Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் -12 | SudhaRaviNovels

அத்தியாயம் -12

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் – 12

அன்று மாலை வீடு வந்து சேர்ந்த வர்ஷினிக்கு மனம் சோர்வடைந்திருந்தது. தன்னைச் சுற்றி எழும் பேச்சுக்களை எண்ணி மருகிக் கொண்டிருந்தாள். என்ன தான் எதையும் நினைக்கவில்லை என்றாலும், நடந்த நிகழ்வுகளை இல்லை என்று மறுத்துவிட முடியாதே. அதிலும் கல்லூரியில் அவர்களின் காதலை அறியாதவர்கள் மிக கம்மியான ஆட்களே. காதலை அறிந்தவர்களுக்கு அவளுக்கு அவனுடனான திருமணம் பற்றி தெரியாதது நல்லதாக போயிற்று. அதுவும் தெரிந்திருந்தால் அவளது நிலை மேலும் மோசமாகி இருக்க கூடும்.

சோர்வுடன் அமர்ந்திருந்தவளின் அருகே வந்தமர்ந்த வசந்தா “என்னடா கண்ணு? அம்மா அப்பா நினைவு வந்துடுச்சா?” என்றார் அவளது தலையை வருடியபடி.

கண்கள் கலங்க பாட்டியைப் பார்த்தவள் அப்படியே சரிந்து அவர் மடியில் படுத்துக் கொண்டவள் “நீங்களும் இல்லேன்னா நானும் தான்யாவும் என்ன ஆகி இருப்போம்னு தெரியல பாட்டி”.

“என்ன அவசரமோ உங்களை இப்படி விட்டுட்டு என் பொன்னும் மாப்பிள்ளையும் போயிட்டாங்க. நானும் மாமாவும் உங்களை அப்படி விட்டுட மாட்டோம்டா”.

அந்நேரம் சரவணனுக்கு அழைத்திருந்தான் சித்தார்த்.

“சொல்லு”.

“நீ என் மேல கோபமா இருப்பேன்னு தெரியும் சரவணா. என்னோட சூழ்நிலை அப்படி. ஆனால் எக்காரணம் கொண்டும் அவளை விட்டுட மாட்டேன்”.

“நான் ஒன்னு கேட்கலாமா? நீ ஆயிரம் காரணம் சொல்லலாம் ஆனா அவளுக்கு ஒரு போன் கூட பண்ணாம அவ எப்படி இருக்கிறான்னு விசாரிக்காம இருக்கிறது எனக்கே உன் மேல சந்தேகத்தை வரவழைக்குது சித்தார்த்”

அவன் கேட்டதும் நீண்ட பெருமூச்சை விட்டவன் “என்னால பேச முடியாம இல்ல சரவணா. ஆனா நான் பேசுவதன் மூலமா அவளுக்கு இன்னும் ஆபத்தை இழுத்து வச்சிடுவேன்”.

“எனக்கு என்னமோ சரியாபடல சித்தார்த். உன்னை என் நண்பனா அத்தனை நம்பிக்கை வச்சிருந்தேன். நீ ஏமாற்ற மாட்டேன்னு நினைச்சு தான் உனக்கு ஹெல்ப் பண்ணினேன். ஆனா எனக்கே வர்ஷினியை பார்க்கும் போது தப்பு பண்ணிட்டேனோ அப்படிங்கற எண்ணம் வருது”.

“இல்ல-டா எங்கேயும் என்னோட காதல் பொய்யில்லை”.

“எது இன்னொரு பெண்ணை கல்யாணம் பண்ணின பிறகு இப்படி பேசுற பாரு...இன்னமும் எங்களை கூமுட்டையா நினைக்கிற இல்ல”.

“டேய்! என்னால இப்போ எதையும் சொல்ல முடியாது. அனா ஒன்னு மட்டும் மனசுல வச்சுக்கோ. வர்ஷினிக்கு நான் எப்போதும் இருப்பேன். அவள் மட்டும் தான் என் மனைவி. உன் கிட்ட கேட்கிறது ஒன்னே ஒன்னு தான். அவளை நான் வரும் வரை பார்த்துக்கோ. அந்த லோகேஷ் எதுவும் பிரச்சனை பண்ணினா அப்படியே விட்டுடாதே”.

ஏனோ சித்தார்த்தின் பேச்சு அவன் மனதை தொட தான் செய்தது. அது எதனால் என்று அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. நிச்சயம் அவன் வருவான் என்பது போல நம்பிக்கை பிறந்தது.

சரவணனிடம் பேசிவிட்டு வைத்தவனின் எண்ணம் முழுவதும் எப்படியாவது அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு அவளிடம் சென்று விட வேண்டும் என்பதே. அவனது யோசனையை கலைப்பது போல, அறைக் கதவை தட்டக் கூட இல்லாமல் படாரென்று திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் தினு.

திமிரும், அதிகார போக்கும் உடையவன் மாமா தினு. யாரையும் மதிக்கும் தன்மை அவனிடம் அதிகம் இருக்காது. அவன் மதிக்கும் ஒரே ஆள் அவனுடைய தாத்தா கோவிந்த் பட்டேல். மற்றவர் அனைவரையும் அவன் பார்வையிலேயே தள்ளி வைத்துவிடுவான்.

சித்தார்த்தின் முன் வந்து அமர்ந்தவன் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அவனை ஆராயும் பார்வை பார்த்து “நீ கேஷ்வி பாக்டரிக்கு ஏன் போகல? அவ அங்கே தனியா கஷ்டப்பட்டுக் கிட்டு இருக்காளே”.

அவனைப் போலவே நாற்காலியில் நன்றாக சாய்ந்தமர்ந்து கொண்ட சித்தார்த் “இதை கேட்கவா இவ்வளவு தூரம் வந்தீங்க மா...மா?” என்றான் நக்கலாக.

ஏனோ தினுவை பார்த்ததும் அவன் மனம் பாட்டி சொன்ன எதிரிகளில் அவனும் இருப்பான் என்று சொன்னது.

அவனது பேச்சில் கடுப்பான தினு “என்ன சித்து மரியாதை எல்லாம் குறையுது? எனக்கென்னவோ உன்னுடைய நடவடிக்கை சந்தேகத்தை கொடுக்குது”.

எதுவுமே தெரியாதது போல “என்ன சந்தேகம் மாமா?” என்றவனது விரல்கள் மேஜைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த மொபைலில் இருந்து செய்தி அனுப்பிக் கொண்டிருந்தது. தினுவைப் பற்றிய ரிபோர்ட் வேண்டும் என்று டிடெக்டிவ் நண்பனிடம் கேட்டு விட்டான்.

“நீ தமிழ் நாட்டிற்கு படிக்க போனதில் இருந்து சரியில்லேன்னு சொல்றா அக்கா” என்று சொல்லியவன் கண்கள் அவனை ஆராய்ந்தது.

மேஜையின் முன்னே சரிந்து அமர்ந்தவன் “அப்போ இருந்து தானா மாமா? அதுக்கு முன்னே இல்லையா?”

நறநறவென்று பற்களை கடித்தவன் “எங்களை கேட்காம நீயா சில முடிவுகளை பிஸிநெசில் எடுக்கிற. உனக்கு அதற்கான அனுபவமும் இல்லை. உன்னுடைய நடவடிக்கையை நினைத்து அக்கா பயப்படுறா”.

“ஓஹோ...ம்ம்...இது என் அப்பாவோட பிஸ்னெஸ். இதுல எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. இந்த தொழிலில் நீங்க யார் எனக்கு அட்வைஸ் பண்ண?’
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
படாரென்று நாற்காலியைத் தள்ளிவிட்டு எழுந்து நின்ற தினு “உங்கப்பனுக்கு உள்ள திமிர் அப்படியே உனக்கும் இருக்கு. நான் யாருன்னா கேட்கிற? உங்களுடைய இந்த தொழில் சாம்ராஜ்யத்தை மொத்தமா என் கையில் தான் வச்சிருக்கேன். நீ என்ன முட்டி மோதினாலும் இங்கே என் முடிவுகள் தான் ஏற்றுக் கொள்ளபடும். உன் அப்பா காலத்திலேயே அப்படித்தான். நீ என்ன பச்சா” என்றான்.

அவரின் பேச்சில் அதிர்ந்து போனவன் “மாமா! இதெல்லாம் உங்களுக்கே அதிகமா தெரியல?”

அந்நேரம் கதவு திறக்கப்பட்டு வில் சேரில் அமர்ந்திருந்தவரை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தார் தேவ்.

பழுத்த பழமாக இருந்தார் வீல் சேரில் இருந்தவர். சூரஜ் பட்டேல் அவனது அம்மாவின் தந்தை. குஜராத்தில் அவரை தெரியாதவர்கள் இல்லை எனலாம். அங்கே தொழில் புரிபவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவர்.

மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை கையில் வைத்திருப்பவர். அவரின் சாணக்கிய மூளைக்கு முன் எதுவும் நிற்காது. ஆனால் அவர் ஏமாந்த இடம் என்று ஒன்று உண்டென்றால் அது நீரஜிடம் தான்.

அவன் மேஜைக்கு எதிரே அவரது நாற்காலி நிறுத்தி வைக்கப்பட, நேருக்கு நேர் அவனது கான்களை கூர்ந்து கவனித்தார் சூரஜ். அவரது பார்வை கண்களைத் தாண்டி உள்ளே நுழைந்து அவனது இதயத்தை ஊடுருவி பார்த்தது.

சற்று நேரம் அங்கிருந்து யாரும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தார்கள்.

“சோ கேஷ்வி பாக்டரி எரிய நீ காரணம்’ என்று முதல் பந்தை அவனை நோக்கி வீசினார்.

அதில் சட்டென்று அவனது முகம் மாறினாலும், உடனே சுதாரித்துக் கொண்டவன் “என்ன சொல்றீங்க நானாஜி?”

அவனது அதிர்ச்சியை கவனித்துக் கொண்டவர் நேரடியாக விஷயத்திற்கு வந்தார் “என்ன உன் ப்ளான்?”

அவனும் அதுவரை குழம்பி இருந்தவன் அவரது கேள்வியில் தனக்கான விடையை கண்டு கொண்டான். நாற்காலியில் நன்றாக சாய்ந்தமர்ந்து கொண்டவன் “சோ! நடக்கிற எல்லாவற்றிற்கும் நீங்க தான் காரணம் இல்லையா?”

அவன் சொன்னதை கேட்டதுமே மூவரின் பார்வையும் ஒரு நிமிடம் தொட்டு மீண்டது.

“ம்ம்...தெரிஞ்சுகிட்ட இல்லையா? என்ன செய்யப் போற?”

நன்றாக நிமிர்ந்து அமர்ந்தவன் “அப்போ நான் நிச்சயமாக உங்க பேரனாக இருக்க வாய்ப்பில்லை. அம் ஐ ரைட்?” என்று கேட்டவனின் பார்வை ஊசியாய் அவரது இதயத்தை துளைத்தது.

அவனது கேள்வியை கண்டு ‘புத்திசாலி தான்’ என்று முணுமுணுத்துக் கொண்டார்.

தேவ் தான் அவசரப்பட்டு “என்ன சித்து இப்படி கேட்கிற?” என்றார் கோபமாக.

அவரை திரும்பி பார்த்தவன் “இந்த கேள்வியை கேட்க புத்திசாலியை இருக்கணும்னு அவசியமில்லை மிஸ்டர். தேவ். தன் மகள் வயிற்று பேரனுக்கு எதிராக எந்தவொரு தாத்தாவும் சதி வேலைகளை செய்ய மாட்டார். அது இங்கே நடக்குது. அப்போ அவரின் பேரனாக நான் இருக்க வாய்ப்பில்லை தானே?”

அவ்வளவு தான் அதுவரை இழுத்துப் பிடித்திருந்த பொறுமையை பறக்க விட்ட தினு “ஆமாம்-டா! நீ எங்கக்காவுக்கு பிறந்தவன் இல்லை. நீ அந்த பிச்சைக்காரிக்கு பிறந்தவன். அந்த கிழவி எங்களை ஏமாற்றி இருக்கா” என்றான் கோபமாக.

அவன் அப்படி கத்தியதும் அதிர்ச்சியுடன் நாற்காலியிலிருந்து எழுந்து விட்டான் சித்தார்த். அன்று காரில் தன் மடியில் படுத்திருந்த தந்தை சொன்ன செய்தி நினைவிற்கு வந்தது. பிம்லாவை நம்பாதே. உன் வாழ்க்கையில் மர்மம் இருக்கிறது அதை கண்டுபிடி என்று கூறியதை நினைவு கூர்ந்தான்.

அவனால் தினு சொன்னதை ஏற்கவும் முடியாமல், தன் தாய் யார் என்பதை அறிந்து கொள்ளும் எண்ணமும் எழ “நான் உங்க குடும்பத்து வாரிசு இல்லை என்று தெரிந்தும் எதற்கு இந்த பதவி, சொத்துகளுக்கு எல்லாம் என்னை ஏன் பொறுப்பாளி ஆக்கினாங்க அவங்க(பிம்லா)”.

கையை நீட்டி அவனை அமரும் படி கூறிய சூரஜ் “நீ கேட்கிற கேள்விகளுக்கு விடை இப்போ கிடைக்காது. ஒரே ஒரு விஷயம் நல்லா தெரிஞ்சுக்கோ. இங்கே நான் வைத்தது தான் சட்டம். என்னை மீறி எவனும் பிஸ்னெஸ் பண்ண முடியாது. நீரஜ் உட்பட. உன்னுடைய வாழ்க்கை எங்க கையில் தான். நீ தான் தெரிஞ்சுகிட்டு இருப்பியே. உன் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை கூட எடுக்க முடியாத நிலையில் தான் நீ இருக்கிறாய். நீ எங்களின் அடிமை. எங்களை மீறி எதுவும் செய்ய முடியாது. சோ அடுத்து நாங்கள் குறித்து கொடுக்கும் தேதியில் கேஷ்வியுடனான ரிஜெஸ்தர் மேரேஜை பிரச்சனை செய்யாமல் செய்து கொள்” என்று நிறுத்தினார்.

“நான் மறுத்தால்”.

தினுவை திரும்பி பார்த்த சூரஜ் “இவன் இருக்கானே ரொம்ப மோசமானவன். நான் என்ன செய்யணும்னு சொல்றதுக்குள்ள முடிச்சிட்டு வந்துடுவான். உன் அம்மா யாருன்னு நீ தெரிஞ்சுக்கும் முன்பே அவங்களை அனுப்பி வச்சிடுவான். அடுத்து உன்னுடைய காதலி மனைவி மதுவர்ஷினி அவளையும்” என்று சொல்லி முடிக்கும் முன்னே “நானா!” என்று கத்தி இருந்தான்.

அவ்வளவு தான் உடனே தினு பாய்ந்து அவனது சட்டையைப் பற்றி “யாரு யார் நானா? சித்தார்த்! அப்பா சொல்றதை கேட்டு ஒழுங்கா இரு. உங்கப்பனை படுக்க வச்ச மாதிரி உன்னையும் படுக்க வைக்க நாள் ஆகாது” .

சித்தார்த்திற்கு அடுத்த அதிர்ச்சி. தனது தந்தையை கொல்ல வந்தது இவர்களின் ஆட்களா என்று அதிர்ந்து நின்றான்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
சூரஜ் திரும்பி தினுவை முறைத்து “இப்போ இது ரொம்ப முக்கியமா தினு?” என்றார் கோபமாக.

தேவ் தினுவின் அருகில் சென்று அவனது கைகளில் இருந்து சித்தார்த்தை விடுவித்து விட்டு அவன் முதுகில் தட்டிக் கொடுத்து “எதையும் யோசிக்காமல் இவங்க சொல்வதை கேட்டு நடந்துக்கோ சித்தார்த்” என்றார் வருத்தமாக.

அவரை கூர்ந்து பார்த்தவன் “நீங்களுமா மாமா?” என்றான் வேதனையுடன்.

அவனுக்கு பதில் சொல்ல முடியாமல் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார்.

அந்த நிமிடம் அவனது மனம் வர்ஷினியைத் தான் நாடியது. தன்னைச் சுற்றி இருக்கும் எந்த உறவும் உண்மையானது இல்லை என்கிற எண்ணமே அவனை பலவீனமாக்கியது. தாய் என்கிற உறவு கூட அவனுக்கு பொய்யாய் அமைந்தது யாரின் தவறு? தந்தை மட்டுமே அவனது நலனை நினைத்திருக்க அவரையும் அடித்து படுக்க வைத்திருக்கும் இவர்களை என்ன செய்வது என்று நொந்து போனான்.

அவனை சற்று நேரம் பார்த்திருந்த சூரஜ் “சித்தார்த் என்கிற பிஸ்னெஸ்மேன் வெளியில் மரியாதையாக மதிக்கப்படலாம். ஆனால் எங்களுக்கு நீ எச்சில். என் மகளின் வாழ்க்கையைப் பறித்தவன். உன் தாத்தா செய்த தவறால் நீ தண்டனையை அனுபவிக்கப் போகிறாய் வாழ்நாள் முழுவதும்” என்றார்.

தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தவன் எதுவும் பேசாமல் அவரை நிமிர்ந்து பார்த்தான்.

“இந்த சொத்துக்களை எல்லாம் உன் பெயரில் எழுதி வைத்தது மிகப் பெரிய தப்பு. அதற்க்கான தண்டனை நீ வாழ்நாள் முழுவதும் எங்களுக்கு அடிமையாக இருப்பது. இந்த சொத்தை நீ யாருக்கும் மாற்றவோ, கொடுக்கவோ முடியாது. அதனால் நீ நாங்கள் சொல்கிறபடி தான் கேட்க வேண்டும்” என்று சொல்லிவிட்டு தேவை பார்த்தார்.

அவரும் புரிந்து கொண்டதை போல அவரின் நாற்காலியை நகர்த்த ஆரம்பித்தார். தினுவோ அவன் முன்னே சொடக்கிட்டு “வேற எதையும் ப்ளான் பண்ணாம ஒழுங்கா இரு” என்று மிரட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்கள்.

அவர்கள் அனைவரும் சென்றதும் சித்தார்த்தின் நிலை மிக மோசமாக இருந்தது. ஒரு நாளில் எத்தனை அதிர்ச்சிகளை தான் தாங்குவது. அதிலும் அவர்களின் வார்த்தை எச்சில் அவனை மிகவும் தாக்கியது. ஒருவனுக்கு ஆதாரமே தாய் தான். அந்த தாயே யாரென்று தெரியாமல் அவனது பிறப்பையே தவறாக பேசும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை எண்ணி மனம் உடைந்து போனான்.

அந்த நிமிடம் அவனது மனம் தேடியது அவளது மடியைத் தான். அனைத்தையும் மறந்தான் அவசரமாக மறைத்து வைத்திருந்த போனை எடுத்து அவளுக்கு அழைத்து விட்டான். கல்லூரியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தவளின் அலைப்பேசி அழைக்க, ஒரு ஓரமாக வண்டியை நிறுத்தி விட்டு போனை எடுத்தாள். புது நம்பராக இருக்கவும் யோசனையுடன் எடுத்து “ஹலோ” என்றாள்.

வெகுநாட்களுக்குப் பிறகு அவளின் குரல் கேட்கவும் அவனது மனதிற்கு அந்நேரம் இதமாக இருக்க கண் மூடி சாய்ந்து விட்டான். அவளோ அந்தப் பக்கம் “ஹலோ! ஹலோ! யாருங்க” என்று கத்தினாள்.

அவள் போனை வைத்து விடுவாள் என்கிற பயத்தில் மனதிலிருந்த அழுத்தத்துடன் “சோட்டி!” என்று உயிரை உருக்கும் குரலில் அவளை அழைத்து விட்டான்.

அந்த நிமிடம் அத்தனை மாதங்களுக்குப் பிறகு அவனது குரலை அவள் எதிர்பார்க்கவில்லை. அதிலும் அவன் குரலில் தெரிந்த அந்த வலியை உணர்ந்து விட்டாள். ஆனால் அதையும் மீறி அவள் கண் முன்னே கேஷ்வியுடனான திருமண புகைப்படமும், தன்னை தவிக்க விட்டுச் சென்றது என அனைத்தும் நினைவிற்கு வர, அடுத்த நிமிடம் போனை அணைத்து விட்டாள். மொத்தமாக சுவிட்ச் ஆப் செய்து உள்ளே வைத்து விட்டாள்.

ஆனால் அவளது காதுகளில் அவனது அழைப்பு ஒலித்துக் கொண்டே இருந்தது. மனமோ அவனுக்கு ஏதோவொரு பிரச்சனை என்று சொல்லத் தொடங்கியது.
 

Chitra Balaji

Active member
Feb 5, 2020
125
68
28
Very very emotional episode maa.... யாரு அவன் அம்மா..... அவன் சொத்து ah avangaluke ezhuthi vechi da வேண்டியது தானே..... Enna aaga pooguthoo...
 
  • Love
Reactions: sudharavi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
Very very emotional episode maa.... யாரு அவன் அம்மா..... அவன் சொத்து ah avangaluke ezhuthi vechi da வேண்டியது தானே..... Enna aaga pooguthoo...
நன்றி சித்ரா...........................
 
  • Love
Reactions: Chitra Balaji