டே “வா சுமதி” என்றார். தோட்டம் செல்லும் வரை அமைதியாக,யோசனையுடனும் வந்து கொண்டிருந்தவர் மகளை பார்த்து “நித்யாவுக்கு ஒரு பிரச்சனை இருக்கு சுமதி” என்றார்.

“என்னம்மா..என்ன பிரச்சனை?”

அங்கிருந்த கல்லை காண்பித்தவர் “உட்கார்” என்றவர் சிறிதுநேரம் இருளை வெறித்துக் கொண்டிருந்துவிட்டு மளமளவென்று அவளது பிரச்சனைக்கான காரணத்தை கூறத் தொடங்கினார். இப்படியொரு பிரச்னையை சற்றும் எதிர்பாராத சுமதியின் கண்களில் கண்ணீர் பெருகி கன்னங்களைத் தொட, ‘ஐயோ! போதும்மா!’ வேண்டாம்’...என்னால தாங்க முடியல...பாவம்மா’ என்று முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தார்.

மகளின் அழுகையை கண்ட பாட்டி “தனக்கு வரப் போகிறவளோட போராட்டம் யாருக்கும் தெரிய கூடாதுன்னு தான் நினைக்கிறான் விஸ்வா. ஆனால், இப்போ இருக்கிற நிலைமையில் அவளை என்னால தனியா சமாளிக்க முடியாது. அவனும் இங்கே வர முடியாது. விஷயம் தெரியாம அவளோட நடவடிக்கையை பார்க்கும் போது உனக்கு அதிர்ச்சியா இருக்கும்ன்னு தான் முன்கூட்டியே சொல்லிட்டேன்” என்றார்.

தாய் என்ன சொல்லியும் சமாதானம் ஆகாமல் தவித்தவர் “ஏன் மா இப்படி...என்ன பாவம் பண்ணுச்சு இந்த பொண்ணு...நான் கூட சில சமயம் சபிச்சிருக்கேன்..என் பிள்ளை வாழ்க்கையை கெடுத்துகிட்டு இருக்காளேன்னு..ஏன்-மா இப்படி” என்று கலங்கி போனார்.

“இதுக்கே இப்படி புலம்புற...இத்தனை நாள் ரேணு தனியா சமாளிச்சிட்டு இருந்திருக்கா” என்றார்.

“அவளும் பாவம்மா...எத்தனை பெரிய பாரத்தை தனியா சுமந்துகிட்டு இருந்திருக்கா...ஆனா, அவ நிரஞ்சன் கிட்ட சொல்லி இருக்கலாமே ஏதாவது வழி பிறந்திருக்குமே” என்றார் தவிப்புடன்.

மகளை பார்த்தவர் “இந்த விஷயத்தை எப்படி சொல்லுவா சுமதி! அவங்களுக்குள்ள எந்த ஒட்டுதலும் இல்லாதப்ப எப்படி பேச முடியும்...அக்கா, தங்கச்சி ரெண்டு பேருடைய நிலையும் பரிதாபம் தான்” என்றவர் “சரி! வா...இன்னைக்கு அவளுக்கு துணையா நாம ரெண்டு பெரும் அவ ரூமில் இருப்போம்” என்று கிளம்பினார்.

வீட்டிற்குள் சென்ற பின்னர் மெல்ல அவள் அறைக்குள் சென்று பார்த்துவிட்டு திரும்பினார் சிவகாமி. அவர்கள் தோட்டத்துக்கு போன போது எந்த நிலையில் அமர்ந்திருந்தாளோ அதே நிலையிலேயே அமர்ந்திருந்தாள். லேசாக உடல் அவ்வப்போது தூக்கி-தூக்கி போட்டது. விசும்புகிறாள் என்று புரிந்தது. வயதான காலத்தில் பாட்டியின் நெஞ்சில் பாரம் ஏறியது. வேறு வழியே இல்லை என்று புரிந்தாலும் அவள் கஷ்டப்படுவதை பார்த்து வருத்தத்துடன் நகர்ந்தார்.

இரவு உணவு உண்ண அவளை அழைக்கச் சென்றார் சுமதி.

“அம்மாடி நித்யா! சாப்பிட வாடா” என்றார்.

அவளோ தான் இருந்த நிலையில் இருந்து தலையை கூட தூக்காமல் செருமிக் கொண்டே அமர்ந்திருந்தாள்.

“வெறும் வயிரோட இருக்க கூடாது...வா! வந்து சாப்பிட்டிட்டு படு” என்றார்.

எதற்கும் அவளிடம் இருந்து பதில் இல்லை...அதை பார்த்துக் கொண்டிருந்த பாட்டி “சுமதி! அவளை அப்படியே விடு வா நாம சாப்பிடலாம்” என்றார்.

நித்யாவை பார்த்துக் கொண்டே எழுந்து சென்றவரால் உணவு கவளத்தை விழுங்கவே முடியவில்லை. கடவுளை நிந்தித்துக் கொண்டே அமர்ந்திருந்தார். பாட்டியுமே தைரியமாக காட்டிக் கொண்டாலும், அவளது மௌனமும், அழுகையும் அவரையும் பலவீனமாக்கியது.

ஏதோ சாப்பிட்டோம் என்று பேர் பண்ணிவிட்டு, சமையலறையை ஒதுங்க வைத்துவிட்டு அம்மாவும், மகளும் மீண்டும் நித்யா இருந்த அறைக்கு வந்தனர். அங்கிருந்த கட்டிலில் பாட்டி அமர்ந்து கொள்ள, சுமதி ஒரு பாயை போட்டு கீழே படுத்துக் கொண்டார். இருவரது பார்வையும் நித்யாவின் மீதே இருந்தது. அவளோ அமர்ந்திருந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லாத அப்படியே இருந்தாள்.

ஒருகட்டத்தில் தங்களை மறந்து அசந்து உறங்கிவிட, திடீரென்று அறையில் எழுந்த சத்தத்தில் அலறி அடித்துக் கொண்டு எழுந்தார் சுமதி. பாட்டியும் அரைகுறை உறக்கத்தில் இருந்தவர் அவசரமாக எழுந்து அமர்ந்தார்.

வாரிசுருட்டிக் கொண்டு எழுந்த சுமதிக்கு நித்யா இருந்த நிலையும், உறக்கத்தில் அவள் வாயிலிருந்து வந்து கொண்டிருந்த வார்த்தைகளும் தாங்கமாட்டாத அழுகையைக் கொடுக்க, அவசரமாக பாய்ந்து அவளை தன்னுடன் இறுக்கிக் கொண்டு “அம்மா! என்னம்மா இது! என்னால தாங்க முடியலம்மா” என்று கதற தொடங்கினார்.

சிவகாமிக்குமே நித்யா உளறிக் கொண்டிருந்த வார்த்தைகள் மிகுந்த அதிர்ச்சியை கொடுக்க. இத்தனை வயதில் இப்படியொரு சம்பவத்தை கண்டு தாங்க முடியாமல் “ஈஸ்வரா” என்றவர் சுமதியை பார்த்து “ஷ்...சத்தம் போடாத சுமதி! அவளை சமாளி” என்றவர் கலங்கிய கண்களுடன் தன் அருகில் இருந்த பையிலிருந்து விபூதியை எடுத்து உடலை முறுக்கிக் கொண்டிருந்த நித்யாவின் நெற்றியில் பூசினார்.

பின்னர் மெல்ல சமையலறைக்கு எழுந்து சென்று சூடாக ஹார்லிக்ஸ் கலந்து எடுத்து வந்து இருவருமாக அவளை பிடித்து அமுக்கி வாயில் ஊற்றினர். சுமதியின் அணைப்பில் இருந்தவளின் உடல் விறைத்துக் கொண்டிருந்தது. சற்று நேரத்திற்கு பிறகு மெல்ல,மெல்ல இயல்பு நிலைக்கு திரும்ப அவரது கைகளிலேயே உறங்க ஆரம்பித்திருந்தாள்.

குழந்தை போல் உறங்க ஆரம்பித்தாலும் கூட, அவ்வப்போது உடல் உதறியது. அமைதியாக உறங்கும் முகத்தில் பயம் கலந்த உணர்வே தென்பட்டது.

அவளையே பார்த்திருந்த இருவரின் கண்களிலும் கண்ணீர் பிரவாகமாக பொங்கி வழிந்தது.
 
  • Love
Reactions: Chitra Balaji

Chitra Balaji

Member
Feb 5, 2020
99
40
18
Enna aachi avaluku.... ஏன் இப்படி panraa... Appadi enna நடந்து ava life la... Enna solra.... Very very emotional episode maa