Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 12 | SudhaRaviNovels

அத்தியாயம் - 12

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
52
33
8
அத்தியாயம்- 12

“கால் மீ தாஸ்”.

“ரொம்ப முக்கியம்! தேவையில்லாம பேசாதே!”

அவளது கரங்களை அழுத்தமாகப் பற்றி “நான் எந்த வார்த்தையும் தேவையில்லாம விடுவதில்லை. நீ எங்களோட சேர்ந்து இந்த கேசில் வேலை செய்யணும்”.

அவனது கைகளில் இருந்து விடுபட போராடிக் கொண்டிருந்தவள் அவனது பதிலைக் கேட்டு “மூளையோட தான் பேசிட்டு இருக்கியா? நான் உன்னுடைய அப்பாவை கொலை பண்ண வந்திருக்கேன். என்கிட்டே என்ன கேட்டுட்டு இருக்க?’

பட்டென்று அவளது கரங்களை முடுக்கி அலேக்காக தூக்கி தலைக்கு மேல் தூக்கியவன் “இந்த தாஸ் கிட்ட எந்த ஆம்பிள்ளையும் எதிரே நின்னு தைரியமா பேச மாட்டான். நீ இந்தளவுக்கு பேசிகிட்டு உயிரோட இருக்கேன்னா நான் அனுமதிச்சதுனால. என் அனுமதி இல்லாம நீ இனி அசைய கூட முடியாது”.

“சிவதாஸ்! நீ பெரிய இவனா இருக்கலாம். ஆனா என்னை அவ்வளவு ஈசியா எடை போடாதே!”

“என்ன ஒரு அம்பது அம்பத்தைஞ்சு கிலோ இருப்பியா?”

“சிவதாஸ்! என்னை கீழே இறக்கி விடு! ஓவரா போயிட்டு இருக்க”.

“நான் சொல்றதை பொறுமையா கேட்பேன்னு சொல்லு இறக்கி விடுறேன்” என்றான் அழுத்தமாக.

அவனிடமிருந்து விடுபட முடியாமல் “சரி கேட்கிறேன்” என்றாள் எரிச்சலுடன்.

பட்டென்று அவளை கீழே தூக்கிப் போட்டவன் அங்கே இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டான். அவன் அப்படி தூக்கி எறிவான் என்று எதிர்பார்க்காதவள் கீழே விழுந்த அதிர்வில் எழுந்த வலியுடன் மெல்ல எழுந்து நின்றாள்.

அவளைப் பற்றி சிறிதும் அலட்டிக் கொள்ளாது எதிரே இருந்த நாற்காலியை நோக்கி கையை காட்டினான்.

அவன் மீது இருந்த கடுப்பில் நாற்காலியை ஒரு எத்து எத்தி விட்டு “வேண்டாம் தாஸ்! நான் இங்கே வந்தது உங்கப்பாவை கொல்றதுக்காக. அது தெரிஞ்சும் நீ என்னை இங்கே அலவ் பண்ணி இருக்கேன்னா உன்னுடைய தன்னம்பிக்கை அளவை காட்டுது”.

இரு கைகளையும் கட்டிக் கொண்டு அவளையே பார்த்தவன் “எது பேசுவதாக இருந்தாலும் அந்த நாற்காலியில் உட்கார்ந்து பேசு” என்றான் அழுத்தமாக.

அவனை எரிச்சலாக பார்த்துக் கொண்டே நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தவள் “சொல்லு! என்னை எதுக்காக ட்ராப் பண்ணின?”

“எங்கப்பாவை கொலை பண்ணப் போகிற இன்ட்டேன்ஷனோட இருக்கிறன்னு தெரிஞ்சும் உன்னை இங்கே விட்டிருக்கேன்னா அந்த கேசை பற்றி விவரங்கள் எனக்கு தெரியாம இருக்குமா சொல்லு?’

“சோ என்னை கன்வின்ஸ் பண்ணி உங்கப்பாவை காப்பாற்ற ப்ளான் பண்ற?”

அதை கேட்டு லேசாக இதழ்களை விரித்து சிரித்தவன் “நான் நினைத்தால் இந்த நிமிஷம் உன்னை இங்கேயே கொன்னுட்டு என் வீட்டு தோட்டத்திலேயே புதைச்சிட்டு போயிடுவேன். நீ இருக்கியா இல்லையான்னு கேட்க கூட யாருமில்ல. சோ உன்னை கன்வின்ஸ் பண்ண வேண்டிய அவசியம் எனக்கு எது?”

‘பின்னே எதுக்கு என்கிட்ட பேசிகிட்டு இருக்க?’

“எனக்கு உன்னுடைய இந்த தைரியம் பிடிச்சிருக்கு. அதோட ஜாக் கேஸ் விஷயத்தில் அவங்க கூட்டத்திற்குள் நுழைய மன தைரியம் உள்ள பெண் தேவை”.

“நான் என்ன செய்யணும் செய்ய வேண்டாம்னு முடிவு செய்ய என் தோழர்கள் இருக்காங்க. எங்கள் குரல் அந்த ஜாக்கையும், க்றிஸ் ரெண்டு பேரின் கதையையும் முடிச்சிடுவாங்க”.

அவள் மறுத்து மறுத்து பேசிக் கொண்டிருக்க சட்டென்று நாற்காலியை விட்டு எழுந்தவன் “லுக் சஞ்சலா இங்கே நீ எதை தேடி வந்தியோ அதற்கான தீர்வு நான் சொல்கிற இடத்தில் கிடைக்கும். எங்கள் குரல் குரல்வளை நெறிக்கப்பட்டு மொத்த கூட்டமும் என் கையில் இருக்காங்க. சோ நீ நான் சொல்கிறபடி நடந்தாகணும்”.

“அப்போ தமயந்திக்கு எப்போ நீதி கிடைக்கும்?”

அவளை கூர்ந்து பார்த்தவன் அங்கே மேஜை மீது அவள் எடுத்து வைத்திருந்த அவனது தநதையின் டைரியை கையில் எடுத்துக் கொண்டு “தமயந்திக்கும் இப்போ நீ செய்யப் போகிற இந்த செயலுக்கும் தொடர்பு உண்டு. இந்த கேஸ் முடியும் போது உன் கேள்விகளுக்கான விடை உனக்கு கிடைக்கும்”.

அவன் சொன்னதின் அர்த்தம் புரிய “குணா, பார்த்தி எல்லோரையும் பிடிச்சாச்சா? சோ ப்ளான் பண்ணி தான் மூவ் பண்ணி இருக்க. என்னால உனக்கு ஹெல்ப் பண்ண முடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்க” என்றாள் தெனாவெட்டாக.

அவனது முகம் கடுமையைப் பூசிக் கொள்ள “தமயந்தியின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் என்னிடம் இருக்கு. அவளது கடைசி நிமிடங்கள் மிக மோசமானதாக இருந்திருக்கு. ஒரு பனிரெண்டு வருடம் முன்னர் நடந்த கொலையோட அதே பாணி இப்போது கடைபிடிக்க பட்டிருக்கு. அப்போ அதை செய்தவங்க தானே இப்போ மீண்டும் வந்திருக்கணும்”.

அவன் சொல்வதை அலட்சியமாக கேட்டுக் கொண்டிருந்தவள் அவனது கடைசி வார்த்தையில் எழுந்து நின்று விட்டாள்.
 
  • Love
Reactions: Kothai suresh

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
52
33
8
“இது உண்மையா? நல்லா தெரியுமா?”

“தமயந்திக்கு என்ன கொடுமை நடந்ததோ அதையே தான் இப்போ இறந்து போன பெண்கள் பதினைந்து பேருக்கும் நடந்திருக்கு”.

மறுப்பாக தலையசைத்து “இல்ல உங்கப்பாவை காப்பாற்ற பொய் சொல்றீங்க” என்றாள் கோபத்தோடு.

அதில் அவன் கடுப்பாகி “நான் உனக்கு முன்னமே சொல்லிட்டேன். எங்கப்பாவை காப்பாற்ற பொய் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. உனக்கு பயந்து பொய் சொல்ல நான் பேடியும் இல்லை”.

“எனக்கு அந்த ஆதாரங்களைப் பார்க்கணும்”.

அவளை மெச்சுதலாகப் பார்த்து “இங்கே வந்து உட்கார்” என்று அங்கிருந்த மேஜையின் அருகே இருந்த நாற்காலியை காண்பித்தான்.

அவனை சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டே அந்த நாற்காலியில் சென்றமர்ந்தாள். அவன் தந்தையின் ஷெல்பில் இருந்து ஒரு கணினியை எடுத்து வந்து அவள் முன் வைத்தான். மெல்ல அதை ஆன் செய்து தன்னிடம் இருந்த ஒரு பென் டிரைவை போட்டு அதிலிருந்த விவரங்களை எல்லாம் விளக்க ஆரம்பித்தான்.

அவன் தமயந்தியைப் பற்றி சொல்லும் போது அவள் உடலில் இருந்த செல்கள் எல்லாம் அலற ஆரம்பித்திருந்தது. அதை அடுத்து பனிரெண்டு வருடங்களுக்குப் பிறகு அதே போன்ற மரணங்கள். அதற்கான ஆதாரம் கண்முன்னே. தன்னையும் மீறி கல்லாகி இருந்தவளின் கண்களில் கண்ணீர் பெருகி வழிந்தது.

அனைத்தையும் சொல்லி முடித்தவன் அவளது நிலையை உணர்ந்து லேசாக தோள்களை அழுத்திப் பிடித்து “கண்ட்ரோல் யுவர்செல்ப்! இப்போ நான் காண்பித்தது ராஜி என்கிற பெண்ணுக்கு முன் வரை நிகழ்ந்த மரணங்கள். ஆனால் இப்போ ராஜியின் உடல் கூட கிடைக்கவில்லை. போலீஸ் மோப்பம் பிடிச்சிடும் என்று அவனுங்க ட்ராக் மாறுகிறார்கள்”.

முஷ்டியை அழுத்தமாக மேஜை மீது குத்தி “விடக் கூடாது! ஒவ்வொருத்தனையும் சும்மா விடக் கூடாது”.

“ம்ம்...நிச்சயமா! அவர்களைப் பிடிக்க எங்களுக்கு ஒரு பெண் தேவைப்பட்டாள். தனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை என்கிற மன தைரியத்தோடு இருக்கும் பெண் தான் தேவை. எங்க துறை பெண்கள் கூட இதற்கு தயங்குறாங்க. அப்போ தான் உன்னைப் பற்றி கேள்விபட்டேன். நீ தான் இதற்கு சரியாக இருப்பாய் என்று தேர்வு செய்து உன்னை இங்கே வரவழைத்தேன்”.

அவனை நிமிர்ந்து பார்த்தவள் “அப்போ உங்கப்பா? நடந்தவைகளை எல்லாம் அவனுங்க கிட்ட காசை வாங்கிகிட்டு மறைச்சிட்டாரே. அவரும் தானே குற்றவாளி?”

பட்டென்று அவளது கழுத்தைப் பிடித்தவன் “யாரை பார்த்து என்ன வார்த்தை சொல்றே? நேர்மைக்கும் நியாயத்துக்கும் பெயர் போனவர் அவர். நடக்க முடியாம வாழ்நாள் முழுக்க அடுத்தவங்களை நம்பி இருக்காரே அதுக்கு காரணம் என்ன? அந்த நேர்மைக்கும் நீதிக்கும் கிடைத்த பரிசு தான் அது!”.

ஒருவித குழப்பத்துடன் “என்னால...” என்று அவள் முடிக்கும் முன்னே கை காட்டி நிறுத்தியவன் “இதெல்லாம் இந்த கேஸ் முடிந்ததும் பேசிக்கலாம். இனி நீ நாங்க சொல்கிறபடி நடக்கணும். உன்னை அதற்காக தயார் செய்யப் போகிறோம். அவனுங்க நம்புகிற மாதிரி நீ ஒரு பெண்ணா நடிக்கணும்” என்றான்.

அவன் சொன்ன விதத்தில் கடுப்பானவள் “என்ன சொல்ற? பெண் மாதிரி இல்ல பெண் தான்” என்றாள்.

அவளை கிண்டலாக பார்த்துவிட்டு மெல்ல குனிந்து அவள் காதில் ஏதோ சொல்ல, சட்டென்று எழுந்து அவனைப் பிடித்து தள்ளியவள் “சிவதாஸ்! உன்கிட்ட இதை எதிர்பார்க்கல” என்றாள் முகச் சுளிப்போடு.

இதழ்க்கடையில் எழுந்த சிரிப்பை அடக்கியபடி “நானும் தான். இப்படியொரு அரபிக் குதிரையை எனக்கு பிடிக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை” என்றான் ரசனையுடன்.

ஒற்றை விரலை நீட்டி அவனை எச்சரித்தவள் “லுக் சிவதாஸ்! இந்த ட்ரிக் எல்லாம் என்கிட்டே ட்ரை பண்ணாதே. உன்னைப் பற்றி இது போன்ற விஷயத்தை நான் கேள்விப்பட்டதில்லை. ச்சே! நீயும் ...” என்று முடிக்காமல் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

வேக நடையுடன் அவள் அருகே சென்றவன் அவளது கழுத்தைப் பற்றி “போதும்! இதை பற்றி நாம அப்புறம் பேசலாம். விடியப் போகுது அம்மா எழுந்திடுவாங்க” என்றவன் அவள் கையில் ஒரு போனை திணித்து “நான் உனக்கு இதில் கூப்பிடுவேன். கரெக்ட்டாக எடுக்கணும். என்னென்ன செய்யணும்னு தகவல் வரும். என்னை மீறி நீ எங்கேயும் போயிட முடியாது. சோ ஒழுங்கா நான் சொல்வதை பாலோ பண்ணு” என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறி விட்டான்.

அவன் சொல்லி சென்றதில் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தவள் வெளியே யாரோ நடக்கும் சப்தம் கேட்டு அவசரமாக எழுந்து அறையிலிருந்து எட்டிப் பார்த்து விட்டு, யாருமில்லை என்று அறிந்து கொண்டு தன்னறைக்கு ஓடிச் சென்று கதவடைத்துக் கொண்டாள்.

கதவில் சாய்ந்து நின்றவளின் பார்வை கையிலிருந்த போனின் மீது படிந்தது. அப்படியே மடங்கி அமர்ந்தவள் அவன் சொன்னவைகளையும், அந்த ரிப்போர்ட்டில் பார்த்தவைகளையுமே எண்ணிக் கொண்டிருந்தாள். அதுநாள் வரை அவளுக்கு தெரியாமல் இருந்த பல விஷயங்கள் புரிய வர, அவன் சொன்னபடி கேட்பது என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

அதே நேரம் ஜாக் தான் தங்கி இருந்த இடத்தில் மூவரோடு பேசிக் கொண்டிருந்தான். அவனது விழிகளில் ஒருவித பளபளப்பு தெரிந்தது.

“அடுத்த பலி புதுமையாக இருக்கணும். நம்ம கடவுள் நம்மிடம் நிறைய எதிர்பார்க்கிறார். அவரை திருப்திபடுத்தி இந்த உலகை அவரிடம் கொடுக்க வேண்டும்” என்றான்.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
52
33
8
எதிரே இருந்தவனோ “நீ சொல்வது எல்லாம் சரி தான் ஜாக். ஆனால் கொஞ்சம் கேப் விடலாம் என்று தோன்றுது”.

மற்ற இருவரும் அதையே ஆமோதிக்க “பயப்படுறீங்களா? இதுவரை பதினாறு பலி கொடுத்து அவரை இங்கே கொண்டு வந்துட்டோம். இனி நம்மை காக்க அவர் இருக்கார். எவனாலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது”.

“இல்ல ஜாக் நான் என்ன சொல்ல வரேன்னா...” என்று அவன் முடிக்கும் முன்னே அவனை நிறுத்தி “நாம ஏற்கனவே பனிரெண்டு வருடங்கள் காத்திருந்துட்டோம். நாம நினைத்தாலும் அவர் காத்திருக்க தயாராக இல்லை”.

“இருந்தாலும்...”

“லுக் பாஞ்சா உனக்கு பயமாக இருந்தால் இதிலிருந்து ஒதுங்கிடு. நாங்க பார்த்துக்கிறோம்” என்றான் அழுத்தமாக.

அந்த நேரம் ஜாக்கின் அலைப்பேசியில் செய்தி வந்ததற்கான ஒலி எழுப்ப, அதை எடுத்து பார்த்தவனின் இதழ்களில் ஒரு சிரிப்பு.

அதை எடுத்து அவர்களின் முன்னே காட்டியவன் “க்றிஸ் தயாராகிட்டான். பூஜைக்கான இடம் தயாராகிடுச்சு. நீ போய் பஸ் ஸ்டாண்டில் ஒருத்தன் பையோடு நிற்பான். அவனிடம் அதை வாங்கி வா” என்றான்.

அவன் எதுவும் பேசாமல் செல்ல, “பிரசாதம் எப்போ தயாராகும் ஜாக்?”

அவன் இதழ்களில் ஒருவித வக்கிர புன்னகை எழ “இந்த முறை ஸ்பெஷல் பிரசாதத்தை தேர்ந்தெடுக்கணும். அதை நான் பார்த்துக்கிறேன். நீ என்ன பண்ற அந்த பை வந்ததும் பூஜைக்கான இடத்தை தெரிந்து கொண்டு நம்ம ஆட்களுக்கு இடத்தை தெரிவித்து விடு”.

“பிரசாதம் தயாரானதும் சொல்லலாம் ஜாக்”.

அவனை பார்த்து குரூரமாக சிரித்து “இந்த ஊரில் பிரசாததுக்கா பஞ்சம். இன்றிலிருந்து சரியாக பத்தாவது நாள் நம்ம பூஜை” என்றான்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே பையுடன் வந்தவன் அதை பிரிக்க, அதில் ஒரு வரைப்படம் இருந்தது. பூஜைக்கான இடத்தை வரைப்படத்தில் தேடி அதை கண்டு பிடித்ததும் ஜாக்கிற்கு அத்தனை சந்தோஷம்.

“கடவுள் தனக்கு வேண்டியதை நடத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டார். அவரின் சக்தி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த பூஜைக்கு பின் இந்த ஊரில் அவரின் ஆதரவாளர்கள் கூடி விடுவார்கள். அவரின் சக்தியும் அழிக்க முடியாத ஒன்றாகி விடும்” என்றான் சத்தமாக சிரித்து.

அதை பார்த்துக் கொண்டிருந்த மற்ற மூவருக்கும் பேயை பார்த்தது போல இருந்தது.

பிரசாதமாக அவள்! சுடலைமாட சாமியாக அவன்! பூஜை யாருக்கு?
 
  • Like
Reactions: Kothai suresh
Need a gift idea? How about some novelty socks?
Buy it!