Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 1 | SudhaRaviNovels

அத்தியாயம் - 1

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
329
323
63
உன்னோடு நான்…என்னோடு நீ…


அத்தியாயம் 1

செங்கதிர்கள் படர்ந்த காலை வேளையில் தூக்கத்திலிருந்து விடுபட்டு கண் மலர்ந்தாள் இனியா. படுக்கையில் படர்ந்திருந்தவளின் பார்வை தன் அருகில் கணவனை நோக்கிச் சென்றது. போர்வை மடிக்கப்பட்டு தலையணையின் மேல் வைக்கப்பட்டிருந்தது. கணவன் நிலன் அருகில் இல்லை.படார் என்று படுக்கையை விட்டு எழுந்தவள் “நிலன்..நிலன்..” என்று அழைத்தவாறு அறையை விட்டு வெளியே வந்தாள்.

“அம்மாடி கண்ணம்மா நான் கிச்சன்ல இருக்கேன்டா” என்ற குரல் கேட்டு கிச்சனுக்குள் சென்றாள் இனியா.

“குட் மார்னிங் டா மா” என்று இனியாவின் நெற்றியில் முத்தமிட்டான் நிலன்.

“குட் மார்னிங் நிலன்” எப்போ எழுந்தீங்க?”

“அரை மணி நேரம் ஆச்சுடா, ஆமா உனக்கு எத்தனை முறை சொல்றது, வேகமா நடக்காத நம்ம பாப்பா வயத்துல இருக்குது மெதுவா நடன்னு.. கேட்கவே மாட்டியா நீ?” என்று செல்லமாக கோபித்தான் நிலன்.

“இதைவிட எப்படிடா மெதுவா நடக்கிறது?”

“மெதுவாகத்தான் நடக்கணும் சரியா? இந்தா இந்த காப்பிய குடி என்று காபி கலந்து இனியாவிற்கு கொடுத்தான் நிலன்.

“நான் பிரஷ் பண்ணல நிலன், பிரஷ் பண்ணிட்டு வந்து குடிக்கிறேன் நீங்க குடிங்க”.

“சரி பிரஷ் பண்ணிட்டு வா சேர்ந்து குடிக்கலாம்”, என்ற நிலன் தேங்காய் கீறல்களை மிக்ஸி ஜாரில் போட்டு சட்னிக்கான பொருட்களை சேர்த்து அரைத்தான்.

பல் துலக்கி விட்டு இனியா வந்ததும் இருவரும் சேர்ந்து பால்கனியில் அமர்ந்தபடி காபி குடித்தார்கள். திருமணம் ஆன அன்றிலிருந்து இன்றுவரை ஒரு வருட காலமாக இருவரும் காலையில் சேர்ந்து காபி பருகுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

“கண்ணம்மா சட்னி அரைச்சிட்டேன் நீ குளிச்சிட்டு கிளம்புடாமா, நான் சூடா தோசை சுட்டு வச்சிட்டு நானும் கிளம்புறேன் ஸ்கேன் எடுக்க போகணும் இல்ல,”

“என்ன நிலன் நீங்க?.. நான்கு தோசை ஊத்தினா நான் ஒன்னும் குறைஞ்சிட மாட்டேன்.. ஏ.ண்..டா.. இப்படி பண்ற… நான் சுட்டுக்கிறேன் நீ போய் குளி”.

“அடியே கண்ணம்மா.., இவ்வளவு நாளும் நீ தானடி எனக்காக எல்லாம் செஞ்ச? இப்போ நீ நிறைமாத கர்ப்பிணி, மத்த பெண்களுக்கு எல்லாம் வளைகாப்பு பண்ணி அம்மா வீட்டுக்கு அனுப்பி வைப்பாங்க, அவங்க அம்மா எப்படி பார்த்துப்பாங்களோ, அப்படி உன்னை நான் பாத்துக்கணும்னு நினைக்குறேன். அது தப்பா பொண்டாட்டி?”

“தப்பே இல்ல புருஷா, எனக்கு அம்மா இருந்திருந்தால் கூட இப்படி எல்லாம் என்ன பார்த்திருப்பாங்களான்னு தெரியல, அம்மா இல்லாத குறையே தெரியாம என்னை பார்த்துக்கிறியேடா.. நீ எனக்கு புருஷனா கிடைக்க நான் என்ன புண்ணியம் பண்ணினேனோ தெரியல” என்று கண் கலங்கினாள்.

“இத பாரு இனியா நீ எதையும் நினைச்சு கவலைப்படாத எனக்கு நீயும் நம்ம பாப்பாவும் தான் முக்கியம். நீ அழுது பாப்பாவையும் அழவச்சிடாத, உன்னோட வயித்துல ஒரு பாப்பா இல்ல ரெண்டு பாப்பாங்க இருக்காங்க, நீ அழுது அவங்களையும் அழ வச்சிடாத” என்று சிரித்தான் நிலன்.

சிறிது நேரத்தில் குளித்து ரெடியாகிவிட்டு வெளியே வந்தாள் அழகு தேவதை இனியா

இனியாவும் நிலனும் பிரபல கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தனர். ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர் இனியாவின் பெற்றோர் ஒரு விபத்தில் மரணம் அடைந்தனர் இனியா ஆதரவற்று பெரும் துயரத்தில் ஆழ்ந்திருந்தாள் ஆறு மாதங்களாக அவள் சோகத்தில் இருந்து வெளியே வராமல் இருந்தாள்.இவளை எப்படி வெளியே கொண்டு வருவது என்று தெரியாமல் நிலனும் தவித்து வந்தான் ஊரில் இருந்த தனது அம்மாவிற்கு போன் செய்து இனியாவை பற்றி கூறினான் அம்மாவும் அண்ணனும் கல்யாணத்திற்கு ஒத்துக்கவில்லை எதையும் யோசிக்காமல் இனியாவை அழைத்துச் சென்று வடபழனி முருகன் கோயிலில் வைத்து தாலி கட்டி கூட்டி வந்தான். அன்றிலிருந்து இன்று வரை அவளை உள்ளங்கையில் வைத்து தான் தாங்கி வருகிறான் ஒன்பதாவது மாதம் முடிவடையும் தருவாயில் டாக்டர் சிவன்யா ஸ்கேன் எடுத்து வர கூறியிருந்தார்.

“கண்ணம்மா தோசை சாப்பிடு நான் குளிச்சிட்டு வந்துடுறேன்னு பாத்ரூமுக்குள் சென்றான் நிலன்.பத்தே நிமிடத்தில் நிலனும் குளித்து கிளம்பி வெளியே வந்தான்.

“சாப்டியாமா” என்ற நிலனிடம் “ஆமாடா நீயும் சாப்பிடு” என்று தட்டில் எடுத்து தோசையை டைனிங் டேபிளில் வைத்தாள்.

நிலன் தோசை சாப்பிடும்போது இனியாவிற்கும் ஊட்டி விட்டான்.

“போதும் நிலன் வயிறு ஃபுல்லா ஆயிடுச்சு”

“இந்த ஒரு வாய் வாங்கிக்கோடி” என்று ஊட்டினான் நிலன்.

சாப்பிட்டு முடித்ததும் ஒரு பையில் வாட்டர் பாட்டில் பிஸ்கட் பாக்கெட் டிரை ஃப்ரூட்ஸ் என்று அனைத்தையும் எடுத்து வைத்தான் நிலன்

“இதெல்லாம் எதுக்கு நிலன்?”

“இருக்கட்டும்டா கண்ணம்மா உனக்கு பசிச்சா உடனே இதை சாப்பிட்டுக்கலாம் இல்ல, அதாண்டா இருக்கட்டும் விடு கிளம்புவோமா?”

“சரி.. நான் என்ன தின்னி மூட்டையா?”

“அப்படி இல்லடா பசிக்கும் போது மூணு பேருக்கும் சேர்த்து நீ சாப்பிடணும் இல்ல, கைல வச்சிக்கிட்டா பசிச்ச உடனே சாப்டுக்கலாம்”. என்றவாறு வீட்டை பூட்டிவிட்டு லிப்ட்டுக்குள் வந்து கீழே இறங்கும் பொத்தானை அழுத்தினான் லிஃப்ட் சர்ர்ர் என்று
கீழே இறங்கியது. லிப்டில் இருந்து வெளியே வந்ததும் கண்ணம்மா கொஞ்சம் வெயிட் பண்ணு இதோ கார் பார்க்கிங்கில் இருந்து கார் எடுத்துட்டு வந்துடுறேன் என்று காரை நோக்கி நடந்தான் நிலன். சிறிது நேரத்தில் காருடன் வந்து நின்றான் நிலன்.முன்டோரை திறந்து ஏறினாள் இனியா
-நித்யா மது


(தொடரும்…)