அத்தியாயம் – 1
மேகங்கள் கூடி கருகருவென வானம் கும்மிருட்டாக இருக்க, லேசான தூறலுடன் சிலுசிலுவென்ற காற்றும் வீச, அதை ரசித்தபடி இரு சக்கர வாகனத்தில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தாள்.
வாழ்வில் தேவை என்ற ஒன்றை அறியாது அனைத்தும் கிடைத்திருக்க, சின்னஞ்சிறு விஷயங்களைக் கூட ரசிக்கும் மனதுடன் வாழ்ந்து வருபவள் தர்ஷனா.
ஒரு ஐடி கம்பனியில் வேலை செய்யும் அவளுக்கு பெரிய எதிர்பார்ப்புகள் எதுவுமில்லை. வாழ்க்கைப் போகும் பாதையில் சென்று கொண்டிருப்பவள்.
மனதில் உற்சாகத்துடன் அலுவலகத்திற்கு வந்திறங்கினாள். டூவீலரை நிறுத்தி வைத்துவிட்டு லிப்டில் மூன்றாவது தளத்தை அழுத்திவிட்டு நிற்கும் சமயம், லிப்டின் கதவை திறந்து மாறன் உள்ளே நுழைந்தான்.
அவனைப் பார்த்ததும் சூரியனைக் கண்ட சூரியகாந்திபூ போல முகம் மலர்ந்தது.
அவனும் அவளைக் கண்டு “குட் மோர்னிங் தர்ஷனா” என்றான் இதழில் புன்னகையுடன்.
“குட் மோர்னிங் மாறன். இன்னைக்கு செம கிளைமேட் இல்ல. என்ஜாய் பண்ணிட்டே வந்தேன்”.
“ம்ம்...எஸ் நானும்” என்றவனது பார்வை அவளை வருடிச் சென்றது.
அவனுடைய பார்வையை உணர்ந்தவளுக்கு மனம் சில்லென்று மாறியது. இருவருக்குள்ளும் மெல்லிய உணர்வு ஓடிக் கொண்டிருந்தது. யார் தங்களை முதலில் வெளிப்படுத்திக் கொள்வது என்று தெரியாமல் இருந்தனர்.
அவர்களின் தளம் வந்ததும் இருவரும் இறங்கி மெல்ல நடந்தனர். மாறன் தான் அவளின் டீம் லீடர். அதனால் இருவரும் ஒன்றாகவே உள்ளே செல்வதை பார்த்ததும், மாறனின் நண்பர்களின் பார்வையில் லேசான கேலி தெரிந்தது.
அதை உணர்ந்தவன் கண்களாலேயே கண்டித்து விட்டு தன் இருக்கைக்குச் சென்றான்.
கடந்த ஒரு வருடமாக இவர்களின் காதல் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளாமலே வளர்ந்து கொண்டிருந்தது. இருவரின் மனமும் நீ சொல்லேன் என்று எதிர்பார்த்து காத்திருந்தது. அது தயக்கமா? பயமா? எது அவர்களை தடுத்துக் கொண்டிருந்தது என்பதை இருவரும் அறியவில்லை.
கணினியின் முன் அமர்ந்ததும் அவளுக்கு அனைத்தும் மறந்து போனது. அன்று முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்க, மொத்தமாக அதில் மூழ்கிப் போனாள்.
“தர்ஷு! லஞ்ச் டைம். இன்னும் என்ன பண்ற?” என்று வந்து நின்றாள் ஆர்த்தி.
“ஒ...டைம் ஆச்சா? இதோ ஒன் மினிட் வெயிட் பண்ணு வந்துடுறேன்”.
கணினியை மூடி வைத்துவிட்டு லஞ்ச் பாக்சுடன் கிளம்பியவள், ஆர்த்தியுடன் பேசிக் கொண்டே கேண்டீனுக்கு சென்றார்கள்.
அங்கே இருவரும் ஒரு மேஜையில் அமர, அவர்களுடன் விஷால், காவ்யா மற்றும் ஷ்யாம் இணைந்து கொண்டார்கள்.
“அப்புறம் காதல் கோட்டை எப்படிப்போகுது?” என்றாள் காவ்யா தர்ஷுவை பார்த்து.
“என்ன சொல்ற காவ்யா?”
“பார்க்காமலே காதல் பேசாமலே காதல் எல்லாம் பார்க்க இண்ட்ரெஸ்ட்டிங் ஆக இருக்கு” என்றாள் கண்களை சிமிட்டி.
அவளின் பேச்சில் லேசாக படபடப்பு ஏற்பட “என் கண்ணுக்கு எதுவுமே தெரியலையே?” என்றதும் அவர்கள் அனைவரும் “அதைத் தான் சொல்றோம். உன் கண்ணுக்கு வேற எதுவுமே தெரியல” என்றனர் கிண்டலாக.
அவர்களின் மேஜையில் பேச்சும் சிரிப்புமாக இருக்க, மற்றொரு மேஜையில் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்த மாறனும் மெல்லிய சிரிப்புடன் அவர்களைத் தான் கவனித்துக் கொண்டிருந்தான்.
அவன் அருகே இருந்த நெருங்கிய நண்பன் வருண் “எத்தனை நாளைக்கு எட்டி இருந்தே ரசிக்கப் போகிறாய்? அந்தப் பக்கமும் ஆர்வம் இருக்குன்னு தெரிஞ்ச பிறகு இன்னும் எதுக்கு வெயிட் பண்ற?”
அவனைத் திரும்பி பார்த்துச் சிரித்தவன் “இதுவொரு பீல் வருண். சட்டுன்னு கல்யாணம் பண்ணி குழந்தை பெத்து எல்லாமே உடனே உடனே நடப்பதுல என்ன இருக்கு? கல்யாணத்துக்குப் பிறகு நாம என்ன நினைத்தாலும் இந்த பீல் எல்லாம் கிடைக்கவே கிடைக்காது”.
“நீ சொல்றது எல்லாம் ஓகே. அதற்கு நீங்க ரெண்டு பேரும் காதலை பகிர்ந்து கொள்ளனும்மில்லையா? அதை ஏன் தள்ளிப் போடுற?”
இப்பொழுதும் அவன் முகத்தில் புன்னகை “அது தான் சொன்னேனே இந்த பீல்...அவள் பார்க்காத போது நான் பார்ப்பதும், நான் பார்க்காத போது அவள் பார்ப்பதும்...இன்றைக்கு அவள் சொல்வாளா? இல்ல நாம சொல்லிடலாமா?” என்று யோசிப்பது எல்லாம் தனி சுகம்.