அத்தியாயம் – 14
ஜாக்கிற்கு ஏனோ மனதில் ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருந்தது. இந்த அமைச்சரை முழுவதுமாக நம்பவும் முடியவில்லை. தங்களிடம் இருந்து காசை மட்டுமே எதிர்பார்க்கும் இவன், பதவியில் இருப்பதால் மட்டுமே அவனிடம் போக வேண்டி இருக்கிறது.
இத்தனை மாதங்கள் நல்லவிதமாக சென்று கொண்டிருந்தது. ஏனோ சிவதாஸ் பதவி ஏற்றத்தில் இருந்து உள்ளுக்குள் ஒரு பயம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. க்றிஸ் வேறு ஏதாவது புதிதாக இழுத்து வைத்து விடுவானோ என்றும் சந்தேகம் இருந்தது. இந்த ஆறு மாதங்களாக இந்த கூட்டத்தை இத்தனை தூரம் வளர்த்து கொண்டு வந்தாயிற்று. இனியும் ஒரு வருடம் சென்று விட்டால் இங்கு அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்து விடுவோம்.
அதிலும் மரியாவும், டேனியும் வந்து விட்டால் நிச்சயம் இந்த பூஜை பெரிய அளவில் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகம். ஆனால் அவர்கள் நாட்டில் எந்தவித பிரச்னையும் இன்று நுழைய வேண்டும்.
இவ்வாறு பலவாறாக யோசித்துக் கொண்டே சென்றவன் காரில் ஏறி அமர்ந்து போனை எடுத்து “லால்! எனக்கொரு ஹெல்ப் வேணும்”.
“சொல்லுங்க ஜாக்!”
“இரண்டு பறவைகள் எல்லைகளை கடக்க உன் உதவி வேண்டும்”.
“ம்ம்..ஓகே”.
“இங்கே கோட்டையில் பாதுகாப்பு அதிகம். அதனால சேரனின் ராஜியத்தில் நுழையலாமா?”
“பண்ணிடலாம் ஜாக்”.
“அப்போ சேரனின் ராஜியத்தில் இறங்கி பல்லவனிடம் வந்து சேரட்டும். இது உன் பொறுப்பு. உனக்கு தேவையானவை சரியாக வந்து சேர்ந்துடும்”.
“சரி ஜாக். எனக்கு தேவையான தகவல்களை அனுப்பி வைங்க”.
அவனிடம் பேசி விட்டு போனை வைத்தவனின் முகத்தில் தெளிவு பிறந்தது. சென்னையில் வந்து இறங்கினால் நிச்சயம் அவர்கள் சிக்குவார்கள் என்கிற எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தது.
அதே நேரம் அவர்கள் இருவரின் புகைப்படங்களும் பலரின் கைகளுக்கு இடம் மாறியது. சிவதாஸின் டீம் நகரமெங்கும் தங்களின் கண்காணிப்பில் எடுக்க தொடங்கினர். அதே நேரம் கள்ளிகுடி கிராமத்தை நோக்கி சிவதாஸ் சென்று கொண்டிருந்தான்.
அவனது கையில் ஊர் தலைவரைப் பற்றியும், அந்த ஊரைப் பற்றிய அத்தனை தகவல்களும் அவன் கைகளில். அவனது முகம் சிந்தனையுடன் இருந்தது. அந்த ஊரில் இந்த கூட்டத்தைச் சேர்ந்த எவரும் உண்டா என்று கேட்டால் இதுவரை எந்த தகவலும் இல்லை.
கையிலிருந்த அனைத்து தகவல்களையும் சரி பார்த்துக் கொண்டவன் அந்த ஊர் தலைவர் ராஜேந்திரன் வீட்டிற்குள் நுழைந்தான். அவரை பார்த்து கும்பிட்டு நாற்காலியில் அமர்ந்தவனின் கண்கள் வீட்டை ஆராய்ந்தது.
“வணக்கம்! நீங்க என்னை பார்க்கனும்னு சொன்னதா சொன்னாங்க” என்று இழுத்தார் ராஜேந்திரன்.
“வணக்கம்! நான் ஒரு சில முக்கியமான விஷயங்களைப் பற்றி பேச வந்திருக்கேன். இங்கே உட்கார்ந்து பேசலாமா? இல்ல வேற இடத்தில்..” என்று அவன் இழுத்தும் வேகமாக எழுந்து கொண்டவர் “வாங்க மச்சுக்கு போயிடுவோம்” என்று அழைத்துக் கொண்டு அங்கிருந்த மரப்படியில் ஏறினார்.
வீட்டின் பெண்கள் அனைவரும் சிவதாசை பயந்து கொண்டே ஒளிந்து மறைந்து பார்த்துக் கொண்டு இருந்தனர். அவரின் பின்னே எரியவனின் பார்வை சுற்றுபுறத்தை ஆராய்ந்து கொண்டே இருந்தது. பார்த்தவரை எங்கேயும் எதுவும் தவறாக தெரியவில்லை.
மாடியில் ஒரு அறையில் நுழைந்தவர் அங்கிருந்த நாற்காலியை காட்டி சிவதாசை அமர சொன்னவர் தானும் அமர்ந்து கொண்டு “சொல்லுங்க? எங்க கிராமத்தில் என்ன பிரச்சனை?”
சற்றே யோசித்தவன் பின்னர் பிரச்சனையின் அடி முதல் நுனி வரை அவரிடம் புட்டு புட்டு வைத்தான். முதலில் சாதரணமாக கேட்டுக் கொண்டிருந்தவர் அவன் சொன்னவற்றை கேட்டு அதிர்ந்து போய் அமர்ந்திருந்தார்.
“இப்போ அவங்களோட அடுத்த பூஜைக்கு உங்கள் கிராமத்தை தான் தேர்ந்தெடுத்து இருக்காங்க” என்றான்.
எச்சிலை விழுங்கிக் கொண்டவர் “உறுதியாக தெரியுமா சார்?”
“ம்ம்...எல்லா தகவல்களையும் கையில் வைத்துக் கொண்டு தான் உங்களை பார்க்க வந்திருக்கேன். அதோட அவங்களோட பூஜைக்கு உங்கள் ஊரில் இருந்து தான் பெண்ணை தேர்ந்தெடுப்பாங்க” என்று குண்டை போட்டான்.
“சார்!’ என்று அதிர்ந்து எழுந்தே விட்டார்.
அவரை பார்த்து தலையசைத்து “உட்காருங்க! உங்களோட நாங்க இருப்போம். என்னுடைய கணக்குப்படி இன்றிலிருந்து உங்கள் கிராமத்திற்கு புதிய ஆட்கள் உள்ளே நுழைய தொடங்குவாங்க” என்றான்.
முகத்தில் மரண பயம் தெரிந்தாலும் தன்னை சமாளித்துக் கொண்டவர் “நான் என்ன பண்ணனும் சொல்லுங்க சார்? எங்க கிராமத்தை நீங்க தான் காப்பாற்றனும்”.