அத்தியாயம் - 10

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,470
1,032
113
அத்தியாயம் – 10

சற்று நேரம் காரில் அமைதி மட்டுமே நிறைந்திருந்தது. கார்த்திக்கிற்கு தான் அதிர்ச்சி. கேசவன் இதை எதிர்பார்த்தே இருந்ததால் அமைதியாக அமர்ந்திருந்தான்.

தன்னை சுதாரித்துக் கொண்ட கார்த்தி “இவர் இப்படி செய்வார் என்று நான் நினைக்கல கேசவா”.

இதழ்களில் எழுந்த கிண்டலான சிரிப்புடன் “எனக்கு தெரியும். என்னைக்கு அந்த டாகுமென்ட் நம்ம கையில் கிடைத்ததோ அன்னைக்கே இவங்க நம்மள முடிக்க பார்ப்பாங்கன்னு எதிர்பார்த்தேன்”.

“அது தான் நம்ம கையில இல்லையே”

“அவனுங்க பேச்சை கேட்ட இல்ல? நான் அதை மறைத்து வச்சிட்டு அவனுங்களுக்கு ஆட்டம் காண்பிக்கிறதா நினைக்கிறான்”.

“நம்ம அடுத்த மூவ் என்ன?”

“அவனுங்க கிட்ட இருந்து லிங்கத்துக்கான ப்ளான் வருகிற வரைக்கும், நம்ம ஆட்களில் இருக்கும் கருப்பு ஆடுகளை பிடிக்கிற வேலையை பார்ப்போம். எல்லா இடத்திலேயும் ஆள் வச்சிருப்பான் தங்க பாண்டியன்”.

“அது கரெக்ட்...அப்போ என்ன பண்ணலாம்?”

நன்றாக சாய்ந்தமர்ந்தவன் “வண்டியை எடு! யோசிச்சு சொல்றேன்” என்று கண் மூடி சாய்ந்து கொண்டான்.

எதுவும் பேசாமல் காரை எடுக்க, ரியர்வியு கண்ணாடியில் சற்றே தூரத்தில் இருவர் பைக்கில் பின் தொடர்வது தெரிந்தது. அதை தாண்டி மூன்று வண்டிகள் தொடர்வது தெரியாதவாறு அங்கங்கே விட்டு விட்டு தொடர்ந்தனர்.

கார்த்திக்கின் இதழ்களில் புன்னகை. கண் மூடி அமர்ந்திருந்தவன் அதை கண்டு கொண்டு “ என்ன கார்த்தி ரேஸ் ஆரம்பிச்சாச்சா?” என்றான் புன்சிரிப்புடன்.

“இல்ல கேசவா! பாவம் புள்ளிங்க பின்னாடி வரட்டும்” என்றான் சிரிப்புடன்.

“நீ நடத்து” என்றுவிட்டு இதழில் உறைந்த சிரிப்புடன் அமைதியானான்.

நினைவு தெரிந்த நாளில் இருந்து கார்த்தி கேசவனுடன் தான் இருக்கிறான். எங்கு எப்படி இருவருக்குள்ளும் நட்பு உதயமானது என்று கேட்டால் தெரியாது. பசியுடன் மயங்கி விழ இருந்தவனுக்கு ஒரு ஹோட்டலில் இருந்து உணவை திருடி கொடுத்து விட்டு அதற்காக அவர்களிடம் அடி வாங்கிய காட்சி இன்னமும் நினைவில் நீங்காது இருக்கிறது. அன்று அவன் கைகளை பற்றியவன் தான் எப்போதும் அவனுடனே தான் இருக்கிறான்.

அவனது எண்ணங்களை செயலாக்குவதில் முன்னே நிற்பவன் கார்த்தி. சரி தப்பு என்று எதையுமே யோசிக்காது கேசவன் எதை சொன்னாலும் செய்து விடுவான். தம்பதிகளுக்குள் இருக்கும் அன்னியோனியம் போன்று நட்பில் இவர்கள் இருவருக்கும் அன்னியோனியம் அரிதானது.

தான் அணிந்திருக்கும் உடையை கூட நம்பாத கேசவன் கார்த்திக் என்றால் நம்புவான். அது என்ன வகையான அன்பு என்றே சொல்ல முடியாது. தங்களைச் சுற்றி அத்தனை எதிரிகள் இருந்தும் இருவரின் மனதிலும் அத்தனை உல்லாசம்.

கண் மூடி அமர்ந்திருந்தவனை ஓரப் பார்வையால் பார்த்தபடி “ஏதாவது பப்புக்கு போலாமா? கண்ணுக்கு குளிர்ச்சியா நிறைய பார்க்கலாம்” என்றான் இதழ்களை மடித்தபடி.

இதழ்கடையோரம் எழுந்த சிரிப்பை அடக்கியபடி “எது? கண்ணுக்கு குளிர்ச்சியா நீ பார்ப்ப? கிளாஸ்ல உள்ளதை பார்த்ததும் உலகமே மறந்துடும் உனக்கு. இதுல கண்ணுக்கு குளிர்ச்சி ம்ம்..” என்றான் கண்களை திறக்காமல்.

“நீ வேணா இன்னைக்கு வந்து பாரு! ஒரு பிகரை விடப் போறதில்லை”

“டேய்! போதும்டா! சரக்கு உள்ள போனதும் நீ அடிக்கிற லூட்டியில் அந்த பப்பே நாறி போயிடும்”.

“இன்னைக்கு அப்படி பண்ண மாட்டேன்னு சொல்றேன். என் கூட வந்து வேடிக்கை மட்டும் பாரு”.

ஒரு கையால் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு எழுந்தமர்ந்தவன் “முடிவு பண்ணிட்ட! நடத்து” என்றான் சிரிப்புடன்.

அடுத்த நிமிடம் சென்னையின் புகழ் பெற்ற பப்பின் நுழைவாயிலுக்குள் நுழைந்தது ஆதி கேசவனின் கார். வாயிலில் நின்று வருபவர்களை கண்காணித்து உள்ளே அனுப்பிக் கொண்டிருந்த பவுன்சர்கள் கேசவனின் காரை கண்டதும் அவசரமாக அடித்து பிடித்து மேனஜரின் அறையை நோக்கி ஓடினார்கள்.

கேசவனை தொடர்ந்து கொண்டிருந்தவர்களோ அவன் பப்பிற்கு செல்வதை கண்டு அவசரமாக கருணாகரனை அழைத்து கூறினார்கள்.

கேசவனின் திட்டத்தை அறிந்து கொள்ள முடியாத கருணா “டாகுமென்ட் தன் கையில் இருக்குன்னு ஆடுறான் போல இருக்கு. எதுக்கும் கவனமா இருங்க” என்று கூறி வைத்து விட்டான்.

கேசவன் வந்ததை அறிந்து கொண்ட மேனஜர் அவசரமாக வாயிலுக்கு ஓடி வந்து குனிந்து கும்பிடு போட்டு “சா..சார் நீங்க இங்கே” என்று இழுத்தார் உள்ளுக்குள் பயந்தபடி.

அவருக்கு உள்ளுக்குள் உதறல் எடுக்க தொடங்கி இருந்தது. ஆதி கேசவனை பற்றி அறிந்த வரை அவன் இது போன்ற இடங்களுக்கு செல்ல மாட்டான் என்பதே செய்தி. ஆனால் இன்று இங்கு வந்திருக்கிறான் என்றால் அதன் பின்னே ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது. இன்று மாட்டும் இந்த பப் எந்தவித சேதாரமின்றி தப்பித்து விட்டால் பெரிய விஷயம் என்றெண்ணிக் கொண்டார்.

இருவரும் ஒருவரை பார்த்து சிரித்து விட்டு உள்ளே செல்லலாயினர். அவர்களை தொடர்ந்து வந்தவர்களும் அவர்கள் அறியாதவாறு உள்ளே நுழைந்தனர்.

முதலில் அமைதியாக அனைத்தையும் நோட்டம் விட்ட பின்னர் கேசவன் ஓரிடத்தில் சென்று அமர்ந்து விட, கார்த்திக்கோ கண்களில் குறும்புடன் க்ளாசை கையில் எடுத்துக் கொண்டான். ஒவ்வொரு சிப்பாக உள்ளே இறங்க இறங்க அவனுள் இருந்த உல்லாச பேர்வழி வெளியே வர ஆரம்பித்தான்.

மேனஜருக்கும் பவுன்சர்களுக்கும் மட்டும் தான் கேசவனை பற்றி தெரிந்திருந்தது. அங்கு வந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த பணக்கார வீட்டுப் பிள்ளைகள் தங்களைப் போல யாரோ என்றெண்ணி அவர்களை திரும்பியும் பார்க்கவில்லை.

கார்த்திக்கோ அதை பெரிதாக கண்டு கொள்ளாமல் நேராக டிஜேவிடம் சென்றான். ஆங்கிலப் பாடல்களை போட்டுக் கொண்டிருந்தவனின் தோளில் கையைப் போட்டு “உங்கப்பன் இங்கிலீஷ்காரனாடா? இல்ல உங்காத்தா இங்கலிஷ்காரியா?” என்றான் நக்கலாக.

அவன் அருவெறுப்புடன் கார்த்திகைப் பார்த்து “ஹேய்! யாரு மேன் நீ? உன்னை மாதிரி லோக்கல் ஆளை எல்லாம் யார் உள்ளே விட்டா? மனேஜர்!” என்று கத்தினான்.

அவன் தோள்களை அழுந்தப் பற்றிக் கொண்டு “யாரை பார்த்துடா லோக்கல்னு சொன்ன? நீ என்ன பாரினா?”

அவன் அங்கே வம்பு வளர்த்துக் கொண்டிருக்க பப்பில் இருந்தவர்கள் அதை கவனித்து விட்டு முகத்தை சுளித்தபடி “வாட் இஸ் திஸ்? யார் இவன்?” என்று பேச ஆரம்பித்தனர்.

டிஜேவிடம் வம்பு செய்து கொண்டிருந்தவன் மெல்ல அவர்கள் பக்கம் திரும்பி ஒருவனின் சட்டையை பற்றி இழுத்து “நீ யாருடா ஒபாமாவா?” என்றான் முகத்தை அருகே வைத்து.

அவனது ஆஜானுபாஹுவான தோற்றத்திலும், அழுத்தமான பிடியிலும் பயந்து போனவன் “என்னை விடு” என்று துள்ளினான்.

அங்கே சிறு சலசலப்பு எழ ஆரம்பிக்க, கேசவனோ எதுவுமே நடக்காத மாதிரி கையிலிருந்த கிளாசிலிருந்து ஒவ்வொரு மடக்காக ரசித்து குடித்து கொண்டிருந்தான். மானஜருக்கும் பவுன்சர்களுக்கும் என்ன செய்வது என்று புரியாமல் கையை பிசைந்தபடி ஓரமாக நின்றிருந்தனர்.

கூட்டத்தில் அரசியல்வாதியின் மகன் ஒருவன் இருக்க, அவன் கார்த்திக்கின் செயலில் டென்ஷனாகி “என்னடா ஓவரா துள்ளி கிட்டு இருக்க” என்று கேட்டு அவன் சட்டையின் மீது கையை வைக்க அடுத்த நிமிடம் தூர போய் விழுந்தான்.

அவ்வளவு தான் பெண்கள் எல்லாம் ‘ஒ’ வென்று அலறிக் கொண்டு கதவை நோக்கி ஓட ஆரம்பித்தனர். கார்த்திக்கோ தள்ளாட்டத்துடன் நடந்து, ஒடுபவர்களில் ஒவ்வொருவனையும் நன்றாக மொத்தினான்.

இதை கவனித்துக் கொண்டிருந்த மானஜர் கேசவனிடம் வந்து “சார்! தயவு செஞ்சு அவரை..” என்று இழுத்தார்.

கையிலிருந்த கிளாசை வைத்துவிட்டு எழுந்தவன் கையிலிருந்த காப்பை பின்னுக்கு தள்ளி விட்டு “முதல்ல கதவை சாத்துங்க. யாரும் வெளியே போக கூடாது. மற்றதை நான் பார்த்துக்கிறேன்” என்றான்.

கேசவன் எழுந்ததுமே சுதாரித்துக் கொண்டவர்கள் அவசரமாக அங்கிருந்து வெளியேற கதவை நோக்கி நகர்ந்தனர். ஆனால் அவர்களை முந்திக் கொண்டு பவுன்சர்கள் கதவை அடைந்திருந்தனர்.

கதவருகே தள்ளுமுள்ளுவாக இருக்க, கேசவனும், கார்த்தியும் தங்களை பின் தொடர்ந்தவர்களை நெருங்கி இருந்தனர். சரியாக அவர்கள் அருகே நெருங்கி நின்ற கார்த்தி “டேய்! நீ தானடா என்னை லோக்கல்னு சொன்னவன்” என்று கேட்டு ஓங்கி அறை ஒன்றை வைத்தான்.

அவன் கூட வந்தவனோ “ஏய்! என்னப்பா? யாரோ சொன்னதுக்கு அவனை அடிக்கிற?” என்றான் ஒன்றும் தெரியாத மாதிரி.

அதுவரை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த கேசவன் நிமிட நேரத்திற்குள் அவனை தூக்கி அடித்திருந்தான். அவன் எறிந்ததில் தூர போய் விழுந்தவன் எழவே இல்லை. அதுவரை சலசலப்பாக இருந்த இடம் மயான அமைதி ஆனது. அனைவரின் விழிகளும் கேசவனையே பயத்துடன் பார்த்தது. அவனோ காப்பை மேலும் இறுக்கிக் கொண்டு முன்னேறியவன் தங்களை பின்தொடர்ந்தவர்களை பந்தாட ஆரம்பித்தான்.

கார்த்திக்கும் சேர்ந்து கொள்ள, அடி என்றால் அப்படி ஒரு அடியை அங்கிருந்தவர்கள் வாழ்நாளில் பார்த்ததில்லை. பவுன்சர்கள் கூட வாயில் விரலை வைக்காத குறையாக நின்றிருந்தனர்.

அனைவரையும் மாறி மாறி துவைத்து எடுத்தவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க மாட்டார்கள் என்றுணர்ந்து அவர்களை அப்படியே அள்ளிக் கொண்டவர்கள் அனைவரையும் தங்கள் காரில் திணித்தனர்.

பப்பில் இருந்த கூட்டம் முழுவதும் உடல் வெடுவெடுக்க நின்றிருந்தது. ஒருவன் மட்டும் மெல்ல மானஜரை அணுகி “யார் சார் அவனுங்க” என்றான்.

தொண்டையிலிருந்து காத்து மட்டும் வெளிவர “அவர் தான் ஆதி கேசவன்” என்று சொல்லும் போதே விழிகள் பயத்தை காட்டியது.

அவனது பெயர் அங்கே உச்சரிக்கப்படும் நேரம் அதை கேட்டவர்கள் என்ன உணர்ந்தார்கள் என்று தெரியவில்லை. அனைவரின் மனமும் மரண தேவனை நேரே பார்த்தது போன்று மூச்சுவிட மறந்தது.

“என்ன ஆதி கேசவனா?” என்கிற அதிர்ச்சி அனைவரின் வாயிலிருந்தும் வெளிப்பட்டது.

அந்நேரம் மானேஜரின் அலைப்பேசி அழைக்க அதை எடுத்தவர் புதிய எண்ணாக இருக்கவும் யோசனையுடன் காதில் வைக்க “சிசிடிவியில் பதிந்ததை எல்லாம் இன்னும் பத்து நிமிஷத்துக்குள்ள அழிக்கப்படனும். வெளியே போகிற எவனும் வாயைத் திறக்க கூடாது” என்றான் ஆதி கேசவன் மிரட்டலாக.

அந்தக் குரலில் தெரிந்த மிரட்டலிலும், சற்று முன்னர் கண் முன்னே பார்த்த காட்சிகளிலும் பயந்திருந்தவர் “உடனே பண்ணிடுறேன்” என்றார்.

அடுத்த நிமிடம் போன் வைக்கப்பட்டதும் பப்பில் இருந்தவர்கள் அவரவர் காருக்கு ஓடிக் கொண்டிருப்பதை கண்டு சத்தமாக “இங்கே நடந்ததை வெளியில் சொன்னா ஆதி கேசவன் வீடு தேடி வந்து கொல்வான். யார் கிட்டேயும் மூச்சு கூட விடாதீங்க” என்று கூறி விட்டு சிசிடிவி பதிவுகளை அழிக்க ஓடினார்.

காரில் பயணித்துக் கொண்டிருந்தவர்களோ பின் சீட்டில் இருந்தவர்களை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்.

“என்ன கார்த்தி? நீ என்னவோ பண்ண போறதா சொல்லிட்டு அங்கே போய் ஒரு பெண்ணையும் பார்க்கலையே? நான் கூட நீ என்னவோ ரெமோ ரேஞ்சுக்கு நடந்துக்குவேன்னு வெயிட் பண்ணினேன்” என்றான் கிண்டலாக.

“எனக்கெல்லாம் அந்த மூஞ்சிகள் செட்டாகாது கேசவா. பார்த்ததுமே மனசு அப்படியே பத்திக்கணும். அப்படி ஒரு பொண்ணு என்னை மாதிரி ஒருத்தனை நிச்சயம் ஏற்றுக் கொள்ளாது. அதனால ஏதோ ரெண்டு பெக் போட்டமா கனவுல நயந்தாராவோட டூயட் பாடினமான்னு இருக்கணும்” என்றவனைப் பார்த்து கடகடவென்று சிரிக்க ஆரம்பித்தான்.

சிரிக்கும் கேசவனை பார்த்துக் கொண்டிருந்த கார்த்தி “உனக்கு அப்படி எதுவும் ஆசை இருக்கா கேசவா?” என்றான்.

எதிரே தெரிந்த ஆகாயத்தை பார்த்தவன் “இல்லாம இருக்குமா? மனசு முழுக்க கனவு இருந்தது ஒரு காலம். எப்போ இந்த களத்தில் இறங்கினேனோ என் வாழ்நாளின் ஒவ்வொரு நாளும் எனக்கு போனஸ் தான். இதுல ஒரு பெண்ணோட வாழ்க்கையை பணயம் வைக்க நான் தயாரில்லை”.

“உங்க கனவில் இருந்த பெண்ணை எனக்கு கொஞ்சம் காட்ட முடியுமா பாஸ்?” என்றான் கிண்டலாக.

அவன் கேட்டதும் கனவுகளை சுமந்த விழிகளுடன் “கண்ணை பார்த்ததும் மனசு அப்படியே அமைதியாகிடனும். குழந்தை போன்ற மனசும், முகமும் பார்க்கவே மனசு நிறைஞ்சு போகணும். ஊரே என்னை பார்த்து மிரள, நான் அவள் சொல்கிற ஒரு வார்த்தைக்கு கட்டுப்பட்டு நிற்கணும். நீளமான அந்த மூக்கில் சின்ன மூக்குத்தி என்னை சலனப்படுத்தி கிட்டே இருக்கணும்” என்றவன் நீண்ட பெருமூச்சுடன் “இதெல்லாம் முன்னே நான் கண்ட கனவு. என் வாழ்க்கையில் சாத்தியமில்லை. எந்நேரமும் ஒன்று நான் எவனையோ துரத்திக் கொண்டு ஓடனும். இல்லேன்னா எவனாவது என்னை துரத்தனும்” என்றான் ஆழ்ந்த குரலில்.

கார்த்திக்கின் மனதிலோ அவன் சொன்னவற்றை வைத்தது சிறு குழப்பம். பத்து நாட்கள் முன்பு பார்த்த பெண்ணை பற்றி அவன் வர்ணித்தது போல இருந்தது. அதிலும் அந்த சிறு மூக்குத்தியும், குழந்தை போன்ற முகமும் அந்த பெண்ணுடன் ஒத்துப் போனது குழப்பத்தை ஏற்ப்படுத்தியது.
 

bselva

Active member
Sep 19, 2018
122
18
28
அடேய் பாவி அவ அண்ணனை போட்டு தள்ளிட்டு அவள பத்தி dream வேறயா உனக்கு?பிச்சு பிச்சு.
 
  • Haha
Reactions: sudharavi

Chitra Balaji

Member
Feb 5, 2020
34
21
8
ஆதி sikiduvaan போல namba shakthi kita.... 😊 😊 😊 😊 semma அடி ஒருத்தன் oruthanujum.... Super Super maa... Semma semma episode... ஆதி semma geththu karthik nanbenda
 
  • Love
Reactions: sudharavi