Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 11 | SudhaRaviNovels

அத்தியாயம் - 11

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
144
81
28
அத்தியாயம் – 11

டாக்டர் ரத்னாவிடம் பேசிவிட்டு அன்றைய வேலைகளை முடித்துக் கொண்டு ஹாஸ்ட்டலுக்கு வந்தவளின் மனம் சோர்வுற்று இருந்தது. இப்படி எத்தனை நாளைக்கு ஓடிக் கொண்டே இருப்பது? தான் பார்த்து பழகிய ஊரை தவிர வேறு எங்கும் செல்வதற்கும் மனம் இடம் கொடுக்கவில்லை. பட்டதெல்லாம் போதும் வாழ்வோ, சாவோ பழகிய இடத்திலேயே போகட்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

அன்று வேலை முடிந்து சீக்கிரமே வந்துவிட்டிருந்த கலை அவளின் சோர்ந்த முகத்தை பார்த்து “என்னாச்சு ரம்ஸ்? எதுவும் பிரச்சனையா?” என்றாள்.

“ம்ம்...வேற ஹாஸ்பிட்டல் மாற போறேன் கலை. அதை பற்றி தான் யோசிச்சிட்டு இருக்கேன்”.

அதிர்வுடன் “வாட்? எதுக்கு? இங்கே நல்லா தானே இருக்கு?”

உதட்டை லேசாக பிதுக்கி “என் வாழ்க்கையில் எதுவுமே என் கையில் இல்லை” என்றாள்.

அதில் கடுப்பானவள் “என்ன சொல்றேன்னு எனக்கு புரியல? வேற வேலைக்கு போகனுமா வேண்டாமான்னு நீ தானே முடிவு பண்ணனும்? அப்புறம் எப்படி முடிவு என் கையில் இல்லேன்னு சொன்னா எப்படி?”

“நான் விரும்புகிற முடிவை எடுக்க முடியாது. ஏன்னா என்னை சூழ்நிலை நிர்பந்தபடுத்தும்”.

அவளது தோள்களை பற்றி உலுக்கியவள் “சத்தியமா எனக்கு எதுவும் புரியல. அப்படி என்ன உன் வாழ்க்கையில் நடந்தது? நீ ஏன் இப்படி இருக்கிற?”

கலங்கிய கண்களுடன் “நான் முதன்முதலாக எடுத்த ஒரு முடிவு தவறாக போனதன் பலன் என்னை துரத்திக் கொண்டு இருக்கிறது”.

“என்ன சொல்ற?”

அதுவரை மனதை அழுத்திக் கொண்டிருந்தவற்றை அவளிடம் மடை திறந்த வெள்ளம் போல சொல்லத் தொடங்கினாள். ஏனோ அன்று எதையும் மறைக்கும் எண்ணமில்லாமல் அனைத்தையும் அவளிடம் கூறினாள்.

எதிரே அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த கலையின் கண்கள் கண்ணீரை சிந்திக் கொண்டிருந்தது. ரம்யாவின் கரங்களை பற்றிக் கொண்டவளின் கரங்கள் நடுங்கிக் கொண்டிருந்தது.

“சாரி ரம்யா! எனக்கு..எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. உன் முடிவு தவறென்றால் விதியின் விளையாட்டும் இங்கே அதிகம். இந்த வயதிற்குள் இத்தனை மோசமான அனுபவங்களா?” என்று தவித்து போனாள்.

கண்ணீரை துடைத்துக் கொண்டவள் “ஏனோ உன் கிட்ட சொன்னா பாரம் குறையும்னு நினைச்சு சொன்னேன். தயவு செய்து எங்கேயும் எப்போதும் என் கதையை யாரிடமும் சொல்லி விடாதே”.

“என்ன ரம்யா இப்படி சொல்லிட்ட? எனக்கு நீ நல்லா இருந்தா போதும்”.

“கண்டிப்பா இடம் மாறியே ஆகணும். ரத்னா மேடம் கிட்ட சொல்லி இருக்கேன். அவங்க நிச்சயம் ஹெல்ப் பண்ணுவாங்க. என்ன ஒண்ணு. இந்த ஊருக்கு திரும்ப வந்த பின்னே எனக்கு யாருமே இல்ல. ஆனா இப்போ நீ இருக்கன்னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு”.

இருவரும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு படுத்தனர். அவளின் கதையை கேட்ட கலையால் உறங்க முடியவே இல்லை. ரம்யாவோ கண்களை அழுந்த மூடிக் கொண்டு உதட்டை அழுந்த கடித்தபடி படுத்திருந்தாள்.

கண்கள் மூடி இருக்க, மனமோ விழித்துக் கொண்டது. நெஞ்சம் ரயில் வேகத்தில் ஓடியது. கலையிடம் பேசிய போது சொன்னவை எல்லாம் காட்சிகளாக கண்முன்னே விரிந்தது.

ஓடும் ரயிலில் ஜன்னலின் ஓரம் அமர்ந்திருந்தவள் வெளியில் தெரிந்த காட்சிகளை எல்லாம் விழி விரிய பார்த்துக் கொண்டிருந்தாள். எங்கும் பச்சை பசேல் என தெரிய, மலை முகடுகள் முழுவதும் மரங்கள் அடர்ந்து ரயிலோடு ஓடி வந்து கொண்டிருந்தது.

வெளியில் தெரிந்த காட்சியை பார்த்து விட்டு அருகே அமர்ந்திருந்தவனிடம் “மாமா! இந்த மலை ஊர் முழுவதும் இருக்குமா?” என்று கேட்டாள்.

மெல்லிய சிரிப்போடு “இல்ல சோட்டி! இது வழியில் தான் வரும். ஆனா எங்க ஊர் ரொம்ப அழகா இருக்கும்”.

கண்கள் படபடக்க “பார்க்கும் போதே தெரியுது. என்னை அழைச்சிட்டு போய் எல்லா இடமும் காண்பீப்பிங்க தானே?”


அவளது நெற்றியில் முட்டியவன் “இதில்லென்ன சந்தேகம்? என்னோட தானே இருக்க போற? நீ விரும்புகிற எல்லா இடத்திற்கும் கூட்டிட்டு போறேன்” என்றான்.
 
  • Like
Reactions: Kothai suresh

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
144
81
28
எதிரே இருந்தவர்கள் இவர்கள் இருவரையும் பார்த்து புதிதாக மணமானவர்களா என்று விசாரிக்க, அவன் ஆம் என்று சொல்ல, அவளோ வெட்கத்துடன் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

தன்னோடு இறுக அணைத்துக் கொண்டவன் தானும் வெளியில் தெரிந்த காட்சிகளை பார்க்க ஆரம்பித்தான் ரத்தன் ஷர்மா. அவனது முகம் மனக் கண்ணில் தெரிய ஆரம்பித்ததும் கண்ணீர் வழிந்து கன்னங்களை தொட ஆரம்பித்தது.

“ரத்தன்” என்று மெல்ல அவளது வாய் முனகியது. உயிரோடு இருந்த போது அப்படி என்னை கூப்பிடு என்று எத்தனை முறை சொல்லி இருப்பான். ஆனால் இன்றோ தானாக வந்தது.

பழைய நினைவுகளுடன் அப்படியே படுத்திருந்தவள் உறங்கி போயிருந்தாள். மறுநாள் காலை அலாரம் அடிக்க அவசரமாக எழுந்தவளுக்கு முதல்நாள் நடந்தவைகள் எல்லாம் நினைவிற்கு வர, பலத்த சிந்தனையோடு மருத்துவமனைக்கு கிளம்பினாள். அவளோடு கிளம்பிய கலை “நீ எங்கே போனாலும் என்னோட காண்டாக்ட்டில் இருக்கணும் ரம்யா. உனக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் நான் வந்து நிற்பேன்” என்றாள்.

“நிச்சயமாக கலை. இப்படியொரு உறவு கிடைக்கும் போது வேண்டாம் என்று சொல்வேனா” என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டாள்.

வேலையில் நுழைந்ததும் அனைத்தையும் மறந்து பணிகளை பார்க்க ஆரம்பித்தாள். சுமார் நான்கு மணியளவில் சற்று ஓய்வு நேரம் கிடைக்க அலுவலக அறையில் அமர்ந்திருந்தவளை ரத்னா அழைப்பதாக கணேஷ் வந்து கூறினார்.

அவசரமாக ரத்னாவின் அறைக்கு சென்றாள்.

“ரம்யா நான் எனக்கு தெரிந்த ஒரு ஹாஸ்பிட்டலில் பேசி இருக்கேன். கிராமத்து மருத்துவமனை தான். சம்பளம் அதிகம் இருக்காது. செலவும் இருக்காது. உனக்கு சரி வருமான்னு பார்த்திட்டு சொல்லு” என்றார்.

அவர் சொன்ன ஊரை பற்றி கேட்டுக் கொண்டு “ஓகே மேடம்! நான் நாளைக்கு சொல்லவா?” என்றாள் மெல்லிய குரலில்.

“சொல்லு ரம்யா. உனக்கு பாதுகாப்பாகவும் இருக்கும்”.

அவரிடம் தலையாட்டிவிட்டு நேரே போன் இருக்குமிடம் சென்றவள் தந்தைக்கு அழைத்தாள். நீண்ட நேரம் அடித்து ஓய்ந்தும் அவர் எடுக்கவில்லை. சற்று நேரம் போனை கீழே வைத்துவிட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டாள். சுமார் பத்து நிமிடங்களுக்குப் பிறகு போன் அடித்தது. அவசரமாக எடுத்தவள் “ஹலோ” என்றாள்.

“பாப்பா நான் அப்பா பேசுறேன். நீ கூப்பிட்டு இருந்தியா?”

“ம்ம்...ஆமாம்-பா” என்றவள் டாக்டர் தன்னிடம் சொன்ன விவரங்களை எல்லாம் அவரிடம் பகிர்ந்து கொண்டவள் “அங்கே அவங்க ஆளுங்க இருப்பாங்களா? உங்களுக்கு தெரியுமாப்பா?”

சற்று நேரம் யோசித்தவர் “நீ ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணு. நான் கூப்பிடுறேன்” என்று சொல்லி போனை வைத்து விட்டார்.

அவள் யோசனையுடன் அமர்ந்து கொள்ள, சரியாக ஒரு பத்து நிமிடத்திற்குள் மீண்டும் போன் அடித்தது. பாய்ந்து எடுத்தவள் “சொல்லுங்கப்பா” என்றாள்.

“விசாரிச்சிட்டேன்-டா. அங்கே அவங்க யாரும் இல்ல. வரவும் மாட்டாங்க நீ நிம்மதியா அங்கே இருக்கலாம்”.

“ம்ம்...சரிப்பா” என்றவளின் மனது ‘நிம்மதியா? அது எங்கே இருக்கிறது?’ என்றே கேட்டது.

போனை வைத்துவிட்டு ரத்னாவிடம் சென்று தனது ஒப்புதலை கொடுத்தவள், டீன்னையும் பார்த்து அவரிடம் பேசிவிட்டு கிளம்பினாள்.

வீட்டிற்கு சென்ற விக்ரம் மருத்துவமனையில் நடந்தவைகளை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான். தேனு அஜய்யுடன் சென்று விட, செண்பகமும் அவனும் மட்டுமே.

அவனுக்கான உணவை தயாரித்துக் கொண்டு வந்தவர் “என்ன விக்கி யோசனை?” என்றார்.

“ரம்யாவை பற்றி தான்-மா” என்றான்.

அவன் உணவருந்துவதற்கு ஏதுவாக அனைத்தையும் வைத்தவர் “இன்னுமா அந்த யோசனை? விடு விக்கி. உனக்குன்னு பொறந்திருந்தா நேரம் காலம் வந்தா தானா வருவா” என்றார்.

அவரை நிமிர்ந்து பார்த்தவன் “ஏம்மா? பார்க்கிற பெண்ணை எல்லாம் இவளை கட்டிக்கிறியான்னு கேட்டீங்க? இப்போ என்னாச்சு?”

“இல்லப்பா அவளுக்கு ஏதோ பிரச்சனை இருக்கு. ஆரம்பமே பிரச்சனையோட தொடங்கணுமா?”.

“சோ உங்களுக்குள்ள ஒரு தயக்கம் இருக்கு. அப்போ இத்தனை நாள் சொன்னது எல்லாம் சும்மாவாம்மா? யாரை வேணும்னாலும் கூட்டிட்டு வா கட்டி வைக்கிறேன்னு சொன்னது”.

அவன் எதிரே அமர்ந்தவர் “எல்லோரும் நல்லா வாழணும்னு தானே நினைப்பாங்க. வாழ்க்கையை தொடங்கும் முன்னேயே பிரச்சனையோட தொடங்க எதுக்கு அந்த தொடக்கம்?”

கைகளை இறுக கட்டிக் கொண்டு அவரை ஆழ்ந்து பார்த்தவன் “இப்போ புரியுதும்மா உங்க பையனுக்கு ஏன் யாருமே பொண்ணு கொடுக்கலேன்னு. நீங்க நினைக்கிற மாதிரி தானே எல்லோரும் எதிர்பார்ப்பாங்க. இவனுக்கு பொண்ணு கொடுத்தா இவனோட வேலை காரணமா ஏதாவது அசம்பாவிதம் நடந்துட்டா பொண்ணு வாழ்க்கை போயிடும்னு தானே நினைப்பாங்க” என்றதும் “விக்ரம்!” என்று அதிர்ச்சியுடன் எழுந்து நின்று விட்டார்.

“இந்த வலி என்னன்னு தெரிந்த உங்களுக்கு அடுத்தவங்களுக்கு அதே வலியை எப்படி கொடுக்க மனசு வருது?”

“இல்ல நான்...அந்த பெண்ணே நீ கேட்டாலும் வேண்டாம்னு தாண்டா சொல்லுவா”.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
144
81
28
“சொல்ல வைக்கிறோம் அம்மா. நாம ஏற்ப்படுத்துகிற சமூக அழுத்தம் அவர்களை அப்படி சொல்ல வைக்கும். இந்த நிமிஷம் வரை அவளுக்கு என்ன பிரச்சனைன்னு தெரியாது. அது தெரியாத போதே வேண்டாம்னு முடிவெடுக்கிறோம்”.

“தப்பு தான் விக்ரம். நீ சொல்கிற மாதிரி எனக்கு எல்லோர் மேலையும் கோபம் வந்தது. ஆனா என் பிள்ளைன்னு வரப்ப நானே அதே மாதிரி யோசிச்சிட்டேன்” என்றார் வருத்தமான குரலில்.

“தேங்க்ஸ்-மா புரிந்து கொண்டதற்கு. அவளுக்கு என்ன சிக்கல் இருந்தாலும் என் மனசுல அவள் தான்னு பதிஞ்சு போச்சு. அதனால மனசை தயார் செய்து கொள்ளுங்கள். அவள் சொன்ன மாதிரி கல்யாணம் ஆகி விவாகரத்து ஆகி இருக்கலாம். இல்ல விதவையா கூட இருக்கலாம். எல்லா சிக்கல்களையும் கடந்து அவள் முழு மனதோட என்னை ஏற்றுக் கொள்ள என்ன செய்யணுமோ அதை நிச்சயமா செய்வேன்” என்றான் அழுத்தமாக.

கண்களில் ஒரு வலியுடன் “அவளுக்கு கல்யாணம் ஆகலேன்னு சொன்னியே” என்றார் தயக்கத்துடன்.

அவரை அழுத்தமாக பார்த்தவன் “தெரியலம்மா. என் மனசு என்னவோ அவளை அவளுடைய பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றி என்னுடன் வைத்துக் கொள்ள சொல்லுது. அதனால நீங்க மனதார அவளை ஏற்றுக் கொள்ள பழகிக்கோங்க”.

“ம்ம்...சாப்பிடு விக்கி. நான் பார்த்துக்கிறேன்”.

அவரை நிமிர்ந்து பார்த்தவன் “தவறா எதுவும் செய்ய மாட்டீங்களே?” என்றான்.

“என்னை என்ன சீரியல் வில்லின்னு நினைச்சியா விக்கி? என் மகனுக்கு பிடித்தது எனக்கும் பிடிக்கும்” என்றார் சிறு சிரிப்புடன்.

அன்னையை ஆழ்ந்து பார்த்துவிட்டு உணவருந்த ஆரம்பித்தான். அதன் பிறகு இருவரும் பேசி கொள்ளவில்லை. மறுநாள் அவனது தேவைகளை கவனித்துக் கொண்டவர் சற்று நேரம் கோவிலுக்கு சென்று வருவதாக சொல்லிவிட்டு அருகில் இருந்த கோவிலுக்கு சென்றார். அங்கே தேனுவையும் வர சொல்லி முதல்நாள் இரவு பேசியவைகளை எல்லாம் கூறினார்.

“அவ்வளவு தீவிரமாவா இருக்காங்க” என்றவளை முறைத்தவர் “நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதா உனக்கு? அந்த புள்ளைக்கு கல்யாணம் ஆகாம இருந்தா நல்லா இருக்கும் தேனு. அது தான் இப்போ என் கவலை” என்றார்.

அவரை கூர்ந்து பார்த்தவள் “என்னம்மா சொல்றீங்க? விக்கி அவ்வளவு சொன்ன பிறகும் இப்படி யோசிக்கிறது தப்பில்லையா?” என்றாள்.

உடனே கோபுரத்தை பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டவர் “தப்பு தான்...ஆனா நான் அந்த காலத்து மனுஷி. கொஞ்சமே கொஞ்சம் மனசு வருத்தப்படும் இல்லையா?” என்றார் கண்களை சுருக்கி.

அவரை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு “இனி மறந்தும் விக்கி முன்னாடி இப்படி பேசிடாதீங்க” என்றாள்.

அவரோ அதை பற்றி கவலைப்படாமல் “சரி வா போய் பார்த்திட்டு வந்திடுவோம்” என்றார்.

“யாரை ஆண்ட்டி?”

“என் மருமகளை தான்”.

“என்ன?”

“ம்ம்...அவன் தான் முடிவு பண்ணிட்டான். நானும் அப்பப்போ அவளை பார்த்து பழகி வச்சுகிட்டா தான் மாமியார் நல்லவங்கன்னு நினைப்பா” என்றார் பர்சை கையில் எடுத்துக் கொண்டு.

“தெய்வமே! இந்த வேகம் ஆகாது. விக்கி பேசி பார்த்து அவளுடைய முடிவையும் தெரிஞ்சுகிட்ட பிறகு நீங்க பழகி பாருங்க”.
 
  • Like
Reactions: Kothai suresh
Need a gift idea? How about a tea mug?
Buy it!