அத்தியாயம் - 16

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,694
1,430
113
அத்தியாயம் –16

சுந்தரை கவனித்த ரஞ்சிதம் “வா சுந்தர்” என்றவர் அவனுக்கு காப்பியை கொடுத்தார்.

விஸ்வாவோ குழப்பமும், கோபமுமாக முகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

அவனது நிலையைக் கண்டு மெல்ல ரஞ்சித்திடம் “என்னமா விஸ்வா ஏதோ போல இருக்கான். என்ன ஆச்சு?” என்றான்.

அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு “நேத்து ஒரு பொண்ணை கட்டலாம்ன்னு பேசினோம் இல்ல, அந்த பொண்ணு இந்த வீட்டுக்கு சரியா வரமாட்டான்னு சொல்லி வேண்டாம்னு சொல்லிட்டோம். அதில் இவனுக்கு கொஞ்சம் கோபம்” என்றார்.

அவர் சொன்னதை எதிர்பார்க்காதவன் சட்டென்று சேரிலிருந்து எழுந்தான், உள்ளமோ மகிழ்ச்சியில் துள்ள...தனது சந்தோஷத்தை மறைத்துக் கொண்டு விஸ்வாவை பார்த்தான்.

அம்மா சொன்னதையும், அதை கேட்டு சுந்தரின் முகம் மலர்ந்ததையும் கண்டு கடுப்பானவன் வேகமாக எழுந்து சென்று “என்ன ரொம்ப சந்தோஷமா இருக்கா” என்று முணுமுணுத்தான் சுந்தரிடம்.

அவனோ மனதிற்குள் “எ..இந்தா..எ..இந்தா” என்று குத்து நடனம் ஆடிக் கொண்டிருந்தான்.

அவன் பதில் பேசாத எரிச்சலில் “மவனே! ரொம்ப ஆடாத...நீ தான் இந்த கல்யாணம் நடக்கிற மாதிரி செய்யப் போற..அதனால அடக்கிவாசி தம்பி” என்றான்.

“என்னது! நானா?...அதெல்லாம் நடக்கவே நடக்காது...ஒருநாளும் உனக்கு அந்த பெண்ணை கட்டி வைக்க நான் உதவ மாட்டேன்”.

“அதை நான் பார்த்துகிறேன்” என்றான் தெனாவெட்டாக.

அவனது முறைப்பைக் கண்டு அதிசயித்து “என்ன இவன்! அந்த பெண்ணை பத்தி பேசும்போது அந்நியனா மாறிடுறான்” என்று நினைத்துக் கொண்டான்.

விஸ்வா, சுந்தரின் கைகளைப் பற்றி பரபரவென்று தோட்டத்துக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த கல்லில் அமர வைத்தவிட்டு, வேகம்வேகமாக இங்கும்,அங்கும் நடந்தான்.

அவன் நடப்பதையே பார்த்துக் கொண்டிருந்த சுந்தர் “அந்த பிடாரியை பிடிக்க எதுக்கு இவ்வளவு எனர்ஜியை வேஸ்ட் பண்ற விஸ்வா” என்றான் கடுப்புடன்.

அவனை நோக்கி விரலை நீட்டி “பேசாதே! என்ன தெரியும் உனக்கு அவளை பற்றி! எனக்கு அவள் தான் மனைவி! இன்னொரு வார்த்தை அவளை பத்தி தப்பா பேசின..அப்புறம் நம்ம பிரெண்ட்ஷிப் பத்தி யோசிக்க வேண்டியிருக்கும்” என்றான் உறுமலுடன்.

அவன் சொன்னதை கேட்டு “அடப்பாவி! உனக்கு மட்டும் அவளை பத்தி என்னடா தெரியும்? ஒரு நாள் தானே அவளை பார்த்திருக்க...என்னவோ ஜென்மம் ஜென்மமா வாழ்ந்த மாதிரி அவளுக்கு வக்காளத்து வாங்குற” என்றான் கடுப்புடன்.

யோசனையுடன் நடந்து கொண்டிருந்தவன் சட்டென்று அவன் அருகில் அமர்ந்து “பார்த்தவுடனே மனசில் அப்படியே ஒட்டிகிட்டா...உங்களை மாதிரியே அவளுடைய நடவடிக்கைகள் எனக்கும் பிடிக்கல தான்...அதை நான் வெறுக்கவே செய்றேன்...ஆனா, பாட்டி என்கிட்டே அவளைப் பத்தி சொன்ன விஷயங்கள் அவ மேல இருந்த தப்பான அபிப்பிராயத்தை மாத்திடுச்சு...கண்டிப்பா அவளை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்றான் உறுதியாக.

அவனையே பார்த்திருந்த சுந்தர் “எனக்கு என்னவோ அந்த பொண்ணோட உன் வாழ்க்கை நல்லாயிருக்கும்-னு தோணல-டா! என்னை உன் நண்பனா நினைக்க வேண்டாம், உன் தம்பியா நினைச்சுக்கோ..அம்மா நிலையில் இருந்து நினைச்சு பாரு...யாரையும் மதிக்காத ஒரு பெண்ணை அவங்களுக்கு மருமகளா கொண்டு வர எப்படி சம்மதிப்பாங்க......அந்த பெண்ணுக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கட்டும்...அதையெல்லாம் சரி பண்ண நீ ஒன்னும் பரோபகாரி இல்ல” என்றான் கோபத்துடன்.

அவன் புறம் நன்றாக திரும்பி அமர்ந்து “மனசுக்கு பிடிச்சவளோட கஷ்டங்களை தீர்க்கிறவன் தான் நல்ல ஆண்பிள்ளை. அவ எனக்கு உயிரானவள். அவளோட மனசில் உறுத்திக்கிட்டு இருக்கிற பிரச்னையை சரி பண்ணியே ஆகணும்” என்றான் இறுகிய குரலில்.

அவன் தோள்களை தட்டி “புதுசா வரப் போகிறவளுக்காக யோசிக்கிறதேல்லாம் சரி...ஆனா, உன்னை பெத்தவங்க உன் கல்யாணத்தை பற்றி எத்தனை கனவுகளை கண்டு இருப்பாங்க...அவங்களுக்கு அவங்க பையன் நல்லபடியா வாழனும்னு ஆசையிருக்காதா? நீ இந்த பெண்ணை கட்டிக்கிட்டு வந்தா என்ன நடக்கும் யோசிச்சு பாரு?”

யோசனையுடன் இருகைகளால் முகத்தை அழுத்தி துடைத்துக் கொண்டு “அவளோட நடவடிக்கையால ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டம் ஏற்பட தான் செய்யும்..ஆனா போக-போக அவளை வழிக்கு கொண்டு வந்துடுவேன்” என்றான்.

“அதுவரை அம்மா என் புள்ளையோட வாழ்க்கை இப்படி ஆச்சேன்னு அழனுமா விஸ்வா...’சை’..நீ கூட இப்படி சுயநலமா யோசிப்பேன்னு நினைக்கவே இல்லை” என்றான் கோபத்துடன்.

பரிதாபமாக அவனை பார்த்து “விட்டுடு சுந்தர்...உனக்கு ஒரே ஒரு வார்த்தை சொல்றேன்...உன்னை எப்படி அன்னைக்கு வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தேனோ அதை விட மோசமான நிலையில் இருப்பவள் அவள்...அன்பும், ஆதரவும், அரவணைப்பும் தேவைப்படுகிற ஒரு ஜீவன்” என்றான்.

அவன் சொன்னதை கேட்டு எழுந்தவன் “ஏன் விசு, நானும் அந்த பொண்ணும் ஒன்னா? நான் எந்த ஆதரவும் இல்லாம நடுரோட்டில் பிச்சை எடுத்துகிட்டு இருந்தேன்...ஆனா, அந்த பெண்ணுக்கு அன்பான அக்கா, மாமா உறவெல்லாம் இருக்கு அதோட அருமை புரியாம எல்லோர்கிட்டேயும் அடாவடியா நடக்குது...எல்லாம் கிடைக்கிறப்ப அதனுடைய அருமை தெரியாது...என்னை மாதிரி எதுவும் இல்லாதப்ப தான் அதோட அருமை புரியும்…”

அவனை பிடித்து இழுத்து தன்னோடு இறுக அணைத்தவன் “உனக்கு நாங்க எல்லோரும் இருக்கோம்-டா! இன்னும் எதுக்கு இப்படியொரு சோக பீல் கொடுக்கிற...உனக்கொரு நிலைமை மாதிரி அவளுக்கு எல்லோரும் இருந்தும் யாருமே இல்லாத மாதிரி தான். அவள் மனசுக்குள்ள வச்சுகிட்டு வெளியே சொல்லிக்க முடியாம தவிக்கிறா...என்னைத் தவிர வேற யாராலையும் அவளை புரிஞ்சிக்க முடியாது சுந்தர். அம்மாவும், அப்பாவும், என் மேல கோவிச்சுகிட்டாலும் பரவாயில்லைன்னு நான் முடிவெடுக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன்.”

அவனிடமிருந்து விலகி அதிர்ச்சியுடன் விஸ்வாவை பார்த்து “என்ன-டா சொல்றா? அப்படியென்ன நெருக்கடியான சூழல் அவளுக்கு?” என்றான்.
 
  • Love
Reactions: Chitra Balaji

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,694
1,430
113
இறுகி போன முகத்துடன் “அதை உன்கிட்ட சொல்ல முடியாது சுந்தர்...என்னவளை ஒரு சராசரி பெண்ணா மாற்ற வேண்டியது என் கடமை...அதுக்கு நான் அவ கூட இருக்கணும்” என்றவன் “வா” என்றழைத்துக் கொண்டு வீட்டிற்க்குள் சென்றான்.

சமையலறையில் தேங்காய் துருவிக் கொண்டிருந்த அன்னையின் கைகளைப் பற்றி அழைத்துக் கொண்டு வந்து சோபாவில் அமர வைத்து அவர் முன்னே மண்டியிட்டு அமர்ந்து கொண்டான். ரஞ்சித்தின் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் பொதித்துக் கொண்டு நேர்பார்வையாக அவர் முகத்தை பார்த்து “அம்மா! எப்பவும் நான் எது செய்தாலும் சரியா செய்வேன்னு என் மேல நம்பிக்கை வைப்பீங்க இல்ல. இப்போ மட்டும் ஏன் என் மேல அவநம்பிக்கை?” என்றான்.

அவன் கைகளில் இருந்து தனது கையை உருவிக் கொண்டு “அந்த பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றதை தவிர நீ என்கிட்டே வேற எதை வேணும்னாலும் பேசு விச்சு!” என்றார் காரமாக.

அவனோ அசராமல் “அதை பத்தி மட்டும் தான் பேசப் போறேன்-மா” என்றான்.

அவனது கைகளை உதறி தள்ளிவிட்டு எழுந்திரிக்க முயன்றவரை பிடித்து அமர்த்தி “அம்மா! கொஞ்சம் நான் சொல்றதை பொறுமையா கேளுங்க! நான் எது கேட்டாலும் மறுக்காமல் செய்த உங்க நம்பிக்கையை இதுவரை காப்பாற்றி இருக்கிறேன். இப்பவும் அந்த நம்பிக்கையை உங்க பிள்ளை மேல வைங்கம்மா...நிச்சயமா இது மோசமான முடிவு இல்லை” என்றான்.

அவனது முகத்தை ஆழ்ந்து பார்த்தவர் “பெத்தவங்க சொல்லியும் கேட்காத அளவுக்கு அப்படி என்ன விருப்பம்...அவளும், நீயும் லவ் பண்ணீங்களா? நான் சொல்லித் தானே இந்த பெண்ணை பத்தி தெரியும். வயசு பையனோ, பொண்ணோ இருக்கிற இடத்தில் பல பெண்ணையோ, பையனையோ பார்த்து தங்களுக்கு எது ஒத்து வருதோ அதை முடிக்கிறது வழக்கம் தானே. அதுக்காக பார்க்கிற முதல் பெண்ணையே கட்டிக்கணும்னு என்ன அவசியம்...அதுவும் அவ குடும்பத்துக்கு ஒத்து வர மாட்டான்னு தெரிஞ்ச பிறகு” என்றார் கோபமாக.

சற்று இறுக்கமான முகத்துடனே “நீங்க காண்பிக்கிறதுக்கு முன்னாடியே அவளை நான் பார்த்திருக்கேன்-ம்மா. அப்போவே அவளை எனக்கு பிடிச்சுது. அதோட நீங்களும் காண்பிக்கவும் இவ தான் என் மனைவின்னு முடிவு பண்ணிட்டேன்” என்றான்.

அவன் சொன்னதை கேட்டு வேகமாக எழுந்து நின்று “அப்போ நீ முடிவு பண்ணிட்டு தான் என்கிட்டே பேசிட்டு இருக்க” என்றவர் கணவரின் பக்கம் திரும்பி “ஏங்க இதுக்கு மேல நாம பேச என்ன இருக்கு! அவன் இஷ்டம் போல இந்த கல்யாணம் நடக்கட்டும்...ஆனா, எனக்கும் அவனுக்குமான பேச்சு இதோட முடிஞ்சுது” என்றார்.

அவர் சொன்னதை கேட்டு பதட்டத்துடன் எழுந்தவன் “அம்மா! என்ன பேசுறீங்க?” என்றான்.

அவரோ அவனை திரும்பியும் பார்க்காது தனதறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டார்.

அன்னையின் இந்த கோபத்தை எதிர்பார்த்திருந்தாலும், மனம் வலிக்க தான் செய்தது. தந்தையின் பக்கம் திரும்பி “அப்பா..என்னப்பா இது! நான் காரணமில்லாம எதுவும் செய்ய மாட்டேன்னு அம்மாவுக்கு தெரியாதா? எதுக்கு என் மேல கோபப்படனும்?” என்றான் வருத்தமாக.

அவரோ அவனை ஆழ்ந்து நோக்கியபடி “தன்னோட பிள்ளைக்கு எல்லாமே பெஸ்ட்டா கிடைக்கனும்னு நினைக்கிறது தாய் மனசு விச்சு. உன்னோட குணம் புரிஞ்சு தான் அவ பயப்படுறா...நீ இதில் தீவிரமா இருக்கிறதை பார்த்து அந்த பெண்ணுக்கு பின்னாடி ஏதோவொரு பெரிய கதை இருக்கும்ன்னு நினைக்கிறா...நல்லது செய்றதா நினைச்சு உனக்கு தகுதியில்லாத ஒன்றை தேர்ந்தெடுத்துவியோ என்கிற பயத்தில் தான் அவ இப்படி நடந்துகிறா” என்றார்.

அவர் அப்படி சொன்னதும் சற்று முகம் கறுக்க தலையை குனிந்து கொண்டு “தகுதி என்னப்பா தகுதி? எனக்கு தகுதி இல்லேன்னு தானே மாமா ஒதுங்கி போனார். நிச்சயமா நீங்க எல்லாம் நினைக்கிற மாதிரி அவளுக்கு நல்லது செய்யத் தான் ஆசைப்படுறேன்...ஆனா அதுக்காக அவ தகுதி இல்லாதவ எல்லாம் இல்லை...அவளால உங்க யாருக்கும் எந்த பிரச்னையும் வராம பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு” என்றான் உறுதியாக.

மகனின் முகத்தில் தெரிந்த உறுதியில் மனம் கரைந்து மெல்ல அவன் அருகே சென்று கைகளை தட்டிக் கொடுத்து “அவங்க வீட்டில் நான் பேசுறேன் விச்சு. ஆனா, அம்மா இந்த கல்யாணத்தில் இயல்பா இருப்பான்னு மட்டும் எதிர்பார்க்காத...உன்னை பெத்தவளா மட்டும் வந்து கலந்துக்குவா அவ்வளவு தான்” என்றார்.

அவர் சொன்னதை கேட்டு சந்தோஷப்படாது “அதுக்கு முன்னாடி அவளை கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்கணுமே...அதுக்கே நான் தலைகீழா நின்னு தண்ணி குடிக்கணும்” என்றான் அயர்வுடன்.

அதுவரை அமைதியாக நடந்த நாடகங்களை பார்த்துக் கொண்டிருந்த சுந்தர் “தேவையா இதெல்லாம்...அழகா அம்மா பார்க்கிற பெண்ணை கட்டிகிட்டா இந்த கொடுமை எல்லாம் இருக்காதில்லை” என்றான் எரிச்சலுடன்.

“விடு சுந்தர்! அவன் தலையில் எதுவும் ஏறாது...என்ன பண்ணணுமோ பண்ணட்டும் விடு!” என்றார் சலிப்புடன் அன்புமணி.

அவனோ “அப்பா! நிரஞ்சன் அண்ணா வீட்டு அட்ரஸ் கொடுங்க...நான் போய் பாட்டியை பார்க்கணும்” என்றான்.

“நீ எதுக்கு அங்க போற விச்சு! கல்யாணம் பேசுகிற சமயத்தில் நீ அங்க போறது சரியில்லை” என்றார் பிடித்தமின்மையுடன்.

“அப்பா! ஒன்னே ஒன்னு மனசுல வச்சுக்கோங்க...இது நீங்க பார்க்கிற சராசரி கல்யாணம் இல்லை...நிறைய பிரச்சனைகள் இருக்கு...சில பிரச்சனைகளை நான் தான் சரி பண்ணியாகணும்” என்றான்.

அவன் சொன்னதை கேட்டு சலிப்புடன் தலையை ஆட்டிக் கொண்டு, அவன் கேட்ட முகவரியை எடுத்துக் கொடுத்தார்.

எதை பற்றியும் கவலைப்படாது தன் கையில் வாங்கிய முகவரியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

அவன் செல்வதையே அன்புமணியும், சுந்தரும் வருத்தமாக பார்த்துக் கொண்டிருந்தனர். நிச்சயம் அவனது இந்த பிடிவாதத்திற்கு பின் ஏதோவொரு நல்லெண்ணம் இருக்கும் என்பதை உணர்ந்திருந்தாலும், வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் தனது சேவை மனப்பான்மையை காட்ட வேண்டாமே என்று தவித்தனர்.

சுந்தரின் பக்கம் திரும்பி “அந்த பொண்ணு இப்படியொரு நல்ல பிள்ளை கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்-டா சுந்தர். எங்களை எதிர்த்துகிட்டு அவளை இந்த குடும்பத்துக்குள் கொண்டு வரான்னா நிச்சயமா அவளுக்கு ஏதோவொரு தேவையிருக்கு” என்றவர் பெருமூச்சு விட்டு “எல்லாம் சரியாகி அவன் நல்லா வாழனும்...அதுதான் எங்களுக்கு வேண்டியது” என்றார்.முதல்நாள் நடந்த சம்பவங்களின் தாக்கமின்றி எப்பவும் போல் உற்சாகத்துடன் அலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் நித்தி.

அவள் கிளம்பும் முன்னர் ரேணு ஊட்டி விடாத குறையாக சாப்பாட்டை கொடுத்து தங்கையை அனுப்பி வைத்தாள். அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பாட்டி மெல்ல எழுந்து அவளது கையை பிடித்து பரபரவென்று அழைத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்து கதவை சாத்தினார்.

அவளை திரும்பி முறைத்தவர் “இப்படியே எத்தனை நாளைக்கு உன் தங்கச்சியை கொஞ்சிகிட்டு இருக்கப் போற ரேணு? நேத்து அவ்வளவு சொல்லியும் எந்த மாற்றமும் இல்லாம இப்படியே இருந்தா எப்படி?” என்றார் எரிச்சலுடன்.

அதை கேட்டு கலங்கிய கண்களுடன் “நான் மாறத்தான் நினைச்சேன் பாட்டி...ஆனா, அவ வயிற்று வலியில் துடிச்சப்ப என்னால விட முடியல...எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல பாட்டி” என்றாள் அழுகையுடன்.

“மச்..அழுகையை நிறுத்து! நீ மாறலேன்னா எதுவுமே மாறாது. நிரஞ்சனை விட்டு பிரிஞ்சு அவ கூட போய் இருக்க வேண்டியது தான். அக்காவும், தங்கச்சியுமா தனி குடித்தனம் பண்ண வேண்டியது தான்” என்றார்.
 
  • Love
Reactions: Chitra Balaji

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,694
1,430
113
“கூட பிறந்தவ கஷ்டப்படுறப்ப என்னால பார்த்துகிட்டு சும்மா இருக்க முடியல பாட்டி...எனக்கு புரியுது அவரை நான் ரொம்பவே கஷ்டப்படுதுறேன்னு...ஆனா என்னால நித்தி அழுதா தாங்க முடியலையே” என்று கதற ஆரம்பித்தாள்.

அவள் அருகே சென்று தட்டிக் கொடுத்தவர் “ரேணு! அவளுக்கொரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுப்பதில் தான் இருக்கு உன்னோட திறமை. அவ பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் ஒரு விடிவு வேண்டாமா? உன் வாழக்கையும் எப்போ சரியாகிறது?”

கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே என்ன செய்வதென்று புரியாமல் பார்த்தவளை... “இன்னும் கொஞ்ச நேரத்தில் நிரஞ்சன் லீவ் போட்டுட்டு வந்துடுவான். நித்தி வரதுக்குள்ள நீங்க ரெண்டு பேரும் கிளம்பிடுங்க” என்றார்.

அவளோ அப்பொழுதும் அவர் என்ன சொல்கிறார் என்று புரியாமல் பார்த்து “எங்க பாட்டி போகணும்” என்றாள்.

முந்தானையை உதறி முகத்தை துடைத்துக் கொண்டவர் “இங்கே இருக்கிறவரை நீங்க ரெண்டு பேரும் நெருங்க முடியாதபடி அவ ஏதாவது செய்வா...நீயும் தங்கையோட நடிப்பை பார்த்து அழுதுகிட்டு நிற்ப...அதனால தான் நிரஞ்சன் கிட்ட சொல்லி ஒரு பத்து நாளைக்கு பெங்களுர் போயிட்டு வரதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்” என்றார்.

என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றவள் “என்னை தேட மாட்டாளா?” என்றவளை கடுப்புடன் பார்த்து “உனக்கு உண்மையாவே உன் புருஷன் மேலயும், உன் தங்கச்சி மேலயும் அன்பிருந்தா எதுவும் கேட்காம கிளம்பு. மத்ததை நாங்க பார்த்துக்கிறோம்” என்றார்.

சட்டென்று அவரது கைகளை பற்றிக் கொண்டவள் “பாட்டி! அவ வாழ்க்கையில் நிறைய அடிபட்டிருக்கா...அவளுக்கு நடந்ததெல்லாம் உங்களுக்கு நல்லாவே தெரியும். அதிலிருந்து இந்த அளவிற்கு மீண்டு வந்தது பெரிய விஷயம். தயவு செஞ்சு எந்த காரணம் கொண்டும் அவளை புண்படுத்திடாதீங்க” என்று கெஞ்ச ஆரம்பித்தாள்.

அவளை பார்த்து புன்னகைத்தவர் “இங்கே தான் தப்பு பண்ற ரேணு...சில ரணங்கள் ஆறாது...அவளுக்கு ஏற்பட்டிருக்கிற காயம் ஆறனும்-னா அதை மறக்கடிக்கிற அளவிற்கு வேற ஒன்னு நடக்கணும்...அதே சமயம் அவளை, அவளது ரணத்தை புரிஞ்ச ஒருத்தன்தான் அவளோட காயத்துக்கு மருந்தாக முடியும்...அதை தான் செய்யப் போறேன்” என்றார்.

“எதுவும் தப்பா நடந்திடாது இல்ல பாட்டி? அவ தாங்க மாட்டா...உடைஞ்சு போயிடுவா” என்றாள் கலங்கிய கண்களுடன்.

அவள் தோளில் தட்டிக் கொடுத்து “அதெல்லாம் நான் பார்த்துகிறேன்...நீ ஒரு பத்து நாள் எல்லாத்தையும் மறந்திட்டு நிரஞ்சனை மட்டும் கவனி” என்றார்.

கண்களைத் துடைத்துக் கொண்டு சற்று சிரித்த முகத்துடன் பாட்டியுடன் அறையை விட்டு வெளியே வந்தவள், தனக்கும் நிரஞ்சனுக்கும் பெட்டியை பாக் செய்ய சென்றாள்.

சுமதிக்கோ மனதிற்குள் ஒருவித பரபரப்பு, நித்யா வருவதற்குள் இருவரும் கிளம்பி விடுவார்களா? அதற்குள் ஏதேனும் தடை வந்துவிடுமோ என்று பயந்து கொண்டிருந்தார்.

அரைமணி நேரத்தில் நிரஞ்சனும் வந்துவிட, வீட்டினர் அனைவருக்குமே சொல்ல முடியாத டென்ஷன்...ஏதோ திருட்டு கல்யாணம் செய்வதை போல ஒருவரை ஒருவர் பார்த்து முழித்துக் கொண்டும், நித்யா வந்துவிடுவாளோ என்று பதட்டபட்டுக் கொண்டும் இருந்தனர்.

பாட்டி மட்டும் மிக இயல்பாக வாயிலை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

பயணத்திற்கு தயாராக கிளம்பி வந்தவர்கள் பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு வாயிலை நோக்கி போகும் போது, விஸ்வா உள்ளே நுழைந்தான்.

அவர்கள் இருவரும் பெட்டி படுக்கையுடன் தயாராக இருப்பதைக் கண்டு, பாட்டியை பார்த்து புருவத்தை உயர்த்தி கேலியாக பார்த்துவிட்டு, நிரஞ்சனிடம் “நீங்க கிளம்புங்க அண்ணா! திரும்பி வந்ததும் பேசிக்கலாம்” என்றான்.

அவனும் தலையைத்துவிட்டு காரில் ஏறி ஸ்டார்ட் செய்தான். கார் தெருவை கடக்கும் வரை நின்று பார்த்துக் கொண்டிருந்த குடும்பத்தினர் அனைவரும் நிம்மதியாக மூச்சு விட்டனர்.

விஸ்வாவின் கையைப் பிடித்துக் கொண்ட பாட்டியோ “என்ன பேராண்டி! நேரமே வருவேன்னு பார்த்தேன்...நினைச்சத சாதிச்சிட்ட போல” என்றார்.

அவனோ உதட்டை பிதுக்கி “அம்மா கிட்ட சாதிச்சது எல்லாம் பெருசு இல்ல பாட்டி...உங்க பேத்தி நட்டுவாக்கிளியை சமாளிக்கிறது தான் பெருசு” என்றான்.

விஸ்வா வருவான் என்பதை போல பேசும் அம்மாவை பார்த்து அசந்து போய் நின்றார் சுமதி.

தன் மனதிலிருப்பதை தாயிடம் கேட்கவும் செய்தார்...”ஏம்மா விஸ்வா வருவான்னு உனக்கு முன்னாடியே தெரியுமா?” என்றார்.

மகளின் கேள்வியை பார்த்து சிரித்துக் கொண்டு “என் பேரனை பத்தி எனக்கு தெரியாதா சுமதி. நேத்தே அதுதான் உனக்கு சொன்னேன்...கல்யாணம் நின்னு போச்சுன்னு தேவையில்லாம கவலைப்படாதேன்னு” என்றவரை அதிசயமாக பார்த்து “அதுசரி! நிரஞ்சனை பத்து நாளைக்கு வெளில அனுப்பியாச்சு...திருப்பி இங்கே வந்த பிறகு பழைய மாதிரி தானே இருக்கப் போகுது” என்றார் அலுப்புடன்.

மகளை பார்த்து தலையில் அடித்துக் கொண்டு “நீயெல்லாம் முப்பத்தஞ்சு வருஷம் கல்யாணம் பண்ணி குடித்தனம் பண்ணினேன்னு வெளில சொல்லிடாதே...ரேணு இனி தான் கணவனின் அன்பை உணர போகிறாள்...அதை உணர்ந்த பிறகு தன்னை அறியாமலே இங்கே வந்த பிறகும் கணவனுக்கு தான் முதல் இடம் கொடுப்பா...அது போதுமே நமக்கு...நித்தியின் மனசை கலைக்க” என்றார்.

அன்னை சொன்னதை கேட்டு சுமதியின் முகத்தில் வெட்கத்தின் சாயல் வந்து போக, அதை கண்டு சத்தமாக சிரித்த விஸ்வா “பாட்டி! பெரியம்மா எவ்வளவு அழகா வெட்கப்படுறாங்க பாருங்க” என்று கேலி செய்தான்.

“போடா போக்கிரி!” என்றவரை “என்ன சுமதி! இந்த வீட்டு மாப்பிள்ளையை மரியாதையா பேச வேண்டாமா?” என்று அதட்டினார்.

அதை கண்டு இரு கைகளையும் உயரே தூக்கி “பாட்டி! இதை உங்க பேத்தி கிட்ட சொல்லுங்க! எனக்கு என்னென்ன மரியாதை கிடைக்கப் போகுதுன்னு தெரியல” என்றான்.

பெங்களூரை நோக்கி சென்ற காரோ சீறி பாய்ந்து கொண்டிருந்தது. காருக்குள் இருந்தவர்களின் மனங்களோ ஒருபுறம் சந்தோஷமாகவும், மறுபுறம் நித்யாவை புறக்கணிக்கிறோமோ என்கிற குற்ற உணர்ச்சியோடும் இருந்தது.

நிரஞ்சன் சொல்ல முடியாத உணர்வில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தான். மனைவியவளின் அருகாமை மற்றவற்றை மறக்க செய்தது. ரேணுவின் நிலையோ சொல்லில் அடங்காமல் இருந்தது. அவ்வப்போது தீண்டிச் செல்லும் பார்வைகள் ஆயிரம் கதை பேசியது. உணர்வுகளின் தாக்க்கத்தில் இருந்தவன் மெல்ல ஒரு கையால் அருகிலிருந்த மனைவியின் தோள்களை பற்றி இழுத்து தனது தோளில் சாய்த்துக் கொண்டான். அவனது தோளில் சாய்ந்தவளோ மதிமயங்கி அமர்ந்திருந்தாள்.

இருவரிடையே மௌனம்...மௌனம்..மட்டுமே...அவர்களின் தனிமையை, அந்த ஏகாந்தத்தை இருவருமே ரசித்தனர். தன்னவள் தனது தோளில் சாய்ந்திருப்பது நிஜமே என்பதை எண்ணி எண்ணி மகிழ்ந்திருந்தான். என்ன தான் நித்யாவிற்காக மனதை கட்டுப்படுத்தி வாழ்ந்தாலும், அவ்வப்போது முரண்டு பிடித்த மனதை கட்டுப்படுத்தவே பெரும் போராட்டமாக இருந்தது. இன்று அவர்களின் நிலையில் எந்த மாறுதல் இல்லையென்றாலும் பாட்டி எடுத்துக் கூறியபடி தங்களின் வாழ்க்கை மாறத் தொடங்கினால், நிச்சயமாக நித்யாவுக்கு நல்லது நடக்கும் என்று புரிந்த பின்னர் அத்தனை நாள் இருந்த தயக்கங்கள் அனைத்தும் விலகியது.

தயக்கங்கள் விலகியதும் மனம் அவளது நெருக்கத்தை விரும்பியது. அவளது தோளில் பதிந்திருந்த கை மெதுவாக இடையை வளைத்துக் கொள்ள கார் சற்று தடுமாறி மீண்டது. அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் வேகத்துடன் சென்று கொண்டிருந்த காரை சடன் ப்ரேக் போட்டு ‘க்ரீச்’ என்ற சத்தத்துடன் சாலையோரம் நிறுத்தினான்.

கார் நின்ற வேகத்தில் அதிர்ந்து விழித்தவளின் முகத்தை இருகைகளால் பற்றி இழுத்து இதழில் கவிதை எழுதத் தொடங்கினான்...

தொட்டுவிடும் தூரத்தில்

நீயிருந்தாலும் விழியோடு

மட்டுமே உறவாடி

களைத்திருந்தோம் – நேசப்பூவது

நெஞ்சில் ஆயிரம் ஏக்கங்களை

தாங்கி நிற்க பல நாள்

கனவொன்று நனவானது!
 
  • Love
Reactions: Chitra Balaji

Chitra Balaji

Member
Feb 5, 2020
87
33
18
Ooooooo..... Super Super maa.... Semma semma episode..... Vishva எப்படியோ அவன் அம்மா va பேசி பேசியே samathikka vechitaan.... Avangaluku இஷ்டம் இல்ல but avanukaaga othukutaanga..... ரேணு vum நிரஞ்சன் num kalambitaanga honey moon ku.... இனிமேல் என்ன aaga pooguthoo..... Vishva avanga வீடு ku வந்து இருக்கான்...