Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 16 | SudhaRaviNovels

அத்தியாயம் - 16

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் – 16

காலை நேர பரபரப்பில் அக்காவும் தங்கையும் இருக்க, வசந்தா அவர்களுக்கு தேவையானதை செய்து கொண்டிருந்தார். அந்நேரம் வாயில் மணி அழைக்க யாராக இருக்கும் என்கிற யோசனையுடன் சென்று கதவை திறந்தாள் வர்ஷு. அங்கே மாமா நின்றிருந்தார். அந்த நேரம் அவரை எதிர்பார்க்காதவள் “வாங்க மாமா” என்றழைத்து விட்டு உள்ளே சென்றாள்.

மகனை பார்த்த வசந்தா “என்ன ராஜேந்திரா இந்நேரம் வந்திருக்க?” என்றார் குழப்பத்துடன்.

“ஒண்ணுமில்லம்மா அந்த நிலம் இன்னைக்கு பதிவு பண்ண ஏற்பாடாகி இருக்கு. அதுக்கு தான் ரெண்டு பேரும் கிளம்புறதுக்கு முன்னே வந்துட்டேன்”.

“ஒ..அப்படியா” என்றவர் வர்ஷினியிடம் திரும்பி “மாமாவுக்கு காப்பி கொண்டு வா” என்றார்.

தான்யாவோ பள்ளி சீருடையில் வந்து நின்று “அக்கா மட்டும் வந்தா போதுமில்ல மாமா? நான் ஸ்கூல் போகவா?” என்றாள்.

“இல்லடா நீயும் வரணும்” என்றார்.

அதே நேரம் கேஷ்வி ஹோட்டலில் இருந்து கிளம்பி வர்ஷினியை சந்திக்க அவளின் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். முதலில் நேரடியாகப் பேசி சித்தார்த்தின் வாழ்க்கையில் இருந்து விலக சொல்லிப் பார்க்க வேண்டும் என்பது அவளின் எண்ணம். அதற்கு மறுத்தால் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

சித்தார்த்தும் வந்து இறங்கி இருக்க அவனது நண்பர்கள் கூட்டம் ஹோட்டலில் கூடி இருந்தது. வெகு நாட்களுக்குப் பிறகு நடந்த சந்திப்பு ஆகையால் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தங்களின் பிரிவை ஈடுகட்டிக் கொண்டிருந்தனர்.

“நீ இப்படி பண்ணுவேன்னு கொஞ்சம் கூட நினைக்கல சித்து. வர்ஷு ரொம்ப உடைஞ்சு போயிட்டா” என்றான் சரவணன்.

அதன் பின்னர் அன்று நடந்தவைகளை எல்லாம் அவர்களிடம் சொல்லியவன் தன் வாழ்க்கையின் முக்கியம்மான நிகழ்வுகளை அவர்களுடன் பகிர்ந்து கொண்டான். அதைக் கேட்டதும் அவனது நிலை புரிய, வர்ஷிணியின் பெற்றவர்கள் இறந்த சம்பவத்தை அவனிடம் கூறினார்கள். அதைக் கேட்டு அதிர்ந்து போனான். தானும் அவளை விட்டு விலகிச் சென்றிருக்க, பெற்றவர்களையும் இழந்து எப்படி நொறுங்கிப் போயிருப்பாள் என்றெண்ணி முகம் கசங்கிப் போக “இதை நான் எதிர்பார்க்கவே இல்ல சரவணா” என்றான் உடைந்த குரலில்.

அவன் காதருகே குனிந்து மெல்லிய குரலில் “அது கூட வேண்டுமென்றே செய்யப்பட்ட விபத்துன்னு சந்தேகப்படுறாங்க சித்து. உன்னுடைய ஆட்களோட வேலையாக இருக்குமோன்னு தோணுது. இது தெரிந்தால் வர்ஷூ உன்னை அதிகம் வெறுக்க காரணமாகிடும்”.

மனதிற்குள் எழுந்த எரிமலையை அடக்கிக் கொண்டவன் “நிச்சயமாக அவர்கள் வேலையாகத் தான் இருக்கும். விட மாட்டேன் சரவணா. ஒவ்வொருத்தரையும் இதுக்கு பதில் சொல்ல வைக்காம விட மாட்டேன்”.

“இப்போ உன் ப்ளான் என்ன?”

அவனிடம் அன்று நடக்கவிருப்பவற்றை கூறியவன் “கேஷ்வி வந்திருக்கா சரவணா. அவள் முந்திக் கொள்ளும் முன் நான் அனைத்தையும் முடித்துக் கொண்டு வர்ஷுவை இங்கிருந்து அழைச்சிட்டுப் போயிடுவேன்” என்றான்.

“ம்ம்...நாங்க என்ன செய்யணும்?”

அவனிடம் சில பல வேலைகளை செய்ய சொன்னவன் அவனை அணைத்து விடுவித்து “தேங்க்ஸ்-டா! என்னைச் சுற்றி எந்த உறவுகளுமே உண்மையாக இல்லை வர்ஷினியையும் உங்களையும் தவிர. எல்லாம் சரியானதும் உங்களை எல்லாம் வந்து பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு அறைக்குச் சென்று விட்டான்.

சரவணனும் மற்றவர்களும் அவன் சொன்ன வேலைகளை கவனிக்க சென்று விட, முக்கியமான போன் காலுக்காக காத்திருந்தான் சித்தார்த். அதே நேரம் பத்திர பதிவிற்காக மாமாவுடன் இருவரும் கிளம்பி வாசலுக்கு வரும் நேரம் படகு போன்ற கார் வந்து வழியை மறைத்து நின்றது.

தங்கள் வீட்டின் முன்னே வந்து நின்ற காரை யோசனையுடன் பார்த்தபடி நின்றிருந்தாள் வர்ஷினி. காரின் கதவைத் திறந்து கொண்டு இறங்கிய கேஷ்வியோ வர்ஷினியை பார்வையாலேயே எடை போட்டுக் கொண்டிருந்தாள். அவளது மனமோ இவளுக்ககவா அவன் தன்னை ஒதுக்கிறான் என்று எண்ணம் எழுந்தது. அழகில் தன்னை விட அவள் ஒன்றும் பிரமாதம் இல்லை. அப்படி என்ன தான் காதலோ என்கிற யோசனையுடன் அவர்களின் முன்னே வந்து நின்றாள்.

தான்யா தான் முந்திக் கொண்டு “யார் நீங்க?” என்றாள்.

வர்ஷூவோ உடல் இறுக வாயை அழுந்த மூடியபடி அவளை பார்த்துக் கொண்டிருந்தாள். தான்யாவைப் பார்த்து சிரித்த கேஷ்வி “உள்ளே கூப்பிட மாட்டியா?” என்றாள் வர்ஷூவைப் பார்த்து.

அவள் வர்ஷினியிடம் பேசவும் அவசரமாக திரும்பிய தான்யா “அக்கா இவங்களை உங்களுக்கு தெரியுமா?” என்றாள்.

“ம்ம்...நாங்க வெளியில் போறோம். உங்க கிட்ட பேச எனக்கு எதுவுமில்லை” என்றாள் கடுப்புடன்.

அவளோ விடாது “ஆனா எனக்கு இருக்கே. சோ நான் உள்ளே போறேன்” என்று அவர்களைத் தாண்டி வீட்டினுள் நுழைந்து விட்டாள்.

அவளின் செய்கையில் எரிச்சல் அடைந்தவளை மாமாவின் கேள்வி சுதாரிக்க வைத்தது.
 
  • Like
Reactions: Sumathi mathi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
“யாரும்மா அது?”

சற்றே தயக்கத்துடன் “பிரெண்ட் மாமா”.

“சரிம்மா சீக்கிரம் பேசி முடிச்சிட்டு வா. நேரமாச்சு” என்று காரை நோக்கி நடந்தார்.

தான்யாவும் அக்காவை கேள்வியுடன் பார்க்க “தாணு நீ போய் பாட்டியை சமாளி. நான் இவ கிட்ட பேசிட்டு வரேன்’ என்று விடுவிடுவென்று உள்ளே சென்றாள்.

வர்ஷுவிடம் பின்னர் கேட்டுக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு உள்ளே சென்ற தான்யா பாட்டியை மற்றொரு அறைக்கு அழைத்துச் சென்று விட்டாள்.

கேஷ்வியை தன்னரைக்குச் அழைத்துச் சென்றவள் இரு கைகளையும் கட்டிக் கொண்டு “சொல்லுங்க எதுக்கு வந்திருக்கீங்க?” என்றாள் நிமிர்வுடன்.

“நான் யாருன்னு உனக்கு சொல்ல வேண்டியது இல்லை. பட் சித்தார்த் செய்த முட்டாள்தனம் நீ. உன்னை எங்கள் வாழ்க்கையில் இருந்து விலகிப் போக சொல்லத்தான் அவர் அனுப்பி வைத்தார்” என்றாள் விஷம் தோய்ந்த பார்வையுடன்.

“முதல்ல நீங்க என்ன பேசுறீங்கன்னே புரியல. அடுத்து சித்தார்த் யாரு? நான் எதுக்கு அவர் வாழ்க்கையில் இருந்து விலகனும்?”

அவளை கிண்டலாகப் பார்த்த கேஷ்வி “உங்களைப் போன்ற லோ கிளாஸ் பெண்கள் பண்ணுகிற அதே சீப் டெக்னிக்கை நீயும் பாலோ பண்ற. ம்ம்..ஓகே உனக்கு எவ்வளோ வேணும்னு சொல்லு” என்றாள்.

இறுகிய முகத்துடன் “வெளியே போறீங்களா? ஏதோ பார்க்க டீசென்ட்டாக இருந்தீங்களேன்னு வீட்டுக்குள்ள விட்டேன். ப்ளீஸ்! கெட் அவுட்” என்றாள்.

அவள் தன்னை அவமானப்படுத்தியதை தாங்க முடியாத கேஷ்வி அவள் அருகே நெருங்கி நின்று “சின்ன பெண்ணாக இருக்கியே சொல்லிப் பார்க்கலாம்னு நினைச்சேன் பட் உனக்கெல்லாம் சொன்னா புரியாது” என்றவள் விடுவிடுவென்று அங்கிருந்து வெளியேறினாள்.

அவள் சென்றதும் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள். இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த காதல் தன்னை துரத்தும் என்கிற கேள்வி எழுந்தது. அப்போது உள்ளே வந்த தான்யா “அக்கா! மாமா கூப்பிடுறாரு நேரமாச்சாம்” என்றாள்.

“ம்ம்...வா போகலாம்” என்றாள் முக சுணக்கத்துடன்.

அவளது கையைப் பற்றிக் கொண்டவள் ‘ஆர் யூ ஓகே அக்கா?”

கலங்கிய கண்களுடன் “நான் செய்த தப்பு என்னை எதுவரை துரத்தும்னு தெரியல தாணு. தவறுக்கு தண்டனையா அப்பா,அம்மாவை இழந்தாச்சு. இன்னும் என்ன தான் வேணும்னு தெரியல” என்றபடி முன்னே சென்றவளை பரிதாபமாக பார்த்தபடி பின்னே சென்றாள்.

இருவரும் மாமாவுடன் காரில் பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்றனர்.

கேஷ்வியோ கோபத்துடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தாள். தாதாஜியை அழைத்து நடந்த அனைத்தையும் ஒப்பிக்க, அவரோ அவளுக்கு அடுத்து நடக்க வேண்டியதை எடுத்தக் கூறினார்.

“ஓகே தாதாஜி நான் பார்த்துக்கிறேன்” என்றவளின் இதழ்களில் வன்மம் நிறைந்திருந்தது.

அடுத்து தனது ஆட்களுக்கு அழைத்து “வாட்ஸ் ஆப்பிள் ஒரு போட்டோ அனுப்பி இருக்கேன். அந்தப் பெண்ணை தூக்கிடுங்க” என்று கட்டளையிட்டு விட்டு காரில் நன்றாக சாய்ந்தமர்ந்து கொண்டாள்.

அவளால் ஏவப்பட்ட ஆட்கள் வர்ஷூ பத்திர பதிவு அலுவலகத்திற்கு செல்வதை அறிந்து அவளை அங்கே வைத்து தூக்கி விடலாம் என்று அங்கு சென்று காத்திருக்க ஆரம்பித்தினர். அதே நேரம் கேஷ்வி சென்று கொண்டிருந்த கார் அவள் தங்கி இருந்த ஹோட்டலுக்கு செல்லாமல் மாற்றுப் பாதையில் பயணிக்க ஆரம்பித்தது. முதலில் அதை கவனிக்காதவள் வேறு பாதையில் செல்வதை கண்டு கொண்டதும் “டிரைவர் இதென்ன வேற பாதையில் போறீங்க?” என்றாள் அதட்டலாக.

அந்நேரம் அவளின் போன் அழைக்க அதில் ஒளிர்ந்த சித்தார்த்தின் பெயரைப் பார்த்ததும் மற்றதை மறந்து போனை எடுத்து காதில் வைத்தாள்.

“ஹாய் கேஷ்”

அவனது அழைப்பில் மயங்கிப் போனவள் “என்ன திடீர்னு போன் பண்ணி இருக்கீங்க” என்றாள் நாணப் புன்னகையுடன்.

“ஒண்ணுமில்ல நான் இங்கே ஹைதராபாத் வந்திருக்கேன். கூட இருந்தப்போ உன்னை மிஸ் பண்ணல. ஆனா இங்கே வந்ததும் உன் ஞாபகமா இருந்தது”.

அவனது பேச்சுக் கொடுத்த ஆனந்தத்தில் கார் போய் கொண்டிருக்கும் பாதையை சுத்தமாக மறந்து போனாள். அவனோ என்றைக்கும் இல்லாமல் மயக்கும் மணாளனாக அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் இருவரும் பேசிக் கொண்டிருக்க “ஓகே கேஷ் நான் ரெண்டு நாளில் வந்துடுவேன். நேரா பார்க்கலாம்” என்று கூறி போனை வைத்தான்.

அவன் தன்னிடம் முதன்முறையாக இனிமையாக பேசியதில் மயங்கி இருந்தவள் போனை கையில் வைத்துக் கொண்டு கனவை சுமந்த விழிகளுடன் அமர்ந்திருந்தாள். வண்டி நின்றதையோ டிரைவர் தன்னை கேலியாக பார்த்ததையோ அறியாது அமர்ந்திருந்தாள்.

“மேம்! மேம்!” என்று அவன் இரு முறை அழைத்த பிறகே நிதானத்திற்கு வந்தாள்.

அவசரமாக காரை விட்டு இறங்கிய பிறகே அது தான் தங்கி இருந்த ஹோட்டல் அல்ல என்று தோன்ற அவசரமாக திரும்பி டிரைவரை பார்க்க அவனோ இகழ்ச்சியான பார்வையுடன் “உள்ளே போங்க! பிரச்சனை பண்ணினா தூக்கிட்டுப் போக வேண்டி இருக்கும்” என்று மிரட்டினான்.
 
  • Like
Reactions: Sumathi mathi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அதில் அதிர்ந்து போனவள் “ஏய்! யார் நீ? என்னை எங்கே கூட்டிட்டு வந்திருக்க? நான் ஒரு போன் பண்ணினா உன்னை நிமிஷத்தில் முடிச்சிடுவாங்க” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னே அவளிடம் இருந்த போன் பறிக்கப்பட்டிருந்தது.

அவளைச் சுற்றி மூவர் நின்றிருக்க அதுவரை இருந்த தைரியம் மறைந்து போக முகம் பயத்தை எதிரொலித்தது.

அந்த டிரைவரோ “மேம்! உங்களை மரியாதையா நடத்த சொல்லி தான் உத்திரவு. நாங்க சொல்கிறபடி கேட்டா அந்த மரியாதையை கிடைக்கும்” என்றான் அழுத்தமான குரலில்.

அவர்களைப் பார்த்தால் எதையும் செய்யத் துணிந்தவர்கள் என்பது புரிந்து போக, அவர்களின் பேச்சைக் கேட்டு நடந்து எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்கிற முடிவிற்கு வந்தவள் அமைதியாக அங்கிருந்த வீட்டினுள் நுழைந்தாள்.

பத்திர பதிவு அலுவலகத்திற்குள் நுழைந்த ராஜேந்திரனும் வர்ஷூவும் உள்ளே செல்ல, அவர்களின் முறைக்காக காத்திருக்க ஆரம்பித்தனர். அப்போது தான் வர்ஷினி ஒன்றை கவனித்தாள். பத்திர பதிவு செய்ய தாங்கள் மட்டும் வந்திருப்பதாக. தான்யாவும் அதை கவனித்து விட்டு “ஏன் மாமா வாங்க போறவங்க வரலையா? அவங்க வந்தாதா தானே முடியும்?” என்றாள் சந்தேகமாக.

“வருவாங்கம்மா” என்று முடித்துக் கொண்டார்.

அப்போது அவர்களை உள்ளே அழைக்க மூவரும் சென்றனர். பதிவாளர் வர்ஷினியிடம் “உனக்கு சம்மதம் தானே மா?” என்று கேட்டார்.

அவளும் “சம்மதம் தான் சார்” என்றாள்.

அவர்களின் முன்னே ஒரு பார்ம் நீட்டப்பட “கையெழுத்துப் போடும்மா” என்றவர் மாமாவிடம் “அவர் வரலையா சார்?” என்றார்.

“வந்துட்டே இருக்கார் சார்” என்று முடிக்கும் நேரம் வாசலில் கார் வந்து நின்றது. அதிலிருந்து வேக நடையுடன் உள்ளே நுழைந்தான் சித்தார்த்.

தான்யா தான் முதலில் அவனை கவனித்தாள். அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தவள் அக்காவின் கையை சுரண்டி “அக்கா! அங்கே பார்” என்றாள்.

அவளோ அந்த பார்மில் இருந்ததை பார்த்த அதிர்ச்சியில் நின்றிருந்தாள். அது பதிவு திருமணத்திற்க்கான பார்ம். மணமகன் பெயர் இருக்கும் இடத்தில் சித்தார்த்தின் பெயரும், மணமகள் பெயராக அவளின் பெயரும் நிரப்பபட்டிருந்தது.

மெல்ல நிமிர்ந்து பார்த்தவளின் விழிகள் சித்தார்த்தின் மீது படிந்தது. அந்நேரம் அவர்களது கல்லூரி நண்பர்கள் சரவணனும் மற்ற நண்பர்களும் மாலையுடன் உள்ளே நுழைந்தனர். அதைக் கண்டு அதிர்ச்சியுடன் மாமாவைப் பார்க்க, அவரோ அவர்களைப் பார்த்து புன்னகைத்துவிட்டு அவல் பக்கம் திரும்பினார்.

“மாமா!” என்றாள் வார்த்தை வாயை விட்டு வெளியே வராமல்.

அவள் ஆருகே நெருங்கி நின்று “எதையும் பேசாமல் கையெழுத்துப் போடு வர்ஷூ. இது நான் அமைத்து கொடுத்த வாழ்க்கை இல்லை. நீயாக தேர்ந்தெடுத்த ஒன்று தான். உனக்கும் தான்யாவிற்கும் நல்லதை தான் செய்கிறேன்னு நம்பி போடு” என்றார்.

அவளோ கலங்கிய கண்களுடன் “என்னால முடியாது மாமா! உங்களு எந்த அளவிற்கு விஷயம் தெரியும்னு எனக்கு தெரியாது. ஆனா அன்னைக்கு என்னை அம்போன்னு விட்டுட்டு போனவரை எந்த காலத்திலும் என்னால ஏற்றுக் கொள்ள முடியாது. அது மட்டுமில்லை. உங்க தங்கையையும் மாப்பிள்ளையும் இழக்க காரணமாய் இருந்தவனை மாப்பிள்ளையா ஏற்றுக் கொள்ள எப்படி மனசு வந்தது?” என்றாள் முறைப்புடன்.

அவளை நிமிர்ந்து பார்த்தாவர் “சரி நீ சொல்றதுக்கு எல்லாம் நான் ஒத்துக்கிறேன். ஆனா நான் சொல்கிற மாப்பிள்ளையை உடனே நீ கல்யாணம் செய்துக்கணும்” என்றார்.

அதைக் கேட்டதும் அதிர்ந்து “முடியாது மாமா! எனக்கு இந்த ஜென்மத்தில் கல்யாணம் வேண்டாம்” என்றாள்.

“அப்போ உன் தங்கையோட வாழ்க்கையையும் சேர்த்து அழிக்கப் போற?”

“மாமா!”...என்றவள் தலையை குனிந்து கொண்டு “அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர்” என்றாள் எப்படியாவது அந்த திருமணத்தை நிறுத்தி விட வேண்டும் என்கிற எண்ணத்தில்.

“அது ரெண்டாவது திருமணம். கோவிலில் நடந்த உங்க திருமணம் தான் முதல். இப்போ இதை பதிவு செய்திட்டா நீ தான் அவரின் முதல் மனைவி சட்டப்பூர்வ மனைவி”.

அவர்கள் வழ்க்கடித்துக் கொண்டிருப்பதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த் மெல்ல அவள் அருகே வந்து நின்று “அன்னைக்கு எப்படி என்னை நம்பி வந்தியோ இப்பவும் அதே நம்பிக்கையோட கையெழுத்துப் போடு மது” என்றான்.

அவன் அப்படி சொன்னதும் “அந்த நம்பிக்கையை தான் நீங்க உடைச்சு சுக்கு நூறா ஆக்கிட்டீங்களே. இப்பவும் நம்பினா அப்படியே விட்டுட்டு போக மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?” என்றாள் சீறலுடன்.

வேகமாக அவளது கைகளை அழுந்தப் பற்றிக் கொண்டவன் ‘நிச்சயமாக உன்னை விட்டுட மாட்டேன்” என்றவனது கைகளை உதறிக் கொண்டு வெளியேற முயன்றவளை தடுத்த தான்யா “அக்கா! ப்ளீஸ்! எனக்காக” என்றாள் கண்ணீருடன்.

தான்யாவின் தோளில் சாய்ந்தவள் “என்னால முடியல தாணு. அன்னைக்கு எத்தனை சந்தோஷமாக ஆரம்பித்த வாழ்க்கையை எங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்காங்க பாரு” என்றாள்.

அவளின் தோளில் தட்டி “இப்போ நீ கையெழுத்துப் போடு அக்கா. உன்னுடைய விருப்போ வெறுப்போ கூட இருந்து காண்பிக்கணும்” என்றாள்.

சற்று நேரம் தங்கையை கட்டிக் கொண்டு அழுதவள் பின்னர் தெளிந்து “விருப்பு நிச்சயம் இல்லை வெறுப்பு மட்டும் தான் மிதமிஞ்சி இருக்கு” என்றவள் தங்கையின் கைகளைப் பற்றிக் கொண்டு பதிவாளர் முன் சென்று நின்று அந்த பார்மில் குனிந்து கையெழுத்திட்டால். அவள்
 
  • Like
Reactions: Sumathi mathi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
நடந்து செல்லும் போது லேசாக விந்தி விந்தி நடந்ததை கவனித்தவாறே தானும் சென்று கையெழுத்திட, நண்பர்களும் மாமாவும் தான்யாவும் சாட்சி கையெழுத்திட்டு அவர்களின் திருமணத்தை பதிவு செய்தனர்.

நண்பர்கள் மாலையை கொடுத்து ஒருவர் கழுத்தில் ஒருவர் போட சொல்ல, சித்தார்த் அவள் கழுத்தில் மாலையிட, அவளோ அவனுக்கு மாலையிட முடியாது என்று சொல்லிவிட, மாமா அவனுக்கு மாலையை அணிவித்தார். பின்னர் இருவரையும் நிற்க வைத்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டது. அனைத்தும் சுமுகமாக முடிவடைய, மாமாவிடம் நன்றி கூறியவன் “ரெண்டு பேரையும் என்னோடவே கூட்டிட்டு போறேன் மாமா. எல்லா ஏற்பாடுகளும் செய்தாச்சு” என்றான்.

“நான் வர முடியாது! மாமா கிளம்பலாமா?” என்று அவரையும் பிபி ஏற்றினாள்.

“என்னம்மா நீ” என்று ஆரம்பித்தவரை கண்ணாலேயே அமைதியாக இருக்கும்படி கூறியவன் “உன் கிட்ட கேட்கவே இல்லை மது. நீ வர ஒத்துகிட்டா மரியாதையா போகலாம் இல்லேன்னா குண்டுகட்டா தூக்கிட்டுப் போயிடுவோம்” என்றான் சிரிக்காமல்.

தான்யாவோ நடந்தவைகளில் குழம்பி இருக்க “நான் எதுக்கு? அக்காவை கூட்டிட்டுப் போங்க” என்றவளை முறைத்த வர்ஷினி அவளது கைகளைப் பற்றி “வா போகலாம்” என்றபடி அங்கிருந்து வெளியேறப் போனாள்.

பட்டென்று அவளது கையைப் பற்றியவன் “நில்லு மது! உனக்கு வேற ஆப்ஷனே இல்லை. நீங்க ரெண்டு பேரும் என்னோட வந்தே ஆகணும். இனி உங்களை தனியாக விட முடியாது” என்றான்.

“என்ன பண்ணிட்டு இருக்கீங்க? எல்லாமே உங்க இஷ்டத்துக்கு தான் பண்ணுவீங்களா? அன்னைக்கு தாலியை கட்டிட்டு விட்டுட்டுப் போனீங்க. இன்னைக்கு பதிவு பண்ணிட்டு கூட்டிட்டு போறேன்னு சொல்றீங்க? இதெல்லாம் யாருக்காக பண்றீங்க? அதோட என்னோட வாழ்க்கையில் பிரச்சனை பண்றீங்க சரி. ஆனா தான்யாவை எதுக்கு இதில் இழுத்து விடுறீங்க” என்று சீறினாள்.

தான்யாவை பார்த்து கண் சிமிட்டியவன் “என்னோட மச்சினச்சியை எப்படி விட முடியும்? சரி இதெல்லாம் நம்ம வீட்டில் போய் பேசிக்கலாம் கிளம்புங்க” என்றான்.

தான்யாவோ “மாமா! நான் இங்கே ஸ்கூலில் படிக்கிறேன். என் படிப்பு” என்றாள் அழு குரலில்.

அவனை பதில் சொல்ல விடாது “எல்லாம் ஏற்பாடு செய்தாச்சும்மா. மாப்பிள்ளை சொல்கிறபடி கேளுங்க ரெண்டு பேரும்” என்றார் மாமா.

அந்நேரம் சித்தார்த்தின் மொபைலுக்கு அழைப்பு வர பாட்டி தான் அழைத்திருந்தார். அதை எடுத்துப் பேசியவன் அவளிடம் கொடுக்க “பேட்டி உங்க திருமணத்திற்கு வாழ்த்துக்கள். எதையும் பற்றி யோசிக்காம அவனுடன் கிளம்பி வா. உனக்கும் உன் தங்கைக்கும் நாங்க இருக்கோம்” என்றார்.
 

Chitra Balaji

Active member
Feb 5, 2020
125
68
28
Super Super Super maa.... Semma semma episode...... அவல register marriage pannikitaan ava மாமா vuku எல்லா vishayamum therinji இருக்கு..... அந்த keshvi ah engayo கொண்டு போய் அடிச்சி vechitaanga.... Ava vera ve maatenu sonnavalai kutikitu kalambitaan enna aaga pooguthoo.... Super Super maa