அத்தியாயம் - 18

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,582
1,173
113
அத்தியாயம் – 18

சுனாமி வந்து பயந்தது போலிருந்தது அந்த குப்பத்தின் நிலை. கருணாகரனை பற்றி தெரிந்தவர்கள் அவன் சென்ற பிறகும் அவனைப் பற்றி பேசுவதற்கு பயந்தனர். எந்த இடத்தில் அவனது ஆள் இருப்பானோ, போட்டு கொடுத்து விடுவானோ என்று பயந்து எவரும் வாயை திறக்கவில்லை. எதுவுமே நடவாதது போல தங்கள் வேலைகளை பார்க்க தொடங்கினர்.

ராகவனுக்கும், சுலோச்சனாவுக்கும் தான் மனது கிடந்தது அடித்துக் கொண்டது. தங்களை நம்பி வந்த பெண்களை காப்பாற்ற கூட இயலாமல் இப்படி பயந்து நின்று விட்டோமே என்று நொந்து போனார்கள்.

அதே நேரம் கேசவனின் ஆள் ஒருவன் அந்த குப்பத்திலிருக்கும் கேசவனின் ஆள், கருணாகரன் வந்து சென்றதையும் இரு பெண்களை தூக்கிச் சென்றதையும் கார்த்திக்கிடம் கூறி விட்டான்.

“என்ன சொல்ற? எப்போ நடந்தது?”

“ஆமாண்ணே! ஒரு பத்து நிமிஷம் முன்னாடி தான் வந்து தூக்கிட்டு போனான். அதுங்க யாருன்னு தெரியல”.

ஏதோ தவறிருக்கிறது என்பதை புரிந்து கொண்டவன் “எங்கிருந்து அந்த பொண்ணுங்களை தூக்கிட்டு போனாங்க?”

“ராகவன்னு ஒரு ஆட்டோ டிரைவர் வீட்டிலிருந்து தான் தூக்கிட்டு போனாங்க”.

“அப்போ அவனை நம்ம இடத்துக்கு கொண்டு வந்துடு” என்று கூறி போனை அனைத்தவனின் முகம் சிந்தனையில் மூழ்கியது. இதை எப்படி கேசவனிடம் சொல்வது? எல்லாம் சரியாக இருப்பதாக சொல்லி வைத்திருக்கிறோமே. அவனுக்கு விபரம் தெரிந்தால் கடும் கோபத்திற்கு ஆளாக நேரிடுமே என்று யோசித்தான். முதலில் கருனாகரனால் கடத்தி செல்லப்பட்ட பெண்கள் யார்? எதற்காக அவர்களை கொண்டு சென்றான் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணியவன் வேகமாக வெளியேறி ஜீப்பை எடுத்தான்.

அவன் எடுத்த வேகத்தில் வாயிற் கதவு அலறிக் கொண்டு திறக்கப்பட்டது. அதோடு அங்கே நின்று கொண்டிருந்த கேசவனின் ஆட்கள் ஓடிச் சென்று ஜீப்பில் ஏறிக் கொண்டனர்.

“என்னண்ணே? பிரச்சனையா?”

“ம்ம்...ராயபுரம் குப்பத்துல கருணா புகுந்து ரெண்டு பொண்ணுங்களை தூக்கி இருக்கான்”.

“என்ன! பொண்ணுங்களையா?”

“ஆமாம்! இது கேசவனுக்கு போகும் முன்னாடி யார் என்னன்னு பார்த்து முடிக்கணும்” என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே போன் அதிர ஆரம்பித்தது. அதிலிருந்த எண்ணை பார்த்ததும் வண்டி லேசாக தடுமாறி மீண்டும் சீராக ஓட ஆரம்பித்தது.

“கேசவன் கால்”.

ஜீப்பிலிருந்த அனைவருக்கும் வியர்த்து வழிய ஆரம்பித்தது. அவனது கேள்விகளுக்கு என்ன பதில் சொன்னாலும் விட மாட்டான். எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் சிறிது நேரம் அலற விட்டவன் மெல்ல அழைப்பை ஏற்றதும் வந்து விழுந்த வார்த்தைகளில் அவனது செவியில் பழுக்க காய்ச்சிய இரும்பை நுழைத்தது போலிருந்தது.

“கேசவா!”

“எல்லாம் நல்லா போயிட்டு இருக்குன்னு சொன்ன....என்ன ம..பு....இருந்தியா?”

“யார் அந்த பொண்ணுங்கன்னு தெரியல கேசவா. அவன் எதுக்கு அவங்களை தூக்கினானும் தெரியல”.

“ஒரத்தநாடு சந்துருவோட தங்கை எங்க இருக்கான்னு விசாரிச்சியா” என்றான் கொதிப்புடன்.

அதை கேட்டதும் ஒரு நிமிடம் அதிர்ந்து போனவன் “நீ என்ன சொல்ற?”

“நான் மதுரை கிட்ட இருக்கேன் . இங்கே இருக்கிற நான் அவ யாருன்னு சொல்றேன்”.

கார்த்திக்கிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அவன் கேட்பது நியாயம் தானே? எங்கோ இருப்பவன் இங்கும் நிகழும் நிகழ்வுகளை கவனித்து சொல்வதை கண்டு அவமானமாக உணர்ந்தான். அதனால் கேசவனுக்கு பதிலளிக்காமல் மௌனமாக இருந்தான்.

அவனது மௌனம் கேசவனின் கோபத்தை சற்று குறைத்தது. தன்னை தானே சுதாரித்துக் கொண்டவன் “கார்த்தி! எனக்கு இன்னும் ஒரு மணி நேரத்தில் எல்லாவற்றிற்கும் விடை தெரியனும்”.

“யார் வீட்டிலிருந்து அந்த பொண்ணுங்களை தூக்க சொன்னானோ அவனை நம்ம இடத்திற்கு கொண்டு வர சொல்லி இருக்கேன்”.

“ம்ம்...சரி” என்று கூறியவன் எதுவும் சொல்லாமல் போனை வைத்து விட்டான்.

கார்த்திக்கிற்கு அவனது அமைதி புயலுக்கு முன்னே வரும் அமைதியாக தோன்றியது. அவர்களின் கோடவுனில் சரியாக சென்று நின்றது கார். வேகமாக இறங்கியவன் வெளியில் இருந்த எவரையும் பார்க்காது உள்ளே சென்றான். அங்கு ராகவன் நடுநாயகமாக போடப்பட்டிருந்த நாற்காலியில் கட்டி வைக்கப்பட்டிருந்தான். கார்த்தி செல்வதற்கு முன்பே அவனது முகமெங்கும் அடித்து கிழிக்கப்பட்டிருந்தது.

அவன் முன்னே சென்று நாற்காலியை இழுத்து போட்டுக் கொண்டு அமர்ந்தவன் ‘நான் வரதுக்கு முன்னே எதுக்கு கை வச்சீங்க?” என்று முறைத்தான்.

உதடு கிழிந்து முகம் வீங்கி இருந்தவன் மெல்ல நிமிர்ந்து பார்த்து “அண்ணே!” என்றான் மெல்லிய குரலில்.

“சொல்லு! உன் வீட்டில் இருந்த பொண்ணுங்க யார்? அவங்களுக்கும் உனக்கு என்ன தொடர்பு?”

உதடுகளில் வழிந்த உதிரத்தை துடைக்க வழியில்லாமல் “அவங்க யாருன்னு எனக்கு தெரியாது அண்ணே. அதுங்க அண்ணனை தேடி இந்த ஊருக்கு வந்திருக்குங்க. அப்போ தான் காளி கண்ணுல சிக்கினா ஆபத்துன்னு கூட்டிட்டு போய் என் வீட்டில் வச்சிருந்தேன்” என்றான்.

“சரி! அண்ணன் பேர் ஏதாவது சொல்லுச்சுங்களா?”

மெல்ல தலையசைத்து “சந்துருன்னு சொன்னுச்சு அண்ணே”.

அந்த பெயரை கேட்டதுமே தலையை உலுக்கி கொண்ட கார்த்தி தன் ஆட்களைப் பார்த்து “அவிழுத்து விடுங்க. டாக்டரை வர சொல்லி இதெல்லாம் சரி பண்ண சொல்லு” என்றவன் ராகவனிடம் திரும்பி “நீ ஒரு ரெண்டு மூணு நாள் இங்கே தான் இருக்கணும். வெளியே போனா உன்னை போட்டுடுவாங்க” என்றான்.

அதை கேட்டதும் ராகவனின் கண்களில் கலவரம் தெரிய “என் மாமன் மக சுலோச்சனா வெளிய இருக்கு அண்ணே. அதுக்கு ஏதாவது...” என்றான் பயத்துடன்.

‘இங்கே தான் இருக்கு பாதுகாப்பா” என்றவன் ஆட்களிடம் திரும்பி “டாக்டர் வந்து பார்த்ததும் அந்த புள்ள இருக்கிற இடத்தில இவனையும் கொண்டு விட்டுடு” என்று கூறி விட்டு போனை எடுத்துக் கொண்டு வாயிலை நோக்கி நகர்ந்தான்.

அவனது அழைப்பு போக போக கேசவன் மொபைல் சுவிட்ச் ஆப் என்று கூறியது. பல முறை அழைத்தும் அதே மெசேஜ் தான் வந்தது. நெற்றியை தட்டி யோசித்தவன் புயல் கரையை நெருங்கி கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தான்.

அதே நேரம் மதுரையிலிருந்து சென்னையை நோக்கி பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்தான் கேசவன்.

கருணாகரனின் இடத்திலோ இருவரின் கைகளும் கட்டப்பட்டு நாற்காலியில் அமர்ந்திருந்தவர்களை சுற்றி அவனது ஆட்கள் அவர்களை பல விதமாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர்.

தேனுவிற்கும், சக்திக்கும் தங்களை கடத்தியவன் யார்? எதற்காக கடத்தி இருக்கிறான் என்று புரியாமல் பயந்து போய் அழுது கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரம் அவர்களது அழுகையை வெறித்து பார்த்துக் கொண்டிருந்த கருணா “ஏய்! நிறுத்துங்க! ஒழுங்கா அந்த டாகுமென்ட்ஸ் எங்கே இருக்குன்னு சொல்லுங்க?” என்று கத்தினான்.

அவனது கத்தலில் இருவருக்கும் உடல் தூக்கிப் போட, சட்டென்று அழுகையை நிறுத்தி விட்டு கண்களில் கலக்கத்துடன் அவனை பார்த்தனர்.

“எங்கே வச்சிருக்கீங்க அந்த பத்திரத்தை?” என்று மீண்டும் மிரட்டினான்.

அழுகையுடன் கூடிய குரலில் “நீ...நீங்க எ...என்ன கேட்குறீங்க?” என்றாள் சக்தி.

அவளது தாடையைப் பற்றி “நீ தானே அவன் தங்கச்சி? சொல்லு! எங்கே மறைச்சு வச்சிருக்க?”

அவன் பற்றியதில் வலியெடுக்க கண்ணீர் வழிந்தோட “எனக்கு தெரியல. நீங்க என்ன கேட்குறீங்கன்னு புரியல” என்றாள்.

அனைவரின் பார்வையும் சக்தியின் மீதிருக்க, தேனு எவரும் அறியாது தனது கைகளில் இருந்த கட்டை அவிழ்க்க தொடங்கி இருந்தாள். அவள் மனதில் இருந்த ஒரே எண்ணம் எப்படியாவது சக்தியை இந்த கூட்டத்தினரிடம் இருந்து காப்பாற்றி விட வேண்டும் என்பது தான். அதனால் யாருடைய கவனத்தையும் கவராமல் மெல்ல முயற்சித்து தனது கட்டுக்களை அவிழுக்க ஆரம்பித்தாள்.

கருணாகரனோ தேனுவை பற்றி கவலைப்படாமல் சக்தியை மிரட்டி உருட்டி அவளிடமிருந்து எப்படியாவது டாகுமென்ட் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள முயற்சித்தான் . வெகு நேரம் போராடி அழுகையை தவிர எதுவும் கிடைக்காமல் போக, எரிச்சலுடன் நாற்காலியை பின்னுக்கு தள்ளி விட்டு எழுந்தவன் “சை! சனியன் அழுவதை தவிர எதையும் சொல்லித் தொலைக்க மாட்டேங்குது” என்று கூறி ஒருவனை கண்ணசைவில் தன்னோடு அழைத்துச் சென்று “அதுங்களை உள்ளே விட்டுட்டு எல்லோரும் வெளியே போய் நில்லுங்க. நாம இல்லேன்னா பேசுவாளுங்க பிடிச்சிடலாம்” என்றவன் வேகமாக அங்கிருந்து வெளியேறி பக்கத்தில் இருந்த காமெரா அறைக்குள் நுழைந்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

அவர்கள் இருவரையும் தனித்து விட்டுவிட்டு அனைவரும் அங்கிருந்து கதவடைத்து வெளியேறினர். சிறிது நேரம் வரை நடந்த நிகழ்வுகளின் அதிர்ச்சியில் இருந்தவர்கள் அமைதியாகவே இருந்தார்கள். தேனுவிற்கு அனைவரும் ஒன்று போல வெளியேறியது சந்தேகத்தை கொடுத்தது. அதனால் அவளது கண்கள் அந்த அறையை ஆராய்ச்சியாக பார்த்தது.

சக்தியோ மிரட்சியுடன் “யார் தேனு இவங்க? நம்ம கிட்ட என்ன கேட்கிறாங்க?” என்றாள் பயத்துடன்.

அறையை பார்வையாலேயே ஆராய்ச்சி செய்தவளுக்கு எதுவும் புலப்படவில்லை. அதிக நேரம் எடுக்க எடுக்க தங்களுக்கு ஆபத்து நெருங்கி கொண்டிருப்பதை உணர்ந்தவள் வேகமாக தனது கயிற்றை அவிழ்த்து கீழே போட்டுவிட்டு சக்தியின் கட்டுகளை அவிழ்க்க தொடங்கினாள்.

அவர்களின் செய்கைகளை காமெராவில் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பதட்டத்துடன் அந்த அறையை நோக்கி செல்ல முயற்சிக்க “டேய்! இருங்க என்ன பண்றாளுங்க என்று பார்ப்போம். நம்ம்மலை மீறி எங்கேயும் போயிட முடியாது”.

அவன் சொன்னதும் அனைவரும் இருவரின் நடவடிக்கையையும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

பரபரவென்று முடிச்சை அவிழ்த்து அவளை விடுவித்தவள் சக்தி அழுகையுடன் பேச ஆரம்பிக்கும் முன் “ஷ்! எதுவும் பேசாம வா. முதல்ல நாம இங்கிருந்து தப்பிக்கணும்” என்றாள்.

அவளது பேச்சில் அழுகையை அடக்கியபடி இருவரும் அறைக் கதவை நோக்கி மெல்ல நடந்தனர். மூடி இருந்த கதவு ஓட்டையின் வழியே வெளியே யாரும் இருக்கிறார்களா என்று பார்த்த தேனு, எவரும் அருகே இல்லை என்பதை அறிந்து கொண்டு சக்தியிடம் “நான் இப்போ கதவை திறக்க போறேன் சக்தி. கதவை திறந்ததும் கண்ணுமண்ணு தெரியாம ஓடனும். குறுக்கே யார் வந்தாலும் தள்ளி விட்டு ஓடனும். அப்போ தான் தப்பிக்க முடியும்” என்றாள் மெல்லிய குரலில்.

அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த கருணா இதழில் எழுந்த குரூர சிரிப்புடன் அருகே இருந்தவனிடம் காதில் ஏதோ கூறினான். அவனும் தலையசைத்து வேறொரு கதவு வழியாக வெளியேறினான். அனைவரின் கவனமும் தேனு, சக்தியின் மீது திரும்பியது.

ஒரு நிமிடம் தனை நிதானித்துக் கொண்டவள் தடாரென்று கதவை திறந்து கொண்டு தலை கால் தெரியாமல் ஓட ஆரம்பித்தாள். அவளின் பின்னே அதீத பயத்துடன் சக்தியும் மிக வேகமாக ஓடினாள்.

அவர்கள் இருந்த அறைக்கும், வாயிலுக்கும் சுமார் பத்தடி தூரம் இருந்தது. தங்களை காத்துக் கொள்ள வேண்டி இருவரும் ஓட்டப்பந்தய வீராங்கனைகள் போன்று ஓடினர்.

“என்னமா ஒடுறாளுங்க பாரேன்” என்று கூறி சிரித்துக் கொண்டிருந்தான் கருணா.

சரியாக கேட் அருகே செல்லும் நேரம் கதவு மூடத் தொடங்கியது. அதை பார்த்ததுமே நடக்க போவதை புரிந்து கொண்டவள், ஒரு நிமிடம் ஆழ மூச்செடுத்து கொண்டு சக்தியின் கைகளைப் பற்றி இழுத்து கதவு நன்கு மூடும் முன்பு வெளியே தள்ளி விட்டாள்.

“ஓடு சக்தி! இங்கே நிற்காதே! ஓடு” என்று தொண்டை கிழிய கத்தினாள்.

இதை எதிர்பார்க்காத கருணா, அவளின் செயலில் ஆத்திரமடைந்து அவசரமாக அறையை விட்டு வெளியே வந்தான். தனது ஆட்களிடம் “டேய்! அவளை பிடியுங்க” என்று கத்தினான்.

அனைவரும் கதவை நோக்கி ஓட, சக்தியோ தேனுவிற்காக அங்கிருந்து நகராமல் நின்றிருந்தாள். அதை பார்த்த தேனு “சக்தி! ஓடு! என்னை பத்தி கவலைப்படாதே ஓடு!” என்று கத்தி முடிக்கும் முன் அவள் அருகே வந்திருந்த கருணா அவளது இடுப்பை பற்றி தன்னருகே இழுத்து கத்தியை எடுத்து அவள் வயிற்றில் செருகி இருந்தான்.

அந்நேரம் சரியாக கேசவனின் கார் வந்து நிற்க, தேனுவை குத்தியதை பார்த்த சக்தி மயங்கி சரிந்திருந்தாள்.
 
Chitra Balaji

Member
Feb 5, 2020
52
31
18
அடபாவி thenu va kuthitaan da..... இவன.... கேசவன் nuku எப்படி therinjithu correct ah sollitaan... Evvalavu Sikirama vanthutaan pa.... Enna aaga pooguthoo... Super Super maa.... Semma semma episode
 
  • Love
Reactions: sudharavi

Ramavaradharajan

New member
Jun 21, 2020
4
4
3

Kesavan miss pannitan pavam thenuvaim kapathidunga
 
  • Love
Reactions: sudharavi