அத்தியாயம் - 12

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,559
1,118
113
பிழைகளை பொறுத்து கொள்ளுங்கள்.....இன்னைக்கு நிறைய வேலை அதனால சரி பார்க்காம போஸ்ட் பண்றேன்...

அத்தியாயம் – 12

கேசவனையும் செந்திலையும் பார்த்திருந்தவர்கள் “டேய்! வண்டியை திருப்பு! அந்த ஆட்டோவில் ஆதி கேசவன் போறான்” என்று கத்தினார்கள்.

அங்கிருந்த நெரிசலில் அவர்களால் உடனே காரை திருப்பி அவர்களை தொடர முடியவில்லை. கஷ்டப்பட்டு போராடி திருப்புவதற்குள் அவர்களின் ஆட்டோ கண்ணை விட்டு மறைந்திருந்தது.

ஆட்டோவில் சென்று கொண்டிருந்த கேசவனும் அவர்களை கவனித்திருந்தான். அவர்களை விட்டு சற்று தள்ளி சென்றதும் ஆட்டோவை நிறுத்தி செந்திலை இறக்கியவன் வேகமாக கூட்டத்தோடு கூட்டமாக கலந்து ஒரு பழங்கால கட்டிடத்திற்குள் நுழைந்தான்.

போனை எடுத்து கார்த்திக்கிற்கு விஷயத்தை சொல்லிவிட்டு வைத்தவன் “சரி இப்போ சொல்லு? உன் கிட்ட அந்தப் பையன் எதுவும் கொடுத்தானா?”

“யாரு?” என்றான் மெல்லிய குரலில்.

அதில் சற்று எரிச்சல் அடைந்தவன் “அதான் என் கையால செத்து போனானனே உன் பிரெண்ட் அவன் தான்”.

“எதுவும் கொடுக்கலையே”

“உண்மையை சொல்லிடு! அவன் உன்னிடம் கொடுத்திருந்தா மரியாதையா அது எங்கே இருக்குன்னு சொல்லு?”

“நீங்க எதை பத்தி பேசுறீங்கன்னு புரியல. ப்ளீஸ்! என்னை விட்டுடுங்க. நான் எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு போயிடுறேன்” என்றான் இரு கை கூப்பி.

அதற்கெல்லாம் அசராமல் “இதோ பார்! எனக்கு வேண்டியது அவன் கொடுத்த பார்ஸல். அதை கொடுத்திட்டா நானே உன்னை அனுப்பி வச்சிடுறேன்”.

“அவன் அப்படி எதுவும் கொடுக்கலையே”

மேலும் அவனை கேள்வி கேட்கும் முன்பு கேசவனின் அலைப்பேசி அழைக்க அதை எடுத்து பேசியவன் செந்திலின் தோள் மீது கையைப் போட்டு இழுத்துக் கொண்டு வேகமாக அந்த கட்டிடத்தை விட்டு வெளியேறி வாசலில் நின்றிருந்த ஒரு வேனிற்குள் ஏறினான்.

அவர்கள் ஏறியதும் வேன் சிட்டாக பறந்தது.

“ம்ம்...இப்போ சொல்லு! உனக்கு பார்சல் பத்தி தெரியாது. ஆனா அவன் யாருக்காவது அந்த மாதிரி பார்சல் அனுப்பினதை பார்த்தியா சொல்லு?” என்றான் அழுத்தமாக.

“இல்லைங்க! அவன் இங்கே வந்தே எட்டு மாசம் தான் ஆகுது. என்னைத் தவிர அவனுக்கு வேற யாரையுமே தெரியாது”.

“அப்போ உன் கிட்ட தான் இருக்கணும்”.

“சத்தியமா நீங்க எதை பத்தி பேசுறீங்கன்னு கூட தெரியல. அவன் வேலைக்கு போயிட்டு வருவானே தவிர வேற எந்த தப்பான வேலையும் செய்கிறவன் இல்லை. அவனை தப்பா நினைச்சு கொன்னுட்டீங்க. ஊருல இருந்து வந்த பையன். ரொம்ப நல்லவன்” என்றான் கலக்கமான குரலில்.

டாகுமென்ட் பற்பற்றி எந்த தகவலும் கிடைக்காது போக எரிச்சலடைந்தவன் “உனக்கு தெரியுமா தெரியாதா? இல்ல நடிக்கிறியா?” என்றான் கடுப்பாக.

“உண்மையாவே எனக்கு தெரியாது சார்”

நெற்றி சுருங்க யோசித்தவன் “ம்ம்...உன்னை அப்படியே விட முடியாது. என்னோட கஸ்டடில இரு பார்த்துக்கலாம்” என்றான் சாய்ந்தமர்ந்தபடி.

செந்திலுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. இவன் எதை தேடுகிறான்? சந்துரு அப்படி என்ன வைத்திருந்தான்? வேலைக்கு சென்று வருவதை தவிர அதிகம் யாரிடம் பேச கூட இல்லாமல் அமைதியாக இருந்தவன் அப்படி என்ன செய்திருப்பான்? என்று பலவாறு யோசித்தான்.

அவனையே அதுவரை பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த கேசவனுக்கு அவன் பொய் சொல்லவில்லை என்பது புரிந்து போனது. தன் கூடவே இருந்த நண்பனுக்கு தெரியாமல் அவன் எதையும் செய்திருக்க முடியாது. அப்படி என்றால் அவனிடமிருந்த அந்த டாகுமென்ட்ஸ் எங்கே? இருந்த ஒரே வழியும் அடைப்பட்டது போலிருந்தது. அந்த டாகுமென்ட் பற்றி அறியாதவர் கையில் தான் அது இருக்க வேண்டும். அதை பற்றி அறிந்தவர் கையில் சிக்கி இருந்தால் இந்நேரம் நாடே பற்றி எரிந்திருக்கும்.

சற்றே யோசனையுடன் “அவனை தேடி யாரும் வந்திருக்காங்களா? அவனுக்கு உன்னைத் தவிர வேற யாரும் பிரெண்ட்..” என்று முடிக்கும் முன்னே “இல்ல! அவன் யாரிடமும் அதிகமா பழக மாட்டான். யாரும் அவனை தேடி வரவே இல்லை” என்றான்.

சட்டென்று பாய்ந்து அவனது சட்டையை பற்றியவன் “முதல் நாள் டாகுமென்ட் அவன் கைக்கு வந்தப்போ எடுத்திட்டு வந்த பாக் இல்லாம வேறொரு பாக் வச்சிருந்தான் சாகிற அன்னைக்கு. உன் ரூமில் பார்த்தப்பவும் அந்த பாக் கிடைக்கல. உன்னை விட்டா அதை எடுத்திருக்க வாய்ப்பே இல்லை. மரியாதையா சொல்லு” என்று கேட்டு ஓங்கி மூக்கில் குத்தினான்.

ரத்தம் கடகடவென்று மூக்கில் ஊற்ற கண்களில் பயத்துடன் “எனக்கு உண்மையாவே தெரியாது. நீங்க என்னை கொன்னு போட்டாலும் அது தான் உண்மை” என்றான்.

அவனது பதிலில் அலுத்து போனவன் “ச்சே” என்று அவனை உதறி தள்ளிவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தான்.

செந்திலோ “நீங்க தேடுகிற பாகில் என்ன இருக்குன்னு எனக்கு தெரியாது. அது எப்படி என் நண்பன் கிட்ட வந்ததுன்னும் எனக்கு தெரியாது. அவனோட குடும்பமே அவனை நம்பி தான் இருக்கு. அவன் இல்லேன்னு தெரிஞ்சா எல்லோரும் உயிரை விட்டுடுவாங்க” என்றான் கரகரப்பான குரலில்.

அதை கேட்டதும் அன்று சக்தியின் தந்தை இறந்து போனது மன கண்ணில் வந்து போனது. தலையை உலுக்கி கொண்டவனின் முகம் தீவிரமானது. அந்நேரம் அவனது அலைப்பேசி அழைக்க, அதில் கருணாவின் எண்ணை பார்த்ததும் முகம் மேலும் கடுமையாகியது.

“சொல்லு கருணா”

“என்ன ஆதி கேசவா? அந்த பையனை எனக்கு முன்ன பிடிச்சிட்ட போல?” என்றான் நக்கலான சிரிப்புடன்.

தலையை அழுந்த கோதிக் கொண்டவன் “ஆமாம் கருணா உன் கிட்ட இருந்து காப்பாத்த தான் பிடிச்சேன்” என்றான் மெல்லிய சிரிப்புடன்.

“சரி விசாரிச்சிட்டியா? டாகுமென்ட் இருக்குமிடம் தெரிஞ்சுதா?”

“ஏன் அதை சொன்னா என்ன செய்யப் போற கருணா?”

“நீயே அதை வச்சுக்கிட்டு எதுக்கு இந்த நாடகம் ஆடுற கேசவா? மரியாதையா டாகுமென்ட்சை ஐயா கிட்ட கொடுக்கிற வழியை பாரு இல்லேன்னா நடக்க போறதுக்கு எல்லாம் நான் பொறுப்பில்லை”.

“என்னவேனா பண்ணிக்கோ. இவனுக்கு எதுவும் தெரியாது. இவனால எனக்கு எந்த உபயோகமும் இல்லை” என்றான் செந்திலை பார்த்தபடி.

“பார்க்க தானே போற கேசவா” என்று அவன் கூறி முடிக்கவும் வேனில் ஏதோ இடித்து தள்ளப்பட, தட்டுதடுமாறி ஓட ஆரம்பித்திருந்தது.

அடுத்த நிமிடம் போனை தூக்கி போட்டுவிட்டு வேன் ட்ரைவரை நோக்கி பாய்ந்தவன் “என்னாச்சு?” என்றான்.

“டாங்கர் லாரி அண்ணா...ரெண்டு வருது” என்றான்.

“முடிஞ்ச வரை வேகமா போ...எதை பற்றியும் யோசிக்காதே” என்றவன் கார்த்திக்கை அழைத்தான்.

“கார்த்தி! நான் சொல்றதை கவனமா கேள்” என்றவன் ஜன்னல் வழியே தாங்கள் எந்த பகுதியில் இருக்கிறோம் என்பதை உறுதி செய்து கொண்டு “வேனை ரெண்டு டாங்கர் லாரி துரத்துது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ இந்த ஏரியாவுக்கு நான் சொல்கிற வழியில வர பாரு” என்று கூறி வர வேண்டிய வழி முறைகளை கூறி விட்டு வைத்தான்.

அதற்குள் வேன் வேகமெடுக்க, டாங்கர் லாரிகளும் அதே வேகத்தோடு வெறி கொண்டு துரத்த தொடங்கி இருந்தது. கருணாவிற்கு இதுவொரு நல்ல சந்தர்ப்பம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். இப்போது முடித்தால் இருவரையும் முடித்து விடலாம் என்பதை உணர்ந்தவன் எப்படியாவது செந்திலை காப்பாற்றி விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான்.

அவனுடனே இருந்த இந்த நிமிடங்கள் நிச்சயம் அவனுக்கு எதுவும் தெரியாது என்பதும், நல்ல்லவன் தான் என்பது புரிந்து போயிருந்தது. அனாவசியமாக தங்களின் போராட்டத்தில் அவனை பணயம் வைக்க கூடாது என்பதை உணர்ந்து கொண்டான். அதனால் செந்திலிடம் “இங்கே பார் நான் சொல்ல போறதை நல்லா கேட்டுக்கோ. நாம என்ன தான் வேகமா போனாலும் அவனுங்க நம்மை நெருங்க இன்னும் பத்து நிமிஷம் கூட ஆகாது. அதனால நான் சொல்கிறபடி செய். என்ன எதுன்னு கேள்வி கேட்காதே” என்றான்.

அவனோ கணகளில் பயத்துடன் எச்சிலை விழுங்கியபடி “நா...நான் என்ன பண்ணனும்” என்றான்.

பின் தொடர்பவர்களை கவனித்துக் கொண்டே “நான் சொல்கிற இடத்தில வேனிலிருந்து குதிக்கணும். உனக்காக ஸ்பீடை எல்லாம் குறைக்க மாட்டோம். போகிற போக்கில் அப்படியே குதிச்சிடு. நீ தப்பிச்சிடலாம்” என்றான் அசால்ட்டாக.

அதை கேட்டதும் செந்திலின் இதயம் வாய் வழியே வந்துவிடும் போலிருந்தது. இத்ஹ்டனை வேகமாக போகும் வேனிலிருந்து குதிப்பதா? அப்புறம் எப்படி உயிருடன் இருக்க முடியும் என்று புரியாமல் பார்த்தான்.

அவன் தோள்களை தட்டிக் கொடுத்தவன் “ஒன்னும் ஆகாது! தைரியமா குதி கொஞ்சம் அடி மட்டும் படும். மற்றபடி ஒன்றும் ஆகாது” என்றான்.

தனது பயத்தை மறந்து “அப்போ நீங்க?” என்றான் செந்தில்.

அதை கேட்டதும் கண்களை அழுந்த மூடித் திறந்தவன் எதிரே இருந்தவனின் மூக்கில் வழிந்த ரத்தத்தை லேசாக துடைத்து “இது எனக்கு புதுசு செந்தில். என்னை பற்றி கவலைப்படாதே” என்று அவன் கன்னத்தில் தட்டிக் கொடுத்தவன் குனிந்து ஜன்னல் வழியே பார்க்க ஆரம்பித்தான்.

வேன் காட்டுத்தனமாக பறந்து கொண்டிருக்க, செடிகள் அடர்ந்த சந்து ஒன்றருகே போகும் போது செந்திலே எதிர் பார்க்கும் முன்பு வேனின் கதவை திறந்து அவனை கீழே தள்ளி விட்டிருந்தான். கண் மூடி திறப்பதற்குள் எதுவுமே நடக்காத மாதிரி வேன் அங்கிருந்து பறந்திருந்தது.

பின்னே வந்தவர்களின் பார்வையில் செந்தில் விழுந்தது படவே இல்லை. செந்திலை தள்ளி விட்டதும் டிரைவரை நகர சொல்லிவிட்டு ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவன் இன்னும் தெறிக்க விட்டான். வேன் டிரைவருக்கு டயர்கள் ஒவ்வொன்றும் கழன்று தனித்தனியாக ஓட போகிறது என்கிற பயம் எழுந்தது. உயிரை கையில் பிடித்தபடி அமர்ந்திருந்தான்.

டாங்கர் லாரிகளோ விடாது துரத்த, ஒரு கட்டத்திற்கு மேல் இருவழி சாலையாக இருந்த அந்த சாலையில் சட்டென்று வேனை திருப்பி, வாகன நெரிசலை உண்டாக்கி விட்டு தாறுமாறாக எதிர்புறத்தில் புகுந்து விட்டான். இதை எதிர்பார்க்காத டாங்கர் லாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கேயே நிற்கவும் முடியாமல் லாரியை திருப்பவும் முடியாமல் முன்னே சென்று விட்டிருந்தது.

நடந்துவிட்ட கலவரத்தில் வேனை திருப்பியதில் நாலாபுறமும் வாகனங்கள் மோதி இருந்ததில் கேசவனின் கைகள் கிழிக்கப்பட்டு ரத்தம் வழிய ஆரம்பித்திருந்தது. அதை பொருட்படுத்தாது வேனை குறுக்கு வழியில் கொண்டு சென்றவன் ட்ரைவரை திரும்பி பார்க்க அவன் மயங்கி சாய்ந்திருந்தான்.

அந்நேரம் அலைப்பேசி அழைக்க அதில் கார்த்திக் தான் அழைத்திருந்தான்.

அலைபேசியை எடுத்தவன் அமைதியாக இருக்க “என்னடா” என்றான் பதட்டமாக.

“ஹாஹா! என்ன கார்த்தி பயந்திட்டியா? இந்த கேசவனை முடிக்க அவனால மட்டுமே முடியும்” என்றான் சிரிப்புடன்.

“கடுப்பேத்தாதடா!” என்றவன் “அவனை பாக் பண்ணி அனுப்பிட்டேண்டா. இனி, பிரச்சனை இல்ல. என்ன கீழே விழுந்ததில் கொஞ்சம் அடி அவ்வளவு தான். ஆனா எக்காரணம் கொண்டும் நீ இங்கே இருப்பவர்களோடு காண்டக்ட் பண்ண கூடாதுன்னு சொல்லி அனுப்பி இருக்கேன்” என்றான்.

“சரி! வீட்டுக்கு டாக்டரை வர சொல்லு. கொஞ்சம் அடி பட்டிருக்கு” என்றுவிட்டு போனை அனைத்தான்.
 
Chitra Balaji

Member
Feb 5, 2020
43
27
18
Woooww... Semma semma chasing scene maa... Suoer maa செந்தில் ku ஒண்ணுமே theriyala.... அவன kaapaathi anupitaanga.... கேசவன் nuku thaan அடி.... என்னமா thappichaan maa...
 
Jovi

New member
Jan 10, 2019
13
9
3

Super episode 🤩
 
bselva

Active member
Sep 19, 2018
131
28
28
அதெல்லாம் பிரச்சினை இல்ல mam. எங்களுக்கு ud முக்கியம் அமைச்சரே. 😉
கேசவா நீ வீரன் தான் ஆனாலும் உன்னால ஒரு குடும்பம் சிதைஞ்சிருச்சே, இதுக்கு என்ன நியாயம் சொல்வது?