Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 10 | SudhaRaviNovels

அத்தியாயம் - 10

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
144
81
28
அத்தியாயம் – 10

மறுநாள் காலை அஜய் வந்து டிஸ்சார்ஜ் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு அறைக்கு வந்தான். ரம்யாவோ அதுவரை எட்டியும் பார்க்கவில்லை. டாக்டருடன் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று போகாமல் தவிர்த்து விட்டாள்.

காலை ரவுண்ட்சிற்கு வந்த ரத்னாவுடன் இணைந்து கொண்டவள் அவன் இருந்த அறைக்குள் நுழைந்தனர். ரத்னா அவனை பரிசோதித்து விட்டு “எல்லாம் நல்லா இருக்கு மிஸ்டர் விக்ரம். நான் சொன்ன மாதிரி உடற்பயிற்சி எல்லாம் மெல்லமா செய்ய ஆரம்பிங்க. மருந்துகளை மறக்காம எடுத்துக்கோங்க. அதிகமா ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்க. அடுத்த வாரம் வந்து பாருங்க” என்றவர் ரம்யாவிடம் திரும்பி “மருந்துகள் எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்திடு” என்றவர் வெளியேறினார்.

அவர் சென்றதும் செண்பகம் பொருட்களை எல்லாம் எடுத்து வைக்க ஆரம்பிக்க, தேனுவும் அவருக்கு உதவ ஆரம்பித்தாள். ரம்யாவோ மேஜை மீது வைக்கப்பட்டிருந்த மருந்துகளை எடுத்து அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு அஜய்யிடம் கொடுக்க திரும்பியவள் விக்ரமின் பார்வை தன் மீது இருப்பதை கண்டு கடுப்பானாள்.

“உங்க பிரெண்டுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாதா? அதுவும் நான் திருமணம் ஆனவள் என்று சொன்ன பிறகும் இது என்ன பார்வை?” என்று சீறினாள்.

மெல்ல கட்டிலில் இருந்து இறங்கி நின்றவன் ஒற்றை காலை ஊன்றி மற்ற்றொரு காலை லேசாக உயர்த்திக் கொண்டு அவளை நிமிர்ந்து பார்த்தவன் “இங்கே படுத்திருப்பவனால எதையும் விசாரிக்க முடியாதுன்னு தானே பொய் சொன்னீங்க மிஸ். ரம்யா ரெங்கநாதன்” என்றான் கிண்டலாக.

செண்பகமும், தேனுவும் அவர்கள் பேச்சு ஆரம்பித்ததுமே இதென்னடா புது வம்பு என்று கையை பிசைந்தபடி டென்ஷனாக பார்க்க ஆரம்பித்தார்கள்.

அவன் தன் முழு பெயரை சொன்னதுமே முகம் இறுகி போனவள் “லுக்! நான் யாராக வேணாலும் இருந்திட்டு போறேன். என் வழியில் குறுக்கே வராதீங்க” என்று அழுத்தமாக சொல்லிவிட்டு வெளியேறினாள்.

செண்பகமோ அவள் வெளியேறியதும் அவசரமாக மகன் அருகே சென்று “அவளுக்கு நிஜமாவே கல்யாணம் ஆகலையாடா?” என்று அதி முக்கிய கேள்வியை கேட்டார்.

தேனுவும், அஜய்யும் அவரின் கேள்வியை கண்டு திகைத்து நிற்க, விக்ரமோ “கல்யாணம் ஆகி இருந்தாலும் அவ புருஷனை போட்டு தள்ளிட்டு கட்டி இருப்பேன்” என்றான் கிண்டலான சிரிப்புடன்.

அதை கேட்டு நெஞ்சில் கை வைத்தவர் “டேய்!” என்றார் அதிர்ச்சியுடன்.

தேனுவும், அஜய்யும் சிரிப்பை அடக்க முடியாமல் “போதும்! இதுக்கு மேல எங்களால தாங்க முடியாது. முதல்ல இங்கே இருந்து கிளம்புவோம்” என்றனர்.

அஜய்யின் காரில் அனைவரும் அமர்ந்து கொள்ள, கார் மருத்துவமனை வளாகத்தை விட்டு கிளம்பியது. அப்போது மற்றொரு கார் அவர்களின் காரை கடந்து வந்து வாயிலில் நின்றது. அதிலிருந்து பணக்கார மிடுக்குடன் மூவர் இறங்கினார்கள். வெள்ளை வேட்டி சட்டை அணிந்திருந்த பெரியவர் மீசையை முறுக்கியபடி மருத்துவமனை வளாகத்தை ஒரு பார்வை பார்த்தார். அவரின் பின்னே நின்ற இருவரில் ஒருவர் அவரை போலவே வேட்டி சட்டையுடன் இருக்க, மற்றொருவர் பேன்ட் சட்டை போட்டுக் கொண்டு வந்திருந்தார்.

மூவரும் ரிஷப்ஷனை நோக்கி நடக்க, பேன்ட் போட்டிருந்தவர் மற்ற இருவரை விட சற்று வேகமாக நடந்து முன்னே சென்று ரிஷப்ஷனில் விசாரிக்க ஆரம்பித்தார்.

“நர்ஸ் ரம்யாவை பார்க்கணும்”.

பெரியவர்கள் இருவரும் இடுப்பில் கை வைத்தபடி சுற்றுப்புறத்தை ஆராய்ந்து கொண்டு நின்றனர்.

“வர சொல்றேன் சார். வெயிட் பண்ணுங்க”.

ரத்னாவின் அறையில் இருந்த ரம்யாவுக்கு செய்தி சொல்லப்பட, தன்னை பார்க்க யார் வந்திருப்பார்கள் என்கிற யோசனையுடன் வெளியே வந்தாள். அங்கு நின்றிருந்தவர்களை பார்த்ததும் முகம் மாறி போக, அவளது நடையில் தடுமாற்றம் வந்தது. மெல்ல நடந்து வந்து அவர்களின் முன்னே நின்றாள்.

அவளை பார்த்ததும் ஏளனமாக பார்த்துவிட்டு “வெளியே வா பேசணும்” என்று சொல்லிவிட்டு வெளியேறினார் பெரியவர். மற்றவர்கள் அவளை கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அவரை பின் தொடர்ந்தனர்.

வெளியில் ஒரு மரத்தடியில் சென்று நின்றவர்கள் அவளின் வரவிற்காக காத்திருந்தனர். அவர்களின் வரவை முற்றிலுமாக எதிர்பார்க்காதவள் எதற்கு வந்திருப்பார்கள் என்கிற சிந்தனையுடனே நடந்து சென்று அவர்களின் முன்னே நின்றாள்.

“நீ இந்த ஹாஸ்பிட்டலை விட்டு போயிடு” என்றார் எடுத்ததுமே அந்த பெரியவர்.

மௌனமாக அவரை நிமர்ந்து பார்த்தவளின் விழிகளில் எதற்கு என்கிற கேள்வி இருந்தது.

அவளின் கேள்வியை புரிந்து கொண்டவர் “எங்க ஆளுங்க இங்கே வராங்க. அவங்க எல்லாம் உன்னை அடிக்கடி பார்த்திட்டு வந்து பேசுறது எங்களுக்கு பிடிக்கல” என்றார் எரிச்சலாக.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
144
81
28
“நான் யார் கிட்டேயும் பேசுறது இல்லையே. அப்புறம் ஏன்?” என்றாள் கலங்கிய குரலில்.

“இல்ல சரி வராது! உன்னை பற்றிய கேள்வி எங்கள் குடும்பத்தில் வர கூடாது” என்றார் அழுத்தமாக.

“நான் ஒதுங்கி தானே இருக்கேன்? அப்புறம் எதுக்கு என்னை இங்கே இருந்து போக சொல்றீங்க?” என்று மீண்டும் கேள்வியை எழுப்பினாள்.

அதில் ரெண்டாமவர் கடுப்பாகி “அது தான் அண்ணன் சொல்றாங்க இல்ல. கேட்டுட்டு மரியாதையா கிளம்பு” என்றார் கோவமாக.

“என்னால யாருக்கும் எந்த தொந்திரவும் வராதுங்க. நான் என் வேலை உண்டு நான் உண்டுன்னு தான் இருக்கேன்”.

“ஏம்மா சொன்னா புரிஞ்சுக்கவே மாட்டியா நீ? உன்னை பார்த்திட்டு வந்து எங்க கிட்ட கேள்வி கேட்கிறது எங்களுக்கு பிடிக்கல” என்றார் மூன்றாமவர்.

“புதுசா பார்க்கிறவங்க கொஞ்ச நாள் கேட்பாங்க. அப்புறம் விட்டுடுவாங்க” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னே “ஏய்! சொன்னதை கேட்க மாட்டியா? இப்படி இருக்க போய் தான் இந்த நிலைமையில் இருக்க. இப்பவும் புத்தி வரலையா உனக்கு?” என்று எகிறினார் பெரியவர்.

அவர்கள் இனி தன் பேச்சை கேட்கவே மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டவள் தொண்டை அடைக்க “இந்த ஹாஸ்பிட்டலை விட்டு மட்டும் போகனுமா இல்லை ஊரை விட்டேவா?” என்றாள்.

“ஊரை விட்டு போனா ரொம்பவே சந்தோஷம்” என்றார் உடனடியாக ரெண்டாமவர்.

அவர்கள் மூவரையும் நிமிர்ந்து பார்த்தவள் “உலகத்தை விட்டு போயிட்டா நிம்மதியா இருக்குமில்ல. போயிடவா?” என்றாள் அழு குரலில்.

“அது உன்னிஷ்டம்” என்ற பெரியவர் முகத்தை திருப்பிக் கொண்டார்.

வியர்வை நாளங்கள் பெருக்கெடுக்க, உதடுகள் லேசாக துடிக்க அவர்களை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது. அவளது மனமோ அழக் கூடாது என்று கட்டளை இட்டது. பெரிய பெரிய மூச்சுக்களை இழுத்து விட்டவள் தன்னை சுதாரித்துக் கொண்டு “சரி! அவ்வளவு தானே? இல்ல இன்னும் ஏதாவது இருக்கா?” என்றாள்.

அவளை திரும்பி பார்த்தவர் “எங்க ஆளுங்க இல்லாத பக்கமா போய் வேலையை பாரு” என்றார்.

உதட்டை கடித்து தனது கோபத்தை அடக்கிக் கொண்டவள் “உங்க ஆளுங்க இல்லாத இடம் எதுன்னு பார்த்து சொல்லுங்க. நான் அங்கே போறேன்” என்றாள் கடுப்பாக.

“ஏய்! அண்ணனையே எதிர்த்து பேசுறியா நீ?” என்று கை ஓங்கி கொண்டு வந்தார் ரெண்டாமவர்.

அவரை நிமிர்ந்து பார்த்தவள் “நான் என்ன தான் செய்யணும்னு சொல்றீங்க? செத்து போயிடவா? அப்பவாவது என்னை நிம்மதியா இருக்க விடுவீங்களா?” என்றாள் ஆத்திரமாக.

“நீ இருந்தா என்ன செத்தா எங்களுக்கு என்ன? உன்னால எங்க குடும்ப மரியாதை போக கூடாது! அவ்வளவு தான்” என்றார் ஆங்காரத்தோடு மூன்றாமவர்.

இவர்களிடம் பேசி புண்ணியமில்லை என்பதை புரிந்து கொண்டவள் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு “சொல்ல வந்ததை சொல்லிட்டீங்க இல்ல கிளம்புங்க. நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று சென்று விட்டாள்.

தங்களிடம் மரியாதை இல்லாமல் பேசி செல்லுபவளை பார்த்துக் கொண்டிருந்த மூவரும் “இவங்க அப்பனை உதைச்சிருக்கணும். பெண்ணா பெத்து வச்சிருக்கான். உசுரை வாங்குது” என்று சொல்லியபடி காரில் ஏறி அமர்ந்தனர்.

“டேய் ஜகதீசா! ரெண்டு நாளைக்கு ஒருக்கா வந்து பாரு. அடுத்த வாரதுக்குள்ள இவ கிளம்பி இருக்கணும். இல்லேன்னா நாமளே கட்டி தூக்கிட்டு போய் எங்காவது போட்டுட்டு வந்துடுவோம்” என்றார்.

“சரிங்கண்ணா நான் பார்த்துக்கிறேன்”.

அவர்களிடம் பேசி விட்டு உள்ளே வந்தவளுக்கு மூச்சடைத்தது. இந்த மருத்துவமனைக்கு வேலைக்கு வந்து ஆறு மாதங்கள் தான் ஆகிறது. முதலில் இருந்த மருத்துவமனையில் இருந்தும் இவர்களினால் தான் வெளியே வந்தது. மீண்டும் இங்கிருந்து எங்கே செல்வது. அவளது மனம் இந்த ஊரை விட்டு வெளியே செல்ல இடம் கொடுக்கவில்லை. ஆனால் இங்கே இருக்கும் மருத்துவமனைகளில் எங்கே சேர்ந்தாலும் இவர்கள் இதே போல வந்து மிரட்டுவார்கள் என்கிற எண்ணம் அழுத்தமாக பதிந்தது.

அடுத்து என்ன என்று புரியாமல் திகைத்து அமர்ந்து விட்டாள். ஒருவருக்கு இன்பமும், துன்பமும் மாறி மாறி தான் வரும் என்பார்ர்கள். ஆனால் அவளுக்கோ துன்பம் மட்டும் எந்நேரமும் துரத்திக் கொண்டே தான் இருக்கிறது. எத்தனை நாள் இப்படி மனிதர்களை கண்டு ஓடுவது? என்ன செய்வது என்று புரியாமல் அப்படியே அமர்ந்திருக்க, ரத்னா அழைப்பதாக அழைப்பு வர, மெல்ல தன்னை சமாளித்துக் கொண்டு எழுந்து சென்றாள்.

என்ன தான் முகத்தை மாற்றி கொண்டு சென்றாலும் அவள் மீது அன்பை வைத்திருந்த ரத்னா அதனை கண்டு கொண்டார்.

அவளிடம் வேறு விஷயங்களை பேச அழைத்திருந்தவர் அவளின் முகத்தில் தெரிந்த சோர்வையும், கண்களில் தெரிந்த கலக்கத்தையும் புரிந்து கொண்டவர் “என்னாச்சு ரம்யா?” என்றார்.

அவரிடம் இதுவரை தன்னை பற்றி எதுவும் சொல்லியதில்லை. ஏனோ அவருக்கு இவள் மீது அன்பு இருந்தது. யாருமில்லாதவள் என்பதாலா இல்லை அந்த சோர்வான முகத்தில் தெரியும் சோகமா என்று தெரியவில்லை. ஆனால் தன் முகத்தை பார்த்தே அதில் தெரியும் உணர்வுகளை புரிந்து கொள்ளுபவர்கள் கிடைப்பது பெரிய விஷயம் இல்லையா?
 
  • Like
Reactions: Kothai suresh

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
144
81
28
“மேம்! நான் இந்த ஹாஸ்பிட்டலை விட்டு போக வேண்டிய நேரம் வந்து விட்டது” என்றாள் கரகரத்த குரலில்.

“வாட்?”

“ஆமாம் மேம்! எனக்கு இங்கே நிறைய பிரச்சனைகள் இருக்கு. அதிலும் இந்த ஊரில் என்னை எப்பவும் வாழ விட மாட்டாங்க”.

“என்ன சொல்ற ரம்யா? அப்படி என்ன பிரச்சனை உனக்கு?”

கண்களை படபடவென்று அடித்துக் கொள்ள “என்னால எதையுமே சொல்ல முடியாது மேம்! இருபத்தஞ்சு வயதிற்குள் நிறைய பார்த்துட்டேன். என்னுடைய பத்தொன்பது வயதில் இருந்து என்னிடம் இருந்த எல்லாவற்றையும் இந்த வாழ்க்கை பறித்துக் கொண்டது. அன்றிலிருந்து ஓடிக் கொண்டே இருக்கேன்”.

“என்ன சொல்ற ரம்யா?”

“மேம்! எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் பண்ணுங்க! நம்ம ஊரை சுற்றி உள்ள கிராமத்து மருத்துவமனையில் வேலை வாங்கி தர முடியுமா? இனியும் என்னை இங்கே இருக்க விட மாட்டாங்க”.

அவர் அதிர்ந்து போய் “ஆர் யு சீரியஸ்?”

“எஸ் மேம்! நான் போகலேன்னா பெரிய பிரச்சனை ஆகிடும் மேம்”.

அவளை பரிதாபமாக பார்த்தவர் “அப்படி என்னம்மா பிரச்சனை? உன்னுடைய உறவுக்காரங்க யாரும் இல்லையா?”.

விரக்தியுடன் சிரித்து “பிரச்சனை பண்றவங்களே அவங்க தான். என்னால அவங்க குடும்பங்களில் உள்ள பெண்கள் கெட்டு போயிடுவாங்களாம்”.

“என்னம்மா சொல்ற? நானெல்லாம் பெண்ணை உன்னை மாதிரி வளர்க்கனும்னு நினைச்சிட்டு இருக்கேன். உன்னை போய்..”.

“வேண்டாம் மேம்! என்னை போல இன்னொரு ரம்யா இந்த உலகத்துக்கு வேண்டாம்! நான் எடுத்த ஒரு தப்பான முடிவு தான் என்னை இங்கே நிறுத்தி வச்சிருக்கு”.

அவளின் உடல் நடுங்கி கொண்டிருப்பதை பார்த்து எழுந்து கொண்டவர் “விடும்மா! நான் பார்த்துக்கிறேன்ம்மா. டீன் கிட்ட பேசிட்டு உனக்கு ஏற்பாடு பண்றேன்”.

“நன்றி மேம்!” என்றவள் அங்கிருந்து வெளியேறினாள்.

வாஷ் ரூமிற்கு சென்று ஒருபாடு அழுது தீர்த்தவள் போன் இருந்த அறைக்கு சென்று தந்தையின் போனிற்கு அழைத்தாள்.

போனை எடுத்தவர் ஒருவித பதட்டத்துடன் “எதுக்கு போன் பண்ணினே ரம்யா?” என்றார்.

தந்தையின் குரலில் தெரிந்த உணர்வை புரிந்து கொண்டவள் “அப்பா! அவங்க எல்லோரும் வந்தாங்க. என்னை இங்கே இருந்து போகும் படி சொல்லிட்டாங்க. நான் கூடிய சீக்கிரம் கிளம்பிடுவேன்” என்றாள்.

அதில் அதிர்ந்து போனவர் “ஏன்? ஏன்? இப்போ என்ன திடீர்னு?”

“அவங்க மரியாதை போகுதாம். என்னை பார்த்திட்டு அவங்க ஆளுங்க எல்லாம் கேள்வி கேட்கிறாங்களாம்”.

“என்னடா பண்ண போற?” என்றார் பயத்துடன்.

“நான் பார்த்துக்கிறேன் பா. வேற இடத்துக்கு போனதும் உங்களுக்கு சொல்றேன். என்னை காண்டாக்ட் பண்ண வேண்டாம். அடுத்து உங்களை தான் பார்க்க வருவாங்க”.

கலங்கிய குரலுடன் “சரி-டா! பார்த்துக்கோ!”.
 
  • Like
Reactions: Kothai suresh
Need a gift idea? How about a funny office flip-over message display?
Buy it!