Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் 13 | SudhaRaviNovels

அத்தியாயம் 13

kohila

Moderator
Staff member
Mar 26, 2018
114
32
63
இன்று இரவு 12,30 மணி..

அஸ்ரத் சொல்லிக் கொண்டிருந்தாள்.

"உலகையே ஆண்ட மன்னர்களின் கல்வெட்டுக்களையும், ஓலை சுவடிகளையும், அவர்கள் பண்பாடு கலாசாரங்களையும் வைதேகி மேடம் உதவியுடன் ஆராய்ச்சி செய்தேன். என்னுடைய கணிப்புப் படி, இவங்க ஸ்கூல் க்ரவுண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்கள், பல்லாயிரம் வருடங்களுக்கு முன் சிற்றரசர்களின் கட்டுப்பாட்டில் இருந்திருக்க வேண்டும். கிடைப்பதற்கரிய சில அரிய பொக்கிஷங்கள் அவ்விடத்தில் இருப்பதை சில டெஸ்ட்கள் செய்து கண்டுபிடித்து, என் காலேஜ் மூலமாகவே யுனிவர்சிட்டிக்கு அனுப்பினேன். இரண்டு வருடங்கள் கழித்து, நான் பி.ஜி பண்ணும் போது, என்னுடைய ப்ராஜெக்ட்க்கு கவர்மென்ட் அப்ரூவ் கிடைத்தது"

"இதெல்லாம் வைதேகி மேடம்க்கு தெரியுமா?"

"அவங்க தான் இந்த ரிசர்ச்க்கு கைடு பண்ணதே. அவங்க சொன்னாங்க. எப்படியும் இந்த ப்ராஜெக்ட் ஓகே ஆனால், நம்ம கலெக்டர் பர்மிஷன் படிதான் எல்லாம் நடக்கும். நம்ம டிஸ்ட்ரிக்க்கு நல்ல கலெக்டர் கிடைச்சிருக்கும் போது என்ன கவலைன்னு?"

"பட் இதெல்லாம் என் கைக்கு வரவே இல்லயே" என்று யோசித்தவன்,

"அந்த ப்ராஜெக்ட்க்காக தான், அவங்க ஸ்கூல் இடத்தை கவர்மென்ட்டோடதுன்னு சொல்ராங்களா?" என்றான்.

"அதெல்லாம் எனக்கு தெரியாது. பட் மினிஸ்டர் ஸ்கூலை நல்ல விலைக்கு எழுதி கொடுக்க சொல்லி கேட்டார். இல்லன்னா ஸ்கூலை இழுத்து மூட வைக்க, என்னெல்லாம் பண்ணணுமோ அதை பண்ணுவேன் சொன்னார். ஆறு மாசம் முன்னாடி ஒரு பேரண்ட் பிரச்சனை பண்ணப்போது, அவர் தான் மீடியா சப்போர்ட் கொடுத்துருக்கார்"

"புல்ஷிட். எப்படி எனக்கு தெரியாம போச்சு. ஹர்ஷிக்கு கூட தெரியாதே" என்று 'எப்படி உனக்கு தெரிந்தது' என்பது போல் இழுத்தான்.

"இப்போதான் ஒரு டூ டேஸ் முன்னாடி இதெல்லாம் மேம் சொன்னாங்க"
சட்டென்று ஃபோனை எடுத்தவன்,

"அஸ்வின் சாரி. ஃபர்ஸ்டே வே உங்களை ரொம்ப தொல்லை பண்றேன்.

''ஃபோன் ட்ரேஸ் பண்ணீங்க தானே.. கும்பகோணம் டவர்ல தான் இருக்கா?"

"ஒண்ணும் புரியலயே" என்று யோசித்தவன், "நம்ம டிஸ்ட்ரிக்ட்க்கு புது கலெக்டர் யாரு?"

“…”

"அவர் அந்த ஏரியா பெரிய தலைங்கள காப்பாத்துற ஆளாச்சே... சரி எனக்கு பர்சனலா ஹெல்ப் பண்ண முடியுமா?"


புயல் தஞ்சையை நோக்கி வந்துக் கொண்டிருந்த அன்றைய நாளில் ….

மகளை சலனமின்றி ஒரு பார்வை பார்த்தது ஒரே நிமிடம் தான். பின் அவரே எழுந்து வந்து,

“எழுந்திரு ஹர்ஷி. சீக்கிரம் ரெடியாகு. கோவிலுக்கு போயிட்டு போகலாம்” என்று கிளப்ப,

“அம்மா! எப்படிம்மா?”

“நீ லவ் பண்ணின தானே அப்புறம் என்ன?”

அவள் அமைதியாகவே இருந்ததை பார்த்து, “ஸ்கூல் பிரச்சனையை நான் கோர்ட்டில் பார்த்துக்கிறேன். எனக்கு ஆரிஃப் பற்றி தெரியும். கீழ்தரமா இறங்கி பழி வாங்குறவர் இல்ல. வேற என்னவோ நடந்துருக்கு. அவரை விட உன் மேல் நம்பிக்கை இருக்கு. நீயும் தவறானவரை செலக்ட் பண்ணியிருக்க மாட்ட”

“அதெல்லாம் சரி. ஆனாலும் என்னால் முடியாதும்மா” என்று அன்னையின் மடியிலேயே அவரின் வயிற்றைக் கட்டிக் கொண்டு படுத்தாள்.

அதே நேரம், ஆரிஃப் தன் வீட்டில் உள்ளவர்களை கிளப்பிக் கொண்டிருந்தான்.

“ஆரிஃப் கொஞ்சம் அவசரப்படுறப்பா” என்ற அவன் தந்தைக்கு,

“இல்ல வாப்பா. ஹர்ஷி தான் எனக்குன்னு முடிவு பண்ணினப்பவே எடுத்த முடிவு தான். என் முடிவு உங்களுக்கு பிடிக்காது. எனக்கு பிடித்த வாழ்க்கையை உங்களால் தர முடியாது” என்று நிறுத்தி, எங்கோ வெறித்தப் பார்வை பார்த்துக் கொண்டிருந்த ஆயிஷாவின் அருகில் வந்து, அவர் காலடியில் அமர்ந்தவன்,

“எனக்கு சம்மதம் இல்லன்னு இப்பவும் உங்களுக்காக சொல்லலாம். இப்படி நியூஸ், ஃபேஸ்புக்ன்னு வந்ததுக்கு அப்புறம் ஒரு பொண்ணு என்னை நிக்காஹ் பண்ணின்னால், அது என் பதவிக்காக மட்டும் தான் இருக்கும். ஆனா ஹர்ஷி அப்படி இல்ல. அவங்க ஸ்டேட்டஸ்க்கு இன்னும் பெரிய இடமா பார்ப்பாங்க”

“அவங்க ஸ்டேட்டஸ்க்கு நாமளும் குறைந்தவங்க இல்ல ஆரிஃப். ஜில்லாவுக்கே கலெக்டர்ன்னா சும்மாவா” என்று தன் மகனை விட்டுக் கொடுக்காமல், மனதினுள் திட்டியப் படியே கிளம்ப ஆயத்தமானார்.

நேற்று எப்படியாவது பதிவு திருமணம் செய்ய வேண்டும் என்றெண்ணியவன், இன்று பெற்றோர்கள் ஆசியுடன் கோர்ட்டில் திருமணம் செய்ய போவதை நினைத்து, மணிக்கட்டை திருப்பி மணியைப் பார்த்து, தனக்குள் சிரித்துக் கொண்டான்.

‘ஹர்ஷி இந்நேரம் என்ன செய்வாள்?’ என்று நினைக்காமலிருக்க முடியவில்லை.

ஆனால் இந்த அதிசயம் எப்படி நடந்தது?
 
  • Like
Reactions: ugina begum

kohila

Moderator
Staff member
Mar 26, 2018
114
32
63
நேற்று அவளை வர சொன்ன அதே நேரத்தில், அஸ்ரத் ஏதோ பழைய செய்தித்தாள் விஷயத்தை வைத்துக் கொண்டு பிரச்சனையை ஆரம்பிக்க, அவனுடைய தந்தைக்கு செய்தி போக, அவரும் ஆரிஃபை பதற்றத்துடன் அழைத்தார். அவனும் வேறேதோ விஷயம் என்று பதறியடித்துச் சென்றால், பிரச்சனை இப்படி இருக்க, அஸ்ரத் அன்னை,

“இனி உங்க வாழ்வில் என் பொண்ணு மட்டும் தான் சொல்லுங்க. இப்பவும் எனக்கு இந்த நிக்காஹ்வில் சம்மதம்” என்று அவன் முன் வந்து நிற்க, ஹர்ஷிதாவை மனதில் வைத்திருக்கும் அவன் எதுவும் சொல்லாமல் வெளியேறி விட்டான்.

சற்று நேரத்திலேயே சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்ததை, அங்கே வேலைப் பார்க்கும் ஒருவன் மூலம் அறிந்துக் கொண்ட ஆரிஃப், வைதேகி நிச்சயமாக மினிஸ்டரை தான் சந்திப்பார் என்று கணித்து, முதலில் நிருபர்களுக்கு, அமைச்சர் தலைமையில் இந்து முஸ்லீம் திருமணம் நடைபெற போவதாக ஒரு செய்தியை அனுப்பினான்.

தெருவுக்கு தெரு தங்கி இருக்கும் மீடியா ஆட்கள் அனைவரும் அமைச்சர் வீட்டு முன்பு படையெடுக்க, அவரின் பி.ஏ க்கு அழைத்து,

“எலக்க்ஷன் வருது. அமைச்சர் பெயரை கெடுக்காமல் வெளியே நிற்கும் பத்திரிக்கை நிருபர்களிடம் ஆமாம் மட்டும் சொல்லுங்க” என்றான்.

என்னவென்று முழுவதையும் விசாரித்த பி.ஏ,

“இது அமைச்சருக்கு தெரியுங்களா?” என்றான்.

“ஹர்ஷிதா அம்மாவை அதற்கு தான் வர சொல்லியிருக்கிறார்” என்கவும், அமைச்சர் வைதேகியை நன்றாக கவனித்தது ஞாபகத்திற்கு வர, அவனும் வெளியே நின்றிருந்த நிருபர்களிடம், அப்படியே சொல்லி விட்டான்.

சற்று நேரத்தில் வெளியே வந்த அமைச்சர் முன் அனைவரும் மைக்கை நீட்ட, பி.ஏ வை முறைத்தப்படியே பேச ஆரம்பித்தார்.

“நான் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவன். என் தங்கை மகன் மட்டுமல்ல, என் மகளே வேறு மதத்தை சேர்ந்த பையனை விரும்பினால் கூட நான் முன்னின்று திருமணம் செய்து வைப்பேன்” என்று கூறிவிட்டு,

“நாளைக்கு இவங்க திருமணத்தை முடித்து விட்டு தான் பிரச்சாரத்தை ஸ்டார்ட் பண்ண போறீங்களா?” என்ற ஒரு நிருபரின் கேள்விக்கு,

‘இது வேறயா?’ என்று மனதினுள் நொந்துக் கொண்டு,

“நாளை கோர்ட்டில் சந்திக்கலாம். நன்றி” என்று அவர்களிடம் விடைப்பெற்றார்.

‘நம்ம சொந்தக்கார பையன் நமக்கு உதவுவான் என்று வட இந்தியாவில் இருந்த ஆரிஃபை, மத்தியில் உள்ள அமைச்சர்கள் உதவியுடன் இங்குக் கொண்டு வந்தால், இந்த பையன் இப்படி எமகாதனா இருக்கானா’ என்று வியந்தார். சற்று நேரம் இந்த திருமணத்தை எப்படி நிறுத்துவது என்று யோசித்தவர்,

உடனே தாசில்தாரை தொடர்புக் கொண்டு, பள்ளிக்கூட இடத்தை இடிக்க உத்தரவிட்டார். அவரின் கணிப்புப்படி வைதேகியும், ஹர்ஷிதாவும் இருக்கும் மனநிலையில் நீதிமன்றத்திற்கு வர மாட்டார்கள்.
மாவட்ட ஆட்சியாளரின் திருமணம் நீதிமன்ற வளாகத்தில் நடப்பதாக இருக்கவும், மீடியா ஆட்கள் மற்றும் நகரின் முக்கிய புள்ளிகள் புயலை பற்றி கூட கருத்தில் எடுத்துக் கொள்ளாது அங்கு விரைந்தனர். ஆரிஃப், தன் தாய், தந்தை மற்றும் உடன்பிறப்புடன் காரில் வந்து இறங்கினான்.

ஒரு வக்கீல் அவனருகே ஓடி வந்து,

“மேரேஜ் ஆஃபீசர் வந்துட்டார். இன்னும் அவங்க வரல. கால் பண்ணி பாருங்க” என்றதும், சற்று மனம் சோர்வடைந்தாலும், ஹர்ஷிதாவுக்கு அழைக்கவில்லை.

‘இன்று விட்டால் இது நடக்குமா? என்று தெரியவில்லை’ என்று உள் மனம் வேறு சொல்லிக் கொண்டிருக்க, திருமணம் நடக்குமா என்பது போல அனைவரும் ஆர்ஃபை பார்க்க, ஆரிஃப் வாயிலைப் பார்த்தான்.
 
  • Like
Reactions: ugina begum

kohila

Moderator
Staff member
Mar 26, 2018
114
32
63
அங்கே காவ்யாவும், வைதேகியும் வர, நடுவில் அழகிய பட்டுசேலையில், அளவான நகைகள் அணிந்து வந்தவளைப் பார்த்ததும் கண்ணிமைக்க மறந்தவன் இதழில் மெதுவாக சிறிய புன்னகை எட்டிப் பார்க்க, அவன் கண்களை தொடர்ந்த ஆரிஃப் உறவுக்காரர்கள், அவள் நெற்றியில் இருந்த பொட்டையும், அப்போதுதான் கோவிலுக்கு சென்று விட்டு வந்ததன் அடையாளமாக திருநீறு குங்குமத்தையும் பார்த்து முகம் சுளித்தனர்.

அவளையே வைத்த விழி வாங்காமல் பார்த்திருந்தவன், அதையெல்லாம் எங்கே கண்டுக் கொண்டான்?

பின் ஒரு அறைக்குள் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கபட,

“ஆரிஃப்! ஸ்பெஷல் மேரேஜ் ஆக்ட் 1954 சட்டப்படி, உங்களுக்கு ஹர்ஷிதாவை மனைவியாக ஏற்றுக் கொள்ள சம்மதமா?” என்றுக் கேட்க, அவள் மேல் உள்ள விழிகளை எடுக்காமல், ஆரிஃப் வேகமாக சம்மதம் சொல்ல, ஹர்ஷிதாவிடம் கேட்டப் போது, அவனை நிமிர்ந்துக் கூட பார்க்காமல் தலையசைத்தாள். அங்கிருந்த ஒரு வக்கீல்,

“வாயை திறந்து சொல்லுங்க” என்று சொல்ல,

வைதேகியும் அப்படியே சொல்ல, அவரை நிமிர்ந்து முறைத்தவள், வைதேகியைப் பார்த்துக் கொண்டே “சம்மதம்” என்றாள்.

“ப்ரோப்போஸ் பண்ணி டூ டேஸ்ல மேரேஜ், இதுவரை யாருக்குமே நடந்து இருக்காது இல்ல காவ்யா” என்று காவ்யாவுடன் சேர்ந்து வைதேகி மகளை கிண்டல் செய்ய, அமைதியாகவே இருந்தாள். அவர்கள் நீட்டிய இடத்தில் கையெழுத்து போட்டப் போதுக் கூட, ஆரிஃபை நிமிர்ந்து பார்க்க வில்லை.

பின் அவர்களின் உறவுக்கார பெண் ஒருவர், ஹர்ஷிதாவின் கழுத்தில் செயின் ஒன்று போட்டு விட்டு செல்ல,

காவ்யா, “மேடம் பாயம்மாவா ஆகிட்டாங்க” என்று கிண்டலுடன் காதில் சொல்ல, யாருமறியாமல் அவள் கையை கிள்ளி வைத்தாள். அவ்வளவு தான் அடுத்த நிமிடமே அனைவரும் கலைந்து செல்ல ஆரம்பித்தனர்.

ஆயிஷாவின் விருப்பமன்றியே இவர்கள் திருமணம் நடக்க, வைதேகி தன் உறவினர்களை சமாதானப்படுத்தும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவருக்கு அவர் மகளின் மகிழ்வான வாழ்வு மட்டுமே முக்கியமாகப்பட்டதால், இவர்கள் வீட்டுக்கே வந்து புறம் பேசும் மனிதர்களையெல்லாம் கண்டுக்கொள்ள நேரமின்றி சுழன்றுக் கொண்டிருந்தார்.

“என்னை வீட்டை விட்டு அனுப்புறதுல உனக்கு அவ்ளோ சந்தோஷம் இல்ல” என்றாள் வைதேகியை முறைத்து.

“இங்க பாரு காவ்யா. நான் இவ அரியர் முடிக்கட்டும் பையன் பார்க்கலாம் இருந்தால், அவளாவே லவ் பண்ணிட்டு இப்போ இப்படி பேசுறதை…” என்று காவ்யாவிடம் மகளைக் கிண்டல் செய்தாலும், உள்ளுக்குள் அவரும் உடைந்து தான் இருந்தார்.

கணவன் இறந்த போது கூட, இவள் முகத்தைப் பார்த்தே தன்னை தேற்றியவர், நேற்று அவர்கள் ஊர் செய்தியில் அமைச்சரின் பேட்டியைப் பார்த்து கதி கலங்கி விட்டார்.

‘என்ன கோர்ட்டில் நாளை திருமணமா’ என்று. ஆனால் இன்று விட்டால் இவள் ஆசைப்பட்ட வாழ்க்கைக்கு இதுப்போல் ஒரு சந்தர்ப்பம் வாய்க்குமா என்று தான் மகளையும் சமாதானம் செய்து அழைத்து வந்தார்.

“தட்கல் கோர்ட் மேரேஜ் ன்னு சொல்லிட்டு, ஏதோ ஸ்பெஷல் மேரேஜ் னு சொல்றாங்க” என்று வைதேகி அங்கிருந்த தன் வக்கீலிடம் சந்தேகத்தை கேட்க,

“எனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆனதால எப்போ வேணா ப்ராப்ளம் வரலாம்னு, உங்க ஸ்கூல் ஃபங்ஷன் முன்னாடியே நோட்டீஸ் கொடுத்திட்டேன்” என்றான் அங்கு வந்த ஆரிஃப். ஹர்ஷிதா மட்டும் அதிர்ந்த விழிகளுடன் பார்த்தாள். மற்றவர்கள் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தனர். அதிலும் வைதேகி அவனை சொல்லொண்ணா கோபத்துடன் பார்த்து வைத்தார்.

“மேடம், எனக்கு ஒரு முக்கியமான வேலை வந்துருச்சு. நீங்களே ஹர்ஷியை எங்க வீட்டுக்கு வந்து விட்டுட்டு போயிடுங்க” என்றான் அவரின் மன ஓட்டத்தை அறியாமல்.

“ஒண்ணும் வேண்டாம்மா. நம்ம வீட்டுக்கே போலாம்” என்று ஹர்ஷிதா வேகமாக சொல்ல, அமைதியாக அவளை பார்த்தான். உடனே கைபேசியில் ஏதோ தகவலை சொல்லி விட்டு அங்கேயே நின்றுக் கொண்டான்.

கார் அவர்கள் அருகே வந்து நின்றதும், காவ்யாவின் கையை பிடித்தப்படி இவள் ஒரு புறமும் ஆரிஃப் மறுபுறமும் ஏற, அவள் கையையே சில நொடிகள் இமைக்காமல் பார்த்திருந்தான். பின் காவ்யாவிடம் பின்னால் வரும் காரில் ஏறிக் கொள்ளுமாறு சொல்ல,

“இல்ல நான் உங்களோட வரதுக்காக வரல. எங்களுக்காக மேம் கார் அரேஜ்ச் பண்ணியிருக்காங்க” என்று ஹர்ஷிதாவிடம் இருந்து கையை வேகமாக உருவினாள் காவ்யா.

வைதேகி நெருங்கிய உறவினர்களை மட்டும் வரவழைத்திருந்தார். அனைவரையும் சாப்பிட ஒரு உணவகத்துக்கு அனுப்பி விட்டு, தனியே நின்றிருந்தார். அவ்வளவுதான் நேற்று வரை கழுத்தைக் கட்டி முத்தமிடும் மகள் இனி விருந்தாளியாக மட்டும் தான் வந்து செல்வாள். மகளை கண்களில் நிறைத்துக் கொண்டார். கண்கலங்க அங்கிருந்தவர்கள் அறியா வண்ணம் துடைத்து விட்டு காவ்யாவையும் இன்னும் சில உறவினர்களையும் வேறு ஒரு காரில் ஏறி அவர்களை பின் தொடரச் சொன்னார்

காரில் ஏறி அமர்ந்து கண்களை மூடி, தலையில் கை வைத்த ஆரிஃப் எடுக்கவே இல்லை. அவனுக்கு இன்று அடுத்தடுத்து வேலைகள் அணிவகுத்து நின்றது. எல்லாவற்றையும் சரியாக சமாளிக்க வேண்டிய கவலை. நேற்றைய நிகழ்வில் ஹர்ஷிதாவிடம் சகஜமாக பேச தயக்கம் என்று அமர்ந்திருந்தான்

ஹர்ஷிதாவுக்கு பெற்றவர், நண்பர்களை பிரிந்து தனியாக செல்லும் கலக்கம். இதனுடன் இவன் வேறு இவளிடம் நடந்துக் கொள்ளும் விதம் எல்லாம் சேர்ந்து, அவளுக்குள்ளும் கோபத்தை வரவழைக்க, அமைதியாகவே வந்தாள்.

ஓரிடத்தில் டிரைவரை வண்டியை நிறுத்தச் சொல்லி இவள் வேகமாக இறங்க, ஆரிஃப் ஒன்றும் புரியாமல் சுற்றிப் பார்த்தான். இவர்கள் பின்னாலேயே வந்த காரில் இருந்து இறங்கிய காவ்யா, இவன் முகத்தைப் பார்த்து,

“சுவாமி மலை முருகன் கோவில் சார். இந்த வழியா வந்தால் நிச்சயம் தரிசனம் பண்ணிட்டு தான் வருவா” என்று சொல்லிவிட்டு, அவள் பின்னாலேயே படிக்கட்டுகளில் காவ்யா ஏற ஆரம்பிக்க, ’முதல் நாளே இப்படியா?’ என்று சலிப்புடன் பின்னால் நன்றாக சாய்ந்து அமர்ந்து, மீண்டும் கண்களை மூடினான். இரவு முழுவதும் தூங்காததால் கண்களும் வலித்தது. அப்போது காரை யாரோ மெதுவாக தட்டும் சத்தத்தில் விழித்துப் பார்த்தான். அந்த ஊரின் கிராம அலுவலர் நின்றிருந்தார்.

“சார், மேடம் ….” என்று தயங்கியபடியே அவர் நிற்க, “சொல்லுங்க” என்று அவரை ஊக்கினான்.

“இன்னைக்கு ரெட் அலர்ட்ன்னால 11 மணிக்கே கோவில் நடை சாத்திட்டோம். மேடம் திறக்க சொல்லி பிரச்சனைப் பண்ணிட்டு இருக்காங்களாம். கோவில் நிர்வாகி ஒருத்தர் கால் பண்ணினார்” என்றதும், சலித்தப்படி கதவை திறந்து வந்தவன், படிக்கட்டுகளில் இறங்கி வந்தவளைப் பார்த்து நிற்க,

“ஒரு கோயிலைக் கூட உங்க இன்ஃப்ளுயன்ஸ் யூஸ் பண்ணி திறக்க வைக்க முடியவில்லை. நீங்களாம்….?” என்று அவள் கோபமாக பேசி கார் கதவை வேகமாக அடித்து சாத்த, அந்த சத்தத்தில் காதை பொத்தினாலும், அவளுடன் தயக்கத்தை உடைத்து பேச கிடைத்த வாய்ப்பை எண்ணி புன்னகையுடனே காவ்யாவிடம் தலையசைத்து, மறுபுறம் வந்து ஏறினான்.
 
  • Like
Reactions: ugina begum