அத்தியாயம் - 14

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,852
2,041
113
அத்தியாயம் – 14

ரெப்ரெஷ் செய்து கொண்டு வெளியே வந்தவன் பால்கனியில் நின்று தான் எடுக்கப் போகும் முடிவுகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். அப்போது அவன் அருகே வந்து நின்ற கேஷ்வி இரு கைகளையும் கட்டிக் கொண்டு அவனையே பார்த்தபடியே நின்றாள்.

அவள் நிற்பதை உணர்ந்தவன் “என்ன வேணும்?” என்றான் புருவத்தை உயர்த்தி.

“ரெஜிஸ்டர் மேரேஜை நிறுத்துவதற்காக என்னுடைய பாக்டரியை கொளுத்தியாச்சு. நல்ல கணவன்” என்றாள் இதழ்களை வளைத்து.

“சொன்னா கேட்க மாட்டீங்க நீயோ உன்னுடைய சொந்தங்களோ. அது தான் என்ன செய்யணுமோ செய்துட்டேன்” என்றான் தோள்களை குலுக்கியபடி.

அவனை சுற்றி வந்தவளின் பார்வை ரசனையுடன் அவனை தழுவிச் செல்ல “சொல்லப் போனா எனக்குமே இந்த கல்யாணத்தில் இண்டரெஸ்ட் இல்லாமல் தான் இருந்தது. பட் இப்போ ஐ லைக் யு. சோ உன்னை விடுவதாக இல்லை”.

தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றவன் இறுகிய முகத்துடன் “என் மனைவி மதுவர்ஷினி தான். அவளைத் தவிர வேறு யாரும் என் வாழ்க்கையில் வர முடியாது”.

அவளும் அவன் கண்களைப் பார்த்தபடியே தன் கழுத்தில் இருந்த தாலியை காண்பித்து “அப்போ இதுக்கு பேர் என்ன? நான் யார் உனக்கு?” என்றாள்.

லேசாக தாடையை வருடியபடியே “கட்டாயப்படுத்தி கட்ட வைத்த ஒன்றிற்கு அதற்க்கான மதிப்பு கிடையாது. நான் மனதார காதலித்து என்னில் சரி பாதியாக நினைத்திருக்கும் அவள் மட்டுமே என் மனைவி”.

“நான் கோர்ட்டிற்கு போனா கேஸ் என் பக்கம் தான் நிற்கும்” என்றாள் இளக்காரமாக.

கேலி கலந்த புன்னகையுடன் “நடந்த எல்லாவற்றிற்கும் என்னிடம் ஆதாரம் இருக்கு. கோர்ட்டுக்குப் போனால் உனக்கு அவமானம் மட்டுமே மிஞ்சும்” என்றான் கூர்மையான பார்வையுடன்.

அவனது பதிலில் அவள் முகம் யோசனையை சுமந்து கொண்டது. அந்நேரம் அவர்களின் அறைக் கதவு தட்டப்பட, வேகமாக சென்று திறந்தவன் அங்கே நின்றிருந்த வேலை ஆள் அவனை பிம்லா தேவி அழைப்பதாக கூறினான்.

கேஷ்வியை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான். பிம்லா தேவியின் அறைக்குள் நுழைந்தவனுக்கு தாதி சொன்னவைகள் யாவும் நினைவில் வந்து போனது. விருப்பமின்றி ஒருவருடன் எப்படி அவரால் வாழ முடிந்தது? அப்படி என்ன வாழ்க்கையை வாழ்ந்து விட்டார் இவர் என்று அவரை பார்த்தான்.

பிம்லாவோ ராணியின் தோரணையுடன் அமர்ந்திருந்தவர் எதிரே நின்றவனின் முகத்தில் தெரிந்த உணர்வுகளை அவதானித்துக் கொண்டிருந்தார். அவரது முகமோ துடைத்து வைத்தது போல இருந்தது. எந்தவித உணர்வுகளையும் வெளிக் காட்டாது அவனையே பார்த்தவண்ணம் இருந்தார்.

அவனும் அவரே பேசட்டும் என்று இரு கைகளையும் கட்டிக் கொண்டு அமைதியாக நின்றான்.

“சோ உனக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு? இனி நாங்க எதையும் மறைச்சு செய்ய வேண்டியது இல்லை” என்றான் அவனது கண்களைப் பார்த்து.

அவனும் நன்றாக நிமிர்ந்து நின்று “இத்தனை நாள் வளர்த்த பாசமாவது இருக்கும்னு நினைச்சேன்” என்றான் வெற்றுக் குரலில்.

இதழில் எழுந்த கேலிப் புன்னகையுடன் “நாங்க நாய்களை வளர்ப்பதில் கூட ப்ரீட் பார்த்து தான் வளர்ப்போம். அப்படி இருக்கும் போது...” என்று இழுத்தவாறு கை காட்டி நிறுத்தியவன் “தேங்க்ஸ்! உங்களுடைய இந்த வாக்குமூலம் எனக்கு இப்போ தேவையாக இருந்தது. என்ன பார்க்குறீங்க? இனி, நான் செய்யப் போகும் செயல்களுக்கு உங்களுக்கு என் மேல பாசம் இருந்தா அது தடையாக இருக்குமேன்னு நினைச்சேன். இனி, கவலையில்லை” என்றான் வன்மம் நிறைந்த குரலில்.

அலட்சியமாக அவனைப் பார்த்து புன்னகைத்தவர் “உனக்கும் உங்கப்பா புத்தி தான் இருக்கு. நம்ம தரத்திற்கு ஏற்ற ஆட்களுடன் பழக தெரியாதவர்கள். நீ என்னை என்ன பண்ணிட முடியும்னு நினைக்கிற? இங்கே உனக்கென்று எதுவுமே இல்லை. எங்கள் பிடிக்குள்ள இருக்கிற உன்னால எங்களுக்கு எதிராக எதுவும் நினைக்க கூட விட மாட்டோம்”.

இரு கைகளையும் கட்டிக் கொண்டு அவரை சிறிது நேரம் நன்றாக பார்த்தவன் “உங்களுக்கு வேணா என் மேல பாசம் இல்லாமல் இருக்கலாம். ஆனா கடந்து போன நிமிடம் வரை உங்களை என்னுடைய அம்மாவாக தான் நினைத்திருந்தேன். எங்களுக்கு மனிதர்களிடம் தராதரம் பார்க்க தெரியாது. அதே சமயம் மனித மிருகங்களை நன்றாக வேட்டையாட தெரியும்”.

உதட்டை வளைத்து இகழ்ச்சியாக பார்த்தவர் “அதிகமா யோசித்து அடிபட்டு உங்கப்பனை மாதிரி மருத்துவமனையில் போய் படுத்திடாதே” என்றார் மிரட்டலாக.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,852
2,041
113
எதுவும் பேசாமல் அவரை பார்த்து லேசாக சிரித்து விட்டு “ஆட்டம் இனி தான் ஆரம்பம். இத்தனை நாள் எல்லாமே உங்க கையில் இருந்தது இனி என்னோட டர்ன்” என்று கூறி விட்டு அங்கிருந்து வெளியேறினான்.

தனது அறைக்குச் சென்றவன் புதிய எண்ணிலிருந்து தந்தையின் வழக்கறிஞரை அழைத்து அவரிடம் பேச வேண்டும் என்று கூறினான். அவரும் தனது கெஸ்ட் ஹவுசிற்கு வரும்படி கூறினார். போனை வைத்துவிட்டு சற்று நேரம் யோசித்தவன் தனது வழக்கமான மொபைலில் இருந்து நண்பனுக்கு அழைத்து தன்னுடன் பப்பிற்கு வரும்படி அழைப்பு விடுத்தான். அவனது அந்த கால் பிம்லா தேவி ஆட்களால் ட்ரேஸ் செய்யப்பட்டு உடனே அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதைக் கேட்டதும் ‘என்னமோ என்கிட்டே சவால் விட்டுட்டுப் போனான். இவ்வளவு தானா அவனுடைய பேச்சு’ என்று யோசித்தவர் தன் ஆட்களிடம் அவன் மீது ஒரு கண் வைக்கும் படி கூறினார்.

பப்பிற்கு போவது போல தயாராகி இருந்தவன் நண்பன் வந்ததும் அவனை தன் காரில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து நேரே பப்பிற்கு சென்றான். மற்றொரு எண்ணில் இருந்து சில பல அழைப்புகளை மேற்கொண்டு சில ஏற்பாடுகளை செய்து கொண்டான். பப்பிற்குள் நண்பர்கள் இருவரும் நுழைந்து தங்கள் மற்ற நண்பர்களுடன் கொண்டாட்டமாக இருக்க, அதை பிம்லா தேவியின் ஆட்கள் கவனித்து அவருக்கு தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

சுமார் அரை மணி நேரம் வரை சித்தார்த் வித்தியாசமாக எதுவும் செய்யாமல் ஜாலியாக இருப்பதை பார்த்து அவன் மீது நம்பிக்கை வந்திருக்க, மெல்ல தாங்களும் ட்ரிங்க்ஸ் எடுக்க தொடங்கினர். அதை கவனித்துக் கொண்டிருந்த சித்தார்த் அவர்களுக்கு நன்றாக போதை ஏற்றும் ட்ரிங்க்சாக அனுப்பி வைத்துவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் அனைவருக்கும் நன்றாக போதை ஏறியதும், சித்தார்த்தின் நண்பர்கள் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருக்க, அவர்களின் நடுவே சித்தார்த் இருந்தான்.

அதை அந்த ஆட்கள் பார்த்துக் கொண்டிருந்து விட்டு நாற்காலியில் சாய்ந்து கொண்டனர். மெல்ல அந்த கூட்டத்திலிருந்து விலகி பின் வாசல் வழியே வெளியே வந்த சித்தார்த் அங்கே அவனுக்காக காத்துக் கொண்டிருந்த கால் டாக்சியில் ஏறி வழக்கறிஞரை பார்க்க சென்று விட்டான்.

இங்கோ கூட்டத்துக்கு நடுவே ஒருவன் நிற்க வைக்கப்பட்டிருக்க, சுற்றி இருந்தவர்கள் அடிக்கடி சித்தார்த்-சித்தார்த் என்று பேச, பிம்லாவின் ஆட்களோ சித்தார்த் அங்கே இருக்கிறான் என்கிற நம்பிக்கையோடு அமர்ந்திருந்தனர்.

அவன் வழக்கறிஞரிடம் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் கேஷ்வி பிம்லாவின் முன் அமர்ந்திருந்தாள்.

“சொல்லு என்ன விஷயமா என்னை பார்க்கனும்னு சொன்ன?”

அவரிடம் இருந்த அதே அலட்சியம் அவளிடமும் இருக்க “ஐ நீட் சித்தார்த்! முன்னாடி இதுவொரு பிஸ்னெஸ் டீலாக தான் பார்த்தேன். பட் இப்போ எனக்கு அவனைப் பிடிச்சிருக்கு”.

முகத்தை சுளித்து அவளைப் பார்த்தவர் “அவன் என் பையனில்லை. நம்ம குடும்பங்களில் இது போன்ற ஆட்களுக்கு இடமில்லை கேஷ்வி”.

“அப்போ எதுக்கு அவனை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க?”

“அவனிடம் என்னுடைய சொத்து முழுவதும் இருக்கு. அதை எப்படி எடுக்கலாம் என்று யோசித்து தான் உன்னை இங்கே கொண்டு வந்தேன்”.

“சோ இந்த சொத்துக்கு தான் என்னை பகடைக்காயாக மாற்றி இருக்கீங்க”.

“ஆமாம்ன்னு சொல்வதில் எனக்கொண்ணும் பிரச்சனை இல்லை. அதே சமயம் உனக்கும் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாம உன் பேரெண்ட்ஸ்காக தானே பண்ணி கிட்டே? இப்போ என்ன திடீர்னு?”

“லுக்! உனக்கு வேண்டியது சொத்து. எனக்கு வேண்டியது சித்தார்த். அதுக்கு நான் என்ன பண்ணனும் சொல்லு?” என்றாள் மரியாதையை விட்டு.

“ம்ம்..” என்று தலையசைத்தவர் “நீ போய் என் பப்பாவை பார். அவர் உனக்கான வழியை சொல்லுவார்”.

அவளோ நகராமல் “எனக்கு அவள் இருக்குமிடம் தெரியனும்” என்றாள்.

இதழில் எழுந்த புன்னகையுடன் “குட்! நீ சரியான பாதையை தான் யோசிக்கிற. பப்பா கிட்ட போ அவர் உனக்கு என்ன செய்யணும்னு சொல்லுவார். அதன் பின் சித்தார்த் உனக்கு தான்” என்றார்.

“டன்!’ என்று எழுந்து கொண்டவள் “என்னை ஏமாற்றணும்னு நினைக்காதீங்க” என்று விட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

அதே நேரம் நீரஜின் நண்பர் நீரஜின் வாழ்க்கையில் நடந்தவைகளை எல்லாம் கூறிக் கொண்டிருந்தார்.

“உன்னுடைய அம்மா சாதாரண குடும்பத்து பெண். ஆனால் மிகவும் நல்லவள். இந்த பிம்லா தேவியும் அவள் குடும்பமும் இங்கே ஒரு டான் மாதிரி இருக்கிறார்கள். அவங்களை மீறி பிசினெஸ் செய்பவர்களை அழித்து விட்டு தான் மறுவேலை பார்ப்பார்கள். அப்படித்தான் உன்னுடைய தாத்தாவும் அவர்கள் வலையில் விழுந்தது. உன் தாத்தாவிற்கு நீரஜின் காதல் பிடிக்காத ஒரு காரணத்தை வைத்து பிம்லாவை அவர் வாழ்க்கையில் கொண்டு வந்துட்டாங்க. ஆனா கடைசி காலத்தில் தான் செய்த தவறை உணர்ந்த உன் தாத்தா சொத்துகள் முழுவதையும் உன் பெயரில் எழுதி வைத்து விட்டார். அது தான் அந்த குடும்பம் எதிர்பார்க்காத ஒன்று. உன்னை முடக்கி வைக்க தான் தங்கள் குடும்பத்து பெண்ணான கேஷ்வியை உனக்கு கட்டி வைத்தது. அவர்களை மீறி உன்னால் எதுவும் செய்ய முடியாத வகையில் பிசினெஸில் வேலைகள் பார்த்து வைத்திருக்காங்க. இப்போ உனக்கு நான் சொல்ல வேண்டியது என்னன்னா உடனே நீ போர்ட் மீட்டிங் ஏற்பாடு செய்து உன்னுடைய தொழில்களில் இருந்து அவர்கள் அனைவரையும் வெளியே அனுப்பனும். அதற்கான முன்னேற்பாடுகளை நீ இப்போதிருந்தே செய்யணும்” என்றார்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,852
2,041
113
“ம்ம்ம்...நான் முக்கியமான ஷேர் ஹோல்டர்கள் சிலர் கிட்ட பேசி இருக்கேன். அதாவது இவர்களுக்கு எதிராக இருப்பவர்கள் கிட்ட. மற்றவர்களை விட என் அம்...ம்ச்..அந்த லேடியை கம்பனி விவகாரத்தில் தலையிடாம வைக்கணும்”.

“பண்ணிடலாம் எல்லாவற்றிற்கும் வழி இருக்கு பட் நீ ரொம்ப கவனமா இருக்கணும். அது கொலைகார கும்பல். எதற்கும் அஞ்ச மாட்டார்கள்”.

சற்று நேரம் கண்களை மூடி அமர்ந்திருவனின் மனம் பலமாக யோசித்தது. பிம்லாவை அத்தனை எளிதாக கம்பனியை விட்டு வெளியேற வைக்க முடியாது என்று தெரிந்தது. முதலில் அவரை அனுப்பினால் தான் மற்றவர்களை எளிதாக கையால முடியும் என்று புரிந்தது. தேவ் மாமாவை சமாளிப்பது எளிது. ஆனால் தினுவையும் அந்தக் கிழவனையும் சிரமப்பட்டு தான் சமாளிக்க வேண்டி இருக்கும் என்று புரிந்தது.

சற்று நேரம் யோசித்ததில் சில விஷயங்கள் புரிய, மெல்ல அவர் காதில் தான் செய்ய போகும் செயல்களை சொல்லலானான். அதில் அவர் பங்கு என்ன என்பதையும் விலாவரியாக எடுத்துரைத்தான். அதைக் கேட்டதும் அவரது முகத்தில் மெச்சுதலாக ஒரு புன்னகை. அதே சமயம் “இந்த திட்டம் சிறிது தவறினாலும் பிரச்சனையாக வாய்ப்பு இருக்கு சித்தார்த்”.

“அதில் தான் என் திறமையே இருக்கு அங்கிள். இதில் நான் பாஸ் பண்ணிட்டா மற்றதை அடிச்சு தூக்கிடுவேன்” என்றான்.

“ம்ம்..ஓகே. அப்போ உனக்கு வேண்டிய டாகுமென்ட்ஸ் எல்லாம் நான் தயார் செய்திடுறேன். பிம்லா கிட்ட கையெழுத்து வாங்க வேண்டியது உன் பொறுப்பு” என்றார்.

அதுவரை மனதிலிருந்த குழப்பங்கள் நீங்க தெளிந்த முகத்துடனும் மெல்லிய சிரிப்புடனும் “எல்லாமே நடக்கும் அங்கிள்” என்று விட்டு எழுந்து கொண்டவன் “அங்கிள் ஒரு நிமிஷம் உங்க போன் கொடுங்க. ஒரே ஒரு கால் பண்ணிக்கிறேன்” என்றான்.

அவரும் எதுவும் கேட்காது அவனிடம் போனை கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டவன் சரவணனை அழைத்து அவனிடம் சில நிமிடங்கள் பேசினான். அதில் அவன் அறிந்து கொண்ட தகவல்கள் மனதிற்கு உகந்ததாக இல்லை. மனம் அதை ஏற்காத போதும் இப்போது இருக்கும் நிலையில் சிலவற்றை முடித்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானான்.

“சரவணா நான் சொல்கிறபடி ஏற்பாடு செய். எவ்வளவு சீக்கிரம் நடக்குதோ அவ்வளவு சீக்கிரம் நடந்தாகணும்” என்றான்.

அவனோ “இதுக்கு வர்ஷினி ஒத்துக்கணுமே சித்தார்த்”.

இறுகிய முகத்துடன் “அவளுக்கு தெரியாமலே இதெல்லாம் நடக்கும் சரவணா. எல்லாமே எங்களின் வாழ்க்கைக்கு தான். அதனால நீ ஏற்பாடு செய்திட்டு என்னை நான் கொடுக்கும் எண்ணில் கூப்பிடு” என்று கூறி அவனுக்கு தனது ரகசிய எண்ணை கொடுத்து விட்டான்.

அவனது பேச்சை கவனித்துக் கொண்டிருந்தவர் “முடிவு பண்ணிட்ட போல?”

“எஸ் அங்கிள்! கேஷ்வியையும் நம்ப முடியாது. சோ நான் முந்திக்கனும். நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க. அங்கே யார் ரெஜிஸ்ட்ரார் என்று பார்த்து சொல்லுங்க. யாரை வைத்து பேசணுமோ பேசிடலாம் .”

அவனது கைகளைப் பற்றி குலுக்கியவர் “ஆல் தி பெஸ்ட் மை சன்! உன்னுடைய எல்லா முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துக்கள். எப்போ என்ன உதவி என்றாலும் தயங்காம கேள். அண்டர்க்ரவுண்ட் ஆட்கள் வேண்டுமென்றாலும் சொல்லு நான் ஏற்பாடு செய்றேன்” என்றார்.

“என் கிட்டேயே தேவையான ஆட்கள் இருக்காங்க அங்கிள். இனி, இந்த சித்தார்த் மல்ஹோத்ரா எப்பவும் லைம் லைட்டில் இருப்பான். கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்!” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்தவர் ‘நீரஜ் உன் பையன் ஜெயிச்சிடுவான். உன்னுடைய கனவை அவன் நிறைவேற்றுவான்’ என்று சொல்லிக் கொண்டார்.