Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript மனைவியே சரணம்-1 | SudhaRaviNovels

மனைவியே சரணம்-1

Kripnythaa

Moderator
Mar 26, 2018
463
150
63
மனைவியே சரணம்-1

நீரின்றி அமையாது உலகு என்பதுபோல்
பெண்ணின்றி அமையாது நல்வாழ்வு.!
சக்தியின்றிச் சிவனும் இல்லை என்றுரைத்து
சிவனும் சொன்னார் நெற்றிக் கண் திறந்தே.!

பத்துமாதம் சுமந்துகாக்கும் பொறுமை கொண்டு
பக்குவமாய் உணவை பண்போடும் அன்போடும்
பாசத்தோடு குழைத்து படைக்கும் குணவதியாய்
பார்போற்றும் உன்னத படைப்பு பெண்ணாவாள்.!

எனும் வரிகளை கண்ணை மூடிக்கொண்டு, தன் நெற்றியில் கையை வைத்து தட்டுவதும் மடியிலிருந்த பேப்பரில் கண்களை திறந்து பார்ப்பதுமாக அமர்ந்திருந்த சுதாகர் மனதில் பாடலின் வரிகள் சற்றும் பதியவில்லை.

அதற்கு பதிலாக "அப்பனே சொக்கநாதா! இன்னைக்கு இந்தப்பாட்டை எந்த வார்த்தையும் தப்பா சொல்லாம முழுசா ஒப்பிச்சிடனும். காலையில போட்டு தா்ற கழனி தண்ணிக்கு இம்புட்டு பாடுபட வேண்டியதா இருக்கு. கொஞ்சம் கருணை காட்டு சொக்கநாதா!", என்ற பிரார்த்தனைதான் பிரதானமாக ஓடிக்கொண்டிருந்தது.

அவரது பிரார்த்தனை சொக்கநாதருக்கு கேட்டதோ இல்லையோ சுதாகருக்கு சோறு வடித்து கொட்டும் சுந்தரிக்கு நன்றாகவே காதில் விழுந்தது போல் "என்ன இன்னுமா ஒரு பாட்டை படிச்சுமுடிக்க முடியலை", என்ற குரலுடன் கணவர் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தார்.

சுந்தரியை பார்த்தவுடன் கையில் இருந்த பேப்பரை வேகமாக மடித்து தன் சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்ட சுதாகர் "சுந்தரி! நான் ஒரு வார்த்தை கூட தப்பில்லாம சொல்லட்டுமா", என வேகமாக வினவினார்."அந்த பேப்பரை பார்க்காம என்னிக்கு நீங்க சொல்றீங்களோ அன்னைக்கு நான் கேட்டுக்குறேன். இப்போதைக்கு அதெல்லாம் ஒன்னும் சொல்ல வேண்டாம்.

பையனுக்கு பொண்ணு பார்க்க போகணும்னு சொன்னேனே! பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு போன் பண்ணி பேசினீங்களா? இல்லை நானே பேசிடவா", என சுந்தரி அதட்டலாக வினவியவுடன் " நீதானேம்மா எல்லா வேலையும் சாியா செய்வ.அதனால நீயே பேசிடு", என சுதாகர் மிகவும் பவ்யமாக கூறிவிட்டு சுந்தரியின் கையில் காபி இருக்கிறதா என பாவமாகப் பார்த்தார்.

அவரது பார்வையை கண்டு கொண்ட சுந்தரி "என் பையனுக்கு கல்யாணம் முடிச்சு மருமக வந்து காபி போட்டு கொடுத்தா மட்டும்தான் உங்களுக்கு காலையில காபி. அதுவரைக்கும் கிடையாது. என் போனை சார்ஜ்ல போட்டு இருக்கு. அதை எடுத்துட்டு வந்து கொடுங்க", எனக் கூறிவிட்டு தன் மகனின் அறையை நோக்கிச் சென்றார்.

"ஒரு ரிட்டையர்ட் ஆன பேங்க் மேனேஜரை நடத்துற மாதிரியா நடத்துறா? முப்பது வருஷமா மாறாதது இனிமேலா மாறப் போகுது? எல்லாம் என் தலைவிதி", என நொந்து கொண்ட சுதாகர் மனைவி தனக்கு விட்டுச்சென்ற வேலையான மொபைலை எடுப்பதற்கு சென்றார்.

மகனின் அறையில் நுழைந்த சுந்தரி கட்டிலில் டெடி பியரை கட்டிபிடித்து தூங்கிக்கொண்டிருந்த தன்னுடைய சீமந்த புத்திரன் ஷ்யாமை "என் செல்லம், என் பட்டு ராஜா, என்னோட கன்னுகுட்டி எந்திரிங்க. எந்திரிச்சு இப்ப கிளம்பினாதான் வேலைக்கு போறதுக்கு சரியா இருக்கும்", என கொஞ்சி எழுப்ப ஆரம்பித்திருந்தார். அம்மாவின் குரலை கேட்டதும் டெடிபியரிலிருந்த தன் கையை எடுத்து தன்னுடைய இரு கைகளையும் ஒன்றாக இணைத்து வைத்து உள்ளங்கையை பார்த்து தாயே சரணம் என மூன்று முறை கூறியவன் குட் மார்னிங் அம்மா என சுந்தரியை பார்த்து சிரித்தான்.

இதனை பார்த்துக் கொண்டே உள்ளே வந்த சுதாகர் "27 வயசு எருமைமாடு கொஞ்சம் கூட புத்தி இருக்குதான்னு பாரு. இன்னும் ஏதோ கிண்டர்கார்டன் போற பிள்ளை மாதிரி அம்மாவை கொஞ்சிட்டு இருக்கான்", என தன் மைன்ட் வாய்ஸில் பேசிக் கொண்டார். மனதில் இருப்பதை நேரடியாக பேசுவதை என்று திருமணமானது அதற்கு மறுநாளிலிருந்து அவர் மறந்து விட்டிருந்தார். ஆனாலும் அவரது முகத்தைப் பார்த்த சுந்தரி "என்ன என் பிள்ளை பேசுறது பார்த்து கண்ணு வைக்கிறீங்களா. போனை கொண்டு வந்து குடுக்க சொன்னேனே! கொடுத்துட்டு வெளியில போங்க", என கணவரை விரட்டியடித்து தன் மகனை அலுவலகத்திற்கு தயார் செய்ய ஆரம்பித்தார்.

ஷ்யாமை அலுவலகத்திற்கு அனுப்பிய பின்னர் தன்னுடைய மகளை அழைத்த சுந்தரி "ஷிவானி! இன்னைக்கு மாப்பிளையை அவரையே சமைச்சு சாப்பிட சொல்லிட்டு நீ நம்ம வீட்டுக்கு வா... உன் தம்பிக்கு பொண்ணு பார்க்குற விஷயமா பேச வேண்டியது இருக்கு", எனக் கூறினார்.

ஷிவானியும் தன் அம்மாவின் பேச்சை கேட்டுவிட்டு அடுத்த அரை மணி நேரத்தில் வந்திறங்கினாள். அவள் வந்து இறங்கியவுடன் "என்ன மாப்பிள்ளை வீட்ல சமைச்சு சாப்பிடுவாரா? இல்லை அவங்க அம்மா வீட்டுக்கு போய்டுவாரா?", என சுந்தரி வினவியதற்கு பதிலாக "அது எதுக்கும்மா? நேத்து வச்ச சோறு இருந்துச்சு. ஏற்கனவே நீங்க போன வாரம் கொடுத்தனுப்பின புளிக்காய்ச்சல் இருந்துச்சு. ரெண்டையும் போட்டு பிரட்டி அதையே மத்தியானத்துக்கு வச்சுக்க சொல்லிட்டேன். ராத்திரிக்கு பிள்ளைங்களுக்கும் அவருக்கும் தோசை ஊத்திக்க சொல்லி இருக்கு. அவங்க அம்மா வீட்டுக்கு ஏன் அனுப்பனும்? நீங்க வேற சும்மா இருங்க", என ஷிவானி படபடவென பொரிந்து தள்ளினாள்.

அவள் பேசியதை பார்த்த சுதாகர் ஐயோ பாவம் என் மாப்பிள்ளை என்ற எண்ணத்தில் ஒரு பார்வையை அளித்தார். அதனை கண்டுகொள்ளாமல் அம்மாவும் மகளும் ஷ்யாமிறக்கு பார்த்திருந்த பெண் வீட்டைப் பற்றி பேச ஆரம்பித்திருந்தனர்.

"ஏன்மா அந்த பொண்ணு வீட்டுக்கு போன் பண்ணி பேசிட்டிங்களா?", என ஷிவானி கேட்ட உடன் "இன்னும் பேசலை ஷிவா. இனிதான் பேசணும். பொண்ணை பத்தி விசாரிச்ச வரைக்கும் எல்லாரும் அடக்கமான பொண்ணுன்னுதான் சொல்றாங்க. எனக்கு என்ன பெருசா ஆசை? நான் பெத்த பிள்ளைங்க பேச்சைக் கேட்டு அவங்களுக்கு வரப்போற வாழ்க்கைத்துணை நடந்துக்கணும். அதுதான் நான் ஆசைப்படுற ஒரே விஷயம்.

உன் பொழப்பு ஏதோ உன் சாமர்த்தியத்தால நல்லா போய்ட்டு இருக்கு. அதே மாதிரி உன் தம்பிக்கு வர்ற போற பொண்ணு அவன் பாா்த்து அவளை உட்காரச் சொன்னா உட்கார்ந்து, எழுந்திருக்கச் சொன்னா எழுந்துக்கனும்.அந்த மாதிரி அமைஞ்சுட்டா அவனோட வாழ்க்கையும் நல்லபடியா போகும்",என சுந்தரி பெருமூச்சுடன் தன்னுடைய பதிலைக் கூறி முடித்தார்.

அவரது பதிலை கேட்ட சுதாகருக்கு என்றோ ஒருநாள் தன்னுடைய அம்மாவும் இதே வார்த்தைகளை கூறியது மனதில் நிழலாடியது. வார்த்தைகள் மனதில் வந்தவுடன் மனைவியை பார்த்தவர் தானும் ஏதேனும் பேசியே ஆகவேண்டும் என்ற காரணத்தினால் "சுந்தரி! அந்த பொண்ணு வீட்டுக்கு பேசனும்னு போன் எடுத்து கொடுக்க சொன்னியேசொன்னேன்! காலையிலேயே எடுத்துக் கொடுத்துட்டேன். நீ இன்னும் பேசலையா?", எனக் கேட்டு வைத்தார்.

"இந்த மாதிரி வக்கணையா பேசுறதுக்கு மட்டும் வந்துருவீங்க. ஏன் எல்லா வேலையும் நானேதான் செய்யணுமா? பிள்ளைக்கு அப்பாவா பொறுப்பா ஒரு போனை போட்டு உங்க பொண்ணை எங்களுக்கு பிடிச்சிருக்கு. நாங்க பார்க்கவர்றோம் ரெடியா இருங்கன்னு சொல்ல வேண்டியதுதானே! இது கூட செய்றதுக்கு துப்பில்லை. எல்லாம் நானே பார்க்க வேண்டியதா இருக்கு", என சூடான வார்த்தைகளில் சுந்தரி அளித்த பதிலில் பொண்ணு வீட்டுக்கு போய் மிக்சர் சாப்பிடுறதைத் தவிர நாம வேற எந்த வேலையும் பார்க்கவேக் கூடாது என்ற முடிவிற்கு சுதாகர் வந்துவிட்டார்.

சுதாகர் கூறியதாலோ இல்லை தனக்கே தோன்றியதாலோ பெண் வீட்டிற்கு அழைத்த சுந்தரி தங்களுக்கு பெண்ணை பிடித்திருப்பதாகவும் அந்த வார இறுதியில் பெண் பார்க்க வருவதாகவும் கூறி அழைப்பினை துண்டித்தார்.

பெண் வீட்டிற்கு பேசி வைத்த பின்னர் சுதாகருக்கு பெண் என்ன செய்கிறாள் என கேட்க வேண்டும் என்பது போல் இருந்தது. ஆனால் மீண்டும் வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை. காலையில் கழனி தண்ணீர்தான் கிடைக்கவில்லை. இப்பொழுது உப்புமா என்ற பெயரில் போடும் தவிடாவது கிடைக்க வேண்டுமே என எண்ணிய காரணத்தினாலும் எதையும் கேட்கவில்லை.

ஆனால் அவரது மனதை அறிந்தது போல் ஷிவானி "மூணு பொண்ணுங்க பார்த்து வச்சிருந்தீங்களேம்மா! அதுல ய எந்த பொண்ணை செலக்ட் பண்ணிருக்கீங்க?", என வினவினாள். "இரு உங்க அப்பாவுக்கு அந்த உப்புமாவை எடுத்து வச்சுட்டு வர்றேன் மனுஷன் காலையில இருந்து காப்பி தண்ணி கூட குடிக்காம ஒத்த பாட்டை பல வருஷமா மனப்பாடம் பண்ணிட்டுருக்காரு. அவர்தான் உருப்படியா இல்லைன்னா நானும் அப்படியே இருக்க முடியுமா? இந்த குடும்பத்தையே தூக்கி நிறுத்த வேண்டியது என் கையிலதான் இருக்கு", என சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் புலம்பிக்கொண்டே சுந்தரி காலையில் செய்து வைத்திருந்த ஆறிப்போன உப்புமாவையும் ஒரு சொம்பு தண்ணீரையும் சுதாகர் முன்னர் கொண்டு வந்து வைத்தார்.

அதனை பரிதாபமாக பார்த்துவிட்டு "பரவாயில்லை நேத்து வச்ச சோத்துல புளியோதரை பேஸ்டை போட்டு சாப்பிடற மாப்பிள்ளைக்கு நம்ம நிலைமை எவ்வளவோ தேவலை", என எண்ணிக்கொண்டே அந்த உப்புமாவை தன்னுடைய வாயில் சுதாகர் திணிக்க ஆரம்பித்திருந்தார்." பேங்க்ல வேலை செய்ற பொண்ணு ஜாதகம் வந்திருக்குன்னு சொன்னேனே! அந்த பொண்ணை தான் இப்ப பாா்க்க போறோம்.

வேலைக்கு போனாலும் அம்புட்டு அடக்க ஒடுக்கமா இருக்குமாம். யாரையும் எதிர்த்து பேசாதாம். குனிஞ்ச தலை நிமிராம போய்ட்டு வீடு வந்து சேர்ந்துடுவாளாம்", என பெண்ணைப் பற்றிக் கூறிய சுந்தரி ஷிவானியின் அடுத்த கேள்வி அவளது வாயிலிருந்து வரும் முன்னரே "நகைநட்டு நிறைய போடுவாங்க போல இருக்கு. ஒரு பொண்ணுதான் பெத்து வச்சிருக்காங்க. அதனால இந்த சம்பந்தத்தை பேசி முடிச்சிடலாம்னு இருக்கேன்", எனக் கூறி முடித்தார்.

"எல்லாம் சரிம்மா. வந்த உடனே வேலை பார்க்கிறேன் செய்றேன்னு தம்பியைக் கூட்டிட்டு தனிக்குடித்தனம் போகக்கூடாதுன்னு கல்யாணத்துக்கு பேசுறப்பவே சொல்லிடுங்க. வீட்டுக்கு வந்தவுடனே புருஷனை கூட்டிட்டு தனிக்குடித்தனம் போயிட்டா ஒரே ஒரு பையனை பெத்து வச்சிருக்குற உங்க பாடுதான் திண்டாட்டம். உங்க நல்லதுக்குதான் சொல்றேன்", என்ற ஷிவானியை கையை கழுவிட்டு வந்த சுதாகர் "நீயா பேசியது? என் மகளே நீயா பேசியது?", என்ற பார்வையை வீசினார்.

ஏனெனில் ஷிவானியை பெண் பார்க்க வந்திருந்த பொழுது தன் தாய், தந்தையர் கூறுவதற்கு முன்னரே மாப்பிள்ளை வீட்டாரை பார்த்து
"கல்யாணத்துக்கு முன்னாடியே தனி வீடு பாா்க்குறதா இருந்தா மட்டும் இந்த சம்பந்தத்தை முடிச்சிட்டு போங்க. இல்லைன்னா நீங்க உங்க வீட்டை பார்த்து நடையை கட்டலாம்.என்னால எல்லாம் மாமனார்,மாமியாருக்கு வடிச்சு கொட்ட முடியாது", எனக் கூறியவள் இப்பொழுது இப்படிப் பேசினால் அவரும் வியந்து பார்க்காமல் என்னதான் செய்வார்?

அதற்குப் பின்னர் அன்றைய நாள் முழுவதும் பெண் வீட்டிற்கு செல்லும் பொழுது என்ன பேச வேண்டும் எப்படி கெத்தாக போக வேண்டுமென அம்மாவும்,மகளும் ஏகப்பட்ட திட்டங்களைத் தீட்டிக் கொண்டே இருக்க சுதாகர் வழக்கம்போல் தனது மனதில் "சொக்கநாதா! மீனாட்சி உனக்கு என்ன சொக்குப்பொடி போட்டாங்கன்னு தெரியாது.அவங்களுக்காக நீ இல்லாத தில்லாலங்கடி வேலையெல்லாம் செஞ்சி கல்யாணம் கட்டிக்கிட்ட. அதே மாதிரி எனக்கு மருமகளா வர்றப் போற பொண்ணு என் மகனுக்கு சொக்குபொடி எல்லாம் போட வேண்டாம். காபி பொடி போட்டு எனக்கு ஒரு காபி மட்டும் கொடுக்கிற மாதிரி செஞ்சுடு.

உனக்கு புண்ணியமா போகும். டெய்லி எனக்கு தவுடு போட்டு வைக்கிற என் பொண்டாட்டியை கிரிவலம் வர வைக்கிறேன்", என தன் ஆஸ்தான சொக்கநாதனிடம் பெரும் வேண்டுதலை வைத்தார்.

அவரவர் தங்களின் மனதிற்கு ஏற்றவாறு திட்டங்களை தீட்டி, ஆசைகளை வளர்த்து எண்ணமிட்டுக் கொண்டிருக்க இவர்கள் திருமணம் செய்து வைத்திட நினைத்திடும் ஷ்யாமும்,அவனுக்கென்று பார்த்து வைத்திருக்கும் அடக்க ஒடுக்கமான பொண்ணும் என்ன செய்யப்போகிறார்கள் என்பதனை யாரும் அறியாமல் போனது காலத்தின் சதியன்றோ?
 

Anuya

Well-known member
Apr 30, 2019
257
331
63
Wow... Sema start uhhh deepi kaa... Haha... Paawam sudhakar ... Oru retired bank officer kg padikira pilla pola madapattu padivachitaangale 🤣🤣🤣 shivani maa.. ni vera level uhhh ... Intha shyam mum that adakkam girl um enna enna panna porangalo ... Sundhari ku mela oru kedi thaan that ponnu nu ninaikuren 🤣🤣❤ all the best deepi kaa❤
 
  • Love
Reactions: Kripnythaa

Kripnythaa

Moderator
Mar 26, 2018
463
150
63
Wow... Sema start uhhh deepi kaa... Haha... Paawam sudhakar ... Oru retired bank officer kg padikira pilla pola madapattu padivachitaangale 🤣🤣🤣 shivani maa.. ni vera level uhhh ... Intha shyam mum that adakkam girl um enna enna panna porangalo ... Sundhari ku mela oru kedi thaan that ponnu nu ninaikuren 🤣🤣❤ all the best deepi kaa❤
Tnx da Anu