Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 17 | SudhaRaviNovels

அத்தியாயம் - 17

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,121
2,806
113
அத்தியாயம் – 17

அவனது முதல் திருமணத்தைப் பற்றிக் கேட்டறிந்த செய்திகளை ஜீரணிக்க முடியாமல் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள் ஸ்ருதி.

இப்படியும் ஒரு பெண் இருப்பாளா?

தனது சுயநலத்திற்காக ஒருவனை மணந்து, அவனது உணர்வுகளைக் காயப்படுத்தி, குத்தி,கிழித்துக் கூறு போட்டு, அதன் மீது தனக்கொரு வாழக்கையை அமைத்துக் கொள்ள எப்படி முடிந்தது அவளால்?

முதல் மனைவியைப் பற்றி அவன் பேசும்போது மனம் வலித்தாலும்,அதன் பின்னே இருந்த ஏமாற்றத்தை கண்ட போது நெஞ்சிலிருந்த வலி காணாமல் போயிருந்தது.

எப்படிப்பட்டதொரு நம்பிக்கை துரோகத்தைக் கடந்து வந்திருக்கிறான்.எத்தனை அவமானங்களைச் சந்தித்திருப்பான்.என்னதான் குடும்பத்தாரின் துனையிருந்தாலும் இதயத்தில் ஏற்பட்ட ரணம் ஆறா வடுவாகி அல்லவா போயிருக்கும் என்று அவனுக்கு நடந்தவற்றை நினைத்து மிகவும் வேதனை அடைந்தாள்.

எதிரிலமர்ந்து அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த நிகிலுக்கு,அவளது முகத்தில் வந்து போன உணர்வுகளிலிருந்தே, தனக்கு நடந்தவற்றை எண்ணி கலக்கமடைகிறாள் என்று புரிந்து கொண்டான்.

அவளது முகத்தைத் தன் இருகரங்களால் தாங்கிப் பிடித்தவன் சிறிது நேரம் அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.இருவரின் மனமும் வேதனையை விழி வழியே வெளிப்படுத்தியது.

“சாரி ஸ்ருதி!நான் நந்தனாவை பற்றிச் சொல்லும் போது உன் கண்களில் தெரிந்த வலியை பார்த்தேன்.உன்னை காயப்படுத்தனும் என்பதற்காக அதைச் சொல்லவில்லை.கண்ணியமான ஒவ்வொரு ஆணுக்குள்ளும் தன் வருங்கால மனைவி மீது எத்தகைய எதிர்பார்ப்பு,காதல் இருக்கும் என்பதைச் சொல்ல நினைச்சேன்.அது உனக்குள்ளே வேதனையை உண்டாக்கியிருக்கும் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடியுது.ஆனா, அதைச் சொன்னா தான் என்னோட ஏமாற்றத்தோட அளவு என்ன என்பது தெரியும்.”

“எனக்குப் புரியுதுங்க.வலிகள் எனக்கொண்ணும் புதுசில்லையே”என்றவளது விழிகள் கண்ணீரில் பளபளத்தது.

அவளது கலங்கிய கண்களைப் பார்த்தவன் அவளை அணைத்துக் கொண்டான்.

“அவ கிட்ட ஏமாந்து போனதில் என்னால யாரையும் நம்ப முடியல.அதனால தான் உன்னை, உன் மனதை ரொம்பவே காயப்படுத்திட்டேன்.”

அவனிடமிருந்து பிரிந்து உட்கார்ந்தவள் “அவ செஞ்ச அதே தப்பை தான் நீங்களும் செஞ்சீங்க”என்றாள் அழுத்தமாக.

அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்து “இல்ல..”

அவன் மறுத்து பேச ஆரம்பித்ததும் இடைமறித்தவள் “அவ உங்க கூடப் போன்ல பேசினப்பயாவது, திருமணதிற்குப் பிறகாவது சொல்லி இருக்கலாம்ன்னு வருத்தப்பட்டீங்க. என் விஷயத்தில் நீங்க என்ன பண்ணுனீங்க?ஏன் என் கிட்ட பேசல?. உங்களுடைய ஏமாற்றத்துக்கு நான் எந்த வகையில் காரணமானேன்.எதுவுமே இல்லையே?அப்புறம் ஏன் என்னை மோசமா நடத்தினீங்க. அவ செஞ்ச மாதிரி தானே நீங்களும் எனக்குத் துரோகம் பண்ணிங்க.உங்க சுயநலத்துக்காக நீங்களும் என்னை யூஸ் பண்ணிகிட்டீங்க.உங்களுக்கும் அவளும் என்ன வித்தியாசம் சொல்லுங்க? என்று அதுநாள் தன் மனதில் அழுத்திக் கொண்டிருந்ததைக் கேட்டுவிட்டாள்.

தனது தவறை அவள் சுட்டிக் காட்டவும் தலையைக் குனிந்து கொண்டவன் அவள் விரல்களைப் பற்றி வருடிக் கொண்டே “ஆமாம் ஸ்ருதி! நீ சொன்னது சரி தான். அவள் ஒரு வகையில் என்னை ஏமாற்றினாள் என்றால் நானுமே வேறு வகையில் உன்னை ஏமாற்றி இருக்கேன்.ஆனா, நான் உன்னைக் காயப்படுதணும்-னு நினைச்சு எதுவும் செய்யல.எனக்குள்ள இருந்த பயம் என்னை அப்படி நடக்க வச்சுது.ஒரு முறை பட்ட அடியே தாங்க முடியாமல் போனதுனால அவ்வளவு மோசமா நடந்து கிட்டேன்.”

அவனது உணர்வுகளைப் புரிந்து கொண்டவள் “விடுங்க!என் தலையெழுத்து!நான் அன்பை யாரிடமிருந்தும் எதிர்பார்க்க முடியாது.இந்த ஜென்மத்தில் உனக்கு இதுதான்-னு கடவுள் எழுதி வச்சிட்டார்.இதில் யாரை குறை சொல்ல முடியும்.”

அவள் சலிப்புடன் சொன்னதும் அவசரமாக “இல்ல ஸ்ருதி! அப்படிச் சொல்லாதே!என்னோட காதலை, அன்பை உனக்கு உணர்த்த தயாராயிருக்கேன்.என்னை நீ மன்னிக்கணும்.”என்றான் கெஞ்சலாக.

அவளது மனம் அவனுக்காக வாதாடியது. அவன் நல்லவன் தான்! அதிலும் தான் நடந்து கொண்ட விதத்தை எண்ணி அவனே வருந்துகிறான் என்றாலும், ஏனோ மனம் அவன் நந்தனாவை ரசித்ததைப் பற்றிச் சொன்னதை நினைத்துச் சுணங்கியது.

அவளது மனதில் ஓடிக் கொண்டிருந்த எண்ணங்களை அறிய முடியுமா என்று அவள் முகத்தையே பார்த்திருந்தான்.சிறிது நேரம் அவளின் பதிலுக்காகக் காத்திருந்தவன் பொறுக்க முடியாமல் “மத்தவங்களை விட உனக்குத் தான் என்னோட நிலைமை நல்லாவே புரியும் ஸ்ருதி. கொஞ்சம் முன்னாடி என் கிட்ட அழுதியே,என்னால இன்னொரு ஏமாற்றத்தை தாங்க முடியாது என்னை இப்படியே விட்டுடுங்கன்னு.அதே நிலையில் தான் நானும் இருந்தேன்.உன்னைக் கண்டு பயம்.உன்னிடம் பேசினால் உன் மீது அன்பு வந்துவிட்டால், நீயும் ஏமாற்றி விட்டு போயிட்டேனா என்கிற பயம் தான் என்னை உன்கிட்ட இயல்பா பேச விடல, பழக விடல.நான் உன்னைத் துன்புறுத்த நினைக்கல.உன்னை என்னிடமிருந்து விலக்கி வைக்கத் தான் பார்த்தேன். அதுவும் நீயா விலகிப் போகணும்-னு நினைச்சு தான் செய்தேன்.அது உன்னை எந்த அளவுக்குப் பாதிச்சிருக்கும்-னு ஒருநாள் உணர்ந்தேன்.நான் செஞ்ச தப்போட அளவும் புரிந்தது”என்றான் வேதனையுடன்.

அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு அதிலிருந்த ஞாயத்தை உணர்ந்து கொண்டவள் மெல்ல விழியுர்த்தி அவனைப் பார்த்து “நந்தனா ரொம்ப அழகா?” என்றாள்.

அவளின் பெயரைக் கேட்டதும் அதுவரை இயல்பாய் இருந்தவன் மீண்டும் இறுகிப் போனான்.

“அழகா?அசிங்கம்! பெண் இனத்துக்கே அவமானம்!”என்றான் ஆத்திரத்துடன்.

அவன் கோபபட்டாலும் சில விஷயங்கள் தெரிய வேண்டியிருந்ததால் விடாமல் அவனிடம் கேட்டாள்“ஒருநாள் முழுக்க ஏர்போர்ட்டிலேயே இருந்தீங்க?அப்புறம் என்ன ஆச்சு?எப்போ சொன்னீங்க அத்தை கிட்ட”என்றாள்.

ஒரு நிமிடம் அவளை ஆழ்ந்து பாரத்தவனின் எண்ணங்கள் அன்றைய நினைவுகளைத் தேடி ஓடியது.

அவள் சென்ற நிமிடத்திலிருந்து அதே இடத்தில் பிரமை பிடித்து அமர்ந்திருந்தவனைக் கண்ட ஏர்போர்ட் தொழிலாளி ஒருவர் தட்டி எழுப்பி வீட்டுக்கு போகவில்லையா என்று கேட்ட பின்பே, தான் இருக்கும் நிலையை உணர்ந்தான்.

அடுத்து என்ன என்று குழம்பி போனது மனது.உலகமே ஸ்தம்பித்துப் போனது போல் உணர்ந்தான்.

மெல்ல எழுந்து சென்று முகம் கழவிவிட்டு வந்தவன் யோசித்தான்.இந்த சூழ்நிலையைத் தனியாகச் சமாளிக்க முடியாது என்றெண்ணியவன், டிக்கெட் கவுண்டருக்கு சென்று மீண்டும் ஊருக்கு செல்ல டிக்கெட் எடுத்து வந்தான்.

எப்படி விமானத்தில் ஏறினான், எப்படி வந்திறங்கினான் என்றே தெரியாது.சுய நினைவின்றி எல்லாவற்றையும் செய்து அம்மாவின் மடியை தேடி ஓடிக் கொண்டிருந்தான்.

காயத்ரியின் இல்லத்தில்..

இரவு உணவை முடித்துக் கொண்டு ஆகாஷும், நீரஜும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.ஆர்த்தியும்,காயத்ரியும் மறுநாளுக்குத் தேவையான காய் கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தனர்.

சாம்பசிவமோ வாசலில் நடந்து கொண்டிருந்தார்.

“என்னடா நீரஜ்? இந்த நிக்கி பண்ற வேலையைப் பாரு!போனவன் ஒரு போன் பண்ணி கூடச் சொல்லல”.
 
  • Like
Reactions: Chitrasaraswathi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,121
2,806
113
அதைக் கேட்டு நக்கலாகச் சிரித்தவன் “அவ்வளவு பிஸி போல”என்றான்.

இருவரும் கிண்டலடித்துச் சிரித்துக் கொண்டிருந்தனர்.

வாசலில் நடந்து கொண்டிருந்த சாம்பசிவமோ கார் வந்து நிற்பதை பார்த்ததும் “இந்த நேரத்தில் யாரு?”என்று நெற்றியை சுருக்கி யோசித்துக் கொண்டே பார்வையை ஓட்டினார்.

காரிலிருந்து நிகில் இறங்கி பெட்டிகளை எடுத்து வைத்துவிட்டு டிரைவருக்குப் பணம் கொடுப்பதைப் பார்த்ததும் அதிர்ச்சியானார்.நந்தனா இறங்குகிறாளா என்று எட்டிப் பார்த்தார்.அதற்குள் கார் கிளம்பி விட நிகில் பெட்டிகளை இழுத்துக் கொண்டு கேட்டிற்குள் நுழைந்தான்.

அவன் உள்ளே வருவதைப் பார்த்ததும், அவசரமாகப் பதட்டத்துடன் வீட்டிற்குள் சென்றவர் “ஆகாஷ்!நிக்கி வராண்டா” என்றார்.

பேசிக் கொண்டிருந்த நீரஜ் சாம்பசிவம் சொன்னதைக் கேட்டு “என்னப்பா?அவன் தான் ஊருக்குப் போயிட்டானே”என்றான் நீரஜ்.

அதற்குள் நிகிலே பெட்டிகளுடன் உள்ளே நுழைந்தான்.

கலைந்த தலையும், இறுகிய முகமும்.பஞ்சடைந்த கண்களுடன் தங்கள் முன்னே வந்து நின்ற நிகிலை நம்ப முடியாமல் பார்த்தனர் அண்ணன்கள் இருவரும்.

நிகிலோ அப்படியே ஓய்ந்து போய்த் தலையைப் பிடித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தான்.அதுவரை அவன் வந்ததை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குப் பேச்சே எழவில்லை.முதலில் தன்னைச் சுதாரித்துக் கொண்ட ஆகாஷின் கண்களில் தம்பியின் தோற்றமும்,நந்தனாவை காணாததும், நடக்கக் கூடாத ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்கிற சந்தேகத்தை எழுப்பியது.

“நிக்கி!என்ன ஆச்சு?நந்தனா எங்கே?”என்று கேள்வி எழுப்பினான்.

கார் வந்து போகும் சத்தம் கேட்டு வெளியே வந்த காயத்ரி சோபாவில் நிகில் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அதிர்ந்து போனார்.

அவசரமாக மகன் அருகில் போனவர் “நிக்கி! என்னப்பா எப்போ வந்த?நந்தனா எங்க?என்ன ஆச்சு?”என்று பதைத்துப் போய்க் கேட்டார்.

அவனோ எதுவுமே சொல்லாமல், தலையைக் கூட நிமிர்த்தாமல் அப்படியே கல் போன்று அமர்ந்த்திருந்தான்.

அதைப் பார்த்து மேலும் பயந்து போன காயத்ரி லேசாக அவன் தோள்களைப் பற்றி உலுக்கி “நிக்கி! என்ன நடந்தது? நீ மட்டும் வந்திருக்கே?ஏதாவது பதில் சொல்லு?” என்றார்.

மெல்ல நிமிர்ந்து அங்கிருந்த அனைவரையும் பார்த்தவனது கண்களும், முகம் பாறை போன்று இறுகிக் கிடந்தது.

இறுகிய குரலில் காயத்ரியைப் பார்த்து “என்ன சொல்லணும்?” என்றான்.

அவனது தோற்றமே பயத்தைக் கொடுக்க ஆகாஷும், நீரஜும் உள்ளுக்குள் பயந்து போயினர்.

“என்னடா இப்படிக் கேட்குற?நேத்துப் புதுப் பொண்டாட்டியோட ஊருக்குப் போனவன்.மறுநாள் ராத்திரியே திரும்பி வந்திருக்கே. அவ இல்லாம தனியா?நாங்க என்னென்னனு நினைக்கிறது?”என்றார் பதைப்புடன்.

அதைக் கேட்டதும் இகழ்ச்சியாக உதட்டை மடித்தவன் “உங்க புள்ளையோட பொண்டாட்டி வேறொருத்தனோட ஓடிப் போயிட்டான்னு நினைங்க. அவன் கட்டின தாலியை கழட்டி அவன் கையில கொடுத்து லூசு பயலே,நான் வேறொருத்தன் காதலிடா,விசாவுக்காகத் தான் உன்னைக் கல்யாணம் பண்ணிகிட்டேன்னு சொல்லிட்டு ஓடி போயிட்டான்னு நினைங்க”என்றான் உணர்சிகளற்ற குரலில்.

அந்த நிமிடம் தங்கள் காதில் விழுந்த செய்தியில் குடும்பத்தினர் அனைவரும் பேயறைந்தது போல் நின்றனர்.

முதலில் அதிர்ச்சியிலிருந்து சுய நினைவுக்கு வந்த ஆகாஷ் குனிந்து தம்பியின் கைகளைப் பிடித்துக் கொண்டவன் “என்னடா சொல்ற?”என்றான் நம்ப முடியாமல்.

அவனை நிமிர்ந்து பார்த்தவனது கண்கள் உயிரற்று இருந்தது.

“உன் தம்பி வாழ்க்கையைக் கண் மூடி திறக்கிறதுக்குள்ள அசிங்கப்படுத்திட்டு போயிட்டா ஆகாஷ்.இதுக்காகவா இத்தனை நாள் காத்துகிட்டு இருந்தேன்”என்றான் கலங்கிய குரலில்.

அவன் சொன்ன செய்தியின் தாக்கத்திலிருந்து வெளியே வந்த காயத்ரி துக்கம் தாங்காது அப்படியே சோபாவில் தொப்பென்று அமர்ந்தார்.மகனது வாழ்க்கையின் மோசமான நிலையை எண்ணி கண்ணீர் கரை உடைத்த வெள்ளம் போலப் பொங்கி வழிய “என் புள்ள வாழ்க்கையை இப்படி நாசமாக்கிட்டு போயிட்டாளே”என்று கத்திக் கொண்டே நிகிலை இழுத்து தன் மடியில் சாய்த்துக் கொண்டார்.

அதுவரை தன்னுடைய துக்கத்தை எல்லாம் உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டிருந்தவன் தாயின் மடியை கண்டதும் விசித்து அழ ஆரம்பித்தான்.

சாம்பசிவமும் அவர்கள அழுவதைப் பார்த்துக் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு, நிகிலின் அருகே அமர்ந்து அவனது கைகளைப் பிடித்துக் கொண்டார்.மெல்ல அவனிடம் என்ன நடந்ததைக் கேட்டறிந்து கொண்டார்.

அவன் சொன்னவற்றைக் கேட்ட அனைவருக்கும் நந்தனாவின் துரோகத்தை நினைத்து அதிர்ச்சியாக இருந்தது.

நீரஜ் வேகமாக மாடிக்கு சென்றவன் தனது பைக் சாவியை எடுத்துக் கொண்டு கீழே வந்தான்.

“ஆகாஷ்! கிளம்பு அவ வீட்டுக்கு போய் அவங்க அப்பனை சட்டையைப் பிடிச்சு நாலு வார்த்தை கேட்டா தான் எனக்கு மனசு அடங்கும்” என்றான்.

ஆகாஷும் சரியென்று கிளம்ப, அழுது கொண்டிருந்த காயத்ரி மகன்களைப் பார்த்து “அவசரப்படாதீங்கடா!இது பொண்ணு விஷயம்.அவங்களுக்கே தெரியுமோ என்னவோ?.இந்த நேரத்துல நீங்க போய்ச் சொல்லி அவருக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா?வேண்டாம்டா ஏற்கனவே என்ன பாவம் பண்ணினேனோ என் புள்ள அசிங்கப்பட்டு நிற்கிறான்.எதுவா இருந்தாலும் காலைல பார்த்துக்கலாம்” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்ட நீரஜ் “மா!என்னம்மா நீங்க! அவனைப் பாருங்க எப்படி இருக்கான்.இதுக்கு மேலயும் பொறுமையா இருக்கச் சொல்றீங்களா?”என்று குதித்தான்.

ஆகாஷும் அவன் சொல்வது தான் சரி என்று கூறினான்.

அவர்களிருவரையும் பார்த்து “தயவு செஞ்சு நான் சொல்றதை கேளுங்கடா!நீங்க போய்ச் சத்தம் போடுறதுனால போனவ திரும்பி வந்து என் புள்ளையோட வாழப் போறாளா? இல்லையே! நாம தான் நிம்மதி இழந்து நிக்கிறோம்.அவங்களுக்கும் அதைக் கொடுக்கனுமா?எதுவா இருந்தாலும் காலையில பார்த்துக்கலாம்.பேசாம இருங்கடா”என்று சொல்லியவர் துக்கம் தாங்காமல் அழுது கரைந்தார்.

அவர் சொன்னதைக் கேட்க மனமில்லை என்றாலும், அவரின் பேச்சிற்கு மரியாதை கொடுத்து ஓய்ந்து போய் ஆளுக்கொரு நாற்காலியில் அமர்ந்தனர். ஆர்த்தி, அகல்யா இருவரும் கூட நிகிலின் நிலையைக் கண்டு கண்ணீர் சிந்தியபடி அமர்ந்திருந்தனர்.

இரவு முழுவதும் நடந்து போன நிகழ்வை எண்ணியே ஆளுக்கொரு யோசனையில் துயரத்தோடு மனதில் பாரத்தோடும் சாய்ந்திருந்தனர்.

விடியும் வரை துளி கூட அசையாது இருந்த இடத்திலேயே இருளை வெறித்துக் கொண்டிருந்தனர்.காயத்ரியோ கடவுளிடம் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தார்.இவ்வளவு அருமையான பிள்ளையைக் கொடுத்த நீ, அவனுக்கு இப்படி ஒரு கேவலத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டாமே, ஏன் இப்படிப் பண்ணின?என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆறு மணியளவில் அபி எழுந்து கீழே வரும் போது தான் அனைவரும் சுய நினைவிற்கு வந்தனர்.

நிகில் மெல்ல எழுந்துமர்ந்தான்.ரெண்டு நாட்களாக நடந்தவைகள் எல்லாம் அவன் தலையில் ஏறி அமர்ந்திருக்க, தலை கனமாக இருந்தது.அவனது நிலையை உணர்ந்த காயத்ரி எழுந்து காப்பிப் போட சென்றார்.

ஆகாஷும், நீரஜும் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டே வாசலுக்குச் சென்றனர். நீரஜ் பைக்கை எடுக்க ஆகாஷ் பின் சீட்டில் அமர்ந்தான்.
 
  • Like
Reactions: Chitrasaraswathi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,121
2,806
113
அவர்களது வண்டியின் சப்தத்தைக் கேட்டு இருவரும் நந்தனாவின் வீட்டை நோக்கி கிளம்பி விட்டார்கள் என்று தெரிந்து கொண்டார் காயத்ரி.பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்துவிட்டுச் சமையலறை சுவரில் சாய்ந்து நின்றவரின் விழிகளில் ஓயாமல் கண்ணீர் வழிந்தது.

நீரஜின் பைக் கேட்டை தாண்டும் முன் வேகமாக உள்ளே நுழைந்தது டாட்டா சுமோ. அதைப் பார்த்த நீரஜ் அவசரமாக வண்டியை ஒடித்துத் திருப்பி வீட்டின் வாயிலுக்கு வந்தான்.

அதற்குள் சுமோவில் இருந்தவர்கள் தபதபவென்று இறங்கி உள்ளே சென்றனர்.

ஹாலில் தலையைக் கையால் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த நிகிலை நோக்கி சென்றவர்கள், அவன் சட்டையைப் பிடித்துக் கொத்தாகத் தூக்கி நிறுத்தி சரமாரியாக அடிக்கத் தொடங்கினர்.

கார் வந்து நின்ற சத்தமும்,ஆட்கள் தபதபவென்று உள்ளே வரும் சத்தத்திலும் சமையலறையிலிருந்து வெளியே வந்த காயத்ரியின் கண் முன்னே நிகிலை அடிக்க ஆரம்பித்தனர் நந்தனாவின் குடும்பத்தினர்.அதைப் பார்த்த காயத்ரி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கத்த ஆரம்பித்தார்.

ஆகாஷும், நீரஜும் அவர்களுக்கு நடுவில் புகுந்து நிகிலை காப்பாற்ற போராடினர்.

நந்தனாவின் தாய் மாமன் நிகிலின் சட்டையைக் கொத்தாக பற்றி “நீ பொட்டைப்பயன்னு கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்ல வேண்டியது தானேடா!இப்படி எங்க பொண்ணு வாழ்க்கையை வீணாக்கிட்டியேடா!”என்று மாறி மாறி அவன் கன்னங்களில் அறைந்தார்.

நிகிலோ எந்தவித உணர்வுகளையும் வெளிக்காட்டாது வெற்றுப் பார்வையுடன் அனைத்தையும் வாங்கிக் கொண்டு நின்றான்.

நீரஜ் அவரைப் பிடித்துத் தள்ளி நிகிலை தன்னுடன் இழுத்துக் கொண்டவன், ஒற்றை விரலை நீட்டி “என் தம்பி மேல ஒரு அடி விழுந்தாலும் கொலை விழும் சொல்லிட்டேன்.என்னங்கடா நினைச்சிட்டு இருக்கீங்க?உங்க பெண்ணை ஒழுங்கா வளர்க்காம இங்கே வந்து குதிக்கிறீங்க?”என்று சத்தம் போட்டான்.

அவன் சொன்னதைக் கேட்டு எகிறிப் பாய்ந்த நந்தனாவின் தந்தை நீரஜை அடிக்கக் கையை ஓங்கிக் கொண்டு வந்தவர் “யார் பெண்ணைப் பார்த்து என்ன வார்த்தை சொல்ற?வெட்டி கூறு போடணும்.நான் சொன்ன வார்த்தைக்காக,காதலை விட்டுக் கொடுத்து இவனைக் கட்டிகிட்டா என் பொண்ணு.ஆனா, இந்த ராஸ்கல் ஒரு பொட்டைன்னு தெரியாம போச்சே.இவன் குறையை மறைக்க இந்த ஒரு மாசமா அவளை மிரட்டி இருக்கான்.எங்க கிட்ட சொன்னா உன்னைப் பத்தி அசிங்கமா கதை கட்டி விடுவேன்னு சொன்னானாம்”என்று நிகிலின் மீது குற்றங்களைச் சுமத்தினார்.

அதுவரை பொறுமையாயிருந்த ஆகாஷ் “இதோ பாருங்க!உங்க பொண்ணு காதலிச்சவனோட ஓடுறதுக்காக இல்லாத கதையெல்லாம் கட்டுன்னா நாங்கெல்லாம் இளிச்சவாயனா என்ன ?”என்றான் ஆங்காரமாக.

அதைக் கேட்டு கொந்தளித்த நந்தனாவின் தந்தை “யாருடா ஓடுனா!இதோ நிக்கிறானே இவன் தான் என் பெண்ணை உன் தம்பி கிட்டேயிருந்து காப்பாத்தி கொண்டு வந்தது” என்று சொல்லி ராஜ் நோக்கி கை காட்டினார்.

அதுவரை அவர்களிடமிருந்து அடியை வாங்கிக் கொண்டு அவர்கள் பேசியதை எல்லாம் கேட்டுக் கொண்டு கல் போன்று நின்று கொண்டிருந்தவன் ராஜை நிமிர்ந்து பார்த்தான்.அந்த பார்வையைக் கண்டு பம்மி நந்தனாவின் பெரியப்பாவின் முதுகிற்குப் பின் மறைந்து கொண்டான் ராஜ்.

நிகில் முதன்முறையாக வாயைத் திறந்து “இவன் எப்படி அங்கே சரியான நேரத்துக்கு வந்தானாம்?”என்று கேட்டான்.

அதற்கு நந்தனாவின் தந்தை “அவர் பிரெண்ட் வராருன்னு ஏர்போர்ட் வந்திருக்கார். நல்லகாலம் கடவுள் என் பொண்ணுக்கு உதவியிருக்கு.இல்லேன்னா பாவி உன் கிட்ட மாட்டி என்ன நிலைக்கு வந்திருக்குமோ”என்று மேலும் அவன் முகத்தில் முஷ்டியை மடக்கி குத்தினார்.

உதட்டில் ரத்தம் ஒழுக நந்தனாவின் காதலனை கேவலமானதொரு பார்வை பார்த்தான்.



இரு தரப்பும் மேலும் மேலும் பேச வீடே களேபரம் ஆனது. தெருவே கூடி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது..சிறிது நேரம் வரை பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்த நிகில் “டேய்!நிறுத்துங்கடா!வீட்டை விட்டு வெளில போங்கடா நாய்ங்களா.இன்னும் ஒரு நிமிஷம் டைம் தரேன். எவனாவது இங்கே நின்னு கத்துனீங்க ஒரு பய விடமாட்டேன். அத்தனை பேரையும் அடிப்பேன்.மரியாதையா போயிடுங்க” என்றவன் அங்குச் சுவற்றோரம் சாய்த்து வைக்கப்பிடிருந்த கிரிக்கெட் பேட்டை கையில் எடுத்துக் கொண்டு ரௌத்திரமாக நின்றான்.

அவன் நின்ற தோற்றத்தில் அடிப்பான் என்பது புரிந்து மெல்ல ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்க, அவளின் தந்தை மட்டும் “உன்னை எங்கே பார்க்கணுமோ அங்கே பார்த்துகிறேண்டா.உன்னை நாரடிக்காம விடமாட்டேன்”என்று கத்திக் கொண்டே சென்றார்.

அத்தனை வருடங்களாக வாழ்ந்து வரும் தெருவில் மதிப்பும், மரியாதையுடன் இருந்தவர்களை ஒரே நாளில் அசிங்கபடுத்திவிட்டு சென்றனர்.

அதன்பின் நடந்த நிகழ்வுகள் என்னோட குடும்பத்தையே புரட்டிப் போட்டது என்று நினைவலைகளில் இருந்து மீண்டவன் ஸ்ருதியிடம் கூறினான்.

ஒரு பெண் இப்படி எல்லாம் கூட நடந்துக்குவா அப்படின்றதை நந்தனாவை பார்த்து தான் தெரிஞ்சுகிட்டேன்.தன்னோட தப்பை மறைக்க,எந்த வழியில் வேணுமானாலும் யோசிப்பான்னு அன்னைக்குத் தான் தெரிஞ்சுது.

அவன் சொன்னவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ருதிக்கும் அதே எண்ணம் தான்.எவ்வளவு

கேவலமான பெண்ணவள்!

அவங்க சொன்ன மாதிரியே ஒரு மாசத்திலேயே டிவோர்ஸ் நோட்டிஸ் வந்துது.நானும் சம்மதித்துக் கையெழுத்துப் போட கேஸ் நடந்தது.என்னை குடும்ப வாழ்க்கைக்கு லாயக்கில்லாதவன் என்று சொல்லி விவாகரத்து கேட்டிருந்தாங்க.

ஆணோ, பெண்ணோ தன்னோட சுயநலத்துக்காக அடுத்தவரை தாக்கும் போது அவங்களோட கேரக்டரை அசிங்கபடுத்தித் தான், தன்னோட காரியத்தைச் சாதிக்கிறாங்க.என் விஷயத்திலும் அதுதான் நடந்தது.

என்னோட உறவுகளே என்னை ஆண்மை இல்லாதவன்னு பேசுகிற நிலைமை வந்தது.மொத்தத்தில் ஒரு பெண்ணோட காதல் எங்க குடும்பத்தோட நிம்மதியை மொத்தமா அழிச்சு தரை மட்டமாக்கியது.

என்னதான் நியாயம் என்று ஒன்று இருந்தாலும் பெண்ணின் குரலுக்கும், பணத்திற்கும் தான் மதிப்பு.இங்கே ரெண்டு ஒன்று சேர்ந்ததில் எங்கள் பக்கம் ஞாயம் எடுபடவே இல்லை.

ஒரு வருஷம் கழிச்சு எனக்கும் அவளுக்குமான தீர்ப்பு வந்தது.

வழக்கு நடந்து முடிகிற வரை என்னுடைய வருத்தம், கோபம் எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சிட்டு ஒரு சாமியார் போல வக்கீல்கள் கேட்ட அருவெறுக்கத்தக்க கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னேன்.எல்லாத்தையும் பல்லைக் கடிச்சுகிட்டுப் பொறுத்துகிட்டேன்.

விவாகரத்து கிடைச்சதும் அவ வீட்டு ஆளுங்க எல்லாம் என்னிடம் வந்து மேலும் மோசமா பேசிட்டு போனாங்க.அவனும், அவளும் தாங்கள் நினைச்சதை சாதிச்ச திருப்தியில்இருந்தாங்க.அதோட அன்னைக்கே அவங்களுக்கு அந்த மாசத்திலேயே கல்யாணம் வேற ஏற்பாடு பண்ணி இருப்பதாகவும் பேசிகிட்டாங்க.

வழக்கின் தீர்ப்பு அவர்களுக்குச் சாதகமாக வந்ததில் வெற்றிக் களிப்பில் நின்று கொண்டிருந்தவளை பார்த்ததும், அதுநாள் வரை என் மனதில் கனன்று கொண்டிருந்த நெருப்பு கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

நேராக அவளிடம் சென்று “ஒரு வேசி கூடத் தன் கிட்ட வரவன் கொடுக்கிற காசுக்கு அந்த நேரத்தில் நேர்மையா இருப்பா.ஆனா, நீ அதை விடக் கேவலமானவ..தூ” என்று அவள் முகத்திலேயே காரி துப்பினேன்.

அதைக் கேட்டு கையை ஓங்கிக் கொண்டு வந்த ராஜிடம் “காதலிக்க மட்டும் தெரிஞ்சா பத்தாது.அதில் நேர்மையா நின்னு ஜெயிக்கணும்.இப்படி உன் காதலியை அடுத்தவனுக்குக் கட்டி வச்சு மாமா வேலை பார்க்கிற உன்னை விட, அடுத்தவங்க உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து உன் காதலியை உன்னோட காதலியா மட்டும் திருப்பிக் கொடுத்திருக்கேனே நான் தாண்டா ஆம்பிள்ளை”. என்றேன்.

நான் சொன்ன வார்த்தைகளை இருவரின் முகமும் கன்றி சிவந்து போனது.

அவன் சொன்னவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ருதிக்கு அதற்கு மேல் தாங்க முடியாமல் பொங்கி அழுதவள், பாய்ந்து சென்று அவன் வாயை மூடி “போதுங்க!வேண்டாம்!இனி, இதைப் பத்தி பேச வேண்டாம்!என்னால தாங்க முடியல”என்று அவன் நெஞ்சில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள்.
 
  • Like
Reactions: Chitrasaraswathi