Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 11 | SudhaRaviNovels

அத்தியாயம் - 11

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,826
113
அத்தியாயம் – 11

நாட்கள் யாருக்கும் நில்லாமல் சடுதியில் ஓட, ஸ்ருதி வேலைக்குச் சேர்ந்து பதினைந்து நாட்கள் ஓடி போயிருந்தது.

வேலைக்குச் செல்வதிலும் தினம் ஒரு தகவலாக வந்த மெசேஜ்ஜிலும் மனம் நிறைய ஸ்ருதியின் முகம் தெளிவடையத் தொடங்கியிருந்தது.

ஆரம்பத்தில் அவனது பேச்சை வேண்டா வெறுப்பாகக் கேட்கத் தொடங்கியவள் நாட்கள் செல்ல செல்ல ஆர்வத்துடன் எதிர்நோக்க ஆரம்பித்தாள். மனமோ அவனது செயல்களுக்கு விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தது.அவனோ தினமும் அவள் அணிந்து செல்லும் ஆடைகளைப் பற்றி, தனது நடத்தைக்காக மறைமுகமாக மன்னிப்பு மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தான்.ஒருவிதத்தில் அவனது பேச்சு அவள் மனதில் நெருக்கத்தைக் கொண்டு வந்ததென்றால், மறுபுறம் சற்று கோபமும் எழுந்தது. ‘என்னை என்ன நினைச்சுகிட்டு இருக்கான்.திடீர்ன்னு என் மேல எப்படி இந்த மாதிரி ஒரு ஈர்ப்பு வந்ததுன்னு சொல்லாம, என் கேரக்டரை பத்தி பேசியதுக்கு விளக்கம் கொடுத்து மன்னிப்பு கேட்காம எல்லாத்தையும் எப்படிச் சரி பண்ணிட முடியும்ன்னு நினைக்கிறான்?’ என்று ஆத்திரப்பட்டாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஏழு மணிக்கு எழுந்திரிக்க மனமில்லாமல் எழுந்தவள் காலைகடன்களை முடித்துக் கொண்டு வெளியே வந்து படுக்கையில் அமர்ந்தாள்.
அவளது ரூம்மேட்டுகளோ இரவு பணிக்கு போய்விட்டு வந்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.வேலைக்குச் செல்லும் நாட்கள் எல்லாம் நேரம் போவதே தெரியாது.இந்த ஞாயிற்றுக்கிழமைகள் ஏன் வருகின்றன என்று அலுப்பாக இருக்கும் ஸ்ருதிக்கு.
என்ன தான் ஒருவாரமாகச் சேர்த்து வைத்திருந்த துணிகளைத் துவைத்து அயர்ன் செய்தாலும், ரெண்டு மணி நேரத்திற்குள் மேல் அறைக்குள்ளேயே அடைந்து கிடக்கப் போர் அடிக்கும்.மற்ற அறைகளில் இருப்பவர்கள் எல்லாம் மாலுக்கும், சினிமாவுக்கும் சென்றுவிட, வழக்கம் போல் தோட்டத்தில் தனிமையில் அமர்ந்திருப்பாள்.

இன்றும் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அப்போது தான் நிக்கி தன் உடைகளைப் பற்றி அடிக்கும் கமெண்ட் நினைவுக்கு வர,கடைக்குச் சென்று புதுசு வாங்கி வருவோமா என்றெண்ணினாள்.

அந்தநேரம் அவளது அலைபேசி அழைப்பு விடுக்க எழுந்து சென்று யாரென்று பார்த்தாள். ஆர்த்தியிடமிருந்து அழைப்பு.

“ஹலோ அக்கா..எப்படி இருக்கீங்க?”

“ஹாய் ஸ்ருதி..நல்லாயிருக்கேன். நீ இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்கே சொல்லு?”

“ம்ம்..இன்னைக்குக் கொஞ்சம் டிரஸ் பர்சேஸ் பண்ண போகலாமான்னு இருக்கேன் அக்கா.ஏன் கேட்குறீங்க?”

“ஒ..அப்போ சரி.நீ எத்தனை மணிக்கு ரெடியா இருப்ப? நானும் வரவா?”

“தாராளாமா வாங்கக்கா” என்றாள் சந்தோஷத்துடன்.

“நீ எத்தனை மணிக்கு கிளம்புவ சொல்லு. நான் அங்க வந்துட்டு ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம்.”

“சரிக்கா.நான் ஒன்பது மணிக்கு ரெடியாகிடுவேன். நீங்க வந்துடுங்க.”

“ஓகே ஸ்ருதி. அப்புறம் கடைக்குப் போயிட்டு அத்தை நம்மளை சாப்பாட்டுக்கு இங்கே வந்துட சொல்றாங்க.”

“அங்கேயா?”

“ஹலோ என்ன இழுவை?கவலைபடாதீங்க மேடம். உங்க ஆளு வர மாட்டார்” என்றாள் நக்கலாக.
“ம்ம்..நீங்க கிளம்பி வந்துடுங்கக்கா” என்று சொல்லி போனை வைத்தாள்.

ஆர்த்தியோ ஸ்ருதியிடம் பேசி முடித்துவிட்டு நிகிலுக்கு அழைத்தாள். “என்ன மச்சினரே!எத்தனை நாளைக்கு நாலு சுவற்றுக்குள்ளேயே கண்மணி அன்போட காதலன் நான் எழுதும் கடிதமேன்னு பாட்டு பாடிகிட்டு இருக்கப் போறீங்க?”என்றாள்.

“ஹாய் அண்ணி..திடீர்ன்னு காலையில போன் பண்ணி வம்பு இழுக்குறீங்க? என்ன விசேஷம் சொல்லுங்க.”

“ம்ம்..விசேஷம் தான். உங்க ஆளோட டிரெஸ்ஸை ரொம்பப் புகழ்ந்திருப்பீங்க போலருக்கு.இன்னைக்கு டிரஸ் வாங்க கிளம்பிட்டு இருக்காங்க மேடம்.நீங்க என்ன பண்றதா உத்தேசம்.”

“ஹா..ஹா..அப்போ நான் பாடுறதை தினமும் கேட்குறான்னு தானே அர்த்தம்.”

“இதுக்கெல்லாம் சந்தோஷப்படாதீங்க நிக்கி.இனிமே தான் இருக்கு விவகாரமே.”

“என்ன அண்ணி பயமுறுத்துறீங்க.ஏன் ஏதாவது உங்ககிட்ட பேசினாளா?”

“அடடா!அதெல்லாமில்லை.சரி அதை விடுங்க.நீங்க கடைக்கு வரீங்களா?”

அப்போது உள்ளே நுழைந்த நீரஜ் ஆர்த்தியிடம் சைகையில் யாரென்று கேட்க “நிக்கி” என்றாள்.

அவளிடமிருந்து போனை வாங்கி ஸ்பீக்கரில் போட்டு “என்னடா தம்பி!எப்படி போயிட்டிருக்கு உன் ஆர்ஜே பயணம்?”

“நான் தினமும் விஜயகாந்த் மாதிரி ராத்திரியானா ராசாத்தி உன்னைன்னு பாடிகிட்டு இருக்கேன். அந்தச் சைடுலே இருந்து நோ ரெஸ்போன்ஸ்.”

“அதுசரி எத்தனை நாளைக்குத் தான் இப்படி நேரா பேசாம மைக் மோகன் மாதிரி பாடிகிட்டு போற?
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,826
113
நீரஜிடமிருந்து போனை வாங்கிய ஆர்த்தி “நானும் உங்க அண்ணன் சொன்னதைத் தான் சொல்றேன் நிக்கி.நீங்க இன்னைக்குக் கடைக்கு வாங்கன்னு சொல்றேன்.”

“இல்ல அண்ணி. அது சரி வராது.”

“என்னடா சரிவராது?ஏற்கனவே பதினஞ்சு நாள் ஓடி போச்சு.எதுவுமே நேரா பேசினா தான் சரி வரும்.”

“அவ முதலில் கொஞ்சம் இளகி வரணும்.அதுக்குள்ளே பேசப் போய்ப் பிரச்சனை ஆச்சுன்னா என்ன பண்ண.”

“திருமண வாழ்க்கையில் சிலபல செருப்படிகள் வாங்காம காலம் தள்ள முடியாது தம்பி.அதுக்கெல்லாம் கவலைப்படாம அவகிட்ட பேசி பாரு.”

“அடபாவிகளா!புருஷனும் பொண்டாட்டியுமா எனக்குச் செருப்படி வாங்கிக் கொடுக்கத் தான் பிளான் பண்றீங்களா?”

“ஹா..ஹா..அதை விடுங்க நிக்கி.கடைக்கு வரீங்களா இல்லையா?”

“நான் வரலை அண்ணி.நீங்க என்ன பண்ணுங்க அவ டிரஸ் எடுத்து டிரையல் பார்ப்பா இல்ல,

அப்போ எனக்குப் போட்டோ எடுத்து அனுப்புங்க.நான் நல்லாயிருக்கிரதை சொல்றேன்.

“நிக்கி அப்படியே உங்க அண்ணி நம்பருக்கு டேட்டா ஒரு ஆயிரத்துக்கும், ரீசார்ஜ் ஒரு ஆயிரம் ரூபாய்க்கும் பண்ணிடு.”

“ஆயிரத்துக்கா?அவ்வளவுக்கு ஏன் நீரு?”

“பின்ன பொம்பளைங்க டிரஸ் எடுக்கிறதுன்னா சும்மாவா? நீ வேற போட்டோ எடுத்து அனுப்ப சொல்ற.”

“ஹாஹா..அடபாவி!”

“சரி நேரமாச்சு நான் கிளம்புறேன். அப்புறம் உங்க ஆளுக்கு மதியம் நம்ம வீட்டில தான் சாப்பாடு.”

“ம்ம்..நல்ல குடும்பம்.புள்ளையை விட்டுட்டு மருமகளைக் கூப்பிட்டு விருந்தா?”

“கவலைப்படாதீங்க உங்களுக்கு நீரஜ் கூரியர் சர்விஸ் வந்துடும்”.

“அடிங்க”என்று நீரஜ் அவளைத் துரத்திக் கொண்டு ஓடினான்.”ஓகே நிக்கி..நான் போயிட்டு போட்டோ அனுப்புறேன்”என்றவள் போனை கட் செய்துவிட்டு சென்றாள்.

ஆர்த்தியும்,ஸ்ருதியும் சென்று ஆடைகளைத் தேர்வு செய்து எடுத்துவிட்டு மதியம் சாப்பிட காயத்ரியின் வீட்டிற்கு வந்தனர்.வாங்கி வந்த ஆடைகளை எல்லாம் பிரித்துப் பார்த்துவிட்டு, எல்லோரும் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினர்.

சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது சாப்பிடுமிடம்.மனம் அதில் லயித்தாலும் தான் இப்போது அந்தக் குடும்ப உறுப்பினரில் ஒருத்தி இல்லையே என்ற உணர்வு அவளை வாட்டியது. அதனால் அதுவரை முகத்திலிருந்த பொலிவு குறைந்து போனது. சாப்பிட முடியாமல் தட்டை அலைந்தபடியே இருந்தாள். அவளது பக்கத்திலிருந்த காயத்ரி மெல்ல அவளிடம் குனிந்து “இந்தநிமிடம் இருப்பதை மட்டும் அனுபவி.தேவையில்லாதை மனசில வச்சுக்காதே ஸ்ருதி”என்றவர் அவள் தட்டில் மேலும் உணவை பரிமாறி “முழுக்கச் சாப்பிட்டிட்டு தான் எழுந்திரிக்கனும்” என்று மிரட்டினார்.

உணவிற்குப் பிறகு சிறிது நேரம் குழந்தைகளிடம் விளையாடிக் கொண்டிருந்தவள் அவர்கள் உறங்க சென்றதும் ஹாலிலிருந்த புகைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்தாள். அங்கு ஷோ கேஸில் நிகிலின் சிறுவயது படங்களைப் பார்த்ததும் சுவாரசியமாக ஒவ்வொரு படத்தையும் ஆராய்ந்தாள்.நிகிலின் குழந்தை பருவ படங்களைப் பார்க்கும் போது அவளை அறியாமலே முகம் மென்மையானது.

குழந்தையை உறங்க வைத்துவிட்டு வந்த ஆர்த்தி ஸ்ருதியை பார்த்ததும் அவள் மனதில் நிகிலின் மேல் இருக்கும் ஈர்ப்பை உணர்ந்து கொண்டாள். தான் வந்த சப்தமே செய்யாது அவசரமாகத் தன் அறைக்குச் சென்று நிகிலுக்கு அழைத்தாள்.

“சொல்லுங்க அண்ணி”

“நிக்கி!நாங்க சாயங்காலம் மரினாவுக்குப் போவோம்.டைம் எப்போன்னு மெசேஜ் பண்றேன்.ஸ்ருதிக்கு உங்க மேல ஒரு சாப்ட் கார்னர் இருக்கு.தயவு செஞ்சு மாட்டேன்னு சொல்லாம வாங்க.உங்க கூட மதியையும் கூட்டிட்டு வாங்க.”

“நானே வரனுமான்னு யோசிக்கிறேன்.அவன் எதுக்கு அண்ணி.”

“சான்ஸ் மிஸ் பண்ணாம வந்து சேருங்க.மதி உங்க கூட வரணும்.நீங்க ரெண்டு பேரும் நாங்க வந்தது தெரியாத மாதிரி நடந்துக்கணும்.நீங்களா எங்களைத் தேடி வந்து பேசக் கூடாது.நாங்களா பார்த்த மாதிரி இருக்கணும்.அதுக்குத் தான்.”

“என்னமோ சொல்றீங்க..அவ முறைச்சுக்கிட்டு நிக்கப் போறா என்னைப் பார்த்து.”
“அதெல்லாம் நடக்காது.நீங்க ரொம்ப யோசனை பண்ணாம வந்து சேருங்க”என்று சொல்லி போனை வைத்தாள்.

நிகிலிடம் பேசிவிட்டு கீழே வந்தவள் அங்குக் காயத்ரியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்த ஸ்ருதியிடம் சென்று “எங்கே கிளம்புறே ஸ்ருதி?”
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,826
113
“ஹாஸ்டலுக்குத் தான் கா.”

“நைட் போயிக்கலாம் ஸ்ருதி.சாயங்காலமா எல்லோரும் சேர்ந்து பீச்சுக்கு போயிட்டு அப்படியே ஹோட்டல்ல சாப்பிட்டிட்டு உன்னை ஹாஸ்டலில் ட்ரோ பண்ணிடுறோம் சரியா?”


“இல்லக்கா அதெல்லாம் வேண்டாம்.நீங்க போயிட்டு வாங்க. நான் கிளம்புறேன்.”

காயத்ரியிடம் கண்ணைக் காட்டியவள் “அத்தை நீங்க சொல்லுங்க”என்றாள்.

அவரும் இந்தப் பெண் ஏதோ பிளான் செய்கிறது என்பதை உணர்ந்து கொண்டவர் “ஆமாம் ஸ்ருதி.நீ இப்போ போக வேண்டாம். ஆர்த்திச் சொல்ற மாதிரி பண்ணலாம்”என்றார்.

அதற்குள் மற்றவர்களும் வந்து அதையே சொல்ல மறுக்க முடியாமல் ஒத்துக் கொண்டாள்.

“ஸ்ருதி உனக்குப் படுக்கனும்ன்னா மேல இருக்கிற ரூமில போய்ப் படும்மா.நான் போய்க் கொஞ்சம் நேரம் படுத்துட்டு வரேன்”என்று சொல்லி சென்றார் காயத்ரி.

மற்றவர்களும் சிறிது நேரம் உறங்க செல்ல,ஸ்ருதி மெல்ல படியேறினாள். காயத்ரி சொன்ன அறைக்குச் செல்ல.அவளுடைய நினைவுகள் முதன்முதலாகத் தான் அந்த வீட்டில் அந்த அறையில் நுழைந்த நாளை எண்ணி ஓடியது.

ஆயிரம் கனவுகளுடன் அவனை மணந்து கொண்டு,தனக்கு இதுவரை கிடைக்காத அன்பையெல்லாம் அவன் வழங்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன், அவனுடனான தனிமைக்காகக் காத்திருந்தாள்.

அவள் எதிர்நோக்கிய தனிமையும் வந்தது.

அறைக்குள் நுழைந்த ஸ்ருதி கதவை அடைத்துவிட்டு மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே நின்றிருந்தாள். அவள் வந்ததை உணர்ந்தவன் விழி உயர்த்தி அவளைப் பார்த்த பார்வையில் எரிச்சல் இருந்தது. அவளோ அவனை நிமிர்ந்து பார்க்காது தன் விரல்களை ஆராய்ந்து கொண்டிருந்தாள். சிறிது நேரம் அவளை உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தவன்,

அவள் நிமிரப் போவதில்லை என்றறிந்து தொண்டையைக் கனைத்து “ எத்தனை நேரம் அங்கேயே நிக்கப் போற?போய் உட்காரு” என்றான் அழுத்தமாக.

அவனது கடினமான குரலை கேட்டதும் அவள் உடல் தூக்கிவாரிப் போட பயத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு, ஆசிரியர் சொல்லுக்குப் பயப்படும் மாணவியாக வேகமாகப் போய்க் கட்டிலில் அமர்ந்தாள். மெல்ல அவனும் சென்று அவளின் எதிர்புறம் அமர்ந்தான். அவன் தன் எதிரே அமர்ந்து விட்டான் என்று தெரிந்ததும் தலையைத் தூக்காமல் தன் விரல் ஆராய்ச்சியில் மும்மராக ஈடுபட்டாள். அவனோ அவளைச் சிறிது நேரம் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

“உனக்கு ஏன் இத்தனை அவசரமா கல்யாணம் பண்ணினாங்க? இப்போவெல்லாம் இருபத்தஞ்சி வயசுக்கு மேலதான் பண்றாங்க.உனக்கு இருபது தானே ஆகுது?”என்றான்.


அவன் கேட்டதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்தவள், அவன் கண்களைச் சந்திக்க முடியாமல் மீண்டும் குனிந்து கொண்டாள்.

அவள் பதில் சொல்ல மாட்டாள் என்றுணர்ந்து அடுத்தக் கேள்வியைத் தொடுத்தான் “உனக்குக் காலேஜ்ல எத்தனை பிரெண்ட்ஸ்?”

“நிறைய” என்றாள் மெல்லிய குரலில்.

அதன்பின் என்ன பேசுவதென்று தெரியாமல் அவளைப் பார்த்து “சரி சரி நான் தூங்க போறேன். மறக்காம லைட் ஆ பண்ணிடு. எனக்கு லைட் எரிஞ்சா தூக்கம் வராது” என்றான்.

அவன் சொன்னதும் தனக்கு மாற்றுவதற்கு உடை எங்கே வைத்தார்கள் என்று யோசித்தாள். கட்டிலுக்குக் கீழே ஒரு ட்ரேயிலிருப்பதாக அகல்யா கூறியது நினைவுக்கு வர, அவன் முன்னே அதை எப்படி எடுப்பது என்று யோசனையுடன் அவனைப் பார்த்தாள் . அதைப் பார்த்தவன் “என்ன படுக்கலையா” என்று அதட்ட... “இல்ல என் டிரஸ் எடுக்கணும்” என்றாள்.

“எடுக்க வேண்டியதுதானே அதுக்கு எதுக்கு என் முகத்தைப் பார்த்துகிட்டு உட்கார்ந்து இருக்கே”என்று அதற்கும் கடித்தான்.

அவன் சத்தமிட்டதில் பயந்து போய்ப் படாரென்று அவன் கால்களைத் தொங்கவிட்டிருந்த இடத்தில் உட்கார்ந்து ட்ரேயை எடுக்கக் குனிந்தாள். அதைப் பார்த்து அவள் என்ன செய்யப் போகிறாள் என்று புரியாமல் “ஏய்..ஏய்..என்ன பண்ற? நமஸ்காரம் எல்லாம் பண்ண வேண்டாம்” என்றான்.

அவன் போட்ட சத்தத்தில் பயந்து போய் அவசரமாக நிமிர்ந்தவள், கட்டிலின் மேல் நங்கென்று இடித்துக் கொள்ள ஸ்..ஸ்..என்று வலியுடன் எழுந்தவள், அடிபட்ட வலியில் எழுந்த கடுப்பில் ‘இருந்தாலும் இந்தப் பக்கிக்கு என்ன ஒரு நினைப்பு நமஸ்காரம் பண்றனாமில்ல..நமஸ்காரம்’ என்று பல விதமாக மனதில் திட்டிக் கொண்டே “ என் டிரஸ் அங்கே இருக்கு அதை எடுக்கக் குனிஞ்சேன்” என்றாள்.

“சரி சரி, சீக்கிரம் லைட் ஆ பண்ணு.எனக்குத் தூங்கனும்”என்றான்.

வாஷ்ரூமிற்குச் சென்றவள், கதவை சாத்திவிட்டு,அதில் சாய்ந்து நிம்மதியாகப் பெருமூச்சு விட்டாள். ‘ஹப்பா..இவர் என்ன போன ஜென்மத்தில் ஹெட்மாஸ்டர் ஆக இருந்திருப்பாரா? இந்த மிரட்டு மிரட்டுறார். நல்ல வேலை எத்தனை பிரெண்ட்ஸ் இருக்குன்னு கேட்டார். எத்தனை அரியர் இருக்குன்னு கேட்டு இருந்தா செத்தேடி மவளே. விட்டா சீர் வருசையில் ரிப்போர்ட் கார்ட் எல்லாம் வைக்கச் சொல்லுவார் போலிருக்கு..என்ன கொடுமை ஸ்ருதி இது. உன் நிலைமை இப்படி ஆகி போச்சே.’ என்று புலம்பிக் கொண்டே நைட்டியை மாற்றிக் கொண்டு வெளியே வந்தாள்.
அங்கே அவன் சுவற்றோரம் முதுகை காட்டியவண்ணம் படுத்திருந்தான். அதைப் பார்த்ததும் ‘அச்சச்சோ அந்தப் பக்கம் படுத்துட்டாரே.எனக்கு சுவர் இல்லாத பக்கம் படுக்கப் பயமா இருக்குமே என்ன செய்ய’ என்று யோசித்துக் கட்டிலருகே சென்று அவனை எழுப்பலாமா என்று யோசித்தாள். அவன் முதுகு ஏறி இறங்கியதில் இருந்தே உறங்கி விட்டான் என்று தெரிந்தது. அவனை எழுப்பவும் பயமாக இருந்தது. என்ன செய்வது என்று அங்கும் இங்கும் நடந்து யோசித்தாள். அவன் லைட்டை அனைக்கச் சொன்னது நியாபகம் வர, அதுக்கு வேற எழுந்திரிச்சு கடிச்சு வைக்கப் போறாரு உரங்குட்டன்’என்று பயந்து லைட்டை அனைத்து விட்டுக் கட்டிலோரம் அமர்ந்து கொண்டாள்.

சிறிது நேரம் உட்காருவதும் இருட்டில் கண்ணை உருட்டி உருட்டி பார்த்துப் பயப்படுவதுமாக அமர்ந்திருந்தாள். தன்னை மீறி உறங்கி விழுந்து கடிகார முள்ளின் சத்தத்தில் கூட அலறி அடித்து எழுந்து கொள்வதுமாக இருந்தவள், விடியலின் நேரம் தன்னை அறியாமல் ஆழ்ந்து உறங்கத் தொடங்கினாள்.

அப்போது அகல்யா வந்து மெல்ல கதவை தட்டினாள். முதலில் அதை உணராதவள் திரும்பி படுத்துக் கொண்டாள். மீண்டும் கதவை தட்ட , ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளுக்கு அது பேய் எதையோ உருட்டுவதாகத் தோன்ற, அலறி அடித்துக் கொண்டு எழுந்தமர்ந்து இருட்டில் கண்களை ஓட்டினாள். நிகிலும் அந்த ஓசையில் எழுந்தவன் அவளின் புறம் நகர்ந்து அவள் தோளின் மேல் கையை வைக்கச் சென்றான். அதுவரை கதவு இருந்த பக்கத்தில் பார்த்துக் கொண்டிருந்தவள் சடாரென்று திரும்ப அவளின் அருகில் கலைந்த தலையும், சிவந்த விழிகளுடன் தெரிந்த உருவத்தைக் கண்டு “வீல்”என்று அலற இருந்தவளை அவசரமாகப் பாய்ந்து தன் இரு கைகளால் அவள் வாயை அடைத்தான்.

குனிந்து அவள் காதில் “ஹே..லூசு..நான்தான்”என்றான்.

மலங்க மலங்க விழித்தவளின் மூச்சு சற்று நிதானத்திற்கு வந்ததும் வாயிலிருந்து கையை எடுத்தான். முழுவதுமாக எடுத்து விடாமல் மீண்டும் கத்தி விட்டால் என்ன செய்வது என்ற பயத்துடனே வாய் அருகில் இருந்து கையை நகர்த்தாமல் இருந்தான்.

அவன் யாரென்று அறிந்து கொண்ட பிறகு படபடவென்று அடித்துக் கொண்ட நெஞ்சு நிதானத்திற்கு வந்தது. அவனும் அவளுடைய நடவடிக்கையைப் பார்த்தே இனி கத்த மாட்டாள் என்றுணர்ந்து சற்று தள்ளி அமர்ந்து கொண்டு “அண்ணி தான் கதவை தட்டுறாங்க.” என்றான்.

அதன் பிறகே பாட்டி சொன்ன அறிவுரைகள் எல்லாம் நியாபகம் வர அவசரமாகக் குளியறைக்குள் நுழைந்தாள். சிறிது நேரத்திலேயே தயாராகிக் கதவை திறந்து கொண்டு வெளியில் சென்றவள் அகல்யாவை பார்த்து கூச்சத்துடன் ஒரு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு கீழே சென்றாள்.

சற்று முன்னர் நடந்தவைகள் எல்லாம் நினைவுக்கு வர தன்னையும் மீறி “களுக்” கென்று சிரித்துவிட, அவளைத் திரும்பி பார்த்த அகல்யா என்னவென்று புரியாமல் “என்ன ஸ்ருதி?” என்றாள்.

பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு “ நீங்க வந்து கதவை தட்டுனீங்க இல்ல, அப்போ நடந்ததை நினைச்சுப் பார்த்தேன் அக்கா.” என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்ட அகல்யாவுக்கு வெட்கத்தில் முகம் சிவக்க ‘இதென்ன இந்தப் பொண்ணு இதெல்லாம் வெளில சொல்லுதே’என்று நினைத்துக் கொண்டு நடந்தாள். ஸ்ருதியோ விடாமல் “நீங்களும் கேட்டீங்கன்னா விழுந்து விழுந்து சிரிப்பீங்கக்கா”என்றாள்.

அவள் சொல்லிய போது இருவரும் கீழே வந்திருந்தனர். ஸ்ருதி சொன்னதைக் கேட்டு பதட்டமடைந்து அவள் வாயை பொத்தி அங்கிருந்த அறைக்குள் அழைத்துச் சென்று “ என்னம்மா ஸ்ருதி இதெல்லாமா வெளியில சொல்லுவாங்க? நல்லவேளை என்கிட்ட சொன்ன. நீ பாட்டுக்கு அத்தைகிட்ட போய்ச் சொல்லி வைக்காம இருந்தியே” என்றாள்.

அகல்யாவை ஒரு மாதிரியாகப் பார்த்த ஸ்ருதி ‘இதென்ன ஹெச்.எம். குடும்பத்துல உள்ளவங்க எல்லாம் வாயை மூடுறதுல டாக்டரேட் வாங்கி இருப்பாங்க போல. நான் என்ன சொல்ல வந்தேன் இப்போ எதுக்கு இவங்க இங்கே இழுத்திட்டு வந்து லெக்சர் குடுக்குறாங்க’என்று யோசித்தாள்.
அந்தநேரம் அங்கே வந்த ஆர்த்தி “என்ன ரெண்டு பேரும் கூட்டணி போட்டு இருக்கீங்க? எனக்குச் சொல்ல மாட்டீங்களா?”என்று கேட்டாள்.

ஆர்த்தியை பார்த்ததும் அதுவரை அடக்கி வைத்திருந்த சிரிப்புடன் “ உன் தங்கைதான் என்னென்னமோ ரகசியம் எல்லாம் சொல்றா கேளேன்” என்றாள்.

அகல்யா சொன்னதைக் கேட்டு ஆர்வத்துடன் ஸ்ருதியிடம் “ சொல்லுங்க மேடம்” என்றவளது கண்கள் அகல்யாவிடம் கேலி பேச..அதை கவனித்த ஸ்ருதிக்கு, அப்போதுதான் புரிந்தது.

இருவரும் சேர்ந்து தன்னைக் கேலி செய்கிறார்கள் என்று.
உடனே சுதாரித்துக் கொண்டவள் “ உங்களுக்குத் தெரியாத ரகசியத்தையா நான் சொல்ல போறேன் அக்கா” என்றாள்.

அவள் அப்படிச் சொன்னதும் இருவரும் கொல்லென்று சிரித்துவிட்டனர்,

பழைய சம்பவங்களின் நினைவில் இருந்தவளுக்கு அதை நினைத்துச் சிரிப்பு வந்தது.அதே சமயம் நிகில் அன்றே தன்னிடத்தில் இயல்பாக இல்லாமல் முறைத்துக் கொண்டே இருந்தான் என்பதும் புரிந்தது.

“நான் அது அவனோட குணம்னு நினைச்சேன்.ஆனா, அவனுக்கு என்னைப் பிடிக்காம தான் அப்படி நடந்துகிட்டான் போல் இருக்கு”என்று நினைத்தாள்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,826
113
அந்த அறை மேலும் அவளைப் பழைய நினைவுகளில் மூழ்க செய்து விடுமோ என்றெண்ணி அவசரமாகக் கீழே இறங்கி வந்தாள்.

ஆர்த்தியும், அகல்யாவும் வந்துவிடக் குழந்தைகளைத் தயார் செய்து எல்லோரும் கிளம்பி மரீனாவிற்குச் சென்றனர். ஆர்த்தியும் நிகிலுக்கு மெசேஜ் செய்து ஒரு அரைமணி நேரம் கழித்து வர சொன்னாள்.

பீச்சை கண்டதும் அதுவரை இருந்த மனநிலை மாறி குழந்தைகளுடன் குழந்தையாக மணலில் வீடு கட்டுவதும், தண்ணீரில் விளையாடுவதுமாக இருந்தாள்.

அவர்கள் இருந்த இடத்திற்குச் சற்று தள்ளி வந்தமர்ந்து கொண்டனர் நிகிலும் மதியும்.

“உன் கேஸ் முடியறதுக்குள்ள எனக்கு என் பொண்டாட்டிகிட்டேயிருந்து விவாகரத்து வாங்கிக் கொடுத்திடுவீங்க போல இருக்குடா.”

“விடுடா..திருமண வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா.”

“ஞாயிற்றுக்கிழமை கூட உங்க பிரெண்டோட சுத்தனுமான்னு ஒரு ரவுண்டு சாத்தி தான் அனுப்பினா மச்சி.”

அவர்களிருவரும் மும்மரமாகப் பேசிக் கொண்டிருக்க, அகல்யா அபியை அழைத்து “சித்தப்பா..அங்கே பாரு சித்தப்பா” என்று ஸ்ருதிக்குத் தெரியாமல் காட்டினாள்.

அவனும் நிகிலை பார்த்ததும் குதித்துக் கொண்டு ஓடிச் சென்று அவன் கால்களைக் கட்டிக் கொண்டான்.

அபியின் சித்தப்பா என்ற அழைப்பில் அதிர்ந்து போய்ப் பார்த்தவள், அங்கு நிகிலை கண்டதும் முகம் பாறையாக இறுகியது.

குழந்தையைக் கொஞ்சியபடி ஓரக் கண்ணால் அவளைப் பார்த்தவனுக்கு அவளது முக மாற்றம் அவளது மனதை புரிய வைத்தது.

மதியும் அதைக் கவனித்தவன் “மச்சி! உங்க அண்ணிங்களுக்கு உன் மேல ரொம்ப நாளா கடுப்பு போலருக்கு.இன்னைக்கு நல்லா வச்சு செஞ்சிட்டாங்கடா.சிஸ்டரை பார்த்தா இன்னைக்குச் சுனாமி தான்னு தோணுது.நான் இப்படியே எஸ் ஆகிடுறேன்”என்றான்.

அதற்குள் ஆகாஷும்,நீரஜும் வந்து பேச ஆரம்பித்தனர்.காயத்ரியோ மருமகள்களிடம் “வாலுங்களா இது உங்க வேலையா?நல்லா தான் ட்ரைன் ஆகி இருக்கீங்க”என்று கிண்டலடித்தவர் “ஸ்ருதிகிட்ட போய் இருங்க. அவ டென்ஷன் ஆகிட்டா.மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்” என்றார்.

ஆண்கள் அனைவரும் கூடிப் பேசிக் கொண்டிருந்தனரே தவிர நிகில் ஸ்ருதியின் அருகில் சென்று பேச எந்த முயற்ச்சியும் எடுக்கவில்லை. அவளைக் கண்டுகொள்ளாத மாதிரியே இருந்தான். அது அவளைச் சிறிது சாந்தப்படுத்தியது.

சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு எல்லோரும் ஹோட்டலுக்குக் கிளம்பினர்.அப்போது காயத்ரி “நிக்கி நீயும் எங்களோட வந்து சாப்பிட்டிட்டு போ” என்றார்.

அவனும் ஒத்துக் கொள்ள அங்கேயே அருகிலிருந்த ஹோட்டலுக்குச் சென்றனர்.அனைவரும் அவரவர் துணையுடன் அமர்ந்து கொள்ள ஸ்ருதி வேறு வழியில்லாமல் நிகிலின் அருகே அமர வேண்டியதாகிவிட்டது.

அவள் தன்னருகில் அமர்ந்ததும் மனம் மகிழ்ந்து போனது நிகிலுக்கு.அவளோ சங்கடத்துடனே அமர்ந்திருந்தாள். எப்போதடா எழுந்து போவோம் என்கிற எரிச்சலில் இருந்தாள். அவரவர் விருப்பத்திற்கு ஆர்டர் செய்து சாப்பிட ஆரம்பிக்கும் போது மெல்ல அவள் புறம் சரிந்து “இன்னைக்கு நைட் போன் பண்ணவா?” என்றான்.

அனைவரது பார்வையும் தங்களின் மேல் கண்டும் காணாதவாறு படிந்து மீள்வதைக் கண்டவளுக்குப் பதில் சொல்ல முடியாமல் “ம்ம்..” என்றாள்.

அவளது சம்மதத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் அனாவசியமாக அவளைத் தொந்திரவு செய்யாமல் சாப்பிட்டு முடித்தான்.அங்கிருந்து அவன் கிளம்பி சென்ற பின்னர் அவளை ஹாஸ்டலில் அழைத்துச் சென்று விட்டுவிட்டு கிளம்பினர்.

அன்றைய நாளின் அலைச்சலிலும், மன சோர்விலும் களைத்துப் போய்ப் படுக்கையில் விழுந்தாள்.மனமோ அவன் போன் பண்ணவா என்று கேட்டதையே நினைத்துக் கொண்டிருந்தது.மெசேஜ் பண்ணி பாடினது பத்தாதுன்னு போன் பண்ணி பாடப் போறானா? என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தாள்.

அந்தநேரம் அவனிடமிருந்து அழைப்பு வந்தது.போனையே பார்த்துக் கொண்டிருந்தவள் உடனே எடுக்கப் பிடிக்காமல் சிறிதுநேரம் அழைத்து ஓயட்டும் என்று விட்டாள். அவனோ விடாது கருப்பு போன்று அலுக்காமல் அடித்தான்.

இனியும் விட்டு தொலைய மாட்டான் என்றெண்ணி அவனது அழைப்பை ஏற்றாள்.

“ஹனி..லைன்ல இருக்கியா?”

“ம்ம்..”

“சாரி”

“ “
“எதுக்குன்னு கேட்க மாட்டியா”

“எதுக்கு”

“அதை நேர்ல சொல்றேன்...நாளைக்கு உன் ஆபிஸ் பக்கத்துல இருக்கிற பார்க்ல மீட் பண்ணலாமா?”

“இந்தச் சாரியை நேரா மீட் பண்ணி சொல்ல போறீங்க.அது எதுக்கு.நான் வரல.”

“இல்லம்மா நான் உன்கிட்ட பேசணும்.எனக்காக அதிக நேரம் வேண்டாம்.ஒரு அரைமணி நேரம் போதும்.ப்ளீஸ்..மாட்டேன்னு சொல்லாத”

“சரி..எத்தனை மணிக்கு?”

“ஆறு மணிக்கு..உனக்கு ஓகே வா”

“ம்ம்..வேற ஒன்னுமில்லையே..நான் வச்சிடுறேன்” என்று கட் செய்து விட்டாள்.

கணவன்,மனைவி இருவரது மனமும் அடுத்த நாளை எண்ணியே சுழன்றது. என்ன பேச போறான் என்று அவளும்,நான் மன்னிப்பு கேட்பதை ஏற்றுக் கொள்வாளா என்று அவனும் எண்ணிக் கொண்டிருந்தனர்.