Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 16 | SudhaRaviNovels

அத்தியாயம் - 16

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,830
113
அத்தியாயம் – 16

கண்களை மூடி அமர்ந்திருந்தவனின் முகம் மரணத்தின் வாயிலில் இருக்கும் ஒருவனின் முகம் போல் அத்தனை வலியையும், வேதனையையும் காட்டியது.

தன்னை விட அவனுக்கும் காயங்களும், வேதனைகளும் இருக்கும் போல என்றெண்ணி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

மெல்ல கண்களைத் திறந்தவன் எழுந்து வந்து அவள் காலடியில் அமர்ந்து கொண்டான்.பதறி எழுந்தவளை பிடித்து உட்கார வைத்து அவள் கைகளைத் தன் கைகளுக்குள் புதைத்துக் கொண்டவன் “இப்படியே இரு ஸ்ருதி.ப்ளீஸ்! நான் சொல்லப் போறதை இப்படி இருந்தே கேளு!” என்றான்.

அவன் தனது காலடியில் அமர்ந்த சங்கடத்திலிருந்தவளுக்கு, அவனது குரலில் இருந்த வேதனையும், அவனது கைகளில் தெரிந்த நடுக்கமும் அமைதியாக இருக்கச் சொன்னது.

“குடும்பத்தோட அன்பிலும், அரவணைப்பிலும் வளருகிற ஒவ்வொரு ஆணுக்குள்ளும் மனைவி என்கிற பிம்பம் வயது வந்த பிறகு, பொக்கிஷமாகப் பூட்டி வைக்கப்பட்டிருக்கும். திருமணக்

கனவு பெண்களுக்கு மட்டுமில்ல ஆண்களுக்கும் உண்டு.மனைவி என்கிற அந்தப் பிம்பம் மட்டும் தான் இருக்குமே தவிர, தனக்கென்று ஒருத்தி வந்த பின் தான் அந்தப் பிம்பம் முழுமையடையும்.”

அவன் பேசுவதையே இமைகளை மூட மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

நானும் அப்படித்தான்!

என் வாழக்கையில் பள்ளி, கல்லூரி காலங்களிலும் சரி, வேலை பார்க்கும் போதும் சரி பல பெண்கள் என்னைக் கடந்து போனார்கள்.ஆனால் குடும்பத்தினரால் எனக்காகப் பார்த்து வைக்கும் பெண்ணுக்காக என்னுடைய மனசை, என்னுடைய ஆசைகளை, என்னுடைய ரகசியங்களைப் பாதுகாத்துக் கொண்டிருந்தேன்.அழகான பெண்களைப் பார்க்கும் போது அந்தநிமிடம் ஒரு சராசரி ஆணாக ரசிப்பேன்.அதே சமயம் எனக்கே எனக்காக வரப் போகும் என் மனைவி தான் எனக்கு அழகி என்பதில் உறுதியாக இருந்தேன்.

“நான் எதிர்பார்த்த அந்தத் தருணம் வந்தது.மூன்று வருடங்களுக்கு முன்பொரு நாள் இரவு அம்மாவிடமிருந்து போன் வந்தது.பெண் பார்த்திருப்பதாகவும்,அவர்களைப் பொறுத்தவரை எல்லாமே திருப்தியாக இருப்பதாகக் கூறினார்கள். மெயிலில் போட்டோ அனுப்பியிருப்பதாகவும் அதைப் பார்த்துவிட்டு எனக்குப் பிடித்திருந்தால் மேற்கொண்டு பேசலாம் என்றார்கள்.

அம்மாவிடம் பேசி முடித்துவிட்டு மெயிலை ஓபன் செய்து பார்க்க தொடங்கினேன்.மனதிற்குள் இனம் புரியாத படபடப்பு.இன்பாக்சை ஓபன் செய்ய முடியாமல் கைகளில் ஒரு நடுக்கம்.எப்படி இருப்பாளோ? எனக்கு அவளைப் பிடிக்குமோ?இந்த பெண் எனக்கானவள் தானா? என்று ஆயிரத்தெட்டுச் சந்தேகங்களுடன் மெதுவாக அம்மா அனுப்பிய மெயிலை ஓபன் செய்தேன்.

அவள் படம் கண்முன்னே வந்ததும், மனதிலிருந்த படபடப்பு இதயத்தில் பிரதிபலிக்க ஆரம்பித்தது.என் கண்களுக்கு மிக அழகாகத் தெரிந்தாள்.இவள் எனக்கானவளா?இத்தனை அழகும் எனக்கேவா?அவளுக்கு என்னைப் பிடிக்குமா? என்று அடுத்தடுத்த கேள்விகள் என்னைச் சூழ்ந்தது.

தனது முதல் மனைவியைப் பற்றி அவன் வர்ணித்ததை ரசிக்க முடியாமல் அவஸ்த்தையுடன் அவனிடமிருந்து கைகளை உருவி கொள்ள முனைந்தாள்.துயரத்துடன் சொல்லிக் கொண்டிருந்தவன் அவள் கைகளை உருவி கொள்ள முயன்றதும் அவளது மனநிலையைப் புரிந்து கொண்டான்.

அவள் புறம் திரும்பி முகத்தைப் பார்த்து “உனக்கு இதைக் கேட்க பிடிக்காது தான்.ஆனா, எனக்காகக் கொஞ்சம் பொறுமையா முழுக்கக் கேளு ஸ்ருதி. இதுவரை என் மனதிலிருந்த துக்கத்தைப் பூட்டி பூட்டி வச்சிருந்தேன்.அதனோட பாதிப்பு தான் உன்கிட்ட காட்டிட்டேன்.தயவு செஞ்சு என்னைப் பேச விடு”என்று கெஞ்சினான்.

அவனது கெஞ்சலில் அவள் மனதிலிருந்த சஞ்சலங்கள் அகல அமைதியாக அமர்ந்தாள்.

எனக்குப் பிடிச்சிருக்குன்னு உடனே அம்மாவுக்குப் போன் பண்ணி சொல்லிட்டேன்.அதன்பிறகு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவள் படத்தைப் பார்ப்பது தான் வேலை.மனம் முழுவதும் அவள் தான். உலகத்தில் வேற வார்த்தைகளே இல்லாத மாதிரி நந்தனா-நந்தனா என்று ஒரே ஜபம்.நானோ இப்படிச் சுத்திக் கொண்டிருக்க, அம்மாவோ பெண் பார்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பிச்சாங்க.அவளுடைய புகைப்படம் வந்து பத்தே நாளில் அவளைப் பார்க்க சென்றேன்.

நெஞ்சத்தில் ஒரு பரபரப்புப் போட்டோவில் பார்த்த மாதிரி தான் இருப்பாளா இல்ல வேற மாதிரி இருப்பாளா?அவளைப் பார்த்த அந்த நிமிடம் இவள் தான் என் மனைவி என்று முடிவு செய்தேன்.அதே சமயம் அவளுக்கு என்னைப் பிடிக்க வேண்டுமே என்று கலக்கமும் எழுந்தது.அம்மாவிடம் சொல்லி அதையும் கேட்க சொன்னேன்.அவளுக்கும் சம்மதம் என்று தெரிந்தது.

அதே வாரத்தில் ஒருநாள் நான் ஊருக்கு போகும் முன் நிச்சயதார்த்தை நடத்தி விடலாம் என்று பேசி முடிவு செய்தார்கள்.எனக்கு அவளிடம் ஓரிரு வார்த்தைகள் பேச வேண்டும் என்று ஆர்வம் எழுந்தது.என்னை புரிந்து கொண்ட ஆகாஷ் அம்மாவிடம் சொல்லி அதற்கு ஏற்பாடு செய்தான்.

முதன்முறையாக நானும் அவளும் தனியறையில் சந்தித்தோம்.எனக்கு அவளை அவ்வளவு கிட்டே பார்த்த போது நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக் கொண்டது.அவளுமே குனிந்த தலை நிமிராது நின்றிருந்தாள். மெல்ல என்னை நிதானப்படுத்திக் கொண்டு “உட்காரு நந்தனா”என்று சொல்லி அவள் எதிரே இருந்த நாற்காலியில் நானும் அமர்ந்து கொண்டேன்.

அவள் அமர்ந்ததும் அவளது அழகை கண்களால் நிறைத்துக் கொண்டே “உன்னைப் போலவே உன் பெயரும் ரொம்ப அழகாயிருக்கு”என்றேன்.

அவளோ தலையை நிமிர்த்தாது “தேங்க்ஸ்” என்றாள்.

“என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?”

“ம்ம்..” என்று ஒரே வார்த்தையில் பதிலளித்தாள். சரி என்னைக் கண்டு தயங்குகிறாள் என்றெண்ணி மேலும் பேச்சுக் கொடுக்காமல் என்னுடைய போன் நம்பரை அவளுக்குக் கொடுத்து அவளுடையதை வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.

மனமோ குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தது. குடும்பத்திலுள்ளவர்கள் எல்லாம் என்னை ஓட்டி எடுத்தனர்.அதற்காகவெல்லாம் நான் அசரவில்லை.இரவானதும் அவளிடம் போனில் பேசத் தொடங்கினேன்.ஆரம்பத்தில் சற்று தயங்கியவள் நிச்சயதார்த்திற்குள் இயல்பாகப் பேச ஆரம்பித்தாள்.

இரு மாதங்களுக்குப் பிறகே மண்டபம் கிடைத்ததால், அந்தத் தேதியில் திருமணம் முடிவாயிற்று.நிச்சயத்தன்று தனிமையில் பேசும் போது அவள் கைகளைப் பிடித்துக் கொள்ள முயன்றேன்.
 
  • Like
Reactions: Chitrasaraswathi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,830
113
“ப்ளீஸ்!இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்.இப்போ டச் பண்ணாம பேசுங்க”என்றாள்.

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா?

ஊருக்கு வந்த பின்பும் நான் போனில் பேசுவதை நிறுத்தவில்லை.என்னுடைய நாட்கள் மிக அழகானதாகிப் போனது.ஒவ்வொரு விடியலும் அவளது நினைவுகளுடனே தொடங்கி, அவளது நினைவுகளுடனே முடிந்தது.போனில் பேசும் போது என்னைப் பற்றி, என் ஆசைகளைப் பற்றி, என் கனவுகள் என்று என் மனைவிக்காக இத்தனை நாள் பொத்தி பாதுகாத்து வைத்த ரகசியங்கள் அனைத்தையும் அவளிடம் பகிர்ந்து கொண்டேன்.

பார்த்த இடத்திலெல்லாம் அவளது முகமே தெரிந்தது.ஏதாவது ஒரு பொருளை ரசித்தால் இது அவளுக்குப் பிடிக்குமோ என்று வாங்கிச் சேகரிக்க ஆரம்பித்தேன்.அவளும் என்னிடத்தில் பேசும் போது உள்ளுக்குள் சிறு தயக்கமிருந்தாலும் நாளடைவில் ஒரு நண்பனிடம் பேசுவது போல் பேசத் தொடங்கினாள்.

திருமணத் தேதி நெருங்கிய போது அவள் எனக்கானவள் என்கிற எண்ணம் மறைந்து என்னில் அவள் என்ற எண்ணம் உறுதியானது.

அவன் பேசும்போது, முகத்தில் மாறிமாறி வந்து போன கலவையான உணர்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ருதி. நந்தனாவை பற்றி அவன் பேசியதை கேட்டு வலித்தது.

இது அவன் கடந்தகாலம்! அவன் மனதை கீறி காயப்படுத்திய நிகழ்வுகளைக் கேட்டால்தான் ஏதாவது தீர்வு கிடைக்கும் என்றெண்ணி அவன் பேச்சில் கவனத்தை வைத்தாள்.

இரு குடும்பத்தினரின் ஆசியுடன் கோலாகலமாக நடந்து முடிந்தது திருமணம்.நான் பல நாட்களாக எதிர்பார்த்த தனிமையும் வந்தது.

மெல்லிய கொலுசொலியும், வளையோசையும் என் உணர்வுகளைத் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தது.மயில்கழுத்து வண்ண மைசூர் சில்க்கில் தேவதை போல உள்ளே நுழைந்தவள், திரும்பி கதவிற்குத் தாள் போடுவதற்குள் என் மனம் பரபரத்தது.

அவளோ என்னைப் பார்த்து மிகச் சாதரணமாக “ரொம்ப நேரம் வெயிட் பண்ணிட்டு இருந்தீங்களா?அலங்காரம் பண்றேன்னு ரொம்பப் படுத்திட்டாங்க”என்றவள் ஒரு நிமிஷம் நான் போய் டிரஸ் சேஞ் பண்ணிட்டு வரேன்”என்று அங்கே வைத்திருந்த நைட்டியை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

எனக்குச் சற்று நேரம் ஒன்றுமே புரியவில்லை.இவள் என்ன செய்கிறாள்?ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என்று புரியவில்லை.அந்த நேரம் குளியலறையை விட்டு வெளியில் வந்தவள் “தூங்கலாமா?ரெண்டு நாளா செம டயர்ட்” என்றாள்.

அதற்கு மேல் என்னால் பொறுக்க முடியவில்லை “நந்து! இன்னைக்கு நமக்குப் பர்ஸ்ட் நைட்” என்றேன்.

என்னைச் சற்று கிண்டலாகப் பார்த்தவள் “சோ வாட்?”என்றாள்

“கல்யாணத்துக்கு முன்னே டச் பண்ணாதேன்னு சொன்ன சரி.ஆனா, இப்போ இந்த மாதிரி ஒரு சந்தர்பத்தில் நீ நடந்துக்கிற விதம் எனக்குப் புதுசாயிருக்கு”என்றேன்.

என்னை விநோதமாகப் பார்த்தவள் “இங்கே பாருங்க! நான் உடைச்சு சொல்லிடுறேன். எனக்கு இங்கே உங்க வீட்டில் அந்த மாதிரி இருக்கப் பிடிக்கல.நான் கம்பர்டபிலா இல்லை.அதனால துபாய் போய்ப் பார்த்துக்கலாம்”என்றவள் “இதுக்கு மேல என்னைத் தொந்திரவு பண்ண மாட்டீங்கன்னு நினைக்கிறேன்” என்று சொல்லி படுத்துறங்க ஆரம்பித்தாள்.

முதன்முறையாக என்னுள் சலிப்பு எழுந்தது. என்ன பிறவி இவள்!

என்னதான் நாகரீகமாக வளர்ந்திருந்தாலும் இந்தச் சமயத்தில் மனதிற்குள் ஒரு எதிர்பார்ப்பு, ஒரு பயம், மெல்லிய வெட்கம் என்று எந்தப் பெண்ணுக்கும் எழுவது தான். இவளோ எதுவுமே இல்லாது, என்னை ஒரு மனுஷனாகக் கூட மதிக்காமல் நடந்து கொள்கிறாளே என்று எண்ணம் தோன்றியது.

அன்று இரவு முழுவதும் உறங்கா இரவாகப் போனது.இந்த நாளுக்காக எத்தனை கனவுகளுடன் காத்திருந்த என மனதில் முதல் கீறல் விழுந்தது.

அடுத்தடுத்து வந்த நாட்களிலும் என்னுடன் இயல்பாகப் பழகினாலும் கிட்ட நெருங்க விடாமல்தான் தள்ளி நிறுத்தி வைத்திருந்தாள்.என் வீட்டு ஆட்களுடன் பழகும் போதும் அந்த இடைவெளியை என்னால் கண்டு கொள்ள முடிந்தது.அவ்வப்போது பட்டும்படாமலும் அவளிடம் நெருங்க முயற்சி செய்தேன்.அதையெல்லாம் மிக நாசுக்காகத் தவிர்த்தாள்.

மனதிற்குள் சந்தேகம் எழ ஆரம்பித்தது. இவளுக்கு உடலளவில் ஏதும் பிரச்சனை இருக்குமோ என்று.எங்கள் திருமணம் முடிந்து பதினைந்து நாட்கள் ஆன போது அவளாக என்னிடம் வந்து “நாம எப்போ துபாய் போறோம்?” என்று கேட்டாள்.

அதைக் கேட்டதும் அதுவரை சந்தேகத்தில் உழன்று கொண்டிருந்த என் மனது மகிழ்ச்சியில் குதித்தது.அப்போ அவளும் என்னுடன் வாழ தயாராகத் தான் இருக்கிறாள்.புது இடமாக, புதிய மனிதர்களின் நடுவே இருப்பதில் சற்றுத் தடுமாற்றம் இருக்கிறது போலும். அதை நான் தான் தவறாகப் புரிந்து கொண்டேன் என்று குஷியானேன்.

“உனக்கு விசா வரதுக்காகத் தான் வெயிட் பண்றோம்.வந்ததும் கிளம்பலாம்”என்று கூறியதை கேட்டு தலையாட்டிக் கொண்டாள்.

மேலும் பத்து நாட்கள் கடந்த நிலையில் “எப்போ தான் விசா வரும்?” என்று எரிச்சலுடன் கேட்டாள்.

அவளுடைய தவிப்பை பார்த்ததில் மகிழ்ந்து போய் “அவ்வளவு அவசரமா துபாய் போய் என்ன செய்யப் போறீங்க?”என்றேன்.

“ம்ச்..நீங்க வேற! மனுஷனோட அவஸ்த்தை புரியாம பேசிகிட்டு”என்று சலித்துக் கொண்டு சென்றாள்.

அவளது அந்தத் தவிப்பை பார்த்தபின் அவளது ஒவ்வொரு செய்கையும் குழந்தையின் செயல்களாகத் தோன்றியது.

அதுவரை அவள் மேல் தோன்றியிருந்த சந்தேகம், கோபமெல்லாம் மறைந்து மீண்டும் அவளின் ஒவ்வொரு செய்கையும் அவளறியாமல் ரசிக்கத் தொடங்கினேன்.அங்கிருந்த நாட்களில் கிட்ட நெருங்க விடாமல் செய்தாளே தவிரத் தன் மனதிலிருந்தவற்றை எல்லாம் என்னிடம் பகிர்ந்து கொள்ளத் தொடங்கி இருந்தாள்.

ஆம்! அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

பத்து நாட்கள் விரைந்து ஓடியது.விசா வந்து நாங்கள் கிளம்பு நாளும் வந்தது.அதுவரை ஒரு சோர்வுடனே சுற்றிக் கொண்டிருந்தவள் துபாய் கிளம்பும் முதல்நாள் அதுவரை காட்டாத ஜாலங்களை எல்லாம் காட்டினாள்.எல்லோரும் அவளது பரபரப்பை கண்டு சிரித்துக் கொண்டோம்.

ஓடி ஓடி தனது துணிமணிகளைப் பாக் செய்வதும்,தனியாக நின்று சிரித்துக் கொள்வதும் என்று தனது மகிழ்ச்சியைப் பலவாறு வெளிப்படுத்தினாள்.அன்று இரவு அவள் முதலிலேயே சென்று படுத்துவிட, நான் எல்லோரிடமும் கதை பேசிக் கொண்டிருந்துவிட்டு நேரம் கழித்து அறைக்குச் சென்றேன்.

கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்ததுமே என் பார்வையில் கால்களை மடக்கி குழந்தை போல் தூங்கி கொண்டிருந்தவள் பட, அவளது அழகில் மயங்கி நின்றேன்.என் மனதில் உறங்கி கொண்டிருந்த உணர்வுகள் தலைதூக்க மெல்ல அடியெடுத்து அவளருகில் சென்று குனிந்து பட்டும் படாமலும் இமைகளில் இதழ் பதித்தேன்.

இதழொற்றலில் விழித்தவள் அருகே தெரிந்த முகத்தைக் கண்டு படாரென்று எழுந்தமர்ந்தாள்.

உணர்வுகளின் பிடியிலிருந்த நான் அவளிடையில் கை வைத்து மேலும் நெருங்கி “ஐ நீட் யூ பேபி” என்று கிசுகிசுத்தேன்.

சட்டென்று நான் சிறிதும் எதிர்பார்க்கும் முன், நெஞ்சில் கை வைத்து தன்னிடமிருந்து பிடித்துத் தள்ளினாள்.

மடாரென்று தலை அடிபடத் தரையில் மல்லாக்க விழுந்தேன்.

“உங்களுக்கு ஒருதடவை சொன்னா புரியாது.எனக்கு இங்கே கம்பர்டபிலா இல்லைன்னு. அதன் பிறகும் இப்படி நடந்துக்க அசிங்கமாயில்ல? என்றாள்.

ஆழிப் பேரலையாகப் பொங்கிய உணர்வுகள் அடங்கி, அவளின் நடத்தையில் கோபம் சுறுசுறுவென்று உச்சி மண்டைக்கு ஏறியது.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,830
113
“என்ன நினைச்சுகிட்டு பேசுற? புருஷன் பொண்டாட்டிகிட்ட இப்படி நடந்துகிறது அசிங்கம்ன்னு யார் சொன்னா?”

“விதண்டாவாதம் பண்ணாதீங்க. நான்தான் அன்னைக்கே சொன்னேனே.துபாய்ப் போனதும் பார்த்துக்கலாம்ன்னு.இதோ நாளைக்குக் காலையில கிளம்பப் போறோம்.ஏன் அதுவரை பொறுத்துக்க முடியாதா?”

ஒருமாத காலமாக அடக்கி வைத்திருந்த உணர்வு வெளிப்பட்டு அடங்கிப் போனதில் இருந்த எரிச்சல் அவள் பேசியதில் எகிறிக் குதித்தது.

“ஏய்!என்ன பேசுறோம்னு யோசிச்சு தான் பேசுறியா?”

“எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறேன்.இதோ பாருங்க எனக்குத் தூக்கம் வருது.அனாவசியமா நேரத்தை கடத்தாம படுத்து தூங்குங்க.காலையில கிளம்பனும்.”

மலை போல் எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டு “நீ சம்மதிச்சு தான் இந்தக் கல்யாணம் நடந்துதா?”என்று கேட்டேன்.

சற்று அதிர்ந்த பார்வையை வெளிப்படுத்தியவள் “மூவாயிரம் கிலோமீட்டர் தள்ளியிருக்கிற ஊருக்கு உங்களை நம்பி தான் வரப் போறேன்” என்றாள்.

நான் கேட்டதற்குப் பதில் தராமல் அவளாக ஒன்று பேசியதில் எழுந்த கடுப்பில் “நான் என்ன கேட்டேன் நீ என்ன சொல்ற?”என்றேன்.

என்னுடைய குரலில் தெரிந்த கோபத்தைக் கண்டு சற்று தழைந்து போனவள் “ப்ளீஸ்!எனக்குத் தூக்கம் வருது.நான் முதன்முதலா ப்ளேன்ல போகப் போறேன்.என்னை கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்க விடுங்க”என்று சொல்லி படுத்துக் கொண்டாள்.

இரெண்டாவது முறையாக என் மனதில் பெரிய கீறலாக விழுந்தது.அவளிடத்தில் எதுவோ சரியில்லை என்பது உறுதியடைந்தது.

காலை சீக்கிரம் எழுந்து குளித்து முடித்துப் பார்த்து பார்த்து அலங்காரம் செய்து கொண்டிருந்தாள்.. முதல்நாள் நடந்த சம்பவத்தின் தாக்கம் எதுவும் அவளிடத்திலில்லை.

“என்ன உட்கார்ந்திருக்கீங்க.நேரமாச்சுப் போய்க் குளிச்சிட்டு கிளம்புங்க” என்று அதட்டினாள்.

மனதும், உடலும் சோர்ந்து போன நிலையிலிருந்தேன்.மண்டை காய்ந்து போனது.இவளுக்கு என்ன பிரச்சனை.நேற்று நடந்த விதம் என்ன இன்று இருக்கும் நிலை என்ன.

என் குடும்பமும், அவள் குடும்பமும் எங்களை வழியனுப்ப நாங்கள் துபாய் விமானத்தில் ஏறினோம்.மனைவியுடன் போகிறோம் என்கிற எந்தவித ஆர்வமுமில்லாமல் அவளை நினைத்து குழம்பி போய் அமர்ந்திருந்தேன்.அவளோ டேக் ஆப் ஆகும் போது பயத்துடன் இறுக விழிகளை மூடி அமர்ந்திருந்தாள்.அவளை அப்படியே என் தோளோடு சேர்த்தணைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எழ, அந்தச் சமயத்தில் முதல்நாள் சம்பவம் நியாபகம் வந்தது.எதையாவது செய்யப் போய் எல்லோருக்கும் மத்தியில் அசிங்கப்படுத்தி விட்டால் என்ன செய்வது என்று பயந்து விழிகளை மூடிக் கொண்டேன்.

பயணம் முடியும் வரை இருவரும் பேசாமலே இருந்தோம்.அவள் அமைதியாக எதிரிலிருந்த டிவியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.நானோ மனதிற்குள்ளேயே என்னை நினைத்துச் சிரித்துக் கொண்டேன்.துபாயிலிருந்து வரும் போது எத்தனை கனவு.மனைவியுடன் திரும்பி ஊருக்கு போகும் போது இப்படிப் போக வேண்டும், அவளுக்கு அதைச் செய்ய வேண்டும்., இதைச் செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டு வந்ததென்ன.இப்போது சென்று கொண்டிருக்கும் நிலை என்ன என்று நினைத்தேன்.

சற்று நேரத்தில் தரையிறங்கப் போவதாக விமானியிடமிருந்து அறிவிப்பு வந்தது.அதை கேட்டதும் அதுவரை அமைதியாக இருந்தவள் “இறங்க போறோமா?கீழே இறங்கினதுக்குப் பிறகு எவ்வளவு நேரமாகும் வெளியே போக?”என்று சரமாரியாகக் கேள்விகளைத் தொடுத்தாள்.

அவளுடைய கேள்விகளுக்குப் பதிலளித்துப் பெல்ட் போட்டுக் கொள்ளச் சொல்லிவிட்டுக் கண்களை மூடிக் கொண்டேன்.

அவளோ பயத்தையெல்லாம் உதறிவிட்டு பரபரப்புடனே இருந்தாள்.

விமானம் தரையிறங்கியதும் எங்கள் கைகளிலிருந்த லக்கேஜை எடுத்துக் கொண்டு விமான நிலையத்திற்குள் நுழைந்தோம்.முதலில் இமிக்ரேஷன் வேலைகளை முடித்துக் கொண்டு பெட்டிகளை எடுக்கச் சென்றோம்.அங்கே அவள் இரு டிராலிகளை எடுத்து வந்து பெட்டிகளை எடுத்து வைத்தாள்.

“எதுக்கு ரெண்டு?ஒன்னு போதுமே?”என்றேன்.

“நான் ஒன்னு எடுத்திட்டு வரேன் நீங்க ஒன்னு எடுத்திட்டு வாங்க”என்றாள்.

சரி எதையாவது செய்து கொள்ளட்டுமென்று டிராலிகளைத் தள்ளிக் கொண்டு நடந்தோம்.அவளது பார்வை அங்குமிங்கும் அலைபாய்ந்தது.ஏர்போர்ட்டை விழிவிரிய பார்க்கிறாள் என்றெண்ணி உள்ளுக்குள்ளுள் சிரித்துக் கொண்டேன்.

சிறிது நேரத்தில் என் நிலைமையே சிரிப்பாய் சிரிக்கப் போகிறது என்றறியாமல்.

வெளியில் செல்லும் வழியை நோக்கி நடந்தோம். என்னுடன் நடந்து கொண்டிருந்தவள் திடீரென்று டிராலியை அப்படியே விட்டுவிட்டு வேறு திசையில் ஓடினாள்.

அவள் ஓடிய திசையில் பார்த்த எனக்குப் பேரதிர்ச்சி.

அங்கே அவள் ஒருவனைக் கட்டிபிடித்து முகம் முழவதும் முத்தமிட்டுக் கொண்டிருந்தாள்.அவனும் அவளைத் தன்னுடன் இறுக்கி அணைத்துக் கொண்டிருந்தான்.என்னுடைய மூளை ஒருநிமிடம் மரத்து போனது.என்ன நடக்கிறது என்பதை என்னால் உணர்ந்து கொள்ளவே இயலவில்லை.அப்படியே மரம் போல அவர்களைப் பார்த்துக் கொண்டு நின்றேன்.
 
  • Like
Reactions: Chitrasaraswathi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,830
113
அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ருதிக்கும் ஒன்றும் புரியவில்லை. தனது மனதிலிருந்த பாரம் முழவதையும் கைகளில் காட்டி அவளது கைகளை அழுத்திப் பிடித்திருந்தான். அவன் அப்படிப் பிடித்ததில் கை வலித்தது.அதையும் மீறி அவனது மனநிலையை உணர்ந்து அந்த வலியை பொறுத்துக் கொண்டாள்.

என்னை மறந்து நின்றது ஒரு நிமிடம் தான்.உடனே சமாளித்துக் கொண்டு வேக நடையுடன் அவர்களிடம் சென்றேன்.அவர்கள் இருவருமே என்னைக் கவனிக்கும் நிலையில்லை.என்னால் அதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாமல் மெல்ல செருமினேன்.அதைகேட்டுத் தன்னை முதலில் சமாளித்துக் கொண்ட அந்தப் புதியவன் என்னை நோக்கி கையை நீட்டி “ஹாய் ஐ அம் ராஜ்”என்றான்.

நந்தனா அப்போதும் அவன் கையணைப்பில் இருந்தாள்.

அதற்கு மேல் என்னால் பொறுமையாக இருக்க முடியாமல் அவளிடம் திரும்பி “நந்தனா! என்ன இது?” என்றேன் கோபமாக.

அப்போது தான் என்னைப் பார்ப்பது மாதிரி பார்த்தவள் அவனிடம் திரும்பி “ஒருநிமிஷம் ராஜ்!”என்றவள் தன் கைப்பையிலிருந்து எதையோ தேடி எடுத்தாள்.

“இந்தாங்க! உங்க பொருளை உங்க கிட்ட ஒப்படைச்சிட்டேன்.இவர் என் லவ்வர் ராஜ்.நானும் இவரும் மூணு வருஷமா லவ் பண்றோம்.எங்க வீட்டில் சம்மதிக்கல.இவருக்கு இங்கே வேலை கிடைக்கும் வரை பொறுமையா இருந்து இங்கே வந்துடலாம்ன்னு இருந்தோம்.அப்போ தான் உங்களை எனக்கு மாப்பிள்ளையா பார்த்தாங்க.எங்க வீட்டிலேயும் பிரச்சனை பண்ணிக்காம ஈசியா வெளிவரதுக்கு இதுதான் நல்ல வழின்னு தோனுச்சு.விசா எடுக்கவும் உங்களை யூஸ் பண்ணிகிட்டோம்” என்று என் தலையில் இடியை இறக்கினாள்.

அவள் சொன்ன செய்தி என் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போலிருந்தது.அவள் என் கைகளில் கொடுத்த பொருளோ என்னைப் பைத்தியம் பிடிக்க வைத்தது.

சுற்றமும்,நட்பும் சூழ முப்பத்து முக்கோடி தேவர்களும் ஆசிர்வதித்து அவள் கழுத்தில் நான் கட்டிய தாலியை என் கைகளில் தந்திருந்தாள்.

அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ருதி அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றாள்.அவள் இதை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை.அந்த குளிரான நேரத்திலும் பழைய நினைவுகள் தந்த வலியில் அவன் நெற்றியில் வியர்வை துளிகள் ஆங்காங்கே பூத்தது.

அவனது நிலையை உணர்ந்தவள் தனக்கும் அவனுக்குமிடையே மனக்கசப்பை மறந்தாள்.

அவனைத் தன் நெஞ்சோடு சேர்த்தணைத்துக் கொண்டாள்.

“ஐயோ!எப்படி அதைத் தாங்கி கிட்டீங்க.என்னாலேயே முடியலையே.உங்களுக்கு அந்தநேரம் எப்படி இருந்திருக்கும்”என்று கண்களில் கண்ணீர் பொங்கி வழிய வாய்விட்டு புலம்பினாள்.

“அந்த நிமிஷத்திலிருந்து செத்த பொணமா ஆனேன் .பெரிய கூட்டத்துக்கிடையில் ஆடையில்லாம என்னை நிக்க வச்ச மாதிரி கூசி கூனி குறுகி போயிட்டேன்.”

எவனையோ மனசில் நினைச்சுகிட்டு இருந்தவக் கிட்ட போய் முதல்நாள் கணவனா நடக்கப் பார்த்தேனே.அதைவிட அசிங்கம் என்ன வேணும்.என் உடம்பெல்லாம் அருவெறுத்து போச்சு.

என்னுடைய ஆசாபாசங்களை எல்லாம் பகிர்ந்து கிட்டப்ப கூட, டேய்!இது எனக்குப் பிடிக்காத கல்யாணம்.என் மனதில் வேறொருத்தன் இருக்கிறான் என்று சொல்லி இருக்கலாமே.

என்னை நம்ப வச்சு ஏமாத்தியிருக்கா.எத்தனை பெரிய நம்பிக்கை துரோகம் தன்னையும் மீறி குலுங்கி அழ ஆரம்பித்தான்.

அழுகையினூடே அவ கிட்ட ஏதோ குறை இருக்குன்னு நினைச்சேனே தவிர இப்படி ஒரு சம்பவத்தை எதிர்பார்க்கவே இல்லை.அதோட விட்டாளா பாவி என்னை அனுஅனுவா சித்ரவதை பண்ணினா.

நான் கட்டின தாலியை எடுத்து கொடுத்ததோட தன் கடமை முடிந்த மாதிரி நீங்க எடுத்து கொடுத்த முஹுர்த்த புடவை,உங்க அம்மா இங்கே வரதுக்காகக் கொடுத்த திங்க்ஸ் எல்லாம் உங்க டிராலில உள்ள பெட்டில வச்சிருக்கேன் எடுத்துகோங்கன்னு அலட்சியமா சொன்னா.

ஒரு திருமணத்தோட மதிப்பு அவ்வளவு தானா?எவனையோ நெஞ்சில் சுமந்து கொண்டு இன்னொருவனை விசாவுக்காகக் கல்யாணம் பண்ணிகிட்டேன்னு சொல்லி ஒருநிமிஷத்தில் அதற்கான மரியாதையைக் கொடுக்காம தூக்கி எறிஞ்சிட்டாளே..

அந்த ராஜிற்கு என்னுடைய உணர்வுகள் புரிந்தது போலும், மெல்ல அருகில் வந்து “விசா மாத்துறதுக்கும்,விவாகரத்து பண்றதுக்கும் சில கையெழுத்து தேவைப்படும்.அப்போ உங்களுக்குச் சொல்றேன் போட்டுடுங்க.என் நந்துவை என்கிட்ட பத்திரமா ஒப்படைச்சதுக்குத் தேங்க்ஸ்”என்று என் கையை இழுத்து தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றான்.

அந்தநிமிடம் அப்படியே உறைந்து போனது.என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை மறந்தேன்.நான் எங்கே இருக்கிறேன் என்பதை மறந்து அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்தவன் தான்.முழுதாக ஒருநாள் ஏர்போர்ட்டிலேயே அதே இடத்தில் அமர்ந்திருந்தேன்.

எத்தனை கனவுகள், எத்தனை கற்பனைகள் எல்லாம் ஒரே நிமிடத்தில் கலைந்து போன கனவுகளாகி போனது.பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும், பெண்ணைத் தோழியாகப் பார்க்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கப்பட்ட ஒரு குடும்பத்திலிருந்த வந்த நான் அன்று ஒரு பெண்ணால் மிக மோசமாக ஏமாற்றப்பட்டு, அவமானப்பட்டு, அசிங்கப்பட்டுக் கல்லாகச் சமைந்திருந்தேன்..

மனைவி என்கிற மாயப் பிம்பம் கண்முன்னே உடைந்து சுக்கல் சுக்கலாக நொறுங்கி போனது.
 
Need a gift idea? How about a breakfast sandwich maker?
Buy it!