Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 13 | SudhaRaviNovels

அத்தியாயம் - 13

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
52
33
8
அத்தியாயம் – 13

சிவதாஸ் மற்றும் அவர்களின் டீம் மொத்தமும் அந்த அறையில் குழுமி இருந்தது. நடுவே ஒரு மேஜை போடப்பட்டிருக்க, அதன் மீது ஒரு வரைபடம் விரித்து வைக்கப்பட்டிருந்தது.

அனைவரின் பார்வையும் அதன் மீது தான். கடந்த இரண்டு மணி நேரமாக அதில் குறிப்பிட்டிருக்கும் செய்தியை அறிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருகிறார்கள். எந்த இடத்தை அந்த வரைப்படம் குறிக்கிறது என்பது புரியாத புதிராக இருந்தது.

பல்வேறு கணக்குகளை போட்டு பார்த்தும் அவர்களால் கணிக்க முடியவில்லை. சிவதாஸின் பார்வை முழுவதும் அதன் மீதே தான் பதிந்திருந்தது. ஒவ்வொரு கோடும் எங்கு செல்கிறது? எந்த ஊரை குறிப்பிடுகிறது என்று ஆராய்ந்தே கொண்டே இருந்தான்.

மேலும் அரை மணி நேரம் சென்றிருக்க, சிவதாசிடம் ஒரு பரபரப்பு தெரிய “கைஸ்! இங்கே பாருங்க!” என்றவன் ஓரிடத்தை சுட்டிக் காட்டி “இது மதுரை! சுற்றுவட்டாரத்தை நல்லா கவனிங்க புரியும்” என்றான்.

அவன் சொன்னதும் அனைவரும் அந்தப் பகுதியை கவனித்து தங்களுக்குள் விவாத்தித்து “ஆமாம் தாஸ்! அப்போ மதுரையை சுற்றியுள்ள ஏதோவொரு பகுதியில் தான் பூஜைக்கான இடம் தயாராகி இருக்கு”.

“எஸ் அப்சலூட்லி” என்றான் மெச்சுதலாக.

அவன் சொன்னதும் அடுத்து மதுரை மேப் கொண்டு வரப்பட்டு அதன் சுற்று வட்டாரங்கள் ஆராயப்பட ஆரம்பித்தன. அவர்களுக்கு கிடைத்த வரைப்படமும், மதுரையின் வரைபடத்தோடு ஒத்துப் போன இடங்களையும் ஆராய்ந்து இறுதியில் கள்ளிகுடி என்கிற அந்த கிராமம் தான் பூஜைக்கான இடம் என்று அறிந்து கொண்டனர்.

“மதுரையிலிருந்து முப்பத்தைந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கு இந்த கிராமம். தேசிய நெடுஞ்சாலை ஏழில் திருமங்கலத்தில் இருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கு” என்றான் தாடையை தடவியபடி.

“ரஞ்சன்! நீ உடனடியா கிளம்பி இந்த கிராமத்திற்கு போகணும். அந்த ஊர் தலைவர் யார் அவரோட அதிகாரம் எந்தளவிற்கு மக்கள் இடையே பலிக்கும் போன்ற விஷயங்களை இருபத்திநாலு மணி நேரத்திற்குள் எனக்கு கொடுக்கணும்” என்றவன் பிரதீப்பின் பக்கம் திரும்பி “எனக்கு அமைச்சர் கதிர்வேலனோட சந்திப்பிற்கு ஏற்பாடு செய்”.

சுபேஷும், அப்துலும் அவனை பார்க்க “நீங்க ரெண்டு பேரும் ராஜேஷையும், அந்த பிரபுவையும் இங்கே கொண்டு வந்திடுங்க. அவனுங்க நாம சொல்கிற அனைத்தையும் கேட்டுகிட்டு நம்ம சார்பா அங்கே போகணும். எந்த இடத்திலும் அவனுங்க நமக்கு எதிரா மாறக் கூடாது”.

“ஓகே தாஸ்! அவனுங்களை நாங்க பார்த்துக்கிறோம். அவனுங்க கிட்ட அனுப்ப நமக்கு ஒரு பொண்ணு வேணுமே. நம்ம டிபார்ட்மென்ட்டில் உள்ளவங்க யாரையும்....” என்று முடிக்கும் முன்னே “தயாரா இருக்கு...சோ நோ வொர்ரீஸ். பார்த்துக்கலாம்” என்றபடி மீண்டும் அந்த வரைபடத்தை ஆராய தொடங்கி விட்டான்.

அதை கேட்டு அவனது டீம் மொத்தமும் ஆடித்தான் போய் விட்டனர். எந்த விஷயத்தையும் அசால்ட்டாக செய்து கொண்டிருப்பவனை ஆச்சர்யமாக பார்த்தபடி தங்களுக்கு சொன்ன வேலைகளை முடிக்க அனைவரும் கிளம்பினார்கள்.

ப்ரூக்ளின் எஸ்டேடிலிருந்து அந்த அதிகாலை வேளையில் ஒரு கார் கிளம்பி மலையை விட்டு இறங்கிக் கொண்டிருந்தது. அதிலிருந்த க்றிஸ் மடிகணினியில் யாரிடமோ சாட் செய்து கொண்டிருந்தான். அவன் முகத்தில் ஆரம்பத்தில் லேசாக உற்சாகம் இருந்தது. ஆனால் சற்று நேரத்தில் அது சீற்றமாக உருமாற “ஷிட்! ப்ளடி பாக்!” என்று கெட்ட வார்த்தைகளாக உதிர்த்து கணினியை எடுத்து அருகே வீசினான்.

தன் பாக்கெட்டில் இருந்து அலைப்பேசியை எடுத்து அழைத்தவன் ஸ்பானிஷில் பேச ஆரம்பித்தான்.

“உங்களால ஒரு வேலையை ஒழுங்கா செய்ய முடியாதா?” என்று எகிறினான்.

அந்தப் பக்கம் வந்த பதிலில் மேலும் கோபம் ஏற “என்ன செய்வீங்களோ தெரியாது இன்னும் இரண்டு நாளில் இங்கே வந்து இறங்கியாகனும். டாகுமென்ட்ஸ் எல்லாம் சரியா இருக்கணும். யாருக்கும் எந்த சந்தேகமும் வரக் கூடாது” என்றான் அழுத்தமாக.

போனை அணைத்து தூக்கிப் போட்டவன் கண்களை மூடி அமர்ந்து கொண்டான். பனிரெண்டு வருடங்களாக எதையும் செய்ய முடியாது மறைந்து மறைந்து வாழ்ந்து இன்று இத்தனை தூரம் கொண்டு வந்த பின்பு மீண்டும் பிரச்சனை என்றால் அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எங்கும் எதிலும் சந்தேகம் ஊர் மக்களுக்கோ, போலீசிற்கோ வரவே கூடாது. மிக கவனமாக கையாள வேண்டும் என்று எண்ணிக் கொண்டு ஜாக்கிற்கு செய்தி அனுப்பினான்.

அடுத்த நிமிடம் அவனிடம் இருந்து உடனே அழைப்பு வந்தது.

“என்ன பிரச்சனை?”

“டேனியும், மரியாவும் வருவதில் பிரச்சனை. டாகுமென்ட்ஸ் சரியாக இல்லை”.

“வாட்! அவங்க கண்டிப்பாக வந்தாகணும் க்றிஸ்”.

“எஸ்! ஆனா அவங்க உள்ளே நுழையும் போது சந்தேகம் வந்தா நாம பினிஷ்”.

“எதுவாக இருந்தாலும் சரியாக பண்ணிட்டு சீக்கிரம் வர சொல்லு க்றிஸ். நம்ம ஆட்களுக்கு தகவல் கொடுக்க ஆரம்பிச்சாச்சு”.

“குட்! பிரசாதம் எப்போ ரெடியாகும்?” என்றவனது விழிகளில் அத்தனை பளபளப்பு.

“நான் இரண்டு நாளில் அங்கே போறேன். எல்லாம் செக் பண்ணிட்டு தயார் பண்ணிடலாம். பட் எனக்கு உன்கிட்ட பிடிக்காத விஷயம் இந்த பிரசாதத்தில் கை வைப்பது தான்”.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
52
33
8
லேசாக சிரித்தவனின் கண்கள் மயக்கத்துடன் “கடவுளுக்குப் படைக்கப்பட்ட பிரசாதம் எத்தனை ருசியானது என்று உனக்கு தெரியாது ஜாக். நீ இன்னொரு முறை இதை பேசாதே” என்று எச்சரித்தான்.

“எந்த பிரச்னையும் எழாதவரை எனக்கொன்றுமில்லை க்றிஸ். மிக கவனமாக இருக்க வேண்டும் நாம். அந்த சிவதாஸ் எங்கள் குரல் இயக்கத்தை முற்றிலுமாக முடக்கி விட்டதாக செய்தி வருகிறது. அவன் மௌனமாக நம்மை கவனிக்கிறானோ என்கிற சந்தேகமும் எனக்கு இருக்கு”.

“அவனை மாதிரி பல பேரை பார்த்திருக்கிறோம் ஜாக். நீ கவலைப்படாமல் மற்ற வேலைகளைப் பார்” என்று கூறி காலை கட் செய்து விட்டான்.

சிவதாசுக்கு அன்றைய பொழுது பயங்கர பிசியாகவே ஆரம்பித்தது. அமைச்சர் அவனை சந்திக்க அனுமதி அளித்து விட, அவரை அவரது அலுவலகத்தில் சந்திக்காமல் வீட்டிற்கே சென்று சந்தித்தான்.

“சொல்லுங்க சிவதாஸ் கேஸ் எந்த நிலையில் இருக்கு?”

“சார்! அவனுங்க சென்னையை விட்டு இடம் பெயர்ந்தாச்சு. அவர்களோட அடுத்த ஸ்பாட் மதுரைக்கு அருகே இருக்கும் ஒரு கிராமம்” என்று தான் அறிந்து கொண்டவைகளை அனைத்தையும் அவருக்கு தெரிவித்தான்.

அனைத்தையும் கேட்டுக் கொண்டவர் “நான் என்ன பண்ணனும்?” என்றார்.

“எனக்கு நான் சொல்கிறப்ப உதவி தேவைப்படும் சார். அந்த பூஜைக்கு எத்தனை பேர் வருவாங்க என்று சரியாக கணக்கிட்டு சொல்ல முடியாது. அதோட பூஜைக்கு வருகிறவர்கள் அத்தனை பேருமே கை தேர்ந்த போராளிகளாக தான் இருப்பார்கள். அதனால் எனக்கு புல் போர்ஸ் தேவைப்படும்”.

“அவ்வளவு தேவையா என்ன தாஸ்? அவனுங்க இந்த குழுவை ஆரம்பித்து ஒரு ஆறு மாதம் தானே இருக்கும். அதற்குள் இத்தனை வளர்ந்திருக்க முடியுமா?”

“இந்த ஆறு மாதத்தில் ஒரு பதினாறு பெண்களை காவு கொடுத்திருக்காங்க. முதல் முறை இந்த பூஜைக்கு வந்த கூட்டத்தை விட, இப்போ பத்து பங்கு கூட்டம் வருவதாக கணக்கு இருக்கு”.

“வெரி டேஞ்சரஸ்! இவனுங்களை விடக் கூடாது தாஸ். நீ கேட்ட எல்லாவற்றுக்கும் நான் ஏற்பாடு பண்ணிடுறேன்”.

“ஓகே சார். நான் எல்லாவற்றையும் கவனிச்சுக்கிறேன்” என்று கூறி எழுந்து கொண்டான்.

அவன் அமைச்சரின் வீட்டை விட்டு வெளியே வரும் நேரம் அங்கே ஒரு ஓரமாக நின்று அவனை போட்டோ எடுத்த பத்திரிக்கையாளன் ஒருவனை கையேடு பிடித்து அழைத்துக் கொண்டு ஒரு ஓரமாக சென்றான்.

“நீ எடுத்த போட்டோசை கொடு. உனக்கு வேற வேலை இல்லையா? ஏன் என் பின்னாடி சுத்துற?”

“சார்! நீங்க போலீசா இருக்கலாம். ஆனா நாங்களும் இந்த நாட்டுக்கு செய்திகளை கொண்டு சேர்ப்பதில் நல்லது தான் செய்து கொண்டிருக்கிறோம்” என்றான் அலட்சியமாக.

அவனை முறைத்து “நீ என்ன செஞ்சுகிட்டு இருக்க தெரியுமா? என்னுடைய வேலையை கெடுத்துகிட்டு இருக்க. உனக்கு ஸ்கூப் நியுஸ் வேணும் என்பதற்காக நாட்டோட முக்கியமான குற்ற செயல்களை தடுக்கும் எங்களை கெடுக்கிற. சோ சோஷியல் ரெஸ்போன்ஸ்பிலிட்டியோட நடந்துக்கோ”.

“சார் ஓவரா மிரட்டாதீங்க. எங்களுக்கும் எல்லா இடத்திலேயும் ஆள் இருக்கு” என்றான் தெனாவெட்டாக.

பட்டென்று அவனது கழுத்தைப் பிடித்து தூக்கி சுவற்றில் சாய்த்தவன் “நான் நினைச்சா இந்த நிமிஷம் ஏதாவதுகேசில் உன்னை இந்த நிமிடமே உள்ளே தள்ள முடியும். செய்யவா?” என்றான் மிரட்டலாக.

அதுவரை தெனாவெட்டாக இருந்தவன் கண்களில் பீதி தெரிய “சாரி சார்! விட்டுடுங்க! நான் போட்டோசை கொடுத்திடுறேன்” என்றான்.

அவனை கீழே விட்டு சட்டையை சரி செய்தவன் அவன் காதில் மெல்லிய குரலில் சில விஷயங்களை சொல்ல “சார்” என்று அதிர்ந்தான்.

‘அதிர்ச்சியை குறை. நான் சொல்கிற வரை அமைதியா இரு. உன்னோட போன நம்பரை கொடுத்திட்டு போ. தகவல் வரும் போது உன்னுடைய குழு அங்கே இருக்கணும்”.

“சரி சார் சரி சார்”.

“எந்த காரணம் கொண்டும் இந்த விஷயம் வெளியே போகவே கூடாது” என்று மிரட்டி அனுப்பி வைத்தான்.

அவன் சென்றதும் தனது காரில் ஏறி அமர்ந்தவன் போனை எடுத்து பிரதீபிற்கு அழைத்து “உன் வாட்ஸ் அப்பிறகு இரண்டு போட்டோ அனுப்புறேன். இந்த நிமிஷத்தில் இருந்து ஏர்போர்ட்டில் இறங்கும் ஒவ்வொரு வெளிநாட்டு பயணியும் நம்ம கண்காணிப்பில் இருக்கணும். அதிலும் இந்த ரெண்டு பேர் மிகவும் ஆபத்தானவங்க. அதனால ஒருத்தரை கூட விடாம கண்காணிக்க ஏற்பாடு செய்ய சொல்லுங்க. எங்கேயும் நாம மிஸ் ஆக கூடாது”.

“ஓகே தாஸ்! பார்த்துட்டேன். நான் ஏற்பாடுகளை கவனிச்சுக்கிறேன்”.

அதே நேரம் பிரபுவின் தந்தை தனது பண்ணை வீட்டில் ஜாக்குடன் பேசிக் கொண்டிருந்தார்.

“டேனியும், மரியாவும் வந்து இறங்குவதில் எந்த தடங்களும் இருக்க கூடாது மிஸ்டர் மினிஸ்டர்” என்றான் அதிகாரமாக.

“அதெல்லாம் முடிச்சிடலாம் சாக்கு. போலீஸ் எல்லாம் நம்ம கையில். நீ ஒன்னும் கவலைப்படாதே”.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
52
33
8
“இப்படித்தான் சொல்லுவ ஆனா கடைசி நிமிடத்தில் பிரச்சனை ஆகிட கூடாது” என்றான் மிரட்டலாக.

“அட! என்ன சாக்கு இப்படி சொல்லிட்ட. நீ நிறைய கொட்டி குடுக்கிற உனக்காக இதை கூட செய்ய மாட்டேன்னா? இரு வரேன்” என்றவர் தனது பிஏவிடம் அலைபேசியை கொடுக்கும்படி கேட்டு அதில் ஒரு எண்ணை அழைத்தார்.

“சொல்லுங்க சார்”.

“கணேஷு! நம்ம ஆளுங்க ரெண்டு பேர் வெளிநாட்டில் இருந்து வராங்க. அவங்க ரெண்டு பேரும் எந்த பிரச்னையும் இல்லாமல் உள்ளே நுழையணும். இந்த சிவதாசுன்னு ஒருத்தன் வந்திருக்கானே அவன் ரொம்ப குடைச்சல் குடுக்கிறதா கேள்விபட்டேன்” என்றார்.

“யார் சார் அவங்க? சிவதாஸ் இப்போ லீவில் இருக்கார். நீங்க போட்டோ அனுப்பி வைங்க அவங்களை பாதுகாப்பா கொண்டு வந்து இறக்கிடலாம்”.

“அவங்க யாரா இருந்தா என்ன உனக்கு. சொன்னதை செஞ்சு முடி” என்றார் அதட்டலாக.

“ஓகே சார். போட்டோ அனுப்பிடுங்க. நான் பார்த்துக்கிறேன்”.

போனை அணைத்து பிஏவிடம் கொடுத்தவர் ஜாக்கிடம் “அந்த ரெண்டு பேரோட போட்டோவை அனுப்பி வைங்க கணேஷு பார்த்துக்குவான்” என்றார் அலட்சியமாக.

ஏனோ ஜாக்கிற்கு அவரின் அலட்சியமான போக்கு பிடிக்கவில்லை. ஆனால் இங்கே அவரை விட்டால் அவர்களுக்கு வேறு ஆள் இல்லை என்பதால் ஒருவித அதிருப்தியுடன் போட்டோவை அனுப்பி வைத்தான்.

அதை வாங்கி பார்த்தவர் கண்களில் ஒருவித ஆசை தோன்ற “இந்த புள்ள நல்லா வெள்ளரி பழம் போல இருக்கு” என்றார் ஜொள் வடிய.

அதைக் கண்டு கடுப்பானவன் “அவள் ரொம்ப ஆபத்தானவள். நெருங்க நினைச்சா சுட்டு பொசுகிட்டு போயிட்டே இருப்பாள்” என்றான்.

அதை கேட்டு பட்டென்று போனை அவனிடம் கொடுத்து விட்டு “அதெல்லாம் இருக்கட்டும் என் பையனை எதுக்கு உங்க கூட்டத்தோட சேர்த்தீங்க? அவனுக்கு இதெல்லாம் வேண்டாம்” என்றார் எரிச்சலாக.

சோபாவிலிருந்து எழுந்து கொண்டவன் “நாங்களா சேர்க்கல. அவனாக விரும்பி வந்தான். நானும் உங்களை கேட்க நினைச்சேன். எங்கே உங்க பையன்? எங்க கூட சேரக் கூடாதுன்னு மறைச்சு வச்சிருக்கீங்களா?”

தானும் எழுந்து கொண்டவர் “அந்த தறுதலை எங்கேயோ டூர் போயிருக்கு. இன்னும் ரெண்டு நாளில் வந்துடுவான்” என்றார் எரிச்சலாக.

“வந்ததும் வந்து என்னைப் பார்க்க சொல்லுங்க” என்று கூறிவிட்டு வெளியேறினான்.

அவனது முதுகையே பார்த்துக் கொண்டிருந்தவர் “இவன் கிட்ட எல்லாம் காசை வாங்கி சேர்த்து வச்சு புள்ளையை இவன் பின்னாடி அனுப்பவா. லூசுப் பய!” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
 
Need a gift idea? How about some novelty socks?
Buy it!